திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-3-

இப்படி பிரணய கோபம் தலையெடுத்து சர்வ பிரகாரத்தாலும் எம்பெருமானோடு சம்ச்லேஷிப்போம் அல்லோம் -என்று இருந்த தம்மை
தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி சேர்த்துக் கொண்டு சம்ச்லேஷித்த படியைக் கண்டு -தன்னோடு சேர்வோம் அல்லோம்
என்பாரையும் சேர்த்துக் கொள்ள வல்ல திரு விண்ணகர் அப்பனுடைய விருத்த கடநா சாமர்த்தியம் இருந்த படி என் -என்று விஸ்மிதராக
-இப் பிரசங்கத்தாலே -இன்னமும் பாரீர் -என்று -தன்னுடைய விபூதி கத்வத்தைக் காட்டி அருளக் கண்டு -பண்டு -தன்னைப் பிரிந்து
-மஹா அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று இன்னாதாரான ஆழ்வார் -இப்படி உபகாரகனாய் கொண்டு தானே தனக்கு ப்ராப்யமும் ப்ராபகமும்
-மற்றும் எல்லாமாயும் இருக்கிற படியையும் -அவனுடைய விருத்த விபூதி கத்வத்தையும்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வத்தையும்
-மற்றும் உண்டான ஸுந்தரியாதிகளையும் ப்ரீதராய்க் கொண்டு பேசுகிறார் –

——————————————————————

முதல் பாட்டில் விருத்த விபூதிகனான சர்வேஸ்வரனை திரு விண்ணகரிலே காணப் பெற்றேன் என்கிறார் –

நல்குரவும்  செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

தாரித்ரியமும் -வெல்லப்படும் பகையும் உறவும் -விபூதி முகத்தாலே பல படியும் விஸ்த்ருதனான-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -நான் அல்லேன் என்று அகலப் புக தான் மேல் விழுந்து என்னை சேர்த்துக் கொண்டு அடிமை கொள்ளுகிறவனை –செல்வம் மல்கு -சம்பத் மிகுகை-

——————————————————————–

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

விருத்தமான விபூதி விஸ்தாரங்களை யுடையனாய் -ஸ்வ பாஹு பலத்தாலே ஒருவராலும் காண ஒண்ணாத படி அறப் பெரியனாய் இருந்து வைத்து என்னை அடிமை கொள்ளுகிறவனுடைய ஊரான திரு விண்ணகர் அவனுடைய திவ்ய நகரங்கள் எல்லா வற்றிலும் நல்ல நகரம் என்கிறார் -கண்ட இன்பம்-பரிச்சின்ன ஸூ கம் / தண்டமும் தண்மையும் -கொடுமையும் தண்ணளியும் /
தழலும் நிழலுமாய்க்-உஷ்ணிக்கும் நெருப்பும் குளிரும் நிழலும் –

————————————————————

நகரமும்  நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய கல்யாண குணங்களை ஒழிய ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார் -நகரமும் நாடுகளும்-சிறுமை பெருமையாலே விரோதம் சொல்லிற்று / நிலனாய் விசும்பாய்ச் -ரூபியான நிலனும் அரூபியான விசும்புமாய் / புகர்கொள் கீர்த்தி-என்றது திரு நாட்டில் காட்டில் திரு விண்ணகரிலே புகுந்த பின்பு அவனுடைய கல்யாண குணங்கள் நிறம் பெற்ற படி –


புண்ணியம்  பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

புண்ய பாப ரூபாதியால் எம்பெருமானுக்கு விசேஷணத் வேன தோற்றுகிற விபூதி எல்லாம் அவன் கிருபையால் உண்டாயிற்று -இது பொய்யல்லாமை ஆராய்ந்து பார்த்து கொள்ளுங்கோள் -என்கிறார் –
புணர்ச்சி பிரிவு -புண்ய பாப பல ரூபமான சம்ச்லேஷ விஸ்லேஷன்கள்-/ அல்லனாய்-புண்ய பாபாதிகளுக்கு நியாமகனாய் அவற்றுக்கு வஸ்யன் அன்றிக்கே இருக்கும் என்கிறது –இன்னருள் என்கிறது -ஒரு காரணம் அறப் பண்ணும் கிருபை –

———————————————————————

கைதவம்  செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-

சிறியார் பெரியார் என்னாதே-எல்லார்க்கும் ரக்ஷகன் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என்கிறார் –
ப்ரஹ்மாதி பீபீலிகா அந்தமான சகல ஜந்துக்களும் அவனாக்கின சோலை -எல்லாரையும் ஓக்க ஸ்தாவரமாக பேசுகையாலே தந்தாமுடைய சகல நிர்வாஹத்வமும் பகவத் அதீனம் என்று கருத்து-

—————————————————————-

மூ வுலகங்களுமாய்  அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-

மூவுலகங்களுமாய் அல்லனாய் -அவ்வளவு அன்றிக்கே மற்றும் விலக்ஷணமான விபூதியை உடையனாய் –
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப்-ஸ்ரீயும் அஸ்ரீயுமாய்
புகழாய்ப் பழியாய்த்-கீழ் சொன்ன இரண்டையும் உடையவர்களுக்கு வரும் இரண்டையும் சொல்லுகிறது
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச்-அயர்வறும் அமரர்களும் வந்து தொழும் படியான திரு விண்ணகர் -எம்பெருமான் மேல் விழ செய்தே-தாம் அல்லேன் என்று இருந்த இருப்பை நினைத்து பாவியேன் என்கிறார் –

————————————————————–

பரஞ்சுடர்  உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-

எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார் -அப்ராக்ருதமான திரு உடம்பை உடையவனாய் -ஜகத் சரீரனாய் -அதீந்திரனாயும் -கண் காண வந்து திருவவதாரம் பண்ணியும் -ஆஸ்ரிதற்காக அத் திரு உடம்போடு நெடு நாள் வர்த்தித்து அருளியும்-இப்படி ஸூ லபனாய் வைத்து தன்னை யுகாவாதார் திறத்து வஞ்சனங்கள் பண்ணியும் –

————————————————————

வன்சரண்  சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

எனக்கு சரணமான மாத்திரமே அல்ல -மற்றும் எல்லாம் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார் —
அநந்ய பிரயோஜனரை பரிக்ரஹித்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –
தெற்கு திக்குக்கு சரணாக -எனக்கு ஸூ லபன்–என்னை அடிமை கொண்டு உபகரித்தவன் –

————————————————————

என்னுடைய சிரமம் எல்லாம் தீரும்படி-தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்-

என்னப்பன்  எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-

எனக்கு உறுதியான என் பிதாவாய் -தோழியாய் -பொன்னும் மணியும் முத்தும் போலே போக்யனாய் -எனக்கு அவ்வளவும் அன்றிக்கே மிகவும் உபகாரகனாய்
என் போல்வாருக்கு எளியனாம் படி திரு விண்ணகரிலே வருகை யாகிற உபகாரகத்தை பண்ணினவன் -உபகாரகனாம் இடத்திலே தனக்கு ஒப்பு இல்லாதவன் –

——————————————————–

அவனுடைய திருவடிகள் அல்லது மற்றொரு ரக்ஷகம் இல்லை என்னும் இடத்தை புத்தி பண்ணுங்கோள் என்கிறார் –

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-

சிறுமை பெருமை– அணுத்வ மஹத்வங்கள் /
குறுமை நெடுமையுமாய்ச்– நடுவுள்ள ஹரஸ்வ தீர்க்கங்கள் / -சுழல்வன நிற்பன- ஸ்தாவர ஜங்கமங்கள் /
அவை அல்லனுமாய்-இவற்றில் இவனுக்கு வியாப்தி கர்ம நிபந்தம் அல்லாமையாலே -தன் பக்கல் அவற்றின் தோஷம் தட்டாது ஒழிகை
மழலை வாய்வண்டு-இனிய மிடற்று ஓசை யுடைய வண்டு-

—————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழி வல்லார் அயர்வறும் அமரர்களுக்கு போக்யராவார் என்கிறார் –

காண்மின்கள்  உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-தாளிணையன்தன்னை-
லோகத்தில் உள்ள எல்லீரும் கண்டு க்ருதார்த்தர் ஆகுங்கோள் என்று அவர்கள் கண் எதிரே வளர்ந்த திருவடிகளை யுடையவனை
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்-
ஆயிரம் திருவாய் மொழிகளிலும் அவனுடைய ஜெகன் நிர்வாகத்தை சொன்ன இது திரு வாய் மொழி வல்லார்
கோணைஇன்றி -மிறுக்கு இன்றி
குரவர்களே.-கௌரவ்யர்

——————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: