திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-3-

கீழ் பிரணய ரோஷத்தாலே -அவனோடே சம்ச்லேஷிப்போம் அல்லோம் என்று இருந்த தம்மை -தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி
சேர்த்துக் கொண்ட படியைக் கண்டு விஸ்மிதராக -நீர் இது ஓன்று கொண்டோ விஸ்மிதர் ஆகிறது -நாம் சேராத வற்றை எல்லாம்
சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு -முன்பு பிரிவாலே வந்த
அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே
நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்
-நித்ய சம்சாரியாய் போனவன்றும் மயர்வற மதி நலத்தை நிர்ஹேதுகமாக அருளி என்னை பொருந்த வீட்டுக் கொண்டான்
-வள வேழ் உலகில் அயோக்யதையை அனுசந்தித்து -அகலப் புக-தன் நீர்மையைக் காட்டி சேர்த்துக் கொண்டான்
-இப்போது பிரணய ரோஷத்தாலே அகன்று முடிய புக -தன்னுடைய சர்வ சக்தி யோகத்தாலே சேர விட்டுக் கொண்டான்
-அவை போல் அன்று இ றே பிரணய ரோஷம் -அகல ஒண்ணாதே அணுக ஒண்ணாதே இருப்பது ஓன்று இ றே -இத்தால் சொல்லிற்று ஆயிற்று
–அகன்று முடிந்து போவோம் என்பாரையும் உடையவன் முடிய விட்டுக் கொடான்-என்கிறது –
முதல் திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்தித்து -பத்துடை அடியவரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்தார் –
இங்கு மின்னிடை மடவாரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்து இது திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்திக்கிறார்-
இப்படி கண் அழிவு அற்ற மேன்மையும் நீர்மையும் உள்ளது இவனுக்கே என்று அனுசந்தித்து ப்ரீதி பிரகர்ஷத்தாலே பேசுகிறார் –

————————————————————-

விருத்த விபூதிகனான சர்வேஸ்வரனை திரு விண்ணகரிலே காணப் பெற்றேன் என்கிறார்-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்-வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
தாரித்ரியமும் -அதற்கு எதிர்த்தட்டான ஐஸ்வர்யமும் -துக்க அனுபவம் பண்ணும் நரகமும் -ஸூக அனுபவம் பண்ணும் சுவர்க்கமும் –
சமாதானத்தால் மீளுமது அன்றிக்கே வென்றே விட வேண்டும் பகையும் –அதற்கு எதிர்த்தட்டான உறவும்
முடித்தே விடக் கடவதான விஷமும் -முடியாத படி காத்து போக்யமுமாய் இருக்கும் அமுதமுமாய் –
அநிஷ்டமான தாரித்யாதிகளோடு இஷ்டமான ஐஸ்வர்யாதிகளோடு -வாசியற -ததீயத் ஆகாரத் வேண-இவருக்கு உத்தேசியமாய் இருக்கும் இ றே -இதில் தோஷ அம்சம் அஸஹ்யம் அன்றோ என்னில் -தன்னை தேஹ விசிஷ்டனாக அனுசந்தித்த போது த்யாஜ்யமாம் -சேஷத்வ விசிஷ்டனாக அனுசந்தித்த போது உபாதேயமாகக் கடவது -ராஜ புத்திரனுக்கு பிதாவினுடைய ஓலக்கத்தோடு சிறைக் கூட்டத்தோடு வாசியற பிதாவின் ஐஸ்வர்யம் என்று இருக்கும் இ றே
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
இப்படி விபூதி முகத்தாலே பல படியும் விஸ்ருத்தனானவன் -நாஸ்த்யந்தோ விஸ் தரஸ்ய மே என்று தன் விபூதிக்கு எல்லையில்லை என்று இ றே தானும் சொல்லுவது –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
சர்வகதனானது தமக்காக என்று இருக்கிறார் –ஒருவனை பிடிக்க சுற்றி ஒரூரை வளைப்பாரை போலே -இப்படி சர்வகதனான பெருமையை உடையனாய் வைத்து -ப்ரணய ரோஷத்தாலே அகன்று -முடிய புக்க என்னை தாழ நின்று சேர்த்துக் கொண்ட உபகாரகனை என்றுமாம் –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
நிரவதிக சம்பத்தை உடைய தேசம் -பிரிந்து தூது விட வேண்டாதே-ப்ரணய ரோஷத்தாலே -கிட்ட ஓட்டோம் -என்று வியசனப் படாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் இடம் என்கை -லஷ்மனோ லஷ்மி சம்பன்னவ் -என்கிறபடியே இடைவிடாதே பகவத் அனுபவ ஸ்ரீ -இ றே சம்பத்து ஆகிறது –
திருவிண்ணகர்க் கண்டேனே.-ஓர் இடத்திலே காண ஆசைப்பட்டு ஓர் இடத்தே காண்கை அன்றிக்கே தூது விட்ட அர்ச்சாவதாரத்திலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

—————————————————————-

ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் காண ஒண்ணாத பெருமையை யுடையனாய் வைத்து என்னை அடிமை கொள்ளுகிறவன் ஊரான திரு விண்ணகர் சர்வ வி லக்ஷணம் என்கிறார் –

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

கண்ட இன்பம் – பரிச்சின்ன ஸூ கம் -ப்ரத்யக்ஷ சித்தம் அன்றிக்கே -சாஸ்திர ஸித்தமாய்-அபரிச்சின்னமான ஸூ கத்திலே இ றே தமக்கு அந்வயம்
துன்பம் -அதற்கு எதிர்த்தட்டான துக்கம் –தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கலக்கங்களும் தேற்றமுமாய்த்-அஞ்ஞானங்கள் / ஞானம் /கோபம் /பிரசாதம் /உஷ்ணத்தை பண்ணும் அக்னியும் /சீதா ஸ்வ பாவமான நிழலும்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
ஸ்வ யத்னத்தாலே காண ஆசைப்பட்டார்க்கு அரியனாய் இருக்கிறவன் கிடீர்-தான் மேல் விழுந்து என்னைக் காண ஆசைப்படுகிறான் –கண்டு கொள்வதற்கு அரிய சர்வேஸ்வரனாய் என்னை அடிமை கொண்டவனூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–தெளிந்த திரையை யுடைத்தான ஜலத்தாலே சூழப்பட்ட திரு விண்ணகர் -பரமபதம் உத்தேச்யம் ஆனவாறே -விரஜாய் உத்தேச்யம் ஆமா போலே -அவ்வூர் உத்தேச்யம் ஆனவாறே அங்கு உள்ள ஜல ஸம்ருத்தியும் உத்தேச்யமாய் இருக்கிறது இ றே இவர்க்கு –-நன்னகரே-கலங்கா பெருநகரம் இதற்கு சத்ருசம் அன்று -விடாய்த்த இடத்திலே விடாய் தீரலாம் படி இருக்கிற ஏற்றம் உண்டு இ றே இதுக்கு –

————————————————————

திரு விண்ணகர் அப்பனுடைய கல்யாண குணங்களை ஒழிய வேறு ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார்  –

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

நகரமும் நாடுகளும் –
சிறுமை பெருமையால் வந்த விரோதம் ஆதல் -நாகரிகர் போக பிரதானராய் உத்க்ருஷ்டராய் இருப்பார்கள் -நாட்டில் உள்ளார் அபக்ருஷ்டராய் தேஹ தாரண மாத்திரமே பிரயோஜனமாய் இருக்கும்மா தாழ்வு உண்டு -அத்தால் வந்த விரோதம் ஆதல் –
ஞானமும் மூடமுமாய்-ஞாதாக்களும் அஞ்ஞருமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய்
ஒப்பு இன்றிக்கே சூழப் பட்ட பரப்பை யுடைத்தான தேஜசாய் -அதற்கு எதிர்தலையான தமஸாய்
நிலனாய் விசும்பாய்ச்-கடினமான பூமியாய் -அச்சமான ஆகாசமாய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
சிகரங்களை சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள் சூழ்ந்த திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.
ஸத்பாவமே இ றே பரம பதத்தில் உள்ளது –அந்தகாரத்தில் தீபம் போலே புகர் பெற்றது -இங்கே இ றே கீர்த்தி -மின்னிடை மடவாரிலே இறாய்த்த நமக்கே அன்றியே இதில் இழியாதார்க்கும் கீர்த்தி யல்லது உஜ்ஜீவன சாதனம் இல்லை –

—————————————————————-

இவ்விபூதி யடங்க அவன் கிருபையால் உண்டாயிற்று –இது பொய்யல்லாமை பார்த்துக் கொள்ளுங்கோள் என்கிறார் –

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
ஸூ க துக்க ஹேதுவான புண்ய பாபங்களும் -தத் பல பூதமான அபிமத சம்ச்லேஷ விஸ்லேஷன்களும்–
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய்
அநு கூல விஷயமான எண்ணமும் -பிரதி கூல விஷயமான விஸ்ம்ருதியும் -ஸத்பாவ அஸத் பாவங்களுமாய் –
அல்லனாய்-புண்ய பாவங்களை அனுபவியா நிற்க செய்தே தான் அகர்ம வஸ்யனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-கண்ணன்
பிரளயத்திலும் அழியாத மாடங்கள் -அவ்வவதாரத்துக்கு பிற்பட்ட என்னைப் பெறுகைக்காக திரு விண்ணகரிலே வந்து நிற்கிற கிருஷ்ணனான உபகாரகன்
இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.
தன் பேறாகப் பண்ணும் கிருபையால் இது அடங்க உண்டாயிற்று –கைதவமே.–-இதில் அர்த்தவாதம் உண்டோ -இல்லை இ றே – -ஆராய்ந்து கொள்ளுங்கோள்-

—————————————————————-

சிறியார் பெரியார் என்னாதே சர்வர்க்கும் ரக்ஷகன் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார் –

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
கிரித்திரிமம்–ஆர்ஜவம் –கறுப்பும் வெளுப்பும் –
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
சத்யம் -அசத்தியம் -பால்ய-வர்த்தகம் -அத்யாதனமும் புராதனமும் –
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
புதிதாக செய்தாப் போலே -தொழிலை யுடைத்தாய் திண்ணிதான மதிள்-பெய்த காவு கண்டீர் -பெருந்தேவுடை மூவுலகே.-
ப்ரஹ்மாதி ஸ்தாவர அந்தமான ஜந்துக்கள் அவனாக்கின சோலை – மூவுலகே.-மேலும் கீழும் நடுவும் –பெய்த காவு-உண்டாக்கின சோலை -சர்வரையும் ஸ்தாவரமாக சொல்லுகையாலே -சர்வருடைய ரக்ஷணமும் பகவத் அதீனம் என்கை -மின்னிடை மடவாரிலே -பொருந்தோம் என்றதுவும் ஸ்வ அதீனம் அன்று என்கை –

————————————————————-

நான் அல்லேன் என்ன செய்தே  தன்னுடைய குண சேஷ்டிதங்களை காட்டி மறக்க ஒண்ணாத படி என்னோடே கலந்து அத்தாலே க்ருதார்த்தனாய் அத் உஜ்ஜவலனாய் இருக்கிறவன் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கண்டீர் என்கிறார் –

மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-

மூவுலகங்களுமாய் அல்லனாய்
க்ருதகம்-அக்ருதகம் – க்ருதாக்ருதகம் -இவற்றைச் சொல்லி அல்லனாய் என்கையாலே -இவ்வளவு அன்றிக்கே அசாதாரணமான நித்ய விபூதியை யுடையவனாய்
உகப்பாய் முனிவாய்-ராக த்வேஷங்களாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
ஸ்ரீ யும் –அஸ்ரீயும் -தவ்வை – அஸ்ரீ -பிராட்டி கடாக்ஷத்தால் வந்த புகழாய்-அ ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த பழியாய்-
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச்
நித்ய சூரிகள் நித்ய விபூதி போலே பொருந்தி தொழும் -ப்ரஹ்மாதிகள் வரை நாற்றம் பொறுக்க மாட்டாத தேசத்திலே -திரு விண்ணகரின் நீர்மையை அனுபவிக்க நித்ய ஸூ ரிகள்படுகாடு கிடக்கிற படி
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் -நித்ய ஸூ ரிகள் மேல் விழ இருக்கிறவன் தான் மேல் விழ -அல்லேன் என்று இருக்கிற படியை நினைத்து பாவியேன் என்கிறார்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–-போகு நம்பீ என்று சொல்லிற்று என் நெஞ்சை விட மாட்டாதவனைக் கிடீர் -நித்ய ஸூ ரிகளோடு கலந்ததில் காட்டில் கிடீர் என்னைப் பெற்ற பின்பு பிறந்த புகர்-நின்று இலங்கு முடியினாய் -என்றது இ றே-

—————————————————————-

எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார் –

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
நிரவதிக தேஜோ ரூபனாய் -அப்ராக்ருதமான திரு மேனியை யுடையனாய் -தேஜஸாம் ராசி மூர்ஜிதம்-ஜகத் சரீரனாய் –
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
யமாத்மா நவேத-என்று அவனுக்கு அத்ருஷ்டனாய்க் கொண்டு அந்தராத்மாவாய் நின்றும் –
ஆவிர்ப்பூதம் மஹாத்மான -என்று ராம கிருஷ்ணாதி அவதாரங்களை பண்ணியும் -அவ்வோ இடங்களிலே பதினோராயிரம் ஆண்டு -நூறாண்டு -நின்றும்
தன் படிகள் சிசுபாலாதிகளுக்கு தோற்றாத படி பண்ணியும் -ஆஸ்ரிதற்கு தோற்றும் படி பண்ணியும் –கைதவம் -வஞ்சனம்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
ப்ரஹ்மாதிகள் தலையால் வணங்கும் படி திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் –
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–
வரையாதே எல்லார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஸ்ரேஷ்டமான திருவடிகள்
சிறியோர் பெரியோர் என்று அன்றிக்கே எல்லார்க்கும் தஞ்சமான புகல் வேறு இல்லை –அல்லாதவை ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் கழுத்துக் கட்டியாய் இ றே இருப்பது –

————————————————————

எல்லார்க்கும் புகல் என்ற மாத்திரம் அன்றிக்கே எனக்கு விசேஷித்து புகல் என்கிறார் –எனக்கு புகலான மாத்திரம் அன்றியிலே-மற்றும் எல்லாம் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் -என்கிறார் –

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தேவ ஜாதிக்கு தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் புகலாய்-தத் பிரதி கூலர்க்கு -வெங்கூற்றம் –அந்தகன் தண்ணீர் என்னும் படியான கூற்றமாய்-
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தன் பாதச் சாயையிலே அநந்ய பிரயோஜனரை வைத்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
தக்ஷிணா திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மணா -என்கிறபடியே தெற்குத் திக்குக்கு சரணமான
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–
எனக்கு புகலானவன்–எனக்கு பவ்யனானவன்-என்னை அடிமை கொண்டு போகிறவன் -எனக்கு உபகாரகன் –

————————————————————-

என்னுடைய சிரமம் எல்லாம் தீரும் படி தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-

என்னப்பன் எனக்காய்
பூதா நாம் யோ அவ்யய பிதா என்கிற போது வன்றிக்கே -எனக்கே யான பிதாவாய் –
இகுளாய் -தோழியாய் -இது தமிழர் நிர்வாகம் -நம்முடையவர்கள் செவிலித் தாய் -என்று நிர்வஹிப்பர்கள்-தாய்க்கு தோழியாய் இருக்கும் இ றே செவிலித் தாய் -அத்தைச் சொல்கிறது –
என்னைப் பெற்றவளாய்ப்-உடம்பு நொந்து பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-
பொன்னும் மணியும் முத்தும் போலே எனக்கு உபகாரகன் –
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
மின்னா நின்றுள்ள பொன் மதிள் சூழ்ந்த திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகை யாகிற உபகாரத்தை பண்ணினவன் –
தன்னொப்பார் இல்லப்பன் –
உபகாரகரில் தன்னோடு ஒப்பார் இல்லாத உபகாரகன் -ப்ரணய ரோஷத்தால் நான் அகலப் புக தான் தாழ நின்று பொருந்த விட்டுக் கொண்டவன் –
தந்தனன் தன தாள்நிழலே.-
தன் தாள் நிழல் தந்தான் -தன் பாதாச்சாயைத் தந்தான் -அழித்தாய் உன் திருவடியால் -என்கிறபடியே என் மநோ ரத்தத்தை திருவடிகளாலே அழித்து தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டான் –

——————————————————————-

அவனுடைய திருவடிகள் அல்லது மற்றொரு ரக்ஷகம் இல்லை என்னும் இடத்தை புத்தி பண்ணுங்கோள் என்கிறார் –

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-

நிழல்வெய்யில்-சீத ஹே துவான நிழலும் -உஷ்ண ஹேதுவான வெய்யிலும்
சிறுமை பெருமை -அணுத்வ மஹத்வங்கள்
குறுமை நெடுமையுமாய்ச்-மத்யம பரிமாண வஸ்துக்களில் உண்டான ஹரஸ்ய தீர்க்கங்கள்
சுழல்வன நிற்பன -ஸ்தாவர ஜங்கமங்கள்
மற்றுமாய் -அ நுக்தமான சர்வமுமாய்
அவை அல்லனுமாய்-தத் கத தோஷைரஸம்ருஷ்டனாய் இருக்கை
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர்
மழலை பேச்சையுடைய வண்டுகள் தம்தாம் அபிமதங்கள் பெற்று வாழ்கிற ஊர்
மன்னு பிரான்-கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை -மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை
காண்மின்களே.-இத்தை எல்லோரும் புத்தி பண்ணுங்கோள் –

——————————————————————–

நிகமத்தில் இது திருவாய் மொழி வல்லார் நித்ய ஸூரிகளுக்கு கௌரவ்யர் என்கிறார் –

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-தாளிணையன்தன்னைக்
நோக்கு வித்யை காட்டுவரைப் போலே இது ஓர் ஆச்சர்யம் பாருங்கோள் என்று லௌகிகர் எல்லாருடையவும் கண் எதிரே வளர்ந்த திருவடிகளை யுடையவனை -உங்கள் தலையிலே திருவடிகளை வைக்க வாருங்கோள் -என்றால் இசைவார் இல்லையே
குருகூர்ச் சடகோபன் சொன்ன-
இந்த ஸுலப்யத்தை அநு சந்தித்தவர் சொன்ன வார்த்தை யாகையாலே ஆப்தம் என்கை
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
பீஷாஸ் மாத் வாதே பவதே -என்கிறபடியே ஆயிரத்திலும்-ஜெகன் நியமனத்தைச் சொன்ன திரு விண்ணகர் விஷயமான இப்பத்தை அப்யஸிக்க வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.
மிறுக்கு இன்றிக்கே நித்ய ஸூ ரிகளுக்கு என்றும் ஓக்க கௌரவ்யர் ஆவார்


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: