திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –7-5-

எம்பெருமான் தமக்கு பலாதா நார்த்தமாக காட்டி அருளின பேசவும் நினைக்கவும் முடியாத பெரும் பரப்பான
விஜய பிரகாரங்களை அனுசந்தித்து தம்முடைய பல ஹானி போய் தரித்த ஆழ்வார் -ஆஸ்ரித அர்த்தமான இந்த விஜயங்களுக்கு அடியான
அவனுடைய கிருபாதி குணங்களையும் -ராமாதி திவ்ய அவதாரங்களையும் அநுஸந்தியா நின்று கொண்டு அதி ப்ரீதராய்
-கையிலே நிதி இருக்க அத்தை அறியாதே துக்கப் படுவாரை போலே -இக் குண சேஷ்டிதாதிகளை ஒழிய வேறே சிலவற்றாலே
தரித்து அந்நிய பரராய்ச் செல்லுகிற ஜகத்தை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –
கீழில் திருவாய் மொழியிலே மாறு நிறைத்து இரைக்கும் சரங்கள் -என்று ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தத்திலே மிகவும் பிரவணராய்
அவனுடைய குண சேஷ்டிதாதிகளை மிகவும் அனுசந்தித்த ஆழ்வார் -இவனுடைய ஓர் ஒரு நீர்மையை யுடைய
மற்றைத் திரு அவதாரங்களையும் இவனுடைய குண பிரசங்கத்தாலே அனுசந்தித்து
இப்படியாலே இத்திருவாய் மொழி அடைய ராம குண விஷயம் என்றுமாம் –

———————————————————–

பிரிய ஹிதங்களை அனுசந்திப்பார் -திரு அயோத்யையில் உண்டான சகல பதார்த்தங்களையும் நிர்ஹேதுகமாக ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷமே  ஸூக துக்க ராம் படி பண்ணி அருளின உபகார சீலனான ராமனை அல்லது கற்பரோ என்கிறார் –

கற்பார்  இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

ஸ்தாவரங்களில் கடையான த்ருணமும்-ஜங்கமங்களில் கடையான சிற்று எறும்பும் பிரதானமாக -அவை தொடக்கமான என்றுமாம் –புற்பா-தரையில் பரம்பி இருந்த புல் / ஒன்று இன்றியே-நிர்ஹேதுகமாக / ஒரு நன்மை இன்றியே இருக்கச் செய்தே நில மிதி தானே ராம பக்தராக்க வற்றாம் ஸ்வ பாவத்தை யுடைத்தான திரு அயோத்யையிலே ராம குணங்களை அனுபவித்து இனியராய் வர்த்திக்கிற சராசர பதார்த்தங்கள் எல்லாவற்றையும் ப்ரஹ்மாவை நியாந்தாவாக்கி யவனுக்கு அடைத்த கர்ம வஸ்யமான நாட்டிலே கர்மங்களையும் அவனுடைய நியந்த்ருத்வத்தையும் தவிர்த்து தன்னோட்டை சம்ச்லேஷ விஸ்லேஷங்களே ஸூக துக்கங்கள் ஆகிற நல்ல ஸ்வ பாவத்தை உடைத்தாம்படி பண்ணினான் –

—————————————————————

அங்கு உண்டான சகல சேதனரையும் தன்னை அல்லது அறியாத படி தன் குணத்தால் பந்தித்து அகப்படுத்தி வைத்து -அவர்களை இட்டு வைத்து தானே எழுந்து அருளாதே அவர்களையும் கூடக் கொண்டு திரு நாட்டிலே எழுந்து அருளினான் என்று கீழ் சொன்னதில் காட்டிலும் அதிக குணத்தை அருளிச் செய்கிறார் –

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?-ராமனால் ரஷிதமாய்-அவன் குணம் பரிமாறும் நாட்டில் பிறந்தார் ஆஸ்ரிதர் வத்சலனான அவனுக்கு அல்லது வேறு சிலர்க்கு அடிமை புகுவரோ
நாட்டிற் பிறந்து படாதன பட்டு
மனுஷ்யர் பக்கல் பரிவாலே கர்ம வச்யரோடு ஓக்க நாட்டிலே பிறந்து அவர்கள் படும் அளவு அன்றிக்கே ஜனக ராஜ புத்ரீ விஸ்லேஷாதி துக்கங்களையும் பட்டு
மனிசர்க்கா-நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு-நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே
நிரபராதமான நாட்டை நலிகிற ராவணாதி ராக்ஷஸரை இருந்த இடங்களிலே சென்று -கொன்று -மீண்டு வந்து -தன்னைடைய ஸுந்தர்யாதி சீலாதி களைக் காட்டி இருந்ததே குடியாக தரிப்பித்து –

————————————————————–

தன்னை அல்லது அறியாது இருக்கிறவர்களை கூடக் கொண்டு போனான் என்னுமதில் காட்டிலும் அதிக குணமான  சிசுபால விஷயீ காரத்தை அனுசந்திக்கிறார்  –

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-

இவனை வையக கேட்க வல்லோமே என்று இருக்குமவர்களுக்கும் பொறுக்க ஒண்ணாத படியான தண்ணிய வசவுகளை வையும் வழி ப் பகைவனான சிசுபாலன் சர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே சேர்ந்த படி அறிவாரை அறிந்து வைத்தும் –

—————————————————————

தான் உளனாய் பிரதிகூலனான சிசுபாலனை அபராதங்களைப் பொறுத்து திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட படியும் ஒரு குணம் என்று என்ன ஒண்ணாத படி மிகவும் சாபராதமாய் பிரளயத்தில் மங்கிக் கிடந்த ஜகத்தை மீளவும் உண்டாக்கின மஹா குணத்தை அனுசந்திக்கிறார் –

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-

தன்மை அறிபவர்-தத்துவ ஸ்திதி அறியுமவர்கள் –
தேவ மனுஷ்யாதி ரூபத்தாலே நாநாவாய்க் கொண்டு விஸ்தீர்ணமாய் இருந்துள்ள பதார்த்தங்கள் ஒன்றும் இல்லாத காலத்திலே தன்னுடைய சங்கல்பத்தாலே தனக்கு இப்பால் உண்டான காரியத்தை அடைய பிறப்பிக்க வற்றான ஜலத்தை ஸ்ருஷ்டித்து -அவ் வழியே ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து பண்டு தான் சம்ஹரித்த பதார்த்தங்களை பழையபடியே உண்டாக்கின விரகுகளை சிந்தித்து-

————————————————————–

தன்னாலே ஸ்ருஷ்டமான ஜகத்தை பிரளயம் கொள்ள -இன்னமும் இங்கனம் இருக்கும் ஜகத்தை ஸ்ருஷ்டித்துக் கொள்ளுகிறோம் என்று உபேக்ஷியாதே தானே அதுக்கு ஈடாய் இருபத்தொரு திர்யக்க்கின் வடிவைக் கொண்டு பூமியை எடுத்து அருளின இம் மஹா குணத்தை அனுசந்திக்கிறார் –

சூழல்கள்  சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன்பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–7-5-5-

தம் தாமுக்கு புருஷார்த்த உபாய சிந்தையை பண்ணில் அத்யாச்சர்ய ஸ்வபாவனான எம்பெருமானுடைய திருவடிகளை ஒழிய வேறு சிலரை ஆஸ்ரயிப்பரோ –
தெரியாதபடி கடலிலே அழுந்தின பிரதிவ்யை அந்தரப்படாத படி தன்னுடைய ஒரு கொம்பிலே ஒருவர் அர்த்தியாது இருக்க தானே வைத்துக் கொண்ட வராஹமான திருவடியைக் கொண்ட படியை சொல்லக் கேட்டும் மனனம் பண்ணியும் –

————————————————————

தன் சாமர்த்யத்தினாலே பூமியை எடுத்து அருளின அதில் காட்டிலும் தன் மேன்மை பொகட்டு இருந்து கொள்ளுகையாலே கீழ் சொன்ன குணங்களில் காட்டிலும் மஹா குணமான வாமன வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார்  –

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6-

ஹிதங்களை பிறர் சொல்லவும் கேட்டு தங்கள் ஹிருதயத்தால் அத்யவசித்தித்தும் இருக்கிறவர்கள் ப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கு நாயகன் ஆனவனுக்கு அன்றி ஆளாவரோ -நிரந்தரமாக கொடுக்க வல்ல கையை யுடைய மஹா பலி பாதிக்க பாதிதராய் திரண்டு சென்று இரந்த தேவர்களுடைய துக்கத்தை கெடுத்து அருளின ஏற்ற கையை யுடைய ஸ்ரீ வாமனனாய் செய்து அருளின மநோ ஹாரியான சேஷ்டிதங்களை அனுசந்தித்து வைத்தும் –

—————————————————————-

ஸ்ரீ யபதியான தான் பிறரை  இரந்து ஆஸ்ரிதருடைய அபேக்ஷித பூர்ணம் பண்ணின இதில் காட்டிலும் -தேவதாந்த்ர பஜனம் பண்ணுகையாலே உபேஷ்யனான மார்க்கண்டேய விஷயீ காரமாகிற விலக்ஷணமான குணத்தை அனுசந்திக்கிறார் –

கண்டு  தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7-

பிரிய ஹிதங்களை அனுசந்தித்தும் அத்யவசித்தும் இருக்கிறவர்கள் கிருஷ்ணனுக்கு அன்றி ஆளாவாரோ
வந்து உண்ணா நின்ற பூ மாலையை உடையனாய் பாலனான மார்கண்டேயனுக்கு ஆயுஸ் ஸூ க்காக -நானும் உன்னோடே ஒத்த சாதகன் காண் -என்று தன்னுடைய ஜடையைக் காட்டிக் கொண்டு உடனே பேச்சாட்டு துணையாக செல்ல -அவனை விஷயீ கரித்து தன்னோடே ஒத்த வரிசையைக் கொடுத்தும்-பிரியாதே சென்றபடியை உணர்ந்தும்
உசாய்ச செல்ல -என்ற பாடமான போது -வாழு நாள் விசாரித்து செல்ல என்றுமாம் –

———————————————————-

தேவதாந்த்ர பஜனம் பண்ணினவனை விஷயீ கரித்த குணத்தில் காட்டிலும் -ஆஸ்ரித ரக்ஷணத்தில் உண்டான த்வரையாலே நரத்வ சிம்ஹங்கள் இரண்டையும் ஏறட்டுக் கொண்டு -அப்போதே  -தோற்றி அருளி ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணின விலக்ஷணமான குணத்தை அனுசந்திக்கிறார் –

செல்ல  உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-

முட்ட உணர்ந்தவர் பேர் அழகை உடையவனுடைய குணங்களை அன்றி கற்பரோ –
எல்லை இல்லாத மஹ தபஸ் ஸூ க்களாலே பல மிறுக்குகளை செய்யா நின்று கொண்டு தேவர்களை துக்கப் படுத்தா நின்றுள்ள ஹிரண்யனுடைய சரீரத்தை பெரிய ஸிம்ஹ ரூபத்தைக் கொண்டு பிளந்த ஆச்சர்ய சேஷ்டிதத்தை அறிந்து வைத்தும் –

————————————————————

ஆஸ்ரிதர்க்காக நரஸிம்ஹமான-அதிலும் காட்டில் அதிக குணமான சாரத்ய வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் –

மாயம்  அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமோ.–7-5-9-

அத்யாச்சர்யமாய் இருக்கிற வனுடைய ஆஸ்ரித பவ்யதையை அறியில் அப்படி இருக்கிறவனுக்கு அல்லது ஆளாவாரோ –
பாண்டவர்களுக்கு க்ரம ப்ராப்தமாய் வருகிற ராஜ்யத்தை புஜிக்க ஒட்டாதே செறுக்கிற மிடுக்கரான துரியோதனாதிகளை நூற்றுவரும் மங்கும் படி வேறு துணை இன்றிக்கே தனியரான ஐந்து பேருக்காக லோகம் எல்லாம் அறியும் படி விலக்ஷணமான சாரதியாய் யுத்த பூமியிலே சென்று சேனையை நிச்சேஷமாக்கி நிரபாயமாக திரு நாட்டிலே எழுந்து அருளின படியைப் பேசின மஹாபாரதத்தை அறிந்து வைத்தும்-

—————————————————————-

முன்பு  சேதனர்க்கு பண்ணின உபகாரங்கள் எல்லாம்  சம்சாரத்தே இருக்கச் செய்தே பண்ணும் உபகாரகங்கள் -அவ்வளவு அன்றிக்கே சம்சாரத்தை மறுவல் இடாத படி நிச்சேஷமாக்கி  தன் திருவடிகளிலே சேர்த்து கொள்கையாகிற மஹா உபகாரகத்தை அருளிச் செய்கிறார்  –

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-

விசேஷஞ்ஞராய் இருப்பார் ஆச்சர்ய பூதனானவனுக்கு அல்லது ஆளாவாரோ –
ஆத்ம ஸ்வரூபம் தெரியாத படி அறிவு கெடுத்து நிற்கிற துஸ்ஸகமான ஜென்ம வியாதி ஜரா மரணங்களை விடுவித்து கைவல்ய புருஷார்த்தத்திலே புகாமே காத்து நித்ய கைங்கர்யத்தை கொடுத்து அருளி -இவனுக்கு ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருந்து அருளும்படியை அனுசந்தித்தும் தெளிந்தும் –

————————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார் சம்சாரத்திலே இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்  என்கிறார் –

தெளிவுற்று  வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-

எம்பெருமானே ப்ராப்யமும் ப்ராபகமும்-என்று அறிந்து அநந்ய பிரயோஜனராய் நின்றவர்களுக்கு நிரதிசய புருஷார்த்தமான கைகர்யத்தைக் கொடுக்கும் ஸ் வ பாவனாய் -அதற்காக எப்போதும் உணர்ந்து இருக்கும் கிருஷ்ணனை
தெளிவுற்ற ஆயிரத்துள்-பகவத் குணங்களுக்கு ஸ்பஷ்டமான வாசகமான ஆயிரத்தில்

—————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: