திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-2-

மாசறு சோதி தொடங்கி -வைகல் பூங்கழிவாய் அகப்பட -வியஸன பரம்பரையாலே மிகவும் நோவு பட்டு
-ஓர் ஆச்வாஸம் பெறாதே இருக்கிற இப்பிராட்டி
நெடு நாள் விஸ்லேஷித்து நோவு படுகையாலும் -களித்து சரணம் புகிலும் பொறுக்க மாட்டாத தன் திருவடிகளில் பெரிய ஆர்த்தியோடே
நாலு பிரயோகம் சரணம் புகுகையாலும்-மிகவும் ஆற்றாமை யோடே திரு வண் வண்டூரில் தூது ப்ரேஷணம் பண்ணுகையாலும்
-அவன் வரவை ஸூ சிப்பிக்கிற நன்னிமித்தங்களாலும் –அவன் தான் நமக்கு அநபிமதமாய் இருக்கப் போனாப் போலே
தன் வரவு அநிஷ்டமாய் இருக்க வருவான் ஒருவன் ஆகையாலும் -நம்முடைய பாக்ய வைகல்யத்தாலும் அவன் வரவு தப்பாது என்று நிச்சயித்து –
-இனி அவன் வரிலும் அவனோட்டை சம்ச்லேஷம் விஸ்லேஷ அந்தமாய் அல்லாது இராது
-இனி சம்ச்லேஷித்து மீளவும் விஸ்லேஷித்து துக்கம் பரம்பரைகளை அனுபவிப்பதில் காட்டிலும் ஸம்லேஸ்ஷியாது ஒழியவே முடிதும்
–முடியவே இந்த விஸ்லேஷ துக்கம் அனுபவித்து ஒழி யலாம் என்று ப்ராணய ரோஷத்தாலே துணிந்து -நிச்சயித்து
தங்களுடைய லீலா உத்யானத்தில் அதி மநோ ஹரமாய் இருபத்தொரு மண்டபத்தில் எம்பெருமானுக்கு தங்கள் பக்கல் வந்து அணுக ஒட்டாத படி
அநாதரமாகிற கல் மதிலை இட்டுக் கொண்டு -தன்னுடைய கிளி தொடக்கமான லீலா உபகரணங்களை யும் அவனுக்கு எட்டாதபடி பண்ணிக் கொண்டு
தோழிமாரும் தானும் கழகமாக இருந்து -அவன் வந்தாலும் அவனைக் கடாக்ஷித்தல் -அவனோடு சம்ச்லேஷித்தல் செய்யக் கடவோம் அல்லோம் –
-அவனோடே விஸ்லேஷித்து பட்ட வியஸனம் தீர அவன் எதிரே முடிய வேணும் என்னும் மநோ ரதத்தோடும் அந்நிய பரைகளைப் போலே இருக்க
-வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன் -என்று கூப்பிட்ட பிராட்டியுடைய த்வனியைக் கேட்டு-
திரௌபதியை துச்சாசனாதிகள் சபையில் நலியா நிற்க -அவள் கோவிந்த என்று கூப்பிட்ட ஆர்த்த த்வனியைக் கேட்டால் போலேயும்
-ஆனையின் ஆர்த்த நாதம் செவிப்பட்ட போது போலேயும்
-சர தல்பகத்ரான ஸ்ரீ பீஷ்மர் தசையை அனுசந்தித்த போது போலேயும் மிகவும் கலங்கிய எம்பெருமான் –
நம்மைப் பிரிந்தவள் இங்கனே நோவு பட நாம் உதவாபி பெறாது ஒழிவதே-நமக்கு பும்ஸத்வம் ஆவது என் -என்று
லஜ்ஜா பயங்களினால் விஹவலனாய் மிகவும் கின்னனாய்க் கொண்டு -இவளோடு சம்ச்லேஷித்து அல்லது தரிக்க மாட்டாதானாய்
இவள் இருந்த இடத்துக்கு அதூர விப்ரக்ருஷ்டமாக வந்து இவள் பிரணய கோபத்தினால் அணுக ஒண்ணாத படி இருக்கிற இருப்பைக் கண்டு
-சாபராதரான நாம் அநபிமத தசையில் கண் காண நேரே சென்று இசைவின்றிக்கே மேல் விழில்-ம்ருது பிரகிருதி யாகையாலே மாந்தும் –
ஆனபின்பு இவளுடைய ஹிருதய காலுஷ்யத்தைப் போக்கி சம்ச்லேஷித்து இவளையும் தரிப்பித்து நாமும் உளவோமாம் விரகு ஏதோ என்று நிரூபித்து
-ச ப்ராதுச் சரணவ் காடம் -என்னும்படியாலே அனுவர்த்தித்து திருத்திக் கொள்கிறோம் என்று ஒருபடி நிலை நின்று
-தன் திருமேனியோடு விகல்ப்பிக்கலாம் படி இருபத்தொரு சோலையினுள் இட்டு அவளுக்கும் தோழிமாருக்கும் தெரியாத படி
பிரத்யா சன்னமாகச் சென்று -அவர்களைக் காணப் பெறாதே விடாய்த்த தன் திருக் கண்கள் ஆரளவும் நின்று கண்டு அருளி
-இப்பிராட்டி யுடையவும் தோழிமாருடையவும் ஆலோகாலாபாதிகளை பெறாமையாலும் -இவளுடைய லீலா உபகரணமான கிளி பூவைகளுடைய
-சம்ஸ்பர்ச மதுரா லாப ச்ரவணங்களைப் பெற்று ஆத்ம தாரணம் பண்ணப் பெறாமையாலும் -இப்பிராட்டி தன்னில் காட்டிலும்
தன் பக்கலிலே பரிவுடைத்தாகையாலே தனக்கு இவளோட்டை சம்ச்லேஷத்துக்கு புருஷகாரமாக நினைத்த தோழிமார் உள்ளிட்ட பரிஜனமும்
-இவள் தன்னில் காட்டிலும் -வைமுக்கயம் பண்ணி இருகையாலும் -ஷணே அபி தே யத் விரஹோ அதி துஸ் ஸஹ -என்னும் கணக்காலே
-க்ஷண காலமும் எம்பெருமான் தனக்கு இவளை ஒழிய தரிப்பு அரிதாய் செல்லா நிற்க -இப்பிராட்டியும் தோழிமாரும்
சோபயன் தாண்ட காரண்யம்-என்னும் படியே அவனுடைய ஸுந்தர்ய தரங்கங்களாலே – தங்கள் இருந்த உத்யானம் எல்லாம்
மயில் கழுத்து சாயல் ஆகையாலும் -ஆலங்கட்டி போலேயும் வர்ஷா தாரை போலேயும் அவனுடைய கடாக்ஷங்கள் தங்கள் மேலே
நிரந்தரமாக பட்டதனாலே புளகித காத்ரைகள் ஆகையாலும் -அவனை பிரத்யா சன்னன் என்று அறிந்து -ப்ரணய கோபம் அற மிக்கு
-அவன் பக்கல் பராங்முகிகளாய் இருக்க -அவனும் தன்னுடைய ஸுந்தர்யாதி களையும் தன்னுடைய ஆற்றாமையையும் ஆவிஷ்கரித்து
ஊடல் தீர்த்து இப்பிராட்டியோடே சம்ச்லேஷித்து பொருந்தினானாய் இருக்கிறது –

——————————————————————-

இவர்கள் மறைக்க மறந்து -அசேதனம் ஆகையாலே இறாய்க்க அறியாத பந்தையும் கழலையும் எடுத்துக் கொண்டு -க்ருஹீத்வா ப்ரேஷமாணா ஸா -என்கிறபடியே இவற்றிலே பண்ணுகிற அத்யாதரத்தைக் கண்டு -இவனுடன் வார்த்தை சொல்லாதே இருக்கிறது என் -என்று -இவை நீ நினைக்கிறவர்கள் உடையனவை அன்று காண் -எங்களுடையவை காண் –இவற்றைத் தந்து அவர்கள் உன்னை உபேக்ஷியாமே அவர்கள் இருந்த இடத்தே போ என்கிறாள்-

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு
பந்திலும் கழலிலும் பண்ணுகிற அபி நிவேசத்தைக் கண்டு -இது நம் பக்கல் ப்ரேமத்தால் வந்ததாக மாட்டாது -வேறே சிலரோடு கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே கலங்கி -நம்மை அவர்களாக பிரமித்து -பந்தையும் கழலையும் அவர்களனவாகக் கொண்டு ஆஸ்வாசிக்கிறாள் என்று பார்த்து -உன்னை இப்படி கலங்கப் பண்ண வல்ல அழகையும் ஆத்மகுணத்தையும் உடையவர்கள் முன்பே இது என்ன கார்யம் செய்கிறாய் என்கிறாள்
மின்னிடை-தேக குணத்துக்கு உப லக்ஷணம் –
மடவார்கள் -நாண்-மடம் -அச்சம் -பயிர்ப்பு முதலானவை ஆத்ம குணங்களுக்கு உப லக்ஷணம் -தன்னோடு கலக்கிற போது -இது ஓர் அழகே இது ஓர் ஆத்ம குணமே -என்று கொண்டாடும் படியைக் கண்டு -இவன் புக்க இடம் எங்கும் சொல்லும்படி இது இ றே-என்று கல்பித்துச் சொல்லுகிறாள் -மடவார் என்கிற பஹு வசனத்தாலே ஒருவருக்கு உற்றானாய் இராத பரப்பரப்பைச் சொல்லுகிறாள் -இது என் -அவர்கள் யார் என்ன –
நின்னருள் சூடுவார் முன்பு
உன்னுடைய பிரசாத்துக்கு பாத்ர பூதைகள்-எங்களை அவர்களாக பிரமித்து முன்னாடி தோற்றாதபடி பண்ணினவர்கள் -அவர்கள் சந்நிதியில் இது என்ன கார்யம் செய்கிறாய் -இவர்கள் விழுகை யாவது தவிர்ந்து வார்த்தை சொல்லுமவளானால் மற்றுள்ளது பார்த்துக் கொள்ளுகிறோம் என்று அத்தை இசைந்து -அவர்கள் இங்கு உண்டோ -என்றான் -அவர்களோடு கலந்த படியை அஸந்நிஹிதையான நான் அறிந்த படி கண்டாயே -அப்படியே யவர்களும் காண் -உன்னைப் போலே அந்நிய பரைகளோ அவர்கள் -செய்யாது ஒழி யில் அத்தனை அல்லது செய்தது மறைக்க ஒண்ணாது காண் -அங்கனே யாகில் வருவது என் என்ன –
நான தஞ்சுவன்
அஞ்ச வேண்டுகிறது என் என்ன -பசு கிணற்றில் விழுந்தால் ஐயோ என்பார் இல்லையோ -அவர்கள் கடாக்ஷம் தாரகமாக இருக்கிற உன் பக்கலிலே வைமுக்கியத்தைப் பண்ணுவார்கள் –
அத்தால் வருவது என் என்ன -நீ துடுப்புதி-அது நான் காண மாட்டேன் –அவர்கள் பக்கல் முகம் பாராதே நிற்கும் தடுமாற்றத்தை -அது -என்கிறாள் –என்னோடு உறவு இல்லை யாகில் அஞ்சுகிறது என் என்ன -பர அநர்த்தம் பொறுக்க மாட்டாது ஒழி கைக்கு உறவு வேணுமோ -உன்னைப் போலே பர அநர்த்தமே போது போக்காக இருக்கிறவர்களோ நாங்கள் என்ன -இப்படி அதி சங்கை பண்ணுகிறது என் உன்னை ஒழிய வேறு சிலர் உண்டோ எனக்கு என்ன அது பொய் இ றே என்ன -நான் ஆர் திறத்திலே மெய் செய்தாய் என்ன
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
ஏக தார வ்ரதனாய் உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்துச் சென்று ஒருத்திக்காக இலங்கையை அழித்தது பொய்யோ -என்ன -அதுவும் -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானை என்று இளிம்பராய் இருப்பார் அகப்படுகைக்காக செய்தாய் அத்தனை –
மன்னுடை இலங்கை -ராவண பாலிதையான இலங்கை -ஆரேனுக்கும் ரஷிக்கலாம் அரணுடைய ஊர் -வெளி நிலத்திலும் ரக்ஷிக்க வல்ல ராவணன் –
அரண்காய்ந்த மாயவனே!-அவ் வரணை அழித்து மூலையடியே வழி போம் படி பண்ணினவன் –
மாயவனே -க்ரித்ரிம சேஷ்டிதங்களை பண்ணினவன் -அது சிலரை அகப்படுத்துகைக்கு செய்தது ஆகில் உன்னை அகப்படுத்துகைக்கு ஆனாலோ என்ன
உன்னுடைய சுண்டாயம் நானறிவன்
உன்னுடைய க்ரித்ரிம லீலை என்னுமிடம் நான் அறிவேன்
இனியது கொண்டு செய்வதென்?
நான் அறிந்த பின்பு அத்தை முன்னிட்டு என் பக்கல் பிரயோஜனம் இல்லை –அபூர்வை கள் பக்கலிலே போ என்ன -கைப் பட்டத்தை செய்யலாவது இல்லை இ றே என்று பந்தையும் கழலையும் கொண்டு போகிறோம் என்று போகப் புக்கான்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–
இவை யாரதாக நினைத்துக் கொண்டு போகிறாய் -நீ நினைக்கிறவர்களவை இல்லை காண் -என்னுடைய பந்தும் கழலும் கிடாய் -ஸ்வரூபத்தை பார்த்தாலும் மமகாராம் த்யாஜ்யம் –த்வயஷ ரஸ்து பவேன் ம்ருத்யு என்கிறபடியே ப்ரணய தாரையில் வந்தாலும் -உன்னது என்னது -என்கைக்கு மேல் இல்லை உறவு அறுதிக்கு -தானே பொகட்டு போம் என்று –என்னுடைய -என்கிறாள் -அவனும் யஸ்யை தே தஸ்ய தத்த நம் அன்றோ -ஸ்வரூப ஞானம் உடைய உன்னுடைய மமகார விஷயம் அடங்கலும் என்னதன்றோ என்று போகாத தொடங்கினான் –
தந்து போகு நம்பீ!–-உயிரை வைத்துப் போ என்பாரைப் போலே -அவன் மாட்டான் என்று அறிந்து மர்மஜ்ஜை யாகையாலே தந்து போ என்கிறாள் -இவர்கள் தொட்டு அளைந்து என்று இ றே அவன் ஆதரிக்கிறது -இவளும் அவன் தொட்டு அளைந்ததைக் கொண்டு தரித்து கிடைக்காக தந்து போ என்கிறாள் –
நான் தருவேனோ -இவை ஒழிய எனக்குச் செல்லுமோ என்றான் –
நம்பீ -முதலிகள் அன்றோ -உமக்கு புக்க இடம் எங்கும் பந்தும் கழலும் அன்றோ -ஷோடச ஸ்த்ரீ சஹஸ்ராணி என்கிற படியே அபிமத விஷயங்கள் ஓன்று இரண்டா -நடக்கலாகாதோ –
சப்தத்துக்கு பொருள் சொல்லுகை அன்றிக்கே யுக்தி பிரதியுக்தியாலே நினைவைச் சொல்லுகிற இது வி றே இத் திருவாய் மொழிக்கு கருத்து -திருப் பாவைக்கு எல்லே இளங்கிளியே பாட்டுப் போலே இத் திருவாய் மொழியும் பாவ பிரதானம் என்னும் இடத்தைக் காட்டுகிறது –

—————————————————————

தந்து போகு நம்பீ என்றாள்-அவனும் போவோம் என்று கிட்ட வர நின்றான் -ப்ரணய தாரையில் வியவஹாரமும் பிரதிபத்தியும் வ்யுத்பத்தி வேளையில் போலே அன்று இ றே -இயல் அறியுமவன் ஆகையாலே -வார்த்தை சொல்லாம் என்று இருந்தவள் -வார்த்தை சொல்லக் கடவளாய் போ என்கிறாள் ஆகில் இனிச் செய்வது என் என்று வர நின்றான்

போகு  நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-

போகு நம்பீ!
நீர் பரப்பராய் -முதலிகளாய் -இருப்புதீர்-உறவு உடையாரைப் போலேதீண்டாதே போம் -எத்தனைபேரைத் தீண்டினீர் என்பதை அறியோம் -எங்கள் மேல் புடவை படாமே போம்
முற்பட போகு நம்பீ என்றவாறே வர நின்றான் -பின்பு போகு நம்பீ என்றவாறே தொட்டான் –
உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
இவளுடைய அம்ருத உபமானமான நிஷேத வசனம் கேட்ட வாறே ஓர் நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே அவயவங்கள் விக்ருதமாயிற்றன-ச மஹாத்மா ஸூ துர்லப-என்று கிட்ட உபேக்ஷிக்க கிடையாத சம்சாரத்தில் இவ்வளவு அவகாஹித்து -பிரளய ரோஷத்தால் போ என்பாரைப் பெற்றால் விக்ருதனாகச் சொல்ல வேணுமோ –
தாமரை புரை கண்ணிணையும் –விகாசம் செவ்வி குளிர்த்தி பரிமளம் இவற்றை உடைத்தாகை-செவ்வாய் முறுவலும்-ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு அதரத்தில் பழுப்பு எறித்து தோற்ற ஸ்மிதம் பண்ணி நின்ற நிலை
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
இவளுடைய நிஷேத வசனத்தாலே அவனுக்குப் பிறந்த விகாரம் இவர்களுக்கு ஈடுபடுகைக்கு உறுப்பாயிற்று –
அவனுக்கு ஓன்று இரண்டு அவயவம் ஆயிற்று விக்ருதமாயிற்று -இவர்களுக்கு சர்வ அவயவங்களும் சிதிலமாயிற்று -அணு அழிக்குமா போல் அன்று இ றே விபு அழிக்குமது-போகு நம்பீ -என்று உறவற்ற வார்த்தைக்கும் -அழிதற்கே நோற்றோமே யாம்;-என்ற என்கிற இதுக்கும் ஒரு சேர்த்தி இல்லையீ என்ன
– நோற்றோமே யாம்;–உன் அழகைக் கண்டு ஈடுபட்டு சம்ச்லேஷிக்கும் உறவு உடையோர் அல்லோம் நாங்கள் -இங்கனே அழிந்து போம் படி பாபத்தை பண்ணினார் சிலர் காண் -அத்ரோபவிஸ்ய சா தேன கா அபி புஷ்பை ரலன்க்ருத-என்னுமவர்கள் அல்லோம் -ஸ்வ க்ருதம் ஹ்யுப புஜ்யதே-என்று முடிந்து போருமவர்கள் என்று தங்கள் அழிந்த படி நேராக அவன் அறியாத படி முகத்தை வைத்து திரிய நின்றார்கள் -அது தான் அவன் பாக்ய பலம் ஆயிற்று -பெருக்காற்றை எதிர் செறிப்பாரை போலே -கண்ணும் கண்ண நீரும் பேணாத வடிவும் கண்டால் இவன் ஆற்ற மாட்டானே -கிமர்த்தம் தவ நேத்ராப்யம்-என்று காண்டற்கு ஆற்ற ஒண்ணாத இருப்பை இவன் தானே கண்டால் பாடு ஆற்ற வல்லனோ
தோகை மா மயிலார்கள்
இது ஒரு மயிர்முடி இருக்கும் படியே -என்றான் -நீ போலி கண்டு பிரமிக்கும் படி மயிர் முடி யுடையார் ஆர் –அங்கனம் சிலர் உண்டோ ஏன் –
நின்னருள் சூடுவார்
உன்னோடே சம்ச்லேஷித்து பிரிவில் இப்படி பிச்சேறும் படி பண்ணினவர்கள் -அவர்களை பிரிந்து நோவு படாதே அவர்களோடே சம்ச்லேஷி என்ன – அவர்களைக் கிட்டும் அளவும் இங்கனே இருக்கிறேன் என்று திகைத்து இருந்தான் -அவர்களோடே கிட்டும் விரகு என்-என்று இருக்கிறாய் யாகில் -அவர்களை கிட்டும் விரகு சொல்லுகிறேன் கேள் என்ன -அது
செவி ஓசை வைத்தெழ-குழலூது
எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத உன் குழல் இன்னிசை போதராதே என்று -குழல் ஊதுகை என்ன -பெண்களோட்டை கலவி என்ன -பர்யாயம் -அது ஈடு அன்று என்ன -அதுக்கு உபாயம் சொல்லுகிறோம் –
ஆகள் போகவிட்டுக் குழலூது
பசுக்களை கை கழிய விட்டு குழல் ஊது-கண்டாருக்கு பசு மறிக்க குழல் ஊதுகிறாய் -அதுக்கு ஸ்வாபதேசம் -பெண்களை அழைக்கை யாக குழலூது -செவியோசை வைத்து எழுகை பலமாய் குழலூதுகை உபாயமாய் இருந்தது -அதுதான் அபிமத விஷயத்தை பற்றவன்றோ செய்வது -இங்கே இருந்து ஊதுகிறேன் -என்று குழலை வாங்கி ஊதினான் –
போயிருந்தே குழலூது -ஒன்றைச் சொல்ல ஒன்றைச் செய்கிறது என் -உனக்கு அபிமதைகள் திரளுகைக்கு நீர் வாய்ப்பான நிலங்களில் போயிருந்து ஊதாய்-

——————————————————————-

குழலூது போயிருந்து -என்று என்னை சொல்லுகிறது என் -சிலரை அழைக்கைக்காகவோ குழலூதுவது -ப்ராஹ்மணர்க்கு சந்த்யா வந்தனம் போலே ஜாதி உசித விருத்தி அன்றோ -என்ன இவ் வசங்கத பாஷணங்களை இங்கே இருந்து சொல்லாதே போ -என்கிறாள் –

போயிருந்து  நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின்செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;
வேயிருந் தடந்தோளினார் இத் திருவருள்பெறுவார் எவர்கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3-

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை,
உன் பொய்யில் பழகின எங்கள் பக்கல் உன் பொய் விலை செல்லாது -இங்கு நின்றும் போய்-உன் பொய் அறியாதவர்கள் கோஷ்ட்டியில் இருந்து சொல்லு –நினைவு ஒன்றும் செலவு ஒன்றுமான உன்னை அறியாதே பிரமிக்கைக்கு பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் உண்டே
நம்பீ!
நமக்கு அங்கனம் சிலர் உண்டோ -நான் உன்னை ஒழிய அறிவேனோ -என்ன -உமக்கு அநேகர் அன்றோ பூர்ணர் அல்லீரோ என்ன -தன்னைக் குறித்து இவள் சொல்லுகிற அமிர்த உபமானமான வார்த்தையை கேட்டு விக்ருதன் ஆனான் –
நின்செய்ய-வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;
பக்குவ பலம் போல் போக்யமாய் சிவந்த அதரத்தையும்-ப்ரேமத்தால் குதறிச் சிவந்த திருக் கண்களையும் கொண்டு என்னை யாராகப் பிரமித்து ஹ்ருஷ்டனாகிறாய் -உன் புள்ளுவம் அறியாதார்க்கு உறை என்ற பிரசங்கத்தில் நீ இப்படி இருப்பதே -சிலர் –
விபரீதம் இந்நாள்
நாங்கள் முன்பு ஒரு நாளும் இச் செவ்வி கண்டு அறியோமே-என்ன -அவை கிடக்க-இது ஒரு தோள் அழகு இருந்த படி என் என்ன –
வேயிருந் தடந்தோளினார்
பசுமைக்கும் செவ்வாய்க்கும்-மூங்கில் போலேயாய் நீண்டு சுற்றுடைத்தாய் உன்னை இப்படி பிரமிக்கும் படி பண்ணின தோள் அழகை யுடையார் ஆரோ என்ன -எனக்கு அப்படி இருப்பார் ஆர் என்ன –
இத் திருவருள்பெறுவார்
ஸ்வ தஸ் சர்வஞ்ஞனான உனக்கு அந்யதா ஞானம் பிறக்கும் படி பண்ணினவர்கள் -செய்யவாயிருங் கனி-என்கிற இடம் அவன் பக்கல் இவர்களுக்கு உண்டான பாவ பந்தம் சொல்லுகிறது -வேயிருந் தடந்தோளினார்-என்கிற இடம் அவனுக்கு இவர்கள் பக்கல் உண்டான பாவ பந்தம் சொல்லுகிறது
எவர்கொல்,
உனக்கு இப்படி ஸ் ப்ருஹணீய தமைகளாய் இருப்பவர்கள் ஆரோ -இவன் பக்கல் பிரணய ரோஷத்தால் சொல்லுகிறார்கள் -தன்னைப் போக்கி இவனோடு கலந்தவர்களை தனக்கு உத்தேச்யர் என்று இ றே இவர் இருப்பது
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–
கடலைக் கடைந்து பிராட்டியை லபித்த போதும் கண்டிலோமீ இச் செவ்வி -அகாதமாய் பரந்த கடல் உன் கையில் பட்ட பாட்டை தங்கள் கையில் படும்படி பண்ணினார் ஆர் என்னவுமாம் -மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடைய உன்னை மறுக்கப் பண்ணின தோள் அழகை யுடையார் ஆரோ என்னவுமாம் –

————————————————————–

அரை க்ஷணம் தாழ்த்தோம் என்னா-அசங்கத பாஷணங்களை சொல்லுகிறது என் -நான் பரதந்த்ரன் அல்லனோ -மாதா பிதாக்கள் போய் பசுக்களை மேய் என்று நியமித்தால் உங்கள் பக்கல் வரப்போமோ -இது ஒழிய வேறு ஒரு  விளம்ப ஹேது இல்லை என்ன -அக்கடிதங்களை கடிப்பிக்கை நீ  வல்லது ஓன்று அன்றோ -என்கிறாள் –

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு-
சிறு வடிவைக் கொண்டு சகல லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்தாய்
நீளிலை -ஆலம் பேரிலை என்னுமா போலே விபரீத லக்ஷணையாய்-சிற்றிலை -என்றபடி
அன்று நீ கிடந்தாய்-
வெறும் பிரளயம் ஒழிய -பரிவரும் இன்றிக்கே இருந்த அன்று –இப்படி அகடிதகடங்களைச் செய்ய வல்ல உனக்கு -பசு மேய்க்க போனேன் -என்ற இவ் வஸத்யத்தை கேட்டார்க்கு சத்யம் என்னும் படி சொல்லுகை விஸ்மயமோ -நான் அரை க்ஷணம் தாழ்ந்த கோபத்தால் அஸத்யன் என்றி கோள் -எல்லாரும் அறியாரோ என் அசத்தியம் என்ன –
உன்மாயங்கள்-மேலை வானவரும் அறியார்-
உன்னுடைய கிரித்ருமங்கள் ஆக்கனான ப்ரஹ்மாதிகள் அன்றிக்கே -நித்ய ஸூ ரிகளும் அறியார்கள் -சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்திக் கொடு நிற்கச் செய்தே ஈட்டிய வெண்ணெய் தொடு உன்னைப் போருமவன் அல்லையோ -பழையாரை விடுகை உனக்கு பழையதாய் போருவது ஓன்று அன்றோ –
; இனி எம்பரமே?
இப்படி ஒருத்தருக்கும் நிலம் அல்லாத கிரித்ருமத்தை அபலைகளான நாங்கள் அறியவோ -பழம் கிணறு கண் வாங்குகிறது என் -அது கிடக்கிடாய் -நான் பசு மேய்க்கப் போனமை அஸத்யமோ -என்ன –
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
பெண்கள் திரள இருக்கிற மணல் குன்றினிலேயோ உன்னைப் பசு மேய்க்கச் சொல்லிற்று -என்கிறாள் –
வேலி னேர்தடங்கண்ணினார்-ஓரு ஆளும் ஒரு நோக்கும் நேரான கண் அழகை உடையவர்கள் -அவர்கள் நோக்கிலே அகப்பட்டு உன் உன் கண்ணுக்கு இரையிட்டாய் அத்தனை அன்றோ –
விளையாடு சூழலைச் -கண்ணுக்கு இட ஒரு -துரும்பு இல்லாத இடத்திலேயோ பசு மேய்ப்பது –
சூழவே நின்று-அவர்கள் கண் வட்டத்தை விடாதே நின்றோ பசு மேய்க்கச் சொல்லிற்றோ-இப்பொய்களை எங்களை ஒழிய சொல்லாய் என்கிறாள் –
காலி மேய்க்க வல்லாய்!
மணல் குன்றிலே பசுக்களை வயிறு நிரப்ப வல்லவன் -என்று வட தள சயனம் போலே இருப்பது ஓன்று ஓன்று இ றே இதுவும் -வல்லாய் என்று சாமர்த்தியம் தோற்ற வார்த்தை சொன்னவாறே மிகைத்து வார்த்தை சொன்னான் –
எம்மை நீ கழறேலே.-என்கிறாள் –
ஆற்றாமைக்கு உதவாத தத்துக்கு மேலே மிகை வார்த்தை சொல்லாதே கொள்
எம்மை -உன்னைப் பிரிந்த ஆற்றாமையால் நோவு படுகிற எங்களை
நீ -பிரிவில் நோவு இன்றிக்கே எங்களை நோவு படுத்துகிற நீ –கழறேலே.-மிக வார்த்தை சொல்லாதே கொள் -ஆற்றாமைக்கு உதவினார்க்கு அன்றோ வாயுள்ளது-

———————————————————–

அசங்கதங்களை செய்தேனே என்றும் -பொய்யை மெய்யாக உபபாதித்தேனே என்றும் -என்னை கிரித்ருமன் ஆக்குவதே -என்ன

கழறேல்  நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5-

கழறேல் நம்பி!
முதலிகள் என்னா -அபிபவித்து வார்த்தை சொல்லாதே கொள்ளும் -நெஞ்சில் மறமுடையார் சொல்லுமது வார்த்தை என்று -உங்களை ஒழிய சாக்ஷி உண்டோ –என்ன –
உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ;
உன் கிரித்திரிமம் உபய விபூதியும் நன்கு அறியும் – தானும் அவனுமானால் உபய விபூதியும் தன் பக்ஷத்தில் நிற்கும் என்று இருக்கிறாள் ஆதல் -வாயும் திரை யுகளில் படியே எல்லாரும் தன்னைப் போலே இழவாளர் என்று இருக்கிறாள் ஆதல் -இது எல்லாம் வேண்டா -நான் பொய்யன் என்னும் இடத்துக்கு ஒரு சாக்ஷி காட்டிக் காண் என்ன
திண்சக்கர-நிழறு தொல்படையாய்!
உன் பரிகரத்திலே காட்டுகிறேன் -ஜெயத்ரன் வதத்தின் அன்று பகலை இரவாக்க வேணும் -என்று கிறித்ரிமத்திலே துணிய -அதுக்கு பெரு நிலை நின்ற திரு வாழியைக் கேட்டுக் கொள் -திண்சக்கரம்-விஸ்லேஷிக்கப் போகாதவன் -உன்னிலும் களவில் திண்ணியன் என்றுமாம் -நிழறு -இவனுடைய களவுக்கு –நிழறு-செய்து கொடுக்குமவன் –
தொல்படையாய்! -நீ கை கழலா நேமி யான் அன்றோ –
உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
வார்த்தை மூட்டி நிருத்தரனாய் நின்றான் -இவனை உண்டாக்கி கார்யம் கொள்ள வேணும் என்று பார்த்து உனக்கு ஒரு ஹிதம் சொல்லக் கேள் –கலங்கின உன்னைத் தெளியும் படி வார்த்தை சொல்லக் கேள் என்ன -அவனும் -இது ஒரு பேச்சில் இனிமை இருந்த படி என் -என்றான் -இவள் சொல்லும் அர்த்தத்தில் தாத்பர்யம் இல்லையே அவனுக்கு
மழறு தேன் மொழியார்கள்-
போலி கண்டு இப்படி உன்னை பிச்சேற பண்ணினவர்கள் ஆரோ -மழறு தேன்-மழலைத் தேன் -கலங்கின தேன் போலே இருந்துள்ள பேச்சு அழகை யுடையவர்கள் -ஆரோ என்றவாறே நீங்களே என்றோ எங்கள் தங்கள் தலையிலே ஏறிடப் புகுகிறானோ என்று
நி ன்னருள் சூடுவார் -என்கிறார் –
மனம் வாடி நிற்க –
உன் உகப்புக்கு இலக்கானவர்கள் ஆஸ்ரயம் அழிந்த தளிர் போலே நெஞ்சு வாடி நிற்க –அதாவது -மாசறு சோதி தொடங்கி-நெடுக்கப் பிரிவாலே நோவு பட்டு முடியவும் பெறாதே -சம்ச்லேஷிக்கவும் பெறாதே இருக்கிற என்னைப் போல் அன்றியே அனிச்சம் பூ போலே இருக்கிறவர்கள் –நெஞ்சு உலர்ந்து நிற்க இங்கு இராதே போ என்று பேசாது இருந்தாள்-உன் பேச்சிலும் இவைகள் பேச்சு அன்றோ எனக்கு தாரகம் -என்று இவளுடைய பூவையையும் கிளியையும் கொண்டாடத் தொடங்கினான் -சிலரை ஆதரிக்கை யாவது -அவர்கள் உடைமையை ஆதரிக்கை இ றே
எம்-குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–
பாவி எங்களது காண் இவை நீ நினைக்கிற வவர்களவை அல்ல -குழறு பூவை-அ ந ஷர சரசமாகப் பேசுகையாலே -கலங்கின உனக்கு தெளிய வார்த்தை சொல்ல வல்லவையும் அன்று -அவற்றோடு
குழகேலே.–செறியாதே கொள்-

———————————————————————–

முன்பு  இப்பிராட்டியும் தோழிமாரும் அநபிபவநீயை களாய் இருக்கையாலே அணுக  கூசினவன்   -தன்னுடைய முக விகாரத்தாலும் ஸ்மித வீக்ஷணாதிகளாலும் பாவ கர்ப்பமான தாழ்ந்த பேச்சுக்களாலும் இவர்கள் மருந்தீடு பட்டால் போலே யாய் இவனை நிஷேதிக்க மாட்டாத தசையில் நிர்ப்பயனாய் சென்று அணுகி இவர்கள் பாடே இருந்த குழமணனை மேல் விழுந்து எடுத்துக் கொண்டான் –

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-

குழகி எங்கள் குழமணன் கொண்டு-
பாவீ இது ஆரதாக எடுத்தாய் -எங்களது காண் நீ நினைக்கிறவர்களது அன்று காண் -என்கிறாள் -எங்களது என்றவாறே பொகட்டுப் போம் என்று சொன்னாள்-அது தான் அவனுக்கு விருப்பத்துக்கு உடலாயிற்று –எங்கள் அனுமதி வேண்டாவோ உனக்கு என்ன –எனக்கு நிவாரகர் உண்டோ -நான் செய்தது செய்யலாம் அன்றோ என்ன –
கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
நிவாரகர் இல்லை என்னா -அடிக் கழிவான செயல்களை செய்தால் உனக்கு ஒரு கார்யம் இல்லை -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒன்றும் வாயாது –எங்கள் அனுமதி இல்லாமையாலும் பிரயோஜனம் இல்லை –பிரயோஜனம் இல்லை யாவது என் -இது தானே பிரயோஜனம் -பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் உண்டோ என்ன
பழகி யாம் இருப்போம்
இப் பொய்களுக்கு பழையோம் அல்லோமோ
பரமே இத் திருவருள்கள்?
உங்களுடைய லீலா உபகரணங்கள் எனக்கு போக உபகரணங்கள் அன்றோ -இது ஒழிய வேறு ஒரு பிரயோஜனம் உண்டோ -என்று நீ சொல்லுகிற அபி நிவேசம் எல்லாம் எங்கள் அளவேயோ-இதுக்கு நாங்கள் விஷயமாகப் போருமோ-போலி கண்டு பிரமிக்கும் படி உன்னைப் பண்ணினவர்கள் பக்கலிலே போ -என்ன -அவர்கள் ஆர் -அங்கனேயும் சிலர் உண்டோ என்ன -அவர்களை சொல்லித் தருகிறோம் –
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் -த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் சீதயா நாப்னுயாத் கலாம் -என்று இருக்குமவர்கள் –
தேவிமை தகுவார் பலருளர்;
உனக்கு பட்டத்துக்கு உரியவராய் இருக்குமவர்கள் -ராகவோ அர்ஹதி-என்று உனக்கு சத்ருசைகளாய் இருப்பவர்கள் -ஒருவர் இருவர் அல்லர் -ஓர் அடிபாடர் அல்லீரே -பரப்பரர் அன்றோ நீர் -அவர்கள் பக்கலிலே போம் என்ன -போவோம் என்று இவர்கள் திரளில் வந்து புகுரப் புக –
கழகம் ஏறேல்,
எங்கள் திரளில் ஏறாதே கொள் -என்ன -எனக்கு குற்றம் என் என்ன –
நம்பி!
சமதம யாதி ஆத்ம குணோபேதர் திரளில் அன்றோ நீர் புகுவது -அவர்கள் அன்றோ உம்மை கிட்ட உரியார்-சிறு பெண்கள் திரளில் புகுகை யீடன்று என்ன -ஆனால் நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ என்ன
உனக்கும் இளைதே கன்மமே.–
தீமை செய்யும் சிரீதனான உனக்கும் இது பாலிச ப்ரவ்ருத்தி என்கிறாள் -சர்வேஸ்வரனாய் அவாப்த ஸமஸ்த காமனான அவனை சில பெண்கள் எங்கள் திரளில் புகுராதே கொள் என்ன -புக மாட்டாதே பேகணித்து நின்ற இந்த ஆஸ்ரித பாரதந்த்ரத்தை உத்கர்ஷம் சொல்லப் பொறாத சம்சாரத்திலே தங்களை ஒழிய ஆர் விஸ்வசிக்க
எழுதியிட்டு வைத்தார்கள் -என்று பட்டர் அருளிச் செய்தார் –

—————————————————————-

கழகம் ஏறேல்  நம்பீ -என்று தங்கள் திரளில் புகுர ஒட்டிற்று இலர்கள் -அவனும் செய்யலாவது  காணாமையாலே அவள் கையில் பாவையை கடாக்ஷித்தான் -ப்ரேஷி தஞ்ஜாஸ்து கோசலா -என்று நினைவு அறியுமவர்கள் ஆகையால் எல்லாரும் கூட அத்தைப் பற்ற இவன் அத்தை அவர்கள் கையில் நின்றும் பறிக்கப் புக்கான்

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது
எங்கள் கையில் பாவையை பறிப்பது கார்யம் அன்று -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை –எங்கள் அனுமதி இல்லாமையால் பறிக்கப் போகாது –தன்னுடைய சக்தி கொண்டு அழிக்கலாவது எதிரிகள் ஆகில் இ றே-அபலைகள் கையில் அத்தை பறிக்க சக்தன் அல்லனே -ஒரு கலத்தில் உண்பாரை போலே அவர்கள் கையிலும் தன் கையிலும் இருக்குமாகில் இறே பிரயோஜனம் உள்ளது -பிரயோஜனம் இல்லாமையே அன்று -உனக்கு குண ஹானியாய் வரும் என்ன -பஹு குணனான எனக்கு ஒரு அல்ப தோஷம் தோற்றப் படுமோ என்ன
கடல்ஞாலம் உண்டிட்ட-நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
நிர்ஹேதுகமாக பிரளய ஆபத்தில் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து நோக்கினவனாய் -ஆகாச இவ நிர்மல-என்கிறபடியே ஹேயப்ரத்ய நீகனாய் -யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று அபரிச்சேதய மஹா குணனாய் இருந்த உனக்கு வந்ததாகிலும் பிழையானது பிழையே காண் -லோகத்துக்கு பிரகாசகனான சந்திரனுக்கு உண்டான மறுவும் லோக பிரசித்தம் அன்றோ -குணங்கள் புக்க இடம் எங்கும் குண ஹானியும் புகும் காண் -குணங்கள் உனக்கு நிறம் தருமா போலே இந்த ஷூத்ர ப்ரவ்ருத்தியும் உனக்கு அவத்யாவஹம் காண் மேல் சொல்லலாவது கண்டிலேன் –அவர்கள் செவியில் இன்னது சொன்னான் -என்று அநு பாஷிக்க ஒண்ணாதாய் இருப்பது ஒன்றை சொன்னான் -அதாவது பிரணய வேளையில் பணி மொழிகள்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி;
நினைக்கவும் கூட கூச வேண்டும் நெஞ்சு அறிந்த வார்த்தையைச் சொல்லி எங்களோடு விளையாடுதீ -இவன் போக புத்தியால் நோக்கு அழிய சொன்ன வார்த்தையை தங்களோடு அவனுக்கு பாவ பந்தம் இல்லை என்று தோற்றுகைக்காக அஸத் சமமாகி விளையாடுதீ என்கிறாள் -எங்களோடு விளையாட முறை யுண்டோ –என்ன பஞ்ச லசஷம் குடியில் பெண்களிலும் எனக்கு விளையாட முறை இல்லார் உண்டோ என்ன
அது கேட்கில்என்னைமார்-தன்மம் பாவம் என்னார்;
என் பந்துக்கள் அத்தை கேட்க்கில் கூடும் கூடாது என்று நிரூபியார்கள்-என்னைமார் -தமையன்மார் -ஐம் மார் -ஆணுடன் பிறந்தார் வேலைப்பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ -என்ன கடவது இ றே -பந்துக்களுக்கு உப லக்ஷணம் -உன்னோடு பாவ பந்தம் இல்லை என்று அறியாதே உன்னுடைய சள பிரவ்ருத்தியை மெய் என்று சம்ச்லேஷம் வருத்தம் என்று மேலிடுவார்கள் -நிரூபித்து சொல்லுகை தர்மம் -நிரூபியாதே சொல்லுகை பாபம் என்னாதே கேட்ட மாத்திரத்திலே பொறாதார்கள்-அவர்கள் அறிய புகா நின்றார்களோ என்ன -பிறந்தது ஓன்று நாள் ஓட்டத்தில் அறியார்களோ என்ன -ஆனால் வருவது என் என்ன
ஒரு நான்று தடிபிணக்கே.
ஒரு நாளாக உன்னோடே விவாதமாய் முடியும் என்கை -இடையர் பெரு மிடுக்கரை அளியச் செய்யும் போதும் தடியால் அழிக்கும் அத்தனை-

——————————————————————–

நாம் இங்கு இருக்கில் இ றே இவனுக்கு மர்மங்களை சொல்லி நலியலாவது -நாம் போவோம் என்று எல்லாரும் கூடப் போகப் புகார்கள் -இவர்கள் போகிற வழி ஓர் அடிப்பரப்பாய் ஒழுகப் போக வேண்டுகையாலே  வழியைக் கட்டி இரு விலங்காகக் கிடந்தான் -அவனைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறார்கள்

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும்
சேதன அசேதனங்களை தேவாதி விபாகம் அற்று-தம ஏகி பவதி-என்று தன்னோடே அவி பக்தமாம் படி கலசி -ஸ்ருஷ்ட்டி காலத்தில் ஒருத்தன் கர்மம் வேறு ஒருத்தன் அனுபவியாத படி -பேதித்தும் -ஸ்ருஷ்ட்டித்தும் என்றபடி
பேதியாதது ஓர்கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
சம்ஹார காலத்தில் அசித்கதமான சூஷ்ம பரிணாகம் – சேதனகதமான அஞ்ஞானம் –ஸ்ருஷ்ட்டி காலத்தில் அசித் கதமான ஸ்வரூப அந்யதா பாவம் -சேதனகதமான ஸ்வ பாவ அந்யதா பாவம் -ஆக இப்பேதங்கள் ஒன்றும் இன்றிக்கே ஏக ரூபமாய் ஏக ரூபமாய் அத்விதீயமாய் அனவதியான ஏக ரூபத்வம் ஆகிற கீர்த்தி சமுத்திரத்தை யுடையையாய் பிரபா ரூபமான சங்கல்ப ஞானத்துக்கு ஆஸ்ரயமானவனே-இத்தால் விஸ்லேஷ தசையில் கலக்கமும் சம்ச்லேஷ தசையில் போக ரூப விக்ருதியும் இன்றிக்கே ஏக ரூபன் என்கை
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உன்னோட்டை கலவி அபாயம் என்று அறியாதே எங்களை உன்னோடே சேர்த்து –இவ்வளவாக விளைத்தவர்களை சொல்லாதே உன்னைத் சொல்லுகிறது என்-பகவத் விஷயத்தில் வைஸத்யம் பிறந்தால் உபகாரகரை கொண்டாடும் என்னும் அர்த்தம் இ றே உள்ளோடுகிறது-நித்யம் யதீய சரனவ் சரணம் மதியம் -எம் தோழிமார் -சஜாதீயராய் இ றே இருப்பது
விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை-
கிருஷ்ணன் உண்டு என்று அறிந்தோம் ஆகில் வாரோம் –இவ்வகப்பாட்டை அறிந்து இருந்தோம் ஆகில் வாராது ஒழியல் யாயிற்று -அத்தால் வந்தது என் என்ன –
உணக்கி, நீ வளைத்தால்,
உணக்குகை யாவது -தரிக்க மாட்டாமே துவளும் படி பண்ணுகை -உன் முகம் பார்த்து அனுபவிக்க பெறாமையாலே தரிக்க மாட்டு கிறி லோம்
என்சொல்லார் உகவாதவரே?
நீயும் நாங்களுமாக இருக்கக் கண்டால் உகவாதவர் என் சொல்லார் -உங்கள் சந்நிதி மாத்திரமே யன்றோ உள்ளது -இதுக்கு சொல்லுகிறது எத்தை என்ன -யோக்யதையாலே சம்ச்லேஷம் வ்ருத்தம் -என்று உன்னுடைய மின்னிடை மடவார்கள் உபேக்ஷிப்பார்கள் –பிரிவாற்றாமையாலே கண்ணாஞ்சுழலை இடுகிறவர்கள் எத்தை சொல்லார் -உன் மேன்மையையும் குணவத்தா ப்ரதையையும் இழக்கக் கிடாய் புகுகிறாய் -ஆப்பான் -இவனை இவர்கள் கடந்து போனார்கள் ஆகில் செய்வது என் என்ன ஜீயர் -அது ஆர்க்கு அழகு -என்று அருளிச் செய்தார் -நின்றார்கள் ஆகில் நினைத்தது பெற்றான் ஆகிறான் -கடந்து போனார்கள் ஆகில் சம்ச்லேஷ அர்த்தமான க்ருஷி தலைக் கட்டிற்று ஆகிறது –

—————————————————————–

போக ஓட்டேன் என்றால் நினைத்த பரிமாற்றம் பெற்றால் அன்றோ இவனுக்கு பிரயோஜனம் உள்ளது -ஒரு தேச விசேஷத்திலே முக்தர் சம்சாரிகளோடு உறவு அற்று இருக்குமா போலே அந்நிய பரதை  பண்ணுவோம் -என்று சிற்றில் இழைக்க தொடங்கினார்கள் -இவர்களுடைய வீஷிதாதிகளை ஒழிய தனக்கு செல்லாமையாலே இவர்கள் கடாஷிக்கைக்காக சிற்றிலையும் சிறு சோற்றையும் தன திருவடிகளாலே அழித்தான்-அத்தாலே இவர்களுக்கு சீற்றம் பிறந்து தங்கள் சங்கல்பத்தை மறந்து அவன் முகத்தை பார்த்து சொல்லுகிறார்கள் –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி
பிரிந்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய -எங்கள் உகவையால் நெஞ்சம் உள்ளுருகி
உன் தாமரைத் தடம்கண் விழிகளின்-அகவலைப் படுப்பான் –
தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய கண்ணிலே நோக்கு ஆகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக -த்ருஷ்ட்டி பந்தத்தாலே இ றே அநந்யார்ஹம் ஆக்குவது –
அழித்தாய் உன் திருவடியால்;
உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இ றே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ
தகவு செய்திலை;
நிர்த்தயர் செய்வதைச் செய்தாய் -பிரிந்த போதே பிரணயித்தவம் போயிற்று இ றே -நீர்மை யுடையார் செய்வதுவும் செய்திலை-நான் செய்த குறை என் என்ன –
எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு-நின்-முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-
எங்கள் லீலைகளைக் கண்டு ப்ரீதனாய் -நின் முகத்தில் ஒளி திகழ முறுவல் செய்து நிற்க -நாங்கள் சிற்றிலை தொட்டுக் கொண்டு இருந்து கடைக் கண்ணாலே உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்க வைத்திலையே -முழுக்க பார்க்கில் எல்லோரையும் பாதி யுமாமே -பிரணயியைப் பார்ப்பது கடைக் கண்ணாலே இ றே -உன்னுடைய லீலை போலே என்று இருந்தாயோ எங்களுடைய லீலையை –கர்மா நிபந்தம் ஆகையால் த்யாஜ்யம் இ றே இது -உன்னோடே சம்ஸ்லேஷியன் என்று நான் பண்ணின சங்கல்பத்தை அழகாலே அழித்தாய்-லீலைகளைத் திருவடிகளாலே அழித்தாய் என்று இன்னாதாகிறாள்-

——————————————————————–

லீலையை திருவடிகளால் அழித்த சீற்றத்தாலே முன்புத்தவற்றை மறந்து அவ்வந்நியாயப் பாட்டை அறிவிப்பாரைப் போலே -இவனை முகம் பாரோம் என்ற சங்கல்பம் அழிந்து முகத்தைப் பார்த்தார்கள் -நெஞ்சில் மறம் எல்லாம் போய் -அந்தத் திருவடிகளே தொடங்கி திரு முடி அளவும் பார்க்க -அத்தாலே அவனுக்குப் பிறந்த விசேஷத்தை சொல்லுகிறாள் –

நின்றிலங்கு  முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

நின்றிலங்கு முடியினாய்!
என்னைத் தோற்ப்பிக்கையாலே நிலை நின்று விளங்கா நின்றுள்ள திரு அபிஷேகத்தை யுடையவன் -அபிஷிக்த க்ஷத்ரியர் விஜய அபிஷேகம் பண்ணினால் போலே -எங்களை தோற்பித்த பின்பு முடியும் நல் தரித்து விளங்குவதும் செய்தது என்கை -இத்தலையில் சத்தை யுண்டாய் அத்தாலே ரக்ஷகத்வம் நிலை நின்ற படி –
இருபத்தோர்கால் அரசு களை கட்ட-வென்றி நீள் மழுவா?
உங்கள் அபிசந்தியைக் குலைத்து முகம் பார்க்கப் பண்ணினோம் இ றே -என்ன -உன்னோடு எதிர் இட்டாரில் உன்னை வென்றார் உண்டோ – இருபத்தொரு கால் ஷத்ரிய குலத்தை கோலி யறுத்த ஆண் பிள்ளை யல்லையோ -எதிரிகளை மழுவாலே அழித்தால் போலே அனுகூலரை அழகாலே அழிப்பு தீ -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம் -என்று ஆண்களை அழிக்கக் கடவ நீ அபலைகளை அழிக்க சொல்ல வேணுமோ –
வியன்ஞாலம் முன்படைத்தாய்!
பிரளயத்தில் உரு மாய்ந்து கிடந்த பூமியை உண்டாக்கினால் போலே ப்ரணய ரோஷத்தாலே அழிந்த எங்களை உண்டாக்கின படி -வியன் -விஸ்மயம்-பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே விரஹ பிரளயம் கொண்ட எங்களை எடுத்த படி -அங்கு விலக்குவார் இல்லாமையால் செய்யலாம் -நிஷேதிக்க செய்தே அன்றோ உண்டாக்கிற்று
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
இன்று இவ் விடைச் சாதி ச பரிகரமாக உஜ்ஜீவிக்கும் படி தோன்றினவன் –வீடுய்ய -ச பரிகரமாக உய்ய
கரு மாணிக்கச்சுடர்!
பிரணய ரோஷத்தாலே இறா ய் த்து இருக்கிற எங்களை மேல் விழுந்து உன் அழகை அனுபவிப்பித்தவனே
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.
இவ்வனுபவம் ஸ்வப்ன கல்பமாய் ஆற்றாமை இ றே எங்களுக்கு நிலை நின்று போருவது என்று தங்கள் பட்ட நோவை அறிவிக்கிறார்கள் என்னுதல்-ஜிதந்தே என்றும் தோற்றோமே மட நெஞ்சமே என்றும் தங்கள் தோற்ற படியை அவன் தனக்கு சொல்லுகிறார்கள் என்றுமாம் -இடக்கையும் வலக்கையும் அறியாத நாங்கள் –

——————————————————————

நிகமத்தில் இப்பத்தை சாதரமாகக் கற்குமவர்கள் நான் பட்ட கிலேசம் படார் என்கிறார் –

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11-

ஆய்ச்சியாகிய அன்னையால்-
அன்னை என்று பொதுவில் சொன்னால் -தேவகி பிராட்டி பக்கலிலும் ஏறும் என்று -ஆய்ச்சியாகிய என்று விசேஷிக்கிறார் -முலை உண்டு வளர்ந்த இடத்திலே இ றே அச்சம் உள்ளது –
அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டு
வெண்ணெய் களவு போயிற்று என்கிற வார்த்தையிலே -இவனே செய்தான் -என்று தாயார் பொடிய பொடி யுண்டு கண்ணும் கண்ண நீருமாய் நின்றால் போலே யாயிற்று -இன்று இவர்கள் திரளில் புகுற வேண்டா என்ற போது நின்ற நிலை
அழு-கூத்த அப்பன்-அழுகிற தசையில் கால் மாறி இட்ட போது வல்லார் ஆடினால் போலே இருந்த படி
அப்பன் தன்னைக் -அந்நிலையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டு தம்மை உண்டாக்கின படி
குருகூர்ச் சடகோபன்-ஏந்திய தமிழ்மாலை –
பிரணய ரோஷம் போனவாறே -போகு நம்பீ என்றும் -புள்ளுவம் பேசாதே என்றும் சொன்னவை ஏத்திற்றாய் விட்டது
ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
அத்விதீயமான பத்து -ஆஸ்ரிதரோடு பாவ பந்தம் வெளியிட்ட பத்து
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–
வாக் மாத்திரத்தாலே சாதரமாகச் சொல்லுவார்க்கு -தூது விட்டு அவன் வரக் கொண்டு புகுர ஓட்டோம் என்று பட்ட கிலேசம் பட வேண்டா -சோறும் புடைவையும் கிடைக்கும் என்கிறது அன்று -பகவத் தாரித்ரியம் இல்லை என்கிறது -சென்று ஒன்றி நின்ற திரு -என்கிறபடியே அவன் தானே வந்து மேல் விழ-நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: