திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -5-9-

திருக் குடந்தையில் புக்க இடத்திலும் தம்முடைய அபேக்ஷிதம் கிடையாமையாலே மிகவும் அவசன்னராய் -இத்தசைக்கும்
எம்பெருமான் திருவடிகளே சரணம் -என்று பற்றி சிறிது தரித்து -திரு வல்ல வாழிலே செல்ல தம்முடைய மநோ ரதங்கள் பூரிக்கும் என்று
அங்கே புக்கு -பல ஹானியாலே முட்டப் போக மாட்டாதே மிகவும் அவசன்னரான ஆழ்வார் தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்
-எம்பெருமானோடே விஸ்லேஷித்து திரு வல்ல வாழுக்கு அணித்தாக இருக்கிறாள் ஒரு பிராட்டி ஏக தத்விதத்ரிதர்கள் ஸ்வேத தீபத்தில்
செல்லப் பெறாத அங்குத்தைக்கு அணித்தாக இருந்து -அங்குள்ளார் எம்பெருமானைக் கண்டு படுகிற சம்ரப்ங்களை செவியால் கேட்டு
-கண்ணால் காணப் பெறாதே துடிக்குமா போலே –
திருவல்ல வாழில் திருச் சோலையும் அங்குத்தை பரிமளத்தையும் கொண்டு புறப்படுகிற தென்றலும் -அங்குத்தை திருச் சோலைகளில்
மதுபான மத்தமான வண்டுகளுடைய இனிதான மிடற்று ஓசைகளும் -வைதிக க்ரியா கோலா ஹலங்களும் -ஹோம தூமங்களும்
-மற்றும் யுண்டான நகர சம்ரப்ங்களும் எல்லாம் -உள் புகப் பெறாதே இருக்கிற தன்னை மிகவும் நலிய
-அத்தாலும் மிகவும் நோவு பட்டு திருவல்ல வாழிலே புக்கு தான் பரிமாற ஆசைப்பட்ட படியைக் கண்டு -நீ நினைக்கிற இது ஈடு அல்ல -என்று
தோழி மார் நிரோதியா நிற்க தன் ஆர்த்தியை அவர்களுக்கு ஆவிஷ் கரித்து அவர்களை அனுநயியா நின்று கொண்டு
திரு வல்ல வாழிலே நான் நினைத்த படியே புக்கு பரிமாற வல்லனே -என்று அவர்களைக் குறித்துச் சொல்லுகிறாள் –

———————————————————–

இப்பிராட்டி தன்னுடைய அவசாதத்தைக் கண்டு மிகவும் காதரேஷணைகளாய்-உன் ஹிருதயத்தில் ஓடுகிறது என் -என்று கேளா நின்று இருந்துள்ள தோழி மாரைக் குறித்து திரு வல்ல வாழில் எழுந்து அருளி இருக்கிற எம்பெருமானுடைய திருவடிகளில் அடியேன் போய்ப் புகுவது என்றோ என்கிறாள் –

மானேய்  நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

அழகிய நோக்கை யுடையார் – தன்னைப் பெறாதே துக்கப் படும் படி மஹா பாபத்தைப் பண்ணின நான் நாள் தோறும் வியஸன பரம்பரைகளினால் மிகவும் அவசன்னையாக-ஆகாசம் எல்லாம் பூர்ணமாம் படி வளர்ந்து கண்ணுக்கு இனிதான கமுகில் பூம்பாளையும் -மதுவை யுடைத்தான மல்லிகையும் கமழ்வதும் செய்து தேன் மிக்கு இருந்துள்ள திருச் சோலைகளாலே சூழப் பட்ட திரு வல்ல வாழிலே நிரந்தர வாசம் பண்ணுகிற ஸ்வாமியை –
குணஜிதையாய் –அடியேன் என்கிறாள் –

—————————————————————–

தன்னுடைய உத்தியோகத்தை இசையாதே இருக்கிற தோழி மாரை அ நு நயித்து நான் திரு வல்ல வாழிலே புக்கு அவன் பாத ரேணுவைச் சூடுவது என்று என்கிறாள்-

என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2-

என் பிரக்ருதியை அறிந்து இருக்கிற நீங்கள் என்னை ஆசிவசிப்பியாதே நலிந்து என்ன பிரவ்ருத்தி பண்ணுகிறிகோள்
புது மாதவி– புதிதாக அலர்ந்த குருக்கத்தி / மீதணவி-மேலே அணைந்து / மணங் கமழும்-நறு நாற்றம் நாறுகிற
நின்ற பிரான்-இவ்வார்த்திக்கு அணித்தாக வந்து நின்று அருளின மஹா உபகாரகன் –

தோழிமாரைக் குறித்து -திரு வல்ல வா ழி லே நின்று அருளின எம்பெருமானுடைய திருவடிகளை என்று காண வல்லோமோ என்கிறாள் –


தோழிமாரைப் பார்த்து  திரு வல்ல வாழிலே நின்று அருளின எம்பெருமானுடைய திருவடிகளை என்று காண வல்லோமோ  என்கிறாள் –

சூடு  மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3-

தங்கள் நோவு பட்டுக் காட்டில் பிராட்டி மிகவும் நோவு படும் என்று தங்கள் தரிப்பு தோற்ற ஒப்பித்து இருக்கிறவர்களை கண்டு உங்களை போலே தரித்து இருக்க வல்லேனே-என்கிறாள் -எம்பெருமான் சாத்தின படியே தந்து அருளின மலர்களை குழல்களிலே சூடி இருக்கிற உங்கள் சந்நிதியும் என்னை நலியா நின்றது என்றும் சொல்லுவர்
பண்டே துக்கப்படுகிற நான் மெலியும்படி பாடா நின்றுள்ள சாம வேத த்வனி -கடலிலே திரை முழங்குமா போலே முழங்க பார்ஸ்வங்களிலே-யாகங்களில் உண்டாய் உயர எழா நின்றுள்ள ஹோம தூமம் நாறுவதுவும் செய்து நிரதிசய போக்யமான திரு வல்ல வா ழி லே எத்தனையேனும் பிற்பட்டார்க்கும் அனுபவிக்கலாம் படி காலம் உள்ள தனையும் வர்த்திக்கிற மஹா உபாகாரகனுடைய திருவடிகளை –

———————————————————————-

இங்கனம் மநோ ரதிக்கை யீடன்று -என்று நிஷேதிக்கிற தோழிமாரை-குறித்து என்னுடைய நற்சீவன் அவன் பக்கலது உங்களுடைய ஜல்பம் வ்யர்த்தம் என்கிறாள் –

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே.–5-9-4-

விபரீதமே பலித்து வாரா நிற்க -தோழிமாரான நீங்கள் நித்தியமாக என்னை அலைத்து என்ன பிரவ்ருத்தி பண்ணு கிறி கோள்
பலவு -பலா
பல நிலமாக அழகிய மாடங்களின் மேலே அணவா நின்ற சிரமஹரமான திரு வல்லவாழிலே நின்று அருளி திரு வனந்த ஆழ்வானை போலே என்னை அநந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனதாயிற்று-

————————————————————————

நன்னலத்  தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–5-9-5-

நான் ஒன்றை ஆசைப்பட்டால் அத்தை முடிக்கும் ஸ்வ பாவம் அன்றோ உங்களது -அநந்ய பிரயோஜனரான ப்ராஹ்மணருடைய யாகங்களில் கறு த்து  எழுகிற ஹோம தூமங்கள் ஆகாச அவகாசங்கள் எல்லாம் மறைக்கும் படியான திரு வல்ல வா ழி லே இருப்பதும் செய்து நிரதிசய போக்யனுமாய் என்னை சர்வ ஸ்வகரணம் பண்ணின அழகை யுடையவனை –

———————————————————————-

திரு வல்ல வாழிலே நின்று அருளுகிற ஸ்ரீ வாமனனுடைய மிகவும் ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை நான் காண்பது என்றோ என்கிறாள் –

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-

இப்போதை உறாவுதல் தீர்ந்து பண்டு போலே நீங்கள் புஷ்டைகளாய் இருக்கக் காண வல்லனே என்று கருத்து –
மதுபான மத்தமாகையாலே நல்ல மிடற்றோசையோடே கூடின வண்டுகளோடே கூட எங்கும் இளம் தென்றல் யுண்டாய் அத்தாலே அற உயர்ந்த பணை களை யுடைத்தாய் கொண்டு வளரா நின்றுள்ள அழகிய சோலையுடைய திரு வல்ல வாழிலே –

—————————————————————-

திரு வல்ல வாழிலே நின்று அருளின எம்பெருமான் திருவடிகளில் நித்தியமாய் பூவை யணிந்து தொழ வல்லோமே என்கிறாள் –

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7-

தன் மநோ ரதத்தை நிஷேதியாமையாலே தோழி மாரை உகந்து சம்போதிக்கிறாள் -கடல் போலே பெருத்து இருந்துள்ள பொய்கைகளிலே வளர்ந்த -தாமரைப் பூவும் செங்கழு நீர் பூவும் ஸ்த்ரீகளுடைய அழகிய முகங்களோடும் கண்களோடும் ஒக்கும்  படியான திரு வல்ல வாழுக்கு நாத்தனாய் ஜகத்தை எல்லாம் -பிரளய காலத்தில் தன் திரு வயிற்றிலே வைத்து பரிஹரித்து அருளினவன் -அவ்வளவு அன்றிக்கே ஆஸ்ரிதற்கு மிகவும் உபகாரகன் ஆனவனை-

————————————————————-

சர்வ காலமும் இடைவிடாதே அடிமை செய்யக் கூட வற்றோ என்கிறாள் –

நாடொறும்  வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8-

நன்னுதலீர்!-
ப்ரணாமபாம் ஸூ லபார்த்த்ய லலாடைகளாக உங்களைக் காண்பது என்றோ –
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி -எப்போதும் பக்வபலமாய் இருக்கை
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்-நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே
அருகே கிட்டி இருக்கிற பூத்த பொய்கை களோடு சேர்ந்த வயல் சூழ்ந்து சிரமஹரமான திருவல்ல வா ழி லே அனுக்ரஹ சீலனாய்க் கொண்டு நிரந்தர வாசம் பண்ணி அருளுகிறவனுடைய குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லாரையும் அங்கீ கரிக்கக் கடவதாய் ஆஸ்ரிதர் இருந்த இடத்தே செல்லும் திருவடிகளை-

——————————————————————-

நம்முடைய கழலுகிற வளைகள் பூர்ணமாம் படி-பூரிக்க – அவனைக் கண்டு தொழலாம் படி அவன் அருள் கூட வற்றே என்கிறாள் –

கழல்  வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9-

குளிர்ந்த சோலைகளில் புக்கு மது பானத்தை பண்ணி குழல் ஓசை என்னவும் யாழோசை என்னவுமாம் படி முக்தமாய் கண்ணுக்கு அழகியவான வண்டுகள் ப்ரீத்யதிசயத்தாலே இசை பாடா நின்றுள்ள திரு வல்ல வாழிலே நின்று அருளுவதும் செய்து -பிரதிகூல நிரசன த்வரையாலே மிகவும் சுழன்று வாரா நின்று இருந்துள்ள திரு வாழியை யுடைய சர்வேஸ்வரனுடைய
சுழலின் மலி சக்கரம் -சுழலுவது போலே துளங்கா நின்றுள்ள சக்கரம் என்னவுமாம்
தொல்லருள்-ஸ்வாபாவிகமான அருள் –

—————————————————————–

எம்பெருமானுடைய ஸ் வா பாவிகமான கிருபையால் -அவன் தன்னைக் காணப் பெற்று -ப்ரீதியாலே இனிதாய்க் கொண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ -என்கிறாள் –

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-

தன்னுடைய கண்ணழிவு அற்ற கிருபையை சம்சாரமும் திரு நாடும் ஓக்க அனுபவிக்கலாம் படியான திரு நகரியாய் உள்ளது –
எம்பெருமான் தன்னில் காட்டிலும் அனுக்ரஹ சீலனான ஆயிரவர் தன்னுடைய கல்யாண குணத்தை கொண்டாடும்படியான திரு வல்ல வா ழி லே நின்று அருளி நல்ல அருளை யுடையனாய்க் கொண்டு நமக்கு ஸ்வாமி யான நாராயணனுடைய திரு நாமங்களை-

———————————————————————-

இப்பத்தும் வல்லார் சம்சாரத்திலே இருந்து வைத்தே  எல்லாரிலும் சிறந்தவர் என்கிறார்

நாமங்  களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-

நாமங்கள் ஆயிரத்தையும் யுடையனாய் சர்வேஸ்வரத்வேன ப்ரசித்தனானவன் திருவடிகளில் தமக்கு ரக்ஷை பார்த்துக் கொண்ட ஆழ்வார் ஆராய்ந்து அருளிச் செய்த –
எம்பெருமானுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதாதிகளுக்கு ப்ரதிபாதகமான ஆயிரம் திருவாய் மொழியிலும் இது திருவாய் மொழி யைத் திரு வல்ல வாழ் ஆகிற சேமமுடைத்தான தென்னகரிலே கூட்டிச் சொல்ல வல்லவர் –

—————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: