திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-9–

திருக் குடந்தையில் புக்க இடத்திலும் தம்முடைய அபேக்ஷிதம் கிடையாமையாலே மிகவும் அவசன்னராய் -இத்தசைக்கும்
எம்பெருமான் திருவடிகளே உபாயம் -என்று அத்யவசித்து சிறிது தரித்து -உகந்து அருளின நிலங்களில் வந்து இருக்கிற இருப்பு
ஆஸ்ரித அர்த்தமாக என்று இருகையாலும் -தமக்குப் பேறு உகந்து அருளின நிலங்களே என்று இருகையாலும்
திரு வல்ல வாழிலே போய்ப் புக்கு -தம்முடைய மநோ ரதங்கள் பூரிக்கும் என்று அங்கே புக்கு -பல ஹானியாலே முட்டப் போக மாட்டாமையாலே
நடுவே நோவு படுகிற தம்முடைய தசையை -அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தன் ஆற்றாமையால் புறப்பட்டு -திருவல்ல வாழுக்கு அணித்ததாகச் சென்று
கால் நடை தாராதே நோவு படுகிறவளை -தோழி -அவன் தானே வரக் காணும் அது ஒழிய நீ பதறுகை ஸ்வரூபம் அன்று என்று விலக்க
அவ் ஊரில்- திருச் சோலையும் அங்குத்தை பரிமளத்தையும் கொண்டு புறப்படுகிற தென்றலும் -அங்குத்தை திருச் சோலைகளில்
மதுபான மத்தமான வண்டுகளுடைய இனிதான மிடற்று ஓசைகளும் -வைதிக க்ரியா கோலா ஹலங்களும் -ஹோம தூமங்களும்
-மற்றும் யுண்டான நகர சம்ரப்ங்களும் எல்லாம் -அங்கே ஆகர்ஷிக்க
ஏக தத்விதத்ரிதர்கள் ஸ்வேத தீபவாசிகள் அனுபவிக்கிற ஆரவாரத்தைக் கேட்டு தங்கள் அனுபவிக்கப் பெறாமையால் நோவு பட்டால் போலே நோவுபட்டு
நிஷேதிக்கிற தோழி மார்களுக்கு -தன் ஆர்த்தியை ஆவிஷ் கரித்து அவர்களை அனுவர்த்தியா நின்று கொண்டு
-திரு வல்ல வாழிலே புக்கு நினைத்த படியே பரிமாற வல்லனே -என்று அவர்களைக் குறித்துச் சொல்லுகிறாள் –

————————————————————–

தோழி மாரைக் குறித்து திரு வல்ல வாழிலே நின்று அருளினவனுடைய திருவடிகளில் சென்று கிட்டுவது என்றோ என்கிறாள் –

மானேய்  நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

மானேய் நோக்கு நல்லீர்! –
மான் ஏய்ந்த நோக்கையும் என் பக்கல் பரிவையும் யுடையவர்களே
நல்லீர் -ரூப வை லக்ஷண்யம் சொல்லிற்று ஆகவுமாம்
காரிய பாட்டாலே விலக்குகிற தங்கள் படியையும் -அவ் ஊரில் போக்யதை யிலே ப்ரவணை யாய் -மீளாத படியான இவள் படியையும் கண்டு -என்னாகப் புகுகிறதோ என்று காதரேஷணைகளாய்-இறுக்கியபடி
நான் அவ் ஊரிலே புகும் படி கண்ணாலே குளிர நோக்க வேணும் என்கிறாள் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்
வைகலும் வினையேன் மெலிய-
தன்னை விஸ்லேஷிக்கும் படி மஹா பாபத்தை பண்ணின நான் நாள் தோறும் வியஸன பரம்பரையாலே அவசன்னையாய்-ஒரு நாள் மெலிய பொறுக்க மாட்டாத ம்ருது ப்ரக்ருதியானவள் கிடீர் நெடு நாள் நோவு படுகிறாள் -இமா மஸீதா கே சாந்தம் சதபத்ர நிபேஷனாம்-ஸூ கார்ஹாம் -தூக்கிதாம் -த்ருஷ்ட்வா மமாபி வ்யதி தம்மன -என்று ஒரு ராத்திரியில் வியஸனம் திருவடி பொறுக்க மாட்டிற்று இலன் இ றே-வி லக்ஷண விஷயத்தை பிரிந்தால்-ஜீவிக்கவும் ஒண்ணாது முடியவும் ஒண்ணாது
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்–தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
ஆகாச அவகாசம் அடையும்படி வளருகை –
மெலிய –வானார் வண் கமுகும்—மெலிய -திரு வல்லவாழ் உறையும்-என்னுதல் -அவ் ஊரில் பரம சேதனனோடு அசித் கல்பமான ஸ் தாவரங்களோடு வாசி இல்லை -மெலிவே நீராக பல்குகை –இவள் மெலிய மெலிய -அவை மேலே மேலே பனையா நிற்கை -இவள் இருந்த சோலை -அபிவ்ருஷா -அவன் வர்த்திக்கிற சோலை -அகாலபலினோ வ்ருஷா –
தர்ச நீயமான கமுகு –அன்றிக்கே உதாரமான கமுகு -குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும் தலையார்ந்த இளம் கமுகு இ றே -தன்னோடே சேர்ந்த கொடிக்கு தன்னைக் கொடுத்துக் கொடு நிற்கை -கமுகு இறாய்த்தல் -கொடி தொடர்ந்து கிட்ட வேண்டும் படி இருத்தல் செய்யாது இருக்கை –கொடி அடங்க பரப்பு மாறப்பூத்து தேன் வெள்ளம் இடுகை –
அதன் பரிமளம் இவள் இருந்த இடத்தே வந்து அலை எறியா நிற்கை
தேன் வெள்ளம் இடுகின்ற சோலைகள் –நித்ய போக்யமான சோலைகள் -அவ் ஊரில் நிற்கிறவனோ பாதியும் உத்தேசியமாய் இருக்கை அவ் ஊரில் ஸ்தாவரங்களும்
பரம பதத்தை விட்டு ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்யத்தை அதிஷ்ட்டித்து இங்கே வந்து அவதரிக்கையாலே -அங்குள்ளாரும் இவனுக்கு அனுரூபமாக ஸ்தாவர சரீரமாக வர்த்திக்கிறார்கள் என்று இ றே இவர்கள் நினைத்து இருப்பது -உகந்து அருளின நிலங்களை விட மாட்டாதே அடியார் குழாங்களும் அவனுக்கு ஈடாக அங்கே வர்த்திக்கிற படி -இவை கால் வாங்காதே நிற்கிற போதே அங்குத்தை நசபுநராவர்த்ததே-என்கிற ஆகாரமும் ஜீவிக்கிற படி –
வினையேன் மெலிய –திரு வல்லவாழ் உறையும்
கோனாரை-என்னை ஒழிய போகத்துக்கு ஏகாந்த ஸ்தலத்தில் சோலையிலே ரசம் அனுபவிக்கிறவரை -போகத்துக்கு ஏகாந்த ஸ்தலத்தில் தனியே இருப்பதே –
உறையும் -அங்குத்தை போக்யதையாலே நித்ய வாசம் பண்ணுகிறவரை -சோகத்தால் வந்த பல ஹானியாலே நான் செல்ல மாட்டாது இருக்க -ப்ரீதியாலே அவர் வர மாட்டாது இருக்கிறார் இ றே
கோனாரை –அடியேன் -திரோதாத்த நாயகர் அவர் -அவர் பெருமையில் தைரிய பங்கம் பிறந்தவள் நான் -கோனாரை என்று நாராயண சப்தம் –அடியேன் என்று பிராணவார்த்தம் –பிராட்டியான தசையோடு தாமான தசையோடு வாசி யற இவர்க்கு சேஷத்வம் ஒருபடிப் பட்டு இருக்கிற படி
அடி கூடுவது என்று கொலோ?
அணைக்க வேணும் என்னும் ஸ்தானத்தில் அடி கூடுவது என்கிறார் இ றே -பிண்டாத்ய வஸ்தைகளில் ம்ருத் த்ரவ்ய அனுவ்ருத்தி போலே இவருடைய பாவ விருத்திகள் எல்லா வற்றிலும் இவருக்கு சேஷத்வம் ஒருபடிப் பட்டு இருக்கும் -தேஹீ நித்ய மாவத்யோயம் தே ஹே ஸர்வஸ்ய பாரத -என்று தேவாதி சரீர பிரவேசம் பண்ணா நிற்க தேஹீ யானவன் ஒருபடிப் பட்டு இருக்குமா போலே யாயிற்று இவரும் ஆணான போதோடு-பெண்ணான போதோடு வாசி அற சேஷ பூதராய் இருக்கிற படி
என்று கொலோ -பதினாலாண்டு என்று அவதி பெற்ற பின்பும் ஆணுமாய் பிதாவுமான சக்கரவர்த்தி ஜீவித்து இலன் -பிரணியிநியும் அபலையுமான நான் எங்கனே ஜீவிக்கக் கட வேன் –அடி கூடுவது என்கிறது சதுர்த்த்யர்த்தம் –என்று கொலோ என்கிறது ப்ராப்ய த்வரையாலே வாக்ய சேஷத்தால் வந்த பிரார்த்தனை –

—————————————————————–

அதி ப்ராவண்யம்  ஆகாது என்று தன்னை நிஷேதிக்கிற தோழிமார் தங்களையே அவன் பாத ரேணுவை நான் சூடுவது என்றோ  என்கிறாள் –

என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2-

என்று கொல் தோழி மீர்காள்!
அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது -என்று நிஷேதிக்கிறவர்களையே தன் பேற்றுக்கு அவதி இட்டுத் தருவார்களாக கேட்க்கிறாள் இ றே -அவர்கள் லோக அபவாதத்தை பற்றி நிஷேதிக்கிறார்கள் -இவள் தன் பேறு தங்கள் பேறாக நினைத்து இருக்கும் ஐக கண்ட் யத்தாலே கேட்க்கிறாள் –
எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
அவ் ஊரில் புக்கு அல்லது தரிக்க மாட்டாத என்னை -எனக்கு பிரியம் செய்து போந்த நீங்கள் -நலிந்து என்ன ப்ரவ்ருத்தி பண்ணு கிறி கோளே-உங்கள் ஸ்வரூபத்துக்கு சேர செய் கிறி கோளே -என் ஸ்வரூபத்துக்கு சேர செய் கிறி கோளே
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
பொன் போலே திகழா நின்றுள்ள புண்ணை என்ன -அதின் படியை யுடைத்தான மகிழ் என்ன -அப்போதே அலர்ந்த செவ்விக் குருக்கத்தி என்ன –இவற்றின் மேல் அணைந்து -தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
பரிமளத்தை கொய்து கொண்டு தென்றலானது சஞ்சரியா நிற்கை -அவ் ஊரில் தென்றல் அங்கே ஆகர்ஷியா நின்றது -நீங்கள் மீட்கப் பாரா நின்றி கோள் -தென்றலுக்கு ஆவேனோ -உங்களுக்கு ஆவேனோ –
எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
அவ் ஊரில் தென்றலை நலிய மாட்டி கோளே –
பொன் திகழ் புன்னை மகிழ் -என்று சஷூர் இந்த்ரியத்துக்கு ஆகர்ஷகமாய் இருக்கிற படி
தென்றல் மனம் கமழும் -ஸ்பர்ஸ இந்த்ரியத்துக்கும் க்ராண இந்த்ரியத்துக்கும் ஆகர்ஷகமாய் இருக்கிற படி
என்னுடைய சர்வ இந்திரியங்களும் அங்கே அபஹ்ருதம் என்கை -பத்ம ஸு காந்திகவஹம்
திருவல்ல வாழ் நகருள் நின்ற பிரான்
கலங்கா பெரு நகரத்தை விட்டு நமக்கு முகம் காட்டுகைக்காக அணித்தாக வந்து நித்ய வாசம் பண்ணுகிற மஹா உபகாரகன்
அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–
திருவடித் தாமரைகளில் தாதை யுதிர்த்து அத்தை சிரஸா வஹிப்பது என்றோ என்றால் போலே இருக்கிறதாயிற்று இவர்க்கு -இப்போது நிஷேதிக்கிறவர்களை –அடியோம் என்று -அனுபவத்தில் கூட்டிக் கொள்ளுகிறாள் –சூடுவது என்கையாலே பூச்சூட மயிர் கழுவி இருப்பாரைப் போலே போக்யதையைச் சொல்லுகிறது –

————————————————————–

தோழிமாரைப் பார்த்து நாம் அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவது என்றோ என்கிறாள்

சூடு  மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3-

சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
நீங்கள் மயிர் முடியும் மாலையாய் இருக்க காண வல்லனே -என்று பிள்ளான் –தங்கள் நோவு பட்டு காட்டில் இவள் மிகவும் நோவு படும் என்று தரிப்பு தோற்ற இருக்கிற படி என்கை -முன்பு அவன் விரும்பின போது சூடினபடியே கழித்துக் கொடுப்பது அவர்களுக்காயிற்று -அது ஸ்மாரகமாய் நலியா நின்றது என்கிறாள் என்றவுமாம்
பாடு நல் வேத ஒலி
ஈஸ்வரனைப் பாடுகிற பழம் புணர்ப்பான வேதம் என்னுதல்-கானத்தை யுடைய சாம வேதம் என்னுதல் -உளன் சுடர் மிகு சுருதியுள்-என்று பிரமாணங்களில் உத்கர்ஷம் ஆதல் -வேதா நாம் சாம வேதோ அஸ்மி -என்னும் உத்கர்ஷம் ஆதல்
துயராட்டியேனை மெலியப்-பாடு நல் வேத ஒலி -பரவைத் திரை போல் முழங்க
பண்டே கிலேசப்படுகிற என்னை மெலியும் படி பாடா நின்றுள்ள சாம வேத த்வனி -கடலிலே திரை போலே முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
அவ் ஊரில் ப்ராஹ்மணர் ஸ்த்ரீ காதுகரோ -அதீத வேதரானவர்கள் இப்போது பாராயணம் பண்ணுகிறது தன்னை நலிகைக்கு என்று இருக்கிறாள்
பார்ஸ்வங்களிலே உயர எழா நின்றுள்ள ஹோம தூமங்கள் கமழா நின்றது -வேத பாராயணம் பண்ணுவாரும் வேத்யாநுஷ்டாதாக்களுமாய் இருக்கும்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.
அவதாரம் போலே தீர்த்தம் பிரஸா தியாதே பிற்பாடார்க்கும் உதவும்படி -சிரமஹராமான திரு வல்ல வாழிலே நித்ய வாசம் பண்ணுகிற மஹா உபாகாரகன் -அவன் நித்ய வாசம் பண்ணா நின்ற பின்பு நாமும் நித்ய அனுபவம் பண்ணப் பெற வல்லோமோ-

——————————————————————

இங்கனம் மநோ ரதிக்கை யீடன்று -என்று நிஷேதிக்கிற தோழிமாரை-குறித்து என்னுடைய நற்சீவன் அவன் பக்கலது உங்களுடைய ஜல்பம் வ்யர்த்தம் என்கிறாள் –

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே.–5-9-4-

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
கழல் காண்டும் கொல் நிச்சலும் -என்று எனக்கு நித்ய கைங்கர்யத்தில் உள்ள ருசி போரும் உங்களுக்கு என்னை மீட்க்கையில் உண்டான ருசி -உங்களை யாராக நினைத்து தான் நிஷேதிக்கிறி கோள்-தாய்மார் செய்யக் கட வதை தோழிமாரான நீங்கள் செய்யக் கட வி கோளோ
எம்மை -உங்கள் சொல் கேளாத என்னை
நீர் -உங்கள் சொல் ஜீவியாது இருக்கிற நீங்கள்
நலிந்தென் செய்தீரோ?-அத்தலைக்கு என்ன பிரயோஜனம் கொள்ளு கிறி கோளே -செய்து தலைக் கட்டலாவதில் அன்றோ பிரவர்த்திப்பது
மாசறு சோதியில் தொடங்கி விலக்கிப் போருகிறி கோள் -என்ன பிரயோஜனம் பெற்றி கோள் -என்று பிள்ளான் –
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
பசுமை அறாத இலைகளை யுடைத்தாய் ஓங்கி இருந்துள்ள கமுகுகளும்-அவன் சந்நிதியில் வர்த்திப்பார்க்கு பசுமையும் ஒக்கமும் மாறாது இருக்கும் என்கை -தனக்கு வைவர்ணயமும் உறாவுதலுமாய் இ றே இருக்கிறது -பலவு -பலா
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்-நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே-
பல நிலமான மாடங்களின் மேலே அணவா நிற்க்க கடவதாய்-மாளிகைக்கு நிழல் செய்தால் போலே இருக்கை -சிரமஹரமான வவூர் -பிரதி கூலருக்கு கிட்ட ஒண்ணாத படி அரண் யுண்டாய் இருக்கை
–தீ முகத்து நாகணை-என்று கிலாய்க்கிறாள் ஆகவுமாம் –
.திரு வனந்த ஆழ்வான் மேலே என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன் என்றுமாம் –அவன் பக்கலிலே நற்சீவனாய் இருக்க கேவல சரீரத்துக்கு ஹிதம் சொல்லுகிற இத்தால் பிரயோஜனம் என் –அவன் பக்கலிலே சென்று ஹிதம் சொல்லுங்கோள்-

——————————————————————

நான் செய்த படி செய்ய -என்னுடைய கண்கள் விடாய் தீரக் காணப் பெறுவது என்று என்கிறாள் –

நன்னலத்  தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–5-9-5-

நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
என் அபிமத சித்திக்கு என்னில் காட்டில் அபி நிவேசித்து தலைக் கட்டுமவர்கள் அன்றோ நீங்கள் –
அநந்ய பிரயோஜனரான ப்ராஹ்மணருடைய யாகங்களில் ஹோம தூமமானது -வெளிறு கழிந்தால் போலே இருக்கிற நிறத்தை யுடைத்தாய் –
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும்-
அந்தரிக்ஷத்து அளவு அன்றிக்கே ஸ்வர்க்கத்து அளவும் செல்ல மறைக்கும் -அநந்ய பிரயோஜனருடைய ஹோம தூமங்கள் ஆகையாலே பிரயோஜனாந்த பரர் அப்சரஸ் ஸூ க்களும் தங்களுமாய் முகம் பார்க்க ஒண்ணாத படி மறைக்கை
தண் திருவல்ல வாழ்-கன்னலங் கட்டி
சிறு மலையன் என்னுமா போலே -அழகிய கன்னல் கட்டி –
தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
கண்ட போதே நுகரலாம் படி இருக்கை -ரசத்துக்கு மேலே போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை -என்னை சர்வ ஸ்வபஹாரம் பண்ணி -அத்தாலே உஜ்ஜவலனாய் இருக்கிறவனை –என்னை எழுதிக் கொண்ட அழகை யுடையவனை என்றுமாம் –
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–
நான் பட்டது பட -பிரஜை ஜீவிப்பது காண் என்பாரைப் போலே என் கண்களின் விடாய் தீருவது என்றோ என்கிறாள் -முடியானேயில் கரணங்கள் இ றே -காண விரும்பும் என் கண்களே என்று கண்களும் தாமும் தனித்தனியே விடாய்க்கும் படி இ றே இவருடைய விடாய்
என்னலம் கொள் சுடரை என் கண்களின் விடாய் கெட காணப் பெறுவது என்றோ –

—————————————————————-

திரு வல்ல வாழிலே நின்று அருளுகிற ஸ்ரீ வாமனனுடைய மிகவும் ஸ்ப்ருஹணீயமான -போக்யமான திருவடிகளை நான் காண்பது என்றோ என்கிறாள் –

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பிறருக்கும் ஐயோ என்னும் திசையோ இது –கண்கள் செய்த படி செய்ய -நான் காணப் பெறுவது என்றோ என்கிறாள் –கன்று வேறு தாய் வேறாகும் விஷயம் இ றே -பிரஜை பட்டது படுகிறது -நான் பசி தீரும் வழி என் -என்பாரைப் போலே
வினையேன்- கண்கள் விடாய்க்கு அன்றிக்கே என் விடாய்க்கு அன்றிக்கே அலமாக்கும் படியான பாபத்தைப் பண்ணினேன் –
கனிவாய் மடவீர்!-
இப்போதை உறாவுதல் தீர்ந்து பண்டு போலே உங்களை காண வல்லனே என்று கருத்து -வண்ணம் திரிவு மனம் குழையும்-என்று இவள் துவண்டு இருக்க தத் காலீந விசேஷணமாகக் கூடாது இ றே
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
பாண் -பாட்டு -மதுபான மத்தகம் ஆகையாலே நல்ல மிடற்றோசையை யுடைய வண்டோடே-இயலைக் கற்று இசையோடு கூட்டுகை அன்றிக்கே பாட்டாய் இருக்கை –
சோலை எங்கும் இளம் தென்றல் சஞ்சரிக்கை -பசும் தென்றல் -கலப்பற்ற தென்றல் என்றுமாம் -பத்ம கேஸர ஸம்ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர வி நிஸ் ஸ்ருத நிச்வாஸ இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மழையால் மரங்கள் பணைக்குமா போலே -தென்றலாலே உயர்ந்த பணை களை யுடையவாய் கொண்டு வளரா நின்றுள்ள மரங்களை யுடைத்தாகை -பணை க்கு ஒக்கம் -சுற்றியே வளருகை -மரத்துக்கு ஒக்கம் மேலே வளருகை –
தர்ச நீயமான கானல் –கானல் என்று கடல் சோலை யாதல் -நெய்தல் நிலம் ஆதல் –
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.
தன்னுடைமை பெறுகைக்கு தான் அர்த்தியாய் -வடிவை குறுக விட்டு மிக்க அழகை யுடையவனாய் -ஸுலப்யத்தையும் அழகையும் திரு வல்ல வாழிலே ஆஸ்ரிதரை அனுபவிப்பித்துக் கொண்டு நிற்கிறவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை காண்பது எஞ்ஞான்று கொலோ-மலர்த்தாமரை -அப்போது அலர்ந்த தாமரை –

——————————————————————–

திரு வல்ல வாழிலே நின்று அருளின எம்பெருமான் திருவடிகளில் நித்தியமாய் பூவை யணிந்து தொழ வல்லோமே என்கிறாள் –

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7-

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
பாதங்கள் மேல் நித்தியமாய் பூவை யணிந்து தொழக் கூட வற்றே -என்று நிர்வஹிப்பர் ஜீயர் – / அணி -அணிந்து / –பூ -பூவை -பாதங்களை பூ மறைத்தலில் அப்பூவை யாகிலும் தொழ வற்றே -என்று ஒரு தமிழன் –
ஸ்வாபாவிகமான அழகுக்கு மேலே அழகிதாக அலங்க்ருதமான திருவடிகளைக் கூட வற்றே -என்று அருளிச் செய்வார் பிள்ளை / –பூ – அழகு  /அணி – அலங்காரம்  /-மேலே பூ அணி பாதங்களை –
பாவை நல்லீர்!– இவர் தசையைக் கண்டு விதி நிஷேத ஷமைகள் அன்றிக்கே ஸ்திமிதைகளாய் இருந்த படி -நிஷேதி யாமையாலே யுகந்து சம்போதிக்கிறாள் என்றுமாம் –
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்-மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும்
கடல் போலே பெருத்த பொய்கை களிலே யடி உயரத்தால் உயர்ந்த தாமரைகளும் செங்கழு நீரும் -ஸ்த்ரீகளுடைய ஒளியை யுடைத்தான முகத்தையும் கண்ணையும்
ஏந்தும் -பிரகாசிப்பியா நின்றது என்னுதல் -தோற்பிக்கும் என்னுதல்
திருவல்லவாழ்-நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–
ஸ்ரீ வைகுண்ட நாதனில் ஏற்றம் -ஒருவர் கூறை எழுவர் உடுக்கிற தேசத்திலே தரிசற இருக்கிற இடம் இ றே இங்கு -குறை வற்றவர்களுக்கு சந்நிதி பண்ணின மாத்திரம் இ றே அங்கு
தன் மேன்மை பாராதே ஆபத்துக்களில் தளர்ந்தார் தாவனம்
நம்மை சம்சார ஆர்ணவம் கொள்ளாமல் எடுக்குமவன்
நம்பிரான் தன்னை நாடொறும் பாதங்கள் மேலணி பூ தொழக் கூடும் கொல்-

———————————————————-

சர்வ ஸூ லபனானவன்  திருவடிகளில்  சர்வ காலமும் இடைவிடாதே அடிமை செய்யக் கூட வற்றோ என்கிறாள் –

நாடொறும்  வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8-

நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் –
நாடொறும் என்று தர்ச பூர்ண மாசாதிகளை வ்யாவர்த்திக்கிறது – வீடின்றியே-என்று நித்ய அக்னி ஹோத்ரத்தை வ்யாவர்த்திக்கிறது
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி என்று இ றே இவர் பிரார்த்திப்பது –ஆச்சார்ய உபதேசத்தை விஸ்வஸித்து அபேக்ஷிக்கிற நம்மை போல் அன்றியிலே-தாஸ்யம் ரசித்து ராகத்தாலே அபேக்ஷிக்கிறார் இ றே
நன்னுதலீர்!
அவன் வந்த யுபகாரத்துக்கு அவன் திருவடிகளில் விழுந்து பிராணாமபாம் ஸூ லலார்த்ய லலாடைகளான உங்களைக் காண வல்லேனே -நுதல் -நெற்றி -இவர்களுக்கு கைங்கர்யத்தில் உகப்பு போலே -இவள் பேறே தங்களுக்கு உகப்பாய் இருக்குமவர்கள் இ றே -நீங்களும் உங்கள் ஸ்வரூபம் பெற்று நானும் என் ஸ்வரூபம் பெறுவது என்றோ
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
கரும்புகளும் ஆட ப்ராப்தமாய் இருக்கும் –தீ -தித்திப்பு -செந்நெலும் அறுக்க ப்ராப்தமாய் இருக்கும் -அவ் ஊரில் பதார்த்தங்கள் எப்போதும் பக்குவ பலமாய் இருக்கும் என்கை –
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்-நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே
மாடு -பர்யந்தம் -பர்யந்தத்திலே கிட்டின பூத்த தடாகங்களும் -அத்தோடு சேர்ந்த வயலை யுடைத்தாய் சிரமஹரமான திருவல்ல வா ழி யிலே நித்ய வாசம் பண்ணுகிற மஹா உபகாரகன் -பரமபதத்தில் போலே சம்சாரிகளுக்கு அடிமையிலே அபேக்ஷை பிறந்த போது அனுபவிக்கைக்கு நித்ய வாசம் பண்ணுகிற தேசம் -குணாகுண நிரூபணம் பண்ணாதே சேஷ பூதர் இருந்த இடமே எல்லையாக வளரும் திருவடிகளை நாடொறும் வீடின்றி தொழ க் கூடும் கொல்-

—————————————————————–

நம்முடைய கழலுகிற வளைகள் பூர்ணமாம் படி-பூரிக்க – அவனைக் கண்டு தொழலாம் படி அவன் அருள் கூட வற்றே என்கிறாள் –

கழல் வளை  பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9-

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
கையில் தொங்காதே கழலுவது இடுவது ஆகிறவளை-அவன் வந்த ஹர்ஷத்தாலே பூர்ணமாம் படி விடாய் பட்ட நாம் கண்டு தொழும் படி அவன் இரங்க கூடவற்றோ -விஸ்லேஷத்திலே வளை கழலுவது தனக்கே யானாலும் காட்சி எல்லாருக்கும் ஒத்து இருக்கும் இ றே
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
குழல் என்னவும் யாழ் என்னவுமாய் இருக்கை -விஷ்ணு நா சத்ருசோ வீர்ய -என்றால் போல் ஸர்வதா சத்ருசம் இல்லாமையால் -கதிர் பொறுக்குகிறாள் -நாட்டில் இனியவை எல்லாம் சேரக் கேட்டால் போலே இருக்கும் –
குளிர் சோலையிலே குளிருக்கு பரிஹாரமாக மது பானம் பண்ணி -அருந்தல் -உண்டல்
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
முக்தமாய் தர்ச நீயமான வண்டுகள் ப்ரீதிக்கு போக்கு விட்டு பாடா நின்றுள்ள திரு வல்ல வாழ் -கூட்டும் சொலவும் இன்றிக்கே இசையைப் பாடும்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.
விரோதி நிரசன த்வரையாலே மிகவும் சுழன்று வருகிற திரு வாழி யை கையிலே யுடைய சர்வேஸ்வரனுடைய -சுழல்வது போலே விளங்கா நின்றுள்ள சக்கரம் என்றுமாம் -ஸ்வாபாவிகமான அவன் பிரசாதத்தாலே –
கழல் வளை பூரிப்ப –யாம் கண்டு கை தொழ க் கூடும் கொலோ
அவ்வண்டுகள் போலே களித்து அனுபவிக்க வல்லோமோ –

————————————————————————-

எம்பெருமானுடைய ஸ் வா பாவிகமான கிருபையால் – திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ -என்கிறாள் –

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
ஸ்வாபாவிக கிருபையால் யுண்டான ஸூ க்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ என்னுதல் -ஸ்வாபாவிக கிருபையால் அவனைக் காணப் பெற்று ப்ரீதியாலே யுகந்து கொண்டு திரு நாமத்தை சொல்லக் கூட வற்றோ என்னுதல் -நல்வினை -உகப்பு –
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்-
தன்னுடைய ஸ்வாபாவிகமான நீர்மையை உபய விபூதியும் அனுபவிக்கும் படி பழையதாக விரும்பி வர்த்திக்கும் தேசம் –நித்ய ஸூ ரிகளும் சம்சாரிகளுக்கு முகம் கொடுத்து நிற்கிற சீலவத்யையை இங்கே வந்து அனுபவிப்பர்கள்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
லஷ்மணஸ்ய தீமத -என்கிறபடியே பிரஜா ரக்ஷணத்தில் அவன் தன்னைக் காட்டிலும் அனுக்ரஹ சீலராய் இருக்குமவர்கள் -அவனுடைய கல்யாண குணத்தை கொண்டாடி வர்த்திக்குமூர் என்னுதல் -ப்ரேமத்தால் மங்களா சாசனம் பண்ணி வர்த்திக்குமூர் என்னுதல்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.
நல்ல அருளை யுடையவனாய் நமக்கு ஸ்வாமியுமாய் இருக்குமவன் -நல்லருள் ஆகிறது -வாத்சல்யமம் -வாத்சல்யமும் ஸ்வாமித்வமும் நாராயண சப் தார்த்தம் –அர்த்தத்தை அருளிச் செய்து பின்னை சப் தத்தை அருளிச் செய்கிறார்
நாராயணன் நாமங்களே.–நாராயண சப்தம் தர்மி நிர்த்தேசம் -இஸ் ஸ்வபாவங்களால் நிரூபித்த வஸ்துவுக்கு யுண்டான குண சேஷ்டிதங்களுக்கு வாசகம் அல்லாத திரு நாமங்கள் –

———————————————————

இப்பத்தும் வல்லார் சம்சாரத்திலே இருந்து வைத்தே  பகவத் குண அனுபவத்தால் எல்லாரிலும் சிறந்தவர் என்கிறார் –

நாமங்  களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
தேவோ நாம சஹஸ்ரவான் என்கிறபடியே குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலே சர்வேஸ்வரனாக பிரசித்தனானவன்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த-நாமங்களாயிரத்துள் இவை பத்தும்
அவனைப் பெறாதே நோவு பட நோவு பட அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார்
பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபிய்யாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே
அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்
திருவல்லவாழ்-சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.
திரு வல்ல வாழ் யாகிற சேமமுடைத்தான தென்னகரிலே கூட்டிச் சொல்லுவார்
தென்னகர் ராஜாவை இட்டு தென்னகர் என்னுதல் -தெற்குத் திக்கில் நகர் என்னுதல் சிறந்தார் பிறந்தே-
ஒருவனுக்கு பிறக்கை போக்கி தாழ்வு இன்றிக்கே இருக்க பகவத் அனுபவம் பண்ணப் பெறுகையாலே இவர்கள் சீரியர்கள் –சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே -அவனுக்கு உறுப்பாகை யாலே முக்த சரீரத்திலும் ஸ்லாக்யம்-ஆஸ்ரித அர்த்தமான பகவத் அவதாரம் போலே ஸ்லாக்யம் என்கை –


கந்தாடை     அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: