திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-10–

திரு வல்ல வாழிலே புக வேணும் பரிமாற வேணும் என்று மநோ ரதித்து-அப்படிப் பெறாதே மிகவும் அவசன்னராய் -நின்றார் கீழே
இத் திருவாய் மொழியில் அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்திக்கப் புக்கு சிதிலரானவர் -இச் ஸைதில்யத்தை போக்கி அருளி
தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்
-திருவடி ராமாவதாரத்தில் சக்தனாய் இருக்குமா போலே -இவர் எல்லா அவதாரத்தில் யுண்டான குண சேஷ்டிதாதிகள்
எல்லா வற்றிலும் ஆழம்கால் பட வல்லராய் இருப்பர்
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள்-என்றார் இ றே
திருவடியைப் போல் அன்றியே பகவத் பிரசாதம் அடியாக வந்த ஞானாதிக்யத்தை யுடையவர் ஆகையாலே திருவடியைக் காட்டில் வி லக்ஷணர் இவர் –
அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற நினைத்தவர் அங்கு கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்
-விபவங்களிலும் இழந்தாருக்கும் இழவு தீர்க்க இடமாய் இருக்க அவதாரங்களில் போருகை யாவது என் –
அர்ச்சாவதாரத்தில் அதீந்த்ரியனான தன்னை சம்சாரிகள் கண்களுக்கு விஷயம் ஆக்குகையும் -சர்வ அபேக்ஷிதங்களையும் கொடுக்கையும் ஒழிய
குளிர நோக்குதல் வினவுதல் செய்யக் கடவது அன்றாக சங்கல்பித்து இருக்கையினாலே -சத்ய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும் படி
அதி நிர்பந்தம் பண்ணைக் கடவோம் அல்லோம் என்று -ஸம்ஸ்ப்ரூ க்ருஷ்யச ப்ரீதியா –ஸூ காடம் பரிஷஸ்வஜே -என்று
கிருஷ்ணாவதாரத்தில் போந்தார் ப்ரத்யாசத்தியாலே -அதுவும் தீர்த்தம் பிரசாதிக்கையாலே
-பல்லில் பட்டுத் தெறித்தது -என்று கூப்பிடுகிறார் -இது ஆழ்வான் நிர்வாஹம் –
உன்னைப் பிரிந்து நோவு படுகிற சமயத்தில் உன்னுடைய குண சேஷ்டிதாதிகள் ஸ்ம்ருதி விஷயமாய் நலியா நின்றது
-இவ் வவசாதம் தீரும் படி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்று என்கிறார் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிட்டார் நிர்வாஹம் –

———————————————————————

உன்னுடைய அவதாராதிகள் என்னை மர்மத்திலே நலியா நின்றன – தரித்து நின்று உன்னை அனுபவிப்பது என்று என்று -இத் திருவாய் மொழியில் அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

பிறந்த  வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-

பிறந்த வாறும்
இவருக்கு மூன்று அவசாதம் உண்டு -எத்திறம் -என்றும் -பிறந்தவாறும் என்றும் -கண்கள் சிவந்தும் -என்றும் -மூன்றிலும் அவ்வாறு மாசம் மோஹித்துக் கிடந்தார் -என்று பிரசித்தம் -ஆவிர்ப்பூதம் மஹாத்மநா -என்று தோஷ ஸ்பர்சத்தைப் பற்ற ருஷி சொன்னான் -ஆஸ்ரிதற்காக கர்ப்ப வாசம் பண்ணினான் என்கிற இம் மஹா குணத்தை இழக்க ஒண்ணாது என்று இவர் பிறந்தவாறும் என்கிறார் -அகர்ம வஸ்யனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித அனுக்ரஹமே ஹேதுவாகப் பிறந்த படி -அப்ராக்ருத சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்கின படி -அஜஹத் ஸ்வ பாவனாய் -வந்து பிறந்த படி -அவதாரங்களில் ஈடுபடுவார் அளவுடையர்கள் இ றே -தஸ்ய தீரா பரிஜா நந்தி யோ நிம்–பிறந்த வாறு என்றால் -வளர்ந்த வாறு என்ன மாட்டாதே -அது தன்னையே ஆவர்த்தித்து ஈடு படுக்கை -பரிஜா நந்தி -இ றே சம்சாரிகளுக்கு பிறக்க பிறக்க ஒளி மழுங்குமா போலே -அவனுக்கே இ றே ஒளி விஞ்சி வருவது -ச உ ஸ்ரேயான் பவதி-ஜாயமான-ஜென்ம கர்மச மே திவ்யம் -என்று அவன் தானும் மதித்து இ றே இருப்பது –
வளர்ந்த வாறும்
பூத நாதி பிரதிபக்ஷம் மாயவும்-நவநீத ஸுர்ய சேஷ்டியாதிகளாலே அனுகூலர் வாழவும் இ றே வளர்ந்தது -பூத நாதிகள் உயிர் மாளவும்-யசோதாதிகள் வெண்ணெய் மாளவும் இ றே வளர்ந்தது -பிரதி கூலர் உயிரும் அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யமே தாரகமாம் படி வளர்த்த படி –
பெரிய பாரதம்
பால்யத்தில் தன்னை நோக்கினான் -பக்வனான பின்பு ஆஸ்ரிதரை நோக்கித் திரிவான்-பிறந்து வளர்ந்து பெரிய பாரதம் கை செய்தான் என்னாது ஒழிந்தது தனித் தனியே ஆழம்கால் படும் படி தோற்றுகைக்காக-பெரிய பாரதம் -மஹா பாரதம் -என்கிறார் –
கை செய்து-
அபரிச்சேதயமான பாரத சேனையை கையும் அணியும் வகுத்து யுத்தம் பண்ணுவித்த படி
ஐவர்க்குத்-திறங்கள் காட்டி யிட்டுச் –
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும் -பகலை இரவாக்கியும் -எதிரிகள் மர்மத்தைக் காட்டிக் கொடுத்தும் -தூத்ய சாரத்யாதிகளைப் பண்ணியும் -ஆஸ்ரித பக்கல் நீ பண்ணி இருக்கும் ஓரங்களை வெளியிட்டும் –
செய்து போன மாயங்களும்-
உகவாதார் மண் உண்ணும் படியாகவும் -உக்காந்தார் உன் படிகளை அனுபவித்து வாழும் படியாகவும் பண்ணி -உன் சீர்மையை அறியாதே சஜாதீய புத்தி பண்ணும் துர்த்தேசத்தில் இராதே போன ஆச்சர்ய சேஷ்டிதங்களும் –
அவதரித்தவோ பாதி பிரியம் போரும் இவருக்கு எழுந்து அருளினதுவும் -க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருது லோசன-மோஹயித்வா ஜகத் சர்வம் கதஸ் ஸ்வம் ஸ்தானம் உத்தமம் –
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று
தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு –துர்யோதனாதிகள் நசித்துப் போனார்கள் -பாண்டவர்கள் ராஜ்ஜியம் பெற்றுப் போனார்கள் -இவரை அந்த குண சேஷ்டிதங்கள் மர்மத்திலே நலியா நின்றது –
விரஹத்தாலே அவசன்னமான என் ஆத்மாவை –எல்லாரும் மஹா பாரதத்தில் கேட்டு தயாரிக்கிறது இ றே
இடை விடாதே நின்று நின்று
உருக்கி உண்கின்ற-சிதிலமாகி முடிகின்ற –முடியவும் மாட்டாதே ஜீவிக்கவும் ஒட்டாதே நலிந்த படி
இச்-சிறந்த வான் சுடரே!
நாட்டுக்கு பரமபதம் ஏறப் போனான் என்ற பேராய் -இவருள்ளே புகுந்தான் –தகுதியாய் அபரிச்சேதயமான அழகை உடையவனே
உனை என்று கொல் சேர்வதுவே?–
உன் குண சேஷ்டிதாதிகளாலே அழிகிற என்னை -நினைத்து தரிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்னுதல் -பிரியாத படி கிட்டுவது என்று என்னுதல் –
பிறந்தவாறு என்று தொடங்கி -எனதாவியை உருக்கி உண்கின்ற -என்று நிர்வஹித்து போருவது-
ஒரு தமிழன் -பிறந்த வாற்றாலும் என்று தொடங்கி –செய்து போன மாயங்களாலும்–உருக்கி உண்கின்ற இச் சிறந்த வான் சுடரே -என்று அவன் பக்கலிலே யாக்கி நிர்வஹித்தான்-

————————————————————-

த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம -என்கிற வாசனையால் -ஐவருக்கு திறங்கள் காட்டியிட்டு -என்று ஆஸ்ரிதற்கு உதவின படி சொல்லிற்று கீழ் -இங்கே பிராட்டிமார் திறத்தே செய்த செயல்களை சொல்லி அவை என்னை சிதிலம் ஆக்கா நின்றன -நான் உன்னைத் தரித்து நின்று அனுபவிக்க  வல்லேனாம் படி பண்ண வேணும் என்கிறார் –

வதுவை  வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்ன லாவன அல்ல என்னைஉன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?–5-10-2-

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்
வதுவை -விவாஹம் -வார்த்தையில் -எருதுகள் ஏழையும் நிரசித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் என்று பிறந்த பிரசித்தி –
ஏறு பாய்ந்ததும்-எருதுகள் மேலே விழுந்த படி -இவருக்கு ம்ருத்யுவின் வாயிலே விழுந்தால் போலே யாயிற்று இருக்கிறது -பொய்கையில் பாய்ந்தது போலே இறை நின்றது அவனுக்கு -கருமாரி பாய்ந்தால் ஆகாதோ என்னும் படி இ றே இவளுடைய போக்யத்தை –
மாய மாவினை வாய் பிளந்தும்
கம்ச ப்ரேரிதமாய்-க்ரித்ரிம வேஷத்தை கொண்டு வந்து -சீற்றத்தால் அங்காந்தது-சிறு பிள்ளைகள் துவாரம் கண்டால் கை நீட்டும் வாசனையால் கையை நீட்டினான் –அபூர்வ தர்சனத்தாலே விம்மிற்று -பூரித்தவாறே இரண்டு கூறாய் விழுந்தான் -ஸ்ரீ நாரத பகவான் ஜகத் அஸ்தமிதம்-என்று வந்து விழுந்தால் போலே யாயிற்று இவருக்கு இருக்கிறது -வ்யாதி தாஸ்யோ மஹா ரௌத்ரஸ் சோ அ ஸூ ர கிருஷ்ண பாஹு நா நிபபாதத் விதா பூதோ வைத்யு தேன யதாத்ரும-இத்தால் ஸ்ரீ ப்ருந்தாவனத்துக்கு வழியிசங்கும் படி பெண்களுக்கு வன்னியம் யறுத்துக் கொடுத்த படி
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
மதுஸ் யந்தியான குழலை யுடையவர்கள் -குரவைக் கூத்திலே அவர்களோடு தன்னையும் ஒருவனாக கோத்த படி -மதுவார் குழலார் என்ன அமைந்து இருக்கச் செய்தே-மதுவைவார் குழலார் என்றது -கண்ணை யுண்ணீர் மல்க என்றால் போலே
குழகும்-அவர்களுக்கு பிரிந்தால் தரிக்க ஒண்ணாத படி கலந்த கலப்பு -தன் மேன்மை பாராதே தாழ்வு சொல்லி கீழ்மை செய்து கலக்கை
அது இது உது என்ன லாவன அல்ல என்னைஉன் செய்கை நைவிக்கும்
அந்தச் செயல் -இந்தச் செயல் -அந்தச் செயல் என்று விசேஷிக்க ஒண்ணாது -நானாகையும் உன்னுடைய சேஷ்டிதங்கள் ஆகையும் அமையும் என்னை நோவு படுத்த -அதுவே பிரயோஜனம் –
இப்பாட்டில் சொன்ன விரோதி நிரசனத்தையும் -ஆஸ்ரித சம்ரக்ஷணத்தையும் -சாமான்ய ரக்ஷணத்தையும் -அது இது உது-என்று சொல்லுகிறது -என்று பிள்ளான் –
முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?
பிரவாஹா ரூபேண நித்தியமாய் -பிரளய காலத்தில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினவனே -அழிந்த வஸ்துவை உண்டாக்கின அருமை -உண்டோ உள்ள வஸ்துவை தரிப்பிக்கைக்கு –அழிந்த வஸ்துவை உண்டாக்கினால் போலே சிதிலனான என்னை தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ண வேணும் –உன்னை என்று கிட்டுவது -என்றுமாம் –

———————————————————————

உன்னுடைய பால சேஷ்டிதங்கள் என்னை மிகவும் நலியா நின்றன என்கிறார் -பிரதிகூலருடைய பிராணனும் ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள த்ரவ்யமுமே தாரகமாக வளர்ந்தான் என்று -வளர்ந்தவாறு என்று சொன்ன இடத்தை விவரிக்கிறது இங்கு –

பெய்யும்  பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட
பேயின் முலையுண்ட –பெய்யும் பூங்குழல் பிள்ளை என்னுதல் -பெய்யும் பூங்குழல் பேய் என்னுதல் -திரு மஞ்சனம் பண்ணி ஒப்பித்து முலை கொடுத்து வளர்த்தி வைத்த பிள்ளை என்னுதல் -தன்னை அறிய ஒண்ணாத படி இவன் சோம்பாத படி எப்போதும் ஒப்பித்து இருக்கும் யசோதை பிராட்டி போலே ஒப்பித்து வந்த பூதனை என்னுதல்
பிள்ளைத் தேற்றமும்
ஐசுவரமான ஞானம் இன்றிக்கே -தாய் முலை யன்று வேற்று முலை என்று அறியும் தெளிவு -அத்யந்த சைவத்திலும் பிள்ளைகள் முலை வாசி அறிவார்கள் இ றே -பிள்ளைத் தனத்தின் மெய்ப்பாட்டினாலே வரும் ரஸ ஞானமும் –பாதகர் என்று அறியவுமாம் -அறியாது ஒழியவுமாம்-சத்ருக்கள் கிட்டினால் முடியக் கடவதான வஸ்து ஸ்வ பாவத்தால் முடித்தாள் அத்தனை –
பேர்ந்தொர் சாடிறச்-செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
பேர்ந்து-அதுக்கு மேலே என்னுதல் -ஓர் சாடிற பேர்ந்து என்று -அவன் தன்னோடே யாதல் -அஸூரா வேசத்தாலே உயிர் பெற்று ஊருகிற சகடம் தூக்கலாம் படி பேர்ந்து –
செய்ய பாதம் -சிறந்த திருவடிகள் -என்னுடைய ஜீவனத்தை கொண்டு கிடீர் விரோதியைப் போக்கிற்று –
ஒன்றால் -கறுவிச் செய்கை அன்றிக்கே அநாதரம் இருக்கிற படி -சிறுமையில் யுண்டான ஆண் பிள்ளைத் தனமும் -ராமாவதாரத்தில் சிறுச் சேவகம் ஆயுத சிரமம் பண்ணியும் விச்வாமித்திராதிகளோடே மந்த்ர ஸ்ரவணம் பண்ணியும் இ றே -அதில் காட்டிலும் வ்யாவர்த்தமாய் இருக்கிற படி
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
நெய் யைக் களவு கண்டான் என்னும் வார்த்தா பிரஸ்தாவத்திலே ஸ்நேஹ அதிசயத்தாலே தாயார் கையில் கோலை எடுத்தாள்-எதிரிகள் அஞ்சும் படி கோல் கொள்ளுமவன் கிடீர் இவள் கையில் கோலுக்கு அஞ்சுகிறான் -சத்ருக்களை அஞ்சப் பண்ணும் -ஆஸ்ரிதற்கு தான் அஞ்சும் -தாய் எடுத்த சிறு கோலுக்கு -என்ன கடவது இ றே
நீ -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய நீ -சர்வ சக்தியான நீ என்றுமாம்
உனக்குத் தகுதியான கண்கள் –கண்ணில் பரப்பு அடங்க நீரிலே நிறையும் படி
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.
அஞ்சி முகத்தை பாரா நிற்க செய்தே-தெரியாத படி பின்னே கால் வாங்கி நிற்கும் என்னுதல் -பேகணித்து நின்ற நிலை என்னுதல்
பூத காலத்தில் செய்து போனது என்று இருக்க ஒண்ணாத படி புக்க இடம் புக்கு என்நெஞ்சை நீராக்கா நின்றன-

———————————————————-

புத்த அவதார வ்ருத்தாந்தம் என்னை மிகவும் நலியா நின்றது என்கிறார் -அனுகூல விஷயத்தில் களவு சொல்லிற்று -இனி பிரதிகூல விஷயத்தில் தன்னை களவு கண்டபடி சொல்லுகிறது

கள்ள  வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும்
யதா ஹி சோரஸ் சததா ஹி புத்த -என்கிறபடியே க்ரித்ரிம வேஷத்தை கொண்டு – வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய-என்று வேதார்த்த தத்வ ஞானனானவன் வேத அபிராமாணிக வாதிகள் வேஷத்தை கொள்ளுகை-பாகத்தாலும் அழகிய சந்நிவேசத்தாலும் சென்று புக்க போதே ஆப்தன் என்று விஸ்வஸிக்கும் படி புக்க படியும்
வைதிக ஹிம்சையையும் சாமான்ய ஹிம்சையோபாதி யாக்கப் புகுகிறவன் ஆகையாலே -பசும் புல்லுச் சாவ மிதியாதே கூசி யடியிட்டுப் புக்க படி
கலந்த சுரரை உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
அஸூரர்களோடு சேர்ந்து வைதிக சிரத்தை போம்படி புத்திகளை பேதித்து அவர்களை பிராண ஹானி பண்ணி பிணமாக்கி -இன்னார் கொன்றார் என்று விருது பிடிக்கும் படி நின்ற விரகுகளும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
கங்கையினுடைய நீர் வெள்ளத்தை ஜடையிலே தரித்த ப்ரபாவத்தை யுடைய ருத்ரனும் விஷ்ணுராத்மா என்கிறபடியே சரீரவத் பரதந்த்ரன் என்னும் இடம் ப்ரஸித்தமாம்படி நின்றதுவும் -ருத்ரனையும் தன்னையும் சமமாக சொல்லலாம் படி திரிமூர்த்தி மத்திய ஸ் தியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–
ஞான பிரசரண த்வாரமான மனசிலே புகுந்து அச்சேத்யோயம் அதாஹ்யோயம் என்கிற ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன –

—————————————————————–

ஆஸ்ரித விஷயமாகவும் சர்வ விஷயமாகவும் பண்ணின சேஷ்டிதங்களை அநுஸந்திக்கும் தோறும் என் மனஸ் ஸூ அழியா நிற்கும் என்கிறார் –

உண்ண வானவர்  கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
சபரிகரனான இந்திரனுக்கு ருஜுக்களான கோபர் சமைத்த வடிசிலை -கோவர்த்தனோ அஸ்மி என்று அமுது செய்ததும் -முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் -மஹிஷியை பிறருக்கு கொடுத்தால் போலே யாயிற்று ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்துக்கு தேவதாந்த்ர ஸ்பர்சம் -இந்திரன் க்ருத்தனாய் வர்ஷித்தான் -அனுகூலனுக்கு காதா சித்தகமாக வந்தது ஆகையாலே ராவணாதிகளை போலே அழியச் செய்திலன்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
தாதுக்களாலே நாநா வர்ணமான பெரிய மலை–இவர் தாம் அதிலே ஈடுபடுகிறார் -பசிக்ரஹத்தாலே வர்ஷித்தான் ஆகில் -தானே விடுகிறான் -என்று ஆன்ரு சம்சயத்தாலே மலையை எடுத்து ரஷ்ய வர்க்கம் நோவுபடாமல் காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
வேண்டா என்றாலும் தேவதாந்த்ர ஸ்பரிசமும் தவிர அறியாதவர்கள் விஷயத்தில் செய்யுமவை சொல்லுகிறது -அர்த்தித்வாதி நிரபேஷமாக ஜகத்தை பிரதமத்திலே ஸ்ருஷ்டித்து -பிரளய ஆபத்து வந்தவாறே எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கி -வெளி நாடு காண உமிழ்ந்து -மஹாபலி அபகரிக்க எல்லை நடந்து மீட்டுக் கொண்டு -பின்பு அவாந்தர பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் எடுத்து -அது எல்லாம் பூமிக்கு அபிமானியான பிராட்டிக்கு ஆகையாலே அவன் விரும்பி அணைக்க அவளோடு சம்ச்லேஷித்து -இப்படி செய்து அருளின ஆச்சர்ய சேஷ்டிதங்களை
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.
எண்ணப் புகுவது -முடிய அனுசந்திக்க மாட்டாது ஒழிவதான பரிவ்ருத்தி தோறும் -நாட்டார் இது அடங்க அனுசந்தித்து உண்டு உடுத்து திரிய -நினைத்தவாறே சிதிலமான நெஞ்சானது அக்னியை அணைந்த மெழுகு போலே நின்று உருகா நின்றும் -முடிவதும் செய்யாதே தரிப்பதும் செய்யாதே நிற்கை -எண்ணுகைக்கு அவசானம் இல்லாமையால் வருகைக்கும் அவசானம் இல்லை –

—————————————————————–

உன்னுடைய சகல சேஷ்டிதங்களும் காண பெறாத நான் அவற்றை நினைக்கவும் ஷமன் ஆகிறிலன்-பிரளய ஆபத்தில் ஜகத்தை ரஷித்தால் போலே  அனுசந்திக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

நின்றவாறு  மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!–5-10-6-

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
அவஷ்டப் யஷ திஷ்டந்தம்–உடஜே ராமமாசீநம் –பாஹும் புஜக போகாபம் -என்று திருக் குரவையிலும் நின்றும் -பெண்களோடு கழகம் இருந்தும் -அவர்கள் மடியிலே சாய்ந்தும் -அர்ச்சாவதாரத்திலும் நின்றது எந்தை நின்றும் இருந்தும் கிடந்தும் உண்டான சேஷ்டிதங்களையும் அவன் நிலையை அனுசந்தித்த போது -நிலையார நின்றான் என்பார்கள் -இருப்பை அனுசந்தித்த போது பிரான் இருந்தமை காட்டினீர் -என்பார்கள் -கிடையை அனுசந்தித்த -கிடந்ததோர் கிடக்கை என்பார்கள் –
நினைப்பரியன-உபக்ரமத்திலே சைத்தில்யா ஹேது வாகையாலே நினைக்க அரியனவாய்
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
அநேகமான பிராகாரங்களாய் -எனக்கு தோன்றாது இருக்கிற உன்னுடைய ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்?
உபக்ரமத்திலே சிதிலனாய் வருந்தி வருந்தி நினைக்கிற நான் உன்னை எங்கனே நினைத்து தலைக் கட்டும் படி -நினைக்கும் படியை நின்று நின்று ஆராயா நின்றேன் –உன்னை எங்கனம் நினைகிற்பன் என்றுமாம் நினையாது இருக்க மாட்டார் விஷய வை லக்ஷண்யத்தாலே -நினைக்க மாட்டார் ஸைதில்யத்தாலே
பாவியேற்கு-ஒன்று நன்குரையாய்
உன் குண பிரசங்கத்தில் சிதிலனாம் படி பாபத்தை பண்ணின எனக்கு தரித்து நின்று அனுபவிக்கைக்கு ஒரு நல் விரகு சொல்லாய் -நினைக்கவும் வல்லதாய் அத்தாலே அபிமதங்களையும் பெறா நின்றது இ றே நாடாக
உலகமுண்ட ஒண்சுடரே!
அபேக்ஷையும் இன்றிக்கே -உபகார ஸ்ம்ருதியும் இன்றிக்கே இருக்கிற பூமியை ரக்ஷித்து -அது உன் பேறாக உகந்த உகப்பாலே உஜ்ஜவலன் ஆனவனே –

——————————————————————

மானஸ அனுசந்தானமேயாய் சிதிலனாய் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி பண்ண வேணும் என்கிறார் –

ஒண்  சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து –
உண்மை யோடின்மையாய் வந்து- ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும்
எனக்கு உண்மையோடு ஒண் சுடராய் இருக்கும் ஹார்த்தமாக -இன்மையோடே இருளாய் இருக்கும் பாஹ்ய அபேக்ஷையில் –
அன்றிக்கே -ஆஸ்ரிதற்கு உண்மையோடு ஒண் சுடராய் இருக்கும் அநாஸ்ரிதற்க்கு இன்மையோடே இருளாய் இருக்கும்
என்-கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
தன் திறத்தில் சொன்ன இரண்டையும் சொல்கிறது -என் கண்ணுக்கு அவிஷயமாய்-மறக்க ஒண்ணாத படி நெஞ்சிலே விசதமாக நின்று என்னை நீ செய்கிறவற்றுக்கு அவதி இல்லை –
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்
நினைக்க மநோ ரதிக்கிற அளவிலே சிதிலனாகா நின்றேன்
என் கரிய மாணிக்கமே!
ஸைதில்யத்தை பார்த்து மீள ஒண்ணாத வடிவு அழகு -அவ்வடிவை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே
என் கண் கட்குத்
தமக்கு முன்னே என்று கொல் கண்கள் காண்பது என்னும்படி விடாய்க்கும் கண்கள்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.
த்ருடமாக காணலாம் படி -ஸ்வப்ன தர்சனம் போலே மானஸ அனுபவம் மாத்திரம் அன்றிக்கே ஸூ த்ருட ப்ரத்யக்ஷமாம் படி -விடாயான் ஒரு கால் நாக்கு நனைக்க வேணும் என்னுமா போலே -அப்ராப்த விஷயத்தையோ நான் ஆசைப்படுகிறது -பக்தா நாம் என்கிற வடிவை அன்றோ-

——————————————————————

உன் குண சேஷ்டிதாதிகளை கேட்க்கும் தோறும் சிதிலனாகா நின்றேன் -என் செய்கேன் என்கிறார்

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே.–5-10-8-

திருவுருவு கிடந்தவாறும்
அழகிய வடிவோடே ஏகார்ணவத்திலே காண் வளர்ந்து அருளின படியும் -கிடந்ததோர் கிடக்கை -என்னும் அத்தனை போக்கி பாசுரம் இட்டுப் பேச முடியாது -அல்லாதார்க்கு உறங்கும் போது அழகு அழிந்து இருக்கும் -ஸூ க ஸூ ப்த பரந்தப என்று கண் வளர்ந்து அருளும் போது யாயிற்று அழகு உறைத்து இருப்பது
கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள்-
திரு நாபி கமலத்தில் சதுர்முகன் ஆகிற அதிஷ்டானத்துக்கு உள்ளே -ஸ்ருஷ்டிம் தாத்தா கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே-என்கிறபடியே சதுர்முகன் ஆசன பத்மத்தோ பாதியாய் இருக்கை
வீற்றிருந்து
அவனுக்கு அந்தராத்மாவாய் -சர்வ நியந்தரு த்வத்தால் வந்த வேறுபாடு தோன்ற இருந்து
படைத்திட்ட கருமங்களும்
ஸ்ருஷ்டித்த வியாபாரங்களும் -ப்ரஹ்ம ஸ்ருஷ்ட்டி அடைய அவனே செய்கிறான் என்னும் படி இருந்த படி
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும்
உவமானம் இன்றிக்கே அத்விதீயமாய் ஐஸ்வர்ய பிரகாசமான குண சேஷ்டிதங்கள் கேட்க்கும் தோறும்
என்நெஞ்சம் நின்று நெக்கு-அருவி சோருங் கண்ணீர்
திண்ணிதான என் நெஞ்சு மலை நெகிழ்தல் போலே நெகிழ்ந்து கண்ண நீர் அருவியாய் ப்ரவஹியா நின்றது –
என்செய்கேன் அடியேனே.
ப்ராப்தியை உணர்ந்த வாறே விட்டுத் தரிக்கப் போகிறது இல்லை –பரதந்த்ர வஸ்து யாகையாலே பேற்றுக்கு யத்னம் பண்ணப் போகிறது இல்லை —

————————————————————-

த்ரைவிக்ரம வ்ருத்தாந்த அனுசந்தானத்தாலே மிகவும் சிதிலனாகா நின்றேன் -நான் தரிப்புடையேனாய் உன்னை அனுபவிப்பது என்று என்கிறார் –

அடியை  மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9-

அடியை மூன்றை இரந்தவாறும்
இந்திரன் இழந்தது த்ரை லோக்யம் இ றே -த்ரை லோக்யத்தையும் தா என்றால் இசையால் -அடி என்றால் உதாரன் ஆகையாலே இசையக் கூடும் என்று அடியை இரந்தான்-ஓர் அடிக்கு சிறையிட்டு வைக்க நினைக்கிறான் ஆகையாலே மூன்றை இரந்தான் –
இரந்தவாறும்- தன்னதை அவனதாக்கி-தான் அர்த்தி யான படியும்
அங்கே நின்று
நீர் ஏற்ற இடம் தன்னிலே நின்று -போய்ப் புகுரில் அக்காலும் வடிவும் அன்று என்று வழக்குப் பேசுவார்கள் இ றே
ஆழ்கடலும் மண்ணும் விண்ணும்-முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
அபரிச்சேதயமான கடல்களையும் பஞ்சாசத் கோடி விஸ்தீரணையான பூமியையும் ப்ரஹ்ம லோக பர்யந்தமான ஆகாச லோகங்களையும் இரண்டு அடியாலே முடியும்படியாக தலைக் கட்டிக் கொண்ட வேண்டற்பாடும் -முக்கியம் -பிரதானமான செயல் -ஸ்வ வ்யதிரிக்தங்களையும் திருவடிகளின் கீழே அகப்படுத்துகையாலே வந்த ப்ராதான்யம் தோற்ற நின்ற படி
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம்
அவை நொடியுமாறு கேட்க்கும் தோறும்-நொடிதல் -சொல்லுதல் -நான் சொல்ல வேண்டா -குணகதனம் பண்ணுவார் பாசுரங்கள் கேட்க்கும் தோறும்
என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும்
அவாப்த ஸமஸ்த காமனான நீ ஆஸ்ரித அர்த்தமாக அர்த்தியான நீர்மையை அனுசந்தித்து -என் மனஸ் ஸூ இது என்ன நீர்மையே என்று த்ரவித்து சிதிலமாகா நின்றது
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.
பிராயச்சித்த சாத்தியம் அன்று -அனுபவ விநாஸ்யம் அன்று -சைத்திலய ஹேதுவான பிரமத்தை இ றே பாபம் என்கிறது யான் நாம சங்கீர்த்தன தோ மஹ பயத்விமோ ஷமாப் நோதி -என்கிற இது இ றே இவர்க்கு பய ஸ்தானம் யாயிற்று -உன்னை தரித்து அனுபவிப்பது என்றோ-

——————————————————————

உன்னுடைய சமுத்திர மதன வைசித்யர்த்தை அனுசந்தித்து சிதிலன் ஆகா நின்றேன் -தரித்து நின்று உன்னை அனுபவிக்கும் விரகு சொல்ல வேணும் என்று பிரார்த்திக்கிறார்

கூடி  நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10-

கூடி நீரைக் கடைந்தவாறும்
பலம் ஓக்க கொள்ளக் கடவோம் என்று அஸூரர்களோடே கூடி -தேவாசுரர்களுக்கு விரோதமே போக்கி ஸுஹார்த்தம் இல்லை இ றே -சந்தா நம ஸூ ரை க்ருத்வா
ஷீராக்தியை இ றே கடைந்து
அமுதம் தேவர் உண்ண அசுரரை-வீடும் வண்ணங்களே
பல வேளையில் தேவர்கள் அம்ருதத்தை புஜிக்க அஸூரர்கள் அம்ருதத்தை விட்டுப் போம் படி செய்து
செய்து போன வித்தகமும்
ஒரு ஸ்த்ரீ வேஷத்தை கொண்டு அவர்கள் தொடர போன விஸ்மய நீயமான செயலும் -அம்ருதத்தை நாய்க்கு இடாய் என்று பின் தொடரும்படியான வடிவை யாயிற்று கொண்டது -மாயயா மோஹயித்வா தான் விஷ்ணுஸ் ஸ்த்ரீ ரூப மாஸ்த்தித –
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு -அச்சேத்யயோயம் அயமதாஹ்யோயம் என்கிற ஆத்மவஸ்துவை -த்ரவ்ய த்ரவ்யமாக்கி முடித்து விடாதே ஒழிகிற யுன்னை -புருஷோத்தமன் இப்படி செய்வதே என்கிற குண பிரசங்கத்தில் சிதிலன் ஆகா நின்றேன்
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–
தரித்து அனுபவிக்கும் படி ஒரு நல் விரகு சொல்ல வேணும் -நித்ய அனுபவம் பண்ணுகிற திரு வனந்த ஆழ்வானை போலே தரித்து நின்று அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும்-

—————————————————————–

நிகமத்தில் இப்பத்தும் கற்றார் ஸ்ரீ வைகுண்டத்தில் போய் எம்பெருமானை நித்ய அனுபவம் பண்ண பெறுவார் என்கிறார் –

நாகணை  மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று –
அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இ றே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –
சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –
நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக
அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
அருளிச் செய்த ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–
மாகம் – பரமாகாசம் என்ன கடவது இ றே -குணங்களை நினைத்து சிதிலன் ஆகும் என்னைப் போல் அன்றியே தரித்து அங்கே நின்று நித்ய அனுபவம் பண்ணப் பெற்று பரமபதத்தில் ஆனந்த நிரபரராய் ஆகக்கடவர்கள் –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: