திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –7-8-

கீழில் அவனுடைய தோற்றரவை உருவ வெளிப்பாடு என்று அறிந்து -அவனோடே பரிமாறுகைக்கு தாம் பண்ணின உத்தியோகத்தை தவிர்ந்து –
தமக்கு அவனால் அல்லாது செல்லாத படியும் அவனுக்கு தம் ஆர்த்தி தீர்க்க சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும் தம் அபேக்ஷிதம் செய்யாமைக்கு அடி
தம்மை இங்கே வைத்து தான் நினைத்த கார்யம் தலைக் கட்டுவானாக நினைத்தது என்றும் அறியாதே
எனக்கு இத்தோடு பொருந்தாமை யுண்டாய் உன்னை ஒழியச் செல்லாமை யுண்டாய் இருக்க -முடியும் விரகு இன்றியிலே
உன்னைப் பெற்று தரிக்கவும் பெறாதே இங்கே வைத்த ஆச்சர்யம் இருந்த படி என் என்ன -அவனும் ஒன்றைக் கேட்க ஒன்றை பரிஹரிப்பாரை போலே
-இவ்வளவோ என் படி -என்று தன் விசித்திர விபூதி த்வத்தை காட்டி அருளக் கண்டு -இது விஸ்மயமாய் இருந்ததீ -இது இருந்த படி என் -என்று
யமுனைக் கரையிலே -ஜெகதே தன்மஹாச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மன தேனாச்சார்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத -என்று
அக்ரூரன் ஆச்சர்யப் பட்டால் போலே -இவரும் அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –

————————————————————

விசித்திரமான காரியங்களையும் காரணங்களையும் எல்லாம் விபூதியாக யுடையனாய் அனுசந்தித்து -இவை என்ன படிகள் என்று விஸ்மிதராய் எம்பெருமானைக் கிடக்கிறார் –

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-

மாயா!-இத் திருவாய் மொழிக்கு நிதானமான ஆச்சர்யங்களை யுடையனாய் இருக்கும் இருப்பை அனுசந்தித்து சங்க்ரஹேண சொல்லுகிறது –
வாமனனே! –ஆச்சர்யங்களுக்கு எல்லாம் உதாஹரணம் -அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே அர்த்தியாய் மஹாபலி யஜ்ஜ்வாடத்தில் சென்று சொல்லிற்று எல்லாம் அவன் செய்யும் படி வார்த்தை சொன்ன ஆச்சர்யங்களை நினைத்து வாமனனே என்கிறார் –
மது சூதா! நீ அருளாய்-ஆச்சர்யங்களுக்கு ஸ்ரீ வாமன ப்ராதுர்ப்பாவம் போலே யாயிற்று விரோதி நிரசனத்துக்கு மதுசூநத்வம்-மதுவாகிற அரசனை நிரசித்தால் போலே என் ஸம்சயத்தை அறுத்து தந்து அருள வேணும் என்கிறார் -த்வத் அன்யஸ் சம்சயஸ் யாஸ்யச் சேத்தா நஹ்யுபபத்யதே–உமக்கு சம்சயம் தான் ஏது என்னில்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்-காரியத்தில் உண்டான வைசித்ரியம் காரணத்திலே யுண்டாய் இருக்கும் இ றே -அண்ட காரணமாய் ஒன்றோடு ஓன்று சேர்த்தி இன்றிக்கே இருக்கிற பஞ்ச பூதங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் -காரியங்களில் வந்தால் மாதா உபகரித்த உபகாரம் அன்று இ றே தமப்பன் உபகரிப்பது -அவன் உபகரிப்பதும் அன்று இ றே பிரஜைகள் உபகரிப்பது -அவர்கள் உபகரிக்குமது அன்று இ றே மற்றை பந்துக்கள் உபகரிப்பது –
முற்றுமாய்-அநுக்தமாய் ஸ்வ சம்பந்தியாய் உள்ள சேதன அசேதனங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –
நீயாய் நீ நின்றவாறு-ஜெகதாகாரகனாய் இருக்குமது ஒழிய அசாதாரண விக்ரஹ யுக்தனாய் கொண்டு நீ நின்ற படி -ஜெகதாகாரனாய் ரக்ஷிக்கும் அளவன்று இ றே அசாதாரண விக்ரஹ யுக்தனாய்க் கொண்டு ரக்ஷிக்கும் படி
இவை என்ன நியாயங்களே!–இவை என்ன படிகள் -முதல் திருவாய் மொழி -தொடக்கமாக பல இடத்திலும் இவனுடைய ஐஸ்வர்யத்தை அனுசந்தித்து -அது தன்னையே இதுக்கு முன்பு கண்டு அறியாதாரைப் போலே அனுபவியா நின்றார் -குண அனுபவத்தில் வந்தால் க்ஷணம் தோறும் ஒன்றையே புதியராய் அனுபவிக்கிறாப் போலே யாயிற்று விபூதியனுபவமும்-

—————————————————————

சந்த்ர ஸூர்யாதி பதார்த்தங்களை அடைய தனக்கு விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-

அங்கண்  மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2-

அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்-அழகிய மதுவோடே கூடின பூவை யுடைய திருத் துழாயை திரு முடியில் யுடையையாய் -இவ் வழகுக்கு ஒரு நாளும் ப்ரச்யுதி இல்லாதவனே -இத்தால் திருக் குழலில் வளையம் போல் விபூதி யோகமும் தகுதியாய் ஆகர்ஷகமாய் இருக்கிறபடி –
திங்களும் ஞாயிறுமாய்ச் -சேதனர்க்கு தர்ச நீயமாய் ஆப்யாயகனுமான சந்திரனுக்கும் இவனால் உண்டான நீர்க் களிப்பை யறுத்து ப்ரகாசகனுமான ஆதித்யனுக்கும் நிர்வாஹகானானவனே
செழும் பல் சுட ராய்-சேதனர்க்கு வரக் கடவதான அநர்த்தப்பியுதங்களுக்கு உறுப்பாக சஞ்சரிக்கிற நக்ஷத்ர க்ரஹாதிகளுக்கும் நிர்வாஹனனாய்
இருளாய்ப்-சேதனர்க்கு போக யோக்கியமான காலமாய்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் -நித்ய ஸ்ருஷ்டிக்கு உறுப்பாய் ஸ்ருஷ்டமான தாபங்களுக்கு தாப ஹரமுமாய் வ்ருத்தி ஹேதுவுமாய் இருக்கையாலே களித்து வர்ஷிக்கும் வர்ஷமுமாய் -உத்தேச்யமான புகழாய்-பரஹரணீயமான பழியாய்
பின்னும் நீவெங்கண் வெங் கூற்றமுமாம் -இவை அதி ப்ரவ்ருத்தமானவாறே குளிர நோக்குகை தவிர்ந்து -க்ருரேஷணனாய் அந்தகன் தண்ணீர் என்னலாம் படி வெவ்விய கூற்றமுமாம் -அதிக்ரூரமான அந்தகனை விபூதியாக யுடையவன் என்றுமாம்
இவை என்ன விசித்திரமே!-இவை என்ன வைச்சித்ரம் தான்-

—————————————————————–

க்ருதாதிகளான அநேக யுகங்களும் -அவ்வவ காலங்களில் யுண்டான தேவ மநுஷ்யாதிகளையும் விபூதியாக யுடையவன் என்கிறார் –

சித்திரத்  தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-

சித்திரத் தேர் வலவா!–விசித்திரமாய் தேரை நடத்தினவனே -துரோணன் கையும் அணியும் வகுத்து அர்ஜுனனுக்கு புறப்பாடற வாசலைப் பற்றி நிற்க –அதுக்கு புறம்பாம் படி தேரைக் கழிய கொண்டு போயும் -பீஷ்மன் கையில் அம்பு அர்ஜுனன் மேல் தனியாத படி தேரைத் தூரக் கொண்டு போய்-அர்ஜுனன் கையில் அம்பு பீஷ்மன் மேலே தைக்கைக்கு கிட்ட நிறுத்தியும் -இப்படி விசித்திரமாக தேரை நடத்த வல்லவனே –
திருச் சக்கரத் தாய்!அருளாய்-பகலை இரவாக்க வல்ல பரிகரத்தை யுடையவனே
எத்தனையோர் உகமும் அவையாய் -க்ருத யுகாதிகளுக்கு எல்லாம் நிர்வாஹகானாய்
அவற்றுள் இயலும்-அவற்றின் உள்ளே வர்த்திக்கிற
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்ஒத்தும் -வியவாய்-வேறு பட்டும் இருந்துள்ள
ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் -ஜாதியால் ஒத்தும் வ்யக்தி பேதங்களால் வேறுபட்டும் என்னுதல் -ஞாநை காகாரதையாலே ஒத்தும் -அஹம் த்வமாதி பேதத்தாலே வேறுபட்டும் என்னுதல் -இப்படி பலவகைப்பட்ட பதார்த்தங்கள் அசங்க்யேயமாய் இருக்கிற இத்தை விபூதியாக யுடையையாய்
வித்தகத்தாய் நிற்றி-விஸ்மயமான பிரகாரத்தாலே நீ நில்லா நின்றாய்
நீ இவை என்ன விடமங்களே!–இவை என்ன சேராச் சேர்த்திகள்-

————————————————————-

நித்ய அநித்ய பதார்த்தங்களை விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார் –

கள்ளவிழ்  தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்-அப்போது அலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களை யுடையனாய் –பவ்யனாய் இருக்கிறவனே -அவனுடைய திருக் கண்கள் போலே யாயிற்று இவருக்கு விபூதியும் ஆகர்ஷகமாய் இருக்கிறபடி -கீழில் திருவாய் மொழியில் -தாமரை நாண் மலர் போல் -என்று பாதகமானது தானே இ றே இப்போது அனுகூலமாய் இருக்கிறது
உள்ளதும் இல்லதுமாய் -நித்யமாகையாலே உள்ளதுமாய் -அவஸ்தாந்தர பாக்காகையாலே இல்லை என்னலுமாய்
உலப்பில்லனவாய் -அசங்க்யாதமான ஆத்ம வஸ்துவுமாய்
வியவாய்-வேறு பட்டு இருந்துள்ள அசித்தாய்–நித்தியமாய் -அசங்க்யாதமான ஆத்ம வஸ்து வுக்கு நிர்வாஹகானாய் -அதில் காட்டில் வேறுபட்டு நஸ்வ ரமாய் இருக்கிற அசித் பதார்த்தங்களுக்கு நிர்வாஹகானாய் -என்றபடி
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி-திருப் பாற் கடலிலே சத்ருக்கள் வந்து கிட்ட ஒண்ணாத படி விஷத்தை யுடைய திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி
உள்ளப் பல்யோகு செய்தி-திரு உள்ளத்திலே பல ரக்ஷண சிந்தை பண்ணா நிற்றி –சேதன பேதத்தோபாதியும் போரும் இ றே ரக்ஷண உபாய சிந்தைகளில் விதா பேதமும்
இவை என்ன உபாயங்களே!–அவற்றோபாதி உபாயங்களும் பலவாய் இருக்குமாயிற்று -சேதனர் நின்ற நின்ற நிலைகளில் புருஷார்த்த ருசியை பிறப்பிக்கைக்கும் -ருஸ்ய அனுகுணமாக புருஷார்த்த உபாயங்களிலே சேர்க்கைக்காகவும் விரகு ஏதோ என்று சிந்திக்கைக்காக இ றே திரு வனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறது –

—————————————————————

பிராகிருத விஷய ப்ராவண்யத்தை தவிர்த்து த்வத் ஏக தாரகனாம் படி என்னைப் பண்ணி வைத்து பின்னையும் இப்பிரக்ருதியிலே இட்டு வைக்கிற ஆச்சர்யம் என் -என்று கொண்டு இத் திரு வாய் மொழிக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார் –

பாசங்கள்  நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-

பாசங்கள் நீக்கி -அவித்யா கர்ம வாசனா ருசிகளைப் போக்கி
என்னை-விஷயாந்தரங்களிலே கால் தாழ்ந்து இருக்கிற என்னை
உனக்கே அறக் கொண்டிட்டு நீ-துயர் அறு சுடர் தொழுது எழு-என்னும் படி பண்ணி -இவருக்கு மயர்வை அறுத்து மதி நலத்தை அருளிற்று எத்தைக் கொண்டு என்னில்
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!-சாத்தின வளையத்தின் அழகைக் காட்டி யாயிற்று இப்படி பண்ணிற்று -பரிமளத்தை யுடைத்தாய் மலரோடு கூடின சிரமஹரமான திருத் துழாய் மாலையை திருமுடியில் யுடைய ஆச்சர்ய ஸுந்தர்ய யுக்தனே –
அருளாய்-இவ்வளவு புகுர நின்ற என்னை இங்கே இட்டு வைத்தது நலியவோ
காயமும் சீவனுமாய்க் -சரீரமும் ஆத்மாவுமாய்
கழிவாய்ப் பிறப்பாய் -உத்த்பத்தி விநாசங்களுமாய்
பின்னும் நீ-மாயங்கள் செய்து -சம்சாரத்தில் நசை அற்ற பின்பும் ஜென்ம மரநாத்தி யாச்சர்யங்களை யுண்டாக்கி –
வைத்தி;-அவற்றோடு ஜீவிப்பித்து வைத்தீ
இவை என்ன மயக்குகளே.–இவை என்ன தெரியாச் செயல்கள் -துர்ஜ்ஜேய ப்ரவ்ருத்திகள் –

————————————————————-

விஸ்ம்ருதி  – விஸ்மரணம்  –தொடக்கமான விருத்த பதார்த்தங்களை விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –

மயக்கா!  வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6-

மயக்கா! –அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே மதி கெடும்படி பண்ணினவனே
வாமனனே! -தேவர்களை நெருக்கி த்ரை லோக்யத்தை யாண்ட மஹா பலி தானே இசைந்து தேவ கார்யம் செய்யப் போந்தான் என்று அறியாதே கையிலே நீர் வார்க்கும் படி இ றே அவனை மயக்கிற்று
மதியாம் வண்ணம் ஒன்றருளாய்-மஹா பலியை அழகாலே பிச்சேற்றி நினைத்தது முடித்துக் கொள்ள வல்ல நீ -எனக்கு உண்டான சங்கடத்தை தீர்த்து தெளிவு பிறக்கும் படி ஒரு விரகு அருளிச் செய்ய வேணும்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் -விஸ்ம்ருதியும் தெளிவுமாய் -மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞான மபோஹஞ்ச -என்கிறபடியே
அழலாய்க் குளிராய் -சீதோஷ்ணங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகானாய்
வியவாய்-வியப்பாய் -விஸ்மயமாய் விஸ்மநீயமுமாய்
வென்றிகளாய் -விஜயங்களாய் –
வினையாய்ப் பயனாய்ப் -புண்ய பாப கர்மங்களும் -அதனுடைய பலன்களுமாய்
பின்னுநீ-துயக்கா -என்னை ஆஸ்ரயித்தாரும் மதி மயங்கும் படி
நீ நின்றவாறு -நீ நிற்கிற பிரகாரம்
இவை என்ன துயரங்களே.–இவை உனக்கு லீலையாய் எங்களுக்கு துக்க ரூபமாய் இரா நின்றது-

————————————————————–

துக்க ஹேதுவான அபிமானம் தொடக்கமான விசித்திர பதார்த்தங்களை விபூதியாக யுடையனாக இருக்கும் இருப்பை அனுசந்திக்கிறார் –

துயரங்கள்  செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7-

துயரங்கள் செய்யும் கண்ணா !–ஆஸ்ரிதர்க்கு துக்கத்தை விளைக்கிற கிருஷ்ணனே -எத்தாலே நலிவது என்னில்
சுடர் நீள் முடி யாய்!-திரு அபிஷேகத்தில் அழகை காட்டி யாயிற்று நலிவது -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் சூடின முடி -திரு அபிஷேகம் நலிகிறாப் போலே யாயிற்று விபூதி யோகமும் நலிகிற படி
அருளாய்-இவற்றால் நலிவு படாத படி பண்ணி அருள வேணும்
துயரஞ் செய் மானங்களாய் -துக்கத்தைப் பண்ணும் துர்மானங்களாய் -தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய –தாஸோஹம் வாஸூதேவஸ்ய -என்ற அபிமானம் ஆகில் இ றே உத்தேச்யம் ஆவது
மதனாகி உகவைகளாய்த்-துர்மானத்தாலே வந்த கர்வமும் -அதுக்கு அடியான ப்ரீதியுமாய்
துயரஞ் செய் காமங்களாய்த் -சங்காத் சஞ்சாயதே காமம் -என்று தொடங்கி -புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்கிறபடியே துக்கத்தை விளைப்பதான காமம் –
துலையாய் -பரிமாணமாய்–பரிச்சேதகமாய் –முடியுமவையாய் என்றுமாம்
நிலையாய் நடையாய்த்-ஸ் திதி கமனங்களாலே என்னுதல் -ஸ்தாவர ஜங்கமங்களை சொல்லுதல்
துயரங்கள் செய்து வைத்தி;-துக்கங்களை பண்ணி வைப்புதீ-விபூதி யநுசந்தானம் பண்ணப் புக்காரை வருத்தும் படி சொல்லுகிறது
இவை என்ன சுண் டாயங்களே.–-இவை என்ன விளையாட்டுக்கள் -உனக்கு லீலை எனக்கு துக்க ரூபமாய் இரா நின்றது –

———————————————————–

சகல ஜகத்தையும் ஸ்ருஷ்டித்து அந்தர் பஹிச்ச வியாபித்து இப்படி நிர்வஹியா நின்று வைத்து துர்ஜ்ஜேயனாய் இருக்கிற இது என்ன ஆச்சர்யம் -ஸ்வபாவம் -என்கிறார்  –

என்ன  சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-.

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் -என்ன லீலைகளாய் யுடையையாய்க் கொண்டு என்ன பிரகாரத்தாலே நின்றாய் -லோகத்தில் காண்கிற லீலையில் காட்டிலும் லீலையும் வ்யாவ்ருத்தமாய் இரா நின்றதீ
என்னை ஆளுங்கண்ணா!-எனக்கு பவ்யனான கிருஷ்ணனே
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை-இன்ன படிப்பட்ட ஸ்வபாவத்தை யுடையையாய் கொண்டு இன்ன பிரகாரத்தாலே நின்றாய் என்று சர்வ காரண பூதனாய் இருந்துள்ள உன்னை எத்தனையேனும் அதிசய ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும் கூட அறிய ஒண்ணாது இருத்தி -யந்நாயம் பகவான் ப்ரஹ்மா ஞானாதி புருஷோத்தமம் –
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பிரவாஹ ரூபேண பழையதாய் போரு கிற சகல லோகங்களையும் யுடையையாய் -மூ உலகங்கள் -க்ருதகம்-அக்ருதகம்-க்ருதாக்ருதகம் -த்ரிவித சேதனர் என்றுமாம் –அவற்றைப் படைத்து-லோகங்கள் ஆனபோது அவற்றை ஸ்ருஷ்டித்தது என்ன கடவது -த்ரிவித சேதனர் ஆனபோது ஞான விகாச விசேஷங்கள் ஆக கடவது
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!-இதுக்கும் மேலே அந்தர் பஹிச்ச -என்கிற படியே வியாபித்து நிற்கிறவனே
இ வை என்ன இயற்கைகளே–இவை என்ன விலக்ஷண ஸ்வபாவம்-

——————————————————————

ஞான இந்திரியங்களும் கர்ம இந்திரியங்களும் சப் தாதி விஷயங்களும் அவனுக்கு விபூதியாய் இருக்கும் இருப்பை அனுசந்திக்கிறார் -.

என்ன  இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய்-என்ன ஸ்வபாவங்களை யுடையையாய் கொண்டு நிற்கிறாய்
என் கண்ணா-என்னை அடிமை கொள்ளுகிற கிருஷ்ணனே
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்-நெருங்க பட்டு இருந்துள்ள கர சரணாதிகளும் ஸ்ரோத்ராதிகளுமான எல்லா இந்த்ரியங்களுமாய்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே-ஆசைப்படப் படுவதுமான சப்தாதிகளுக்கு நிர்வாஹகனான —உன்னுகை–அனுசந்திக்கை -ஆசைப்படுகை –ஒளி-ரூப பிரகாசம்
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–உன்னுடைய பெருமையையும் ஸூஷ்மத்தையையும் அனுசந்திக்கப் புக்கால் உன்னுடைய வை லக்ஷண்யத்துக்கு முடிவு இல்லை -அணீயாம் சமணீயசாம்-

———————————————————————-

வேதைக சமைதி கம்யனாய்-காரணமாய் -அதி ஸூஷ்மமாய் இருந்துள்ள  சேதன அசேதனங்களை விபூதியாக உடையவனுடைய இருப்பை அனுசந்திக்கிறார் –

இல்லை  நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10-

இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்-நுணுக்கங்கள் இதினில் பிறிது இல்லை என்னும் படி -நுணுக்கங்கள் -ஸூ ஷ்ம ஸ்வ பாவங்கள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயங்கள் அடையவும் ஸூஷ்ம பாவங்களுக்கு எல்லாம் எல்லை நிலம் இ றே -காரண அவஸ்தை
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
பழையதாய் பிராமண ஸ்ரேஷ்டமான வேதத்தில் சொல்லுகிற அசேதனத்துக்கும் -அதில் காட்டிலும் ஸூஷ்மமான சேதன பதார்த்தத்துக்கும் நிர்வாஹகன் நீயே -சதேவ சோம்யேத மக்ர ஆஸீத் -என்கிறபடியே நாம ரூபங்களை இழந்து தமஸ் சப்த வாச்யனாய் -தம ஏகி பவதி-என்கிறபடியே அவன் தன்னை சொல்லுகிற சொல்லாலே சொல்லலாம் படி இருக்கை –
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!-ஜெகதாகாரனான நிலை போல் அன்றியே அசாதாரண விக்ரஹ உக்தனாய் கொண்டு நித்ய விபூதியில் ஒரு படிப்பட இருக்கும் இருப்பை சொல்லுகிறது -அல்லியை யுடைத்தான திருத் துழாய் மாலையால் அலங்க்ருதமான திரு மார்பை யுடையையாய் -அவ்விருப்புக்கு ஒரு நழுவுதல் இன்றியே இருக்கிறவனே -சேதன அசேதன யோகமும் திருத் துழாய் மாலை போலே தகுதியாய் இருக்கும் என்கை
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –வேதங்களும் சனகாதிகளும் யதா பலம் பேசப் புக்கால் -பேசின அம்சம் உன்னை பேசிற்றாம் அத்தனை அல்லது யதோ வாசோ நிவர்த்தந்தே என்று சொல்லப் படுகிற உன்னை பரிச்சேதிக்க ஒண்ணாது என்கை -எத்தனையேனும் தாழ்ந்தான் ஒருவன் ஆகிலும் அநந்ய பிரயோஜனன் ஆகில் அவன்சொன்ன அளவு உனக்கு அளவாய் அவ்வருகு இல்லாதபடி இருக்கிறவன் என்றுமாம்-

——————————————————————-

நிகமத்தில் ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழியை யதா சக்தி சொல்லுமவர்கள் என்றைக்கும் க்ருதக்ருத்யர் என்கிறார்-

ஆம் வண்ணம்  இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை-ஒருவராலும் ஒரு வகையாலும் உள்ள அளவு இது என்று அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரனை இ றே கவி பாடிற்று -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒரு வகையும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த-அவனை உள்ளபடி அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்தார் யாயிற்று இவர் –விஷயம் அபரிச்சின்னமாய் இருக்கச் செய் தேயும் -மயர்வற மதி நலம் அருளினன்- என்று அவன் தானே கொடுத்த ஞானம் ஆகையால் உள்ள படியை அறிந்து அருளிச் செய்தார் –ஸ்வ யத்னத்தாலே காண ப் பார்க்கில் இ றே அறிகை யில் அருமை உள்ளது
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்-அவனுக்கு தகுதியாய் இருந்துள்ள நல்ல தமிழ் என்னுதல் -வண்ணம் என்று ஆசையாய் –நல்ல ஓசையை யுடைய தமிழ் என்னுதல் -தகுதியாய் இருந்துள்ள நல்ல சந்தஸ் ஸூ க்களை யுடைத்தான தமிழ் என்னுதல் –
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–இவர் தம்மைப் போலே மயர்வற்றுச் சொல்ல வேணும் என்னும் நிர்பந்தம் இல்லை -வல்லபடி சொல்லுமவர்கள் -இவ்வாத்ம வஸ்து உள்ளதனை காலம் ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டாதே ஆழ்வார் பரிக்ரஹத்தாலே என்றும் ஓக்க நித்ய அனுபவம் பண்ண சமைந்தார் ஆவார்கள்


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: