திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –7-6-

கீழே இரண்டு திருவாய் மொழியிலும் பிறந்த குண சேஷ்டிதங்களை அனுசந்தித்து இப்படிப்பட்ட குண சேஷ்டிதாதிகளை யுடைய
எம்பெருமானைக் காண வேணும் -என்று ஆசைப் பட்டு பெறாமையாலே கேட்டார் அடைய நீராம்படியாக
அவனுடைய குண சேஷ்டிதாதிகளை பேசி பெரும் கூப்ப்பீடாக கூப்பிடுகிறார் –

—————————————————————-

ஸ்ருஷ்ட்டி யாதி அநேக உபகாரங்களை ஜகத்துக்கு பண்ணி -நிரதிசய போக்யனாய் இருந்த உன்னை நான் என்றோ சேருவது-என்று கூப்பிடுகிறார்  –

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!-ஸ்தாவர ஜங்கமாத்மகமான பதார்த்தங்கள் சேர்ந்து இருந்துள்ள சகல லோகங்களையும் உண்டாக்கின திரு நாபி கமலத்தை யுடையவனே –பரப்பு உடைத்தான மூ உலகு என்றும் சொல்லுவர்-
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!-அங்கனம் இருக்கிற த்ரி லோகத்தையும் மஹா பலி பறித்து கொள்ள -அளந்து கொண்ட நிரதிசய போக்யமான திருவடிகளை யுடையவனே
தாமரைக் கண்ணாவோ!-தனியேன் தனி ஆளாவோ!-தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?– என்னை ஒருவனையும் உன் குணங்களைக் காட்டி உன்னால் அல்லது செல்லாத படி பண்ணி அருளி எனக்கு எனக்கு உன்னைக் காட்டாதே இருக்கிற நீ என்னுடைய ஆர்த்தி தீர அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கி அருளி திருக் கைகளால் ஸ்பர்சிக்கலாம் படி உன்னை நான் சேர்வது என்றோ –
தனியேன் தனி ஆளாவோ!-என்றது உன்னுடைய கிருபை அல்லது வேறு ஒரு பற்று இன்றிக்கே இருக்கிற என்னையே உன் கிருபைக்கு விஷயமாக உடையவனே -என்றுமாம் –

———————————————————————

அந்நிய பரரான ப்ரஹ்மாதிகளுக்கும் ஆகர்ஷகமான சரணாரவிந்தத்தை நான் என்றோ சேர்வது என்று அத்யந்தம் அவசன்னராய் கூப்பிடுகிறார் –

என்று  கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

பிருதிவ்யாதி பூத பஞ்சகங்களுக்கும் தத் காரியங்களுக்கும் தத் அந்தரவர்த்திகளான ஆத்மாக்களுக்கும் அந்தராத்மதயா நின்று நிர்வாஹகனாய் இந்நீர்மைகளைக் காட்டி என்னை அடிமை கொண்டவனே
பசு நிரை மேய்த்து அருளி இந்திரன் வர்ஷிக்கப் புக ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்து அருளி அவற்றை பரிஹரித்து அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை உடையவனே
இவ்விரண்டு பாட்டாலும் எம்பெருமானுடைய ஸ்ப்ருஹணீயதை சொல்லிற்று –

————————————————————-

ப்ரஹ்மாதிகளுக்கும் காரணமான நீ நிர்ஹேதுகமாக வந்து த்வத் ஏக தாரகனமாம் படி என்னைப் பண்ணி அருளினாய் -ஆனபின்பு இப்படியே குறையும் நீயே செய்து அருள வேணும் என்கிறார் –

காத்த  எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன்மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடி யாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப்பெய்வனே?–7-6-3-

புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்-கொன்றைப் பூ சூடி சிவந்த ஜடையை யுடைய ருத்ரனை உண்டாக்கினவனே –
வாய்த்த என் நான்முகனே-
ஸ்ருஷ்ட்ருத்வ யுக்தனான சதுர்முகனை உண்டாக்கினவனே -ப்ரஹ்மாவை உண்டாக்கின குணத்தை அனுசந்தித்து ப்ரீதராய் -என்னுடைய நான்முகன் ஆனவனே என்கிறார் –
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப்பெய்வனே
பேசி முடிக்க ஒண்ணாத கீர்த்தியை யுடைய நீயே என்னை விஷயீ கரிக்கும் இத்தனை போக்கி நான் வந்து உன்னை பிராபிக்கை என்று ஒரு பொருள் உண்டோ –

—————————————————————

ப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கு உண்டான உச்சாரயமும் நீயே கொடுத்து அருளினாய் -அப்படியே என்னுடைய அபேக்ஷிதமும் நீயே செய்து அருளும் இத்தனை போக்கி என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை என்கிறார் –

எங்குத்  தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-

கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே-தம்மை அகப்படுத்திக் கொண்ட கிருஷ்ணனுடைய அழகை காண ஆசைப்படுகிறார் –

————————————————————–

அத்யந்த விலக்ஷணனான உன்னை -த்வத் த்ருஷ்டமான விஷயங்கள் எல்லா வற்றிலும் நெடுங்காலம் பழகி இருந்த  நான் -அந்த விஷய வாசனையை அறுத்து உன் திருவடிகளிலே நானே வந்து புகுகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார் –

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!-அதி லோகமான சீல ஸுந்தர்யாதி களாலே என்னை வசீகரித்து எனக்கு பவ்யன் ஆனவனே –பொல்லாக் கரு மாணிக்கமே!-விபரீத லக்ஷணை
உன்னுடைய திரு உந்தியிலே பிறந்துள்ள லோக த்ரயத்தில் விஷயங்கள் எல்லா வற்றிலும் மிகவும் பிரவணமாய் இருந்துள்ள என்னுடைய ஆத்மா உன்னுடையதாய் சோதி வெள்ளமான ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளே வர்த்தமானனான உன்னைக் கண்டு கொண்டு வந்து பிராபிக்கைக்கு உபாயம் உண்டோ -மூன்று லோகம் என்றது -எல்லா லோகத்துக்கு உப லக்ஷணம்-

—————————————————————

நிரதிசய போக்யனான உன்னைப் பெறுகைக்கு என் பக்கல் ஒரு உபாயம் இல்லை -நீயே வந்து விஷயீ கரிக்க வேணும் என்கிறார் –

வந்து  எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6-

முதலிலே மிக்கு இருந்துள்ள நீலமான தேஜஸ் ஸூ -மேன்மேல் என சம்ருத்தமாய் சிவந்த ஒளியை உடைத்தான சில கிரணங்களை பூத்தது ஒரு மாணிக்கம் சாய்ந்து கிடந்தது போலே –
திருவரை மேல் சாத்தின திருப் பீதாம்பரத்தோடே கூடத் திருவடிகள் தொடக்கமான திவ்ய அவயவங்கள் சிவந்து அழகிய ஒளியை விட கண் வளர்ந்து அருளுவதும் செய்து எனக்கு பவ்யனுமான ஸ்ரீ யபதியை –

————————————————————

ப்ரஹ்மாதிகள் உடைய மஹிஷீ தொடக்கமான போக்ய ஜாதமும் -அவர்கள் உடைய அதி மானுஷ ப்ரவ்ருத்திகளும் தன்னாலே ஆம்படியிருக்கிற எம்பெருமானை நான் காண பெறேனோ -என்கிறார் –

என்  திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-

தன்னுடைய மஹிஷீ லாபம் ஸ்வ அதீனம் ஆனால் போலே ருத்ராதிகளுடைய மஹிஷீ லாபமும் தன்னாலே யாம் படி இருந்தவனை -பலகால் என் என்கிறது எம்பெருமான் படியை அனுசந்தித்த ப்ரீதியாலே –நின்ற -என்கிறது மற்றையவர்களோடு ஓக்க எண்ணலாய் இருக்கை –
பிரளயம் கொண்ட பூமியை தானே எடுத்து அருளினால் போலே வார்த்தைப் பாட்டை கொடுத்து அவர்கள் தாங்கள் செய்தாராய் நின்ற த்ரி புர தஹனம் என்ன இந்திரியங்களை வென்று ஓட்ட என்ன த்ரை லோக்யத்தை ஆளவென்ன இப்படிப் பட்ட அதி மானுஷ ப்ரவ்ருத்திகளையும் தானே செய்து அருளினவனை -இவ்வைந்து பாட்டாலும் -தம்முடைய மிடுக்காலே எம்பெருமானை பிராபிக்க முடியாமையும் -அவனுடைய ப்ரஸாதத்தாலே அவனைப் பெற வேணும் என்றும் சொல்லுகிறது-

————————————————————

மாலி தொடக்கமான பிரதிகூல வர்க்கத்தை கொன்று அருளின- நிரசித்து அருளின –சர்வேஸ்வரனை காண வல்லோமே என்கிறார் –

ஆளியைக் காண் பரி யாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8-

ஆளியைக் கண்ட குதிரை போலவும் -சிம்ஹத்தைக் கண்ட நரி போலவும் ராக்ஷசர் ஒரு பிரவ்ருத்தி பண்ண மாட்டாதே கதறிக் கொண்டு அன்று இலங்கையை விட்டு பிலத்திலே புக்கு ஒளிக்கும் படியாக –
மீளியம் புள்ளைக் கடாய்-வலியை யுடைய பெரிய திருவடியை நடத்தி -பிரதிகூலர்க்கு ம்ருத்யுவாய் அனுகூலர்க்கு இனியனான பெரிய திருவடியை நடத்தி என்றுமாம் / விறல் -மிடுக்கு / ஆளுயர் குன்றம் -ஆளாலே உயர்ந்த குன்றம் –

———————————————————–

ராவணாதிகளை வதித்த தசாரதாத்மஜனை -நெஞ்சே காண வல்லோமே -என்கிறார் –

காண்டுங்  கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை பிரிக்கை முதலான கொடிய ப்ரவ்ருத்திகளிலே முயலா நிற்பதும் செய்து -ஆண் பிள்ளைத் தனத்தில் ம்ருத்யு சத்ருசனாய் இருக்கிற ராவணனுடைய குலத்தை நசிப்பித்து அவன் தம்பிக்கே லங்கா ராஜ்யத்தை கொடுத்து -தன்னைப் பிரிந்து நோவு பட்ட ராஜ்யத்தை மீண்டு வந்து தரிப்பித்து ஆண்டு திரு நாட்டிலே புக்கு அருளின அயர்வறும் அமரர்கள் தலைவனை -இவ்விரண்டு பாட்டிலும் ஆஸ்ரிதர் உடைய விரோதி நிரசன பிரகாரம் சொல்லுகிறது –

————————————————————–

ஆயர்குலத்து ஈற்று இளம் பிள்ளை யானவன் -தன்னுடைய மவ்க்யத்தாலே  நம்முடைய குணாகுண நிரூபணம் பண்ணாதே துஷ் ப்ராப்யமான ஸ்ரீ வைகுண்டத்தை நமக்குத் தரும் என்று தரிக்கிறார்-

ஏற்றரு  வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-

ஈற்றிளம் பிள்ளை-ஈன்று அண்ணிய பிள்ளை / ஒன்றாய்ப் புக்கு-உறவாய்ப்புக்கு என்னுதல் -வில் விழவுக்கு -என்று பேரை இட்டுக் கொண்டு புக்கு என்னுதல் –
மாயங்களே -இத்யாதி -குவலயாபீட மல்ல மர்த்த நாதிகளான ஆச்சர்ய ப்ரவ்ருத்திகளையே பண்ணி ம்ருத்யு சத்ருசனான கம்சனைக் கொன்று தர்ம புத்ராதிகளுக்காக அந்த மஹா சேனை எல்லாம் நிஸ் சேஷமாக்கி ஆஸ்ரிதர்க்கு எல்லா உபகாரமும் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று அசத் துஷ்டனாய்க் கொண்டு திரு நாட்டிலே போய்ப் புக்கு ஹரியாய் உள்ளவன் -ஸ்ரீ வைகுண்டத்தில் புக்கு அருளின பின்பும் துர்யோத நாதிகள் பக்கலில் உள்ள கோப வாசனையால் ஆசிலே கையை வைக்கும் என்று கருத்து –

————————————————————-

நிகமத்தில் இத்திருவாய்மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித் திருப் பல்லாண்டு பாடி -மங்களா சாசனம் பண்ணி -சிலாகிப்பார் -என்கிறார்

புக்க  அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல் லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-

புக்க  அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்தசக்கரச் செல்வன் தன்னைக்-பிரதிகூலர் மண் உண்ணும் ஸிம்ஹ வடிவாய் புக்கு ஹிரண்யனுடைய உடலைக் கீறி பிரதிகூல நிரசனத்தாலே உகப்பதும் செய்து -கையும் திரு வாழி யுமான அழகை யுடையவனை –
புக்க அரி உரு-என்றது -புறத்தின் நின்றும் வந்து கீண்டான் என்று தோற்றாமே -அவன் உடம்பில் புக்கு இருந்து புறப் பட்டால் போலே கீண்ட சடக்கை சொல்லிற்று ஆகவுமாம் –
மிக்க ஒர் ஆயிரம்-பகவத் குணங்களிலே கிளர்ந்த ஆயிரம் -/ தொக்கு -திரண்டு


கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: