திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -5-2–

ஒன்றும் தேவில்-தாம் பகவத் பரத்வத்தை உபபாதிக்கக் கேட்க்கையாலே லோகத்தில் சேதனர்க்கு பிறந்த வைஷ்ண ஸ்ரீ யைக் கண்டு
அவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணி சாத்விகராய் இருப்பார் எல்லாம் விஸ்திருதராயும் ராஜசராயும் தாமஸராயும் உள்ளார் எல்லாரும்
சங்குசிதராயும்-உத்தம தர்மங்கள் எல்லாம் ப்ரவ்ருத்தமாயும் இப்படி க்ருத யுக சமாயிற்று என்றும்
-கால தர்மாதி காரதிகளுடைய யுத்தமத்வம் பகவத் ஸ்பர்சத்தாலே என்றும் -பகவத் ஸ்பர்ச ஹீனமாகில் இவை எல்லாம் ஹேயம் என்றும் உபபாதித்து
-தம் வாயாலே பகவத் பரத்வத்தைக் கேட்டு அதில் துணிய மாட்டாதாரை துணிவித்து முடிக்கிறார் –
ஒன்றும் தேவு கேட்டுத் திரு நாட்டில் நின்றும் திருவாய்மொழி அனுபவிக்க வந்த நித்ய ஸூரிகளைக் கண்டு
ஹ்ருஷ்டராய் மங்களா சாசனம் பண்ணுகிறார் என்றும் சொல்லுவர்-

——————————————————————–

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியைக் கண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் –

பொலிக பொலிக  பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

ஆத்மாக்களை மிகவும் நலிய கடவ பாபம் போயிற்று -கர்ம அநு குணமாக நலியக் கடவ நரகம் கோப்புக் குலைந்தன -சம்சாரத்தில் யமனுக்கு ஒரு சாத்தியம் இல்லாத படி யாயிற்று -கலி யுகம் தான் முதலிலே வசிக்கும் -இத்தைக் கண்டு கொள்ளுங்கோள்-எம்பெருமானுடைய அழகுக்கும் குணங்களுக்கும் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இஜ் ஜகத்து எல்லாம் நிறையும் படி வந்து புகுந்து ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே எம்பெருமானுடைய குண சேஷ்டிதாதிகளைப் பாடி சஞ்சரிக்கக் கண்டோம் -இஸ் சம்பத்து மேன்மேலும் சம்ருத்தமாக வேணும் –

———————————————————————

ஸ்ரீ வைஷ்ண ஸம்ருத்தியைக் கண்ட ஆழ்வார் அநு கூலர் எல்லாரும் வாருங்கோள் -இஸ் ஸம்ருத்தியை அனுபவிக்க என்கிறார் –

கண்டோம்  கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

கண்ணுக்கு இனியன கண்டோம்-
கொடு யுலகம் கண்டு முன்பட்ட நோய் எல்லாம் தீரக் கண்ணுக்கு இனிய ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டோம்
தொண்டீர் -சாபலம் உடையீர்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே-
ஸ்ரீ யபதியினுடைய யோக்யதையிலே ஈடு பட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பகவத் கதைக்கு அடைவு இல்லாத சம்சாரத்தில் பகவத் குண அனுசந்தான பலாத்காரத்தாலே பண்களை பாடிக் கொண்டு எங்கும் பரந்து திரியா நின்றார்கள் –

————————————————————–

அயர்வறும் அமரர்களும் புகுந்து பரிமாறலாம் படி சம்சாரம் அடைய வைஷ்ணவர்கள் யாயிற்று -என்கிறார் –

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

சகல பதார்த்தங்களும் ஸ்வ ஸ்வபாவத்தை விட்டு அந்யதாவாக கடவதான கலியுகம் நீங்குவதும் செய்து வி லக்ஷணரான அயர்வறும் அமரர்களும் வந்து புகுந்து கேவல வைஷ்ணவ தர்மமே நடையாடக் கடவதாய் யுகாந்தர வியவதானம் இன்றிக்கே இருக்கும் கிருதயுகம் வந்து பிரவேசித்து பகவத் அனுபவத்தால் நிரதிசய ஆனந்தம் பெருகும் படி –
காள மேக நியமமான வடிவு அழகால் என்னை தோற்பித்து அடிமை கொண்ட கடல் வண்ணன் அழகிலே என்னைப் போலே தோற்று அடிமையான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூமி எல்லாம் ஆரவாரப் படும்படி புகுந்து இசை பாடி எங்கும் தங்களுக்கு ஸ்தானமாகக் கொண்டார்கள்-

——————————————————————-

அவிஸால்யமான பாஹ்ய சமயங்கள் எல்லாவற்றையும் வேரோடு பறிப்பாரை போலே எங்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் யாய் பகவத் குண அனுபவ ஜெனித  ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே பாடியும் ஆடியும் களித்து திரியா நின்றார்கள் என்கிறார் –

இடங்கொள்  சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினை மஹா குணத்தை யுடையவனுக்கே அற்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் யாய் -நாடகம் -மநோ ஹாரி சேஷ்டிதம் –

——————————————————————–

ஸ்ரீ வைஷ்ணவர்கள் அஸூர ராக்ஷஸரான உங்களை முடித்து யுகத்தையும் பேர்ப்பார்கள் என்கிறார் –

செய்கின்ற  தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

செய்கிறபடி பார்த்தோமுக்கு இங்கனே யாம் போலே இரா நின்றது –
என் என்னில் இவ்வுலகத்தில் எங்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களே யாய் தங்களுடைய இச்சா அநு குணமாக எங்கும் விடாதே வர்த்தித்து
ஒரு சம்சயமும் இல்லை –
ராக்ஷஸரும் அஸூரருமாய் பிறந்து வர்த்திக்கிறீர் உள்ளீர் ஆகில் ஹேயரான நீங்கள் பிழைக்கைக்கு உபாயம் இல்லை -ஸ்ரீ வைஷ்ணவர்கள் மன்னுகையாலே யுகம் தானே உங்களை முடித்து போரும் என்றுமாம் –

——————————————————————

சர்வாத்மாக்கள் உடைய சகல துக்கங்களையும் போக்குகைக்காக-ஸ்ரீ வைஷ்ணவர்களே லோகம்  எங்கும் பாடி யாடிப் பரந்தார்-நீங்களும் இதர தேவதா பரத்வ சங்கையை தவிர்ந்து அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் -என்கிறார்

கொன்று  உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்-நின்று
கொன்று பிராண ஹானி பண்ணக் கடவதான வியாதி தொடக்கமானவை நின்று –
கடிவான்-கடிகைக்காக
நேமிப்பிரான் தமர் போந்தார்-சஞ்சரிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள்
துள்ளி ஆடுகை-சசம்ப்ரம்மமாக ஆடுகை-

—————————————————————–

உங்கள் தேவதைகள் உங்களை ரக்ஷிப்பது அவன் பிரசாதத்தாலே -யானபின்பு அவர்களை -அவனுக்கு சேஷ பூதர் என்று புத்தி பண்ணி -தத் சமாராதன புத்தயா அவர்களை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

உங்கள் ஹ்ருதயங்களில் நீங்கள் நிறுத்திக் கொள்கிற தேவதைகள் உங்களை ரஷிக்கும் போது தாங்களாக ரஷிக்க ஷமர் அல்லாமல் மீளவும் அவன் பிரசாதம் கொண்டு ரக்ஷிப்பது -இவ்வர்த்தத்துக்கு ஸ்ரீ மார்க்கண்டேய பகவான் சாக்ஷி –சமசயிக்க வேண்டா
இந்திராதி தேவதைகளை சரீரமாகக் கொண்டு அவர்களுக்கு அந்தராத்மதயா நின்றான் சர்வேஸ்வரன் என்று புத்தி பண்ணி அத்தேவதா முகமாக பண்ணும் நித்ய நைமித்திக கர்மங்களை தத் சமாராதன புத்தயா பண்ணுங்கோள்-

————————————————————————

தேவதாந்த்ரங்களை ஆஸ்ரயித்து அபேக்ஷிதங்களை பெற்றார் இல்லையோ என்னில்-அந்த தேவதைகள் ஆஸ்ரித அபேக்ஷிதங்கள் கொடுக்க வல்லவாம் படி பண்ணினான் எம்பெருமானே -அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

இறுக்கும்  இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

பின்ன ருசிகளான அதிகாரிகள் ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசித கர்மங்களாலே சமாராதித்து-ஸ்வ அபிலஷிதங்களைப் பெற்று அனுபவிக்கும் படி ஸ்வ சரீர பூதமான தேவதைகளை சர்வேஸ்வரன் தானே சமாராத்யர் ஆகவும் ஆராதகர்க்கும் அபிமத பலங்களை கொடுக்க வல்லராம்படியும் பண்ணினான் –
அவன் அழகுக்குத் தோற்று அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இகழாதே மிகவும் ஹிருஷ்டராய் கொண்டு பூமியிலே திரண்டார்கள் -அவர்களை போலே நீங்களும் எம்பெருமானை அநந்ய ப்ரயோஜனராய் ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்-

—————————————————————

பகவத் பரிசர்யை ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்களும் -அதுக்கு ஷமர்  அன்றிக்கே-தத் குண ஏக  தாரகரான  ஸ்ரீ வைஷ்ணவர்களுமே யாயிற்று இந்த லோகம் -நீங்களும் அவர்களை போலே அநந்ய பிரயோஜனராய் எம்பெருமானுக்கு அடிமை செய்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்

மேவித்  தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

வேதத்தில் பகவத் ப்ரதிபாதகமான ஸ்ரீ புருஷ ஸூ க்தாதிகளில் ருக்குகளை சொல்லிக் கொண்டு -ஆஸ்ரிதரை ஒரு நாளும் விடாதே ஸ்வ பாவனானவனை -வேதாந்தங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே
பூவில் புகை -பூவோடு கூடின புகை -/ மலிவு -மிகுதி -/மேவித் தொழுகை -அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயிக்கை –

—————————————————————–

நீங்கள் ஆராதிக்கிற தேவதைகளும் எம்பெருமானை ஸமாச்ரயித்து தம்தாமுடைய பதங்களை பெற்றது -நீங்களும் அவர்களை போலே எம்பெருமானை ஆஸ்ரயித்து பிழையுங்கோள் என்கிறார்-

மிக்க  உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

ப்ரஹ்ம ருத்ராதி தேவதா கணங்கள் வி லக்ஷணமான திருமேனியை யுடைய கிருஷ்ணனை ஆஸ்ரயித்து சம்ருத்தமான லோகங்கள் தோறும் தங்கள் ஐஸ்வர்யங்களால் விஸ்திருதமாயின-
அவர்களை போலே நீங்களும் அவனை ஆஸ்ரயிக்க வல்லி கோள் ஆகில் கலி யுக ப்ரயுக்தமான சகல தோஷங்களும் நீங்கும் –

————————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றார்க்கு-தேவதாந்த்ரங்களில் யுண்டான பரத்வ ஞானமும் -எம்பெருமான் பக்கல் உண்டான ப்ரயோஜனாந்தர பரத்வம் ஆகிற மானஸ தோஷமும் போம் என்கிறார் –

கலியுகம்  ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

தன்னுடையார்க்கு கலியுக தோஷம் ஒன்றும் தட்டாத படி அருள் செய்யும் ஸ்வ பாவனாய் -மிகவும் வி லக்ஷண தேஜோ ரூபமான திருவடிவை உடையனாய் -அத்யாச்சர்ய குண சேஷ்டித்தனான கிருஷ்ணனை
கலி வயல் -சம்ருத்தமான வயல் / ஒலி புகழ் -வ்யக்தமாக பகவத் குண ப்ரதிபாதகமாகை-

———————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: