திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-2–

ஒன்றும் தேவில் -பரத்வ உபதேசத்தால் திருந்தினவர்களுடைய வைஷ்ண ஸ்ரீ -நித்ய ஸூ ரிகளும் -இங்கே வந்து கண்டு அனுபவிக்கும் படி
இருக்கையாலே -இஸ் சமுதாயத்தை கண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்று எம்பெருமான் அருளிச் செய்வார் –
ஆழ்வாருடைய வைஷ்ணவ ஸ்ரீ யை அனுபவிப்பைக்கு நித்ய ஸூ ரிகளும் இங்கே வர அவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்று
நித்ய ஸூ ரிகள் பக்கலிலே ப்ராதான்யம் தோற்ற அருளிச் செய்வார் ஆளவந்தார் —
இவருடைய பரத்வ உபதேசத்தால் -சத்வாத்ஸ்சஞ்சாயத்தே ஞானம் -என்று சாத்விகர் விஸ்திருதராயும் ராஜசரும் தாமஸரும் அஞ்ஞானத்தாலும்
அநவதா நத்தாலும்-சங்குசித ராயும் -சாத்விக பரிக்ரஹத்தாலே வைஷ்ணவ தர்மம் அபிவ்ருத்தமாயும் -இதர தர்மங்கள் அபிபூதமாயும் –
இப்படி க்ருத யுக சமம் யாயிற்று என்றும் -தேச கால தர்மாதிகாரிகள் -ஸர்வேஷாம் கில தர்மாணா முத்தமோ வைஷ்ணவோ விதி -என்கிறபடியே
பகவத் ஸ்பர்சத்தாலே நன்றாய் -அல்லாத போது ஹீனம் என்றும் சொல்லி தம்முடைய உபதேசத்தால் திருத்த யோக்யதை யுடையராய் திருத்தி
ஒரு படி யாலும் திருந்தாரை உபேக்ஷித்து முடிக்கிறார் –த்வாம் து திக் குல பாம்சனம் -என்னும் அளவு கண்டு மீள வேணும் இ றே திருந்தார்க்கு
-வீற்று இருந்து ஏழு உலகில் -எம்பெருமானுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார் –இதில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார் –

—————————————————————-

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியைக் கண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் –

பொலிக பொலிக  பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

பொலிக பொலிக பொலிக-
சம்ருத்தம் யாயிற்று -முக்கால் அருளிச் செய்கிறது -வைதிகமான மங்களா சாசனமும் -சாந்தி சாந்தி சாந்தி -என்று முக்கால் சொல்லுகையாலே
போயிற்று வல்லுயிர்ச் சாபம்-
உயிரினுடைய வலிய பாபமானது போயிற்று –பாபம் ஆகிறது -அவித்யா கர்மா வாசனா ருசிகள் –இத்தை சாபம் என்கிறது அனுபவித்தால் அல்லது போகாமையாலும் -ஆகந்துகம் ஆகையாலும்-
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை-
கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –
சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா வி றே –
கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –
நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை
அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இ றே -அதுவும் இல்லை இ றே இவர்களுக்கு –
கலியுங் கெடும் கண்டு கொண்மின் –
அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ –இவை அடங்க போகைக்கு அடி என் என்ன –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்-
பாகவத சஞ்சாரம் இல்லாமையினாலே கால தோஷம் உண்டாகிறது –அவர்கள் சஞ்சாரம் உண்டாகையாலே கலி துர்லபம் யாயிற்று
பூதங்கள் என்கிறது –பூ சத்தாயாம்-என்று தாது வாகையாலே அவன் சத்தத்தையே சத்தையாய் அறுகையாலே-அவன் வடிவு அழகை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
மண் மேல் – அழகுக்கு தோற்று இருப்பார் – உள்ளது பரம பதத்திலேயாய் இருக்க -அதுக்கு சம்பாவனை இல்லாத பூமியிலே -அவர்களுக்கு அளவு என் என்னில் –
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–
அடியார் குழாங்கள் என்னும் படி நெருங்கப் புகுந்து –ஏதத் சாம காயன் நாஸ்தே -என்னும் படியே பாடி இருந்த இடத்தில் இருக்க மாட்டாதே ஆடி –
உழி தரக் கண்டோம்.–-சஞ்சரிக்கக் கண்டோம் -போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த -நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை -கலியும் கெடும் -கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக –

———————————————————————-

ஸ்ரீ வைஷ்ண ஸம்ருத்தியைக் கண்ட ஆழ்வார் அநு கூலர் எல்லாரும் வாருங்கோள் -இஸ் ஸம்ருத்தியை அனுபவிக்க என்கிறார் –

கண்டோம்  கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

கண்டோம் கண்டோம் கண்டோம் –
காணப் பெற்றோம் -ப்ரீதி ப்ரகாஷத்தாலே ஆவர்த்திக்கிறார்
கண்ணுக்கு இனியன கண்டோம்–
கண்ணிலும் உருப்பொலார்-கொடு உலகம் காட்டேல்-என்கிற சம்சாரத்திலே பாகவதர்களைக் கண்டு அனுபவிக்கப் பெற்றோம் –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு -புல கீக்ருத காத்ரவான் சதாபர குணா விஷ்டோ த்ரஷ்டவ்யஸ் சர்வ தேஹிபி
தொண்டீர் எல்லீரும் வாரீர்-
பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள் -திரண்டு செய்யப் புகுகிறது என் என்ன
தொழுது தொழுது நின்று ஆர்த்தும்-
மங்களா சாசனம் பண்ண வாருங்கோள் -வீப்சையாலே-அது தானே பிரயோஜனமாய் இருக்கை
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள்-
தோள் மாலை அழகையும் -பிராட்டியோட்டைச் சேர்த்தி அழகையும் -தாரகமாய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
வண்டுகள் படுகிற திருத் துழாய்
மண் மேல்-பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் -என்னும் தேசம் ஒழிய-இதுக்கு வ்ருத்தமான சம்சாரத்தில்
பகவத் அனுபவத்தால் வந்த ப்ரீதி யாலே பரப்ரேரிதராய் அன்றிக்கே தானே பண்களை பாடி யாடி
ஸூ தூர மபி கந்தவ்யம் -என்று இருந்த இடத்தே சென்று அனுபவிக்குமவர்களை நாம் இருந்த இடத்தே அனுபவிக்கப் பெற்றோம் -கண்டோம் கண்டோம் கண்டோம் –

——————————————————-

அயர்வறும் அமரர்களும் புகுந்து பரிமாறலாம் படி சம்சாரம் அடைய வைஷ்ணவர்கள் யாயிற்று -என்கிறார் –

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

திரியும் கலியுகம் நீங்கித்-
பவிஷ்யத் யத்ரோத்தரம் என்கிறபடியே -பதார்த்தங்களினுடைய ஸ்வ பாவம் மாராடி இருக்கும் கலி ஸ்வ பாவம் போய் -ஷூ த்ர தேவதைகள் பரராகவும் பர தேவதை அபரனாகவும் கடவதாய் இ றே இக்காலம் இருப்பது –
தேவர்கள் தாமும் புகுந்து-
தேவர்கள் என்கிறது -ஆக்கரான இந்த்ராதிகளை யன்று -இவர்களுடைய லோகத்தை கண்டால் சங்கை பண்ணும் நித்ய ஸூ ரிகளும் புகுந்தார்கள்
வா ஸூ தேவ மநோ யஸ்ய தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ராத் த்வாதிகம் பலம் –என்ன கடவது இ றே
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்-
யுகாந்தர வியவதானம் இன்றிக்கே ஒரு போகியான க்ருத யுகம் பிரவேசித்து -கேவலம் வைஷ்ணவ தர்மமே நடையாடக் கடவ காலமாகை-
பண்டே பெரிதான ஆனந்த சமுத்திரம் -அதுக்கு மேலே பெருகும் படி -அநந்த கிலேச பாஜனமான தேசத்திலே அந்தமில் பேரின்பம் உண்டாம் படி யாயிற்று
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள்-
காள மேக நிபஸ்யாமளமான வடிவு அழகால் என்னை அடிமை கொண்டாப் போலே -அவ் வடிவு அழகிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
மண் மேல்-இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.
பரமபதத்தில் போலே பூமி எல்லாம் ஆரவாரப் படும்படி புகுந்து பகவத் அனுபவ ஜெனித ப்ரீதியாலே பாடி -எங்கும் தங்களுக்கு ஸ்தானமாகக் கொண்டார்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு இடம் இல்லாத படி சிஷ்யர்களும் ப்ரசிஷ்யர்களுமாய் வ்யாபித்தார்கள் –பிராகாரம் வாநரீக்ருதம்-என்கிறபடியே பிரதி கூலர்க்கு இடம் இல்லை யாயிற்று –

———————————————————————-

அவிஸால்யமான பாஹ்ய சமயங்கள் எல்லாவற்றையும் வேரோடு பறிப்பாரை போலே எங்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் யாய் பகவத் குண அனுபவ ஜெனித  ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே பாடியும் ஆடியும் களித்து திரியா நின்றார்கள் என்கிறார் –

இடங்கொள்  சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே-
பயிர் தேயும் படி களை வளருமா போலே சாத்விகர்க்கு அவகாசம் இல்லாத படி எங்கும் வியாபிக்கும் பாஹ்ய சமயங்களை எல்லாம் பறித்து பொகட்டுமா போலே -போலே என்கிறது இது தான் ஸ்வயம் உத்தேச்யம் அன்றிக்கே பகவத் அனுபவத்தோடு ஸ் வைர சஞ்சாரம் பண்ண தானே நசித்து போம் அத்தனை –அல்லது பகவத் விபூதிக்கு மங்களா சாசனம் பண்ணுகிறவர்கள் அத்தை அளிக்காத தேடுகிறார்கள் அன்றே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்-
ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினை மஹா குணத்துக்கே அற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களே யாய் -பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று இருக்குமவர்கள் –
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி-
ஒரோ பிரதேசங்களில் கிடந்தும் -ஒரோ பிரதேசங்களில் இருந்தும் -ஒரோ இடங்களிலே நின்றும் -பகவத் அனுபவ ஜெனித ஹர்ஷ த்தாலே-பல பாட்டுக்களை பாடியும் மநோ ஹாரியாம் படி உலாவியும் -கால் தரையில் பரவாத படி சாசம்ப்ரம ந்ருத்தம் பண்ணியும் – நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.
இவர்கள் வியாபாரம் இவருக்கு வல்லார் ஆடினால் போலே இருக்கிறது -எம்பெருமானார் உடைய ஸ்திதி சயன கமந நாதிகளை-நாம் கொண்டாடும்படி போலேயும்-ஆளவந்தார் நடையை ராஜா கொண்டாடினால் போலேயும் -இவர் கொண்டாடுகிற படி-

———————————————————

ஸ்ரீ வைஷ்ணவர்கள் அஸூர ராக்ஷஸரான உங்களை முடித்து யுகத்தையும் பேர்ப்பார்கள் என்கிறார் –

செய்கின்ற  தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து-
செய்கின்றது -செய்கிறபடி -என் கண்ணுக்கு ஓன்று செய்கிறாப் போலே இரா நின்றது -அது ஏது என்னில் –
திவ்வுலகத்து–பகவத் குணத்துக்கு மேட்டு மடையான தேசத்திலே
வைகுந்தன் பூதங்களே யாய் –
மாக வைகுந்தம் காண்பதற்கு -என்றும் கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் -என்று ஆசைப்படும் ஸ்ரீ வைஷ்ணவர்களாய்
மாயத்தினால் எங்கும் மன்னி-
மாயா வ்யுனம் ஞானம் -என்கிறபடியே இச்சையால் -எங்கும் வர்த்தித்து –
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்-
சம்சயம் ஒன்றும் இல்லை -அஸூர ராக்ஷஸரான நீங்கள் மனுஷ்ய வேஷத்தை கொண்டு பிறந்து கலந்து திரிகிறீர் உள்ளீர் ஆகில் -சுக சாரணர்களை போலே கடல் கரையில் ஒற்றுப் பார்க்க வந்தவர் குரங்கு வடிவைக் கொண்டு –
உய்யும் வகை இல்லை தொண்டீர் –
உஜ்ஜீவிக்கும் விரகு இல்லை -பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் சக்தரான நீங்கள் –
ஊழி பெயர்த்திடும் கொன்றே.-
வைகுந்தன் பூதங்கள் உங்களைக் கொன்று கல்பத்தையும் போக்கும் -ஊழி -தானே உங்களை கொன்று தானும் பேரும் என்னுதல் -ஸ்ரீ வைஷ்ணவ சஹவாசம் கால தோஷத்தையும் போக்கி விரோதிகளை நசிப்பிக்கும் என்கை
அரக்கர் அசுரர் –தொண்டீர் -பிறந்தீர் உள்ளீரேல்-உய்யும் வகை இல்லை -வைகுந்தன் பூதங்கள் கொன்று ஊழி பெயர்த்திடும் -ஐயம் ஓன்று இல்லை –

————————————————————————

சர்வாத்மாக்கள் உடைய சகல துக்கங்களையும் போக்குகைக்காக-ஸ்ரீ வைஷ்ணவர்களே லோகம்  எங்கும் பாடி யாடிப் பரந்தார்-நீங்களும் இதர தேவதா பரத்வ சங்கையை தவிர்ந்து அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் -என்கிறார்

கொன்று  உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்-நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
கையும் திரு வாழி யுமான அழகிலே ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
கடிவான் போந்தார் ஆனவர்கள் –அதுக்காக லோகத்தில் பூமியிலே பரந்தார்கள்-
யத்ர அஷ்டாக்ஷர சமசித்தோ மஹா பாகோ மஹீயதே –இத்யாதி
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்-
பகவத் அனுபவ ஜெனித ஹர்ஷத்தாலே நன்றான இசையை பாடியும் –
துள்ளி ஆடுகை-சசம்ப்ரம்மமாக ஆடுகை
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–
சென்று அவர்களைத் தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்று பணிக்கும் திருமாலை ஆண்டான் –
அவர்களோடே சென்று சர்வேஸ்வரனைத் தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்று அருளிச் செய்வார் எம்பெருமானார் –
தொண்டீர்!-
தேவதாந்த்ரங்களில் பரத்வ சங்கை பண்ணி அவ்வோ இடங்களிலே தொண்டு பட்டு இருந்தவர்கள் –திருத்துகைக்கு யோக்யதை யுண்டானவர்கள் –
அஜ்ஜஞஸ் சாச்ரத்ததா நச்ச சம்சயாத்மா வி நஸ்யதி நாயம் லோகோ அஸ்தி நபரோ ந ஸூ கம் சம்சய யாத்மன –
தேவ தாந்த்ரங்களிலும் ப்ரயோஜனாந்தரங்களிலும் போன நெஞ்சை வகுத்த விஷயத்தில் அநந்ய பிரயோஜனம் ஆக்கி -யத் அஷ்டாக்ஷர சம்சித்த -என்ன கடவது இ றே-

————————————————————–

நாங்கள் நெடு நாள் ஆஸ்ரயித்தவர்களை பலம் கிட்டுவதற்கு முன்பே விடவோ என்னில் -அவர்கள் பலம் தருவதுவும் அவனைக் கொண்டு யாயிற்று -ஆனபின்பு அவனுக்கு சரீரபூதர் என்று புத்தி பண்ணி பகவத் ஸமாச்ரயண புத்தயா ஆஸ்ரயிங்கோள் என்கிறார்

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்
உங்கள் நெஞ்சிலே நீங்கள் நிறுத்திக் கொள்ளுகிற தேவதைகள் –த்யேய வஸ்துக்களை நிறுத்துகையும் த்யாதாவுக்கே பரம் என்கை -அங்குஷ்ட மாத்ர புருஷோமத்ய ஆத்மனி திஷ்ட்ட்தி-என்கிறவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கிறது அன்றே -யுக்த்யா ஆபாசங்களாலும் வசன ஆபாசங்களாலும் பொரி புறம் தடவி நிறுத்துகை –
உம்மை உய்யக்கொள்-
உங்களை உய்யக் கொள்ளும் இடத்தில் -ரஷிக்கும் போது தாங்கள் அக்ஷமர் ஆகையால் -பேணிலும் வரம் தர மிடிக்கில்லாத தேவரை -திருவில்லாத் தேவரை –
மறுத்தும் அவனொடே கண்டீர் –
மீண்டும் அவனோடே சேர்த்து -அவன் பிரசாதத்தாலே கிடீர் -நீங்கள் அவர்களை ஆஸ்ரயித்ததாலும் பலம் தருவான் அவனே –
பலமத-நஹி பாலன சாமர்த்த்யம் ருதே ஸர்வேச்வரீம் ஹரீம் –
இவர்களை ஆஸ்ரயிக்க வேறே ஒருவன் பலம் தருமது எங்கே கண்டோம் என்னில்
மார்க்கண்டேயனும் கரியே-
ஸ்ரீ மார்க்கண்டேய பகவான் சாக்ஷி
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா-
இதர தேவதைகள் பக்கல் பரத்வ புத்தி யாகிற தண்ணிய நெஞ்சு ஒன்றும் உங்களுக்கு வேண்டா -அஜ்ஜஞஸ் சாஸ்திரச்சா நச்சா சம்சயாத்மா
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-
சர்வ தேவா தேவகீபுத்ர ஏவ -என்கிறபடியே கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை –
அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை அல்லாத தேவதைகள் -யோயோ யாம் யாம் தனும் பக்த –
இறுப்பதெல்லாம் –
தேவதா ஆராதனம் -என்று தோற்றுகிற நித்ய நைமித்திக கர்மம் எல்லாம்
அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–-
இவர்கள் அவனுக்கு சரீர பூதர் ஆனவர்கள் -அந்தராத்மா சர்வேஸ்வரன் -என்று புத்தி பண்ணி தத் சமாராதன புத்தயா பண்ணுங்கோள் -தன் திருவடிகளை பிடித்தார்க்கு தானே பலம் கொடுக்கக் கடவனாய் இருக்கும் இ றே அவன் –

———————————————————————-

தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து அபேக்ஷிதங்களை பெற்றார் இல்லையோ என்ன -ரஜஸ் தமஸ் பிரசுரராய் இருக்குமவர்களுக்கு ஆஸ்ரயணீயர் ஆகவும் அபேக்ஷித பிரதராகவும் தேவதைகளை பண்ணினான் சர்வேஸ்வரனே-ஆனபின்பு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

இறுக்கும்  இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

இறுக்கும் இறை இறுத்து உண்ண-
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசித கர்மங்களாலே சமாராதித்து ஸ்வ அபிலஷிதங்களை பெற்று உஜ்ஜீவிக்க
எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக –
பின்ன ருசிகளான -அதிகாரிகளை யுடைத்தான சர்வ லோகங்களுக்கும் -தன் சரீர பூதரான தேவதைகளை சமாராத்யராக நிறுத்தினான் –ஈஸ்வரோஹம் என்று இருப்பார் தலை வணங்குகைக்காக நிறுத்தினான் –
அத் தெய்வ நாயகன் தானே-
ஆஸ்ரயிப்பார்களோடு ஆஸ்ரயணீயரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகன் அவன் தானே -சேதனருடைய குண அனுரூபமாக ஆராத்யராகவும் அபிமத பலப்ரதராம் படியும் பண்ணினான் –
மறுத் திரு மார்வன் –
மறுவையும் திருவையும் மார்விலே உடையவன் என்னுதல்-ஸ்ரீ வத்ஸத்தை திரு மார்பிலே உடையவன் என்னுதல்
அவன் தன் பூதங்கள்-
அசாதாரணமான விக்ரஹத்தின் அழகிலே தோற்று தங்கள் உளராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
கீதங்கள் பாடி-வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.
பகவத் அனுபவ ஹர்ஷ த்தாலே பாடி -சம்சாரத்திலே இருந்தோம் என்ற வெறுப்பு இன்றிக்கே-பூமியிலே திரண்டார்கள் –
நீங்கள் அவர்களோடே கூட அநந்ய பிரயோஜனராய் தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்னுதல் -அவரை தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்னுதல்-

——————————————————————–

கைங்கர்ய நிஷ்டரும் குண நிஷ்டரும் பூமியிலே புகுந்து சம்ருத்தமாக வர்த்தியா நின்றார்கள் -நீங்களும் அவர்களோடே ஓக்க ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்

மேவித்  தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை நாவிற் கொண்டு –
அநந்ய பிரயோஜனராய் தொழுது உஜ்ஜீவியுங்கோள் -வேதத்தில் விபூதி விஷயமாக சொன்னவை அன்றிக்கே -பகவத் குணங்களையும் வடிவு அழகையும் ப்ரதிபாதியா நின்றுள்ள ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை நாக்கிலே கொண்டு –
அச்சுதன் தன்னை –
அஹ்ருதயமாக சொன்னதை ஹ்ருதயமாக நினைத்து -நத்யஜேயம் -என்னுமவன் -அகவாய் பாராதே யுக்தி மாத்ரத்தைக் கொண்டு நழுவ விடாதவனை
ஞான விதி பிழையாமே-
வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது –
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து-
பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–
அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் –
பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று –
கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –
மேவித் தொழுது உய்ம்மின்கள்-

——————————————————————–

நீங்கள் ஆராதிக்கிற தேவதைகளும் எம்பெருமானை ஸமாச்ரயித்து தம்தாமுடைய பதங்களை பெற்றது -நீங்களும் அவர்களை போலே எம்பெருமானை ஆஸ்ரயித்து பிழையுங்கோள் என்கிறார்

மிக்க  உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி-
கிருஷ்ணன் உடைய அசாதாரண விக்ரஹத்தை பொருந்தி ஆஸ்ரயித்து
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்-தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன –
பிரான் என்று ஸ்வ கோஷ்ட்டீ பிரசித்தி தொக்க -திரண்ட / சம்ருத்தமான லோகங்கள் -மிக்க யுலகுகள் -ப்ரஹ்மா தொடக்கமாக திரண்ட தேவதா சமூகங்கள் சம்ருத்தமான லோகங்கள் தோறும் தங்களுடைய ஐஸ்வர்யத்தாலே விஸ்திருதர் ஆனார்கள் –
தொண்டீர்!-ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.-
தேவதாந்த்ர சேஷ பூதரான நீங்கள் நீங்களும் அவர்களை போலே ஆஸ்ரயிப்புதி கோள் ஆகில் கலியுக ப்ரயுக்தமான சகல தோஷங்களும் நீங்கும் –
தொக்க அமரர் குழாங்கள்–மிக்க வுலகுகள் தோறும் -எங்கும் பரந்தன-

——————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழி அப்யசித்தார்க்கு இது தானே இதர பரத்வ ஞானத்துக்கும் ப்ரயோஜனாந்தர பரதைக்கும் அடியான மானஸ தோஷத்தை போக்கும் என்கிறார்

கலியுகம்  ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்-
தன்னடியார்க்கு கலியுகம் ஒன்றும் தட்டாத படி அருள் செய்யும் -நாட்டுக்கு இட்ட நினைப்பு அன்று இ றே அந்தப்புரத்துக்கு இடுவது –
கலவ் க்ருத யுகம் தஸ்ய -அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யம்-தோஷ யத்யபி தஸ்ய ஸ்யாத்
மலியும் சுடரொளி மூர்த்தி –
மிகவும் வி லக்ஷண தேஜோ ரூபமான வடிவை யுடையவன் -அருளாதே அநாதரிக்கிலும் விட ஒண்ணாத வடிவு -அருள் செய்தது அவ்வடிவு தானே யாயிற்று –
மாயப் பிரான்கண்ணன் தன்னைக்-
அத்யாச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடைய கிருஷ்ணனை –
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்-ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து
கலி வயல் -சம்ருத்தமான வயல் /ஒலி புகழ் -பகவத் குணங்களை வ்யக்தமாக ப்ரதிபாதித்த இப்பத்து
உள்ளத்தை மாசறுக் கும்மே.–
அந்தகரண தோஷத்தை போக்கும் -அதாகிறது -தேவதாந்தரங்களில் பரத்வ சங்கை -பகவத் பரத்வத்தில் அதி சங்கை -ஸ்ரீ வைஷ்ணவ விஷயத்தில் சஜாதீய புத்தி -அபாகவத சம்ச்லேஷம் -பிரயோஜனாந்தர புத்தி -இப்படிப் பட்ட அந்தகரண தோஷங்களை அறுக்கும் –


கந்தாடை       அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: