திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -5-10-

திரு வல்ல வாழிலே எம்பெருமானோடு பரிமாற வேண்டி இருக்கிற படிகளை நெடும் போதும் மநோ ரதித்து-அப்படிப் பெறாதே
மிகவும் அவசன்னராய் -திருவடி ராமாவதாரத்தில் சக்தனாய் இருக்குமா போலே பகவத் குண சேஷ்டிதாதிகள் எல்லா வற்றிலும்
தனித் தனியே சக்தராகையாலே ஸ்நேகத்தில் திருவடியில் காட்டில் விலக்ஷணரான ஆழ்வார் -ஆஸ்ரிதர் வாழும் படியும் –
அவர்களுக்கு விரோதிகள் மண் உண்ணும் படியான கிருஷ்ணாவதாரத்தையும் -மற்றும் எம்பெருமானுடைய திவ்ய அவதார சேஷ்டிதங்களையும்
-ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளையும் அனுசந்திக்க வென்று புக்கு மிகவும் சிதிலராய் -அந்த ஸைதில்யத்தை போக்கி யருளி தரித்து நின்று
தேவரீரை அனுசந்திக்க வல்லேனாம் படி பண்ணி யருள வேணும் என்று எம்பெருமானை சரணமாகப் பற்றி முடிக்கிறார் –
ஆழ்வார் தாம் எம்பெருமானை விஸ்லேஷித்து இருக்கிற தசையில் கிருஷ்ணாவதார குண சேஷ்டிதாதிகளும்-மற்றும் உண்டான
எம்பெருமானுடைய குண சேஷ்டிதாதிகளும் புத்திஸ்த்தமாய்க் கொண்டு மிகவும் நலிய -அவற்றால் மிகவும் அவசன்னராய்
-இவ்வவசாதம் தீரும்படி உன் திருவடிகளில் சேர்வது என்று என்று எம்பெருமானைக் குறித்து கூப்பிடுகிறார் என்றுமாம் –

——————————————————————-

உன்னுடைய அவதாராதிகள் என்னை மர்மத்திலே தொட்டு சிதிலம் ஆக்கா நின்றன -இச் ஸைதில்யம் நீங்கி தரித்து நின்று உன்னை அனுபவிப்பது என்று என்று -இத் திருவாய் மொழியிலே பிரதி பாதிக்கிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார்

பிறந்த  வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-

அகர்ம வஸ்யனாய் இருந்து வைத்து ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமாக அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடே கூடி வந்து திருவவதாரம் பண்ணின படியாலும் -பூத நாதி பிரதிபக்ஷம் மாய்ந்து போகும் படியாகவும் -நவநீத ஸுர்யாதி திவ்ய சேஷ்டிதாதிகளாலே அனுகூலர் வாழும் படியாகவும் -வளர்ந்து அருளின படியாலும் -பாண்டவர்களுக்காக அபரிச்சேதயமான பாரத சேனையை அணி வகுத்து -ஆயுதம் எடேன் -என்று வைத்து ஆயுதம் எடுத்தும் பகலை இரவாக்கியும் -தூத்ய சாரத்யாதிகளைப் பண்ணியும் -இவ் வழிகளாலே-ஆஸ்ரிதர் பக்கல் நீ இருக்கும் படிகளைக் காட்டி இப்படிச் செய்து உன் சீர்மை அறியாத துர்த்தேசத்தில் இராதே எழுந்து அருளின ஆச்சர்யங்களாலும் –
விரஹ வியசனத்தாலே அற அவசன்னமான என்னுடைய ஆத்மாவை மர்மத்திலே புக்கு விடாதே நின்று சிதிலமாகி முடியா நிற்பதும் செய்து அபரிச்சேத்யமாய் சிறந்து இருந்துள்ள இவ் வழகை யுடையவனே
பிரியாது கிட்டுவது என்று என்கிறார் -என்றுமாம் –

———————————————————————–

ஏறு பாய்கை தொடக்கமான சகல சேஷ்டிதங்களும் என்னை சிதிலன் ஆக்கா நின்றன -நான் உன்னைத் தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ண வேணும் என்கிறார் –

வதுவை  வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்ன லாவன அல்ல என்னைஉன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?–5-10-2-

விவாஹ பிரசங்கத்தில் எருதுகளிலே பாய்ந்த படியும் -வஞ்சகமாய் வந்த குதிரை வாய் பிளந்த படியும் -மதுஸ்யந்தியான குழலை உடையவர்களுடைய மாலையிலே அவர்களுக்கு பிரிந்தால் தரிக்க ஒண்ணாத படி கலந்த கலப்பும் –
உன் செயலாகையாலே எல்லா சேஷ்டிதங்களும் உன் குண பிரசங்கத்தில் நையும் பிரக்ருதியான என்னை மிகவும் சிதிலம் ஆக்கா நின்றன –
பிரளய காலத்தில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினால் போலே -தரித்து உன்னை அனுபவிக்க வல்லேனாம் படி பண்ண வேணும் என்று கருத்து –

—————————————————————–

உன்னுடைய பால சேஷ்டிதங்கள் என்னை மிகவும் நலியா நின்றன என்கிறார் –

பெய்யும்  பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

தன்னை அறிய ஒண்ணாத படி யசோதை பிராட்டி போலே ஒப்பித்து வந்த பூதனையுடைய முலையுண்ட பிள்ளைத் தனத்திலே உண்டாய் இருக்கிற ரஸ ஞானமும் –பூ பெய்த குழலையுடைய பிள்ளை என்றுமாம் –
அதுக்கு மேலே அஸூரா வேசத்தாலே உயிர் பெற்று ஊருகிற தொரு சக டத்தை திருவடி ஒன்றாலே உதைத்த சிறுமையில் உண்டான ஆண் பிள்ளைத் தனமும் -நெய் யைக் களவு கண்டான் என்னும் இவ்வார்த்தா பிரஸ்தாவத்திலே ஸ்நேஹிநியான தாயார் கையிலே ஒரு துரும்பைக் கொள்ள அத்யந்த ஸூ ந்தரனான நீ உனக்குத் தகுதியாய் தாமரைப் பூ போலே இருக்கிற கண்கள் அச்சத்தினால் நீர் மலக்கும்படி -அடி படுகிறது -என்று பேகணித்து நின்ற நிலையும் வந்து என் நெஞ்சை நீராக்கா நின்றன –

—————————————————————–

புத்த அவதார வ்ருத்தாந்தம் என்னை மிகவும் நலியா நின்றது என்கிறார்-

கள்ள  வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-

கண்டாருடைய நெஞ்சை அபஹரிக்கும் படியான அழகிய வேஷத்தை கொண்டு த்ரிபுரத்திலே புக்க படியும் -அஸூரரோடே சேர்ந்து வைதிக ஸ்ரத்தைகளைப் போக்கி அவர்களை பிராண ஹானி பண்ணின விரகுகளும்
கங்கையினுடைய நீர் வெள்ளத்தை ஜடையிலே தரித்த பிரபாவத்தை யுடைய ருத்ரனும் விஷ்ணுராத்மா -இத்யாதி பிரகிரியையாலே த்வத் அதீனம் என்னும் இடமும் ப்ரஸித்தமாம்படி நின்றதுவும்
அந்தக்கரணத்தை உள்ளே புக்கு குடைந்து என் ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன –

—————————————————————

ஆஸ்ரித விஷயமாக செய்த சேஷ்டிதங்களும் அநுஸந்திக்கும் தோறும் என் மனஸ் ஸூ அற வழியா நின்றது என்கிறார் –

உண்ண  வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

ஒருப்படுத்த -சமைத்த
இந்திரன் க்ருத்தனாய் வர்ஷிக்க நாநா வர்ணமான பெரிய மலையை எடுத்து மழை அவர்கள் மேல் படாமே காத்ததும் –
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளை பண்ணுவதும் செய்து ஜகத் அபிமானியான பிராட்டியோடு சம்ச்லேஷித்து இப்படி செய்து அருளின ஆச்சர்யங்களை அநுஸந்திக்கும் தோறும் என்னுடைய மனஸ் ஸூ நெருப்பிலே புக்க மெழுகு போலே ஒரு காலே முடியாதே நின்று உருகா நின்றது –

—————————————————————–

உன்னுடைய சகல சேஷ்டிதங்களும் காண பெறாத நான் அவற்றை நினைக்கவும் ஷமன் ஆகிறிலன்-தரித்து நின்று அனுசந்திக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

நின்றவாறு  மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!–5-10-6-

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன-ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
ராம கிருஷ்ண அவதாரங்களிலும் உகந்து அருளின கோயில்களிலும் நின்று அருளுகை தொடக்கமாக உண்டான சேஷ்டிதங்களையும் மற்றும் நினைப்பார்க்கு சைத்தில்ய ஹேது வாகையாலே நினைக்க அரியவாய்-அநேக பிரகாரமாய் எனக்கு தோற்றாது இருக்கிற உன்னுடைய ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்?-
வருந்தி உன்னை நினைக்கப் புகுவன் -நினைக்க மாட்டுகிறிலேன் -உன்னை நினைக்கும் படி நின்று நின்று ஆராயா நின்றேன் -உன்னை எங்கனம் நினைப்பேன் என்றுமாம் –
பாவியேற்கு-ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே
பிரளய ஆர்ணவத்திலே இஜ் ஜகத்தை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து பரிஹரித்து அருளி -இது செய்யப் பெற்றோம் என்னும் ஹர்ஷ பிரகர்ஷத்தாலே உஜ்ஜவலனான நீ ஜகத்துக்கு வந்த ஆபத்தை நீக்கினால் போலே உன்னுடைய குண பிரசங்கத்தில் சிதிலன் ஆகைக்கு ஈடான பாபத்தை பண்ணின என்னுடைய ஸைதில்யம் போய் நான் தரிப்பதொரு நல் விரகு அருளிச் செய்ய வேணும் –

————————————————————————-

கண்ணாலே காணப் பெறாதே -ஆந்தர அனுசந்தானமேயாய் சிதிலனாய் போகாதே கண்ணாலே கண்டு தரித்து அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

ஒண் சுடரோ  டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-

ஆஸ்ரிதற்கு மெய்யானாயத் தோற்றியும்-அநாஸ்ரிதற்கு பொய்யனாய் கை வராதே இருக்கிற படியையும் -ஹ்ருதயத்தில் சந்நிஹிதனாய் வைத்தே என் கண்ணுக்கு காண ஒண்ணாத படி மறைந்து என்னை நலிந்த நலிவுகளையும்-
மநோ ரதிக்கிற மநோ ரதத்திலே சிதிலனாகா நின்றேன் -உன் வடிவு அழகை எனக்கு புஜிக்கத் தந்தவனே -த்ருடமாக காணலாம் படி என்னுடைய கண்களுக்கு உன்னுடைய திரு உருவை ஒரு நாள் அருள வேணும் –

—————————————————————-

உன் குண சேஷ்டிதாதிகளை கேட்க்கும் தோறும் சிதிலனாகா நின்றேன் -என் செய்கேன் என்கிறார் –

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே.–5-10-8-

அழகிய உருவோடே ஏகார்ணவத்திலே காண் வளர்ந்து அருளின படியும் -திரு நாபி கமலத்தில் சதுர்முகனாகிற அதிஷ்டானத்தின் உள்ளே வீற்று இருந்து ஸ்ருஷ்டித்த செயல்களும்
ஒப்பு இன்றிக்கே விசஜாதீயமான உன்னுடைய குண சேஷ்டிதங்களை கேட்க்கும் தோறும் என் நெஞ்சம் நெகிழ்ந்து நிற்பதும் செய்து கண்ண நீர் அருவி போலே சோரா நின்றது –

—————————————————–

த்ரைவிக்ரம வ்ருத்தாந்த அனுசந்தானத்தாலே மிகவும் சிதிலனாகா நின்றேன் -நான் தரிப்புடையேனாய் உன்னை அனுபவிப்பது என்று என்கிறார் –

அடியை  மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9-

மஹா பலியை மூன்று படியை இரந்த படியும் -அந்நிலையில் நின்றே இரண்டு அடியாலே த்ரை லோக்யத்தை அகப்படுத்திக் கொண்டு நீ நினைத்ததை முடித்துக் கொண்ட வேண்டப்பாடும்
அவற்றைச் சொல்லக் கேட்க்கும் தோறும் என்னுடைய அந்தக்கரணம் உன்னுடைய பிரஸ்தாவ மாத்திரத்திலே கரைந்து உகும்-உன்னை அனுசந்தித்தால் சிதிலன் ஆகைக்கு ஈடான மஹா பாபத்தை பண்ணின நான் உன்னை என்று தரித்து அனுபவிப்பது –

———————————————————————

உன்னுடைய சமுத்திர மதன வைசித்யர்த்தை அனுசந்தித்து சிதிலன் ஆகா நின்றேன் -தரித்து நின்று உன்னை அனுபவிக்கும் விரகு சொல்ல வேணும் என்று பிரார்த்திக்கிறார்

கூடி  நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10-

அஸூரர்களோடே கூடி நின்று கடலைக் கடைந்து அருளினபடியும் பல ரூபமான அமிருதத்தை தேவர்கள் புஜிக்க அஸூரர்கள் அந்த அம்ருதத்தை விடும்படியாக அவர்கள் எதிரே ஒரு ஸ்த்ரீ வேஷத்தை கொண்டு அவர்கள் தொடர போன விஸ்மயமும்
உள்ளே புக்கு என் ஆத்மாவை உருக்கி முடிக்கிற உன்னை திரு வனந்த ஆழ்வான் உன்னோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணுமா போலே பூர்ணமாக தரித்து நின்று அனுபவிக்கும் விரகு சொல்லாய் –

———————————————————————

நிகமத்தில் இப்பத்தும் கற்றார் ஸ்ரீ வைகுண்டத்தில் போய் எம்பெருமானை நித்ய அனுபவம் பண்ண பெறுவார் என்கிறார் –

நாகணை  மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-

சரணம் புகாரை எம்பெருமான் உபேக்ஷிக்க நினைக்கிலும் உபேக்ஷிக்க ஒட்டாதே விஷயீ கரிக்கப் பண்ணும் ஸ்வ பாவனான திரு வனந்த ஆழ்வான் மேல் கண் வளர்வதும் செய்து -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனாய் இருந்துள்ள எம்பெருமானுடைய திருவடிகளே நமக்கு சரணம் என்று
நாள் தோறும் இதொரு மநோ ரதமே யுடையரான ஆழ்வார் தாம் உளராக்கைக்காக பகவத் குண பிரேரிதராய்க் கொண்டு சொன்ன ஆயிரம் திருவாய்மொழியிலும்

———————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: