திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –7-7–

கீழ் திருவாய்மொழியில் எம்பெருமானைக் காண வேணும் என்று கூப்பிட்டு -மல்கு நீர் சுடர் தழைப்ப-என்று அவன் அழகை அனுசந்தித்தார்
அவ் வழகு நெஞ்சிலே ஊற்றிருந்து-பாவன பிரகர்ஷத்தாலே -ப்ரத்யக்ஷ சாமானகாரமாகத் தோற்றி
பாஹ்ய சம்ச்லேஷத்துக்கு எட்டாமையாலே நோவு படுகிற தம் தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் -கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி
-சேதனரோடு சேதனருக்கு முதல் உறவு பிறப்பது த்ருஷ்ட்டி பந்தத்தாலே -அது அடியாக அல்லாத பரிமாற்றங்கள் –
ஆகையால் அந்த திருக் கண்களில் உள்ள அழகை அனுசந்தித்து -நிரந்தர அனுசந்தானத்தாலே உருவு வெளிப்பாடாய்
-நினைத்த பரிமாற்றத்துக்கு எட்டாமையாலே அலமாக்கிற இவளை தோழிமார் தொடக்கமான பந்துக்கள் திரண்டு
-நீ இப்படி படுகைக்கு ஹேது என் -என்று கேட்க-தோழிமார் ஒழிந்தாருக்கு மறைக்கும் தசை அல்லாத ஆற்றாமை மேலிடுகையாலே
அவர்களைக் குறித்து -திருக் கண்கள் தொடக்கமான திவ்ய அவயவங்களில் அழகுகள் தனித் தனியும் திரளவும் வந்து என்னை நலிய
இவற்றிலே நோவு பட்டேன்-என்ன இப்படி படுகையும் உன்னுடைய ஸ்த்ரீத்வத்துக்கும் அவனுடைய தலைமைக்கும் போராது என்ன
-உங்கள் ஹித வசனத்து அளவு அன்று -அவ் வழ குகள் என்னை மேல் விழுந்து நலியா நின்றன -இனி உற்றத்தை பற்றும் இத்தனை
-இனி என்னை அலைத்து உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை-என்று அவர்களுக்கு அவள் சொல்லுகிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்
அல்லாத விஸ்லேஷங்களில் காட்டில் உருவு வெளிப்பாட்டுக்கு வாசி என் என்னில் -கீழ் நின்ற நிலை குலைந்து மேல் பிறக்கும் அபேக்ஷை
அல்லாத விஸ்லேஷங்கள் ஆகின்றன-உருவு வெளிப்பாடு ஆகிறது -கீழில் வைஸத்யம் குலையாமே மேல் அபேக்ஷை வர்த்திக்கை
-இந்த உருவு வெளிப்பாடு எங்கனேயோ விலும் சுருக்கடிக்க உண்டு -அங்கு ப்ரீதி அப்ரீதி சமமாய் இருக்கும்
-இங்கு அப்ரீதியே உறைத்து இருக்கும் -திருக் கண்கள் இணைக் கூற்றம் என்னும் படி இ றே இதில் ஆற்றாமை-

—————————————————————-

திருக் கண்களின் அழகு வந்து தன்னை நலிகிற படியை சொல்லுகிறாள் –

ஏழையர்  ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

ஏழையர் ஆவி உண்ணும் -ஆசைப்பட்ட விஷயம் கிடையாது என்றாலும் மீள மாட்டாத சபலைகள் யுடைய பிராணனை முடிக்கும் -ராம சரம் போலே ஒப்பனை குறி அழியாது இருக்க பிராணனைத் துணிக்கும்-புருஷர்க்கும்-பருவம் நிரம்பி ஹிதம் சொல்லும் ஸ்த்ரீகளும் பாதை இல்லை –
இணைக் கூற்றங் கொலோ -ஒரு மிருத்யுவால் முடிக்க ஒண்ணாது என்று இரண்டு மிருத்யு க்ருத சங்கேதிகளாய் வந்தால் போலே யாயிற்று இருக்கிறது
அறியேன்–சபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே பும்ஸாம் த்ருஷ்டா சித்த அபஹாரியும் இ றே
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ -அன்றியே பெண் பிறந்தாரை நலியுமவை தானேயோ -உபகார சீலனான கிருஷ்ணனுடைய கடல் போலே இருந்துள்ள திருக் கண்கள் என்னுதல் –கடல் போலே சிரமஹரமான நிறத்தை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் -கையிலே திரு வாழி யை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் –
அறியேன்-உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண் -என்று இ றே இவள் பிரதிபத்தி இருப்பது –முதல் உறவு பண்ணினவை தானே இ றே இப்போது பாதகமாய் இருக்கிறது –ஒன்றை நிர்ணயிக்க மாட்டாமையாலே அறியேன் என்கிறாள் -ஆனால் தப்பாய் பார்த்தாலோ என்னில்
சூழவும் தாமரை நாண் மலர் போல் -பார்த்த பார்த்த இடம் எல்லாம் அதுவேயாய் இறாய்க்க பார்த்த இடத்தே வந்து நிற்கும் -நாண் மலர் என்று சம்ச்லேஷ தசையில் செவ்வியை சொல்லுகிறாள் -நைவ தம்சான் நமஸகான் -என்று பிரிந்த பின்பு அத்தலையில் உள்ளது எல்லாம் அறியாளே
வந்து தோன்றுங் உருவு வெளிப்பட்டால் வந்தது என்று இருக்கிறாள் அல்லள் -அத்தலையாலே வந்தது என்று இருக்கிறாள் –
கண்டீர்–பிரத்யஷிக்கிற இவ்வர்த்தத்துக்கு உபதேசம் வேணுமோ -உங்களுக்கு தோற்றுகிறது இல்லையோ
தோழியர் காள்!அன்னைமீர்!-தோழிமார்க்கு சொல்லக் கடவது -தாயமார்க்கு மறைக்கக் கடவது என்ற விவேகம் நடையாடாத தசா விசேஷத்தை சொல்லுகிறது
என் செய்கேன் -இறாய்க்கப் பார்ப்பேனோ -அனுபவிக்கப் பார்ப்பேனோ –
துயராட்டியேனே.–அநந்த ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சந -என்று இருக்கும் அது தவிர்ந்து அவசியம் அனுபோக்த்வயம் -என்கிறததுவே தலை நின்றது –

—————————————————————

தோழிமார் இவள் பருவம் ஆகையால் நோவு அறிந்து அலைக்கத் தவிர்த்தார்கள் -அன்னைமார்கள் தாங்கள் அலைவதற்கு மேலே திரளிலேயும் சொல்லப் புக்கார்கள் -அவனுடைய திரு மூக்கில் அழகு திருக் கண்களின் அருகே நின்று என்னை பாதியா நின்றது என்கிறாள் –

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-

ஆட்டியும் தூற்றியும் -ஆட்டுகை யாவது தாங்கள் ஹிதம் சொல்லி அலைக்கை-தூற்றுகை யாவது பிறருக்கும் குற்றங்களை சொல்லுகை –
நின்று -ஒரு கால் அச்சமுறுத்தி மீட்க யத்னம் பண்ணினால் -அது பலியாது ஒழிந்தால் -தவிர இ றே அடுப்பது
அன்னைமீர்! -பித்ராதிகள் சொல்லக் கடவ ஹிதத்தை பிரியம் செய்து போரக் கடவ நீங்கள் சொல்லுகிறது என் –
என்னை -ஒரு கால் சொன்னால் மீளாத என்னை
நீர் நலிந்து என்?-பிரியத்தை ஒழிய குற்றங்களை சொல்லி என்ன பிரயோஜனம் உண்டு –நாங்கள் எத்தை செய்தால் பிரயோஜனம் உண்டு என்ன –
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்-இஸ் ஸம்சயத்தை அறுத்து தர வல்லி கோள் ஆகில் பிரயோஜனம் உண்டு -கண்ணின் பாடே உன்னசம் என்கிறபடியே உயர்ந்த -கடலின் அருகே அது ஊற்றாக வளர்வது ஒரு கொடி போலே -அதன் நீர்மையாலே வளர்ந்ததொரு கற்பகக் கொடியோ -ஒழுகு நீண்டு இருக்கையாலே கொடி என்னவுமாய் -ச்ரத்தை யாலே கொழுந்து என்னவுமாய் இரா நின்றது -ஸர்வதா சாம்யத்தாலே இன்னது என்று நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை -எங்களைக் காட்டில் இவ்விஷயத்தில் அவஹாகித்த நீ சொல்லிக் காணாய் என்ன
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு-உருவு வெளிப்பட்டால் வெண்ணெய் நாற்றமும் பிரத்யஷிக்கிற தாயிற்று இவளுக்கு -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால் அல்லது செல்லாத -களவிலே இழிந்து பிடியுண்டால் -அத்தை இல்லை செயகைக்காக முகத்திலே வெண்ணெய் பூசிக் கொள்ளுமே -அவ் வெண்ணெய் நாற்றம் பிரத்யஷிக்கிற படி -நாங்கள் காண்கிறிலோமீ என்ன
எனதாவி யுள்ளே-என் ஹிருதயத்தின் உள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–சுடர் வெட்டின பெரு விளக்கின் ஒளியை யுடைத்தாய் -வலிதாய் நலியா நின்றது -ஏற்றிய பெரு விளக்கு என்று ஒரு தமிழன் சொன்னான் -விளக்குக்கு பெருமையாவது இவள் ஆற்றாமை கண்டாலும் ப்ரஜ்வலியா நிற்கை -வலிமை யாவது -க்ஷணிகமாய் ப்ராதேசிகமாய் இருக்கிற இது ஏக ரூபமாய் எங்குமாய் நின்று நலிகை – –

———————————————————————

அந்த வல்லி கொழுந்து விட்டுப் பூத்த பழுத்த பழம் இருக்கிற படி -திருப் பவளத்தின் அழகு நலிகிரப்படியை சொல்லுகிறது –

வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோஅறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-

வாலிய தோர் கனி கொல்?-பழங்கள் காலம் சென்ற வாறே செவ்வி அழியக் கடவதாய் இருக்க -ஏக ரூபமாய் அத்விதீயமாய் இருக்கிற பழமோ -அதினுடைய போக்யதை போது செய்தது ஆகில் இ றே என் ஆற்றாமை போது செய்வது –
வினையாட்டியேன் -போக்ய வஸ்து பாதகமாம் படி பாபத்தை பண்ணினேன் -அம்ருதம் நஞ்சாம் படி பாபத்தை பண்ணினேன்
வல் வினைகொல்?-அனுபவ விநாசியம் அல்லாத பாபமோ -நான் பண்ணின பாபம் திரு அதரமாய் கொண்டு குடி ஏறிற்றோ -இத்தலையால் பண்ணின பாபம் நிக்ரஹபரூணே அவன் பக்கலிலே கிடந்து இறே பலப்ரதம் ஆவது
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ –அழகினுடைய திரளான பவளத்தின் ச்ரத்தை உடைய முறியோ -முறி என்கிறது முறிந்த போதை அகவாயில் நெய்ப்புத் தோற்றி இருக்கை
அறியேன்--நிர்ணயிக்க மாட்டு கிறி லேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்-திரு அதரத்துக்கு கூட்டுப் படை சொல்லுகிறது -கறுத்து அபரிச்சேத்யமான முகில் போலே இருக்கிற நிறத்தை யுடைய சர்வேஸ்வரனுடைய தொண்டை போலே இருக்கிற திரு அதரம் -திருமேனிக்கு தனக்கும் உண்டான பகை என்னை நலிகைக்கு உறுப்பு ஆயிற்று -தப்பப் பார்த்தாலோ என்னில்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–பார்த்த திக்கு எல்லாம் வந்து தோற்றா நின்றது -எதுக்காக என்னில் என்னுடைய நற்சீவனை கொள்ளுகைக்காக-

———————————————————————

கீழ் சொன்ன அழகுகள் நலிந்த நலிவுகள் எல்லாம் ஸூகம் என்னலாம் படி விலக்ஷணமான இரண்டு புருவங்களும் என்னை மிகவும் நலியா நின்றன என்கிறாள் –

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர்மதனன் கருப்புச்சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண் ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4-

இன்னுயிர்க்கு-நல் சீவனை கொள்ளுகைக்காக
ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்-அபலைகள் மேல் வளைகிற நீலமான இரண்டு விற்களோ -திருக் குழல் ஓசை காத்துக் கிடக்கிறாரை உறங்கி பெண்களை எழுப்புமா போலே இவையும் அபலைகள் மேலே யாயிற்று வளைகிறது –அத்தலையில் புத்தி பூர்வகமாக வளைக்கிறார் இல்லை -இத்தலையில் விஷயம் இல்லை -அகர்மமாகவும் அகரத்துகமாகவும் வளையா நின்றது –
மன்னிய சீர்மதனன் கருப்புச்சிலை கொல்?-பெண் பிறந்தாரை நலியக் கடவ காமன் கையில் கருப்பு வில்லோ –மன்னிய சீர்-மதனன் கருப்புச்சிலை கொல்?— தேவர் கையில் உடம்பு இழப்பதற்கு முன்பே வடிவோடே நின்ற எழிலை யுடைய காமன் கருப்புச் சிலை கொல்-பார்த்ததற்கு ஆபாசமாய் பாதகத்வம் விஞ்சி இருக்குமது –
மதனன்-தன்னுயிர்த் தாதை கண் ணப் பெருமான் புருவம் மவையே-
அழகாலே லோகத்தை அடைய பிச்சேற்றும் காமனுக்கும் உத்பாதகனான கிருஷ்ணனுடைய புருவங்கள் யாக வேணும் -கிருஷ்ண சம்பந்தம் கொண்டு ராஜ குலம் அடிக்கும் காமனுடைய கையில் வில்லாக்க கூடாது -தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ மட்ட வழகிய -என்னுமவனுடைய புருவம் யாக வேணும் -அவதாரணத்தாலே -கீழ்ச் சொன்ன அழகுகள் ஆசுவாச ஹேது என்னும் படி நலியா நின்றன –
என்னுயிர் மேலனவாய்.–இருப்பு அவன் பக்கலிலே யாயிற்று இவற்றுக்கு -நோக்கு என் பிராணனையே கணிசித்து நின்று –
அடுகின்றன-கொல்லா நின்றது / என்றும் நின்றே-நித்தியமாய் நின்று நலியா நின்றன

———————————————————-

ஒரு தலையிலே ஒதுங்கி பிழைக்க வல்லையே என்ன எனக்கு ஒதுங்க ஓர் இடம் இல்லை என்கிறாள் -கிருஷ்ணனுடைய முறுவலானது என்னை மிகவும் நலியா நின்றது என்கிறாள்

என்று  நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5-

என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
தோன்றி மாயாதே நித்தியமாய் நின்று விளங்கா நிற்பதாய் சிவந்த சுடரை ஈனா நின்ற வெள்ளை மின்னோ -அசிராம்சு -என்னா நிற்பார்கள் இத்தை -என்னை நலிகைக்கு உறுப்பாக நித்யத்வத்தை ஏறட்டுக் கொண்டது -திரு முத்தின் நிரை திரு வதரத்தில் பழுப்பை ஈனுகிறாப் போலே யாயிற்று சேர்த்தி அழகு இருப்பது
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
அங்கனம் இன்றியே என் பிராணனை முடிக்கிற திரு முத்து நிரை தானேயோ அறிகிறிலேன்
அணி முத்தம் -அணி வகுத்து ஏறினால் போல் தந்த பங்க்திகள் பாதகமாய் இருக்கிற படி என்னவுமாம் –
கீழில் திரு முத்தும் திரு வதரமும் சேர்ந்த சேர்த்தி பாதகமான படி சொல்லிற்று -அணி முத்தம் என்று திரு முத்துக்கள் அந்யோன்யம் சேர்ந்த சேர்த்தி பாதகமானபடி சொல்லிற்று
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
-கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனுடைய முறுவல் என்னுடைய பிராணனை நலியா நின்றது -பிரிவால் பட்ட நலிவு எல்லாம் தீரும்படி பெண்கள் முகங்களில் பண்ணின ஸ்மிதம் எனக்கு ஒருத்திக்குமே பாதகம் ஆகா நின்றது -இவை நலியாத இடத்தில் போனாலோ என்னில்
அன்னைமீர்!எனக்கு உய்விடமே.-ஒன்றும் அறிகின்றிலேன்-
இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –

————————————————————

எம்பெருமானுடைய திரு மகர குண்டலங்களும் திருக் காதும் தன்னை நலிகிற படியை சொல்லுகிறாள் –

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6-

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்-எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்?
அபலைகளுக்கும் அசுரர்களுக்கும் ராக்ஷஸருக்கு உய்விடம் எவ்விடம் என்று ஜ்வலியா நின்று கொண்டு திரு மகரமானது தழைத்த தளிரோ -அஸூராதிகள் அழகு கண்டால் பொறுக்க மாட்டாதே முடிவார்கள் -அபலைகள் லாபிக்கப் பெறாதே முடிவார்கள் -அபலைகளோ பாதி சத்ருக்களான அசூராதிகளையும் ஸ்நேஹத்தை விளைத்து அழிக்க வல்ல விஷயம் என்றுமாம் –
பைவிடப் பாம்பணையான் -ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடையனாய் சத்ருக்களுக்கு கிட்ட ஒண்ணாத படி விஷத்தை யுடையனான திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின சர்வேஸ்வரனுடைய –
திருக் குண்டலக் காதுகளே-அந்த காதுகள் பாதகம் ஆனால் போலே திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்த போதைச் சேர்த்தி இவருக்கு பாதகம் ஆயிற்று என்னுதல் -அங்கே புருஷகாரம் உண்டாய் இருக்கக் கிடீர் நான் நலிவு படுகிறது என்னுதல் -அவதாரணத்தாலே கீழ் சொன்ன அழகுகள் ரக்ஷகம் என்னலாம் படி இ றே இதனுடைய பாதகத்வம்
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன -கை விடாதே எப்போதும் ஓக்க முடியா நின்றன
காண்மின்களே.–-உருவு வெளிப்பட்டால் தனக்கு தோற்றுகிறாப் போலே அவர்களுக்கும் தோற்றும் என்று இருக்கிறாள்-

—————————————————————–

எம்பெருமானுடைய திரு நெற்றியில் அழகு தன்னை நலிகிற படியைச் சொல்லுகிறாள்-

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண்திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7-

காண்மின்கள் அன்னையார்காள்!-என்று காட்டும் வகை அறியேன்!— தாய்மாரான நீங்கள் காணுங்கோள் என்று வைத்து காட்டும் பிரகாரம் அறியேன் -என் கைக்கு பிடி தருதல் -உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில் இ றே காட்ட விரகு உள்ளது -புருஷர்களுக்கு காட்டில் இ றே பருவம் நிரம்பினானுங்களுக்கு காட்டலாவது
நாண் மன்னு வெண்திங்கள் கொல்-பூர்வ பக்ஷத்தில் அஷ்டமீ சந்திரனோ -இளகி இருக்கையும் -வர்த்தித்து வருகையும் தர்ச நீயமாய் இருக்கையும்
,நயந்தார்கட்கு நச்சிலை கொல்-ஆசைப் பட்டார்க்கு நஞ்சாய் இருப்பதோர் இலையோ என்னுதல் -ஆசைப் பட்டார்க்கு நச்ச வேண்டாது இருக்கிறதோ என்னுதல் –நச்சு மா மருந்தும் என்றவர் கலங்கிச் சொல்லுகிற வார்த்தை இ றே இது –
சேண் மன்னு நால் தடந் தோள் -ஒக்கத்தை உடைத்தாய் கல்ப தரு பணைத்தால் போலே யாய் சுற்று உடைத்தாய் இருக்கிற தோள் அழகை காட்டி என்னை அநந்யார்ஹை ஆக்கினவன் -ஆயாதாச்சா ஸூ வ்ருத்தாச்ச பாஹவ என்று திருவடி அகப்பட்ட துறையிலே யாயிற்று இவளும் அகப்பட்டது
பெருமான் தன் திரு நுதலே?-திரு நெற்றியே
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–இங்கு உயிர் -பிராணன் -அழகு பாதகமாம் படி பாபத்தை பண்ணின என் பிராணனை முடிக்கையில் துணிந்து -கொள்கையில் அபி நிவேசித்து பிராணனை முடியா நின்றது -தோல் புரை போகை அன்றிக்கே சத்தையை அழியா நின்றது
கோளிழைத்தே-என் அழகை போக்கி என்றுமாம் –

———————————————————–

திருக் கண்கள் தொடக்கமாக முன்பு சொன்ன திவ்ய அவயவங்களோடும்  கூடின திரு முகத்தில் அழகு -எல்லாம் –ஒரு முகம் செய்து தன்னை நலிகிற படியை சொல்லுகிறாள்

கோளிழைத்  தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-

கோளிழைத் தாமரையும்-முடிக்கையில் ஒருப்படுகிற தாமரை என்னுதல் -தன் ஒளியே தனக்கு ஆபரணமான தாமரை என்னுதல் -இழையைக் கொள்ளப் பட்ட தாமரை என்னுதல் -பொற்காற்றாமரை-நூற்காற்றாமரை -என்று சில பேதம் உண்டு -அந்த நூற்காற்றாமரைச் சொல்லுகிறது –
கொடியும்-திரு மூக்கும் –
பவளமும் -திரு அதரமும்
வில்லும்-திருப் புருவமும்
கோளிழைத் தண் முத்தமும் -தன் ஒளியே தனக்கு ஆபரணமாக உடைய குளிர்ந்த திரு முத்தும் -இழையைக் கொள்ளப் பட்ட முத்து -கோத்த முத்து என்றுமாம் -தந்த பங்க்தி என்ன கடவது இ றே –
தளிரும் -திருக் காதும்
குளிர் வான் பிறையும்-குளிர்ந்த பெருத்த பிறை போலே இருக்கிற திரு நெற்றியும் –
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? –கொள்ளப் பட்ட -கோக்கப் பட்ட -ஆபரணங்களாக யுடைத்தாய் இருபத்தொரு ஜ்யோதிர் மண்டலமோ என்னுதல் -தன் அழகே தனக்கு ஆபரணமாய் இருபத்தொரு ஜ்யோதிர் மண்டலமோ என்னுதல்
கண்ணன்-கோளிழை வாண் முகமாய்க் -தன் ஒளியே தனக்கு ஆபரணமாக உடைய திரு முகமாய்க் கொண்டு உபமான உபேமேயங்கள் மாறாகும் படி ரூபகம் முற்றின படி
கொடியேன் உயிர் கொள்கின்றதே.-எல்லாரும் உயிர் பெறும் நிலத்திலே இப்படி துக்கப் படுகைக்கு ஈடாகப் பண்ணின பாபத்தை யுடைய என் பிராணனை நலியா நின்றது-

——————————————————–

அதி லோகமான திருக் குழலின் அழகு தன்னை நலிகிற படியைச் சொல்லுகிறாள் –

கொள்கின்ற  கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-

கொள்கின்ற கோள் இருளைச்-உபமானத்தை சிக்ஷிக்கிறது -பிரளய காலத்தில் திவா ராத்திரி விபாகம் இன்றிக்கே காலம் எல்லாம் ஜகத்தை அடைய வ்யாபியா நின்று கொண்டு இருக்கிற மிக்க தேஜஸ் -என்னுதல் -கோளிருள் -மிடுக்கை யுடைத்தான இருள் என்னுதல் –
சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்–அத்தை எக்குவது-அதில் வெளிறின அம்சத்தை கழித்து அத்தை கொழுவிதாக சுருட்டுவது –
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?-அதில் அகவாயில் உண்டான நீலமான நிறத்தை யுடைத்தாய் நன்றான நூல் திரளோ –
அன்று-இத்தனையும் செய்தால் ஆயிற்று அன்று என்னாலாவது –
மாயன் குழல்-ஆச்சர்யமான அழகை யுடைய கிருஷ்ணன் குழல் என்னும் அத்தனை –
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து -அலரா நின்ற குளிர்ந்த திருத் துழாயின் பரிமளம் தூசி ஏற வாயிற்று திருக் குழல் வந்து நலிகிறது –
என்னுயிரைக்கள்கின்றவாறு அறியீர் -உங்களுக்கு ஒரு வ்யஸனம் இன்றிக்கே இருக்க என்னுடைய பிராணனை களவு காண்கிற படி அறிகிறிலிகோள் -களவாவது -இத்தலையில் இசைவு இன்றிக்கே இருக்க அபஹாரம் பண்ணுகை -இத்தலை அத்தலை யாயிற்று -அப்ராப்தன் களவு கண்டால் பரிஹரிக்கலாம் -ப்ராப்தரானார் களவு கண்டால் பரிஹரிக்க ஒண்ணாது -கைப்பட்ட வாறே தன்னது என்று பிரமாணம் காட்டுகையாலே
அன்னைமீர்!கழறா நிற்றிரே.–உறவு வெளிப்பாட்டை பரிஹரிக்கை ஒழிய நியமிக்கைக்கு ஒரு முறை உண்டு என்னா பொடியத் தேடுமத்தனையோ –கழறுகை-அபிபவித்து வார்த்தை சொல்லுகை / கழறல்-நோவச் சொல்லுதல் –

—————————————————————–

திரு அபிஷேகத்தில் அழகில் என்னுடைய ஹிருதயம் அகப்பட்டது -இனி என்னைப் பொடித்து உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்கிறாள் –

நிற்றி  முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–7-7-10-

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் -முற்றத்துள் நின்று என்று படுக்கையை விட்டு எல்லாரும் காண முற்றத்திலே நிற்கை யாகிற இதுக்கு மேலே ஸ்வரூப ஹானி இல்லை என்று இருக்கிறாள் -யா நசக்யா புரா த்ரஷ்டும் பூதை ராக சகைரபி தாமத்ய ஸீதாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜனா –பிறந்த ப்ரமாதத்துக்கு நெரித்த கையை யுடையீராய் –
என்னை நீர்-உறவு வெளிப்பாடு புறப்பட விடப் புறப்பட்ட என்னை -அதில் இழியாத பாக்யத்தை பண்ணின நீங்கள் –
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்-போகாத படி நெஞ்சில் சுற்றியும் -உங்களில் விசாரித்தும் போக ஒண்ணாத படி சூழ்ந்து நின்றும் என்னுதல் -போயும் வந்தும் வையா நின்றி கோள் என்னுதல்
சுடர்ச்சோதி மணி நிறமாய்முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே-ஒற்றுமை கொண்டது உள்ளம்
ப்ராதேசிகமாக -நோக்குமவர்கள் இ றே இவர்கள்-நோக்குகிற விஷயம் தான் சுற்றும் சூழ்ந்து நலிய வல்ல படி -நிரவதிக தேஜஸ்ஸான ரத்னங்களின் ஒளியை உடைத்தாய் கொண்டு ஸமஸ்த லோகங்களையும் ஓர் இடம் ஒழியாமே வியாபிக்கிற தேஜஸ்ஸை யுடைய திரு அபிஷேகத்தில் என்னுடைய ஹ்ருதயம் ஒருப்பட்டது என்னுதல் -அங்கே விலை செய்து கொடுத்தது என்னுதல் -ஒற்றுமை -ஒருமை
அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–ஆட்டியும் தூற்றியும் என்ன பயன் -பெற்று வளர்த்து போக யோக்யதை பிறக்கும் அளவும் ஹிதம் சொல்லிப் பின்னை பிறர் கையிலே கொடுத்து விடுமது ஒழிய ப்ராப்த யவ்வனைகள் ஆனாலும் பெற்ற ப்ராப்தியைக் கொண்டு ஹிதம் சொல்லி மீட்க்கத் தேடும் அத்தனையோ –

————————————————————–

நிகமத்தில் இத்திருவாய்மொழியை அறிந்தவர்கள் ஆழ்வார் இதில் பட்ட நோவு படாதே அயர்வறும் அமரர்களோடே நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவார்கள் என்கிறார் –

கட்குஅரிய  பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11-

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்-கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-
மநுஷ்யர்கள் உடைய கண்ணுக்கு காண ஒண்ணாத ப்ரஹ்மாதிகள் கண்ணுக்கும் அவிஷயமான கண்ணனை -ப்ரஹ்மாதிகள் என்றும் கேட்டே போம் அத்தனை அல்லது அவர்களுக்கு காண ஒண்ணாதாய் இருக்கிறவன் -உறவு வெளிப்பட்டால் -சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -என்கிறபடியே பார்த்த பார்த்த இடம் எங்கும் தானேயாய் இரா நின்றான்
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
ப்ரதிபாத்ய வஸ்துவை உள்ள படியே ப்ரதிபாதிக்க வற்றான சக்தியை யுடைய ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்
உட்குஉடை வானவரோடு உட னாய் –
பகவத் குணங்களை பூர்ணமாக அனுபவிக்க வல்ல நித்ய ஸூ ரிகளோடு ஒரு கோவையாய்
என்றும் மாயாரே.–-உருவு வெளிப்பட்டால் நோவு படாதே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –உருவு வெளிப்பட்டால் நோவு படுகையும் முடிகையும் பர்யாயமாய் இருக்கையாலே -மாயார் -என்கிறார் -பகவத் அபசாராதிகளாலே வரும் கிலேசம் போலே அன்று இ றே பகவத் அங்கீ காரம் உண்டாய் பிரிவால் வரும் கிலேசம்

————————————————————–

கந்தாடை     அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: