திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –7-4–

அறக் கொடியவாய் பொறுக்க ஒண்ணாத வியசனங்கள் வந்த இடத்திலும் தன்னை விடாதே புறம்புள்ள பற்று எல்லாம் விட்டு
தன்னைக் காணப் பெறாமையாலே மிகவும் அவசன்னரான இவர் தசையை அனுசந்தித்து அருளி
இவர் நம்மை அனுபவிக்கவும் ஆளாக மாட்டார் -இவருக்கு மிடுக்கை யுண்டாக்க வேணும் -என்று இவர் தாம்
வளவேழ் உலகில் ஆழ்வார் -நம் விஜயம் கண்டால் உகப்பார் -என்று தான் க்ரமத்தாலே பண்ணின அபதானங்களை
ஒரு காலே காட்டி அருளக் கண்டு தரித்த ஆழ்வார் -திரு உலகு அளந்து அருளுகை தொடக்கமான அவனுடைய விஜய பரம்பரையை
-மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையால் சமகாலத்தில் அனுபவித்தவர்களை போலே அனுபவித்து எம்பெருமானை ஏத்தி ஹ்ருஷ்டராகிறார் –
அங்கனம் இன்றிக்கே
-பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்றும் -கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் -என்று
தம்முடைய தோல்வி பிரஸ்துதம் ஆகையால் எதிர்தலையில் வெற்றியை அனுசந்தித்து
அத்தோடு சேர்ந்த இல்லாத விஜயங்களை பேசி அனுபவிக்கிறார் என்னுதல் –

———————————————————-

திரு உலகு அளந்து அருளின படியை  – அபதானத்தை –அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –

ஆழி  எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

ஆழி எழச் -மஹா பலி பக்கல் அர்த்தியாய்ச் சென்று அபேக்ஷித்து கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளின போது -அவ்விடத்தில் என்ன தீங்கு வருகிறதோ -என்று ஓக்க கிளர்ந்த படி -ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐஞ் நூற்று காதம் சிறகடிக் கொள்ளும்-என்று பிள்ளை அருளிச் செய்வர்
சங்கும் வில்லும் எழத்-தூசியிலே திரு வாழி யாழ்வான் ஏறின வாறே -அநந்தரம் திவ்யாயுதங்கள் ஓக்க எழ -த்ரி விக்ரம க்ரமாக்ரந்தத்ர லோக்யஸ் ஸ்ப்புரதாயுத
திசை-வாழி எழத் -திவ்யாயுதங்கள் அவனுக்கு பரிந்து எழ -அவனுக்கும் இவற்றுக்கும் பரிந்து சர்வதோதிக்கமாக அனுகூலருடைய மங்களாசாச த்வனி எழ –சங்கைஸ் ஸூ ராணாம் திவி பூதலஸ் த்தைஸ் ததா மனுஷ்யைர்க்கக நேச கேஸரை ஸ் துத-க்ரமான்ய ப்ரசஸார ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –ஏத்த ஏழ் உலகும் கொண்ட -இடக்கை வலம்புரி நின்று ஆர்ப்ப -என்கிறபடியே வலம் புரி முழங்க -திரு வாழி அழல் உமிழ
தண்டும் வாளும் எழ -புறப்பட்டோம் என்று மற்றும் இல்ல திவ்யாயுதங்களும் கிளர
அண்டம்-மோழை எழ -தரணி தல முழுதும் தாரகையின் இன்னுலகும் தடவிய தன் புறமும் விம்ம வளர்ந்தவன் -என்று தன்னுடைய வளர்த்திக்கு அண்டாந்தரம் இடம் போராமையாலே -அண்ட புத்தி பிளந்து -ஆவரண ஜலம் உள்ளே வந்து புகுர- மோழை-குமிழி
முடி பாதம் எழ -முடியும் பாதமும் ஓக்க எழ
அப்பன்-என் நாயகன் பண்ணின உபகாரமே-என்கிறார் –
ஊழி எழ -மஹா பலியால் உபத்திரவம் பட்ட காலம் போய் நல்ல காலம் வந்து தோற்றும் படியாகவும்
உலகங் கொண்ட வாறே.–உலகை அளந்து கொண்ட பிரகாரம் -தேவாஸ் ஸ்வ ஸ்த்தா நமா யாந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா நபயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்

————————————————–

தன்னை அர்த்தியாக்கி இந்திரியாதிகள் கார்யம் செய்த படி சொல்லிற்று -அவர்களுக்காக உடம்பு நோவ கடல் கடைந்த படி சொல்லுகிறது –

ஆறு  மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர-வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்-மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –
கடலை தாழியாகக் கொண்டு -மலையை மத்தாகக் கொண்டு -வா ஸூ கியைக் கயிறாகக் கொண்டு -ஆயிரம் தோளால்-என்கிறபடியே தோளும் தோள் மாலையுமாய் -ஒரு மஹா பாஹு கடை கிற போது -கடல் கொந்தளித்து ஸஹ்யங்களை நோக்கி ஆறு எதிரே ஓடு கிற ஓசையும் -வா ஸூ கியினுடைய உடம்பைச் சுற்றி மலையைத் தேய்கிற த்வனியும் -அரவு -வாஸூகி / ஊறு -உடம்பு / சுலாய் -சுற்றி / வாஸூகியினுடைய உடைலைச் சுற்றி கடைந்த போதை சர சர என்கிற த்வனியும் –
கடல்-மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –மந்த்ரத்தை கொடு புக்கு நட்டுத் திரித்த போது -கீழ் கடல் மேல் கடலாய் கிடாய்ப்பாய்ச்சல் போலே திரையோடு திரை தாக்கி கிளறுகிற ஒலியும்
அப்பன்-உபகாரகன்
சாறு பட -கடலில் நீர் கோதாம் படி பிரயோஜனமாக அம்ருதம் உண்டாக –சாறு என்று உத்சவமாய் -தேவ ஜாதிக்கு உத்சவம் உண்டாம்படியாக என்னுதல் —சாறு பட -விழவு பட -என்றபடி -நீரிலே ரசமான பசை பட என்னுதல் -உத்சவமாம் படி என்னுதல்
அமுதம் கொண்ட நான்றே.–அம்ருத மதனம் பண்ணின காலத்தில் இவை எல்லாம் உண்டாயிற்று –

——————————————————————

மஹா வராஹ வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் –

நான்றில  ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3-

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
பூமி பிரளயம் கொள்ள மஹா வராஹமாய் பூமி உத்தரணம் பண்ணின போது –நான்றில-சலித்தது அல்லை / ஏழ் மண்ணும் -சப்த த்வீபமும் /தானத்தவே -ஸ்வ ஸ்தானஸ்த்தானங்கள் ஆயிற்றன -ஒரு வியாபாரத்தால் செய்ததாய் இருக்கை அன்றிக்கே ஸ்வ சங்கல்பத்தாலே செய்தால் போலே இருக்கை -/ பின்னும்-அதுக்கும் மேலே –
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்-
பூமிக்கு ஆதாரமான குல பர்வதங்களும் சலியாதே ஸ்தானஸ்த்தமாயிற்றன-இவை திண்ணியதாகையாலே இப்படி செய்யலாம்
நான்றில ஏழ்கடல் தானத்தவே -த்ரவத்ரயமான சமுத்திரமும் சலியாதே ஸ்தானஸ்த்தானமாயிற்றன
அப்பன்-நஷ்ட உத்தாரணம் பண்ணின உபகாரகன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–மாறுபாடு உருவக்குத்தி இடந்து எறட்டு-பந்தை எறட்டு செண்டிலே ஏற்றால் போலே இருந்தது திரு எயிற்றிலே ஏற்ற போது –

—————————————————————

பிரளய காலத்தில் பூத பவ்திகங்களோடு கூடின ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷித்த படியை சொல்லுகிறார்  –

நாளும்  எழநிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-

நாளும் எழ-கால வ்யவஸ்தை பேர -வியவச் சேதகரான ஆதித்யாதிகள் போனவாறே காலா காஷ்டாதி ரூபமான வியவச் சேதமும் போயிற்றது என்கை
நிலம் நீரும் எழ -காரணமான பூமியும் ஜலமும் போக
விண்ணும்-கோளும் எழ –ஆகாசமும் க்ரஹங்களும் போக
எரி காலும் எழ -அக்னியும் வாயுவும் போக
மலை-தாளும் எழச் -பூமிக்கு ஆதாரமான மலைகள் வேரோடு பறித்து விழ
சுடர் தானும் எழ -அனுக்தமான நக்ஷத்ராதி தேஜோ பதார்த்தங்கள் போக
அப்பன்-பிரளய ஆபத்சகன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–திரு வயிற்றிலே புகுரும் நெருக்கத்தால் வந்த ஆரவாரம் உண்டாம் படி
ஊளி -சப்தம் -உறிஞ்சின ஓசை என்னவுமாம் –எழ -என்றது தோற்ற என்றபடி -லோகத்தை உண்ட படி –

——————————————————————

பாரத சமர வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார்-

ஊணுடை  மல்லர் தகர்த்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-

ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி -பலகரமான த்ரவ்யங்களை மிகவும் புஜித்து மிடுக்கரான மல்லர் நெரித்து விழுகிற ஒலி
மன்னர்-ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி -ராஜாக்களுடைய ஆண் பிள்ளைத் தனத்தை உடைத்தான சேனை -என்னுதல் -பீஷ்மாதிகளை ரக்ஷகமாக உடைத்தான சேனை என்னுதல் –கிருஷ்ணன் பிரதிபக்ஷத்தில் ஆனான் என்று நடுங்கி அலமாக்கிற த்வனி
விண்ணள்-ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி -சுவர்க்கத்தில் மதிப்பராக எண்ணப்  பட்ட தேவர்கள் -தெரிவரிய சிவன் பிரமன் அமரர் கோன் என்கிறபடியே ப்ரோக்ஷபூதர் ஆனவர்கள் -கண்ணுக்கு விஷயமாய் ஸ்துதிக்கிற த்வனி -ஸ்ரீ வேத வியாச பகவான் த்ருதராஷ்ட்ரனை யுத்தம் கண்டு இருப்பாயா உனக்கு கண் தர என்ன -நான் பொறுக்க மாட்டேன் என்ன சஞ்சயனுக்கு கண் கொடுத்து கண்டு சொல் என்றான் –
அப்பன்-பூ பார நிரஹரணம் பண்ணின உபகாரகன் –
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–தர்ச நீயமான பாரதம் -அதாவது முட் கோலும் சிறு வாய்க் கயிறும் சேனா தூளியுமாய் சாரத்த்ய வேஷத்தோடே நின்ற நிலை –கையறை போழ்தே–கையும் அணியும் வகுத்து திரிகிற சமயம் தொடங்கின போது என்றுமாம் –

————————————————————-

ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது வான ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அனுபவித்து  அருளிச் செய்கிறார் –

போழ்து  மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6-

போழ்து மெலிந்த புன் செக்கரில்-ஸந்த்யா வேளையிலே நாள் முற்று சந்தையாய்ச் செவ்வானம் மறைவதற்கு முன்பே -அவன் கொண்ட வரத்தில் புகாத காலத்திலே –
வான் திசை-சூழும் எழுந்து உதிரப் புனலா-ஆகாசமும் திக்குகள் எங்கும் ரக்த ஜலமாக -ஸந்த்யா ராகத்தில் காட்டில் ரக்தமானது எல்லாவிடத்தையும் சிவப்பிக்க என்றுமாம்
மலை-கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் -மலையை கீழே இட்டு மேலே இருந்து அத்தை பிளக்கிற ஸிம்ஹம் போலே இருந்தது என்னுதல் -மலையை இரண்டு கூறாக கிழித்துப் பிளந்த ஸிம்ஹம் போலே என்னுதல் –கீழ்ந்து பிளந்த ஸிம்ஹம் –
அப்பன்-பிதா எதிராக வந்து உதவின உபகாரகன் –கீழில் பாட்டில் பந்துக்கள் பகையாக வந்து உதவின படி சொல்லிற்று -இதில் ரக்ஷகனான பிதா பகையாக வந்து உதவின்படி சொல்லுகிறது -பந்துக்கள் பகையாக வந்து உதவினவன் -ஜனகன் பகையாக வந்து உதவினவன் -ஆத்மை வரி புராத்மநா -என்று தனக்குத் தானே பாதகனான அவ்வளவிலும் வந்து உதவுமவன் -ஆனபின்பு சர்வரையும் விட்டு அவனையே யன்றோ பற்ற அடுத்து
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே-தன் சீற்றத்தைக் காட்டி மிகவும் துக்கத்தை விளைத்து அசூரனைக் கொன்ற படி -நரசிம்ஹத்தின் தோற்றத்தில் சவகல்பனானான் -பின்னை உடலைக் கிழித்து பொகட்டான் -அவன் வீயத் தோன்றிய –சிங்கப் பிரான் -என்ன கடவது இ றே-

——————————————————————-

ராவண வத வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

மாறு  நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-

மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்-சாரிகை வருகிற கடுப்பாலே எதிராக நிரைத்து இரையா நிற்கிற சர ஸமூஹத்தாலே -ஓர் அம்பை விட்டால் அதற்கு எதிராக மற்றை யம்பை விடுகையாலே திருச் சரங்கள் தன்னிலே முட்டி த்வநிக்கிற படி
நூறு பிணம் மலை போற் புரளக் -இனமான நூறு நூறாக பிணங்கள் மலை போலே புரண்டு கிடக்க -அநேக பிணங்கள் என்றுமாம்
கடல்-ஆறு மடுத்து உதிரப் புனலா -அப்பன்-நீறு பட இலங்கை செற்ற நேரே-அபூர்ய மாணமசல ப்ரதிஷ்ட்டம்-என்கிறபடியே அவிக்ருதமான கடல் ரத்தத்தால் நிரம்பி ஆறுகளில் எதிரே மடுத்து ரக்த ஜலமாக -ரக்ஷகனானவன் லங்கை பஸ்மாமாம் படி அழித்த நேர்பாடு என்னுதல் -நேரே என்று ஐஸ்வர்யமான ப்ரபாவத்தாலே அன்றிக்கே செவ்வையான ஆண் பிள்ளைத் தனத்தால் என்னுதல் -க்ருதரிம யோதிகளான ராக்ஷஸரைத் போல் அன்றிக்கே நேர் போராக என்னுதல்-

——————————————————–

பாண விஜயத்தை அனுசந்திக்கிறார் –

நேர்  சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-

நேர் சரிந்தான்-தோற்றத்தில் கெட்டுப் போனான் என்னுதல் -முதுகிட்டுப் பிழைத்து போனான் என்னுதல் –
கொடிக் கோழி கொண்டான் -மயிலை த்வஜமாக யுடையவன் -இளமறியான தேவ சேனாபதி யாகையாலே ஸூ ப்ரஹ்மண்யன் தூசியிலே கெட்டுப் போனான் என்கை
பின்னும்-நேர் சரிந்தான் எரியும் அனலோன்-அவன் கெட்டுப் போன பின்பு ஜ்வலியா நின்றுள்ள அக்னி வந்து தோற்றி கேட்டு ஓடினான் –
பின்னும்-நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் -நாற்பத்து ஒன்பது அக்னியும் கேட்டு ஓடின பின்பு த்ரி நேத்ரனான ருத்ரன் முதுகிட்டான்-மகன் கொடியால் அகப்பட்டான் என்று கொடியை மறைத்த இடத்திலும் கண்ணை மறைக்க ஒண்ணாமையாலே அகப்பட்டு கெட்டு ஓடிப் போனான் -கண்ணை மறைக்க ஒண்ணாமை யாலே அகப்பட்டு கெட்டு ஓடிப் போனான் –தேவதாந்தரங்களை ரக்ஷகமாக பற்றினாரை-அவர்கள் எதிரி கையிலே காட்டிக் கொடுத்து தம் தாமைக் கொண்டு தப்பிப் போவார்கள் -என்கை
அப்பன்-நிருபாதிக ரக்ஷகன்
நேர் சரி வாணன் திண் தோள் -ரக்ஷகரானார் அளவு இது வானால் ரஷ்ய பூதன் ஆனவனுக்கு முதுகு காட்டிப் பிழைத்து போம் அது ஒழிய வேறு போக்கடி இல்லை இ றே -திண் தோள் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி என்று இருக்குமா போலே -தேவதாந்தரங்களைப் பற்றி தோள் வலி கொண்டாடி இருந்த படி –ருத்ரன் வர பலத்தால் திண்ணிதான தோள்
திண் தோள் கொண்ட அன்றே–உஷை பித்ரு ஹீனை யாகாமைக்காக தலை அறாதே தோளைத் துணித்து விட்டான்
கீழ் அசுரர்களை மார்விலே அம்பேற்று ஜெயித்த படி சொல்லிற்று -அவர்களுக்கு ஆபாஸ்ரயமாக வந்த தேவ ஜாதியையும் ஜெயித்த படி சொல்லிற்று இப்பாட்டில் –

————————————————————

பாணனை தமித்த -ஜெயித்த -அன்று தொடங்கி ஜகத் உண்டாயிற்று என்கிறார் -ஆதி ஸ்ருஷ்ட்டி ஆகவுமாம் –

அன்று  மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9-

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்-பூத பஞ்சகங்கள் என்ன -பூமிக்கு ஆதாரமான மலை என்ன -இவை தொடக்கமாக –
அன்று சுடர் இரண்டும்-சந்த்ர ஸூ ரியர்களும் உண்டாயிற்று
பிறவும்-மற்றும் உண்டான நக்ஷத்ர க்ரஹாதி தேஜோ பதார்த்தங்களும்
பின்னும்-அன்று மழை உயிர் தேவும் மற்றும் -மேகத்தையும் -வர்ஷ ஜலத்தால் ஜீவிக்க கடவ பிராணிகளையும் -வருஷத்துக்கு உத்பாதகரான தேவர்களையும் -மற்றும் அனுக்தமான பதார்த்தங்களையும் அன்று உண்டாக்கினான் –
அப்பன்-சர்வ உத்பாதகன் ஆனவன் –
அன்று முதல் உலகம் செய்ததுமே.–அன்று முதல் ஜகத்தை உண்டாக்கிற்று -வாணனை தோற்பித்த அன்று முதல் என்னுதல் -ரூப நாமங்களை இழந்து சதேவ -என்கிற தசையில் பஹுஸ்யாம் -என்று சங்கல்பித்த அன்று முதல் என்றுமாம் –

——————————————————–

கோவர்த்தன உத்தாரணம் பண்ணிச் செய்து அருளின -ரக்ஷையை -விஜயத்தை -அனுபவிக்கிறார்-

மேய்  நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொ ரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10-

மேய் நிரை கீழ் புக -நினைவு இன்றியே வர்ஷிக்கப் புக்கவாறே மலையை எடுத்த போது மேய்க்கிற பசுக்கள் வாயில் புல்லோடு கீழே புக்கு ஒதுங்கவும்
மா புரளச் -கீழது மேலதாக மலையைப் பிடிக்கையாலே மலையில் ஆனை தொடக்கமான மிருகங்கள் கீழே புரண்டு விழவும்
சுனை-வாய் நிறை நீர் பிளிறிச் சொ ரிய -சுனை வாய் அளவும் நிறைந்த நீர் ஆசைப்பட்டுச் சொரியவும்
இன-ஆநிரை பாடி -அதி சம்ருத்தமான திருவாய்ப்பாடி -கற்றுக் கறவைக் கணங்கள் -என்கிறபடியே ஒரு திறத்தில் பசு ஒழுங்கையும் உடைய வூர்
அங்கே ஒடுங்க -பஞ்ச லக்ஷம் குடியில் உள்ளாரும் மலையின் கீழே ஒதுங்கவும்
அப்பன்-ஆபத்சகனான உபகாரகன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–மலையை எடுத்து நாசகரமான மழையைக் காத்தான் -பசுக்கள் பக்கலிலும் பெண்கள் பக்கலிலும் கிருஷ்ணன் கிருபை பண்ணுகைக்கு ஹேது -அஞ்ஞத்தையும் பாரதந்தர்யமும் –

——————————————————————-

நிகமத்தில் எம்பெருமானுடைய விஜயங்களைத் தொடுத்த இத்திருவாய் மொழியை சஹ்ருதயமாக கற்பார்க்கு இது தானே விஜயங்களைக் கொடுக்கும் என்கிறார் –

குன்றம்  எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்-ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களிலே தம்மையும் அந்நிய தமராக நினைத்து இருந்த ஆழ்வார் அருளிச் செய்த இது -மலையை எடுத்த அன்று மலைக்கு கீழே ஒதுங்கினவர்களை போலே சம்சாரத்துக்கு அஞ்சி கிருஷ்ணன் திருவடிகளிலே ஒதுங்குமவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அச் செயலுக்கு தோற்று அடிமை புக்கவர் ஆயிற்று இவர்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை-வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே-
சர்வேஸ்வரன் விஜயங்களை சேராத தொடுத்த இவை பத்தும் -ஆதரித்து கற்பார்க்கு இதில் சொல்லுகிற விஜயத்தை கொடுக்கும் -இச் சேதனனுக்கு விஜயமாவது -சர்வேஸ்வர விஜயம் இ றே -அதுவே இ றே இவருக்கு புருஷார்த்தமும் -சம்சார விஜயத்தை கொடுக்கும் என்றுமாம் –
நன்றி புனைந்த– சர்வேஸ்வர விஜய ரூபமாய் ஆத்மாவுக்குப் புருஷார்த்தமுமாய் இருந்த இத்தை தொடுத்த என்றபடி


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: