திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-6–

கீழில் திருவாய் மொழியில் இவளுக்கு பிறந்த தசை முற்றி வ்யஸனம் அதிசயிக்கையாலே அது பொறுக்க மாட்டாமையாலே
இவளுடைய தோழியும் மோஹிக்க -இது தசையிலும் இவளை ஜிவிப்பிக்க விரகுகளை மநோ ரதிக்கையாலே தரித்து இருக்கிற திருத் தாயார்
இவளுடைய வலயாதிகள் காணக் காண சிதிலமாய் போகிற படியைக் கண்டு -அவற்றைத் தனித் தனியே சொல்லி கூப்பிடுகிறாள்
-நகர பத்த நாதிகள் வேவப் புக்காள்-அது விழுந்தது உது விழுந்தது என்னுமா போலே விரஹ அக்னியால் தன் மக்கள் இழந்தவற்றைச் சொல்லுகிறாள்
கீழில் திருவாய் மொழியில் அலாப தசையோபாதி கிடையாது என்றாலும் விட மாட்டாத படி தன்னுடைய மநோ வாக் காயங்கள்
இவ்விஷயத்தில் அதி பிரவணமான படி சொல்லிற்று
-இதில் அந்த அலாபத்தால் வந்த பாரவஸ்யத்தை சொல்லுகிறது –

————————————————————

இவள் ஸ்ரீ வாமன ப்ராதுர்பாவத்தில் குண சேஷ்டிதாதிகளிலே அகப்பட்டு வளை இழந்தாள் என்கிறாள் –

மாலுக்கு  வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

மாலுக்கு-நீ எனக்கு வேண்டா என்று அகன்று முடிய புகுந்த தசையில் தன் செல்லாமையைக் காட்டி பொருந்த விட்டுக் கொண்ட வ்யாமோஹத்தை யுடையவனுக்கு -அவன் தன் பிச்சை காட்டி யாயிற்று இவளை பிச்சேற்றிற்று –
வையம் அளந்த மணாளற்கு-உகாதவரையும் கூட தன்னை இரப்பாளன் ஆக்கி தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட வ்யாமோஹத்தாலே அநந்யார்ஹம் ஆக்கி தன்னை போக்தாவானவனுக்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு-நெய்த்து கறுத்த நிறத்தை யுடைய மேக ஸ்வபாவற்கு -பிரயோஜன நிரபேஷமாக கொடுக்கையும் -கொடுக்கப் பெறாத போது உடம்பு வெளுக்கையும் -வ்யாமோஹம் இன்றிக்கே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவும் உதார குணமும் இருக்கிற படி
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு-தர்ச நீயமாய் வாத்சல்யத்தாலே சிவந்து விகாசாதிகளை யுடைத்தான திருக் கண்களை யுடையவனுக்கு
தாமரைத் தடங்கண் விழிகளில் அகவலைப் படுப்பான் -என்று கண்ணாலே யாயிற்று அகப்படுத்திக் கொண்டது -விசேஷணம் தோறும் தனித் தனியே அவனுக்கு என்று தனித் தனியே அகப்பட்ட துறைகளை சொல்லுகிறாள் -தன் மகள் மேல் பட்ட காம பாணங்களை எண்ணுகிறாள் காணும் தாயார் –
என் கொங்கலர்-ஏலக் குழலி இழந்தது சங்கே.–ஏலம் போல் கமழா நின்றுள்ள நறு நாற்றத்தை யுடைய மயிர் முடியை யுடைய மகள் -கொங்கு -பரிமளம் -இவள் மயிர் முடி ஒன்றுக்கும் தோற்று குமிழ் நீர் உண்ணுமவன் கிடீர் இவளை அழித்தான் -பங்களப் படை கொண்டு தனி வீரம் செய்வாரை அழிக்குமா போலே
இவளுக்குத் தோற்று -அவன் இழக்குமத்தை இவள் இழந்தாள் –சங்கு -வளை –

—————————————————————–

திரு உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய ஸ்ரீ பஞ்சாயுத தாரணத்தாலே வந்த அழகிலே அகப்பட்டு  என் மகள் தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் -என்கிறாள் –

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு-செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
ஸ்ரீ பஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே யாயிற்று இவள் ஈடுபட்டது –இவளுடைய நிறம் கொள்ளுகைக்கு எத்தனை ஆபரணம் வேணும் -ஸ்மிதமும் நோக்கும் போலே ஆயுதச் சேர்த்தியும் தகுதியாய் இருக்கிற படி
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்-மங்கை இழந்தது மாமை நிறமே.
பரிமளம் ப்ரவஹிக்கிற குளிர்ந்த திருத் துழாய் வளையத்தை யுடையவனுக்கு -ஆபரணம் –அவயவங்கள் -ஒப்பனை -எத்தனை செயல் வேணும் -இவள் நிறம் கொள்ளுகைக்கு – என் மங்கை-தன் பருவத்தால் இவற்றை அடங்கத் தோற்ப்பிக்குமவள் கிடீர் –மாமை என்றும் நிறம் என்றும் பர்யாயம் -இவ்விடத்தில் நிறம் என்று அழகாய் நிறத்தில் அழகை இழந்தாள் –

————————————————————

வட தள சாயி படிகளில் அகப்பட்டு தன் பெருமையை இழந்தாள் என்கிறாள் –

நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச்சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்குஎன்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-

நிறங்கரி யானுக்கு
ஸ்ரமஹரமான வடிவிலே யாயிற்று இவள் தோற்றது -நீலக் கரு நிற மேக நியாயற்கு-என்ன வேண்டா வாயிற்று -நிறத்துக்கு ஒப்பாக மாட்டாமையாலே
நீடுலகு உண்ட-திறங்கிளர் வாய்
பரப்பை உடைத்தான பூமியை திரு வயிற்றிலே வைத்த பிரகாரத்தை கோட் சொல்லா நின்ற திரு வாதாரத்தை யுடைய -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே-என்ன கடவது இ றே-ரக்ஷகத்வ பிரகாசகமான திரு வதரம்
சிறுக் கள்வ னவர்க்கு-சிறிய வடிவிலே பெரிய லோகங்களை வைத்து ஒருவருக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத சேஷ்டிதத்தை உடையவனுக்கு -வடிவுக்குச் சேராத சேஷ்டிதம் -சேஷ்டிதத்துக்கு சேராத வடிவு
தன்னுடைய ரக்ஷகத்வத்தையும் அக்கடிதகடநா சாமர்த்யத்தையும் காட்டியாயிற்று இவளை அகப்படுத்திற்று
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு-
விரோதி நிரசன த்வரையாலே -சுழன்று வாரா நின்றுள்ள திரு வாழி யை கையிலே உடையவனுக்கு -வடிவு அழகும் ரக்ஷகத்வமும் அன்றியே ரக்ஷணத்தில் உத்யுக்த பரிகரத்தை உடையவன் என்கை –
என்-பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–
சுற்றுடைத்தாய் ஓளுக்கு நீண்ட மயிர் முடியை யுடையவள் -பிறங்கு -என்று பெருமை / இருமை என்றும் பெருமை -சுற்றுடைமையிலும் ஒழுகு நீட்சியிலுமாய் இருக்கிறது கூந்தல் –மயிர் முடி -எதிர்த் தலையைத் தோற்பிக்கும் கூந்தலை யுடையவள் கிடீர் தன் பெருமையை இழந்தாள் -யஸ்ய சா ஜனகாத்மஜா –அப்ரமேயம் ஹி தத்தேஜ-என்று அவனுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும் பெருமையைக் கிடீர் இவள் இழந்தது -பீடு -பெருமை –

——————————————————–

சதுர் முகனுக்கு ஸ்ரஷ்டாவாய் வைத்து தன் மேன்மை பாராதே ஆஸ்ரித அபிமதங்களை செய்து அருளும் மஹா குணத்தை உடையவனுக்கு என் பெண் பிள்ளை தன்னுடைய நீர்மையை இழந்தாள் என்கிறாள்-

பீடுடை  நான்முகனைப்படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4-

பீடுடை நான்முகனைப்படைத் தானுக்கு-சதுர்தச புவனத்தையும் ஸ்ருஷ்டிக்க வல்ல பெருமையுடைய சதுர்முகனை ஸ்ருஷ்டித்தவனுக்கு –
மாடுடை வையம் அளந்த மணாளற்கு-மாடு என்று தனம்-வஸூ மதியான பூமி என்னுதல் / மாடு -என்று இடமாய் பரப்பை உடைத்தான பூமி என்னுதல் -திரு உலகு அளந்து அருளின க்ருத்ரிம சேஷ்டிதத்தாலே தன்னை அநன்யார்ஹை ஆக்கினவனுக்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு -நாடுடைய ராஜாக்களான பாண்டவர்களுக்கு தூத கிருத்யம் பண்ணி -அத்தாலே பூர்ணன் ஆனவனுக்கு
நாடுடையார் வேறே சிலராக்கி -அவர்களுக்கு ஏவலாளாய் திரியும் –நம்பி க்கு -இன்னார் தூதன் என நின்றான் என்று அச் செயலால் இட்ட சட்டை பீறும்படி இருக்கை -அடியிலே ஜகத்தை உண்டாக்கி அபஹரித்தார் உண்டாகில் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு -அத்தை ஆஸ்ரிதற்கு ஆக்குகைக்கு இழி தொழில் செய்து அந்நீர்மையைக் காட்டி இவள் நீர்மையை அபஹரித்தான்
என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–இடமுடைத்தான கடி பிரதேசத்தை உடையவள் -பாடு -இடம் -பும்பாவம் மனஸா யயு -என்று சஜாதீயரையும் அழிக்கும் வடிவு அழகு -அவன் பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியாய் இருக்கிறாப் போலே –பண்பு – நீர்மை –

————————————————————–

வேத ப்ரதானாதி உபகாரங்களை பண்ணினவனுக்கு என் மகள் கற்பு இழந்தாள் என்கிறாள் –

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

பண்புடை வேதம் -ஈஸ்வரனை உள்ளபடியே காட்டித் தரும் நீர்மையை யுடைய வேதம் —பயந்த -ப்ரஹ்மாவை ஓதுவிக்கை – பரனுக்கு-வேத ப்ரதிபாத்யன் ஆகையாலும்-ப்ரஹ்மாவுக்கு வேத சஷூசைக் கொடுக்கையாலும் -சர்வ ஸ்மாத் பரனானவனுக்கு-அறிவு இழந்தாருக்கு அறிவு கொடுக்குமவன் கிடீர் இவள் அறிவை அழித்தான்
மண்புரை வையம்-மண் மிக்க பூமி –-கிடந்த வராகற்குபயந்த பரனுக்கு-பிறருடைய ஸ்வரூப சித்யர்த்தமாக -தன்னை அழிய மாறுபவன் -மானமிலா பன்றியாம் தேசு -என்ன கடவது இ றே -மண் மிகுதி சொல்லிற்று எடுக்கையில் அருமை தோற்றுகைக்காக
தெண்புனற் பள்ளி -தெளிந்த புனலை உடைத்தான ஏகார்ணவத்தை படுக்கையாக உடையவன் -முதலிலே ஸ்ருஷ்ட்டி உன்முகனாய் ஸ் வச்சமான நீரை உடைய ஏகார்ணவத்திலே ஜகத் ரக்ஷண சிந்தனை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளுமவன் என்கை
-எம் தேவபி ரானுக்கு-ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ருஷ்டியாதி உபகாரகன் என்னுதல் -அயர்வறும் அமரர்கள் அதிபதி கிடீர் ஒருவர் இல்லாதா போலே ஸ்ருஷ்ட்டி உன்முகனாய் இருக்கிறான் என்னுதல் -என்-கண்புனை கோதை இழந்தது கற்பே–கண்டார் கண்களை ஆபரணமாக உடைய மயிர் முடி -அதாகிறது கண்டார்க்கு வைத்த கண் வாங்க ஒண்ணாத படி கண்ணை பிணிக்க வற்றாய் இருக்கை -கண் என்று பீலிக் கண்ணாய் -அத்தை புனைந்த கோதை என்று ஜாதி உசிதமான ஆபரணம் என்பான் தமிழன் –இழந்தது கற்பே-சர்வருக்கும் ஞான பிரதனான தனக்கும் கூட அறிவு கொடுக்குமவள் அறிவைக் கிடீர் இழந்தது -கற்பு கல்வி -அதாவது -ஞானம் –

—————————————————————

ஏகார்ணவ சாயியான எம்பெருமானுடைய திவ்ய அவயவ ஸுந்தர்யத்திலே அகப்பட்டு என் பிள்ளை தன்னுடைய மெய் இழந்தாள் என்கிறாள் –

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்குஎன்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-

கற்பகக் காவன நற்பல தேளாற்கு-பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு-
ஒரு சாயல் கற்பகச் சோலை போலே யாய் -அவ்வளவு அன்றிக்கே விலக்ஷணமான தோள்களை யுடையவனுக்கு -ஒளியை யுடைய பொன் மலை போலே யாய் -தர்ச நீயமான திரு முடிக்கு அனுகூலமான திரு அபிஷேகத்தை யுடையவனுக்கு -பூ என்று மாலைகளால் அலங்க்ருதம் என்றுமாம் -இது சர்வ திவ்ய ஆபரணங்களும் உப லக்ஷணம் –நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு-நன்றாய் பலவாய் செவ்வித் தாமரை பூ போலே இருக்கிற திருக் கையை உடையவனுக்கு –என்-விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–வில் போலே இருக்கிற புருவத்தை உடைய என் பெண் -ப்ரஹ்மாஸ்திரத்தை கொண்டு முடிந்து கிடப்பாரைப் போலே ஜய ஹேதுவான பரிகரத்தை கொண்டு கிடீர் தோற்றது -ஊர்த்தவம் மாஸன்ன ஜீவிஷ்யே-என்னும் வடிவைக் காட்டி ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னப் பண்ணும் வடிவைக் கிடீர் கொண்டது-

———————————————————————

ஷீரார்ணவ சாயியான எம்பெருமானுடைய ஆபரண சோபாதிகளிலே  அகப்பட்டு என் பெண் பிள்ளை தன்னுடைய லாவண்யத்தை இழந்தாள் என்கிறாள் –

மெய்யமர்  பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

மெய்யமர் பல்கலன் -திரு மேனியில் பூத்தால் போலே பொருந்தி இருந்துள்ள கிரீடாதி நூபுராந்தமான திருவாபரணங்கள்
நன்கணிந் தானுக்கு-பூண வல்லபடியாலே வந்த அழகு –
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு-
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை-யுடைய நாற்றம் மென்மை குளிர்த்தி இவற்றை பிரக்ருதியாக யுடையவனை படுக்கையாக உடையனாய் அதிலே கண் வளர்ந்து அருளினவனுக்கு –இதுவும் ஒரு ஆபரண விசேஷம் போலே காணும் -கீழ் சொன்ன ஒப்பனை நிறம் பெரும் படுக்கை இ றே
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்கு-திருமேனிக்கு பரபாகமான சிவப்பை யுடைய திருக் கைகளையும் திருவடிகளையும் யுடையனாய் உபகார சீலனான ஸூ லபனுக்கு -திரு வனந்த ஆழ்வானோட்டை சேர்த்தியாலே யாயிற்று அவயவங்கள் தொடக்கமானவை பூர்ணம் ஆயிற்று
என்-தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–என் பெண் பிள்ளை இழந்தது மாணிக்கத்தின் ஓளி போலே தனக்கு நிறம் கொடுக்கும் லாவண்யத்தை -கழற்றி பூணும் ஆபரணத்தைக் காட்டி கழற்ற ஒண்ணாத ஆபரணத்தைக் கொண்டான் –தையல் -பெண் / சாய் -லாவண்யம் –

———————————————————-

பிரதிகூல நிரசன பரம்பரையை யுடையனான கிருஷ்ணனுக்கு தோற்று என் பெண் பிள்ளை ஸ்த்ரீத்வத்தை இழந்தாள் என்கிறாள் –

சாயக்  குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்
வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8-

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு-அஸூரா விசிஷ்டமான குருந்தை வேரோடு சாய்ந்து விழும்படி முறித்த –-தமியற்கு--நம்பி மூத்த பிரானை ஒழியவே தனி வீரம் செய்தவனுக்கு -தான் தனிமையிலே சென்று உதவக் காணும் இவளுக்கு நினைவு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு-கிருத்ரிம சகடம் என்னுதல் -தளர்ந்தும் முறிந்தும் என்கிறபடியே சகடம் உரு மாயும் படி என்னுதல் -மணாளற்கு-ஸ்ரீ ஜனக ராஜன் திருமாலுக்கு தனுர் பங்கம் போலே இவ்வாபத்தானத்தை காட்டி யாயிற்று இவளை அநன்யார் ஹை யாக்கிக் கொண்டது –
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்-சூர்ப்பணகாவைப் போலே ஓர் அனர்த்தத்தை விளைக்க உயிரோடே விடாதே பூதனையை பிணமாய் விழும்படி முலைப் பண்ண வல்ல மஹா உபகாரகனுக்கு
என் வாசக் குழலி இழந்தது மாண்பே.–நைசர்க்கிக்க பரிமளமானகுழலை யுடைய என் பெண் -அவனை சர்வ கந்த என்று சொல்லுகைக்கு அடியான குழல் என்கை -வாசம் செய் பூங்குழலாள் இ றே -தம் பும்ஸத்வ ப்ரயுக்தமான செயல்களை எல்லாம் காட்டி இவளுடைய ஸ்த்ரீத்வத்தை கொண்டான் —மாண்பு -மாட்சிமை -ஸ்த்ரீத்வம் –

—————————————————————–

ஸ்ரீ வாமனாதி அநேக அவதாரங்களை பண்ணி இருந்துள்ள எம்பெருமானுடைய திரு வழகிலே அகப்பட்டு என் பிள்ளை தன்னுடைய அழகை  இழந்தாள் என்கிறாள் –

மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்குஎன்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-

மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு-அழகு சமைந்த ஒப்பனையை யுடையவனாய் -ஆச்சர்யமான வேஷத்தை யுடைய ஸ்ரீ வாமனனுக்கு-மாண்பு -அழகு –மாயம் -என்று வஞ்சகம் ஆகவுமாம் –
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு-கையிலே நீர் விழுந்த வாறே வளர்ந்த படி -ஓங்கிப் புகரை யுடைய மலை போலே சிவந்த ஒளியை யுடைய வடிவை யுடையவனுக்கு
காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்கு-கண்ணுக்கு இனியதாய் அபரிச்சேத்யமான போக்யமான சந்நிதியை யுடையவன் என்னுதல் -ஜென்ம ராமஸ்ய ஸூ மஹத் -என்கிற அவதாரம் ஆதல் -குண பூரணமான சக்கரவர்த்தி திருமகனுக்கு –
என் பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–பூண் என்று ஆபரணமாய் அத்தாலே அலங்க்ருதமாய் விரஹ சஹம் அல்லாத முலையை யுடையவள் -பொற்பு என்று அழகு –-பூம் புணை மென் முலை என்கையாலே ஒப்பனையால் வந்த அழகை இழந்தாள் -அவனைத் தோற்பிக்கும் முலையை உடையவள் கிடீர் தோற்றாள்-

————————————————————

பரத்வம் என்ன -அவதாரம் என்ன -ஜகதாகாரதை என்ன -இவற்றை அடங்கக் காட்டி இவளுடைய எல்லாவற்றையும் கொண்டான் என்கிறாள் –

பொற்பமை  நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10-

பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு-அழகு சமைந்து இருப்பதாய் -ஆதி ராஜ்ய பிரகாசகமான திரு அபிஷேகத்தை உடையனாய் -அதின் மேலே ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையையும் உடையவனுக்கு – -பூந்தண் துழாய் -ஸ்வ ஸ்பர்சத்தாலே பூத்து ஸ்ரமஹரமாய இருக்கை
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு-வந்து திருவவதரித்து மற்பொரு தோளை யுடையவன் – மாயப் பிரானுக்கு-சாத்தின சாந்து அழியாத படி மல் பொருத ஆச்சர்யம் -சாவத்தகர்த்த சாந்தணி தோள் சதுரன் இ றே -மற்றும் ஆச்சர்யமான உபகாரகங்களைப் பண்ணினவன் என்றுமாம்
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு – -ஸ்தாவர ஜங்கமாத்மக சகல பதார்த்தங்களும் அந்தர்யாமியாக நிற்கிற ஆச்சர்ய பூதனுக்கு
என்-கற்புடை யாட்டி — .–மிக்க அறிவுடைய என் மகள் -தத் தஸ்ய சத்ருசம்பவேத்-என்று இருக்கும் அறிவு இ றே
இழந்தது கட்டே-தனக்கு உள்ளவற்றை நேராகக் காட்டி இவள் பக்கல் உள்ளவற்றை நேராகக் கொண்டான் -கட்டு என்று மரியாதையாய் அத்தை இழந்தாள் என்றுமாம் –

—————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழி யை அப்யஸிக்க வல்லார் நித்ய ஸூ ரிகள் போகத்தை புஜிக்கப் பெறுவார்கள் என்கிறார் –

கட்டெழில்  சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம்உண்பாரே.–5-6-11-

கட்டெழில் சோலைகட்டு -கடி என்றத்தை கட்டு என்று வலித்து-பரிமளத்தை யுடைய நல்ல சோலை –நல் வேங்கட வாணனைக்-சேஷ சேஷிகள் இருவருக்கும் உத்தேச்யமான திரு மலை -வாணனைக்-நிர்வாஹகனை -திருவேங்கடமுடையானை யாயிற்றுக் கவி பாடிற்று -திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே –என் நாவில் இன்கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் -என்று இருக்குமவர் இ றே
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்-கட்டு என்று அரண் -அரணை யுடைய திரு நகரி
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்-கட்டு என்று தொடை -அழகிய தொடையை யுடைத்தாகை
கட்டெழில் வானவர் போகம்உண்பாரே.–பெரிய வானவர் -போக விசேஷணம் ஆகவுமாம் -சம்சாரத்தில் போகம் கர்ம நிபந்தம் ஆகையால் அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும் இ றே -ஸ்வரூப அனுரூபம் ஆகையால் சம்ருத்தமாய் நித்தியமாய் இருக்கை -நாலு அடியிலும் என்கிற சப்தம் சாகல்ய பரமாகவுமாம் –நீர்மைக்கு எல்லையான திருமலை ஆஸ்ரயணீய ஸ்தலம் -மேன்மைக்கு எல்லையான பரமபதம் அனுபவ ஸ்தலம் -ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் இ றே-

———————————————————————-

கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: