திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-8–

கீழில் திருவாய்மொழியில் திருத் தாயார் எங்கனே புகுங்கொல் -என்று நொந்ததுவே பலித்தது -தன் சாபத்தால் புறப்பட்டு
முடிய போக மாட்டாமையாலே தன்னுடைய நகர உபவனத்து அளவிலே தளர்ந்து கிடந்து-அவ்வளவிலும் வரக் காணாமையாலே
தன் தசையை அவனுக்கு அறிவிக்குமது ஒழிய மற்று ஒரு உபாயம் காணாமையாலே கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிறாள் என்று பட்டர் நிர்வஹிப்பர்
-பிள்ளான் திருக் கோளூரிலே சென்று சம்ச்லேஷம் வ்ருத்தமாய் தேவ யோகத்தால் விஸ்லேஷம் பிறக்க தூது விடுகிறாள் என்று நிர்வஹிக்கும்-
கீழ் இரண்டு திருவாயமொழி மோஹமும் உணர்த்தியுமாய் -இதில் தூத ப்ரேக்ஷணமாய் இருக்கிறது –
மயர்வற மதிநலம் அருள பெற்ற இவர்க்கு -மோஹமாவது-பாஹ்ய விஷயங்களில் அந்தக்கரணம் நிவ்ருத்தமாய்
-மனசுக்கு அவனே விஷயமாய் அவன் குணங்களையே அனுபவிக்கை -அதாவது சரீரியான அவனே ஞானத்துக்கு விஷயமாய் தன்னை மறைக்கை
-உணர்த்தியாவது -ப்ரஹ்லாஸ்தோஸ் மீதி சம்சார -என்று ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானை போலே -தம்மையும் உணர ஷமராய்
ஜகத்வ்ருத்தாந்தத்தையும் அனுசந்திக்க ஷமராய் இருக்கை –
கீழே நெடும் போது அவன் குணங்களை அனுசந்திக்கையாலே தரித்து பாஹ்ய அனுசந்தான ஷமராய் பலஹானி நீங்கி தன்னுடைய
தசையை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார்
அஞ்சிறைய மட நாறையில்-அபராத சஹத்வம் பற்றாசாகத் தூது விட்டாள்
வைகல் பூங்கழியிலே சர்வ ரக்ஷகனானவன் திரு வண் வண்டூரில் போக்யத்தையாலே கால் தாழ்த்தான் அத்தனை –
நம் ஆர்த்தியை அறிவிக்க வரும் என்று அவன் சர்வ ரக்ஷகத்வம் பற்றாசாக தூது விட்டாள்
இதில் தன் ஐஸ்வர்ய பரப்பால் மறந்து இருந்தான் அத்தனை -ஆஸ்ரிதரோடு ஏக ரசனாய் இருக்கும் -என்று
ஐக ரஸ்யம் பற்றாசாக தூது விடுகிறாள் -தக்கோர்மை பற்றாசாக தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிக்கும் –

———————————————————–

எம்பெருமானுக்கு என்னுடைய ஸ்திதியை அறிவித்து அவனுடைய பரமபதத்தையும் சம்சார விபூதியையும் நான் தர ஆள வேணும் என்று சில புள்ளினங்களை பிராட்டி இரக்கிறாள்-

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
ஈஸ்வர விபூதியானது விஸ்லேஷ தசையில் அவனையும் தன்னையும் சேர்ந்தார்க்கு பரிசிலாக கண்டது என்று இருக்கிறாள் -உபய விபூதியும் ஒரு மிதுனத்துக்கு சேஷம் இ றே-அவ்வவஸ்தை பிறந்தால் சொல்லலாம் இ றே -நித்ய விபூதியைக் கொடுத்து பின்பு லீலா விபூதியைக் கொடுக்கிறாள் -இவளுக்கு இதிலும் நித்ய விபூதி விதேயமாய் இருக்கிற படி -அவன் அடியில் காட்டிக் கொடுத்த அடைவும் இது இ றே -அயர்வறும் அமரர்கள் அதிபதி -இலனது உடையனிது -என்றது இ றே -தான் பெற்ற அடைவிலே கொடுக்கிறாள் -வி லக்ஷணமான நித்ய விபூதியைக் கொடுத்து வைத்து லீலா விபூதியைக் கொடுப்பான் என் என்னில் -பண்ணின உபகாரத் த்திலே கலங்கி கொடுக்கிறாள் -அபராவர்த்தி நாம் யாச யாச பூமி ப்ரதாயி நாம் -என்றாரைப் போலே –ஆளீரோ -உங்கள் விபூதியை அராஜமாக விட்டு வைக்கிறது என் -ஆளி கோளோ-தான் கொடுத்ததாக நினைத்து இருக்கிறிலள்
நன்னலப் புள்ளினங்காள்! -அழகிய நீர்மையை உடைய புள்ளினங்காள் -இருவருமான சேர்த்தியை ஒழிய வேறும் ஒன்றைத் தரவோ -என்று சிரித்து இருந்தன -அர்த்ததச்ச மயாபிராப்தா தேவராஜ்யா தயோ குணா ஹதசத்ரும் விஜயிநம் ராமம் பச்யாமி ஸூஸ்த்திதம் –புள் -நீர்மையோபாதி கமன பரிகரமும் உண்டாக்கப் பெற்றது –இனங்காள் -ப்ரேரிப்பாரும் அருகே உண்டு என்கை -திஷூ சர்வா ஸூ மார்க்கந்தே -என்று எல்லா திக்கிலும் போக விடலாம் படி திரளாக இருந்தபடி என்றுமாம்
வினையாட்டியேன்-கைப்பட்டவனை விட்டு உங்கள் காலிலே விழும்படியான பாபத்தை பண்ணினேன்
நான்இரந்தேன்-தர்மதபரி ரக்ஷிதா -என்று அவன் இரந்து தூது விடும்படி அறிவுதி கோள் இ றே -உபய விபூதி கொடுத்தாலும் விசத்ருசம் என்று இரப்புக்கு காரியம் செய்கிறிளோம் என்றுமாம் -க்ருத்ஸ்நாம்வா ப்ருதிவீம் தத்யான் ந தத்துல்யம் கதஞ்சன -இ றே -நாங்கள் சொன்ன வார்த்தையை அவன் கேட்க்குமோ-என்ன
முன்னுலகங்களெல்லாம் படைத்த -ஸ்ருஷ்ட்டி காலத்தில் வரையாதே சகல லோகங்களையும் உண்டாக்கினவன்-அழிந்தவற்றை உண்டாக்கினவன் உண்டான வஸ்துவை அழிக்குமோ-உண்டாக்கும் இடத்தில் தரமிடாதவன் தன்னைப் பெற வேணும் என்று இருப்பாரே தரம் விடுமோ
முகில் வண்ணன்-தரம் இட்டாலும் விட ஒண்ணாத வடிவு -தன் பேறாக கொடுக்குமவன் என்றுமாம் –
கண்ணன்-ஆஸ்ரிதற்கு தன்னைக் கையாள் ஆக்குமவன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு-என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணினவன் -என்னை அநந்யார்ஹம் ஆக்கின உபகாரகன் –என்னுடைய ஸ்த்ரீத்வத்தை அழித்து-தூது போகைக்கு உங்கள் காலிலே விழும்படி பண்ணினவனுக்கு
என் நிலைமை உரைத்தே.-அவன் படிக்கு பாசுரம் இட்டுச் சொன்னாள்-தன் படிக்கு பாசுரம் இல்லை என்கிறாள் -ஏஹி பஸ்ய சரீராணி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள் -யதோ வாசோ நிவர்த்தந்தே என்கிற விஷயத்துக்கு பாசுரம் இட்டவள் தன் ஆற்றாமைக்கு பாசுரம் இட மாட்டுகிறிலள்
உரைத்து -வாசா தர்மம் அவாப்னுஹி-என்று ஒரு வார்த்தை சேர அமையும் –

———————————————————

எம்பெருமானுக்கு என்னுடைய ஆற்றாமையை  அறிவித்து வந்து நானும் தோழிமாரும் கொண்டாடும் கொண்டாட்ட்த்தை அங்கீ கரிக்க வேணும் என்று சில கிளிகளை அர்த்திக்கிறாள்-

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-

மையமர் வாள்நெடுங்கண் -இவர்கள் வரவால் வந்த ப்ரீதியாலே -அவன் வரவு தப்பாது என்று இவர்கள் அலங்கரிக்க -அத்தாலே அலங்கரித்து ஒளியை யுடைத்தாய் பெருத்து இருந்துள்ள கண்களை யுடையவர்கள் என்னுதல் -இவள் தான் -மைய கண்ணாள் இ றே -ஆகையால் ரூப சாம்யம் தோழிமாருக்கும் உண்டாய் இருக்கையாலே சொல்லுதல்
மங்கைமார் -அவனுக்கு தன்னேராயிரம் பிள்ளைகள் போலே இவளுக்கும் தன் பருவத்தில் தோழிமார் உண்டாய் இருக்கிறதாயிற்று
முன்பு-எல்லாரும் சூழ இருந்து கொண்டாட
என்கை இருந்து-அவர்கள் ஆதரிக்க விட்டுக் கொடேன் -அவர்கள் ஓலக்கம் இருக்கும் அத்தனை -என் கையிலே இருக்க வேணும் – என்கை இருந்து-தன் கையை மதித்த படி -அடிச்சியோம் தலை மீசை நீ அணியாய்-என்கிறது அவனுக்கும் உண்டாகையாலே அவன் தலையில் இருக்கக் கடவ கை –அத்தை உங்களுக்கு பாத பீடம் ஆக்கக் கடவேன் -உபய விபூதியையும் கொள்ளுங்கோள் என்றார் கீழ் -உபாயவிபூதி உக்தன் தலையிலே இருக்கக் கடவ கையை உங்களுக்கு பாதபீடம் ஆக்கக் கட வேன் -என்கிறாள் இதில் –
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
நெய்யோடும் பாலோடும் கூடின அடிசில் -நெய்யிடை நல்லதோர் சோறு என்கிறபடிய ஆஜ்யமிஸ்ரமாய் பால்முடிவான சோறு -இன்னடிசில் -எல்லாம் கண்ணன் என்று இருக்கிறவள் இவள் உகப்பது தேடிக் கொடுக்கிறாள் -பகவத் விஷயத்தில் உபகாரகர்க்கு -யதன்ன புருஷோ பவதி -என்னும் அளவு போராது-அவர்கள் உவப்பது தேடி இட வேணும் என்கை –
நிச்சல்-பகவத் விஷயத்தில் வாசி அறிய அறிய உபகாரகரை கொண்டாடும் அத்தனை இ றே –மேவீரோ -ஸ் வீகரியீரோ -என் பேறாக ஸ் வீகரிக்க வேணும் என்கை –உபாய நாந்யுபாதயா மூளா நிச பலா நிச-என்று திருவடியை முதலிகள் கொண்டாடினால் போலே
கையமர் சக்கரத்து-என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு–கை கழலா நேமியான் என்கிறபடியே கையும் திரு ஆழியுமான சேர்த்தியையும் -முறுவலையும் காட்டி என்னை அநன்யார்ஹை ஆக்கினவன் -பிரிந்து போகிற போது இவள் சத்தை கிடக்க வேணும் என்று பண்ணின ஸ்மிதத்துக்கு யாயிற்று இவள் தோற்றது –ராஜபுத்திரர்கள் கையில் இடைச்சரி கடைச்சரிக்கு தோற்று எழுதிக் கொடுப்பாரை போலே கையும் திரு வாழி யாய் இருந்த சேர்த்திக்கு தோற்ற படி -திருவாழி க்கு நித்ய வாசம் பண்ணும் படி கையைக் கொடுத்து -என்னை முறுவலாலே தோற்பித்து எட்டாத படி எழ நின்றான் -என்றும் சொல்லுவார்கள் –
கண்டு -எனக்கு முன்னே நீங்கள் கண் படைத்த லாபம் பெற இ றே புகுகிறி கோளே
மெய்யமர் காதல் சொல்லிக்-திருமேனியில் அணைய வேண்டும்படியான காதல் -என் உடம்போடு அணைய வேண்டும் காதல் என்றுமாம் -காத்ரைச் சோகாபி கர்ச்சிதை சம்ஸ்ப்ருசெயம்-என்ன கடவது இ றே -குண ஞானத்தால் தரிக்கும் அளவன்று என்று சொல்லுங்கோள் -என்று சீயர் அருளிச் செய்வர் -பிள்ளான் -தம்மை போல் பொய்யாய் நிலை நில்லாத காதல் அன்று என்று சொல்லுங்கோள் என்று பணிக்கும்
கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–பிராட்டியை கண்டு மீண்ட அநந்தரம் முதலிகள் வந்து பெருமாளை உகப்பித்தால் போலேயும்-திருவடி ஸ்ரீ பரத ஆழ்வானை உகப்பித்தால் போலேயும் நீங்கள் முன்பே வர வேணும் –நீங்களும் அவனும் கூட வந்து வாய் புகு நீர் ஆகாமே-முன்பே உங்களை கொண்டாடி ப்ரீதி சாத்மித்தால் பின்பு அவன் வரவாம் படி வர வேணும்-

—————————————————-

இனமாய் இருக்கிற வண்டுகளைக் குறித்து எம்பெருமானுக்கு தன் தசையை அறிவித்து வந்து என் தலை மேலே வர்த்தியுங்கோள் என்கிறாள் –

ஓடிவந்து  என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3-

ஓடி வந்து -முன்பே அவற்றின் வார்த்தை கேட்க்கையில் உண்டான த்வரையாலே யாதல் -அவற்றை அனுபவிக்கையில் உண்டான த்வரையிலே யாதல் -சடக்கென வர வேணும் என்கிறாள்
என்குழல்மேல்-அவனோடே போக சாம்யம் உண்டாம் படி பண்ணைக் கட வேன் -அவன் தனக்கு தூது போனவர்களுக்கு ததிமுகன் காத்து இருக்கிற காவல் காட்டை அழிக்கக் கொடுத்தான் இ றே -அவன் காவல் காட்டை அழிக்க தருகிறேன் உங்களுக்கு -என்கிறாள் -அஹமாவாராயிஷ்யாமி யுஷ் மாகம் பரிபந்தின-என்று திருவடி யைப் பற்றி அழிக்கவும் வேண்டா வி றே -இவளுடைய ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து இருக்கிற படி -உங்களுடைய வரவால் தளிர்த்து இருக்கிற என்னுடைய குழலிலே –ஒளிமாமலர் ஊதிரோ?-ஒளியை யுடைத்தாய் சிலாக்கியமான மலரில் மதுவைப் பானம் பண்ணீரோ –ஊதிரோ?-மதுவின் ஸம்ருத்தியாலே கிண்ணகத்தில் இழிவாரைப் போலே இழியமாட்டாதே நின்று பறக்கிற படி -உங்கள் காரியமுமாய் பர ரக்ஷணமும் ஆனால் ஆறி இருக்கிறது என் என்கை
கூடிய வண்டினங்காள்! -மஹா ராஜரை போலே படை திரட்ட விராதே -என்னுடைய ரக்ஷணத்திலே ஒருப்பட்டு முன்பே திரண்டு இருக்கப் பெற்றது இ றே
குருநாடுடை ஐவர்கட்காய்-நாடு உடையவர்கள் ஐவரும்மே என்று இருக்கிறாள் -துரியோதனாதிகள் கிடந்த ஆனை கண்டு ஏறும் அத்தனை இ றே -நாடுடை மன்னர் என்கிறபடியே ராஜ்ஜியம் உடையவர்கள் அவர்கள் -நாம் அவர்களுக்கு கையாளாய் வ்யாபாரிக்கிறோம் என்று ஆயிற்று அவன் நினைத்து இருப்பது -அவன் நினைவு இ றே இவளுக்கு நினைவு
ஆடிய மாநெடுந்தேர்ப் -மநோ ஹரமாம் படி சஞ்சரியா நின்ற குதிரை பூண்ட பெரும் தேரை உபகரணமாகக் கொண்டு -மஹதி ஸ் யந்தனே -என்ன கடவது இ றே
படைநீறுஎழச் செற்றபிரான்-ஆயுதம் எடாமைக்கு அனுமதி பண்ணுகையாலே தேர்க் காலாலே சேனையைத் துகள் ஆக்கினான் -பிரான் -அவனுக்கு பரார்த்தமாக வ்யாபாரிக்கையே ஸ்வரூபம் -தாழ்த்தது ஒவ்பாதிக்கம் என்று இருக்கிறாள்
சூடிய தண்துளபம்உண்ட -சாரார்த்தியம் பண்ணும் போது வைத்த வளையத்தில் மது பானம் பண்ணின -அவதாரங்களில் ஏதேனும் ஒன்றாலே வளையம் வைக்கிலும் அவ்வஸ்தையை பிராப்பித்து அனுகூலிக்கிறது-திருத் துழாயாக கடவது
தூமது வாய்கள்கொண்டே.–அம்மதுவை பானம் பண்ணுகையாலே சுத்தமாய் தேனை யுடைய வாய்களோடே கூட -இனிதான பேச்சை யுடைத்தாய் இருக்கை என்றுமாம் -வாய் -வார்த்தை -த்ருஷ்டா சீதா என்றால் போலே -என்னையும் மது பானம் பண்ணுவித்து நீங்களும் மது பானம் பண்ணுங்கோள்-

——————————————————————

என்னை நோவு படுத்திப் போந்து -எட்டா நிலத்திலே ஓலக்கம் இருந்து -வளையம் வைத்து போது போக்கி -ஓரம் செய்கையோ நாம் தக்கோர் ஆனபடி என்று திரு நாட்டிலே சென்று எம்பெருமானுக்கு சொல்ல வேணும் என்று சில தும்பிகளைக் குறித்து அருளிச் செய்கிறாள்-

தூமது  வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
நான் வளர்க்கிற முல்லைகள் மேலே வர்த்திக்கிற தும்பிகாள் -இவள் உறாவுகையாலே பேணி நீர் வார்ப்பார் இல்லாமையால் உறாவின முல்லைகள் மேலே பட்டினி விடுகிறவை இ றே -என்னோடே ஓக்க நோவு பட பிறந்த நீங்கள் -என் பரிசரத்தில் முல்லைகள் என்றுமாம் -இவள் வர்த்திக்கிற எல்லை அடங்க சருகாய் இ றே கிடக்கிறது -சுத்தமாய் இனிய பேச்சுக்களைக் கொண்டு சென்று —வந்து,-வரவு செலவை காட்டுகிறது –
பூமது உண்ணச் செல்லில்-மது வ்ரதங்கள் ஆகையால் பூ உள்ள இடம் தேடி மது உண்ண போகில்
வினையேனைப் பொய்செய்தகன்ற-பிரியேன் -பிரிவில் தரியேன் என்ற பொய் யை மெய் என்று பிரமிக்கும் படியான பாபத்தை பண்ணின என்னை -ராமோ த்விர் நாபி பாஷதே -என்னுமவன் இரண்டு வார்த்தை சொல்லும்படியான பாபத்தை பண்ணினேன்
பொய் செய்து -இந்திர ஜாலம் என்றும் களவு என்றும் கலவி என்றும் பர்யாயம் இ றே –அகன்ற -தன் பேறாக கலந்து பொகட்டு கை கழிய போனபடி
மாமது வார்தண் துழாய்முடி -திருக் குழலிலே செவ்வியாலே மிகவும் மது தாரையை யுடைத்தான திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு முடியை யுடையவன் –அகன்ற மாமது வார்தண் துழாய்முடி-இவள் பரிசரம் அடங்க சருகாய் கிடக்க பிரிவே நீராக அவன் வைத்த வளையம் மது சொரிகிறது இ றே
வானவர் கோனைக்கண்டு-அவ் வழகை நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்துக் கொண்டு இருக்குமவனை -புதியாரை நோவு பட விட்டு பழையாருக்கு ஓலக்கம் கொண்டு இரா நின்றான் -த்வயி கிஞ்சித் சமா பன்ன என்கிற இது யுக்தி மாத்ரமாய் விட்டது இ றே –கண்டு -நீங்கள் முன்பே காணப் பெறுகிறி கோள் இ றே –
தாம்இதுவோ தக்கவாறு -நாம் தக்கோரான படி இதுவோ -என்னுங்கோள் -ஸ்த்ரீவதம் பண்ணிப் போந்து -பிரிவு அறியாத அந்தரங்கருக்கு ஓலக்கம் கொடுத்து ஆன்ரு சம்சயம் கொண்டாடிக் கொண்டு இருக்குமதுவோ தக்கோர்மை
என்னவேண்டும் கண்டீர் -அப் பேர் ஓலக்கத்தில் பெரிய மதிப்பனைக் கண்டு வைத்து இப்படிச் சொல்ல வேணுமோ என்னாதே இவ்வார்த்தை இத்தனையும் சொல்ல வேணும் –வாசா தர்மம் அவாப் நுஹி
நுங்கட்கே.–கலந்து வைத்து பொகட்டு போனவனில் காட்டில் -ஆற்றாமையை முகம் காட்டின உங்கட்க்கு இத்தனையும் செய்ய வேண்டாவோ-

———————————————————————

எங்கேனும் போயாகிலும் அவனைக் கண்டு தம்முடைய தக்கோர்மை இருக்கும்படி இதுவோ என்னுங்கோள் என்று தன்னுடைய கிளிகளைக் குறித்து சொல்லுகிறாள்  –

நுங்கட்கு  யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
நுங்கட்கு – ஏகம் துக்கம் ஸூஞ்சநவ் -என்று இருக்கும் உங்களுக்கு – யான் –என் சர்வ பாரங்களையும் உங்கள் மேலே வைத்து இருக்கிற நான்--உரைக்கேன் -என் கார்யம் நீங்களே உணர்ந்து செய்யக் கடவி கோளாய் இருக்க -வார்த்தை சொல்லுவது என் ஆற்றாமையால் இ றே
வம்மின்- என் காரியத்துக்கு உபாய சிந்தை பண்ணி இருக்கிற உங்களுக்கு ஒரு விரகு சொல்ல வாருங்கோள்
யான்வளர்த்த கிளிகாள்!-அவன் பரிகரம் போலே செருக்கி இருக்க பிறந்தி கோளோ நீங்கள் -ரக்ஷகர் தேட்டமான தசையில் ரக்ஷணத்திலே ப்ரவர்த்தியாது செருக்கு அடித்து இருக்கலாமோ -தன்னைத் தோற்றி ரஷ்ய ரஷிய நியதி அற்றது இ றே
வெங்கட் புள்ளூர்ந்து வந்து -பிரதிகூலர்க்கு பயங்கரமான த்ருஷ்ட்டியை யுடைய பெரிய திருவடியை நடத்திக் கொண்டு வந்து வழியில் உண்டான பிரதிபந்தகங்களை போக்க வல்லன் என்னுதல் -கண் பாராதே பிரித்துக் கொண்டு போனவன் என்னுதல் -அக்ரூர க்ரூர ஹ்ருதய –
வினையேனை -பிரிந்தால் தரிப்பு அரிதான பாபத்தை பண்ணின என்னை –
நெஞ்சம்கவர்ந்த-நெஞ்சை நிஸ் சேஷமாக அபஹரித்த-நாட்டாருக்கு மநோ விஹாச ஹேதுவான விஷயம் என் நெஞ்சை அழிக்கும் படி ஆ-கண்ணாலே குளிர நோக்கி மேருவைக் கினிய வொரு காள மேகம் பணிந்தால் போலே தன் வடிவைக் காட்டி யாயிற்று நெஞ்சை அபஹரித்தது
செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை-அவ்வளவு அன்றியே முறுவல் செய்து -தன்னையையும் தன்னுடைமையையும் எனக்காக்கி யாயிற்று நெஞ்சை அபஹரித்தது -அன்றியே நெஞ்சை அபஹரித்த ஹர்ஷத்தாலே திருக் கண்ணும் விகசிதமாய்-காள மேகம் போலே வடிவும் குளிர்ந்து -அதுக்குப் பரபாகமாய் சிவந்த திருப் பவளத்தையும் உடையனாய் -தானே அபேக்ஷித்துத் தன்னைக் கொடுக்கும் வி லக்ஷண கற்பகமாய் இருந்தவனை
எங்குச்சென் றாகிலும் கண்டு -கீழே வானவர்கோனைக் கண்டு என்கிறபடியே லோகத்தில் அன்றிக்கே ஏகாந்த ஸ்தலத்தில் சென்றாகிலும் வார்த்தை சொல்லுங்கோள் -அங்கனம் அன்றியிலே-அநே நைவ ஹிவே கேந கமிஷ்யாமி ஸூ ராலயம் -என்கிறபடியே -பரமபதத்தில் கண்டிலோம் -என்று மீளாதே வ்யூஹ விபாவாதிகள் எங்குத் தேடியாகிலும் கண்டு சொல்லுங்கோள்
இதுவோ தக்கவாறு என்மினே!–ஸ்தான பேதம் உண்டாகிலும் பாசுரம் இதுவே -நீர்மை கொண்டாடி இருப்பார்க்கு இது அல்லது மர்மம் இல்லை -இத்தை சொல்லுங்கோள்-

————————————————————————-

ஆஸ்ரிதரோடு ஏக ரசனாகையாலே நமக்கு அபேக்ஷிதங்கள் செய்யுமவன் பாடே சென்று இதுவோ தக்கவாறு என்று சில பூவைகளைக் குறித்து சொல்லுகிறாள்

என்மின்னு  நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-

என்மின்னு நூல்மார்வன்--மேகத்திலே மின்னினால் போலே திரு யஜ்ஜோபவீதத்தைக் காட்டி என்னை அநன்யார்ஹை யாக்கினவன்
என்கரும்பெருமான் -அதற்கு பரபாகமான வடிவை எனக்காக்கி என்னை அடிமை கொண்டவன்
என்கண்ணன்-இங்கனம் பிரித்து சொல்ல வேண்டாத படி தன்னை எனக்கு கையாளாக்கினவன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்-அவனுடைய ஐகரஸ்யம் சொல்லுகிறாள் -ஆஸ்ரிதர் இருந்த இடத்து அளவும் செல்லும் திருவடிகள் -என்னுதல் -அளவிறந்த போக்யதை உடைய திருவடிகள் என்னுதல் -திருவடிகளில் பொருந்தி சிரமஹரமான திருத் துழாயில் செவ்வி நமக்கு அல்லது கொடான் -இனியது கண்டாள் ஸ் வார்த்தம் என்று இராதே பக்தானாம் என்று இருக்குமவன் -அதாவது ஆஸ்ரிதரோடு ஏக ரசனாய் இருக்கை
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
நீங்கள் அபேக்ஷியாது இருக்க -நான் சொல்லுங்கோள் என்று -ரஷ்யங்களான உங்களை -ரஷகை யான நான் -கற்பித்து வைத்த மாற்றம் -தண்துழாய் நமக்கன்றி நல்கான்-என்கின்ற மாற்றத்தை என்னுதல் -இதுவோ தக்கவாறு என்று கற்பித்த மாற்றத்தை என்னுதல்
சொல்லிச் சென்மின்கள் -அவனுக்கு மறுமாற்றத்துக்கு அவகாசம் இல்லாத படி -கிட்டினால் -என்று இராதே -வழியே பிடித்து சொல்லிக் கொண்டு செல்லுங்கோள்
தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–என் கார்யம்நானே தலைக் கட்ட வேண்டி -இதுக்கு உங்களை தூதாக விட வேண்டும்படி பாபத்தை பண்ணினேன் -நானும் அவனும் கூட உங்களுக்கு அபிமதம் தேடித் தருகை ஒழிய -என் அபிமதத்துக்கு உங்களைபோக விடும் படியான பாபத்தை பண்ணினேன் என்றுமாம் –

——————————————————————

பரம சேதனன் பொகட்டுப் போனான் -சைதன்யம் லேசம் உடைய பக்ஷிகள் பறந்து போயினவும் அந்நிய பரமாயினவும் ஆயிற்றன -இதுக்கு ஹேது சேதனங்களையோ -என்று பார்த்து -அசேதனமான பாவையை இரக்கிறாள் –

பூவைகள்  போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7-

பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்
பூவைப் போப் போலே இருக்கிற நிறத்தை யுடையவன் -வடிவில் போக்யதை இருக்கிற படி -பிரிந்தார் உடம்பில் வை வர்ணயம் குடி புகுரும்படியான வடிவு -அகவாயில் தண்ணளி எல்லாம் தோற்றும் படியான கண் அழகை யுடையவன் -பிரிந்தாரை பாவைகள் காலிலே விழ விடும் கண் இ றே
யாவையும் யாவருமாய் நின்ற-சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாய் நின்றவன் -தத் அநு ப்ரவஸ்ய சச்சத்தியச்சாபவத் -சம்ச்லேஷ தசையில் ஏக வஸ்து என்னலாம் படி கலக்க வல்லவன்
மாயன்-ஏக வஸ்து என்னலாம் படி கலக்கச் செய்தெ தத் கத தோஷ ஸ்பர்சம் இல்லாத ஆச்சர்ய பூதன் –கலந்து பிரிந்த அநந்தரம் இத்தலையில் ஸ்பர்ச கந்தமும் இல்லை -என்று தோற்றும்படி இருக்குமவன் –
எ ன் னாழிப்பிரான்-கையும் திரு வாழி யுமான சேர்த்தியைக் காட்டி என்னைத் தோற்பித்த உபகாரகன் -அழுக்கு பதித்த உடம்பில் காட்டில் பரஞ்சுடர் உடம்புக்கு உண்டான வாசி சொல்லுகிறது
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
தன்னை அனுபவிக்கைக்கு விரோதியை போக்குவானும் தானே என்கிறது -கேசி வாயில் அகப்பட்டார் தாம் போ-ஸ்வ பாவ சித்தம் என்கை -விரோதி நிரசனம் கிருஷ்ணாவதாரம் தொடங்கி அன்று-முதலே தொடங்கி வருகிறது என்கை
என் மாற்றம் சொல்லிப்-தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -என்று ஆஸ்ரிதரோடு ஏக ரசன் என்கிற பாசுரத்தை சொல்லி –பாவைகள் வினையாட்டிட்டேன் பாசறவு தீர்க்க வல்லி கோளே -நம் தசையை கண்டு வைத்து பக்ஷிகள் பறந்து போயிற்று -நம் தசையைக் கண்டு என்னாய் விழுகிறதோ என்று ஸ்தைப் தையாய் இருந்தன பாவைகள் என்று இருந்தாள்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.
இருவரும் கூட இருந்து கொண்டாடக் கடவ உங்களை தூது போக விடும்படியான பாபத்தை பண்ணினேன்
-பசுமை அறுகை -வை வர்ணயம் குடி புகுருகை-பந்துக்களோட்டை பற்று அறுதியைச் சொல்லவுமாம் –

——————————————————————-

முன்னே நின்ற குருகைக் குறித்து நித்ய ஸூ ரிகளைப் போலே உம்மால் அல்லது செல்லாத இவள் உம்மைப் பிரிந்து நோவு படா நின்றாள் -என்று சொல் என்கிறாள் –

பாசற  வெய்தி இன்னே வினையேன் எனைஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக்குருகே! அருள்செய் தொருநாள்
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.–6-8-8-

பாசற வெய்தி -வை வர்ணயத்தை பிரா பித்து என்னுதல் -பந்துக்கள் பக்கல் பற்று அற்று என்னுதல் –பாசறவு -பாசம் அறுகை –
இன்னே -தன் தசைக்கு பாசுரம் இல்லாமையால் தன் வடிவைக் காட்டுகிறாள்
வினையேன் எனைஊழி நைவேன்?-பிரிவுக்கு முடிவு காண ஒண்ணாத பாபத்தை பண்ணின நான் -எத்தனை காலம் துக்கப் படக் கட வேன் -முன்பு பிரிந்தார் பத்து மாசமாதல் -பதினாலு ஆண்டு ஆதல் இ றே பிரிந்தது -சம்ச்லேஷம் விஸ்லேஷத்தோடே வ்யாப்தமான வோபாதி-விஸ்லேஷமும் சம்ஸ்லேஷாந்த மாகாத படியான பாபத்தைப் பண்ணினேன் –
ஆசறு தூவி -பழிப்பு அற்ற சிறகு
வெள்ளைக்குருகே! -வடிவும் மனசும் நிர்மலமாகை-பர அநர்த்தம் பொறுக்க மாட்டாது ஒழிகை -மனஸ் ஸூ க்கு நைர்மால்யம்-புறம் போல் உள்ளும் கரியான் -என்கிறவனுக்கு எதிர் தட்டாய் இருக்கை
அருள்செய் தொருநாள்-ஒரு நாள் கிருபை பண்ணி -இவ்விஷயத்தில் கடகர்க்கு எல்லாம் செய்தாலும் பிரதியுபகாரம் ஆகாமையாலே கிருபையால் செய்தார்கள் என்று இருக்க வேணும் என்கை
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு
பழிப்பற்ற நீலச் சுடரை யுடைய மயிர் முடியை யுடையனாய் -அத்தை நித்ய ஸூ ரிகளை அனுபவிப்பித்துக் கொண்டு இருக்கிறவனைக் கண்டு -ஒரு நீர்ச்சாவி கிடக்க கடலிலே வர்ஷிக்குமா போலே –
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.
கிலேசப் படா நின்றாள் என்னுதல் -பிறர் ஏசும் எல்லை கடந்தாள் என்னுதல் -நும்மை அல்லால் மறு நோக்கு இலள் பேர்த்து மற்று -என்று கீழில் பாட்டோடு சேரக் கடவது -நும்மை அல்லால்-பேர்த்து -மற்று மறுநோக்கிலள் -உம்மை ஒழிய வேறு குளிர பார்ப்பார் இல்லை -சகீ பிஸ் ஸூ க மாஸ்வ -என்று குண கீர்த்தனம் பண்ணி ஜீவிக்கும் எல்லையும் கழிந்தது –

——————————————————————

நீங்கள் சென்றால் அவன் வந்திலனேயாகிலும் -அங்குத்தை வார்த்தையைக் கொண்டு வந்து நித்தியமாக உஜ்ஜீவிப்பிக்க வேணும் என்று சில புதா வினங்களை இரக்கிறாள்-

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-

பேர்த்து மற்றோர் களை கண் -உங்களை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகரை உடையேன் அல்லேன் -கடைக்கார பக்கலிலும் அநந்ய கதித்தவமே ஆவிஷ்கரிக்கக் கடவது
வினையாட்டியேன் நான்-ஒன்றிலேன்-ரக்ஷகனாய் குணாதிகனானவன் உபேக்ஷிக்கும் படி பாபத்தை பண்ணின நான் –சாஷாத் ரக்ஷகன் பொ கட்டுப் போக -உங்கள் காலிலே விழும்படி பாபத்தை பண்ணினேன்
நீர்த்திரை மேல்உலவி-தரையிலே சஞ்சரிக்குமா போலே நீர்த்திரை மேல் சஞ்சரிக்க வற்றாய் இருக்கை -நடுவிலே கடல் உண்டு என்று இறாய்க்க வேண்டா வி றே உங்களுக்கு -ஆவரண ஜலம் விரஜை இவை கண்டு இறாய்க்க வேண்டா வி றே
இரை தேரும்-உபவாச க்ருசரை ஜீவிப்பித்து அன்றோ நீங்கள் ஜீவிப்பது
புதா -பெரு நாரை –
இனங்காள்!
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் -விண்ணவர்கோனை
கறுப்பு எல்லாம் திரண்டால் போல் இருக்கிற மஹா மேகம் போன்ற வடிவை உடையவன் -கார் காலத்தில் திரண்ட மேகம் என்றுமாம் –மா முகில் -மாறாதே கொடுக்க வல்ல முகில் –கண்ணன் -தன்னை பிறருக்கு ஆக்கி வைக்குமவன் –விண்ணவர்கோனை-மத்ஸ்யத்துக்கு தண்ணீர் வார்பாரை போலே இவ் வழகையும் குணத்தையும் நித்ய ஸூ ரிகளை அனுபவிப்பித்து இருக்கிறவனை
கண்டு -வார்த்தைகள் -காணப் பெற்று சொல்லும் வார்த்தைகளை கேட்க்க கடவி கோள் இ றே -மா ஸூ ச என்ற பலத்தோடு வியாப்தமான வார்த்தைகளைக் கொண்டு
கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–என் பக்கலிலே கிருபை பண்ணி -அங்குத்தை வார்த்தைகளைக் கேட்டு வந்து இருந்து -நாள் தோறும் எனக்குச் சொல்லி உஜ்ஜீவிப்பிக்க வேணும் –

———————————————————————

சில ஹம்ஸ மிதுனங்களைக் குறித்து பிராட்டியும் தானுமான ஏகாந்தத்திலே என் தசையை விண்ணப்பம் செய்து மறுமாற்றம் வந்து சொல்ல வேணும் என்கிறாள் –

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்குஎன்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10-

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
வந்து – அழையாது இருக்க நீங்களே வந்து -மஹா ராஜர் இருந்த இடத்தே வந்து உபகரித்தவரைப் போலே இருந்ததீ உங்கள் நீர்மை -இருந்து -என் ஆர்த்திக்கு எல்லாம் உடன் கேடராய் இருந்து
உம்முடைய மணிச்சேவலும் நீரும்-சிலாக்யமாய் பவ்யமான சேவலும் -அப்படியே இருக்கிற நீரும் –பிரிந்து தானும் உடம்பு வெளுத்து பேடையையும் உடம்பு வெளுக்கப் பண்ணும் சேவலைப் போல் அன்றிக்கே இருக்கை -எல்லாம் -ச புத்ர பவ்த்ரம் ச கண என்கிறபடியே சபரிகரமாக
அந்தரம் ஒன்றுமின்றி -சம்போகத்துக்கு வர்த்தகமான பிரிவும் இன்றிக்கே
அலர்மேல் அசையும் அன்னங்காள்!-பூவின் மேல் கலவியால் வந்த ப்ரீதியோடே சஞ்சரிக்கிற அன்னங்காள் -மிதுனம் ஆனால் பூவிலும் சஞ்சரிக்கலாம் ஆகாதே
என்திரு மார்வற்கு-என் ஸ்வாமி நி யான பெரிய பிராட்டியாரை திரு மார்விலே உடையவர்க்கு -அவள் அருகே இருக்க அடி இல்லாதாவரைப் போலே நோவு படுகிற படி கண்டி கோளே
என்னை -அச் சேர்த்தியில் அடிமை செய்ய ஆசைப் பட்டு இழந்து இருக்கிற என்னை
இன்னவாறிவள் காண்மின்என்று-இப்படி துர்கதை யானாள் இவள் என்று -இவளுடைய வை வர்ணயத்தை தங்கள் உடம்பிலே ஆவிஷ்கரித்து காட்ட வல்ல போலே காணும் இவை என்று சீயர் அருளிச் செய்வர்
மந்திரத் தொன்றுணர்த்தி-உங்கள் வார்த்தை விலை செல்லும் படி அவளும் அவனுமான ரகஸ்யத்திலே -ப்ரேமாந்தராய் வத்யதாம் என்கிறவர்கள் சந்நிதி ஒழிய சொல்லுங்கோள் -பராக்குக்கு சம்பாவனை உள்ள லோகத்தில் சொல்லாதே கொள்ளுங்கோள்
ஓன்று உணர்த்தி -மத்யம பதத்தில் சொன்னபடியே அநன்யார் ஹதையை விண்ணப்பம் செய்து
உரையீர்மறு மாற்றங்களே.–பூர்வ அபராதத்தை பார்த்து அவன் சொன்ன வார்த்தைகளையும் நம் தசையையும் சம்பந்தத்தையும் பற்ற அவன் சொல்லும் வார்த்தைகளையும் வந்து சொல்லுங்கோள் –

————————————————————————-

நிகமத்தில் இப்பத்தில் ஆழ்வாருடைய ஆர்த்தியை அனுசந்தித்தார் சிதிலர் ஆவார் என்கிறார் –

மாற்றங்கள்  ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நல்ல சொற்களை தெரிந்து கொண்டு -இத்தசையிலும் வாசக சப்தங்கள் வி லக்ஷணமாய் இருக்கிற படி -சோக ஸ்லோகத்வமாகத -என்கிறபடியே -விரோதிகளை போக்கி தன்னை யுபரிக்குமவனை யாயிற்று கவி பாடிற்று
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தூத ப்ரேஷணத்தாலே-வரவு தப்பாது என்று ஊர் சஞ்சாத பரிமளம் ஆனபடி
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
நிதியினுடைய தோற்றம் போலே இருக்கை -ஆவிர்ப்பவித்த ஆயிரம் –
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–ஊற்று வாயில் சிறு மணல் போலே நீராய் சிதிலர் ஆவார் -நம் தசையை வாய் விட்டு நாட்டை அழித்தோம் ஆகாதே என்கிறார் -இத்தை பலமாகச் சொல்லிற்று -பகவத் பிரவணரைக் கண்டு ஈடுபடுகை நாட்டார்க்கு ப்ராப்யம் என்கைக்காக


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: