திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-8-

இப்படி ஸ்ரீ வானமாமலை திருவடிகளில் சரணம் புக்க இடத்திலும் ஸ்வ அபிமதம் பெறாமையாலே அவசன்னரானவர்
-எத்தசையிலும் அவனே உபாயம் என்னும் ஞானத்தை பெற்றோமே என்று ப்ரீதராய் தரித்தார் -அத்தாலும் பிராபித்தார் ஆகாமையாலே
அத்தரிப்பு செல்ல நடத்த திருக் குடந்தையில் சென்று -பரமபதம் கலவிருக்கையாய் இருக்க இங்கே வந்து கண் வளர்ந்து அருளுகிறது
குறைவாளர் குறை தீர்க்கைக்கு ஆனபின்பு நம் அபேக்ஷிதம் செய்யாது ஒழியக் கூடாது என்று தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம்
மநோ ரதித்துக் கொண்டு ஸ்ரீ பரத ஆழ்வான் தம் ஆர்த்தி எல்லாம் பெருமாள் திருவடிகளில் செல்லத் தீரும் என்று மநோ ரதித்திக் கொண்டு
சென்றால் போலே ஆராவமுத ஆழ்வார் திருவடிகளில் செல்ல
-மாமக்ரூரேதி வஷ்யதி -என்கிறபடியே வினவுதல் -குளிர நோக்குதல் அணைத்தல் செய்யாமையாலே –
ஸ்தநந்த்ய பிரஜை முலையை நினைத்து விடாய்த்து தாய் பக்கலிலே செல்ல அவன் முகம் பெறாதே தடுமாறுமா போலே
-திருவடிகளில் சம்பந்தத்தையும் -சந்நிதி யுண்டாய் இருக்கிற படியையும்-கிடையா விடில் விட ஒண்ணாத போக்யதையையும் சொல்லி
-கேட்டார் அடைய நீராம் படி கூப்பிடுகிறார் -ஒரு கால் பண்ணின பிரபத்தி பலித்தது இல்லை என்னா தவிருமவர் அல்லர்
-மேன்மேல் என சரணம் புகும் அத்தனை -அப்படி இருக்கை யாயிற்று -மஹா விச்வாஸம் ஆகிறது –
அங்கு ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு பெருமாள் முகம் காட்டா விட்டது தம் பிரதிஞ்ஜை தலைக் கட்டுகைக்காக
-இங்கு ஆழ்வாருக்கு முகம் காட்டாது ஒழிந்தது -பிரபந்தம் தலைக் கட்டுகைக்காகவும் -விடாயைப் பிறப்பித்து முகம் காட்டுகைக்காகவும்-

————————————————————

உன் அழகாலே என்னை நீராக்கா நின்றுள்ள உன்னைக் கண் வளரக் கண்டேன் -உணர்ந்து குளிர நோக்குதல் அணைத்தல் செய்யக் காண்கிறிலேன் என்கிறார்-

ஆரா  அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
கிடைத்தது இல்லை என்று ஆறி இருக்கலாம் படியோ உன் வடிவு அழகு -இத்திரு வாய் மொழியில் இவருடைய விடாய்க்கு எல்லாம் நிதானம் இது -அனுபவியா நின்றாலும் பர்யாப்தி பிறவாத படி நிரதிசய போக்யமான விஷயத்தை இழந்து இருக்கவோ -நாள் செல்ல நாள் செல்ல விடாயைப் பிறப்பிக்கும் விஷயம் என்கை -அப்பொழுதைக்கு அப் பொழுது என் ஆரா வமுதமே -தானே தன்னை அனுபவிக்கப் பார்த்தாலும் துணை கொண்டு இழிய வேண்டி இ றே இருப்பது -ஸஹ பத்நயா விசாலாஷ்யா-சர்வாதிகாரமாய் சதா ஸேவ்யமாய் பந்த நிவர்த்தகமாய் இ றே இவ்வம்ருதம் இருப்பது -லோக சாரங்க மஹா முனிகளை இத்தேசத்திலே அழைப்பித்த சொல் இ றே
அடியேன் என்கிறது யஸ்யாஸ்மி என்ற வசனத்தால் அன்று -போக்யதைக்கு தோற்று சொல்லுகிறார்
அடியேன் உடலம் -ஞான குணகமான ஆத்மவஸ்து அழியும் அளவன்றிக்கே அசேதனமான சரீரத்து அளவும் செல்லக் கரைகை -ஆத்மவஸ்து உத்தேசியத்தில் ஈடுபட்டு அழியாமைக்கு கட்டின கரை யாயிற்று சரீரம் அதுவும் அழிந்தது என்கை
நின்பால் அன்பாய் நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற
நின்பால் – சேதன அசேதன விபாகம் அற அழிக்க வல்ல உன் பக்கலிலே -அபி வ்ருஷாபரிம்லாநா–உபதப்தோ தகா நத்ய
அன்பாய் -அசித் த்ரவ்யம் அன்றியே -பிரமத்தை இட்டுச் செய்தது என்னலாம் படி இருக்கை -அன்னமயமாய் இருக்கை அன்றிக்கே ப்ரேமமயமாய் இருக்கை -காதல் குருகூர் சடகோபன் இ றே
சரீரமானது கட்டுக் குலைந்து-அன்பாய் –அதுதான் போய் -நீராய் -அலைந்து கரையும் படி யுருக்கிற்று
உருக்குகின்ற -இத்தலை அழியா நிற்க அத்தலை முதலடி இட்டதில்லையாய் இருக்கை
நெடுமாலே!
சர்வேஸ்வரன் என்னுதல் -போக்யதையின் மிகுதியைச் சொல்லுதல் -வ்யோமோஹ அதிசயத்தை சொல்லுதல் -இப்படி ஸைதில்யத்தை பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்னுதல் –தன் போக்யத்தையாலே ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கை என்னுதல் -தன் வ்யோமோஹ அதிசயத்தை காட்டி ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கிறவன் என்னுதல்
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
மிகவும் கனக்கையாலே அசைந்து வருகிற செந்நெற் கதிர்கள் கவரி வீசினால் போலே இருக்கை -கண் வளருகின்ற இடத்தில் பரிசர்யை பண்ணுகிறாப் போலே இருக்கை -சேஷ வஸ்துவின் வியாபாரத்தை உடையவன் சேஷ விருத்தியாக நினைக்கிற படி
செழு நீர் -ஜல ஸம்ருத்தியை சொல்லுதல் -அழகிய நீர் என்னுதல் -கண் வளருகிறவருடைய ஸுகுமாரியத்துக்கு சேரும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தாகை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–
அழகு மிக்க ஒப்பனை -இப் ஒப்பனை அழகு நிறம் பெறும்படி யாயிற்று கண் வளர்ந்து அருளிற்று -அல்லாதார்க்கு கிடந்த போது வைரூப்யம் உறைத்து இருக்கும் -இங்கு அழகு உறைத்து இருக்கும் -ச மயா போதித ஸ்ரீ மான் –
கிடந்தாய் கண்டேன் -கண் வளர்ந்து அருளுகிற படி கண்டேன் –உணர்ந்து குளிர நோக்குதல் -அணைத்தல் -இந்த சொல்லுச் சொல்லுதல் -செய்யப் பெற்றிலேன் -கண்ணாலே காணப் பெற்றேன் -நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன் -பரி மாற்றம் பெறா விட்டால் ஆறி இருக்கலாம் -பிராப்தி இல்லை யாகில் -வடிவு அழகோ பாதி சம்பந்தமும் நலியா நின்றதே -ஸ்தநந்த்ய பிரஜை தாய் அறிந்தால் முலை முலை என்னுமா போலே சம்பந்த ஞானம் அன்றோ கூப்பிடப் பண்ணுகிறது –

—————————————————————-

கண் வளரக்  கண்டேன் -கண்களாலே குளிர நோக்கக் காண் கிறி லேன் -என்று முன்பு பண்ணின உபகாரங்களை சொல்லிக் கூப்பிடுகிறார் –

எம்மானே!  என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2-

எம்மானே!
நீ நினைத்த படி செய்யும் இத்தனை போக்கி என்னுடைய ஹிதத்துக்கு நான் கடவேனோ -உடையவன் நினைத்த படி யன்றோ உடைமை –
என் வெள்ளை மூர்த்தி!
பிரயோஜன நிரபேஷமாக என்னை விஷயீ கரித்தவனே -வெளுப்பாலே சுத்தியை நினைக்கிறது -மூர்த்தி ரூபமாய் ஸ்வ பாவத்தை நினைக்கிறது –சுத்த ஸ்வ பாவன்-எனக்கு தன் பேறாக உபகரித்தவன் –
என்னை ஆள்வானே
உன்னை பிரிந்து முடியும் தசைகளில் குண ஞானத்தால் ஜீவிப்பித்து போந்தவனே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! –
எ உரு /மா உரு –எவ்வுரு கொண்டால் ஆர்த்த ரக்ஷணம் தலைக் கட்டும்-அவ்வுருவைக் கொள்ளும் -அது தான் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானமாய் இருக்கை
இச்சையால் என்னுதல் -ஆஸ்ரிதற்கு ஈடாக என்னுதல்
எழிலேறே!
நித்ய ஸூ ரிகள் நடு இருப்பில் காட்டில் ஆஸ்ரித கார்யம் செய்யப் பெறுகையாலே நிரதிசய தீப்தி உக்தனாய் மேனாணித்து இருக்கை –பல் பிறப்பாய் ஓளி வரு முழு நலம் -செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
சிவந்து பெருத்த கமலம் -செழு நீர் -ஜல ஸம்ருத்தியை சொல்லுதல் -தர்ச நீயம் என்னுதல் –
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–
அழகிய தாமரைப் போலே இருக்கிற இருக்கிற திருக் கண்கள் அலரக் காண் கிறி லேன் -என்றுமாம் -தன் பக்கல் விசேஷ கடாக்ஷம் பண்ணுகை -இவை மலருகை யாவது என்று இருக்கிறார்
அம்மா மலர் -அவனோடே சஜாதீயம் ஆயிற்றன இரண்டு பூ அலரக் காண்கின்றிலேன் என்றுமாம்
என் நான் செய்கேனே?–இவை இரண்டும் மலர்ந்தால் அல்லது தரியாத நான் என் செய்கேன் -இவ் ஊரில் புஷபங்கள் அடைய மலர்ந்து வண்டுகள் மது பானம் பண்ணி களிக்கச் செய்தெயும் -இவை இரண்டும் மலர்ந்தால் அத்தேனை பருக இருக்கிற நான் பட்டினி விட்டே போம் எத்தனையோ-

—————————————————————-

இப்படி கூப்பிட்ட இடத்திலும் அபிமதம் பெறாமையாலே தானே சாதன அனுஷ்டானம் பண்ணி வருகிறான் என்று கை விட்டு இருந்தான் என்று நினைத்து என் அபேக்ஷிதம் செய்து அருள வேணும் என்கிறார் –

என்னான்  செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

என்னான் செய்கேன் –
உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இ றே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ -நீர் துர்பலரானால் வேறே சிலர் நிர்வாஹகர் ஆனாலோ என்னில்
யாரே களை கண் –
ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தரானவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ -அமிழ்ந்துவார் அமிழ்ந்துவரை எடுக்கவோ -என்னளவும் புகுரா நில்லாதவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ
என்னை என் செய்கின்றாய்-
நீ உன்னைத் தரப் பார்த்தாயா -உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயா -நெறி காட்டி நீக்குதியோ –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை -த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்
செம்பால் செய்த மதிள் என்னுதல் -கன் என்று தொழிலாய் தொழில் மிக்கு இருந்துள்ள மதிள் என்னுதல் -என் புகுகிறதோ என்று ஆஸ்ரிதற்கு அஞ்ச வேண்டாது இருக்கை -அவன் சக்தியை அனுசந்தித்து தமக்கு அவன் மதிளாக நினைத்து இருப்பர் -அவன் ஸுகுமார்யத்தை பார்த்தால் மங்களா சாசனம் பண்ணும் அத்தனை இ றே -மதிளுக்கு மதிள் இடுகிறார் -உபாயம் சந்நிஹிதமாய்-ஸூ ரஷிதமானால் கொள்ளப் புகுகிற கார்யம் என் என்னில்
அடியேன் அருவாணாள்-செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–
என் ஆத்மா யுண்டாய் செல்லும் நாள் எத்தனை நாள் யுண்டு -அத்தனை நாளும் உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும் படி பார்த்து அருள வேணும்
அடியேன் அரு-உனக்கு அநந்யார்ஹ சேஷமான ஆத்மவஸ்து
தான் நினைத்த பரிமாற்றம் கிட்டாமையாலே -அதுக்கடியான அத்யாவசாயம் குலைகிறதோ என்று அஞ்சி அது குலையாதபடி பார்த்து அருள வேணும் என்கிறார் என்றுமாம்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்கிறபடி குலையாத படி பார்த்து அருள வேணும்
அத்யாவசாயம் இது -ருசியில் வந்தால் பரமபக்தி யுக்தர்-விளம்பத்துக்கு அடி என் என்னில் -பக்தி விபாகத்துக்காகவும் இவருடைய ப்ரேமம் வழிந்த சொல்லாலே நாட்டைத் திருத்துகைக்கும் –

———————————————————————

சர்வேஸ்வரனாய் வைத்து ஆஸ்ரிதற்காக  திருக் குடந்தையில் சந்நிஹிதனாய் இருக்க நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே நோவு படா நின்றேன் என்கிறார் –

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
அவ்வருகு பட காண வல்லவர்கள் -எத்தனையேனும் அளவுடையார் காணிலும்-அவர்கட்க்கு அவ்வளவேயாய் தான் அபரிச்சேதயமாய் இருக்கும் குணவத்தா பிரதையை யுடையவனே -மதி ஷயான் நிவர்த்தந்தே
உலப்பிலானே!
இப்படிப்பட்ட குண விபூதியாதிகளுக்கு தொகை இல்லாதவனே
எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
ஸமஸ்த லோகங்களையும் சேஷமாகவுடைய அத்விதீயனான சர்வேஸ்வரனே -சர்வாத்மாக்களையும் எழுதிக் கொள்ள வல்ல அத்விதீய விக்கிரஹத்தை யுடையவனே என்றுமாம் –
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
க்ரம பிராப்தி பற்றாதபடி ஸ்நேஹித்து இருக்குமவர்கள் -அவர்களதான திருக் குடந்தையில் அவர்களை பிரிய மாட்டாமையாலே உடம்போடு கண்டு அனுபவிக்கலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவனே
ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே
அலமந்து -விஷயம் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆகாசத்தை பார்க்கிறது -நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவ வந்து தோற்றினால் போலே -தம் தசையைப் பார்த்து தோற்றுகிறானோ என்று பார்த்து -என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து என்னுமாம் ஆண்டான்
வரக் காணா மையாலே ஸ்நே ஹிதிகள் செய்வதும் செய்யா நின்றேன் -க்ருபணர் செய்வதும் செய்யா நின்றேன் -சபலர் செய்வதும் செய்யா நின்றேன் -விரக்தர் செய்வதும் செய்யா நின்றேன் –

——————————————————————-

சாபலத்தாலே தய நீய ப்ரவ்ருத்திகளை பண்ணின இடத்திலும் காணப் பெறுகிறிலேன் -உன் திருவடிகளை நான் பெறும்படி பார்க்க வேணும் என்கிறார் –

அழுவன்  தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.–5-7-5-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
பாலர் செய்வதுவும் செய்யா நின்றேன் -அறிவுடையார் செய்வதுவும் செய்யா நின்றேன் -என் செய்தால் அபிமதம் கிடைக்கும் என்று அறியாமையால் ஆடிப் பார்ப்பன்
வாய் விடாத காம்பீர்யம் குலைந்து கூப்பிடா நின்றேன் –ப்ரேமம் வழிந்த சொல் -பாட்டு -அது தான் அடைவு கெடக் கூப்பிடுகை -அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
உடன் வந்தியாய்-ஒருத்தரால் போக்க ஒண்ணாத ப்ரேமத்தால் கிட்டாது என்றாலும் விடாதே இருக்கிற அதி மாத்ர ப்ராவண்யம் என்கை -பக்தியை பாபம் என்கிறது -இக்கிலேசத்துக்கு எல்லாம் அடி யாகையாலே -அநிஷ்டாவஹம் இ றே பாபம் –
ஆர்த்தியே செப்பேடாக வர சம்பாவனை உள்ள திக்கை பார்ப்பேன் -வரக் காணா மையாலே ஆசைக்கு பலம் அழகிதாய் இருந்தது என்று லஜ்ஜித்து கவிழ்ந்து இருப்பன் –ஆசைப் பட்டார்க்கு அழகிதாக உதவினான் என்று நாட்டார் சொல்லும் அவத்யத்துக்கும் லஜ்ஜித்து கவிழ்ந்து இருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!
பெருத்து தர்ச நீயமான நீர் நிலங்கள்
ஆசைப் பட்டார்க்கு நெடுங்கை நீட்டாக ஒண்ணாது என்று காண் கைக்கு அண்ணிதாக கண் வளர்ந்து அருளுகை
செந்தாமரைக் கண்ணா!
சந்நிதியே இன்றிக்கே ரக்ஷண பரிகரமும் உடையவனே -என் ஆர்த்தி தீர நோக்குகைக்கு யோக்யதை யுண்டாய் இருக்க இழக்கவோ-அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் என்கை -அவலோக நதா நே ந
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.–
க்ருபணன் என்னுதல் -ஹேயன் என்னுதல் -புறம்பு புகல் அற்று உன்னால் அல்லது செல்லாத படியான க்ருபனான என்னை -பாஹ்யங்களிலே ப்ரவணனாய் ஹே யனான என்னை என்றுமாம் -உன் திருவடிகளில் சேரும்படி விரகு பார்த்து அருள வேணும் -உன் திருவடிகளை பெற வேணும் -அது நான் அறியாத படி நீயே ஒரு நல் விரகு பார்த்து அருள வேணும் என்கிறார் –

———————————————————————–

உன்னுடைய போக்யத்தையிலே அந்வயித்த  எனக்கு விச்சேதம் பிறவாத படி   பிரதி பந்தகங்களையும் போக்கி உன்னை பெறுவதொரு  பார்த்து அருள வேணும் என்கிறார் –

சூழ்  கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து
என்னுடைய பிராரப்த கர்மங்களை அறுத்து உன் திருவடிகளைக் கிட்டுவதொரு விரகு பார்த்து அருள வேணும் -க்ரமத்திலே செய்கிறோம் என்ன அதுக்கு அவதி என் என்கிறார்
உன்னடி சேறும் ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
உன் திருவடிகளை சேரும் முறைமை கண்டு வைத்தே துஷ்பூரமான இந்திரியங்களுக்கு இரை தேடியிட்டு எத்தனை நாள் அகன்று இருக்கக் கட வேன் –
இப்படி ஆறி இருக்கப் பார்த்தால் முறையை அறிவித்தது என் –மயர்வற மதி நலம் அருளிற்றிலை யாகில் நானும் ஆறி இருக்கலாயிறே-பூர்ணே சதுர்த்தசே-வர்ஷே -என்று ஓர் அவதி பெறினும் பெற்றதோடு ஒக்கும்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!
விஸ்லேஷ கந்தம் இல்லாத படி உன்னை அனுபவிக்கை யாகிற சிலாக்யமான புகழை யுடையவர்களதான -திருக் குடந்தை -பழையதான புகழ் என்றுமாம் -எனை நாள் அகன்று இருப்பன் என்ன வேண்டாதவர்கள் -விஷய சந்நிதி தனக்கும் அவர்களுக்கும் ஒத்து இருக்க அவர்கள் வாழுகிற படி எங்கனே என்னில் -தம்மைப் போலே கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் பெற்றார்கள் என்று இருக்கிறார்
வானோர் கோமானே!
விஸ்லேஷ யோக்கியதையும் இல்லாதவர்களை சொல்லுகிறது –அவர்களை நித்ய அனுபவம் பண்ணுவிக்கிறவன் க்கிடீர் இங்கே வந்து ஸூ லபனாய் இருக்கிறான்
யாழி னிசையே!
அனுபவிப்பாருடைய சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமாய் இருக்கிற படி -மிடற்றோசை கர்ம அனுகுணமாக போது செய்யும் -அத்தை வ்யாவர்த்திக்கிறது
அமுதே!
ரசனைக்கு போக்யமாய் இருக்கிற படி
அறிவின் பயனே!
ஞானத்துக்கு பிரயோஜனமான விஷயம் -மனஸூக்கு போக்யமாய் இருக்கிற படி
அரிஏறே!
கண்ணுக்கு முகக்கொள்ள ஒண்ணாத போக்யதையை யுடையவனே
இங்குள்ளாருக்கும் அங்குள்ளாருக்கும் உன்னை அனுபவிக்கக் கொடுத்து நிரதிசய போக்ய பூதனாய் இருக்க -நான் இந்திரியங்களுக்கு இரையிட்டு எத்தனை காலம் அகன்று இருக்கக் கட வேன் –

——————————————————————

உன் கிருபையால் உன் வை லக்ஷண்யத்தைக் காட்டி அடிமையால் அல்லது செல்லாத படி யானபின்பு திருவடிகளைத் தந்து பின்னை சம்சாரத்தை அறுக்க வேணும் என்கிறார்

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-

அரியேறே!
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் சேஷியாகையாலே மேனாணித்து இருக்கிற படி –இத்தலைக்கு வணக்கம் ஸ்வரூபமாய் இருக்கும் போலே இ றே அவனுக்கும் இறுமாப்பு ஸ்வரூபமாய் இருக்கிற படி -அந்த இறுமாப்பில் அல்லாதாருடைய சேஷத்வமும் தோற்றி இ றே இருப்பது –
என்னம் பொற் சுடரே!
வி லக்ஷணமான பொன் போலே ஸ்ப்ருஹணீயமான ஒளியை யுடையவனே -வடிவில் வாசியை எனக்கு அறிவித்தவனே -அம மேனாணிப்போ பாதி இவ்வடிவும் சர்வாதிகான் என்னும் இடத்தைக் காட்டுகிறது -ருக்மாபம்
செங்கட் கருமுகிலே!
வாத்சல்ய அம்ருத வர்ஷியான திருக் கண்களை யுடையவனே –
கரு முகிலே –
-கண்ட போதே சகல தாபங்களும் கெடும் படி யாயிற்று வடிவு இருப்பது
எரியேய் பவளக்குன்றே!
எரி ஏய்ந்த பவளக் குன்றே -உகவாதற்கு அநபிபவநீயனாய் -அனுகூலர்க்கு உஜ்ஜ்வல்யத்தாலே ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கை -குன்றே -அபரிச்சேத்யன் ஆனவனே –
நால்தோள் எந்தாய்!
திருவடி அகப்பட்ட துறையில் யாயிற்று இவரும் அகப்பட்டது -ஆயத்தாச்சா -போக்யமுமாய் ஆபாஸ்ரயமுமாய் இருக்கிற தோள்களைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே
உனதருளே-பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
அருளாலே என்னுதல் –அருள் ஏய்ந்த -அருளோடு கூடின என்னுதல் –நிர்ஹேதுக கிருபையால் என்னை ஆத்மாந்த தாஸ்யத்திலே ஸ் வீகரித்தாய் -கைங்கர்யம் கொள்ளும் போதும் கிருபை முன்னாக வேண்டி இருக்கையாலே அத்தோடு கூடின அடிமை என்றுமாம் –அடிமை கொள்ளுகைக்காக பிராட்டியோடே கூட திருக் குடந்தையில் வந்து காண் வளர்ந்து அருளுகிறவனே -ஒரு தேச விசேஷத்தில் என்ன வேண்டாத படி -தேசத்தில் குறை இல்லை -ஸ்ரீ யபதி யாகையாலே ப்ராப்யத்தில் குறையில்லை -பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா -என்ற இளைய பெருமாளை போலே பற்றுகிறார் –
தரியேன் இனி
மாதா பிதாக்கள் சந்நிஹிதரான பின்பு -மாதா பிதாக்கள் அசந்நிதியில் பசி பொறுக்கலாம்-சந்நிதி யுண்டானாலும் பசி பொறுக்கப் போகாது இ றே -தறியாமை எவ்வளவு போரும் என்ன
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.-
ஜென்ம சம்பந்தம் அற்று உன் திருவடிகளை பெறப் பற்றாது -முலையைக் கொடுத்து சிகித்சிப்பாரை போலே திருவடிகளைத் தந்து விரோதிகளை போக்க வேணும் –

——————————————————-

தரியேன் என்ற பின்பும் முகம் கிடையாமையாலே கலங்கி அனுபவம் பெற்றிலனேயாகிலும் -உன் திருவடிகளே தஞ்சம் -என்று பிறந்த விச்வாஸம் குலைகிறதோ என்று அஞ்சா நின்றேன் -இது குலையாத படி பார்த்து அருள வேணும் என்கிறார் –

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை -த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
பார்த்த இடம் எல்லாம் வாயான திரு ஆழியை ஆயுதமாக யுடையவனே -கை கழலா நேமியானாக இருக்கிறது என்னுடைய துக்க நிவ்ருத்திக்கு அன்றோ -அதுக்கும் மேலே திருக் குடந்தையில் வந்து ஆச்சர்யமான அழகோடு கண் வளர்ந்து அருளுகிறது எனக்கு அணித்தாக வாக வன்றோ
சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது -ஸூ லபன் அன்று என்ன ஒண்ணாது -ருசியுதபாதகன் அன்று என்ன ஒண்ணாது
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
சரீரமானது கட்டுக் குலையா என் பிராணனும் சரீரத்தை விட்டுப் பேரக் கடவ போதாயிற்று இப்போது -அங்கணம் அன்றியே அந்திம ஸ்ம்ருதியை அபேக்ஷிக்கிறார் ஆனாலோ என்னில் -அந்திம ஸ்ம்ருதி ஒழிய சித்தி இல்லாத அதிகாரி அல்லாமையாலே அத்தை சொல்லுகிறது அன்று -இவன் பக்கல் இது இல்லாத போது அவன் அஹம் ஸ்மராமி என்கையாலே விஸ்லேஷ வியசனத்தால் சரீரமும் தளர்ந்து பிராணனும் சரீரத்தை விட்டுப் போம் தசையாயிற்று இப்போது என்கை
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–
அபேக்ஷிதம் பெற்றிலனே யாகிலும் என் அபேக்ஷித்துக்கு உன் திருவடிகளை பற்றின பற்று நெகிழாமல் பண்ணி அருள வேணும் -அனுபவம் பெறாமையாலே அதுக்கு அடியானை உபாய அத்யாவசாயம் குலைகிறதோ என்று அஞ்சி இது குலையாத படி பார்த்து அருள வேணும் என்கிறார் -ஒருங்க -ஒருபடிப்பட –

—————————————————————-

சர்வேஸ்வரனாய் வைத்து -சர்வ ஸமாச்ரயணீயன் ஆகைக்காக-சந்நிஹிதனாய் -என்னை அடிமையால் அல்லது செல்லாத படி பண்ணின நீ கண்ணாலே காணலாம் படி வர வேணும் என்கிறார் –

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
நெடுநாள் விமுகனான என்னையும் அடிமையிலே இசைவித்து -என் இசைவுக்கு எதிர் சூழல் புக்குத் திரிந்த உனக்கு அபேக்ஷிதம் செய்யக் குறை என் -நான் அர்த்தியாதே இருக்க என் கார்யம் செய்த நீ இன்று இரக்கச் செய்தே விளம்பிக்கிறது ஏன்
உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
பரகு பரகு என்று திரியாத படி உன் திருவடிகளே விஷயமாம் படி பண்ணுமவனே -என்கை -நிழலும் அடி தாறுமானோம் என்கிறபடியே மிதியடியாம் படி ஸ்ரீ சடகோபனாக்கி -பெறும் காற்றில் பூளை போலே யாதானும் பற்றி நீங்கும் விரோதமாய் இ றே முன்பு வர்த்தித்தது
அம்மானே -இசைவே தொடங்கி இவர் கார்யம் தானே செய்ய வேண்டும் பிராப்தி
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
இவரை இசைவித்தாகிலும் அறுதல் பிணைக்க தான் குறைவாளன் அல்லன் கிடீர்-வ்ருத்தி ஹ்ராசாதிகள் இன்றிக்கே இருக்கிற நித்ய ஸூ ரிகளுக்கு தலைவரான சேனை முதலியார் போல்வாருக்கு தலைவன் ஆனவனே -ஜகத் காரண பூதனான சர்வாதிகனே -காரணந்து த்யேயா-என்று உபாசகருக்கு சுபாஸ்ரயன் ஆனவன் என்கை –அங்குள்ளாருக்கு போக ஹேதுவாய் இங்குள்ளாருக்கு சத்தா ஹேதுவாய் இருக்கை
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
நித்ய ஸூ ரிகளோபாதி சம்சாரிகளும் அனுபவிக்கலாம் படி சந்நிஹிதனாய் இருக்கிற படி -திக்குகளில் செல்ல ஓளி பரம்பா நிற்பதாய் -சிலாக்யமான பெரு விலையனான ரத்தினங்கள் சேரும் திருக் குடந்தை -ஆராமுத ஆழ்வார் ஆதல் -திரு மழிசைப் பிரான் போல்வார் ஆதல் -புருஷ ரத்தினங்கள் சேருமூர் யாயிற்று
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–
வருத்தம் இன்றிக்கே லோகமானது ஆஸ்ரயிக்க என்னுதல் -நித்ய ஸூ ரிகள் நீர்மைக்குத் தோற்று ஏத்தும் படி என்னுதல் -இடம் வலம் கொண்ட போது எல்லாம் திருத்திரை எடுத்தால் போலே லோகம் அடங்க ஏத்தக் கிடந்தாய் என்னுதல் –
கிடந்தாய்! காண வாராயே.–-கண் வளர்ந்து அருளுகிற அழகை அனுபவித்தால்-நடை அழகை அனுபவிக்க வேண்டாவோ -அதீந்திரியமான வடிவை கண்ணுக்கு இலக்காக்கின அருமை யுண்டோ நடக்கையில் –

——————————————————————-

திருக் குடந்தையில் செல்ல நம் மநோ ரதங்கள் எல்லாம் சித்திக்கும் என்று புக-அப்படி பெறாமையாலே இன்னமும் எத்தனை இடம் தட்டித் திரியக் கட வேன் என்கிறார் –

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-

வாரா அருவாய் வரும் என் மாயா!
புறம்பு கண்ணாலே கண்டு அனுபவிக்க வராதே -மறந்து பிழைக்க ஒண்ணாத படி அகவாயிலே அருவாய்க் கொண்டு பிரகாசிக்கிற ஆச்சர்ய பூதனே –
அன்றிக்கே –
பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணுகைக்கு வராதே அரூபியாய் வர்த்திக்கும் ஆச்சர்ய பூதனே என்றுமாம் -அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் என்று மேலே யுண்டாகையாலே முற்பட்டதுவே நிர்வாஹம் -அநாஸ்ரித்தற்கு அனுபவிக்க ஒண்ணாதே ஆஸ்ரிதற்கு அனுபவிக்க லாய் இருக்கும் என்றுமாம் –
மாயா மூர்த்தியாய்!-
சதைக ரூப ரூபாய -என்கிற நித்ய மங்கள விக்கிரஹத்தை யுடையையாய் நாட் செல்ல நாட் செல்ல பர்யாப்தி பிறவாத போக்யதா ப்ரகர்ஷத்தை யுடையையாய்
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
உனக்கு ஸ்வம்மான என் நெஞ்சின் உள்ளே உன் போக்யதையை ஆவிஷ் கரித்து அனுபவிப்பித்தவனே
தீரா வினைகள் தீர
அனுபவ வி நாஸ்யமாய் -உன்னை ஒழிய ஒருவரால் போக்க ஒண்ணாத -த்வத் அனுபவ விரோதியான கர்மங்கள் தீர
என்னை ஆண்டாய்!
அந்த கர்மங்களை போக்கி -அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!-என்னும் படி புகுர நிறுத்தினவனே
திருக்குடந்தை-ஊராய்!
என்னை அடிமை கொள்ளுகைக்காக திருக் குடந்தையில் வந்து சந்நிஹிதன் ஆனவனே -பர வ்யூஹ விபவங்களை-வ்யாவர்த்திக்கிறது –
ஊராய்!
அவ்வூரைத் தனக்கு நத்தமாக நினைத்து இருக்கை –
உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–
சம்சாரிகளை அனுபவிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும் -பரமபதத்தில் இருப்பிலே யாதல் -அவதாரங்களிலே யாதல் -ஆசைப் பட்டேனோ –
அடியேன்
ஆருடைய வஸ்து இங்கனம் அலமந்து திரிகிறது -இன்னமும் எத்தனை திருப்பதிகள் தட்டித் திரியக் கட வேன்-

——————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழி பத்தும் பழுது அறக் கற்க வல்லார் காமினிகளுக்கு காமுகரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யராவார் என்கிறார் –

உழலை  என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
உழலை கோத்தால் போலே இருக்கிற எலும்பை யுடையளான பூதனையுடைய முலை வழியே பிராணனை வாங்கினவன் –அகவாயில் நீர்மை அற்று இருக்குமா போலே யாயிற்று வடிவிலும் பசை அற்று இருக்கும் படி
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
விரோதி நிரசன சீலனுடைய திருவடிகளே இஷ்ட சித்திக்கு உபாயம் என்று அத்யவசித்த ஆழ்வார் –
விரோதியைப் போக்குவானும் தன்னைத் தருவானும் அவனே என்கை -அவதாரணத்தாலே சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது -த்வம் ஏவ உபாய பூதோ மே –மாம் ஏகம் –
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்-
திருக் குழலின் ஓசையிலும் காட்டிலும் இனிதாக -இவர் பேச்சைக் கேட்டால் பகையரும் இரங்க வேண்டும் படி இருக்கை -ஆனால் அவன் இரங்கி முகம் கொடாது ஒழிவான் என் என்னில் -ச மஹாத்மா ஸூ துர்லப-என்று கை விட்ட சம்சாரத்திலே தன்னை ஆசைப்பட்டு கூப்பிடுகிற இது அவனுக்கு ஆகர்ஷகமாய் இருக்கையாலே
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.
அழுவன் தொழுவன் -என்ற இவருடைய பாவ விருத்தியோடே கற்க வல்லார்கள் -மானேய் நோக்கியர்க்கு காமுகரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யராவார் -த்ருஷ்டாந்தம் அல்லாத போது -அற்ப சாரங்கள் -தூராக் குழி தூர்த்து -என்று முன்பு சொன்னதுக்கும் -பல நீ காட்டிப் படுப்பாயோ -கிறி செய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ -என்று மேல் சொல்லப்படுகிற இவர் படிக்கும் சேராது -த்ருஷ்டாந்தமாக சொல்லாது ஒழிந்தது ஸர்வதா சத்ருசம் ஆகையாலே


கந்தாடை      அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: