திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –7-5–

கீழ் இவருக்கு ஓடின பல ஹானி எல்லாம் போம்படி தான் பண்ணின விஜயங்களைக் காட்டி அனுபவிப்பிக்க அனுபவித்து தரித்தார் –
ஆஸ்ரித அர்த்தமான விஜயங்களுக்கு அடியான சீலாதி குணங்களையும் -அது அடியாக வந்த ராமாதி திவ்ய அவதாரங்களையும்
அநுஸந்தியா நின்று கொண்டு ப்ரீதராய்
சம்சாரிகளில் இவன் வாசி அறிந்து இவனுடைய குண அனுபவம் பண்ணுகிறார் உண்டோ -என்று பார்த்த இடத்து
கையிலே நிதி இருக்க அத்தை அறியாதே புறம்பே அந்நிய பரராய் துக்கப் பட்டுத் திரிவாரைப் போலே இக் குண சேஷ்டிதாதிகளை ஒழிய
வேறு சிலவற்றால் தரிப்பதே என்று விஸ்மிதராய்
அவதாரங்களையும் அவதரித்து பண்ணின விஜய பரம்பரைகளையும் அதுக்கு அடியான சீலாதி குணங்களையும் அனுபவித்து பேசுகிறார் –
ஆழ்வான் பத்துப் பாட்டையும் ராம விஷயமாக நிர்வஹித்து போரும் -ராமாவதாரத்தில் பக்ஷ பாதத்தால் –
பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் என்றும் மாறு நிறைத்து இரைக்கும் சரங்கள் -என்றும் ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து
அவ்வாதாரத்தில் உண்டான குண சேஷ்டிதாதிகளிலே ஒரோ நீர்மைகளை யுடைய மற்றைய அவதாரங்களையும்
இக் குண பிரசாங்கத்தாலே அனுசந்தித்தும் இப்படியாலே ராம வ்ருத்தாந்தத்தை பேசுகிறார் என்று ஆழ்வான் நிர்வாஹம் –

————————————————————————-

பிரிய ஹிதங்களைப் பற்ற ஒன்றைக் கற்பார் உபகார சீலனான சக்கரவர்த்தி திரு மகனை ஒழிய வேறு கற்பரோ -என்கிறார் –

கற்பார்  இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் -ஒருவன் ஒன்றைக் கற்பது -அப்போதை இனிமைக் காதல் -விபாகத்தில் புருஷார்த்தத்தை தரும் என்றாதல் இ றே -பிரியவாதீச பூதா நாம் என்றும் -ராமோ ராமோ ராம இதி -என்றும் -லோகா நாம் த்வம் பரோ தர்ம -என்றும் -ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும் பிரிய ஹிதங்கள் இரண்டும் ஒரு தலைத்த விஷயமாய் -நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே பரார்த்தமாய் இருக்கிற விஷயத்தை ஒழிய -அதிகரிப்பார் புறம்பேயும் ஒன்றை அப்யசிப்பாரோ -அநர்த்த கரம் என்றாலும் விட ஒண்ணாத பிரிய விஷயமாய் -அபிரியம் ஆனாலும் விட ஒண்ணாத படி பத்த்யமான இவ்விஷயத்தை ஒழிய வேறு ஒன்றை அப்யஸிக்கக் கடவதோ -மற்றும் என்று -தேவதாந்தரங்களை சொல்லுகிறது அன்று -பரத்வத்தையும் அவதாரங்களையும் சொல்லுகிறது -பாவோ நான்யத்ர கச்சதி -தொழில் எனக்கு –
கற்பரோ?-சேதனர் அன்றோ -எல்லாவற்றையும் விட்டு -இவ்விஷயத்தை கற்கைக்கு இங்குத்தைக்கு ஏற்றம் என் என்னில் -அது சொல்லுகிறது –மேலடைய
புற்பா முதலாப்-புல்லாகிற பதார்த்தம் முதலாக –பா -பதார்த்தம் -பரம்பின புல் என்றுமாம் -அதாவது பசுவின் வாய்க்கு எட்டாதே தறையோடு ஒருமிக்கப் படருகை-முதலா -பிரதானமாக -என்றுமாம் –
புல்லெறும்பாதி ஒன்று இன்றியே-புல்லிய எறும்பு –ஆதி  -தொடக்கமாக என்னவுமாம் -பிரதானமாக என்னவுமாம் -ஸ் தாவரங்களில் கடையான த்ருணமும் ஜங்கமங்களில் கடையான சிற்று எறும்பும் பிரதானம் என்கை -வெள்ளத்துக்கு பள்ளத்தில் நோக்காய் இருக்குமா போலே வசிஷ்டாதிகள் அன்றியே அறிவில் குறைந்த இடத்தே யாயிற்று பெருமாள் நீர்மைக்கு நோக்கு -வசிஷ்டாதிகளுக்கு முன்பே த்ருண பீபீலிகைகள் யாயிற்று பெருமாள் கண்ணுக்கு இலக்கு ஆவது –ஓன்று இன்றியே -தம்மைப் பெறுகைக்கு ஹேதுவாய் இருபத்தொரு நன்மை இத்தலையில் இன்றிக்கே -நிர்ஹேதுக கிருபையால் –ஓன்று இன்றியே என்றது ஓன்று ஒழியாமே என்றது ஆனாலோ என்னில் மேலே -சராசரம் -என்கையாலே அது ஒண்ணாது –
நற்பால் அயோத்தியில்-நல்ல இடத்தை யுடைய திரு அயோத்யையில் -நில மிதி தானே ராம பக்தியை விளைப்பிக்கும் என்கை -தேசோயம் சர்வ காமதுக்–ராகவார்த்தே பராக் ராந்தா நபிராணே குருதேதயாம் -என்னுமவர்கள்
வாழும்-வர்த்திக்கும் என்னும் ஸ்தாநத்திலே வாழும் என்கிறது -தேச வாசம் தானே போக ரூபமாய் இருக்கை -ராம குணங்களையே அனுபவித்து இருக்கும் என்னுதல்
சராசரம் முற்றவும்-ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தங்களையும் –
நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் -திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – -அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் -ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் -ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன
நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக்கு கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –

————————————————————

அங்கு உண்டான சகல சேதனரையும் தன்னை அல்லது அறியாத படி தன் குணத்தால் பந்தித்து அகப்படுத்தி வைத்து -அவர்களை இட்டு வைத்து தானே எழுந்து அருளாதே அவர்களையும் கூடக் கொண்டு திரு நாட்டிலே எழுந்து அருளினான் என்று கீழ் சொன்னதில் காட்டிலும் அதிக குணத்தை அருளிச் செய்கிறார் –

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-

நாட்டிற் பிறந்தவர் -ஒரு நாட்டில் பிறவாதார் இல்லையே இ றே -பெருமாள் ரக்ஷிக்கிற எல்லையாய்-அவர் குணங்கள் நடையாடுகிற தேசத்திலே பிறந்தவர்கள் -ஸ்ரீ ராமாயணம் அவிழ்த்துக் கட்டாத இடம் நாடு அல்ல கொடு விளைத் தூறு -தேவயம் பக்ஷதா ரஷ்யா பவத் விஷய வாஸின -என்று வழக்குச் சொல்லி பற்றலாம் விஷயம்
நாரணற்கு ஆளன்றி ஆவரோ?-நாராயணன் என்கிறது -சக்கரவர்த்தி திருமகனை -பவான் நாராயணோ தேவ -என்றான் இ றே ப்ரஹ்மா -தம்மை வேண்டாதாரையும் விட மாட்டாத வத்சலர்க்கு -ரீபூணாமபி வத்சல -தம்மை உகவாத கைகேயியையும் குறை சொல்லப் பெறாதவர் -ஆத்மகாமா சதா சண்டீ க்ரோத நா ப்ராஞ்ஞா மாநி நீ -என்று இளைய பெருமாள் கர்ஹிக்க -நதேஸ்ம்பா மத்யமா தாத கர்ஹிதவ்யா கதஞ்சன தாமேவாஷ்வாகு நா தஸ்ய பர தஸ்ய கதாம் குரு என்றவர் இ றே
ஆளன்றி ஆவரோ?-மற்றும் கற்பரோ என்றார் -கல்விக்கு பலம் ஆளாகை இ றே -இவரை ஒழிய புறம்பே சிலர்க்கு ஆளாக கடவரோ
நாரணற்கு -தன்னை இல்லை செய்கிறார்க்கும் அந்தர்யாமியாய் சத்தையை நோக்கிக் கொடுக்குமவன் என்றுமாம் –
நாட்டிற் பிறந்து-ப்ரஹ்மாதி கள் தேசத்தை அருவருத்து வர்த்திக்கிற நித்ய ஸூ ரிகளோடே வர்த்திக்கிறவன் -அந்த ப்ரஹ்மாதிகளும் குத்ஸிக்கும் பூமியிலே பிறந்து -சம்சாரிகள் தன்னில் அறிவு பிறந்தாரும் காற்கடைக் கொள்ளுகிற தேசத்திலே இ றே பிறந்து –அகர்மவஸ்யனான தான் கர்ம வச்யரோடு ஓக்க கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து
படாதன பட்டு -சம்சாரிகள் கர்மத்தால் படும் அளவு அன்று இ றே அவன் அனுக்ரஹத்தாலே பட்டது -ஒரு சேதனன் பிறந்தால் இருக்கும் நாள் தானும் ஸ்திரீயும் சேர இருந்து ஜீவித்து போகா நின்றான் -அவ்வளவும் அன்றிக்கே பிராட்டி ஓர் இடத்திலும் தான் ஓர் இடத்திலும் வர்த்திக்க வேண்டிற்று இ றே -ராஜ்யாத்ப்ராம்ச -இத்யாதி -இப்படி படுகிறது யாருக்காக -என்னில் –
மனிசர்க்கா-தங்களுக்காக அனுக்ரஹத்தால் படுகிற இம் மஹா குணத்தை குண ஹானியாக சொல்லும் க்ருதக்நர்காக-ராவண பவனத்தில் இருந்தவளோடே சேர வர்த்தியா நின்றான் -என்று சொன்னது இ றே இரண்டாம் பிரிவுக்கு முதல் –கர்ம வஸ்யரை சொல்லும் வார்த்தையை சொன்னார்கள் இ றே
நாட்டை நலியும் அரக்கரை -ஒருவன் விரோதித்தால் அத்தை பொறுக்கும் தனை அளவில்லாதவன் அவனை அழியாகி செய்ய பிராப்தம் -அங்கனம் இன்றிக்கே இருந்ததே குடியாக உண்டு உடுத்து திரிகிறது ஹேதுவாக நலிகிற ராக்ஷஸரை
நாடித் தடிந்திட்டு-அவர்கள் வந்து மேலிட்டால் அன்றிக்கே -அவர்கள் இருந்த இடங்களிலே சென்று அவர்களை அழியச் செய்து -சர்வ சாதாரணன் நலிகிறது நிர் நிபந்தனமாக விபூதியை நலிகையால் இ றே
நாட்டை அளித்து-போந்த கார்யம் தலைக் காட்டிற்று ஆகில் இனி போவோம் என்னாதே மீண்டும் தம்முடைய ஸுந்தரியாதிகளாலே இருந்ததே குடியாக வாழ்வித்து -தம் வரவு பார்த்து இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானையும்-அபிஷேக மஹோத்சவங்கள் காண ஆசைப்பட்ட தாய்மாரையும் -பின் தொடர வழி மாற்றிப் போந்த நாட்டையும் -கடல் ஞாலத்து அளி மிக்கான் -என்கிறபடியே நெடு நாள் ஆஸ்வசிப்பித்து
உய்யச் செய்து-தம்மைப் பெறுகைக்கு அவர்கள் பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே அசத்சமமாய் இருக்கிறவர்களை -சந்தமேனம்-என்னும் படி பண்ணி
நடந்தமை கேட்டுமே.–திர்யக் யோனி நிகத்தாச்சாபி சர்வே ராம மநுவ்ரதா-என்றும் -விவேச வைஷ்ணவம் தேஜஸ் ச சரீரஸ் சஹா நுக -என்றும் -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்றும் சொல்லுகிற பிரயாண வ்ருத்தாந்தத்தை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளின்றி ஆவரோ –

—————————————————————–

கீழ் சொன்னதில் காட்டில் அதிக குணமான சிசுபால விஷயீ காரத்தை அனுசந்திக்கிறார்

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
செவி யுடையார் கேசி ஹந்தாவினுடைய கீர்த்தியை ஒழிய வேறு ஒன்றைக் கேட்பரோ -பிரிய ஹிதங்களுக்கு ப்ரகாசகமாய் இருபத்தொரு சப்தத்தை கேட்க வேணும் என்று இருப்பார் –
கற்கை யாகிறது -சாஸ்திரத்தில் அர்த்தத்தை வுயுத்பத்தி பண்ணுகை -கேட்க்கை யாகிறது அறிவுடையார் பக்கலிலே பிரிய ஹிதங்களை கேட்டு அறுதி இடுகை
மற்றுங் கேட்பரோ?-ராமாவதாரத்தில் இழிவார்க்கு அவர் பக்கல் உத்தேச்ய புத்தியைக் கொண்டு இழிய வேணும் -ப்ராதிகூல்யமே பரிகரமாக தன்னை கொடுத்த அவதாரம் இ றே இது -வெளிச்சிறந்த காலத்திலே இ றே ராமாவதாரம் -கலிகாலம் பிரத்யா சன்னமாய் இருக்கிற காலத்திலே இ றே கிருஷ்ணாவதாரம் -ப்ராதிகூல்யத்து அளவு எது என்ன
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்– -கேட்ப்பார் ஆகிறார் பகவத் நிந்தை பண்ணுவார்க்கு ஜீவனம் வைத்து கேட்க்குமவர்கள்-அவர்கள் செவிக்கும் கூட கேட்க ஒண்ணாத படியான தண்ணிய வசவுகளே வையும் -அவதாரணத்தாலே பிராமாதிகமாகவும் ஓர் அனுகூல்யம் கலவாது ஒழி கை -இப்படி வைகைக்கு அடி என் என்னில்
சேட்பாற் பழம் பகைவன்-வழிப் பகைவன் ஆனவன் -சேண் -என்று மிகுதி / பால் என்று ஸ்வபாவம் -/ ப்ராதிகூல்யமே ஸ் வ பாவமாக யுடையவன் -அவன் ஆர் என்னில்
சிசு பாலன் திருவடி-தாட்பால் அடைந்த -சர்வ ஸ்வாமி யுடைய பாத பார்ஸ்வத்தை பிரா பித்த -இத்தை இ றே -சாயுஜ்ய தோ அபூ -என்கிறது -சாயுஜ்யம் ப்ரதி பன்னாயே-சிசுபாலன் -சாஸ்திரங்களில் சொன்ன அதிகாரி களில் ஒருத்தன் அல்லன் -விஷய வை லக்ஷண்யத்தாலே பெற்றவன் -வைது நின்னை வல்லவா பழித்தார்க்கும்- பேருளான் பெருமை பேசி ஏசினார்
தன்மை அறிவாரை அறிந்துமே .–-கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?–ஈஸ்வரனுடைய ஸ்வ பாவத்தை அறிந்தவர்கள் பக்கலிலே செவி தாழ்த்து வைத்தும் -இஸ் ஸ்வ பாவத்தை அறிந்து வைத்தும் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று -ப்ராதிகூல்யமே யாத்ரையாய் இருந்தவனுக்கு -தன்னால் அல்லது செல்லாமை யுடையார் பெரும் பேற்றைக் கொடுத்தான் என்றது ஆயிற்று–

———————————————————–

தான் உளனாய் பிரதிகூலனான சிசுபாலனை அபராதங்களைப் பொறுத்து திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட படியும் ஒரு குணம் என்று என்ன ஒண்ணாத படி மிகவும் சாபராதமாய் பிரளயத்தில் மங்கிக் கிடந்த ஜகத்தை மீளவும் உண்டாக்கின மஹா குணத்தை அனுசந்திக்கிறார் -அபராதத்தில் சிசுபாலரில் குறைந்தார் இல்லை இ றே ஜகத்தில்

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-

தன்மை அறிபவர் தாம் -தத்துவ ஸ் திதியை உள்ளபடி அறியுமாவார்கள் –தன்மை -உண்மை -காரணந்து த்யேய–ஜன்மாத் யஸ்யத -என்று உபாசன வாக்கியங்களையும் காரண வாக்கியங்களையும் அறியுமவர்கள் -ஜகத் காரணம் இன்னது என்று அறிந்து -அதுவே உபாஸ்யம் -என்று அறியுமவர்கள்
அவற்கு ஆளன்றி ஆவரோ?-அந்த காரண வஸ்துவுக்கு ஆளாமது ஒழிய வேறு சிலர்க்கு ஆளாகக் கடவரோ -இவனுக்கே ஆளாக வேண்டுகிறது என் என்னில் -இது அடங்க அழிந்து கிடக்க தன்னை ஆஸ்ரயிக்கைக்கு கரணங்களை கொடுத்தவனை ஒழிய புறம்பே சிலரை பற்றவோ
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
தேவாதி பேதங்களை யுடைத்தாய் கர்ம அனுகுணமாக விஸ்திருதமான பதார்த்தங்கள் ஒன்றும் இன்றிக்கே பாழாய் த்விபரார்ர்த்த காலம் சென்ற அளவிலே -தன் சங்கல்பத்தாலே தனக்கு இப்பால் உண்டான காரியத்தை பிறப்பிக்கும் நன்மையுடைய ஜலத்தை ஜலத்தை ஸ்ருஷ்டித்து -அது அண்டமாய் பரிணமித்தவாறே அதிலே சதுர்முகனை ஸ்ருஷ்டித்து -அப ஏவ ச சர்ஜ்ஜா தவ்
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் -என்கையாலே -சேதன அசேதனங்களை உண்டாக்குவானும் இவனே -அவனாலே வந்த ஸ்ருஷ்டியும் இவனதே -அவை உபகரணம் மாத்திரமே -உபகாரணமாம் இடத்தில் அசேதனத்தோபாதி சேதனனும் –
தன்னுள்ளே-தன்னுடைய சங்கல்ப ஏக தேசத்திலே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.-பூர்வ வாசனை அழியும் படி பண்ணப் பட்ட பதார்த்தங்களை –தொன்மை என்று -துர்வாசனை -அது அழிகைக்காக தான் சம்ஹரித்திட்டு வைத்த பதார்த்தங்கள் -என்கை –தோற்றிய -தோற்றுவித்த –தோற்றிய என்றது பஹுஸ்யாம் என்கிற ஸ்ருதிச்சாயையினாலே -தாதா யதா பூர்வமகல் பயத்-என்கிறபடியே இவற்றை உண்டாக்கின நல் விரகுகளை அனுசந்தித்து -அவர்க்கு ஆளன்றி ஆவரோ -என்று அந்வயம் –

—————————————————————

தன்னாலே ஸ்ருஷ்டமான ஜகத்தை பிரளயம் கொள்ள -இன்னமும் இங்கனம் இருக்கும் ஜகத்தை ஸ்ருஷ்டித்துக் கொள்ளுகிறோம் என்று உபேக்ஷியாதே -தன்னை அழிய மாறி -தானே அதுக்கு ஈடாய் இருபத்தொரு திர்யக்க்கின் வடிவைக் கொண்டு பூமியை எடுத்து அருளின இம் மஹா குணத்தை அனுசந்திக்கிறார் –

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன்பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–7-5-5-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
தம் தாமுக்கு புருஷார்த்த உபாய சிந்தை பண்ணில் ஆச்சர்ய சக்தி உக்தனை அல்லது பற்றுவரோ -சேதன பேதத்தோ பாதி போரும் இ றே உபாய பேதமும் -எல்லா உபாயங்களிலும் அனுவ்ருத்தமாய் -பலப்ரதமாய் பிரதானமுமாய் -ஸ் வரூப அனுரூபமாய் சாத்தியம் அன்றிக்கே சித்தமுமாய் இருக்குமத்தை அல்லது பற்றுவரோ -இத்தலையில் பாரதந்தர்யத்தையும் அஞ்ஞான அசக்திகளையும் அனுசந்தித்து -அவனுடைய ஸ்வாதந்தர்யத்தையும் ஞான சக்திகளையும் ப்ராப்தியையும் அநுஸந்தித்தால் ஸ் வ அபிமத சித்திக்கு அவனை அல்லது பற்றுவரோ
மாயன் கழல் -ஆச்சர்ய சக்தி உக்தன் என்னுதல்-மேல் சொல்லுகிற வடிவில் ஏற்றத்தை நினைத்து சொல்லுதல் -அவன் திருவடிகளையே வேண்டுகிறது என் என்னில் -அடியானுக்கு அடியோடே அந்வயம் -சம்சார ஆர்ணவத்தில் அசத்தசமனாய் இருக்குமவனுக்கு நஷ்ட உத்தரணம் பண்ணினவனைப் பற்ற வேண்டாவோ -பிரளயத்துக்கு கர்மீபவித்ததை பற்றவோ -நித்ய சம்சாரி ஆகைக்கு வேண்டும் அளவு இ றே இவன் பக்கலில் உள்ளது -ஸ்வ விநாசத்துக்கு இடம் பார்த்து திரியும் இவன் -உஜ்ஜீவனத்துக்கு இடம் பார்த்து திரியும் அவன் –
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்-ஆழத்தை யுடைத்தான பெரும் புனல் என்னுதல் -பெரும் புனலிலே ஆழ அழுந்தின ஞாலம் என்னுதல் -சர்வ சக்திக்கும் அதுக்கு ஈடாய் இருபத்தொரு வடிவு கொண்டு எடுக்க வேண்டும் படி இருக்கை
தாழப் படாமல் தன்பால் ஓரு கோட்டிடைத் -பிரளயம் கொண்டு அங்கனம் உரு மாய்ந்து போகாமல் தன்னுடைய ஒரு கொம்பிலே -கொண்ட வடிவில் பரப்பு பூமி அடங்க தன் எயிற்றுக்கு உள்ளே அடங்கும் படி யாயிற்று -ரஷ்யத்தினுடைய அளவன்றுஇ றே ரக்ஷகனுடைய பாரிப்பு
தான் கொண்ட-ஒருவர் அர்த்தியாது இருக்க தானே கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–நீருக்கும் சேற்றுக்கும் இளையாத படி ரக்ஷணத்துக்கு பாங்கான வடிவை கொண்டான் அவன் -அது தான் ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கையாலே திருவுரு என்கிறார் இவர் -கோலா வராகம் ஒன்றாய் -பன்றியாம் தேசு -பிறமத நிலையனான தேஜஸ் ஸூ க்கும் அவ்வருகு ஒரு தேஜஸ் ஸூ இ றே
கேட்டும் உணர்ந்துமே.-சொல்லக் கேட்டும் மனனம் பண்ணியும் – மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
கீழில் பாட்டில் ஸ்ருஷ்ட்டியை சொல்லுகையாலே ஜகத் காரணமாய் உபாஸ்யமான மேன்மை தோற்றிற்று -தன்னுருக் கெடுத்து வேற்றுக்கொண்ட நீர்மைக்கு தாம் குலையாமல் ஸ்ருஷ்டித்தது ஓர் ஏற்றமோ –

———————————————————-

தன் சாமர்த்யத்தினாலே பூமியை எடுத்து அருளின அதில் காட்டிலும் இரப்பாளனாய்  தன் உடைமையை அழியக் கொடாத  மஹா குணமான வாமன வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார்  –

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6-

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
பிரிய ஹிதங்களை பிறர் சொல்லவும் கேட்டு தங்கள் ஹிருதயத்தாலே அத்யவசித்து இருக்குமவர்கள் -ப்ரசஸ்த கேசனுக்கு அன்றி ஆளாவாரோ -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு உத்பாதகன் என்றுமாம்
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
நிரந்தரமாக கொடுக்கும் கையை யுடைய மஹா பலி பாதிக்க பாதிதராய் -மஹா பலி பக்கலிலே உதார குணம் ஓன்று கிடைக்கையாலே ஹிரண்ய ராவணாதிகளை போலே அழிய செய்யாதே -அவன் உதார குணத்துக்கு தான் இலக்காய் தன் விபூதியை அவன் நெருக்காத படி மீட்டான் ஆயிற்று
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
ஈட்டம் -திரள் -ஈஸ்வர அபிமானிகளாய் -ஒருவர் பக்கல் செல்லக் கடவோம் அல்லோம் -என்றும் எல்லாருக்கும் இடுமது ஒழிய ஒருவர் பக்கல் ஒன்றும் கொள்ள கடவோம் அல்லோம் என்றும் இருக்குமவர்களாய் தன்னில் தான் சேர்த்தி இன்றிக்கே இருக்கிற தேவர்கள் ஆபத்தின் மிகிதியால் தன்னிலே ஒரு மிடறாய் பஃன அபிமானிகளாய் சென்று இரந்தவர்களுக்கு -நம் பக்கலிலே வந்து இரந்தார்கள் என்று இத்தையே கொண்டு -உங்கள் காரியம் எல்லாம் செய்கிறோம் என்று சொன்ன வார்த்தையால் அவர்கள் துக்கத்தை போக்கி –மா ஸூ ச -என்றான் -துக்கம் போக்கின படி என் என்னில்
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–ஏற்றுக் குவிந்த கையை யுடையவனாய் -கொடுத்து வளர்ந்த அம் கையை கொண்டு —செய்த கூத்துகள் -அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே பிஷையிலே அதிகரித்து -சிறுகாலைக் காட்டி இரந்து -பெரிய காலாலே அளந்து கொண்ட மநோ ஹாரி சேஷ்டிதங்களை -அனுசந்தித்தும் -கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?-கூத்துகள் -மநோ ஹாரி சேஷ்டிதங்கள் -வல்லார் ஆடினால் போலே இருக்கிறதாயிற்று இவருக்கு-

—————————————————————

ஸ்ரீ யபதியான தான் பிறரை  இரந்து ஆஸ்ரிதருடைய அபேக்ஷித பூர்ணம் பண்ணின இதில் காட்டிலும் -தேவதாந்த்ர பஜனம் பண்ணுகையாலே உபேஷ்யனான மார்க்கண்டேய விஷயீ காரமாகிற விலக்ஷணமான குணத்தை அனுசந்திக்கிறார் –

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7-

கண்டு தெளிந்தும் கற்றார் -கற்றும் தெளிந்து கண்டார் -பிரிய ஹிதங்களை ஸ்ரவணம் பண்ணி -தங்களிலே அத்யவசித்து -அத்தை சாஷாத் கரித்தவர்கள்-
கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?-சர்வ ஸூலபனுக்கு அன்றி ஆளாவாரோ -ஐஸ்வர்யார்த்திக்கு ஐஸ்வர்ய விசிஷ்டானாயும் -கேவலனுக்கு சுத்தி குண உக்தனாயும் -பகவத் சரணார்த்திக்கு ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டானாயும் -இப்படியால் சர்வ ஸூ லபன் ஆனவனுக்கு –
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு -வண்டு உண்ணா நின்றுள்ள பூ மாலையை உடையனாய் -பாலனான மார்க்கண்டேயனுக்கு
வாழுநாள்-ஆயுஸ் ஸூ க்காக
இண்டைச் சடைமுடி ஈசன் -நெடு நாள் பச்சை கொண்டு -பல வேளையிலே நானும் உன்னோடே ஓக்க சாதகன் காண் -என்று ஜடையைக் காட்டினான் –
உடன்கொண்டு உசாச் செல்லக்-ஆஸ்ரயித்தவனை விட ஒண்ணாது என்று அவனைக் கூடக் கொண்டு உசாத் துணையாக செல்ல என்னுதல் -புருஷகாரமாக செல்லுதல் என்னுதல் -அன்றிக்கே –உசாய்ச செல்ல -வாழு நாள் உசாவிச் செல்ல –இவன் ஜீவிக்கும் விரகு ஏதோ என்று ஆராய்ந்து கொண்டு செல்ல
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–கொண்டங்கு -அங்கு கொண்டு -ரஷ்ய பூதனாய் திரு உள்ளத்தில் கொண்டு -தன்னொடுங் கொண்டு-நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்று தன்னோடு ஒத்த வரிசையைக் கொடுத்து –உடன் சென்றது உணர்ந்துமே.-பின்னை ஒருநாளும் பிரியாதே சென்ற படியை உணர்ந்தும் -கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?-நெடுநாள் தேவதாந்த்ர பஜனம் பண்ணினவன் மறந்தும் புறம் தொழா மாந்தரான சாத்விக புருஷகாரம் ஆவது ஆதல் -பிராட்டி புருஷகாரமாவது ஆதல் அன்றிக்கே தாமஸ தேவதையை புருஷகாரமாக கொண்டு வர -புறம் தொழா தவகம் படி சீற -அவர்களையும் பொருந்த விட்டு -மேன் மேலே ரஷித்த நீர்மைக்குப் போருமோ கீழ் சொன்ன குணங்கள் என்கிறது –

தேவதாந்த்ர பஜனம் பண்ணினவனை விஷயீ கரித்த குணத்தில் காட்டிலும் -ஆஸ்ரித ரக்ஷணத்தில் உண்டான த்வரையாலே நரத்வ சிம்ஹங்கள் இரண்டையும் ஏறட்டுக் கொண்டு -அப்போதே – தோற்றி அருளி ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணின விலக்ஷணமான குணத்தை அனுசந்திக்கிறார் –

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-

செல்ல உணர்ந்தவர் -ஐஸ்வர்ய கைவல்யங்களிலே பர்யவசியாதே -பகவத் விஷயத்திலே இழிந்து -அது தன்னிலும் அவதரித்த மேல் எல்லை அளவும் சென்று அனுசந்தித்தவர்கள் -ப்ரயோஜனாந்தர பரர்க்கு-அவர்கள் ப்ராப்யத்தை கொடுத்து அதில் களை பிடுங்கினவன் –நம்முடைய பிராப்யமும் தந்து அதிலும் களையும் பிடுங்குவான் -என்று இவ்வளவும் செல்ல உணர்ந்தவர் –
செல்வன் -நாரசிம்ஹவபு ஸ்ரீ மான் – என்கிறபடியே பேர் அழகை யுடையவன்
தன் சீர் அன்றிக் கற்பரோ?-அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யம் முதலான நீர்மைகளை அல்லது அப்யசிப்பாரோ
எல்லை இலாத பெருந் தவத்தால்-ப்ரஹ்மாதிகளை நோக்கிப் பண்ணின தொகை இல்லாத மஹா தபஸ் ஸூ க்களாலே
பல செய்மிறை-பல மிறுக்குகளை செய்யா நின்று கொண்டு -வரம் கொடுத்த தேவதைகளுக்கும் குடி இருப்பு அரிதாம் படி மிகைத்து வர்த்தித்தான் ஆயிற்று –
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் -ஸூ க பிரதானராய் இருக்கிற தேவதைகளை நித்ய துக்கிகளாம் படி பண்ணின ஹிரண்யனுடைய
ஆகத்தை-திரு யுகிருக்கு இரை போரும்படி வரத்தை ஊட்டியாக விட்டு வளர்த்த யுடம்பை
மல்லல் அரியுரு வாய்ச் -மஹா விஷ்ணும் -என்கிற படியே அவன் உடம்பு குளப்படியாம் படி பெரிய வடிவைக் கொண்டு -மல்லல் -பெருமை –மல்லரி உரு என்று -லஷ்மீ நரஸிம்ஹம் -என்றுமாம் -திருவோடு புணர்ந்த ஸிம்ஹம் என்று ஒரு தமிழன் சொல்லி வைத்தான் –நரம் கலந்த சிங்கமாய் கண்ட திருவன் –
செய்த மாயம் அறிந்துமே.-வரபல புஜ பலங்களாலே திண்ணிதான உடம்பை பெரிய சீற்றத்தோடே சென்று அநாயாசேன கிழித்து பொ கட்ட ஆச்சர்யத்தை அனுசந்தித்தும் -செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?-

——————————————————————-

ஆஸ்ரிதர்க்காக நரஸிம்ஹமான-அதிலும் காட்டில் அதிக குணமான சாரத்ய வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் –

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமோ.–7-5-9-

மாயம் அறிபவர் -அத்யாச்சர்யமான அவனுடைய ஆஸ்ரித பவ்யதையை அறியுமவர்கள்
மாயவற்கு -மேன்மையை கரை காணிலும் கரை காண ஒண்ணாத பவ்யதையை உடையவர்க்கு
ஆளன்றி ஆவரோ?-அவனுக்கு அல்லது ஆளாவாரோ -சர்வாதிகன் தன்னளவில் வர தாழ்ந்தால்-புறம்பே போகக் கடவதோ -அவன் தன் ஸ்வரூபத்தை அழிய மாறினால் -தன் ஸ்வரூபத்தில் குறைய நிற்கக் கடவதோ -அவனுக்கே ஆளாகைக்கு அவன் செய்வது எது என்னில்
தாயம் செறும்-தாய ப்ராப்தியிலே ராஜ்ஜியம் பாண்டவர்களுக்காய் இருக்க அத்தை செறுக்கி இற தமக்கு தாய பிராப்தமாக வந்தது ஒன்றை இழந்ததாக நினைத்து இருக்கிறார் யாயிற்று இவர் -மம ப்ராணாஹி பாண்டவ -என்று அவன் அபிமானிக்கையாலும் த்விஷத் அன்னம் நபோக்யத்வம் -என்று எதிர்த்தலை சத்ருக்களாய் செல்லுகையாலும்
ஓரு நூற்றுவர் மங்க -ஓர் பார்ஸ்வம் அடங்க பெரு மிடுக்கான துர்யோதனாதிகள் ஆகிற துர்வர்க்கம் உருவாயும் படி
ஓர் ஐவர்க்காய்த்-தனியான ஐவர்க்காய் -யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸூ ஹ்ருச்சைவ ஜனார்த்தன -என்று இவர்கள் இழந்தவை எல்லாம் தானேயாய்
தேசம் அறிய-சர்வாதிகன் தாழ்ந்த செயலை செய்யா நின்றால்-அப்ரஸித்தமாக செய்யிலுமாம் இ றே -அங்கனம் அன்றிக்கே சர்வ லோக சாஷிகமாக இச் செயலை அனுசந்தித்தார் எல்லாரும் நிர்ப்பரராய் இருக்கலாம் படி இ றே செய்தது -பார்த்தம் ரதின மாத்மா நஞ்ச சாரதிம் சர்வ லோக சாஷிகம் சகார-
ஓர் சாரதியாய்ச்-அத்விதீயமான சாரதியாய்
சென்று -யுத்த பூமியிலே சென்று
சேனையை-நாசம் செய்திட்டு -ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்று நிர்பந்திக்கையாலே இத்தை தவிர்ந்து -கையிலே முட் கோலால் சேனையை கொன்று பொகட்டு
நடந்த நல் வார்த்தை அறிந்துமோ.–தன் க்ருஹத்திலே புக கொண்டு சிறை செய்யத் தேடும் துரியோதனாதிகள் போல்வார் இருக்கிற தேசத்தை விட்டு எல்லாரும் ஓக்க பரியும் தேசத்திலே நிரபாயமாக எழுந்து அருளின படியை பேசின பிராமண ஸ்ரேஷ்டமான மஹா பாரதத்தை அறிந்து வைத்தும் -மாயவற்கு ஆளன்றி ஆவரோ?–க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா –

——————————————————————–

முன்பு பண்ணின உபகாரங்களின் அளவு அன்றிக்கே சம்சாரத்தை மறுவல் இடாத படி போக்கி தன் திருவடிகளிலே சேர்த்து கொள்கை யாகிற மஹா உபகாரத்தை அனுசந்திக்கிறார் –

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-

வார்த்தை அறிபவர் –ப்ரஸ்துதமான மஹா பாரதம் கடலோசை என்னும் படி சாரமான மாமேகம் சரணம் வ்ரஜ என்கிற வார்த்தையை அறியுமவர்கள் –
மாயவற்கு -ஆச்சர்யமான ஸுலப்யத்தை யுடையவனுக்கு -திரௌபதியினுடைய குழலை முடிக்கைக்காக ஹ்ருதகதமான அர்த்தத்தை வெளியிட்ட ஆஸ்ரித பவ்யதை யுடையவனுக்கு –
ஆளன்றி ஆவரோ?-பரம ஆப்தனான என்னைப் பெற்றால் -அவனை விட்டு வேறு சிலருக்கு ஆளாவாரோ -இவனைப் பற்ற வேண்டுகிறது என் என்னில்
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
ஆத்ம ஸ்வரூபம் தெரியாத படி அறிவு கெடுக்கும் ஜென்மம் என்ன -அது புக்க இடத்தே புக்க கடவதான வியாதி என்ன -அத்தை பொறுத்தாலும் அவர்ஜனீயமாய் வரக் கடவதான மூப்பு என்ன -அதுக்கு எல்லையான மரணம் என்ன -இவற்றை அடைய –
பேர்த்துப் –விரகர் நெடும் சுவ போக்க வேண்டும் படி இ றே அதின் கனம்-அஹம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்றான் இ றே –
பெருந்துன்பம் வேரற நீக்கித -ஆத்ம அனுபவம் ஆகிற மஹா துக்கத்தை வாசனையோடு போக்கி -ப்ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு அஸ்த்தர் ம் என்பதொரு நன்மை உண்டு -அபுருஷார்த்தம் ஸ்திரமானத்துக்கு மேல் இல்லை இ றே மஹா துக்கம் –
தன் தாளின் கீழ்ச்-சேர்த்து -அதுக்கு மேலே நித்ய கைங்கர்யத்தை கொடுத்து அருளி
அவன் செய்யும் சேமத்தை -இவனுக்கு ஒன்றும் செய்யாதாரைப் போலே என் செய்வோம் என்று இருக்கும் என்னுதல்-இக்கைங்கர்யத்துக்கு நிலவரான நித்ய ஸூ ரிகளோடு சேர்த்து யாவதாத்மபாவி யாக்கும் என்னுதல்
எண்ணித் தெளிவுற்றே.–இம் மஹா உபகாரத்தை அனுசந்தித்து -இதுவே அர்த்தம் என்று தெளிந்து வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?

———————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார் சம்சாரத்திலே இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்  என்கிறார் –

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு-ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று அத்யவசித்து -பின்னை யுக்தி ஆபாச வசனங்களால் அதுக்கு குஅநந்ய பிரயோஜனராய் நிலை நின்றவர்கள் என்னுதல் –
இன்பக்கதி செய்யும்-ஸூ கரூபமான ப்ராப்யத்தைக் கொடுக்கும் -ஏஷ ஹ்யேவ ஆனந்தாதி –
தெளிவுற்ற கண்ணனைத் –நாம் இவன் கார்யம் செய்யக் கடவோம் -என்று இருக்கும் கிருஷ்ணனை -இவன் கலங்கின அன்றும் தான் தெளிந்து முடிய நடத்துமவனை
தென் குரு கூர்ச்சட கோபன் சொல்-அவன் படி கிடக்க -சொன்னவர் படியாலும் ஆப்தர் என்று விஸ்வஸித்து இருக்கலாம் வார்த்தை –
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
இவை இரண்டும் கிடக்க இப்பாசுரம் தானே விஸ்வசிக்கலாம் படி தெளிவைப் பிறப்பிக்கும் இத்தை அப்யசிப்பவர்கள்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–பாமரு மூவுல கத்துள்ளே-தெளிவுற்ற சிந்தையர்-பதார்த்தங்கள் சேர்ந்து இருந்துள்ள சகல லோகங்களுக்கு உள்ளே கலக்கம் ஸ் வ பாவமாய் இருந்துள்ள சம்சாரத்துக்கு உள்ளே சுத்தமான அந்தகரணத்தை உடையராவார் -அகர்ம வஸ்யனான தான் வரிலும் சோக மோகங்களை விளைக்கும் சம்சாரம் -சம்சாரி செல்லிலும் தெளிவைப் பிறப்பிக்கும் பரமபதம் -இப்படி வ்யவஸ்திதமாய் இருக்க இதுக்கு உள்ளே முக்தருடைய பாவ சுத்தியை உடையராவார் –
முதல் பாட்டில் விஷய பிரவணரை தன் வாசி அறியும் படி பண்ணினான் என்றது –
-பிறப்பே பிடித்து தன் வாசி அறிவார் திரளில் கொடு போய் வைத்தான் என்றது –
-இதற்கு எதிர்த்தட்டான த்வேஷம் பண்ணிப் போந்தவனுக்கும் அவர்கள் பேற்றைக் கொடுத்தான் என்றது –
அவன் படியில் குறையாத ஜகத்தை அடியே தொடங்கி உண்டாக்கினான் என்றது –
தன்னுருக் கெடுத்து வேற்றுரு கொண்டு நஷ்டமான ஜகத்தை உத்தரித்தான் என்றது –
வடிவை மாறாடினான் அன்றியே ஸ் வ பாவத்தையும் மாறாடினான் என்றது –
தேவதாந்த்ர ஸ்பர்சத்தையும் பாராதே ரஷித்த படியைச் சொல்லிற்று –
யோனித்வத்தை ஏறட்டுக் கொண்டு தமப்பன் பகையாக பரிவனாய் உதவின படி சொல்லிற்று –
இவை எல்லாம் தன் ஸ்வ தந்தர்யம் கிடக்கச் செய்தவை-ஆஸ்ரித பரதந்த்ரனாய் ரஷித்த படியைச் சொல்லிற்று –
சர்வ துக்கத்தையும் போக்கி ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை கொடுக்கும் மஹா உபகாரத்தை சொல்லிற்று –
இப்பாசுரமே சுத்த ஸ்வ பாவனாக்கி விடும் என்கிறது-


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: