திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –7-6–

ஆழி எழ சங்கில் -அவன் விஜயங்களை அனுபவிக்கைக்கு உறுப்பாக அபதானங்களை அனுபவித்தார் –
அப்பிரசங்கத்தாலே அவதாரங்களையும் -அதுக்கு அடியான கிருபாதி குணங்களையும் அனுசந்தித்து
இக்குணங்கள் நடையாடா நிற்க -இதிலே பிராப்தி உண்டாய் இருக்க -தங்கள் சேதனராய் இருக்க சம்சாரிகள் இத்தை இழப்பதே என்று விஸ்மிதர் ஆனார்
அவர்கள் அபேக்ஷை இல்லாமையால் இழக்கிறார்கள் -அபேக்ஷை யுடைய நாண் இழப்பேன் அல்லேன் -என்று
ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டனை காண வேண்டும் என்று ஆசைப்பட்டு
பெறாமையாலே கெய்றார் அடைய நேர்ப் பண்டமாம் படி அவனுடைய ப்ராப்யத்வத்தையும் -ப்ராபகத்வத்தையும்
-விரோதி நிரசன சீலத்தையையும் சொல்லிக் கூப்பிடுகிறார் –
பஹ்வோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்திதே-
அம்மங்கி அம்மாள் -இத்திருவாய்மொழி கேட்க்கும் அத்தனை ஒழிய -இதில் இவருக்கு ஓடுகிற ஆர்த்திக்கு பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது என்னும் –


பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!-பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!-ஸ்தாவர ஜங்கமாத்மகமான பதார்த்தங்கள் சேர்ந்து இருந்துள்ள சகல லோகங்களையும் உண்டாக்கின திரு நாபி கமலத்தை உடையவனே –பா என்று பதார்த்தம் –மருவுகை யாவது -சேருகை யாய் -நெருங்கி இருக்கை -பரப்பை யுடைத்தான மூ உலகு என்றுமாம் -இத்தை ஸ்ருஷ்டித்தது இத்தை அழிக்கைக்கோ-உரு மாய்ந்தவற்றை உண்டாக்கின நீ உண்டான வஸ்து அழிக்கிறது என் -என் தாயே என்பாரைப் போலே கூப்பிடுகிறார் -ஸ்ருஷ்டித்து விட்ட அளவேயோ-மஹா பலி போல்வார் பறித்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக் கொள்ளுமவன் அல்லையோ -நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்று ஆசைப்பட்ட நான் இருக்க -அபேக்ஷை இல்லாதார் -தலையிலேயோ திருவடிகளை வைப்பது -நிரதிசய போக்யமான திருவடிகளைக் கொண்டு காடு மோடையும் அளப்பதே-
தாமரைக் கண்ணாவோ!-இத்தை உண்டாக்கி நோக்கின அளவேயோ –போக்யத்தை இல்லை என்று தான் ஆறி இருக்கிறேனோ -உமக்கு வேண்டுவது என் -என்ன -அவலோகந தாநேந பூயோ மாம் பாலய -என்கிறபடியே அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் –
தனியேன் தனி ஆளாவோ!-அக் கண் அழகே ஜீவனமாய் இருக்கிற திரளிலும் கொண்டு போகக் கண்டிலேன் -ஸ்த்ரீகளினுடைய நோக்கி ஜீவனமாய் இருக்கிற தசையில் அத் திரளிலும் கூடப் பெற்றிலேன் -த்ருதீய விபூதி போலே தனியே ஆளுகிறவனே -உன் குணங்களைக் காட்டி ஆற்றாமையை விளைத்தவனே –உன் கிருபை ஒழிய வேறு ஒன்றை அறியாதவன் நான் -உன் கிருபைக்கு நான் அல்லது இலக்கு இல்லாதபடி இருக்கிறவன் நீ என்றுமாம் –
தாமரைக் கையாவோ! -ஸோ அப்யேநம் -என்றும் அப்யேஷ ப்ருஷ்ட்ட்டே மம ஹஸ்த பத்மம் கரிஷ்யதி என்றும் சொல்லுகிற படியே திருக் கையில் அடையாளங்கள் என் உடம்பிலே இலச்சினை பட திருக் கைகளால் ஸ்பர்சிக்கவும் பெற்றிலேன் -அக்ரூரனோ பாதியும் போரேனோ நான் -கரேணம் ருது நா தேவ பாபாந்நிர் மோசயன் ஹரி
உன்னை என்று கொல் சேர்வதுவே?-பூர்ணே சதுர்தசே வர்ஷே ப்ஞ்சம்யாம் -என்று நாள் இட்டு கொடுக்கலாவது தம்பி மார்க்கோ -அடியார்க்குச் செய்யலாகாது –

——————————————————————-

அந்நிய பரரான ப்ரஹ்மாதிகளுக்கும் ஆகர்ஷகமான சரணாரவிந்தத்தை நான் என்றோ சேர்வது என்று அத்யந்தம் அவசன்னராய் கூப்பிடுகிறார் –

என்று  கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

என்று கொல் சேர்வது -கீழ் சொன்னதுக்கு ஒரு ப்ரதி வசனம் கேளாமையாலே திரியவும் என்று கொல் சேர்வது என்கிறார்
அந்தோ!-கூப்பிடுவாரும் இன்றிக்கே ஒழிய கிடாய் புகுகிறது -நான் முடிந்தேன் என்கிறார் -ப்லுத்தத்தாலே
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய-நின் திருப் பாதத்தை யான்? -அழிக்கையும் உண்டாக்குகையும் தொழிலாய் இருப்பாரும் அகப்பட ஆசைப்படும் படி ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை -அநந்ய பிரயோஜனான நான் கிட்டுவது என்றோ -அந்நிய பரரையும் அநந்ய பரராக்கும் திருவடிகளை நான் கிட்டுவது என்றோ -அந்நிய பரருக்கும் ஆகர்ஷகமான உன் திருவடிகளை என்று கிட்ட இருக்கிறேன்
நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்-என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற –பிருதிவ்யாதி பூத பஞ்சகங்களுக்கும் தத் அந்தரவர்த்தியான சேதன வர்க்கத்துக்கும் அந்தராத்மாவாய் நின்று நிர்வஹிக்கிறவனே
எந்தாயோ!-அபேக்ஷை இன்றிக்கே இருக்க இவற்றை உண்டாக்கும் படியான சம்பந்தம் சொல்லுகிறது -இந்நீர்மையாக்கி காட்டி என்னை எழுதிக் கொண்டவனே -உண்டாக்கி விடும் அளவு அன்றியே அரியன செய்து நோக்குமவன் அன்றோ
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–தன்னை தாழ விட்டு பசு நிரை மேய்த்து இந்திரன் வர்ஷிக்கப் புக மலையை எடுத்து நோக்கி மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையவனே -ரக்ஷணத்துக்காக மலையை எடுத்து நின்ற நிலை இவர்க்கு வல்லார் ஆடினால் போலே இருந்தது –

—————————————————————-

கீழ் இரண்டு பாட்டாலும் -ஜகத் காரணத்வமும் ஸ்ப்ருஹணீயத்தையும் சொல்லிற்று -கீழ் ப்ராப்யம் சொல்லிற்று -மேல் ப்ராபகம் சொல்லுகிறது -இதில் ப்ரஹ்மாதிகளுக்கும் காரணமான நீ நிர்ஹேதுகமாக வந்து த்வத் ஏக தாரகனமாம் படி என்னைப் பண்ணி அருளினாய் -ஆனபின்பு குறையும் நீயே செய்து அருள வேணும் என்கிறார் –

காத்த  எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன்மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடி யாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப்பெய்வனே?–7-6-3-

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன்மாரி தன்னைப்-
எத்திறம் என்னும் கிருஷ்ணாவதார சரீரம் இ ரே ப்ரஸ்த்துதம் ஆயிற்று -ஒரு கால் எத்திறம் என்றால் பின்னையும் எத்திறம் என்னுமா போலே அது பின்னாட்டுகிற படி -பசுக்கள் ஸ்வ ரக்ஷணத்துக்கு மலை எடுத்தனவோ -என்கை –
பூத் தண் துழாய் முடி யாய்!
பூத்து சிரமஹரமான திருத் துழாயை திரு முடியில் உடையவனே -சர்வாதிக வஸ்துவுக்கு சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான லக்ஷணம் -உன் சத்தை உன் அதீனமான வோபாதி -என் சத்தையும் உன் அதீனமான வோபாதி என் பேற்றுக்கு நான் ப்ரவர்த்திக்கவோ -பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம் -உபாதத்தே சத்தா ஸ் திதி நியமனாத்யை வித் அசித் தவ் ஸ்வமுச்சித்ய
புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்-–ஈஸ்வர அபிமானிகள் சத்தையோ அவர்கள் அதீனமாய் இருக்கிறது -சூடின கொன்றை மாலையால் அழகியதாய் சிவந்த ஜடையை யுடைய ருத்ரனுக்கு உத்பாதகன் ஆனவனே –வாய்த்த என் நான்முகனே-ஸ்ருஷ்ட்டியை யுடைய சதுர்முகனை உண்டாக்கினவனே -ருத்ரனுக்கு கொன்றை மாலையோ பாதி இவனுக்கு சதுர் முகத்தவம் -ப்ரஹ்மாவை உண்டாக்கின மஹா குணத்தை அனுசந்தித்து –என் நான்முகன் -என்கிறார் -விசேஷண அம்சத்தில் தாத்பர்யம் இல்லை -சாமானாதி கரண்யத்தாலே சொல்லிற்று -பிருதக்ஸ்திதியைநரஹமான சம்பந்தத்தால் -வந்து என் ஆருயிர் நீ -தம் அளவில் பண்ணின உபகாரத்தை சொல்லுகிறார் -எனக்கு அபேக்ஷை இன்றிக்கே நீயே வந்து என்னை விஷயீ கரித்து -உன்னால் அல்லது செல்லாத படி பண்ணி எனக்கு தாரகன் ஆனவனே –பேசி முடிக்க ஒண்ணாத கீர்த்தியை உடையவன் அன்றோ –
ஆனால்-உன் பெருமை இதுவானால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப்பெய்வனே?–என் சத்தை த்வத் அதீனமான பின்பு நான் ஒன்றைச் செய்து அத்தாலே உன்னைக் கிட்ட என்பது ஓன்று உண்டோ -பிராங்ந்யாயத்தாலே மேலும் நீயே செய்து அருள வேணும் என்கை –

————————————————————

ப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கு உண்டான உச்சாரயமும் நீயே கொடுத்து அருளினாய் -அப்படியே என்னுடைய அபேக்ஷிதமும் நீயே செய்து அருளும் இத்தனை போக்கி என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை என்கிறார்

எங்குத்  தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-

எங்குத் தலைப் பெய்வன் நான்! -ஒரு துர்ப்பலனை மலையை எடுக்கச் சொன்னால் செய்து தலைக் கட்டப் போமோ
எழில் மூவுலகும் நீயே-சதுர்தச புவனத்தில் உண்டான உச்சாரயமும் நீ இட்ட வழக்கு
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
அண்டத்தில் சர்வாதிகனாக அபிமானித்து கொண்டு இருக்கிற ருத்ரனுடைய உச்சாரயமும் நீ இட்ட வழக்கு -அவனுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவினுடைய உச்சாரயமும் நீ இட்ட வழக்கு
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
வஜ்ர ஹஸ்த புரந்தர என்கிற ஏற்றத்தை யுடைய இந்திரன் முதலான தேவதைகளுடைய உச்சாரயமும் நீ இட்ட வழக்கு
வெங்கதிர் வச்சிரம் -அநபிபவ நீயமான தேஜஸை யுடைய வஜ்ரம்
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–உன்னை ஒழிந்தார் உச்சாரயங்கள் எல்லாம் த்வத் அதீனமாய் இருக்கிற நீ -உன்னுடைய உச்சாரயம் என் அதீனமாய் இருக்கிறவனே  -மது -தம்மை அகப்படுத்திக் கொண்ட கிருஷ்ணனுடைய போக்யதையையும் ஆஸ்ரித பாரதந்தர்யத்தையும் அனுசந்தித்து அத்தை நீயே அனுபவிப்பிக்க வேணும் என்கிறார்-

—————————————————————

பலம் உம்மதானால் சாதனமும்  உம்முடைய தலையிலே ஆக வேண்டாவோ என்ன -நீ ஸ்ருஷ்டித்த சகல லோகங்களிலும்  பரிசாமாப்ய  வியாபித்து அழுந்திக் கிடக்கிற நான் சாதன அனுஷ்டானம் பண்ணி உன்னைக் கிட்ட என்பது ஓன்று உண்டோ என்கிறார் –

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய ஸுசீல்யாதிகளையும் அழகையும் காட்டி என்னை வசீகரித்து எனக்கு பவ்யன் ஆனவனே –
என் பொல்லாக் கரு மாணிக்கமே!-விபரீத லக்ஷணை ஆதல் -அநுபபுக்த ரத்னம் போலே நித்ய அபூர்வமான போக்யதையைச் சொல்லுதல்
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைய திரு நாபியில் விஸ்திருதமாகா நின்றுள்ள சகல லோகங்களிலும் உண்டான சப் தாதி விஷயங்கள் தோறும் பற்றிக் கிடக்கிறவனாய் இருந்து வைத்து சர்வ சக்தியான நீ வியாபித்த பரப்படங்க சாபலத்தாலே வ்யாபித்தவன் நான் -இது என்னுடைய நிலை
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் –
உனக்கு அசாதாரணமாய் நிரவாதிக தேஜோ ரூபமான பரமபதத்துக்கு உள்ளே -அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்த்தானம்-
உன்னைக் கண்டு கொண்டிட்டு-புறம்புள்ள பற்று அடங்க விட்டு அந்த அபி நிவேசங்கள் எல்லாம் உன் பக்கலிலேயாய் -அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்து விலக்ஷண சரீரத்தை பெற்று காண வேண்டும்படியான உன்னைக் கண்டு கொண்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–-சப்தாதிகளிலே ப்ரவணமான என் ஆத்மா -முதலியார் என்று ஷேபிக்கிறார் -இப்படிப் பட்ட நான் சாதன அனுஷ்டானம் பண்ணி வந்து கிட்ட என்பது ஓன்று உண்டோ –

—————————————————————–

நிரதிசய போக்யனான உன்னைப் பெறுகைக்கு என் பக்கல் ஒரு உபாயம் இல்லை -நீயே வந்து விஷயீ கரிக்க வேணும் என்கிறார் –

வந்து  எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6-

வந்து எய்துமாறு அறியேன் -நீயே வந்து கிட்டுமது ஒழிய நான் சாதன அனுஷ்டானம் பண்ணிக் கிட்டும் விரகு அறிகிறி லேன் -கிட்டுக்கைக்கு இச்சை இ றே இத்தலையில் உள்ளது -நீ வந்து கிட்டினால் விலக்காமைக்கு வேண்டுவது உண்டு -ஆனால் இழந்தாலோ என்ன –
மல்கு நீலச் சுடர் -வடிவு அழகாலும் -பேற்றுக்கு பற்றாசு உண்டாகையாலும் விடலாயோ இருக்கிறது -ஆசா ஜனகமான வடிவு அழகைச் சொல்லுகிறது -குறைவற்ற நிலமான புகர்
தழைப்பச்-ஓர் அளவில் பர்யவசியாதே மேன்மேல் வளர்கிறபடி
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து -இதுக்கு பரபாகமான சிவந்த சுடரை யுடைத்தான கிரணங்களை -பூ அலர்ந்தால் போலே விகசிதமாக்கி-
ஒரு மாணிக்கம் சேர்வது போல்-அனுபவ போக்யமாம் படி அத்விதீயமான ரத்னம் சேர்ந்தால் போலே
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்-
திருவரையிலே சாத்தின திருப் பீதாம்பரம் -இதுக்கு கீழாம் திருவடிகள் -இதுக்கு மேலான திரு நாபியும் -திருக் கைகளும் திரு மார்பும் -தாமரைப் பூவை இருப்பிடமாக யுடையார் இருக்கையாலே -திரு மார்வையும் சொல்கிறது -திருக் கண்ணும் திருப் பவளமும் –
செஞ்சுடர்ச் சோதி விட -சிவந்த சுடரை யுடைத்தான ஜ்யோதிஸ் ஸை பிரசுரிக்க
உறை-கண் வளர்ந்து அருளுகிற -இதுவும் அழகிலே ஒன்றாய் இருக்கிறபடி
என் திரு மார்பனையே.–இதுவும் ஒரு ஆபரணம் போலே -எனக்கு ஸ்வாமி நியான பிராட்டியை திரு மார்பிலே உடையவன் என்னுதல் -எனக்கு பவ்யனான ஸ்ரீ யபதி என்னுதல் –

—————————————————————–

ப்ரஹ்மாதிகள் உடைய போக்ய ஜாதமும் அவர்களுடைய அதி மானுஷ வ்ருத்திகளும் ஸ்வ அதீனமான இருக்கிறவனை நான் காணப் பெறேனோ -என்கிறார் –

என்  திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-

என் திரு மார்பன் தன்னை-இது மேல் சொல்லுகிறவற்றுக்கு த்ருஷ்டாந்தம் –பிராட்டி ஸ்வ அதீனை ஆகிறாப் போலே ருத்ராதிகளை யுடைய மஹிஷீ லாபமும் ஸ் வ அதீனம் என்கை –என் திரு -என்று விசேஷண பிரதானமாய் இருக்கிறது இது -விசேஷண பிரதானமுமாய் -விசேஷய பிரதானமுமாய் இருக்கும் -ஆச்ரயண தசை -பிராப்தி தசை -போக தசை –
என் மலைமகள் கூறன் தன்னைஎன்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை-
ஹிமத்வ ஸூ தை யானவளுக்கு சரீரத்தில் கூறு கொடுத்து இருக்கிற ருத்ரனை -இங்கு என் என்கிறவை விசேஷய பிரதானங்கள் -இல்லை யாகில் தெய்வம் மற்று இல்லை -மறந்தும் புறம் தொழா -என்கிறத்தோடு சேராது இ றே -சாமா நாதி கரண்யத்தாலே ச விபூதிகராய் இருந்துள்ள ருத்ராதிகளுடைய சத்தையும் அவன் அதீனம் என்கை –என்றும் ஓக்க சரஸ்வதியை தன்னோடு ஓக்க சேர்த்து ஸ்வ அதீனம் ஆக்கிக் கொண்டு இருக்கிற சதுர்முகனை
நின்ற சசி பதியை-இவர்களோடு ஓக்க சொல்லலாம் படி முட்டுப் பொறுக்கும் ஐஸ்வர்யத்தில் நின்ற இந்திரனை –
நிலங்கீண்டு -மஹா வராஹமாய் ப்ரளயங்கதையான பூமியை உத்தரித்த இப்பிரவ்ருத்தி ஸ்வ அதீனையாய் இருக்கிறாப் போலே ப்ரஹ்மாதிகள் உடைய வியாபாரமும் ஸ்வ அதீனம் என்கிறது –
எயில் மூன்று எரித்த-மதிள் மூன்று எரித்த -விஷ்ணு ராத்மா -என்கிறபடியே ஆத்மதயா நின்று செய்து வார்த்தைப் பாட்டை அவனுக்கு ஆக்கினான்
வென்று புலன் துரந்த -ஸ்ருஷ்டிக்கு உறுப்பான இந்திரிய ஜெயத்தை பண்ணின ப்ரஹ்மாவை -புலன்களை வென்று ஒட்டின –
விசும்பாளியைக் -ஸ்வர்க்கத்தை வன்னியம் அறுத்து ஆளுமவனை –இங்கு பிரவ்ருத்தி விசிஷ்டரான இவர்களோடு சமானாதிகரித்து-சகல பிரவ்ருத்தியும்-அவன் அதீனம் ஆகையால் -என்னுடைய அபேக்ஷித சித்திக்கு அவனை ஒழிய என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை என்கைக்காக
காணேனோ?–என்னுடைய சத்தையே தொடங்கி உன் அதீனமாய் உன்னாலே பேறான பின்பு நான் இங்கனம் இழந்து போம் இத்தனையோ –

——————————————————————

மாலி தொடக்கமான பிரதிகூல வர்க்கத்தை கொன்று அருளின- நிரசித்து அருளின –சர்வேஸ்வரனை காண வல்லோமே என்கிறார் –

ஆளியைக்  காண் பரி யாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8-

ஆளியைக் காண் பரி யாய் -ஆளியை கண்ட பரியாய் -குதிரையாய்
அரி காண் நரியாய் -ஸிம்ஹத்தை கண்ட நரியாய் –
ஸ்ரீ ராமாயணத்தில் -ராக்ஷஸருடைய பயத்தை பல உதாரணங்களாலும் சொல்லிற்று -அவற்றுக்கு எல்லாம் ஸ்மாரகமாக இரண்டு உதாஹரணத்தை சொல்லுகிறது –
அரக்கர்-ஊளை இட்டு –நரியாய் என்கிற சமாதியாலே சொல்லுகிறார் -ராக்ஷசர் திரள நின்று ஒரு பிரவ்ருத்தி பண்ண மாட்டாதே கதறிக் கொண்டு
அன்று-மாலி ஸூ மாலி மால்யவான் என்கிறவர்களை -பெரிய திருவடியை மேற்கொண்டு அழியச் செய்கிற வன்று
இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப-புற்றை பாம்பு விடுமா போலே தங்கள் இருப்பிடமான இலங்கையை விட்டு பாதாளத்தில் புக்கு ஒளிக்கும் படியாக
மீளியம் புள்ளைக் கடாய் -வலியை யுடையனாய் தர்ச நீயனான புள்ளை நடத்தி -கறை யணி மூக்கு -அநு கூலர்க்கு தர்ச நீயமாய் இ றே இருப்பது -எதிரே நின்று படுவாரும் அது மாட்டாதே பிலத்திலே புக்கு ஒளிப்பாரும் ஆயிற்று
விறன் மாலியைக் கொன்று -பெரு மிடுக்கனான மாலியாகிற அசூரனைக் கொன்று –
பின்னும்ஆளுயர் குன்றங்கள் செய்து -பின்னும் அவனைப் போலே முதுகு காட்டாதே ஆளாய் இருப்பாரைக் கொன்று பிண மலையாகச் செய்து
அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–அஸூர வர்க்கங்களை அறுத்தால் போலே அவன் நம் பிரதிபந்தகங்களைப் போக்க நமக்கு காட்சியில் அந்வயமாக காண வல்லோமோ –

————————————————————-

அப்போது தப்பி பிலத்திலே புக்கவை ராவணாதிகளாய் பரிணமிக்க விடாதே நிஸ் சேஷமாக தடிந்து ராவண சந்தானத்தை அறுத்த தசாரதாத்மஜனை காண வல்லோமே -நெஞ்சமே -என்று திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிறார் –

காண்டுங்  கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-

காண்டுங் கொலோ நெஞ்சமே!-நெடு நாள் இழவுக்கே கூட்டாய்ப் போந்த நீ காட்சிக்கும் கூட்டாய் நாம் கூடக் காண வல்லோமோ
கடிய வினையே முயலும்-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை பிரிக்கை முதலான க்ரூர ஹிம்சைகளையே ப்ரவர்த்திப்பிக்கும் –தாயும் தமப்பனும் சேர இருக்கப் பெறாதவன் இ றே -அவதாரணத்தால் சதாசார கந்தம் இல்லாதவன் –
ஆண் திறல் மீளி மொய்ம்பில் -ஆண் பிள்ளைத் தனத்திலே வந்தால் திறலையும்-நபராபிபவ சாமர்த்யத்தையும் -ம்ருத்யு சத்ருசமான மிடுக்கையும் உடைய
அரக்கன் குலத்தைத் தடிந்து-கரிஷ்யே மைதிலி ஹேதோ ரபிசாசம ராக்ஷஸம் -என்கிறபடியே ராவண சந்தானத்தை அழிய செய்து –
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
அவன் தம்பி என்று பாராதே -சரணம் என்றான் -என்று கடல் சூழப் பட்ட லங்கையை அவனுக்கு கொடுத்து அருளி -அத்யுத் கடை புண்ய பாபை ரிஹைவ பலமஸ் நுதே -என்கிறபடியே க்ரவ்ய பலத்துக்கும் ஆனு கூல்ய பலத்துக்கும் விளம்பம் இன்றிக்கே ஒழிந்த படி
மீண்டும் ஆண்டு ?–ராவண வத சமனந்தரத்திலே -எங்கள் கார்யம் செய் கைக்காக தேவரை அம்புக்கு இரை யாக்கினோம் -தேவர் கார்யம் சமைந்து என்று தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள அமையும் -என்று ப்ரஹ்மா விண்ணப்பம் செய்ய -அவ்வளவில் ருத்ரன் -அபிஷேக மஹோத்சவம் விலக்குப் படுகையாலே நாடாக இழவு பட்டுக் கிடந்தது -ஆசுவாஸ்ய பரதம் தீனம் -என்கிறபடியே அவர்களையும் ஆசுவசிப்பித்து இழவு தீர்ந்து எழுந்து அருள வேணும் என்கையாலே -மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி ராமோ ராஜ்ஜியம் உபாசித்வா-என்கிறபடியே நாட்டை ஆண்டு
தன் சோதி புக்க-இங்கு போலே எதிர் அம்பு கோப்பார் இன்றிக்கே தனக்கு அசாதாரணமாய் நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்தில் புக்கு -தன்னுடைச் சோதி என்ன கடவது இ றே
அமரர் அரி ஏற்றினையே-கோவதூ சங்கத்தில் ருஷபம் செருக்கி நிற்குமா போலே -நித்ய ஸூ ரிகள் கொண்டாட அவர்கள் நடுவே மேனாணித்து இருக்கிறவனை -அவ்விருப்பிலே அவனைக் காண்கை இ றே ப்ராப்யம் –

————————————————————-

பாபிஷ்டரை நிரசித்து தர்மாத்மாவான அவன் தம்பியை இங்கே வாழ்வித்த விது போரும் நமக்கு என்ன -திரு உள்ளம் -இரண்டு அம்சமும் போக்கும் கிருஷ்ணன் உண்டே என்ன -அவன் தெளிவுற்ற கண்ணன் நம் குற்றம் அறியும் என்ன -நம் குறை அறியான் ஈற்று இளம் பிள்ளை -என்கிறார் –
முதல் இரண்டு பாட்டாலே -ப்ராப்யம் அவனே என்றார் –
அநந்தரம் ஐந்து பாட்டாலே உபாயமும் அவனே என்றார் -அநந்தரம் இரண்டு பாட்டாலே பிரதிபந்தகங்களைப் போக்குவானும் அவனே என்றார் –
இதில் குணாகுண நிரூபணம் பண்ண மாட்டாத மவ்க்யத்தாலே பரமபதத்தை தந்து அருளும் என்று அறுதி இடுகிறார் –

ஏற்றரு  வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு – ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத பரம பதத்தை-தன்னாலே பெற்றேன் என்று துணிந்து இருக்கிற நமக்கு அருளும் –
ஆயர்குலத்து- ஈற்றிளம் பிள்ளை-அத்தலையில் ப்ரபாவத்தை பார்க்க அமையுமோ -நம்மையும் பார்க்க வேண்டாமோ என்ன -நம் படி பார்க்க அறியாத முக்தன் ஈறு என்று எல்லையாய் -பிள்ளைத் தனத்தில் எல்லை யானவன் என்னுதல் –ஈன்று அண்ணிய பிள்ளை -என்னுதல் -முக்த சாயுஜ்ய தோ அபு –
ஒன்றாய்ப் புக்கு -உறவாய் புக்கு என்னுதல் -வில் விழவுக்கு என்று ஓர் பேரை இட்டு கொண்டு புக்கு என்னுதல் -மாதுலனாய் கல்யாணத்துக்கு அழைத்தானாய் இ றே சென்றது
மாயங்களே இயற்றிக்-ரஜகனைக் கொன்று -ஆயுத சாலையிலே புக்கு -வில்லை முறித்து -குவலயா பீடத்தை கொன்று -மல்லரை அழிய ச் செய்து -ஆச்சர்ய சேஷ்டிதங்களையே பண்ணி
கூற்றியல் கஞ்சனைக் கொன்று -இச் செயல்களை கண்டு கிளர்ந்த ம்ருத்யு சமனான கம்சனைக் கொன்று -அவஞ்சயா ஹதம் த்ருஷ்ட்வா கிருஷ்ணே நமதுரேச்வரம் -திருவடிகளாலே அநாயாசேன கொன்று
ஐவர்க்காய்க் -பால்யத்தில் கம்சன் வர விட்டவர்களோடும் கம்சனோடும் பணி போந்ததுபக்வனான பின்பு -கிருஷ்ணாஸ்ரயா-கிருஷ்ண பலா – என்கிற பாண்டவர்களுக்கு கையாளாக திரிந்த இத்தனை
கொடுஞ்சேனை தடிந்து-பாண்டவர்கள் மேலே சீறி -சாரதி சாரதி என்று வந்த சேனை தேர்க்காலாலே உழக்கி பொகட்டு
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-துரியோதனாதிகளை அழிய செய்து -தர்ம புத்ரனையும் முடி சூட்டி -திரௌபதி குழல் முடித்த பின்பும் -நாதிஸ் வஸ்த்தமநா -என்றும் -ருணம் ப்ரவ்ருத்த மிவ மே -என்றும் -ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்றும் அஸந்துஷ்டனாய் எழுந்து அருளினான் /ஆற்றல் -அநுத்ததி / அநுத்ததா மநா வித்வான் -நிரதிசய தேஜோ ரூபமான பரமபத்திலே போன பின்பும் -கம்சன் என்பது துரியோதனன் என்பது கர்ணன் என்பது ஆசிலே கையை வைப்பதாய் -கம்சாதிகள் பக்கல் சினம் அநு வர்த்திக்கும் படி யாயிற்று இருப்பது –

—————————————————————–

நிகமத்தில் இத்திருவாய்மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித் திருப் பல்லாண்டு பாடி -மங்களா சாசனம் பண்ணி -சிலாகிப்பார் -என்கிறார் –நம்முடைய பிரகிருதி நமக்கு பய ஹேது என்று  அபேக்ஷித்தால்  நிராசைக்கும் என்று கருத்து –

புக்க  அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல் லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-

புக்க அரி உருவாய்-அவ் வரி யுருவாய் புக்கு -அவ் வரி உரு என்னும் இத்தனை -அப்போது இருந்த படி -நரசிம்ம வேஷத்தை கொண்டு விரோதிகள் நடுவே சென்று புக்கு என்னுதல் -ஹிரண்யனை நிரசித்த சடக்காலே உள்ளே இருந்து கிழித்துக் கொண்டு புறப்பட்டாள் போலே என்னுதல் –
அவுணன் உடல் கீண்டு உகந்த-ஹிரண்யன் உடலைக் கிழித்து -சிறுக்கன் விரோதி பூகம்ப பெற்றதே என்று உகந்து
சக்கரச் செல்வன் தன்னைக் -ஹிரண்யன் உடல் திரு உகிருக்கு இரையாய்-திரு வாழி அழகுக்கு உடலான படி
குருகூர்ச் சட கோபன் சொன்ன-மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல் லார் அவரைத்-பகவத் விஷயத்தில் உள்ளன வெல்லாம் சொன்ன இப்பத்தை கற்றவர்களை
தொக்குப் -திரண்டு
பல்லாண்டிசைத்துக் -மங்களா சாசனம் பண்ணி
கவரி செய்வர் ஏழையரே.–ஈஸ்வரன் பக்கல் பண்ணக் கடவ அசாதாரண பரிசரியையும் பண்ணுவர்கள் மதி முக மடந்தையர் -நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் போம்படி ஆதரிப்பர்கள் –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: