திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-10–

இப்படி பெரிய ஆர்த்தியோடே பரமபதத்தில் கேட்க்கும் படி கூப்பிடச் செய்தே யும் சர்வ ரக்ஷகனானவன் வந்து முகம் காட்டாமையாலே-மிகவும் அவசன்னரானவர்
ஸ்ரீ யபதியாய் நித்ய ஸூ ரிகளுக்கு தன் குணங்களை அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கிற பெருமையை யுடையனாய்-இருக்கச் செய்தேயும் சம்சாரிகள் நோவு படுகிற படியைக் கண்டு காருண்ய வாத்சல்யாதிகளே ஹேதுவாக இதர சஜாதீயனாய்
இங்கே வந்து -பரித்ராணாய ஸாதூ நாம் என்கிற படியே ரக்ஷித்து -இதுக்கு பிற்பட்டார் இழக்க ஒண்ணாது என்று பார்த்து-
திரு மலையில் நித்ய வாசம் பண்ணி -தன் திருவடிகளை ஆஸ்ரயிப்பார்க்கு தேச காலாதி கார்யங்க விசேஷங்களை-அபேக்ஷியாதே ருசியே அடியாக ஆஸ்ரயிக்கலாம் படி நிற்கிற திரு வேங்கடமுடையான் திருவடிகளில் சரணம் புகுகிறார்-
-சரண்ய விசேஷத்தில் சரணாகதிக்கே பல வ்யாப்தி யாகையாலே –
ஒன்பது பாட்டாலும்-அவனுடைய சரண்யதையை சொல்லி பத்தாம் பாட்டிலே சரணம் புக்கு முடிக்கிறார் –

—————————————————————–

அநந்ய கதியான நான்  உன்னை வந்து கிட்டுவதொரு விரகு பார்க்க வேணும் என்கிறார்

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-

உலகம் உண்ட பெருவாயா!
ரஷ்யத்தின் அளவன்றிக்கே இருக்கும் பெரிய பாரிப்பை யுடையவனே -உன்னுடைய பாரிப்புக்கும் என்னுடைய ஆர்த்திக்கும் என்ன சேர்த்தி யுண்டு –நீ அறிந்த சம்பந்தமும் ஆபத்துமே முதலாக ரக்ஷிக்குமவனே -ஒரு லோகத்துக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது-லோகத்துக்காக உண்டான ஆபத்து ஒருவனுக்கு உண்டானால் நோக்கலாகாதோ -பிரளய ஆர்ணவத்திலேயோ நோக்குவது -சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்டாரை நோக்கலாகாதோ -அபேஷியாதார்க்கோ உதவலாவது-அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ -சரீர வியோகத்துக்கு வரும் ஆபத்தோ நோக்கலாவது -சத்தை அழியும் ஆபத்தில் நோக்கலாகாதோ -ஜல பிரளயத்துக்கோ உதவலாவது -விரஹ பிரளயத்துக்கு உதவலாகாதோ -பிறரால் வரும் ஆபத்தோ நோக்கலாவது -உன்னால் வரும் ஆபத்து நோக்கலாகாதோ –
உலப்பில் கீர்த்தி அம்மானே!-ஒன்றைச் சொன்னேன் அத்தனை அல்லது பஹு முகமாக நீ ரஷித்துப் படைத்த குண பிரதையாலே சர்வ லோகத்துக்கு ஸ்வாமி யானவனே -இதுக்கு முன்பு ஆர்ஜித்த புகழை யுடைய ஒரு வியக்தியில் உதவாமையாலே இழக்க கிடாய் புகுகிறாய் -பொழில் ஏழும் காவல் பூண்ட புகழை இ றே இழக்க புகுகிறது -ஸ்வரூபம் ஒழிய குணத்துக்கு ஆயிற்று இவர் தோற்றது –
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
கடலிலே தள்ளினாலும் விட ஒண்ணாத வடிவு அழகு -குண ஹீனன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு -நித்தியமாய் நிஷ்க்ருஷ்ட சத்வமாய் நிரவதிக தேஜோ ரூபமான விக்ரஹத்தை யுடையவனே –
சுடர்சூழ் ஒளி மூர்த்தி! -உள்ளு மண்ணீடாய் புறம்பு ஒளியூட்டி இருக்கை அன்றிக்கே உள்வாயோடு புறவாயோடு வாசி அற ஒளியேயாய் இருக்கிற படி
நெடியாய்! -அபரிச்சேத்யமான ஸுந்தரியாதிகளை யுடையவனே -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற ஆத்ம குணங்களுக்கு எல்லை கண்ணிலும் ரூப குணங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற படி
அடியேன் ஆருயிரே!-ஸ்வரூபத்தை பார்த்து வ்யதிரேகத்தில் தேறி இருக்க ஒண்ணாத படி பண்ணினவனே -ஆத்மாவை ஒழிய கேவல சரீரத்தை தரிப்பிக்க போமோ
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
லோகத்துக்கு திலதமான திருமலையில் நின்று அருளின உன் சேஷித்வத்தை எனக்கு அறிவித்து உன்னால் அல்லது செல்லாத படியும் பண்ணினவனே -சந்நிதி இல்லாமல் தான் இழக்கிறேனோ
குல தொல் அடியேன்-குலமாக பழைய அடிமையாய் இருக்கிற நான் -இத்தால் தம்முடைய யோக்கியதையை சொல்லுகிறார் அல்லர் -அநந்ய கதித்வம் சொல்லுகிறார் -அநந்யார்ஹமான குடியில் உள்ளாரை புறம்பு கைக்கு கொள்ளுவார் இல்லை என்கை
உன பாதம் கூடுமாறு –உன் திருவடிகளைக் கிட்டி அடிமை செய்யும் படி -இவருடைய சாயுஜ்யம் இருக்கிற படி
கூறாயே.-நம்மைப் பெறுவான் என்று இரங்கி -மா ஸூ ச -என்று அருள வேணும் -உனக்கு ஓர் யுக்தி -எனக்கு ஸ்வரூப லாபம் –

—————————————————————–

பிரதிபந்தகங்கள் உண்டே என்ன உன் கையிலே திரு வாழி இருக்க இவ்வார்த்தை சொல்லலாமோ என்கிறார்-

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-

கூறாய் நீறாய் நிலனாகி–சின்னமாய் தூளியாய் வெறும்தரையாம் படி நிச்சேஷமாக்கி -ஆகி என்றது ஆக்கி என்னுதல் -ஆம்படி என்னுதல்
கொடு வல்லசுரர் -ந்ருசம்சராய் அத்தை தலைக் கட்டிக் கொடுக்கும் வலியை யுடையரான துஷ்ப்ரக்ருதிகள்
குலமெல்லாம்-ஜாதியாக நிச்சேஷமாக முடித்து
சீறா எரியும் திருநேமி வலவா! -அவ்வளவில் பர்யவசியாதே இரை பெறாத பாம்பு போலே சீறி ஜ்வலியா நிற்கிற திரு வாழி யை வல வருகே யுடையவனை
தெய்வக் கோமானே!-கையும் திரு வாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி நித்ய விபூதியை நிர்வஹிக்குமவனே-அருளார் திருச் சக்கரத்தால் அருள் விசும்பு நிலனும் இருளார் வினை கெட செங்கோல் நாடாவுதிர் -விரோதிகளை நிரசித்து நோக்கும் இவ்விபூதியை -கையும் திரு வாழி யுமாய் இருக்கிற சேர்த்தி அழகைக் காட்டி அனுபவிப்பிக்கும் அவ்விபூதியை -உனக்கு அமைந்தார் இல்லாமையே நீ நீ இது எல்லாம் செய்தது –நாம் இப்போது அஸந்நிஹிதர்அன்றோ என்னில் திருமலையில் வந்து ஸூ லபனாய் நின்றிலையோ
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
அறாக்கயமான சுனைகளிலே அக்னி ஜ்வலிக்கிறால் போலே தாமரை பரப்பு மாற பூக்கையாலே நிரதிசய போக்யமான திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிறவனே
ஆறா அன்பில் அடியேன்-
சுனைகள் அறாக்கயம் ஆகிறாப் போலே யாயிற்று இவருக்கு அன்பு மாறாதே இருக்கிற படி -க்ரம பிராப்தி பற்றாத படியான ப்ரேமம் இ றே
உ ன்னடி சேர் வண்ணம் அருளாயே.–உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும் படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் -நீ வந்து திரு மலையிலே அவசர பிரதீஷனாய் இருக்க -உன்னைப் பெற வேணும் என்னும் ருசி எனக்கு உண்டாய் இருக்க நான் கூப்பிடுகை மிகை அன்றோ –

———————————————————————–

நீர் ஒரு யத்னம் பண்ணாது இருக்க இது கிட்டுமோ என்ன உனக்கு வி லக்ஷணரான போக்தாக்கள் உண்டாய் இருக்க திருமலையில் வந்து உன்னுடைய ரஸ்யத்தையும் சரண்யத்தையும் அறிவித்து -நான் என்ன யத்னம் பண்ணி -அப்படியே மேலும் செய்ய வேணும் என்கிறார் –

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3-

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! -நிறமானது கண்டார் நெஞ்சை அறிவு கெடுக்கும் படியான அழகிய மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையவனே -வண்ணம் உண்டு -படி -ஸ்வபாவம் -அது அருள் கொண்டு இருக்கும் -கொள்வார் அளவன்றிக்கே கொடுக்கும் ஸ்வபாவனாய் இருக்கை என்றுமாம்
மாய அம்மானே!-ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடைய ஸர்வேஸ்வரனே-
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! -உண்டால் ரசிக்கை அன்றிக்கே நினைக்க ரசிக்கும் அம்ருதம் ஆனவனே
இமையோர் அதிபதியே!-நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே -தன் போக்யதையை அனுபவிப்பார் இல்லாமை வந்தானோ
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
நித்ய ஸூ ரிகள் நித்ய அனுபவம் பண்ணா நிற்கிற இ றே என்னை விஷயீ கரிக்க திருமலையில் வந்தது –தெளிந்து நன்றான வருவி மணியையும் பொன்னையும் முத்தையும் கொழித்துக் கொண்டு வந்து எற ட்டா நின்றுள்ள திருமலையை வாசஸ் ஸ்தானமாக யுடையவனே
அண்ணலே! -திரு மலையிலே வந்து உன் சேஷித்வத்தை அறிவித்தவனே
உன்னடி சேர -உன் திருவடிகளை நான் கிட்டும்படி
அடியேற்கு ஆ ஆ என்னாயே.–அடியோமுக்கு -முறை அறிந்த எங்களுக்கு -ஐயோ ஐயோ என்று கிருபை பண்ணி அருள வேணும் –
வடிவு அது -குண சேஷ்டிதங்கள் அவை -ரஸ்யத்தை அது -மேன்மை அது -ஸுலப்யம் அது -இப்படிப்பட்ட உன்னோடு உண்டான முறையை அறிவித்தால் ஆறி இருக்கலாமோ

——————————————————————-

பண்டு பரிக்லப்த்தமான அவற்றில் ஓர் உபாயமும் என் பக்கலில் இல்லை -எனக்கு என்ன ஒரு உபாயம் கண்டு தந்து அருள வேணும் என்கிறார் -வரையாதே எல்லாருடைய பிரதிபந்தகங்களையும் போக்கி ரக்ஷிக்கும் ஸ்வ பாவனான நீ -என்னை உன் திருவடிகளிலே சேரும் படி பார்த்து அருள வேணும் என்கிறார் -என்றுமாம் –

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள்கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-

ஆவா என்னாது-ஐயோ ஐயோ என்று தயை பண்ணாதே -ஈஸ்வரன் உகக்கைக்கு வேண்டுவது -பர அநர்த்தம் கண்டால்-ஐயோ என்கை -பர அநர்த்தங்கள் பிரியமாய் இருக்கை -ஆஸூர லக்ஷணம் -அப்படி ஐயோ என்னாதே
உலகத்தை அலைக்கும்-ஒருத்தனை நலிந்தால்-அலம் பிறவாமையாலே விபூதியாக அழிப்பர்கள்
அசுரர் வாணாள்மேல்-அ ஸூ ரர்கள் உடம்பில் அன்றிக்கே அவர்கள் ஆயுசிலே யாயிற்று அம்பு தைப்பது –
தீவாய் வாளி -தீப்த பாவக சங்காசை -புறப்படும் போது அம்பாய் எதிரிகள் மேலே படும் போது அக்னி ஜ்வாலையாயிற்று தைப்பது
மழை பொழிந்த சிலையா –சர வர்ஷம் வவர்ஷக-என்று அம்புகளால் பாட்டம் படமாக வர்ஷிக்கை -இப்படி வர்ஷிக்கும் ஸ்ரீ சார்ங்கத்தை யுடையவனே
திருமா மகள்கேள்வா!-பர்த்தாரம் பரிஷஷ்வஜே -என்று அவளுக்காக வாயிற்று செய்தது -ந கச்சின் ந அபராத்யதி என்னும் அவளும் கூடக் கூட்டுப் படும்
தேவா! -அப்போதை வீர ஸ்ரீ யாலே வந்த ஒளியை யுடையவனே -விரோதியைப் போக்கி பிராட்டி அங்கீ காரம் பெற்ற புகர் என்றுமாம் –
சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு -நம்முடைய விரோதிகளை போக்கினவன் வர்த்திக்கிற தேசம் என்று தேவர்களும் ரிஷிகளும் தங்கள் அபிமதம் கிடைக்கும் என்று ஆதரிக்கும் திருமலை -பூவாலே பரிபூரணமான திருவடிகள் என்னுதல் -ஸூ குமாரமான திருவடிகள் என்னுதல் -திருவடிகளுக்கு இட்டுப் பிறந்து வைத்து இழக்கும் பாபத்தை பண்ணினேன் -ஸ்வரூப ஞானத்தாலே பத்து மாசம் பிரிந்தார் பொருந்துமா போலே இருக்கிறது இவருக்கு
புணராயே.–உன்னைக் கிட்டும் வழி கற்பிக்க வேணும் என்னுதல் -நான் கிட்டும்படி பண்ண வேணும் என்னுதல் –

—————————————————————–

நீர் இங்கனம் த்வரிக்கிறது என் -உம்முடைய அபேக்ஷிதம் செய்கிறோம் என்ன அது என்று என்கிறார் –

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-

புணரா நின்ற-புணர்ந்து நின்ற -அம்புக்கு நேரோட ஒண்ணாத படி திரண்டு நின்ற
மரமேழ் அன் றெய்த -ரக்ஷணத்தில் சங்கை பண்ணின வன்று ஏழையும் ஓர் அம்பால் அழித்த-அதி சங்கை பண்ண மழு வேந்திக் கொடுத்து ரசித்தவன் கிடீர் ஆசைப்பட்ட என்னை அநாதரிக்கிறான் -அதி சங்கையைப் போக்கி பணி கொண்டவன் கிடீர் இரந்த என்னை பணி கொள்ளாது ஒழிகிறான்
ஒருவில் வலவாவோ!-ஏக வீரனே -ஓ என்று விஷாத அதிசய ஸூ சகம் –
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
புணர்ந்து நின்ற -இரண்டும் கூடி ஓன்று என்னலாம் படி பொருந்தி நிற்க -அதிலே இடம் கண்டு போய் உன்னைத் தப்புவித்து ஜகத்தை உண்டாக்கினவனே
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!-செறிந்த மேகம் என்னலாம் படி யானைகள் திரள் திரளாக சஞ்சரிக்கும் திரு மலை -யானைகளையும் மேகங்களையும் மலைக்கு சிறப்பாக சொல்லக் கடவது
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–மிக்க பலத்தை உடைய சார்ங்கம் -சக்கரவர்த்தி திரு மகனை ஒழிய எடுக்க ஒண்ணாத வில்லு -கையிலே வில்லு இருக்க விரோதி உண்டே என்ன ஒண்ணாது -உன்னைப் பெறும் நாளை யாகிலும் சொல்ல வேணும் –

——————————————————————

எந்நாள் என்கிறது என் -ஒரு தேச விசேஷத்திலே வ்யவஸ்திதம் அன்றோ -என்ன அங்குள்ளாரும் வந்து அடிமை செய்கிற திருமலையில் என்னை அடிமை கொள்ள வேணும் என்கிறார் –

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று-
நித்ய ஸூ ரிகள் பாசுரம் இருக்கிற படி -பரம பதத்தில் மேன்மையை அனுசந்திக்கிற நாம் சர்வ ஸூ லபமான திருவடிகளைக் கிட்டுவது என்றோ -என்று -இங்குள்ளார் அங்குப் போவது மேன்மையை அனுபவிக்க -அங்குள்ளார் இங்கு வருவது சீல குண அனுபவம் பண்ண -விஷயம் உண்டாகையாலே வ்யக்தமாக அனுபவிக்க லாவது இங்கே -சங்கோசம் அற்றவர்களுக்கும்-எந்நாள் என்னும் படி இ றே சீல குணத்தில் ஏற்றம்
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்-
காலம் எல்லாம் நித்ய ஸூ ரிகள் நின்று ஸ்தோத்ரம் பண்ணி இறைஞ்சி -கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரள் திரளாக இழிந்து
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்யாலும் நாவாலும் மனசாலும் வழி படுவர் என்னுதல் -மெய்யான நாவாலும் மனசாலும் என்னுதல் -அநந்ய பிரயோஜனமாக கரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும் படி திருமலையில் சந்நிஹிதன் ஆனவனே
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–
மானஸ அனுபவ மாத்திரம் அன்றிக்கே சாஷாத் கரித்து என்றோ நான் உன்னைக் கிட்டுவது -எனக்கு ருசி உண்டாய் -நீயும் சந்நிஹிதனாய் இருக்க இழக்கவோ –
இப்பாட்டு ப்ரஹ்மாதிகளை சொல்கிறது என்பாரும் உண்டு -மேலே அவர்களை சொல்லுகையாலே அது உசிதம் அன்று –

—————————————————————–

நான் நிஸ்ஸாதனாய் இருந்து வைத்து உன் போக்யத்தையால் க்ஷண மாத்ரமும் தரிக்க மாட்டுகிறி லேன் என்கிறார்-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! திரு வேங்கடத்தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

இமையோர் அதிபதியாய் -கொடியா வடு புள்ளுடையானாய் -செடியார் வினைகள் தீர்மருந்தாய் -திரு வேங்கடத்தெம் பெரு மானாய் -கோலக் கனிவாய்ப் பெருமானாய் –அடியேன் மேவி அமர்கின்ற அமுதானவனே -உனபாதம் காண நோலாதே
நொடியார் பொழுதும் ஆற்றேன் -என்று அந்வயம்-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து -பிரதிபக்ஷத்தை முடிக்கும் பெரிய திருவடியை த்வஜமாக உடையனாய் -தூறு மண்டின சாம்சாரிக துரிதங்களைப் போக்கும் மருந்தாய் -திருமலையில் நித்ய வாசம் பண்ணி -உன்னுடைய ஸுந்தரியாதிகளாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கி -ஸ்வரூப ஞானம் உடைய நான் அநந்ய பிரயோஜனமாக அனுபவிக்கிற அம்ருதம் ஆனவனே -தேகத்தை பூண் காட்டும் அம்ருதத்திலே வாசி சொல்லுகிறார் -உன் திருவடிகளைக் கிட்டுக்கைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணாதே அனுஷ்ட்டித்து பலம் தாழ்த்தாரைப் போலே கூப்பிடா நின்றேன் –

—————————————————————

நோலாது வைத்து ஆற்றேன் என்ன பெறலாமோ சிறிது எத்தனம் பண்ண வேண்டாவோ என்னில் என்ன -எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளும் சபரிகரமாக வந்து தங்கள் ஆகிஞ்சன்யத்தை ஆவிஷ்கரித்து அன்றோ தங்கள் தங்கள் அபேக்ஷிதங்களைப் பெற்று போவது – என்கிறார் –

நோலா  தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று –
உன் திருவடிகளைக் கிட்டுக்கைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணாதே இருந்து வைத்து உன் தாளை ஒழிய ஆற்ற மாட்டேன் என்று ஆயிற்று -அவர்கள் தனித்தனியே சொல்லுவது
நுண்ணுர்வின்நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்-
சத்த்வாத் சஞ்சாயதே ஞானம் -என்று சத்வம் தலை எடுத்து -தத்வ ஞானம் பிறந்த போது இவர்களும் இப்படியாயிற்று சொல்லுவது -சரணம் த்வம் அநு ப்ராப்தாஸ் சமஸ்தா தேவதா கணா-விஷத்தை கண்டத்தில் அடக்கின சக்தியை யுடையனாய் அத்தாலே ஜகத் பிரதானனாக அபிமானித்து இருக்கும் ருத்ரனும் -அவனுக்கும் ஜனகனாய் அவனிலும் ஞான சக்திகளால் பூர்ணனான சதுர்முகனும் த்ரை லோக்ய நாயகனான இந்திரனும் -ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்த்ர -என்ன கடவது இ றே –
சேலேய் கண்ணார் பலர் சூழ -உமயா சார்த்தம் ஈசான-என்கிறபடியே ஸ்த்ரீகள் கழுத்திலே கபடத்தைக் கட்டி அவர்களை முன்னிட்டுக் கொண்டு ஆயிற்று ஆஸ்ரயிப்பது-ஸ்திரீயோ அநு கம்ப்யாஸ் ஸாதூ நாம் -என்று காளியன் ஸ்திரீகளை முன்னிட்டு சரணம் புக்கால் போலேயும் -மஹாராஜர் தாரையை முன்னிட்டால் போலேயும்
விரும்பும் திரு வேங்கடத்தானே!-அவர்களுக்கு ஆஸ்ரயிக்கலாம் படி ஸூ லபனாய் வர்த்திக்கிறவனே
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–கரிய நிறத்தோடு இடையரும் இடைச்சிகளும் பிச்சேற வந்து பிறந்தால் போலே என் ஆர்த்தி தீர வர வேணும் –மாலாய்-மயங்கி இருக்கிற அடியேன் என்றுமாம் –

————————————————————-

தாம் அபேக்ஷித்த போதே காணப் பெறாமையாலே இப்போதே உன்னைக் காணா விடில் ஒரு க்ஷணமும் தரிக்க மாட்டேன் என்கிறார் –

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
அநாஸ் ரிதர்க்கு கை புகுந்தால் போலே இருந்தே அற அரியையாமவனே -ஆஸ்ரிதற்கு அரியை போலே இருந்தே கையாளாய் இருக்குமவனே –
அங்கனம் அன்றியே மனசிலே சந்நிஹிதனாய் பாஹ்ய சம்ச்லேஷத்துக்கு எட்டாதவனே -பாஹ்ய சம்ச்லேஷத்துக்கு எட்டாதவன் என்று நிராசனாய் இருந்தால் மறக்க ஒண்ணாத படி மனசை விடாதவனே
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிவந்த தாமரைப் போலே இருக்கிற திருக் கண்களையும் -சிவந்து கனிந்த திரு அதரத்தையும்-கற்பக தரு பணைத்தால் போலே நாலு தோளையும் உடைய நிரதிசய போக்யனானவனே -வாத்சல்ய பிசுநமான கண்ணும் முறுவலும்-அணைக்கைக்கு நாலு தோள்களுமாயிற்று இவ்வம்ருதம் இருப்பது
எனதுயிரே!-புண்டரீகாக்ஷமாய் சதுர்புஜமுமாயிற்று இவர் பிராணன் இருப்பது
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
பெரு விலையனான மணிகளுடைய ஒளி ராத்ரியை பகலாக்கா நின்றுள்ள திருமலை -சக்ருத்திவாவான தேசம் –
அந்தோ -ஆற்றாமையும் அபேக்ஷையும் எனக்கே பரமாவதே
அடியேன் -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்தர்யத்தை யுடைய நான்
உனபாதம் அகல கில்லேன் இறையுமே.–நிரதிசய போக்யமான உன் திருவடிகளை க்ஷண காலமும் அகல ஷமன் ஆகிறிலேன்-

———————————————————————

தன் அபேக்ஷிதம் சடக்கென தலைக் கட்டுகைக்காக பிராட்டி புருஷகாரமாக திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

பகவத் விஸ்லேஷ ஹேது கர்மமாய் இருக்க -தத் ஸ்பர்சமும் இன்றிக்கே நித்ய அநபாயினி யான இவள் -இறையும் அகல கில்லேன் என்பான் என் என்னில் -கர்மத்துக்கு அஞ்சினார் வார்த்தையே யாயிற்று விஷய வை லக்ஷண்யத்திலே அவகாஹித்தார் வார்த்தையும் -ஹேது பேதமே யுள்ளது -அவன் விஷயத்தில் போக்யதா அதிசயத்தாலே விஸ்லேஷத்தை அதிசங்கித்து சொல்லுகிறாள் -எதிர்த்தலை இவ்வார்த்தை சொல்லும்படியான ஸுகுமாரத்தையும் பருவத்தையும் உடையவள் -அவ்வலரை மறந்து நித்ய வாசம் பண்ணும்படியான மார்வு படைத்தவனே
ஒப்பில்லாத வாத்சல்யத்தை யுடையனாய் -த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் ஸ்வாமி யாய் விமுகனான என்னை இவ்வளவு புகுர நிறுத்தின சீல குணத்தை யுடையனாய் -ஒப்பின்றிக்கே இருக்கிற கைங்கர்ய நிஷ்டரும் மனன சீலருமான நித்ய ஸூ ரிகள் ஆதரித்து வர்த்திக்கும் திருமலையில் வர்த்திக்கிற ஸுலப்யத்தை யுடையவனே –
சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயாந்தரங்களில் அந்வயம் இன்றிக்கே அநந்யார்ஹ சேஷ பூதனான நான் -இத்தால் -அநந்ய கதித்வமும் ஸ்வரூப ஞானமும் ப்ரபத்திக்கு பரிகரம் என்கிறது
உன் னடிக் கீழ் -விக்ரஹ யோகம் சொல்லுகிறது
அமர்ந்து -செறிந்து -சஹகாரி வ்யவதானம் இன்றிக்கே ஒழிகை
புகுந்தேனே.–போக்கு வரவு யுண்டாய் அன்று -புத்தி க தியாய் அத்யாவசாயத்தை சொல்லுகிறது-

————————————————————

நிகமத்திலே இத்திருவாய் மொழி கற்றார் பரம பதத்தில் சென்று தாஸ்ய ரசத்தில் அபிஷிக்தராய் அடிமை செய்யப் பெறுவார்கள் -என்கிறார் –

அடிக்கீழ்  அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
தன் திருவடிகளின் கீழே அநந்ய பிரயோஜனராகப் புகுந்து ஸ்வரூப ஞானம் உடையோர் வாழுங்கோள் என்று முத்திரையால் அருளிச் செய்கிறாப் போலே யாயிற்று நின்று அருளுவது -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -மா ஸூ ச -என்றால் போலே யாயிற்று நிற்பது
படிக் கேழில்லாப் பெருமானைப்-இப்படிக்கு தனக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை
பழனக் குருகூர்ச்-அழகிய நீர் நிலங்களை யுடைய திரு நகரி
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்-தம்முடைய விரோதியை முடிக்கைக்காக திருமலையைக் குறித்து அருளிச் செய்த இப்பத்தும்
பிடித்தார் பிடித்தார் -பற்றினார் பற்றினார் என்னுதல் -பற்றினாரைப் பற்றினார் என்னுதல்
வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே-பரம பதத்தில் குறைவற்ற அடிமை செய்யப் பெறுவார் -இவர் பண்ணின பிரபத்தி யாக பரம பதத்து ஏறப் போவார்கள் –


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: