திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –7-2–

திருவேங்கடமுடையான் திருவடிகளிலே பிராட்டி புருஷகாரமாக சரணம் புக்க இடத்திலும் ஸ்வ அபேக்ஷிதம் பெறாமையாலே
மிகவும் அவசன்னராய் ஆனதுக்கு மேலே -தமக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்களான விஷய இந்திரியாதிகளுடைய ஸ்வபாவத்தை நிரூபித்து கலங்கினவர்
வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -அரங்கத்து அரவின் அணையான் -என்று திருவேங்கடமுடையான் வந்து சாய்ந்து அருளின இடம் ஆகையால்
-இவ்வார்த்தி தீரலாம் என்று பெரிய பெருமாள் திருவடிகளிலே விழ -அவரும் முதலிலே தம்முடைய கார்யம் நமக்கே பரம் என்று சமர்ப்பித்தராகில்
-நாமும் அத்தை செய்யக் கடவோமாய் -இவரை இங்கே வைத்துக் கொள்ளக் கடவ காரியமும் கொண்டு க்ரமத்தாலே இவர் அபேக்ஷிதம் செய்கிறோம்
என்று ஆறி இருந்தோம் -இந்திரியம் பாதகங்கள் ஆகாத படி பல் வாங்கின பாம்பு போலே தன் கார்யம் செய்யாத படி பண்ணி இங்கே
தம்மை நிரந்தர அனுபவம் பண்ணும் படி பண்ணினோம் -அந்த க்ரமத்தை பொறுக்க மாட்டாதே த்வரியா நின்றார்
-இவரை எங்கனம் பரிஹரிப்போம் என்று சிந்தித்து அருளா நிற்க -அத்தை அனுசந்திக்க ஷமர் அன்றிக்கே தம்மை ஒரு விசேஷ கடாக்ஷம் பண்ணி
அருளிற்றிலராக கொண்டு அத்யந்தம் அவசன்னராய்–தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்
பெரிய பெருமாளோடே ஸம்ஸலேஷித்து விஸ்லே ஷித்தாள் ஒரு பிராட்டி -விஸ்லேஷ வியாசனத்தோடே மிகவும் நோவு பட்டு
-விழுவது எழுவதாய் கண்ண நீர் வெள்ளமிட அழுதும் க்ருதாஞ்சலியாயும் -பரவசையாய் மோஹித்தும் உணர்ந்தும் அவருடைய
அசரண்ய சரண்யாத்வாதி குணங்களையும் அழகுகளையும் நினைத்தும் அவற்றைப் பேசியும் -அக்ரமமாக எல்லா தசைகளும் வந்து
தலை காட்டி நோவு படுகிற இவள் தசையை அனுசந்தித்து மிகவும் நோவு பட்ட திருத் தாயார் -ஏதேனும் தசையிலும் அத்தலையிலே அறிவித்து
பரிஹரிக்கும் குடியாகையாலே பெரிய பெருமாள் திருவடிகளிலே இவளை பொகட்டு -இப்படியே உம்மை ஆசைப்பட்ட
இவள் திறத்து  அருள நினைத்தது என் என்று அதிதாருண த்வனியாக மிகவும் கூப்பிடுகிறாள் –

—————————————————————-

இப்பிராட்டியுடைய பேச நிலம் இன்றிக்கே இருக்கிற தசையைப் பெரிய பெருமாளுக்கு அறிவித்து இவள் திறத்து செய்து அருளக் கடவது என் என்கிறாள் –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்-உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;-கண் உறங்காமையாலே போது போக்கு அரிதாய் -அதினாலே கண்ண நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று -இவ்வாற்றாமையில் அவன் வாராது ஆழியான் -என்று அத்யவசித்து -வரும் போது காண்கைக்கு கண்ண நீர் பகையாக ஒண்ணாது என்று அத்தை மாற்றப் பாரா நின்றாள் -கடலைக் கையாலே இறைக்கத் தொடங்குவாரைப் போலே இது என்ன சாஹசம் என்கிறாள் -கடல் கொண்ட கண்ணீர் அறிவி செய்யா நிற்கும் இ றே -இவள் கண்ணும் கண்ண நீரும் தாயாருக்கு சுபாஸ்ரயமாய் யாயிற்று இருக்கிறது -கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் –இவள் தர்சன விரோதி என்று மாற்றப் பார்க்கிறாள் இத்தனை –
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;-வந்து தோற்றும் படி – -கூரரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் என்று சொல்லக் கருதி முடியச் சொல்ல மாட்டாமையாலே -விடாய்த்தார் ஹஸ்த முத்திரையால் தண்ணீர் வேண்டுமா போலே அஞ்சலியாலே குறையும் தலைக் கட்டா நின்றாள் -இன்னார் என்று அறியேன் -என்று அறிவு அழிப்பனவும் இவை -செரு ஒண் சக்கரம் சங்கு என்று அறியப்பண்ணும் அவையும் இவை –சங்கு சக்கரம் என்று இயல் ஆனாலோ என்று பிள்ளை திரு நறையூர் அரையர் -பஹு வசனத்துக்கு பொருள் கண்டிலோமீ என்ன -இசையில் தூக்கின இடத்து இரண்டும் இசைந்து கிடைக்கையாலே சொல்லிப் போருகிற படியே சங்கு சக்கரங்கள் என்ன அமையும் -என்று ஆப்பான் நிர்ணயித்தார்
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;-இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் -தாமரைக் கண்களால் நோக்காய் -என்கிறபடியே திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்று உபக்ரமித்து -ஹஸ்த சேஷ்டையாலும் தலைக் கட்ட மாட்டாதே தளரா நின்றாள் -ராமம் ரக்தாந்த நயன மபஸ்யந்தீ ஸூ துக்கிதா -இங்கனம் தளரலாமோ-தத் தஸ்ய என்று இருக்க வேண்டாவோ என்ன –
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ -அநந்தரம் வரக் காணாமையாலே
இரு நிலம் கைதுழா இருக்கும்;-இம் மஹா பிருத்வி எல்லாம் கைகளால் துழாவா நின்றாள் இ றே -பூமிப பரப்பு அடங்க ஒரு பாஜனத்துக்கு உட்பட்ட சந்தனம் போலே யாயிற்று இவள் கைக்கே படுகிறது -சர்வ சக்தியே வேண்டா வாகாதே பூமியை அளக்க -ஆற்றாமையாலும் அளக்கலாம் ஆகாதே –
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!-ஜல சர தத்துவங்களும் கூட ஹர்ஷத்தாலே களிக்கும் படியான கோயிலிலே உள்ளவனே -செங்கயல் -இளமையாலே சிவந்த புகரை யுடைய கயல்
இவள் திறந்து –அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இ றே இவள் கிடக்கிறது -ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்
திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –

—————————————————————-

இப்பெண் பிள்ளையுடைய தசை என்னாய் விடக் கடவது -என்கிறாள் –

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!-என்னும் -தாமரைக் கண் என்றே தளரும் -என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாகச் செல்லுகிறது -நீர் ஏறுண்டார்க்கு அந்நீரைத் தெளித்து ஆஸ்வசிப்பிக்குமா போலே -எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என் ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ இல்லையோ -கண்களால் பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ -சதா தரிசனத்தையும் பண்ண வேண்டாவோ -முதலிலே நானும் என் உடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று கண்ணாலே சொன்ன வார்த்தை ப்ரதிஜ்ஜா மாத்ரமாய் அமையுமோ -அது அர்த்தகிரியாகாரியாக வேண்டாவோ
கண்ணீர் மல்க இருக்கும்-அப்போதே நோக்கக் காணாமையாலே கண்ணீர் மல்கா நின்றது -கைகளால் இறைக்கும் என்கிற அளவு போய் செறிந்து இற்றுப் பாயும் அளவாயிற்று -சஞ்சார க்ஷமையும் அன்றிக்கே ஒன்றை அனுசந்திக்கவும் மாட்டாதே ஸ்தப்த்தையாய் இருக்கும் –
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!-என்னும்-
சிரமஹரமான கோயில் வாசத்தை நான் பெறுகைக்கு நான் என் செய்வேன் என்னா நின்றாள் -அவ்வலை ஏற்று வாயிலே கொண்டு போய் என்னைப் பொகடுகைக்கு நான் என் செய்வேன் -திருப் பொருநல் பிரிந்தார்க்கு நிலாப் போலே அஸஹ்யமாய் இருக்கிறதாயிற்று –என் செய்கின்றாய் என்றாள்-குளிர்ந்த நோக்கை நினைத்து –என்  செய்கேன்-என்கிறாள் செயல் அறுதியாலே
வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்-இவள்தனக்கு அங்கே போய்ப் புகுகைக்கு அபேக்ஷையும் உண்டாய் -சகல தாபமும் ஆறும் படி சிரமஹரமான தேசமாய் இருக்க -அது பெறாமையாலே நெடு மூச்சு எறியா நின்றாள் -வெவ்விதாக பலகால் நெடு மூச்சு எறிந்து-அவ் உஷ்ணத்தால் உருகா நிற்கும் -தஹந்தீமிவ நிச்வாசைர் வ்ருஷான் பல்லவ தாரிண-ச்சேத நாதிகளுக்கு அநர்ஹமான ஆத்ம வஸ்து திரவ த்ரவ்யமாகா நின்றது
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்-இத் துக்கத்துக்கு அடியாக நான் முன்பு பண்ணின பாபமே உன்னுடைய வடிவைக் காட்ட வல்லையே -என் ஸ்வரூபத்துக்கு விரோதமாக அவனை இன்னாதாகாமே-உன்னாலே வந்தது -என்று நான் ஆறி இருக்கும் படி -அதின் கொடுமையை நினைத்து சொல்லா நிற்கும் என்றுமாம்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்-கர்ம அனுகுணமாக நான் நோவு படக் கண்டு உபேக்ஷித்து இருக்கை ஜல ஸ்தல விபாகம் இல்லாத உன்னுடைய உதார குணத்துக்கு சத்ருசமோ என்னும் -துக்க ஹேது வான பாபம் முன்னே நின்றாலும் அதுக்கு உயிர் இல்லாமையால் இன்னாதாகைக்கு பிராப்தி இல்லை -பிராப்தி உள்ள உனக்கு இவ்வளவில் முகம் காட்டாது ஒழியப் போருமோ-முன் செய்த வினையே முகப்படாய் என்ற இடம் -ஸ்வரூப ஞானம் அவிசதமானார் வார்த்தை –முகில் வண்ணா தகுவதோ-என்கிற இது -ஸ்வரூபத்தை உள்ள அளவு கண்டார் வார்த்தை -அசேதனமாய் அநீஸ்வரமாய் இருந்துள்ள க்ரியாகலாபம் பலப்ரதமாகா மாட்டாது -சர்வ நியாந்தாய் இருப்பான் ஒருவனுடைய ஹிருதயத்தில் நிக்ரஹத்தாலே பலம் என்று இருக்கை இ றே -அதாகிறது -த்வத க்ரே சரணா கதா நாம் பராபவ-என்றும் தோஷயத்யபி தஸ்ய ஸ்யாத் -என்று இ றே இத்தலையில் வார்த்தை –முன் செய்த என்கிற இடம் -பதினெட்டு ஒத்தாலும் சொன்ன வார்த்தை போலே இருக்கிறது –முகில் வண்ணா என்கிற இடம் -சரம ஸ்லோகம் போலே இருக்கிறது –இப்படி நான் உதாரனாய் இருந்தேனோ என்ன
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!-நிர் ஹேதுகமாக முன்பு ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதிகளைப் பண்ணினவன் அல்லையோ –ஸ்ருஷ்ட்டி யாதிகளில் யவ் கபத்யத்தை கர்ம அனுகுணம் என்ன ஒண்ணுமோ -அபு நா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தை பெறுகைக்கு அடியாய் இருபத்தொரு கனவியதொன்று சேதனன் தலையிலே கிடக்க வற்றோ –
என் கொலோ முடிகின்றது இவட்கே?-இவள் இடையாட்டத்தில் நீ செய்யப் பார்த்த படி என் என்னுதல் இவளுடைய தசை என்னாய் விடக் கடவதோ என்னுதல் -இவள் என்கிறது நீர் ரஷித்த ஜகத்துக்கும் -இவளுக்கும் உண்டான நெடுவாசி அறியீரோ -அநந்ய பரையாய்-அநந்ய கதியாய் -அபலையாய் இருக்கிற இவள் இடையாட்டத்தில் என் செய்து அருள நினைத்து அருளினீர் -என்கிறாள் –

———————————————————————-

இவள் இவ்வவஸ்தையை ப்ராப்த்தை யாகைக்கு-இவள் இடையாட்டத்தில் நீர் செய்தது என் என்கிறாள்  –

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-

வட்கிலள் இறையும் ‘–;-வட்கு -என்று லஜ்ஜை -இறையும் இலள் என்றது தாய் என்று பாராதே -சொல்லக் கடவதல்லாத வார்த்தையை-இவளுக்கு நிரூபகமான நாண் மடம் அச்சம் என்கிற இவை இல்லாமையால் நிரூப்பியமான தர்மி லோபம் பிறந்தது என்கை -இவளுக்கு லஜ்ஜை குடி போன படி நீ அறிந்த படி எங்கனே என்னில் –மணிவண்ணா!’ என்னும்-தாயாரான என் முன்னே சம்ச்லேஷ அபேக்ஷை தோற்றும் படி பர்த்ரு நாம க்ருஹணம் பண்ணா நின்றாள் -காமினி யானவள் வடிவு அழகிலே இ றே ஈடுபடுவது -அது தோற்ற வாய் விடா நின்றாள் -அதிருஷ்ட பூர்வ வ்யஸ நா ம்ருது சீலா மனஸ்வி நீ தேனை துக்கேன ருததீ நைவ மா கிஞ்சி தப்ரவீத் -என்று எல்லா தசையிலும் வாய் விடக் கடவது அன்றிக்கே இ றே இருப்பது
வானமே நோக்கும் -மணி வண்ணா என்கிற ஆர்த்த த்வனி கேட்டு இருக்க ஷமன் அல்லன் -த்வனி வழியே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றினால் போலே தோற்றி அருளும் என்று ஆகாசத்தையே பார்க்கும் -பரமாபாதமாபன்ன-என்கிற வசனத்துக்கு மேலே இ றே இவளுடைய தசை —
அங்கு வந்து தோற்றக் காணாமையாலே –மை யாக்கும்-மயங்கா நின்றாள் -அறிவு கெடா நின்றாள் -பிரபல பிரதிபந்தகங்கள் உண்டானால் வர போமோ -நீ அங்கனம் அழிகிறது என் என்ன
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட-ஒருவனே!’ என்னும்-நான் வரப் பார்த்தால்-பிரதிபந்தகம் உண்டு அத்தனை போக்கி நீ வரப் பார்த்தால் -நிவாரகர் உண்டோ – உட்கு -என்று மிடுக்கு -பிரபலமான அசுர வர்க்கத்தை நிச்சேஷமாக முடித்த ஏக வீரன் என்னா நின்றாள் -சேஷிக்கில் பின்பும் ஆஸ்ரிதற்கு நலிவு வரும் என்று நிச்சேஷமாக முடிக்கை -பிரபல பிரதிபந்தகங்களை அழிக்கைக்கு சஹகாரி வேணுமோ -உன்னால் அழிக்க ஒண்ணாத விரோதி என்னால் அழிக்கப் போமோ
உள் ளுருகும்;-அப்போது செய்யக் காணாமையாலே உள்ளுடையும் -நீர்ப்பண்டம் போலே சிதிலம் ஆகா நின்றாள் -உருகா நிற்கும் அத்தனையோ -அதீந்த்ரிய வஸ்துவை காண என்றால் காண முடியுமோ என்ன -தன் தலையால் காண இழிவாருக்கு அன்றோ அவ்வருமை -நீ காட்டக் காண்பாருக்கு அவ்வருமை உண்டோ
‘கட்கிலீ! -உன்னைக் காணுமாறு அருளாய்--பாஹ்ய சஷூஸூக்கு அவிஷயமான நீ நான் உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும்
நசஷூஷா பஸ்யதி -என்கிறது தாம் தாமே காண இழிவாருக்கு -தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று அவன் தானே காட்டும் அன்று அவ்வருமை இல்லை -சிலருக்கு சதா தர்சனம் பண்ணைக் கொடுத்திலையோ – ‘கட்கிலீ! -கண்ணுக்கு இலீ என்றபடி -இப்படி அரிதான பொருளை நாம் சிலர்க்கு அருளிற்று உண்டோ என்ன
காகுத்தா! -ரூப ஓவ்த்தார்ய குணை பும்ஸாம் என்றும் ரூப சம்ஹ நனம் லஷ்மீம் என்றும் நாகரீகருக்கும் வான வாசிகளுக்கும் காட்டிக் கொடு திரிந்திலையோ-ஒரு கால் செய்தது கொண்டோ என்ன –
கண்ணனே!’ என்னும்;-ஆயாந்தம் புண்டரீகாக்ஷம் வீக்ஷ மாணா குருஸ் த்த்ரிய-என்றும் தாஸாம் ஆவிர்பூத் என்றும் இடைச்சிகளுக்கும் அகப்பட காட்டிக் கொடு திரிந்திலையோ -இரண்டு அவதாரமும் தீர்த்தம் பிரசாதித்ததே என்ன
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’-அவதாரங்களில் பிற்பட்டாரும் இழவாமைக்கு அன்றோ இங்கே வந்து சாய்ந்து அருளிற்று -திண்ணிய மதிள் என்னுதல் -திண்ணிய கொடி என்னுதல் -அவிழ்த்துக் காட்டாத கொடி என்கை -வருவோர் எல்லாரும் வாருங்கோள் -என்று உறுதியாக கொடி கட்டிக் கொண்டு அன்றோ கிடக்கிறது –
இவள் திறத் தென் செய்திட்டாயே–இவளுக்கு இவ்வளவான தசையை விளைக்கைக்கு நீ இட்ட மருந்து என் என்கிறாள் -அதாகிறது உன் முகம் தான் மாய மந்த்ரம் தான் கொலோ-என்று வடிவு அழகை காட்டுகை இ றே -இவள் கேட்க்கிறது என் எனில் அதுவாகில் அதுக்கு பிரதிகிரியையாக -த்ரை லோக்ய ராஜ்ஜியம் சகலம் ஸீதாயா நாப் நுயாத்க்கலாம் -என்கிற இவளை அவன் முன்னே நிறுத்தி இவள் பட்டது எல்லாம் அவனைப் படுத்துவாளாக நினைக்கிறாள் –

——————————————————————-

உம்மை ஒழிய ஜீவிக்க மாட்டாது இருக்கிற இவள் திறத்து செய்து அருள நினைத்து இருக்கிறது என் என்கிறாள் –

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;-ஸ்வாதீனம் இல்லாமையால் தோழிமார் இட்டு வைத்த காலும் கையுமாய் இருக்கும் –விரஹம் சந்தி பந்தங்களையும் குலைத்து சிதறிக் கிடக்கிற இத்தனை –
எழுந்துலாய்-இவ்வளவான தசையாய் இருக்கச் செய்தே அவியும் விளக்கு கிளம்பி அவியுமா போலே ஸ்வஸ்த்ரைப் போலே எழுந்து இருந்து உலாவா நின்றாள்
மயங்கும்-கிளம்பின சமனந்தரத்திலே அவியுமா போலே மயங்கா நின்றாள் –
கை கூப்பும்;-உணர்த்தி இன்றிக்கே இருக்க பூர்வ வாசனையால் கை கூப்பும் -மோஹித்த தசையிலும் தவிருகிறிலள் -மயங்கா நிற்கச் செய்தே யுணர்த்தி யுடையாரைப் போலே ஆயிற்று அஞ்சலி பண்ணுகிறது
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;-அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு -என்று ப்ரேமமே புருஷார்த்தம் என்று இருக்கிற இவள் -ப்ரேமம் போலே தண்ணிதாய் இருபத்தொரு இல்லை என்னா நின்றாள் -இது ரசிப்பது இவ்விஷயத்தின் உடைய லாப ஹேது வான போது இ றே -விஸ்லேஷத்தில் நலிவுக்கு உடலாகையாலே தண்ணிது என்கிறாள் -இது கட்டம் என்னும் காட்டில் இதுக்கு பரிஹாரம் பிறந்தது ஆகாமையாலே மூர்ச்சிக்கும் –
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;-சேர்ந்து குளிர்ந்த தண்ணீரை விடாயார்க்கு எட்டாத படி வைப்பாரை போலே -சிரமஹரமான வடிவைக் கொண்டு எனக்கு எட்டாதபடி இருக்கிறவன் என்னுதல் -கடல் போலே சகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி ஒன்றை ஓன்று நலியாத படி பரிஹரிக்கும் ஸ்வபாவத்தை நீ என் திறத்து கண்ணறையனாய் இரா நின்றாய் என்னுதல் -உனக்கு சீலாதிகளைச் சொல்லுகிற ப்ரமாணங்களும் அந்ருத்த பாஷணம் பண்ணுகின்றன-நீ நிர்க்கருணன் காண் என்னா நின்றாள் -நான் நிர்க்கருணன் இன்றிக்கே ஒழிவது என் செய்தால்-என்னில்
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ -என்று தொடங்கி -நடுவே இளைத்து –
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;-கையும் திரு வாழி யுமான சந்நிவேசமே யாயிற்று -இவள் நெஞ்சில் பட்டுக் கிடக்கிறது -வந்திடாய் -என்கிற இத்தையே ஆவர்த்தியா நின்றாள் -இவ்வார்த்தியில் பிற்பட்ட த்வனிகள் வெண்கல த்வனி போலே போலே ஓய்ஞ்சு செல்லா நின்றது -பிரதிகூல நிரசனத்தில் சர்வதோமுகமான வாயை யுடைய திரு வாழி யை பரிகரமாக யுடைய உனக்கு வரத் தட்டென்-என்னா நின்றாள் –மயங்கும் -வந்திடாய் என்கிற இது தானும் ஓவிற்று
சிட்டனே! -இப்படி ஸ்த்ரீ வதம் பண்ணி நீர் விசிஷ்டராய் இருக்க -பெண் பிறந்தார்க்கு அழகிதாக ஜீவிக்கலாய் இருந்தது -கிராமணிகள் குடிகளை புரியும் படி அநியாயங்களை பர்வர்த்தியா நிற்கச் செய்தே அத்யயநாதிகளை பண்ணுமா போலே –
செழுநீர்த் திருவரங்கத்தாய்!-சிரமஹரமான கோயிலிலே நில மிதியாலே தண்ணளி மிக்கு இருக்கிற நீர்
இவள் திறத்து -பேச்சுக்கு நிலம் இல்லாத படி நோவு பட்டக் கிடக்கிற இவள் திறத்து
என் சிந்தித்தாயே -நினைத்து இருந்தது என் –ஜீவிப்பிக்க நினைத்தீரோ -முடிக்க நினைத்தீரோ -இப்படிப்பட்ட ஆற்றாமையையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருக்கிறிலள் -அவன் நினைவாலே பேறு என்று இருக்கிறாள் -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்ன கடவது இ றே –

—————————————————————-

இவளுக்கு ப்ரதி க்ஷணம் பேதித்து ஒன்றோடு ஒன்று சேராது -வருகிற அவஸ்தா விசேஷங்களை விஜ்ஜாபித்து -இவளை இப்பாட்டு படுத்துகை தேவருடைய நீர்மைக்கு போருமோ என்கிறாள் –

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5-

சிந்திக்கும்-உம்முடைய ஸுந்தர்யாதி குணங்களையும் உம்மோட்டை சம்ச்லேஷத்தையும் நினைக்கும் –முன்பு இவ்வநுஸந்தானம் இன்றியே யாயிற்று இருப்பது -மோஹித்தவோ பாதி இதுவும் ஒரு படி விக்ருதி இருக்கிற படி -அப்போதே காணப் பெறாமையாலே
திசைக்கும்-மோஹிக்கும்
தேறும் -ஒரு ஹேது இன்றிக்கே இருக்க தேறா நின்றாள் -இது தானும் பயாவஹமாய் இருக்கிறதாய் யாயிற்று -மோஹம் செல்லா நிற்க அபேக்ஷிதம் பெற்றாரைப் போலே தேறுகை பயாவஹம் இ றே -சரம தசையில் பிறக்கும் தெளிவுக்கு அஞ்ச வேணுமே
கை கூப்பும்-தேவர் படிகளை நினைத்து ஈடுபட்டுக் கும்பிடும் -கீழே மயங்கும் -கை கூப்பும் -என்றது -இங்கே தேறும் கை கூப்பும் என்றது -அல்லாதது சஞ்சாரியாய் செல்லா நிற்க இது ஒன்றும் ஸ்திரமாக செல்லா நின்றது –ஸ்வரூப அனுபந்தியான தர்மம் ஆகையால் -நித்யாஞ்சலி புடா -என்ன கடவது இ றே -ஆற்றாமையாலே
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;-நீர் உம்முடைய செல்லாமை தோற்றக் கிட்டி வைத்து இவளுடைய அஞ்சலியை மறுக்கிறது என் –சேஷ பூதனுக்கு அஞ்சலியோபாதி இ றே சேஷி கிட்ட வந்து இருக்கை யாவது -பெருமாளே என்னா நின்றாள் –
வந்திக்கும்-செயல் அறுதியாலே பெருமாள் எழுந்து அருளி இருக்கும் படியை நினைத்து தண்டன் இடும் -வந்திகளுடைய கார்யம் ஆகையால் ஸ்தோத்ரம் பண்ணும் என்றுமாம் –இது ஒரு தோளே -தோள் மாலையே முறுவலே-என்று அன்யரைப் போலே புகழா நின்றாள் –
ஆங்கே மழைக் கணீர் மல்க-அத்தசையிலே கண்ண நீர் வெள்ளம் இட தண்டன் இட்டு கிடைக்கும் என்னுதல் -ஸ்தோத்ரம் பண்ணா நிற்கும் என்னுதல் –
‘வந்திடாய்’ -தன் ஆற்றாமை தோற்ற பிரானே வாராய் என்னும் –
என்றென்றே-ஒரு கால் அழைத்தால் வாராது ஒழிந்தால் பின்னையும் அத்தையே சொல்லும் அத்தனை -வேறு சில தான் சொல்லுமவள் அன்றே -அச் சொலவு தானே வெண்கலத்வனி போலே ஓய்ஞ்சு செல்லா நின்றது –
மயங்கும்;-அது தானும் போய் அறிவு கெடா நின்றாள் -வந்திடாய் என்றதுவும் இழக்க கிடாய் புகுகிறது -நினைத்த போதாக வரப் போமோ என்ன
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!-ப்ரதிஜ்ஜா சமகாலத்தில் தூணிலே வந்து தோற்றிற்று இல்லையோ என்கிறாள் -அஸூரர்களுக்கு பலம் வர்த்திக்கும் காலத்தில் அவனுடைய வரத்தில் புகாத காலத்தில் -அவுணன் உடல் -வர பலத்தால்-திரு வுகிருக்கு ஊட்டியாக வளர்த்த ஹிரண்யன் உடைய சரீரத்தை பிளந்தானே -நரஸ்யதார்த்த தநும் க்ருத்வா சிம்ஹஸ் யார்த்த தநும் ததா-என்று இரண்டு யோனியை ஒன்றாக்கி அவன் வரத்தில் புகாத வடிவாலே பிளந்தவனே–மத்தஸ் சர்வமஹம் சர்வம் -எனும் தெளிவுடையார்க்கோ உதவலாவது -மயங்கின இவளுக்கு உதவலாகாதோ -ஆணுமாய் மிடுக்கனுமாய் ஆனவனுக்கோ உதவலாவது -அப்பருவத்தில் அபலைக்கு உதவலாகாதோ -பிறரால் வரும் நலிவோ பரிஹரிக்கல் ஆவது -உன்னால் வந்தது பரிஹரிக்கல் ஆகாதோ -இவளுக்கு உதவும் இடத்தில் கால நியதி வேண்டா -உன்னை அழிய மாற வேண்டா -அவ்வளவேயோ
அலை கடல் கடைந்த ஆர் அமுதே!-பிரயோஜனாந்தர பரருமாய் -ஈஸ்வர அபிமானிகளும் ஆனார்க்கு நிரதிசய போக்யமான வடிவைக் கொண்டு ஷூபிதமான கடலைக் கடந்தவனே-இவளுக்கு கடல் கடைய வேணுமோ -கடல் கடைந்த வடிவைக் காட்ட அமையாதோ-ஒரு பிரணயிநியை லபிக்கைக்கு பண்டு கடல் கடைந்தவன் அல்லையோ
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த-தையலை மையல் செய் தானே!–தெளிவுடைய சிறுக்கனுக்கு உன்னை அழிய மாறி உதவினாய -ப்ரயோஜனாந்தர பரருக்கு உடம்பு நோவக் கடல் கடைந்தாய் -உன்னை அல்லாது அறியாத இவளை அறிவு கெடுத்து வைத்தாய் -உன் திருவடிகளைக் கிட்டி முடிய வேணும் என்று துணிந்து இருக்கிற இப்பெண்ணை என்னுதல் -உன்னைக் கண்டு உன் எதிரே முடிய வேணும் என்று பிராணனை தரித்து இருக்கிற இவளை என்னுதல் -நசாஸ்ய மாதா நபிதா நஸான்ய -மானஸ அனுபவமே அன்றி உன்னைக் கிட்டி பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணினேன் ஆக வேணும் என்று துணிந்து இருக்கிற இவளை என்னுதல் –மையல் செய்தானே –உன்னைக் காட்டாதே இவளை மதி கெடுத்தவனே –

——————————————————————-

இவள் இவ்வவஸ்தா பன்னையாய் இருக்க இவள் ஆர்த்தி தீர்த்து அருளாது ஒழிகைக்கு காரணம் என்னுடைய கர்ம விபாகம் -என்கிறாள் –

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’
என் பக்கல் அதி வ்யாமோஹத்தை பண்ணி என் மனஸை அபஹரித்தவனே -தன் மேன்மை பாராதே தாழ நின்று பணி மொழிகளை சொல்லி இழி தொழில்களை செய்து -தன் ஆற்றாமையை ஆவிஷ் கரித்து -ஸர்வேந்த்ரிய கந்தமான மனஸை அபஹரித்தவனே -என்னும் -தங்கள் இழவு தெரியாத படி இருந்து பிறர் நெஞ்சை அபஹரிக்கை இ றே ஸ்த்ரீத்வ மரியாதை –என் நினைவு அவன் நினைவாய் அத்தலை இத்தலை யாயிற்று என்கிறாள்
மா மாயனே!’ என்னும்;-சம்ச்லேஷ தசையில் ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடையவனே என்னும்
‘செய்யவாய் மணியே!’ என்னும்’-இதுவும் அந்த மாயன்களிலே ஓன்று -தாழ்வு தோற்ற வார்த்தை சொல்லத் தொடங்கி அதை தலைக் கட்ட மாட்டாதே ஸ்மிதம் பண்ணா நிற்கும் போதை திரு அதரத்தில் பழுப்பு -செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் யன்றி யான் அறியேன் என்னும் படி இ றே முறுவல் துவக்க வல்ல படி –மணியே -ஸ்மிதம் பண்ணும் போது திருமேனி எங்கும் ஒக்கப் பிறக்கும் எழிலும் குளிர்த்தியும் இருந்த படி
தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;-குளிர்த்திக்கு இவ் வடிவு அழகு தேடித் போக வேண்டாத படி தேசமே சிரமஹரமாய் இருக்கிற படி -சந்நிஹிதனாய் வைத்து எனக்கு உதவாது ஒழிவதே
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக அன்றோ திவ்யாயுதங்களை தரித்தது -காணவே எதிரிகள் மண் உண்ணும்படியான திவ்யாயுதங்களை தரித்து இருக்கிற நீ என் விரோதிகளை போக்கி முகம் காட்டாது ஒழிவதே என்கை
பைகொள்பாம் பணையாய்!-இவள் திறத் தருளாய் – ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ் வ பாவனான நீ -இவள் திறத்து கிருபை பண்ணுகிறது இல்லை
.ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணத்தை உடையனாய் ஜாதி ப்ரத்யுக்தமான மென்மை குளிர்த்தி நாற்றங்காலை உடைய திருவனந்த ஆழ்வானை படுக்கையாக உடையனாகை-நீரும் இவளுமாக இருக்கக் கடவ படுக்கை -இவள் தறைக்கிடை கிடக்க உமக்கு பொருந்துவதே
இவள் திறத்து பாடோடிக் கிடக்கிற இவள் திறத்து
அருளாய் -அருள் கொள்வார் தேட்டமான நீ அருள் பெற்றால் ஜீவிக்கும் இவளை இப்படி தறைக்கிடை கிடக்க இட்டு வைப்பதே
பாவியேன் செயற் பாலதுவே--பாவியேன் செயல் இடத்தது-இவள் பக்கலிலும் குறை இல்லை -உம்முடைய பக்கலிலும் குறை இல்லை -இருவருமான சேர்த்திபெற இருக்கிற என் பாபம் இ றே இதுக்கு ஹேது -மத்பாப மேவாத்ர நிமித்த மாஸீத்-

———————————————————————

ஆஸ்ரயங்களை அனுசந்தித்து பொறுக்கும் அளவிலே அன்றோ துக்கங்களை சுமத்துவது -இப்படி என்னை படுத்தலாமோ -என்னா நின்றாள் என்கிறாள் -ஆஸ்ரிதரை வாழ்விக்கையும் அநாஸ்ரிதரை நலிகையும் அன்றிக்கே இப்போது விபரீதமாயிற்றோ உம்முடைய படி என்னா நின்றாள் என்றுமாம் -இக் கோமளக் கொழுந்துக்கு கைம்முதல் ஒன்றும் இல்லாதார் பற்றினால் ரக்ஷிக்கும் நீர்மையை யுடையவள் சந்நிதியில் இது எல்லாம் பட வேண்டுகிறது என்னோட்டை சம்பந்தம் என்று மநோ ரதிக்கிறாள் –

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!-இடம் அறிந்து ஸூ க துக்கங்களை படைத்தவனே -பாலாவாக -ஸ்த்தாநே ஸ்த்தாநே யாக -பிரிந்தார் எல்லாரும் அனுபவிக்கும் இத்தை இவள் ஒருத்தியும் அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ -அங்கனம் இன்றிக்கே ஆஸ்ரிதர் வாழ்வும் அநாஸ்ரிதர் கெடும்படியாகவும் அன்றோ பண்ணி வைத்தது -தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமைகள் செய்யுமவன் அன்றோ –பண்டு கட்டின மரியாதையும் இல்லையோ இவளுக்கு -அபராதங்கள் கனத்து தம் தாமுக்கு என்ன ஒரு கைம்முதல் இல்லாதாரை விஷயீ கரிக்க கடவதோ என்னில்
பற்றிலார் பற்ற நின்றானே!-அபராதம் யாய் ஸூ க்ருத லேசமும் இல்லாத ஜெயந்தன் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ உம்முடைய நீர்மை –ச பித்ராச பரித்யக்த -கால சக் கரத்தாய்! -விஷயீ கரிக்க காலமாக வேணுமே என்ன -கால தத்வம் நீ இட்ட வழக்கு அன்றோ -ஆஸ்ரிதர்க்காக பகலை இரவாக்கினவன் அன்றோ -அங்கனம் அன்றிக்கே பிரதிபந்தகமும் உண்டு காணும் என்ன -ப்ரதி பஷத்துக்கு ம்ருத்யுவான திரு வாழி கையிலே இருக்க பிரதிபந்தகம் உண்டோ -நாம் அஸந்நிஹிதர் அன்றோ என்ன –
கடலிடங் கொண்ட-கடல்வண்ணா! -நீ எங்களை காலம் பார்த்து அன்றோ கிடக்கிறது –ஒரு கடல் கடலிலே சாய்ந்தால் போலே அணித்தாக திருப் பாற் கடலிலே சாய்ந்தில்லையோ-அவ்வளவு வர வல்லார்க்கே என்ன –
கண்ணனே!’ என்னும்;-அசக்தரான இடையர்க்கும் இடைச்சிகளுக்கும் கிருஷ்ணனாய் வந்து உதவிற்றிலையோ -நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரீம் -அது தப்பிற்று இ றே என்ன –
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’என்னும்’-மத்ஸ்யாதிகளும் தம் தாமுடைய தாரகாதிகள் இழவாத படியான கோயிலிலே நித்ய சந்நிஹிதன் அல்லையோ -என்னும் -உம்மால் அல்லது தரிக்க மாட்டாத படி இவள் இப்படி படக் கடவளோ-ஜலான் மத்ஸ்யா விவோத்ருதவ்-என்று இருக்குமவள் இ றே இவள் –
என் தீர்த்தனே!’ என்னும்;-புறம்பு உள்ளாரோடும் பொருந்தப்படி யாக்கின சுத்தி யோகத்தை சொல்லுதல் –உன்னைத் சொல்லிக் கூப்பிடும் படி பண்ணினவன் என்னுதல் -தண் புனல் என்று புனல் பிரஸ்த்துதம் ஆகையால் நான் இழிந்து ஆடும் துறை என்னுதல் –
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்-தர்ச நீயமாய் பரந்து சிரமஹரமான கண் நீர் மல்க இரா நின்றாள் –கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிற இவ் வழகுக்கு போக்தாவாய் இருக்கிறவன் கிருஷி பண்ணி பல வேளையில் எனக்கு இரை யாக்குவதே
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–சம்ச்லேஷமும் பொறாத இவளுக்கு விஸ்லேஷத்தை விளைப்பதே
கொழுந்தே -உபகனம் தேட்டமான அளவிலே தறையிலே படர விடுவதே -பதி சம்யோக ஸூ லபம் வய -இப்பாட்டில் ஒரு தலைக் கட்டு இன்றிக்கே இருக்கும் இருக்குமதுக்கு கருத்து -பரிஹரிக்கும் எல்லை கழிந்தாள் -நாம் இவருக்கு சொல்லுவது என் -என்று தன்னிலே நோவு படுகிறாள் -என்று வங்கி புரத்து நம்பி பணிக்கும்-

—————————————————————-

இவளுக்கு மேன் மேல் என வருகிற நோய்கள் தீர்க்கைக்கு நான் என் செய்வது என் என்கிறாள் –

கொழுந்து  வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-

கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’-அயர்வறும் அமரர்களுக்கு தலை என்னும்
குன்றேந்திக்-கோ நிரை காத்தவன்!’ என்னும்;-அம் மேன்மை பாராதே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து இடையர்க்கும் பசுக்களுக்கும் நலிவு வாராமல் மலையை எடுத்து நோக்கினவன் என்னும் -நித்ய ஸூ ரிகள் பரிய இருக்கிறவன் கிடீர் பசுக்களுக்கும் இடையர்க்கும் தான் பரிவன் ஆகிறான் -நித்ய ஸூ ரிகள் வேராய் தான் கொழுந்தாய் யாயிற்று இருப்பது -நித்ய ஸூ ரிகள் ப்ரேமம் இவளுக்கு உண்டு ஆகையாலும் இழக்க வேண்டா -பசுக்களுடைய வெறுமை உண்டாகையாலும் இழக்க வேண்டா -குன்று எடுத்து என்னாதே ஏந்தி என்றது ஆஸ்ரித அர்த்தமான ப்ரவ்ருத்தி யாகையாலே அநாயாசமாய் இருக்கையாலே
அழும் -வரையாதே ரக்ஷிக்குமவனுடைய ரக்ஷணத்துக்கு புறம்பு ஆவதே -என்று அழும் -பாலர் செய்வதும் செய்யும் என்னுதல் ஸ்நே ஹிகள் செய்வதும் செய்யும் என்னுதல்
தொழும் -புகல் அற்றார் செய்வதும் செய்யும் என்னுதல் -வேதாந்த ஞானம் உடையார் செய்வதும் செய்யும் என்னுதல்
ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;-தொழுத இடத்திலும் முகம் காட்டக் காணாமையாலே அதாஹ்யமான ஆத்மவஸ்து அக்னி மயமாம் படி நெடு மூச்சு எறியா நின்றாள்
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;-விரஹ அக்னியை அவிக்கலாம் படி சிரமஹரமான நிறத்தோடு வந்து தோற்ற வல்லையே என்னும்
எழுந்து நின்று மேல் நோக்கி- இமைப்பிலள் இருக்கும்;-வடிவை நினைத்தவாறே தரித்து எழுந்து இருந்து யானைக்கு உதவினால் போலே வரக் கூடும் என்று மேல் நோக்கிப் பார்த்து -பிரதம பரிஸ் பந்தமே தொடங்கி காண வேணும் என்று இமை கொட்டாதே இருக்கும் –
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;-பின்னையும் தோற்றாது ஒழிந்த வாறே நான் உன்னைக் காணும் விரகு என் என்னும்
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!-அழகியதாய் பெருத்த நீர் சூழ்ந்த கோயிலை இடமாக உடையவனே  சிரமஹரமான தேசத்தை உடையீரான நீர் இத்தசைக்கு போக்கடி சொல்லீர்
என் செய்கேன் -இப்படி அலமாக்கிற இவள் உம்மைப் பெற்று ஆளாகைக்கு நான் செய்வது என் -உம்மால் அல்லது செல்லாமைக்கு பிராட்டி அளவு அல்லள்
என் திரு மகட்கே?-அவள் உம்மை ஆசைப்பட்டு இருக்கும் -இவள் உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்டு இருக்கும் –

————————————————————————–

இவளுடைய துக்கத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்கிறாள் –

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;என் என்கிற இடம்  திரு மகளில் அந்வயிக்கிறது -மார்பனே என்கிற இடத்தில் அந்வயிக்கிறது அன்று -எனக்கு ஸ்வாமி நியான பிராட்டியை திரு மார்பிலே யுடையவனே என்னா நின்றாள் -இவ்வதி பிராவண்யம் பிராட்டி அடியாக வந்தது என்கை
என்னுடைய ஆவியே!’ என்னும்;-இவளுடைய பிராணன் பஞ்ச வ்ருத்தியாய் அன்று இருப்பது -ஒரு மிதுனமாயிற்று இவளுக்கு பிராணன் –திருமகள் சேர்மார்பனாய்க் கொண்டு எனக்கு தாரகன் ஆனவனே என்னும் –
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட-நிலமகள் கேள்வனே!’ என்னும்;-அழகுக்கு நின் திரு எயிறு என்னும் அத்தனை -நீ இடந்து கொண்ட –அந்த புரகார்யத்துக்கு ஆளிட ஒண்ணாதே -ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே என்னும் –
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட-ஆய்மகள் அன்பனே!’ என்னும்;-உன்னோடே சம்ச்லேஷிக்க வல்லனே என்று துளும்புகிற அன்று -ம்ருத்யு சத்ருசமான ருஷபங்கள் ஏழையும் தழுவி -உருவென்று -உருமு-இடி போலே பயங்கரமான ஏறு -அந்தரம் ஏழும் அதிரும் இடி குரல் -என்ன கடவது இ றே -அவளை லபிக்கைக்கு நிமித்தம் ஆகையால் அவள் முலையிலே அணைந்தால் போலே இருக்கை -நப்பின்னை பிராட்டிக்கு ஸ்நிக்தனானவனே என்னும் –நீ கொண்ட -நீ கைக்கொண்ட – இத்தால் என் ஸ்வாமி நி களுக்கு உதவின நீ -அவர்கள் அடியேனான எனக்கு உதவாது ஒழி வதே என்னுதல் -பிரணயி யான என்னை நீ அங்கீ கரியாது ஒழிவான் என் என்னுதல்
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!-இவளை விரஹ பிரளயம் கொள்ளாகோயிலிலே சாய்ந்தது -தெற்குத் திக்குக்கு அன்றோ கோயிலிலே வந்து சாய்ந்து அருளிற்று -தெற்குத் திக்குக்கு சிலாக்யமான கோயில்
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–அவர்கள் எல்லார் படியையும் உடைய இவள் உம்மைப் பெற்றாளாம் விரகு அறிகிறி லேன் –

———————————————————————

இனி கிட்ட மாட்டாளோ என்னும்படி அவசன்னையான இவள் பெரிய பெருமாள் திருவடிகளிலே சம்ச்லேஷிக்க பெற்றாள் என்கிறாள் –

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;–இவள் தனக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்னா நின்றாள் –
‘மூவுல காளியே!’ என்னும்;-‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;-நான்முகக் கடவுளே!’ என்னும்;-‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
த்ரை லோக்ய நிர்வாஹனான இந்திரனுக்கு அந்தராத்மாதயா வாக நின்று அவனுடைய அதிகாரத்தை நடத்துவபனே என்னும் -ஐஸ்வர்ய ஸூ சகமான தாரையையும் -சாதகத்வ ஸூ சகமான ஜடையையும் உடைய ருத்ரன் அதிகாரத்தை அவனுக்கு அந்தராத்மாவாக நின்று நிர்வஹித்தவனே என்னும் -கடி கமழ்-பரிமளம் மிக்கு இருக்கை -சதுர்முகனான தேவதைக்கு ஆத்மாவானவனே என்னும் -உன்னோடே ஒத்த வடிவை யுடைய நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே -அந்நிய பரரான ஈஸ்வர அபிமானிகளோடு அநந்ய பரராய் நிர்மமரான வர்களோடு வாசி அற -எல்லார் கார்யம் செய்கிற நீ உன்னால் அல்லது செல்லாத எனக்கு உதவாது ஒழி வதே என்கை
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;-ஏஷ சர்நிஸ்வ பூ தஸ்து -என்று என்னை தன் பேறாக அணைக்கைக்கு கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே என்னும் –
அடி யடையா தாள் போல் இவள் அணுகி-அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–ஜீவிப்பாரை போலே இருந்து முடிந்து கொடு நின்றாள் -என்று பூர்வர்கள் நிர்வாஹம்-
அங்கனம் ஆகில் மேல் பிரபந்தம் நடவாது என்று -சம்ச்லேஷிக்க பெறாளோ என்று தோற்றும் படி அவசன்னையான இவள் கிட்டி சம்ச்லேஷிக்கப் பெற்றாள் -காள மேக நிமாஸ்யமான பெரிய பெருமாள் திருவடிகளை என்று எம்பெருமானார் நிர்வஹித்து அருளினார்-

————————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார் ஆழ்வார் பட்ட கிலேசம் படாதே திரு நாட்டில் நிரதிசய ஆனந்த உக்தராய் கொண்டு அயர்வறும் அமரர்கள் நித்ய ஸூ ரிகள் – சூழ இருப்பர் என்கிறார் –

முகில்  வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி-உய்ந்தவன் மொய்புனல் பொருநல்-துகில் வண்ணத் -பெரிய பெருமாள் திருவடிகளைக் கிட்டி அங்குத்தை பிரசாதத்தை பெற்று தரித்தவன் -பூர்வ அவஸ்தையில் சத்தையும் மேல் உள்ளவையும் அவன் அருளாலே யாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறது -வலியை யுடைய புனலை யுடைத்தான பொருநலில் துகிலினுடைய வர்ணமான சுத்த ஜலத்திலே சேர்க்கப் பட்டவர்– மொய் -வலி–ஆற்றுப் பெருக்காலே வலி பெற்று ஓடுகை-அகர்த்தம மிதம் தீர்த்தம் பரத்வாஜ நிஸாமய ரமணீயம் ப்ரசன்னாம்பு சன்ம நுஷ்யமநோ யதா -என்று தம்முடைய திரு உள்ளம் போலே ப்ரசன்னமான ஜலத்தோடே சங்கதரானவர்
தூ நீர்ச் சேர்ப்பன் -தூ நீர் த் துறைவன்
வண் பொழில் சூழ்-தர்ச நீயமான பொழிலை உடைத்தாய் உதாரமான திரு நகரி
வண் குரு கூர்ச் சட கோபன்-முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை-ஆயிரத்து இப்பத்தும் வல்லார்-பெரிய பெருமாள் திருவடிகளிலே யாயிற்று ஆயிரமும் சொல்லிற்று -திரு மோகூர்க்கு ஈத்த பத்து -திரு வேங்கடத்துக்கு இவை பத்து -என்றும் பிரித்துக் கொடுத்த அத்தனை -திருப் பலகையில் அமுது படியில் திருப் பதிகளில் நாயன்மார்க்கு அளந்து கொடுக்குமா போலே -என்று பிள்ளை அருளிச் செய்வர் –
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ-இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–முகில் வண்ணன் உடைய வானம் என்னுதல் -அவனுடைய நிழல் ஈடான வானம் என்னுதல் -தாம் மோஹித்து திருத் தாயார் தனியே கூப்பிட இருந்த இவருடைய கிலேசமும் இன்றிக்கே -நித்ய ஸூ ரிகள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கப் பெறுவர்கள்


கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: