திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –7-1—

கீழ் பெரிய ஆர்த்தியோடே பிராட்டி முன்னாக சரணம் புக்க இடத்திலும் தம் அபேக்ஷிதம் கிட்டிற்று இல்லை -அதுக்கு அடி
இவரை இங்கே வைத்து தான் கொள்ள நினைத்த காரியம் தலைக் கட்டினால் பின்பு செய்வானாக நினைத்து இருக்கை —
அந்த க்ரமத்தை சஹித்ததில்லை-இவருக்கு கீழ் தமக்கு பிறந்த ஆற்றாமை -அத்தாலே மிகவும் அவசன்னராய்
-அத்தாலே தாம் ஜிதேந்த்ரியராய் -முடியானே யில் சொன்ன கரணங்களை யுடையராய் இருக்கச் செய்தேயும் –
சம்சாரிகள் இந்திரிய வஸ்யராய் காண்கையாலும் -அவை நடையாடுகிற தேசத்திலே தேஹ சம்பத்தத்தோடே இருக்கை யாலும் –
நமக்கு இது வரில் செய்வது என் என்று அஞ்சி -சர்வ ரக்ஷகனாய் -பிறர் நோவு அறியும் இடத்தில் சர்வஞ்ஞனாய் –
பரிஹரிகைக்கு சக்தனுமாய் ப்ராப்தனுமாய் -இந்த இந்திரியாதிகளும்
தான் இட்ட வழக்காய் இருக்க தம்முடைய துக்க நிவ்ருத்தி பண்ணாமையாலே குண த்ரயத்தாலே பந்தித்து இந்திரியங்கள் ஆகிற படராலே நலிவித்து
-நித்ய விபூதியில் நித்ய ஸூ ரிகளும் தானுமாக தம் எளிவரவு கண்டு சிரித்து இருக்கிறானாக நினைத்து –
பரம தயாவானாய் ரக்ஷகனான நீ என்னை இங்கனம் நோவு படக் கண்டு இருக்கலாமோ -என்று கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி கூப்பிடுகிறார்
-ஸ்வ கர்மத்தால் வந்த நோவை அவன் நலிகிறான்-என்று சொல்லலாம் படி இ றே சம்பந்தம் இருப்பது –
-பேறு அவனாலே யானால் இழவும் அவனாலே என்ன தட்டில்லை இ றே –

———————————————————–

தன்னால் அல்லது செல்லாத படியாய் உன் திருவடிகளிலே சரணாசும் புகுந்த பின்பும் என்னை இந்த்ரியங்களால் நலிய பாரா நின்றாய் -என்று இன்னாதாகிறார் –

உண்ணி  லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-

உண்ணி லாவிய -உள்ளே வர்த்திக்கிற -புறமிட்டு வந்து நலிந்தன வாகில் இறாய்க்கலாம் இறே -சஹஜ சத்ருக்கள் என்கை
ஐவராற் -ஒருவர் இருவர் அன்று -ஐவராலே -மேல் விழுந்து நலிகிற படியால் சேதன சமாதியாலே சொல்லுகிறார்
குமை தீற்றி -நலிவு படுத்தி -இந்திரியங்கள் தண்ணளி பண்ணாமே ஓக்க இருந்து நலிவிக்கிறான்-என்று இருக்கிறார்
என்னை -பல நீ காட்டிப் படுப்பாயோ -இன்னம் கெடுப்பாயோ என்று இருக்கிற என்னை
உன் பாத பங்கயம்-தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள் -என்று நிரதிசய போக்யமாய் ஸூ லபமான திருவடிகளை
நண்ணிலா வகையே -நான் கிட்டாத படியே -சிலர் நித்ய சித்தர் ஆனால் போலே நான் நித்ய சம்சாரியாம் படி
நலிவான் -அவனைக் கிட்டாமைக்கு மேல்பட தமக்கு நலிவு இல்லை என்று இருக்கிறார்
இன்னம் -இந்திரியங்களுக்கு அலைந்து உன்னைத் சரணம் புக்க பின்பும்
எண்ணுகின்றாய்-என்னை நித்ய சம்சாரியாக்கி அகற்றும் விரகு எண்ணுகிறான் என்று இருக்கிறார்
எண்ணிலாப் பெரு மாயனே!-எண்ணிறந்த காரியங்களை விளைக்க வற்றாய் துஸ்தரமான பிரக்ருதியை யுடையவனே -நீ வேண்டாதாரை நலிகைக்கு ப்ரக்ருதியை உபகரணமாக யுடையவன் என்கை -மமமாயா துரத்யயா -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்று பிள்ளான் பணிக்கும் -என்னுடைய நோய்க்கும் உன்னுடைய குணங்களுக்கும் என்ன சேர்த்தி யுண்டு
இமையோர்கள் ஏத்தும் – -ப்ராதாக்களிலே ஒருவன் ஜீவிக்க ஒருவன் சிறை கிடந்தால் போலே யாயிற்று இருக்கிறது இவருக்கு
உலக மூன்றுடை-அண்ணலே!-சர்வ லோகங்களையும் உடைய ஸர்வேஸ்வரனே -சர்வ ரக்ஷகத்வத்தைக் காட்டிற்றும் நம்மைக் கை விடான் என்று இருக்கைக்காக வன்றோ
அமுதே!-போக்யதையை அறிவித்ததும் மேல் விழுகைக்காக அல்லவோ
அப்பனே!-உபகாரகனே -உபகாரத்தை காட்டிற்றும் இவ்வளவு உபகரித்தவன் இனி கை விடுமோ என்று இருக்கைக்காக
என்னை ஆள்வானே!–என் இசைவு இன்றிக்கே இருக்க என் கார்யம் உனக்கே பரமாக ஏறிட்டுக் கொண்டதுவும் நான் கை விடான் என்று இருக்கைக்காக அன்றோ-

———————————————————

துர்பலனான என்னை இந்த்ரியங்களாலே இரவும் பகலும் நலிவித்து உன்னை நான் கிட்டாத படி பண்ணி இந்நோவை அறிவிக்க ஒண்ணாத படி நீயும் போதி-என்று இன்னாதாகிறார் –

என்னை  ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-

என்னை ஆளும் -எனக்கு விதேயமாக முறையாக இருக்க -அது தவிர்ந்து தன் கருத்திலே என்னைப் பண்ணிக் கொள்ளும் -நீ அடிமை கொள்ளுகை ஒழிய இவை பணி கொள்ளும் படி யாவதே
வன்கோ -நீ நிர்வாஹகன் ஆகை தவிர்ந்து மிடுக்காலே இவை நிர்வாஹகமாவதே
ஓரைந்திவை-அத்விதீயமான ஐந்து
இவை பெய்து -இவற்றை உண்டாக்கி என் பக்கலிலே இட்டு
இராப்பகல் மோது வித்திட்டு -காலத்துக்கு விநியோகம் இவை யாவதே -அழகிதாக ஒழிவில் காலம் எல்லாம் என்று பிரார்த்தித்தேன்
உன்னை -ப்ராப்தனாய் போக்ய பூதனான உன்னை
நான்-ஞானம் பிறந்த நான்
அணு காவகை செய்து -கிட்டாதபடி பண்ணி
போதி கண்டாய்-என் நோயை அறிவிக்க ஒண்ணாத படி இ றே கடக்கப் போகிறது
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!
அகலப் போனால் ஆற்ற ஒண்ணாத படி போக்யத்தை இருக்கிற படி –கன்னலே!-சர்வதோமுகமான சாரஸ்யம் –அமுதே –அவ்வளவு அன்றிக்கே சாவாமல் காக்கும் மருந்து -கார்முகில் வண்ணனே!-அந்த போக்யதையை தன் பேறாக தருமவன் –கார்முகில் வண்ணனே!-கடல்ஞாலம் காக்கின்ற-வரையாதே எல்லாவற்றையும் நோக்குகை
கடல்ஞாலம் காக்கின்ற-மின்னு நேமியினாய்!-நோக்கும் போது சங்கல்பத்தாலே அன்றியே விளங்கா நின்றுள்ள திரு வாழி யாலே ரஷிக்கை –
வினையேனுடை வேதியனே!–என் பாவத்தால் கண்ணுக்கு அ வி ஷயமாய் வேதைக சமதி கம்யனானவனே-இந்த போக்யத்தையும் ரக்ஷகத்வமும் ஓலைப் புறத்திலே கேட்க்கும் படி யாவதே-

———————————————————————

ஜகத்துக்கு நீயே சர்வ வித ரக்ஷகனாய் வைத்து என்னை உன் திருவடிகளிலே வந்து அணுக ஒண்ணாத படி இந்திரியங்களை இட்டு நிரந்தரமாக நலிவித்து உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு என்கிறார் –

வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி  அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

வேதியா நிற்கும் ஐவரால்-இடைவிடாதே நலியா நிற்கும் ஐந்து இந்த்ரியங்களால் -இராப்பகல் என்று நித்ய அக்னி ஹோத்தரம் போல் அன்றிக்கே -நிரந்தரமாக நலிகை -அழகிதாக -உடனாய் மன்னி -என்று பிரார்த்தித்தேன்
வினையேனை மோதுவித்து -பாபத்தை பண்ணின என்னை மிகவும் நலிவித்து -க்ரியதாம் இதை மாம்வதா-என்று நீ ஏவப் பணி செய்கை தவிர்ந்து -இந்திரியங்கள் ஏவல் செய்யும் படி பாபத்தை பண்ணினேன் –
உன திருவடிச்-சாதியா வகை நீ தடுத்து -வகுத்த திருவடிகளை கிட்டாத படி நீ தடுத்து -அவசர பிரதீஷனாய் இருக்கிறவனை காதுகரைச் சொல்லுமா போலே சொல்லுகிறார் இ றே -தாம் சாதன அனுஷ்டானம் பண்ணா நிற்க அவன் விலக்கினால் போலே சொல்லுகிறார்
என் பெறு தி -பெருமாள் சத்ய சங்கல்பர் ஆகைக்கு தன் முடிவை இசைந்த இளைய பெருமாளை போலே -உனக்கு பிரயோஜனம் உண்டாகில் என் இழவையும் பொறுப்பன் இ றே
அந்தோ -ரக்ஷணமே ப்ரயோஜனமாய் இருக்கிறவன் ந்ருசம்சரைப் போலே ஆவதே
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்டசோதி நீள் முடியாய் -ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை உடையையாய் நித்ய விபூதியில் பேர் ஓலக்கமாக இருந்து வைத்து -ஜகத் காரண பூதனாய் -அழிந்து கிடக்கிற ஜகத்தை ஸ்ருஷ்டித்து -பிரளய ஆபத்தில் வயிற்றிலே வைத்து நோக்கி -உள்ளே இருந்து தளராமே உமிழ்ந்து மஹா பலி அபகரிக்க எல்லை நடந்து மீட்டு -நைமித்திக பிரளய ஆபத்தில் மஹா வராஹமாய் எடுத்து -இப்படி சர்வ வித ரக்ஷணமும் பண்ணினவனே
தொண்டனேன் மது சூதனனே –கண்டது எல்லாவற்றிலும் சபலனான என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்தவனே -மது வாகிற அசூரனைப் போக்கினால் போலே உன் திருவடிகளில் ருசிக்கு விரோதியான இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்தவனே -இது பொல்லாது என்று அஞ்சிக் கூப்பிடும்படி பண்ணினவன் என்கை –

—————————————————————

நீயே இவ்வாத்மாவுக்கு நிரதிசய புருஷார்த்தம் என்னும் இடத்தை நான் அறியாத படி சப் தாதி விஷயங்களைக் காட்டி என்னை பிரமிப்பித்து போகா நின்றாய் -என்கிறார் –

சூது  நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4-

சூது நான் அறியா வகைச் சுழற்றி -சூது -உறுவது -உறுவது இன்னது என்று நான் அறியாதபடி பிரமிப்பித்து -பகவத் பிரவணமாவது -அதுவே உறுவது -விஷய ப்ராவண்யம் அனர்த்த ஹேது என்று விவேகிக்க ஒண்ணாத படி மனசைட் கலக்கி
ஓர் ஐவரைக் காட்டி -ஐவர் என்று சப் தாதிகள் -தனித் தனியே பாதகமான சப் தாதிகளைக் காட்டி
உன்னடிப்-போது நான் அணுகா வகை செய்து-உன் திருவடிகள் ஆகிற செவ்வித் பூக்களை நான் கிட்டாத படி பண்ணி
போதி கண்டாய்-கண்ணோட்டம் பிறக்கும் என்று கண்ணாள் காண ஒண்ணாத படி உன்னை கொண்டு போகா நிற்றி கிடாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி -சேதனம் அசேதனம் என்று வாசி இன்றிக்கே உன் திரு வயிற்றிலே சேர்த்து
ஓர் ஆலினீளிலை-மீது சேர் குழவி! -ஓர் ஆலந்தளிர் மேலே ஸ்தநந்த்யமான வடிவைக் கொண்டு கண் வளர்ந்தவன்
வினையேன் வினை தீர் மருந்தே!–அந்த அக்கடிதகடனா சாமர்த்தியம் போலே யாயிற்று என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த படி –

—————————————————————-

அப்ரிதிகிரியமாம் படி விஷயங்களாலும் இந்த்ரியங்களாலும் நலிவித்து என்னை நீ கை விட்டால் வேறு எனக்கு ரக்ஷகர் உண்டோ என்கிறார் –

தீர்  மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-

தீர் மருந்தின்றி-பிரதிகிரியை இல்லாத படி -பிரதிகிரியை உண்டாகில் ஆறி இருக்கலாம் இ றே
ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
சப் தாதிகள் இவ்வாத்மாவை முடிக்கும் சரீரம் -அதிலே பிரவேசித்து நெருக்கும் ஸ்ரோத்ராதிகளை -சரீரத்தில் பிரவேசிப்பித்து சப் தாதிகளை காட்டி நெருக்குகிற ஸ்ரோத்ராதிகளை –
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
நேருடைத்தாகவும்-மருங்குடைத்தாகவும் அடைத்து -முன்பும் பார்ஸ்வத்திலும் நிறுத்தி -நீயே ரக்ஷகன் என்கிற விச்வாஸத்தையும் நெகிழ்ப்பாரைப் போலே இருந்தாய் என்னுதல் -கை விடுமா போலே இருந்தாய் என்னுதல்
ஆர் மருந்தினி யாகுவார்! -ரக்ஷகனான நீ உபேக்ஷித்தால் யார் மருந்தாகுவார் -பிறர் அல்லாத அற்றைக்கு நீ துணை என்று இருக்கலாம் -நீ கை விட்டால் நோக்கக் கடவார் உண்டோ -மருந்தாவது எது என்னாதே யார் என்கிறது ஒரு பரம சேதனன் மருந்து ஆவான் என்று இருக்கிறார் -நிர்வாணம் -பேஷஜாம் பிஷக்
அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்-வேர் மருங் கறுத்தாய்! -யுத்த உன்முகமான திரு வாழியை ஏந்தி வலிதான அசுரர் குலத்தை பக்க வேரோடு வாங்கினவனே -நீ உபேக்ஷித்தால் நான் ரஷித்துக் கொள்ளவோ -பிறர் ரஷிக்கவோ
விண்ணுளார் பெருமானேயோ!–நித்ய ஸூ ரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து இருக்கிற படியை அனுசந்தித்து நான் அதுக்கு அசலாவதே என்று கூப்பிடுகிறார் -ஹா ராம ஹா லஷ்மணா என்னுமா போலே உறவு முறையரான நித்ய ஸூ ரிகளையும் அவனையும் நினைத்து தன் ஆற்றாமையால் அங்கு சென்று கேட்க்கும் படி கூப்பிடுகிறார்-

——————————————————————-

எத்தனையேனும் அளவுடையாரையும் நலிய வல்லவனான இந்திரியங்கள் நீ கை விட்டால் அதி துர்ப்பலனான என்னை எல்லா அநர்த்தமும் படுத்தவோ என்கிறார் –

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை-மண்ணுள்-
அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு அவர்களோடே கூட அடிமை செய்ய ருசி உடையாரையும் விஷயங்களில் மூட்டி நலியும் இந்திரியங்கள் இவை -விரக்தனான விச்வாமித்ரனையும் கைங்கர்ய ருசி உடைய மஹாராஜரையும் கூட நலிந்து இ றே -விண்ணுளாராய்-சர்வ ஸ்வாமி யாய் இருக்கிறவனுக்கு அடிமை செய்ய வேணும் என்று இங்கே வரிலும் -எனக்கு என்னப் பண்ணும் இந்திரியங்கள் -பெரிய திருவடி பிராட்டிமாரையும் தேவரையும் நான் வஹித்தேன்-என்றான் இ றே –
மண்ணுள் -தம் நிலமான சம்சாரத்திலே
என்னைப் பெற்றால் -சம்சாரிகளுக்கும் அவ்வருகாய் இருக்கிற என்னைப் பெற்றால்
என் செய்யா -இந்திரியங்கள் அளவுடையாரையும் அகப்படுத்த வல்லவை -அவை அகப்படுத்த வேண்டாதே மேல் விழுமவன் நான் -ஆனால் எல்லாம் படுத்தவோ
மற்று நீயும் விட்டால்?-இந்திர வஸ்யத்தையை போக்காக கடவ நீ யும் உபேக்ஷித்தால் எல்லா அநர்த்தமும் படுத்தாவோ –
பண்ணுளாய்!-என்னுடைய ஆர்த்த ஸ்வரம் அறியாது இருக்கிறாய் அல்லையே
கவி தன்னுளாய்!-அவ்வார்த்திக்கு ஆஸ்ரயமான யுக்தி கேளாது இருக்கிறாய் அல்லையே
பத்தி யினுள்ளாய்! -இத்தை சொல்லுவிக்கிற ஆற்றாமையை அறியாது இருக்கிறாய் அல்லையே
பரமீசனே! -இந்திரியங்களுக்கும் ஈசனே -என்னைப் போலே அசக்தனாய் தான் இருக்கிறாயோ
வந்தென்-கண்ணுளாய்! -அஸந்நிஹிதன் அல்லை
நெஞ்சுளாய்! -ஹ்ருதய ஸ்திதன்
சொல்லுளாய்!-கவி தன்னுள்ளாய் -என்று பாசுரம் சொல்லிற்று -இது வாக் இந்திரியத்தை சொல்லுகிறது
ஒன்று சொல்லாயே.–அர்ஜுனனுக்கு போலே வந்து மா ஸூ ச -என்று சொல்ல வேணும்-

——————————————————————-

நீ உபேக்ஷித்தால் அதிக்கலமான -அதி வேலமான இந்திரியங்களை வெல்ல உபாயம் உண்டோ என்கிறார் –

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7-

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத-ஒரு விஷயத்தில் சாபலத்தைப் பண்ணி அது கை புகுரும் தனையும் அதிலே நிலை நில்லாத -ஒருத்து -ஒருமைப்பாடு
ஓர் ஐவர்-ஒருவர் நினைத்ததை ஒருவர் நினையாதே தனித் தனியே பிரதானராய் இருக்கை –
வன் கயவரை-வன்மையால் கார்யம் கொள்ளக் கடவராய் -கயவராய் -க்கலராய் -முகம் பழக பழக பாதகராகை
என்று யான் வெல்கிற்பன் -என்று நான் இவற்றை வென்று தலைக் கட்டக் கட வேன்
உன் திருவருள் இல்லையேல்?-உன் அருள் பெற்றேன் ஆகில் நானும் இவற்றை வென்று தலைக் கட்டேனோ -உன் அருள் பெறுகையாலே அர்ஜுனன் ஜெயத்ரனை ப்ரதிஜ்ஜை பண்ணி வென்றிலனோ -மஹா ராஜர் உன்னை அண்டை கொண்டு வாழியே நிரசித்து இலரோ
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல் அரவம் அளாவி ஓர்குன்றம் வைத்த எந்தாய்!
பிரயோஜனாந்த பரரும் உன் அருளாலே ஸ்வ அபிமதம் பெற்றிலர்களோ –அன்று -துர்வாச சாப உபஹதரான அன்று — தேவர் அசுரர் வாங்க--தேவர்களும் அசுரர்களும் சங்கதராய் கடல் கடைய புக்கு இளைத்து கை வாங்க என்னுதல் -வாங்கல் என்று வலித்தலாய்-அவர்கள் கடைந்தாராய் தலைக் கட்டும் படி என்னுதல் –
அலைகடல் -ஷூ பிதமான கடலிலே
அரவம் அளாவி-வா ஸூ கியைச் சுற்றி
ஓர்குன்றம் வைத்த -அத்விதீயமான மலையை வைத்த நொய்ப்பம் அம்ருதம் கிளரும் தனையும் தானே திரியும்படி யாகவாயிற்று
எந்தாய்! -அச்செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே
கொடியேன் பருகு இன்னமுதோ!–தேவர்களை போலே நித்யத்வத்தைக் கொள்ளாதே உன்னையே ஆசைப்படுகிற எனக்கு நிரதிசய போக்யனானவனே -தேவர்களை போலே உப்புச் சாற்றில் திருப்தனாகப் பெற்றிலேன் -தோளும் தோள் மாலையுமாய் கடலைக் கடைந்த போதை அழகாயிற்று இவருக்கு அம்ருதம் -இவருடைய அமிருதம் விசஜாதீயமாய் இருக்கிற படி –

—————————————————————

என்னுடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து நான் மநோ வாக் காயங்களினால் உன்னை நிரந்தரமாக அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

இன்னமு  தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே!–7-1-8-

இன்னமு தெனத் தோன்றி -முகப்பிலே நிரதிசய போக்யம் போலே தோன்றி -அக்ரே அமிருதம் இவ -என்னும்படியே -விபாகத்தில் இருக்கும் இருப்பு உபக்ரமத்தில் தோன்றிற்று ஆகில் மேல் விழாது ஒழி யல் யாயிற்று -வாயில் இட்டால் ரசித்து அநந்தரம் முடிப்பன சில விஷங்கள் உண்டு அது போலே ஆயிற்று
ஓர் ஐவர் -தனித் தனியே பிரபலமாய் அத்விதீயமான சப் தாதிகள் ஐந்தும்
யாவரையும் மயக்க-எத்தனையேனும் அதிசயித ஞானரையும் கலங்கப் பண்ணும் படியாக
நீ வைத்த-சர்வ சக்தியான நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் -அநாதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை காரியத்தோடு கூட
முழு வேர் அரிந்து -சவாசனமாக போக்கி
என்னை -சம்சார பய பீதனான என்னை
யுன் சின்னமும்-சங்கு சக்ராதி திவ்யாயுதங்களையும்
திரு மூர்த்தியும் – அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
நெஞ்சால் அனுசந்தித்து -அந்த ப்ரீதி உள் அடங்காதே வாயாலே பேசி தொழும் இதுவே யாத்ரையாம் படி பண்ணி அருள வேணும்
என்னம்மா! -எனக்கு தாய் போலே பரிவனானவனே
என்கண்ணா!-எனக்கு பவ்யனானவனே
இமையோர்தம் குலமுதலே!–நித்ய ஸூ ரிகள் சமூகத்தை அடிமை கொண்டு உஜ்ஜீவிப்பிக்குமவனே -நித்ய ஸூ ரிகளை அடிமை கொள்ளுமா போலே நானும் அடிமை செய்யும் படி பண்ணி அருள வேணும் என்கை -ஒரு விபூதிக்காக தாயும் தந்தையாய் அவர்கள் சிந்தித்து ஏத்தி தொழும் படி அருளிக் கொண்டு இருக்கிறவனே –

————————————————————–

சானுபந்தமாக முடிக்க வற்றான பாபங்களை விளைக்கும் விஷயங்களில் ஆத்மாவை தள்ளும் இந்திரியங்கள் என்னை நலியாத படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

குல முதல்  அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-

குல முதல் அடும்-குலத்தை அடியோடு முடிக்க வற்றாகை-ஒருவன் செய்த பாபம் -அவன் அளவில் போகாது -குலமாக முடிக்கும்
தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
இப்படிப்பட்ட மஹா பாபங்களை விளைக்க வற்றாய் -கொடிதாய் -துஷ் பரிஹரமாய் –வலிய குழி -புக்கால் கால் வாங்க ஒண்ணாத சப் தாதிகளிலே -புகத் தள்ளும் ஸ்ரோத்ராதிகளை -நஹி தர்ம வ்ருத்ததேஷூ பஹ்வ பாயேஷூ கர்ம ஸூ மூலகாதிஷூ சஞ்சந்தே புத்தி மந்தோ பவத்விதா-என்று மால்யவான் ராவணனுக்குச் சொன்னான் இ றே
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்-இந்த்ரியங்களுடைய பலத்தை வாசனையோடு போக்க வல்லேனாம் படி பிரசாதங்களை பண்ணி அருள வேணும்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்-பல முதல் படைத்தாய்! -பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமாய் உள்ள அநேக பதார்த்தங்களையும் முதலிலே படைத்தாய் -ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ என்கை
என்கண்ணா! என் பரஞ்சுடரே!–எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமாய் உள்ளவனே -சர்வ சக்தியாய் எனக்கு பவ்யனாய் போக்யனான நீயே இந்திரிய உபாதையை போக்கி அருள வேணும்-

————————————————————-

அடிமைக்கு விரோதியாய் விஷய அனுபவங்களுக்கு பாங்கான உடம்பை எனக்கு தந்தாய் -அதுவே ஹேதுவாக ஐந்து இந்திரியங்களும் பொறுக்க ஒண்ணாத படி என்னை நலியா நின்றன –அவற்றைப் பரிஹரித்து அருள வேணும் என்று ஆர்த்தராய் மஹா த்வனியோடு கூப்பிடுகிறார் –

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு-அன்புருகி நிற்குமது நிற்கச்
எனக்கு நிரதிசய போக்யனானவனே-அந்யோன்யம் ஒப்பாய் ஸ்ப்ருஹணீயமான உன் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய
சுமடு தந்தாய்-இந்திரியங்கள் சுமத்தின சுமை எல்லாம் சுமைக்கைக்கு ஈடான சரீரம் ஆகிற சும்மாட்டை தந்தாய் -ராஜபுத்ரன் தலையில் முடியை வாங்கி சும்மாட்டைக் கொடுத்து வழிக்கரையிலே நிறுத்தினால் கண்டார் எல்லாரும் சுமை ஏற்றுமா போலே இ றே இந்திரியங்கள் -இந்திரிய உபாதைக்கு ஈடான பிரகிருதி சம்பந்தம்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
நீ தந்த பிரக்ருதியோட்டை கர்ம சம்பந்தமே ஹே துவாக துர்பரமான விஷயங்களை சுமத்தி ஐந்து இந்திரியங்களும் திக்கு தோறும் வலித்து நலியா நின்றன
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–முன் கடலைக் கடைந்து ஆஸ்ரிதர் அபேக்ஷை முடிக்க ஷமனான நாதனேயோ -கடலைக் கடைந்து அம்ருதத்தை வாங்கி தேவர்களுக்கு கொடுத்து அசுர வர்க்கங்களை பறக்க அடித்தால் போலே இந்திர வஸ்யத்தையையும் பாற அடித்து தர வல்லையே –

———————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு இந்த்ரியங்களால் ஆத்மாவுக்கு வரும் நலிவு போம் என்கிறார் –

கொண்ட  மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-

குணங்கள்- கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் -சத்வாதி குண அனுரூபமான வடிவை யுடைய மூவராய் –
படைத்து அளித்துக் கெடுக்கும்-சதுரமிக்க அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து ஸ்வேன ரூபேண நின்று பரிபாலனம் பண்ணி -ருத்ராந்தர்யாமியாய் சம்ஹரித்து செய்து அருளுகிற
அப்-புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே-ஜகத் காரணத்தயா பிரசித்தமான புண்டரீகத்தோடே கூடின திரு நாபியை யுடைய ஏகார்ணவ சாயியான சர்வ காரணனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் -சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
நான் எனக்கு என்னப் பண்ணும் இந்திரிய வஸ்யத்தைக்கு அஞ்சி சேஷத்வத்தின் எல்லையில் தாழ நிற்கிறார்
கண்டு பாட வல்லார்  — இதிலே பாடுகிற பாவத்தை அனுசந்தித்து பாட வல்லார் -என்கிறது -தம்முடைய தசையை அநுஸந்தித்தால் பாட ஒண்ணாது என்று இருக்கிறார் –வினை போம் கங்குலும் பகலே.–திவா ராத்ரம் இந்திரிய வஸ்யத்தைக்கு ஹே துவான பாபம் போம் என்னுதல் -திவா ராத்ரம் அடிமை செய்கைக்கு விரோதியான பாபம் போம் என்னுதல்-


கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: