திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-4-

பிறந்தவாற்றிலே குணங்களை தரித்து நின்று அனுபவிக்க வல்லனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புக்கார்
-திரு வண் வண்டூரில் தூது விட்டார் –
அவன் வரக் கொண்டு மின்னிடை மடவாரிலே ப்ரணய ரோஷத்தால் அகலப் புக்க தம்மைச் சேர விட்ட உபகாரத்தை அனுசந்தித்தார் –
சர்வ நியந்தாவான மேன்மை யுடையவன் என்னை தாழ நின்று பொருந்த விட்டுக் கொள்வதே -என்று உபகார ஸ்ம்ருதியால் ஏத்தினார் –
இதில் ஸ்ரீ கிருஷ்ண அவதார சேஷ்டிதங்களை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –
பாவோ நான்யத்ர கச்சதி -என்று திருவடி ஸ்ரீ ராமாவதராத்திலே பிரவணனாய் இருக்குமா போலே இவரும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யாயிற்று பிரவணராய் இருப்பது
மாசறு சோதியில் -சேணுயர் வானத்து இருக்கும் –என்று தூரஸ்தன் -என்று இன்னாதாரான இழவு தீர
இந்த லோகத்தில் ஸ்ரீ பிருந்தாவனத்தில் பெண்களோடு பரிமாறின பரிமாற்றத்தைக் காட்டிக் கொடுக்க அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார்
மானேய் நோக்கிலே தொல் அருள் நல் வினையால் சொல்லக் கூடுங்கோல் -என்று நாக்கு நீர் வந்து திரு நாமம் சொல்வது என்றோ
என்று ஆசைப்பட்ட இழவு தீர ஸ்ரீ கிருஷ்ண குணங்களை அனுபவித்து பேசி ப்ரீதர் ஆகிறார்
சன்மம் பல பல -விலேயிலும் -ஒரு குறைவிலன் என்றார்
இதிலும் என்ன குறைவு எனக்கு என்றார்
அதுக்கும் இதுக்கும் வாசி என் என்னில் -அங்கு சம்சாரிகளில் காட்டில் வ்யாவருத்தனாகப் பெற்றேன் என்றார்
இதில் குண அனுபவ ப்ரீதி பிரகர்ஷத்தாலே எனக்கு ஒரு குறைவு இல்லை என்கிறார் –

—————————————————————–

அஹோ ராத்ரம்   ப்ரீதி பூர்வகமாக  ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெற்றேன் -இனி எனக்கு என்ன குறை உண்டு என்கிறார் –

குரவை  ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
மின்னிடை மடவாரிலே அகலப் புக்கு தாழ நின்று பொருந்தின படி -இடைப் பெண்களோடு பொருந்தினால் போலே இருக்கிறதாயிற்று -தன்னோடு அவர்களை கோக்கை அன்றியே -அவர்களோடு தன்னை கோத்த படி -பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களோடு கலந்த ப்ரீதி உண்டாயிற்று இவரோடு கலந்த ப்ரீதி –
கோக்கை -தொடுக்கை -கை கோத்துக் கொண்டு ஆடும் கூத்து இ றே குரவைக் கூத்து -ஆவது
குன்றம்ஒன்று ஏந்தியதும்
அவர்களை அனுபவிக்கை அன்றியே -அவர்களுக்கு வந்த ஆபத்தை போக்கின படி -இந்திரன் பசி க்ராஹத்தாலே அழிய வர்ஷிக்கத் தொடங்கின வாறே முன்னே நின்றதொரு மலையை எடுத்து ரஷித்த படி
ஏந்தியதும் -ஏழு வயசில் ஏழு நாள் ஒருபடிப்பட மலையை எடுத்துக் கொடு நிற்கச் செய்தேயும் -ஆச்ரிதார்த்த ப்ரவ்ருத்தி ஆகையால் வருத்தம் அற்று இருந்த படி
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
வலியை யுடைத்தான நீர் -விஷத்தால் பாதகமான வலி யாதல் -முது நீர் ஆகையால் வலிய நீர் ஆதல் —உரவு-விஷம் என்னுதல் -வலிய என்னுதல் –
நாகங் காய்ந்ததும் -பெண்களோட்டை ஜலக் க்ரீடைக்கு விரோதி என்று காளியனை ஓட்டினதுவும் –
உள்பட மற்றும்பல-இவை முதலான சேஷ்டிதங்களுக்கு தொகை இல்லை
பிறந்த வாற்றில் பல ஹானியால் சொல்ல மாட்டிற்று இலர்
இங்கு ப்ரீதி பிரகர்ஷத்தாலே தரித்து சொல்ல மாட்டாது ஒழிகிறார்
அரவில் பள்ளிப் பிரான்-
அவதரிக்கைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் -ஆஸ்ரித விரோதியான சர்ப்பத்தை போக்கினான் -அஜ் ஜாதியிலே ஒருவனுக்கு உடம்பு கொடுத்தான் -ஜாதி பிரயுக்தம் அன்று நிரஸனம் -ஆஸ்ரித விரோதி என்று -பிறந்த வாற்றில் -நாகணை மிசை நம்பிரானை ப்ரத்யபிஜ்ஜை பண்ணுகிறார்
தன் மாய வினைகளையே அலற்றி
ஆச்சர்ய சேஷ்டிதங்களை ப்ரீதியாலே அடைவு கெடச் சொல்லி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.
நல்ல இரவும் நல்ல பகலும் -சுடர் கொள் இராப் பகல் என்று விரஹத்தில் அக்னி கல்பமான அஹோராத்ரம் போல் அன்று இ றே
தவிர்கிலன்-விடு கிறி லேன்
என்ன குறைவு எனக்கே.
கால பேதம் உள்ள தேசத்திலே இருந்து -ஏக ரூபமாக அனுபவிக்கப் பெற்ற எனக்கு -ஒரு தேசத்திலே போக வேணும் என்னும் குறை உண்டோ –

—————————————————————

தொல் அருள் நல் வினையால்  சொலக் கூடுங்கொல் -என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே திரு நாட்டில் தான் தன்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-

கேயத் தீங்குழல் ஊதிற்றும் –
கேயம் -என்று கானம் / தீங்குழல்-இனிய குழல் /பர தந்திரனாய் பசு மேய்க்கப் புகையால் வரவு தாழ்த்தேன் இத்தனை -என்றால் போலே சில பாசுரங்களை நெஞ்சை வருத்தும் இசையோடு கூட்டி பெண்கள் நெஞ்சில் மறம் மாறும் படி குழல் ஊதிற்றும் –
நிரை மேய்த்ததும்
அக்குழல் ஓசையே தாரகமாக வளருமவை யாயிற்று பசுக்கள் -பெண்களும் அக் குழல் ஓசை வழியே சேருமவர்கள்-ஒன்றைக் கொண்டு எல்லா காரியமும் செய்ய வல்லான் இ றே
கெண்டை ஒண்கண்-வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும்
பசு மேய்த்த விடாய் தீருவது நப்பின்னை பிராட்டி தோளோடு அணைந்தாயிற்று -நப்பின்னை பிராட்டி முக்தமான அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக் குழலில் பரிமளத்தாலே திருமேனியை வாசிதமாக்கி -பசு மேய்த்து வந்த சிரமம் தீர -பர்த்தாராம் பரிஷஸ் வஜே–என்கிறபடியே அணைக்க அவள் தோளோடு கலந்ததும்
மற்றும் பல-மற்றும் உண்டான பிராட்டிமாரோடு கலந்த படி
மாயக் கோலப் பிரான்-நப்பின்னை பிராட்டியாரோடே கலவியால் வந்த ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமான அத்யாச்சர்யமான ஒப்பனையை யுடையனாய் -உபகார சீலனானவனுடைய
தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
கிருஷ்ண சேஷ்டிதங்களை நினைத்து அத்தாலே நெஞ்சு நெகிழ்ந்து –
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–
இனிமையோடே கழிந்த காலம் -ஒரு தேச விசேஷத்திலும் தான் எனக்கு எதிர் உண்டோ -ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே அனுபவ வேளையில் போலே ஸ்ம்ருதி வேளையிலும் இனிமையோடே செல்லக் கடவதானால்-எனக்கு எங்கே எதிர்-

—————————————————-

கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவித்துக் கொண்டு காலம் போக்கப் பெற்ற எனக்கு ஒரு விஸ்லேஷம் ஆகிற நோவு இல்லை என்கிறார் –

நிகரில்  மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே?–6-4-3-

நிகரில் மல்லரைச் செற்றதும்
மிடுக்குக்கு சத்ருசம் இன்றிக்கே இருக்கிற மல்லரைச் பெற்றதும் -ஷத்ரிய ஜன்மத்துக்கு அனுரூபமாக விரோதி நிராசனம் பண்ணினதும்
நிரை மேய்த்ததும்
கோப ஜன்மத்துக்கு அனுரூபமாக பசு மேய்த்ததும் -பசு மேய்த்த அநாயாசேனாவோ பாதி யாக வாயிற்று மல்லரை லீலையாக நிரசித்ததுவும்
நீள் நெடுங்கைச்
வீபிசையாலே அற நெடுங்கை-என்கை -கடக்க போகிலும் எட்டிப் பிடிக்க வல்ல கை-அவன் அதுக்கு தப்பின பின்பும் இன்று இவர் வயிறு பிடிக்கிறார்
சிகர மாகளிறு அட்டதும்
பர்வத சிகரம் போலே உரத்து பெருத்து இருக்கிற குவலயா பீடத்தை நிரசித்ததும்
இவைபோல்வனவும் பிறவும்
இவை போலே மற்றும் உண்டான கேசி நிரசன நாதிகளும்
புகர்கொள் சோதிப் பிரான்
விரோதி நிரசன த்தாலே ஒளி பெற்ற தேஜஸ் ஸூ –உபகார சீலன்
தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
தன் சேஷ்டிதங்களை அனுசந்தித்து நாள்தோறும் அடைவுகெட கூப்பிட்டு
நுகர வைகல் வைகப்பெற்றேன்
அனுபவத்தோடு காலம் கழிய பெற்றேன் என்னுதல்-அனுபவிக்கலாம் படி காலம் நெடுக்கப் பெற்றேன் என்னுதல்
எனக் கென்னினி நோவதுவே-
ப்ரீதி பிரேரிதனாய் அனுபவிக்கிற எனக்கு இப்படி காலம் நித்தியமான பின்பு -விஸ்லேஷம் ஆகிற நோவு உண்டோ-

———————————————————————

யசோதை பிராட்டிக்கு அத்யந்தம் பவ்யனாய்-ஆஸ்ரித பவ்யனாய் உள்ள  அவ்விருப்பிலே பிரதிகூலரை மாய்த்த கிருஷ்ணனை அனுபவிக்கப் பெற்ற எனக்கு இனி அவாப்தவ்யம் இல்லை என்கிறார்

நோவ  ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும்
தாயாருக்கு பிரேமம் உள்ள அளவும் சீற்றம் உண்டு இ றே -இவர் தம் திருமேனியில் கட்டினால் போலே நோவு படுகிறார் –
தாயார் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை இல்லாமையால் நோவு பட்டு பீதனாய் இருந்தும் –ஆஸ்ரித கர்ம பந்தமும் பிரதிகூலர் பந்தித்த பந்தமும் இ றே அறுக்கலாவது
வஞ்சப்பெண்ணைச்-சாவப் பாலுண்டதும்
தாய் வடிவு கொண்டு வந்த பூதனை முடியும் படி நச்சுப் பால் உண்டதுவும் -சூர்பணகையை போலே பின்பு இருந்து பூசல் விளைக்க வையாதே முடிக்கப் பெற்ற படி
ஊர் சகட மிறச் சாடியதும்
பரிஹாரமாக வைத்த சகடம் அஸூரா வேசத்தால் வந்து நலிய புக-திருவடிகளாலே தூக்கலாம் படி சாடியதும் –
முலை வரவு தாழ்த்து திருவடிகளை நிமிர்த்த மாத்திரத்திலே சகடாஸூரன் அழிந்த படியால் -சாடியது என்கிறார் –
தேவக் கோலப் பிரான்
விரோதியை அழிக்கையால் வந்த அப்ராக்ருதமான அழகை எனக்கு உபகரித்தவன் –
தன் செய்கை நினைந்து மனங்குழைந்து-மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–
அவன் சேஷ்டிதங்களை அனுபவித்து நெஞ்சு நெகிழ்ந்து இச் சேஷ்டிதங்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன் -இனி எனக்கு வேண்டுவது என்-இவ்வனுபவத்தோடே காலம் செல்லப் பெற்ற எனக்கு அவாப்தவ்யம் உண்டோ –

—————————————————————–

திருவவதாரம் பண்ணி அருளினை பின்பு -கம்சன் அறியாத படி வளர்ந்து கம்சனை மாய்த்த படி -இன்று இருந்து அனுபவிக்கப் பெற்ற எனக்கு எதிர்  இல்லை என்கிறார் –

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம்புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?–6-4-5-

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும்
தேவர்கள் அர்த்திக்க-வேண்டி வந்து தன் உகப்பாலே பிறந்ததுவும் -பிதரம் ரோசயாமாச-சம்ச்லேஷ பஜதாம் த்வாரா பரவச -பரித்ராணாயா ஸாதூ நாம் —
வீங்கிருள்வாய்ப்-
வளருகின்ற இருளிலே -வீங்கிருள் வாய் பிறந்ததும் -என்னுதல் -வீங்கிருள் ஆய்க்குலம் புக்கதுவும் என்னுதல் -வீங்கிருளின் உண்டுளியாய்-என்ற பய ஹேதுவான இருள் அன்றிக்கே-பய நிவ்ருத்திக்கு உடலான இருள் இ றே
பூண்டு அன்று அன்னை புலம்பப்
பிறந்த அன்றே தேவகியார் -முன்பே ஆறு பிள்ளைகளை இழைக்கை யாலும் -புத்ர வாத்சல்யத்தாலும் கம்ச பயத்தாலும் திருவடிகளைக் கட்டிக் கொண்டு கதற –
போய்-
முலைச் சுவடு அறியாமையால் இவனுக்கு போகலாம் இ றே –
அங்கொர் ஆய்க்குலம்புக்கதும்
அத்தசையிலே அஞ்சினான் புகலிடமாய் இருப்பது ஓர் இடைச்சேரி உண்டாவதே -கம்சனுக்கு குடி மக்களாய் இருக்கச் செய்தேயும் -அவனுக்கு அநிஷ்டம் என்று பாராதே மறைத்து வைத்து அடைக்கலம் நோக்க வல்ல ஊர்
காண்ட லின்றி வளர்ந்து
கம்சன் வஞ்சித்து வரக் காட்டின துஷ்ப்ரக்ருதிகள் அறியாதபடி வளர்ந்து –
கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
கம்சன் அழைத்து வஞ்சிக்க நினைக்க -அவன் நினைவை அவன் தன்னோடே போக்கினதுவும் -ராமாவதாரம் போலே -செவ்வைப் பூசல் அல்லது அறியான் -என்று இராமை இ றே பிழைத்தது
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன்
இங்கே இருந்து அனுபவித்து ப்ரீதியாலே அடைவு கெட பேசப் பெற்றேன் -ஈண்டு – இங்கு என்றபடி -இப்போது என்னவுமாம் -இக்காலத்தில் -அதாகிறது -தேவகியாரையும் ஸ்ரீ வ ஸூ தேவரையும் போலே சம காலத்திலே இருந்து வயிறு ஏரியாதே -கம்ச விஜய பர்யந்தமாக இக்காலத்தில் அனுபவிக்கப் பெற்றேன்
எனக்கு என்ன இகல்உளதே?–
எனக்கு என்ன எதிர் உண்டு என்னுதல் -எனக்கு என்ன கிலேசம் உண்டு என்னுதல் –இகல் -யுத்தம் -யுத்தத்தால் வரும் கிலேசம் ஆதல் -யுத்தத்தில் வரும் எதிர் ஆதல்-

———————————————————–

கிருஷ்ணனுடைய பிரதிகூல நிரசன பரம்பரையை அனுபவிக்கப் பெற்ற  எனக்கு இனி ஒரு மநோதுக்கம் இல்லை என்கிறார் –

இகல்கொள்  புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–6-4-6-

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும்
யுத்த்தோன் முகனான பகாஸூரனை பிளந்ததுவும் -பக்ஷி வேஷத்தாலே வந்து எதிரிட்டான் ஆயிற்று பஹா ஸூ ரன் -அவனை அநாயாசேன பிளந்தான்
இமிலேறுகள் செற்றதுவும்
கண்டார்க்கு பயாவஹமான ககுத்துக்களை யுடைய ரிஷபங்களை நிரசித்ததுவும் –இமில் -ககுத்து –
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும்
ஓங்கி தழைத்து இருந்துள்ள குருந்தை முறித்ததுவும் -தர்ச நீயமான ஸ்தாவர வேஷத்தைக் கொண்டு வந்த மஹா ஸூரனை முடித்ததுவும்
உட்பட மற்றும்பல
கன்றாயும் விளாவாயும் வந்த அஸூரர் முதலாக -வேறும் நிரசித்தவை அநேகங்கள் -இந்த திர்யக் ஸ்தாவரங்களை நித்ய ஸூ ரிகள் கைங்கர்யத்துக்காக பரிக்ரஹிப்பார்கள் -இங்கு பிராதிகூல்யத்துக்கு உறுப்பாக கொண்ட வடிவுகள் இ றே -இதுக்கு பாப பிராசர்யம் அடி -அதுக்கு இச்சை அடி –
அகல்கொள்வைய மளந்த மாயன்
பரப்பை யுடைத்தானா பூமி அடங்கலும் தன் திருவடிகளின் கீழே த்தை கொண்ட ஆச்சர்யத்தை யுடையவன் -வரையாதே தீண்டும் ஸ்வ பாவ சாம்யத்தாலே சொல்லுகிறார்
என்னப்பன்தன் மாயங்களே
இவ்வபதானம் தமக்கு உதவ பலித்தது என்று இருக்கிறார் -ஆச்சர்ய சேஷ்டிதங்களையே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–
இரவோடு பகலோடு வாசி அற அனுபவித்து ப்ரீதியாலே அடைவு கெடப் பேசப் பெற்றேன் -எனக்கு என்ன மநோ துக்கம் உண்டு -பரிவு என்கிறதை சந்தஸ் ஸூ க்குச் சேர பரிப்பு என்கிறது-

—————————————————————-

பிரதிகூலர் அனுகூலரை நலியுமது பொறுக்க மாட்டாமை திருவாவதரித்து அவர்களை அழியச்  செய்யும் சேஷ்டிதங்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு பூமியில் எதிர் இல்லை என்கிறார் –

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
நமக்கு அநந்யார்ஹ சேஷமாய் இருக்கிற இவ்வஸ்து தேக சம்பந்தத்தால் பஹு முகமாக நோவு படுவதே என்னும் மநோ துக்கத்தோடு யாயிற்று திரு வவதரித்தது
ப்ரஹ்மாதிகளும் கூட அருவருக்கும் மனுஷ்ய ஜாதியிலே -அகில ஹேய ப்ரத்ய நீகனான தான் -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடே கர்ப்ப வாசம் பண்ணிக்க கொண்டு அவதரித்து -மானுஷே லோகே ஐஜ்ஜே-தன் ஜென்மத்தை அனுசந்திக்க சம்சாரிகளோட ஜென்ம சம்பந்தம் போம்படிதான தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு
சதுர்புஜனாவது -த்விபுஜனாவாது -கோபாலனாவது -வைஸ்வ ரூபத்தை கொள்ளுகை-இவை தான் ஆஸ்ரித அர்த்தம் ஆகையால் தனக்கு அபிமதமாய் இருக்கும் -வேண்டுரு -எரிச்சயம் -இச்சையால் என்றுமாம்
தான்தன சீற்றத்தினை முடிக்கும்
ஆஸ்ரித வத்சனான தான் ஆஸ்ரித விரோதிகளை போக்கி -அத்தாலே தன் சினம் தீர்ந்தானாய் இருக்கும் -பிரஜையை நலிந்தவர்களை தாய் தனக்கு சத்ருசு என்று நிலைக்குமா போலே
புனத்துழாய்முடி மாலை மார்பன்
ஆஸ்ரித விரோதிகளை போக்கப் பெற்றதால் ஒப்பித்து இருக்கிற படி
என்னப்பன்தன் மாயங்களே
அவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களையே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.
இடைவிடாமல் அநுஸந்திக்கும் நெஞ்சு உடையேன் –காரணம் பந்த மோஷாயா -என்கிற பொதுமை தவிர்ந்து அசாதாரணமான நெஞ்சை பெற்றேன் –
பஞ்சஸாத் கோடி விஸ்தீரணையான பூமியில் எனக்கு எதிர் யார்-

—————————————————————–

பாண விஷய பிரமுகரான கிருஷ்ண சேஷ்டிதங்களையே அநுஸந்திக்கும் நெஞ்சை யுடைய எனக்கு இனி கலக்கம் உண்டோ என்கிறார்-

நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

நீணிலத்தொடு வான்வியப்ப
பரப்பை யுடைத்தான பூமியில் உள்ளோரோடு -தேவர்களும் கூட விஸ்மயப்படும் படி -பராபிபவ சாமர்த்தியத்தை யுடைய தேவர்களோடு எளியரான மனுஷயரோடு வாசியற ஆச்சர்யப் படும் படி இருக்கை -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகளும் கூட விஸ்மயப்படும் படி இருப்பது –
நிறை பெரும் போர்கள்செய்து
வலிதாய் பெரிதான யுத்தத்தை பண்ணி
வாண னாயிரம் தோள்துணித்ததும்
அபிராப்த விஷயத்தில் அஞ்சலி பண்ணினத்துக்கு பிராயச்சித்தம் பண்ணுவாராய்ப் போலே பாணனுடைய பாஹு வனத்தை சேதித்ததும் -உஷை பித்ருஹீனை யாகாமைக்காக இ றே கொல்லாது ஒழிந்தது
உட்பட மற்றும்பல
பாணனை ரக்ஷிக்கிறேன் -என்று ஏறட்டுக் கொண்டு பசலும் குட்டியும் தானுமாக முதுகிட்டுப் போன படியும் -கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜானோ த்வாம் புருஷோத்தமம்-என்று முதுகிலே அம்பு தைத்த பின்பு சர்வேஸ்வரனாக அறிந்த படியும் -வேறும் அநேகம் –
மாணியாய்நிலம் கொண்ட –
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அர்த்தியாய் தன்னை அழிய மாறி ரஷித்தவனை –
மாயன்
தன் உடைமையை பிறரது ஆக்கி இரந்து சிறிய காலைக் காட்டி பெரிய காலாலே அளந்து கொண்டும் -தன் அழகாலும் சீலத்தாலும் சுக்கிராதிகள் வார்த்தை செவிப்படாத படி மஹா பலியை எழுதிக் கொண்டும் -இப்படி ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன் –
என்னப்பன்தன் மாயங்களே
அவர்கள் தலையிலே திருவடிகளை வைத்த இது தம் பேறாக நினைத்து இருக்கிற படி -இப்படி தனித் தனியே அனுபவித்து முடிக்க ஒண்ணாத ஆச்சர்ய சேஷ்டிதங்களை அநுஸந்திக்கும் நெஞ்சை யுடையேன் –
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–
அநுஸந்திக்கும் நெஞ்சு -நெஞ்சு என்னும் உட் கண் -என்ன கடவது இ றே
அங்கனம் அன்றியே -முடியானே யில் கரணங்களை யுடையாராகையாலே மனஸ்ஸூ சஷூர் இந்திரிய விருத்தியும் லபிக்க வற்றான படி சொல்லுகிறது -என்று பிள்ளான் பணிக்கும் –
இதர தேவதைகளை ரக்ஷகர் என்கிற கலக்கமும் -ஈஸ்வரனுடைய ரக்ஷணத்தில் அதி சங்கை பண்ணும் கலக்கமும் -தனக்குத் தானே கடவன் என்கிற கலக்கமும் இல்லை –

————————————————————-

வைதிக புத்ராநயனம் தொடக்கமான அபதானங்களை யுடைய சர்வேஸ்வரனை மலக்கும் நா வீறுடைய என்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –

கலக்க  ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
ஏழு கடலையும் ஏழு மலையையும் ஏழு லோகங்களையும் கழிய தரையிலே நடத்தினால் போலே நடத்தி -நீருக்கும் மலைக்கும் ஆகாசத்துக்கும் வாசி தெரியாத படி நடத்தி -கலங்க என்றாய் -எங்கும் ஓக்க அதிர நடத்தி என்றுமாம்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்
தமஸ்ஸூ க்கு அவ்வருகே செல்ல முடியாத தேரைக் கொண்டு சென்ற ஆச்சர்யமும் —உலக்க – முடிய / கார்ய ரூபமான தேரைக் காரண த்திலே கார்ய ஆகாரம் குலையாமல் நடத்தின ஆச்சர்யம்
உட்பட மற்றும்பல
வைதிக புத்திரர்களை இத்தேசத்தில் நின்றும் கொடு போருகையும்-போன செவ்வியில் கொடு வந்து சேர்க்கையும் -பிரதாசாவனத்துக்கு மாத்யந்தினசவத்துக்கு முன்னே இது அடங்கச் செய்கையும் –
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
தாமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தரா-என்று சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆயிற்று திவ்யாயுதங்கள் -வலக்கையில் திரு வாழி யையும் -இடக்கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் -இவற்றை யுடையனுமாய் -கறுத்த நிறத்தை யுடையவனை
மால் வண்ணனை என்ன அமைந்து இருக்க திவ்யாயுதங்களை சொல்லுவான் என் என்று கஞ்சனூர் வண் துவரைப் பெருமாள் பட்டரை கேட்க -அவிக்ருத வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திவ்யாயுதங்கள் என்றார்
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?
அவாக்ய அ நாதரா என்கிற சர்வாதிக வஸ்துவை விக்ருதமாக்கும் நா வீறுடைய எனக்கு
சோழேந்திர சிம்ஹனை உளுக்காகப் பண்ண வல்ல நாவைப் படைத்த எனக்கு -பூமியில் எதிர் உண்டோ
ஈஸ்வரன் உளுக்கு ஆகும் படி கவி சொல்ல வல்லார் தம்மை ஒழிய சிலைவர் இல்லாமையால் வேறு என்னோடு ஒப்பார் இல்லை என்கிறார்-

—————————————————————–

சம்சாரத்தின் உள்ளே வந்து திருவவதாரம் பண்ணி யருளி நிரபாயமான திரு நாட்டிலே போய்ப் புக்க படியை அனுபவிக்கப் பெற்ற வேறு சிலர் நிர்வாஹர் வேண்டும்படி குறையுடையேன் அல்லேன்-என்கிறார் –

மண்மிசைப்  பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-

மண்மிசைப் பெரும்பாரம் நீங்க
த்ரிபாத் விபூதியில் -யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா -என்கிறபடியே கனத்தார் உண்டாய் இருக்கச் செய்தேயும் பாரம் இல்லை இ றே -அஹங்கார ஸ்பர்சம் உடையார் இல்லாமையால் -ஆகையால் இ றே மண் மிசைப் பெரும் பாரம் என்று விசேஷிக்கிறது –
ஓர்பாரத மாபெரும்போர்-
பெரும் பாரம் -விஸ்வம்பரை பொறுக்க ஒண்ணாது இருக்கை -ஓர் பாரதம் -மஹா பாரதம் –அதாகிறது பெரும் போரை விளைத்து
பண்ணிமாயங்கள் செய்து
பகலை இரவாக்கியும் -ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும்
சேனையைப் பாழ்பட
உபய சேனையிலும் உள்ள பூபாரம் அடங்க வேறும் தறையாம் படி
நூற் றிட்டு
மந்திரித்து -யஸ்ய மந்த்ரீச கோப்தாச-என்ன கடவது இ றே -ஆயுதம் எடுக்க ஓட்டோம் என்கையாலே சூழ் பாலே அழித்தான்
போய் -விண்மிசைத் –
பொய்யாசனம் எடுவார் -பரிபாவிப்பாரான தேசத்தை விட்டுப் போய் -பரிவரேயான பரம பதத்தில்
தன தாமமே புக மேவிய சோதி
கதஸ் ஸ்வம் ஸ்தானம் உத்தமம் –என்கிறபடியே தனக்கு அசாதாரணமான ஸ்தானத்தில் போய்ப் புக்கான்
தன்தாள்-நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-
அவன் திருவடிகளைக் கிட்டி நான் அனுபவிக்கப் பெற்றேன் -எனக்கு வேறு நியந்தாக்கள் உண்டோ -புருஷார்த்த காஷடையாக ததீயரை நினைக்கை யாலே-அவர்களை பிறர் என்கிறிலர்-

————————————————————–

நிகமத்தில் கிருஷ்ண சேஷ்டிதங்களை பேசின இப்பத்தும் கற்றார் ஆழ்வார் தம்மைப் போலே கிருஷ்ணனுக்கே பக்தராவார் என்கிறார் –

நாயகன்  முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்-வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்-
சகல சேதன அசேதனங்களும் நியாந்தாவாய் -பிரளய ஆபத்தில் வயிற்றிலே வைத்து ரக்ஷித்து-உள்ளிருந்து நெருக்கு படாமே வெளிநாடு காண புறப்பட விட்டு சர்வ அவஸ்தையிலும் அவற்றை பிரகாரமாக உடையனாய்
அவற்றின் பக்கல் நிற்கச் செய்தேயும் அசித் கதமான பரிணாமமும் சேதன கதமான துக்கித் வாதிகளும் தன் பக்கல் தட்டாத படி நிற்கும்
இது இ றே கீழில் திரு வாய் மொழியில் சொல்லிற்று -அத்தை அநு பாஷிக்கிறது
கேசவன் அடியிணை மிசைக்-
கேசி ஹந்தா என்கையாலே இது திரு வாய் மொழியில் கிருஷ்ண விருத்தாந்தத்தை இ றே சொல்லிற்று –
ஆக இரண்டு திருவாய் மொழி களையும் அனுபாஷிக்கிறது -என்னுதல் ‘
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்தி என்கிறபடியே கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல் –
குருகூர்ச்சடகோபன் சொன்ன-தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–
ஆப்தரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்திலும்-
தூய்மை யாவது -ஸ்ரீ -கிருஷ்ண விருத்தாந்தத்தில் கலப்பு அற்று இருக்கை –
துவள் -குற்றம் –அதாவது பரத்வத்திலே நெஞ்சு செல்லுகை -அத்தை தவிர்ந்து ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் பிரவணராக பெறுவார் -திருவடி ஸ்ரீ ராமாவதாரத்தில் பிரவணராய் இருக்குமா போலே


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: