திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-10–

சம்சாரத்தின் உடைய அசாரதையைக் கண்டு எம்பெருமானைக் கொண்டு சம்சார சம்பந்தத்தை அறுத்து சர்வரையும் உஜ்ஜீவிப்பிக்க வேணும்
என்று பார்த்து -நீ உளையா இருக்க இவை இப்படி நோவு பட விட்டிருக்கை உனக்குப் போருமோ-என்று அவனை அபேக்ஷிக்க
அவனும் -இவை அசேதனம் அன்றே -நாம் நினைத்தபடி செய்கைக்கு -சேதனர் ஆகையால் ருசி முன்னாக வேணுமே –
நாமும் உம்மோ பாதி யத்தனித்து அவர்களுக்கு அபேக்ஷை அல்லாமையாலே -காணும் கை வாங்கி இருக்கிறது -என்ன-
ஆகில் என்னை இவர்கள் நடுவில் நின்றும் கொண்டு போக வேணும் என்ன -உம்மைக் கொடு போகப் புகுகிற தேசம் இதுவன்றோ
-என்று பரமபதத்தில் அனுபவத்தைக் காட்டக் கண்டு -ஸ்வ லாபத்தாலே திருப்பித்தரானார் -நண்ணாதார் முறுவலிப்ப-வில் –
இதில் ஈஸ்வரனும் திருத்த ஒண்ணாத என்று கை விட்ட சம்சாரிகளை தம்முடைய கிருபாதிசயத்தாலே திருத்த உத்யோகித்து
அவனுடைய பரத்வ ஸுலப்யங்களை உபதேசித்து –இவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் -என்கிறார் –
நாட்டில் சேதனர் -ஸூ கீ பவேயம்-துக்கீமாபூவம்-என்று இருக்கச் செய்தே தங்கள் நினைத்த படி சித்தியாதே பரதந்த்ரராய் இருக்கிற இருப்பைக் காட்டி
இஸ் ஸூ க துக்க வ்யசத்தைக்கு உங்களை ஒழிய நியாமகராய் இருப்பார் சிலர் வேணும்
-கர்மம் ஆனாலோ என்னில் -அசேதனம் ஆகையால் வாஸ்யாதிகள் தாரு நிர்மாணத்தில் சேதன அதிஷ்டிதமாய் அல்லது
ஸ்வ காரியத்தை பிறப்பிக்க மாட்டாதா போலே சேதன அபேக்ஷை யுண்டு
அதில் ஷேத்ரஞ்ஞரில் தலை வலித்தார் ஆனாலோ என்னில் -ஸ்ருஜ்யத்வ கர்ம வஸ்யத்வங்களாலே இவன் தன்னோபாதி பரதந்த்ரராய் இருந்தார்கள்
ஆகையால் கர்மாதி பரதந்த்ரன் அன்றிக்கே ஸ்வ தந்திரனாய் இருப்பான் ஒரு நிர்வாஹகனை அங்கீ கரிக்க வேணும்
அவன் ஆர் -அவன் என்ன குணங்களை யுடையவன் -என்ன பேரை யுடையவன் என்று அறியும் இடத்தில் பிரமாணம் கொண்டு அறிய வேணும்
அதில் பிரத்யஷயாதிகள் அதீந்த்ரிய விஷயத்தில் பிரமாணமாக மாட்டாமையாலே சாஸ்திரமே பிரமாணமாக வேணும் -அதில்
பாஹ்ய ஆகமங்கள் புருஷ புத்தி ப்ரபவங்கள் ஆகையால்
விப்ர லம்பாதி தோஷ சம்பாவனையாலே பிரமாணம் ஆக மாட்டாதே-இனி -சதுர்த்தச வித்யா ஸ்தானமான வேதமே பிரமாணம் ஆக வேணும் –
அதிலும் பூர்வ பாகமானது ஸ்வர்க்க தத் ஸ்தானாதிகளுக்கு ப்ரதிபாதகம் ஆகையால் பரத்வத்தில் பிரமாணம் ஆக மாட்டாது –
சாத்விக புராண இதிஹாசங்களாலே உப ப்ரு மஹிதமாய் நியாய உபேதமான வேதாந்தம் பிரமாணம் ஆக வேணும்
அது தான் தத்வ பரமாயும் உபாசன பரமாயும் ப்ராப்திபரமாயும் உள்ள வாக்கியங்களில் வைத்துக் கொண்டு
தத்வ பரமான காரண வாக்யங்களுக்கு எல்லாம் நிர்ணயம் பலிக்கும் படி
கதி சாமான்ய நியாயத்தாலே நிரணீ தனான- ஸ்ரீ யபதியான நாராயணனுடைய ஜகத் காரண பூதனாக வேணும்
இப்படி ஜகத் கார பூதனாய் -ஜெகன் நியாந்தாவாய் -சர்வ ஆபத் சகனாய் சர்வாத்மாவாய் -ந ப்ரஹ்ம ந ஈஸா நா என்கிறபடியே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் உத்பாதகனான ஸ்ரீ யபதியே சர்வ ஸ்மாத் பரன் என்றும் பிரதிபாதித்து
இவன் அரியன் என்று கை வாங்க வேண்டாத படி திரு நகரியிலே சர்வ ஸூ லபனாய் வந்து சந்நிஹிதனான அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –
சம்சாரத்துக்கு பீஜம் -பகவத் பரத்வ ஞானம் இல்லாமையும் ஸ்வ ஸ்வாதந்தர்ய ப்ரபத்தியும் யாயிற்று
அவற்றைத் தவிர்க்கைக்காக அவனுடைய பரத்வத்தை உபதேசித்து அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்
பரக்க கற்றாராய் சர்வஞ்ஞராக அபிமானித்து இருக்கிறவர்களும்-சேம்புக்கு கூராச் சிற்று அரிவாள் உண்டோ -என்று
கண்டவிடம் எங்கும் புக்கு தலை சாய்த்து திரியா நிற்க எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்களில் எத்தனையேனும்
அறிவில் குறைய நின்றவர்களும் தேவதாந்தரங்களை அடுப்பிடு கல்லோ பாதி யாக மதித்து இருக்கிறது -இவ் -ஒன்றும் தேவு -உடைய வலி இ றே
த்ருணீக்ருத விரிஞ்சாதி
முதல் திருவாய்மொழி யிலே சாஸ்த்ரா சுத்தமான பகவத் பரத்வத்தை பகவத் பிரசாதத்தாலே கண்டு அனுபவித்தார்
திண்ணன் வீட்டிலே வேத உப ப்ரும்ஹணமான இதிஹாச புராண பிரக்ரியாலே பரத்வத்தை பேசினார்
அணைவது அரவணை மேல் -மோக்ஷ பிரதத்வம் சர்வேஸ்வரனது ஆகையால் மோக்ஷ ப்ரதன் என்கிற ப்ரசங்கத்தாலே பரத்வத்தை அருளிச் செய்தார்
இதில் உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்-என்று முதலிலே ப்ரஸக்தமான சுருதி சாயலாலே பரத்வத்தை உபதேசிக்கிறார் –

————————————————————–

ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் -என்ற காரண வாக்ய ப்ரக்ரியை அனுசந்தித்து கொண்டு ச்ரவ ஸ்ரஷ்டாவான சர்வேஸ்வரன் திருநகரியில் ஸூலபனாய் நிற்க -வேறே ஆஸ்ரயணீய தத்துவம் உண்டு என்று தேடித் திரிகிறிகோளே என்று ஷேபிக்கிறார்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா-
தேவ ஜாதியும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களும் மனுஷ்யாதிகளான ஆத்மாக்களும் அண்டத்துக்கு அடியான மஹதாதிகளும் ஒன்றும் இல்லாத அன்று
ஒன்றும் தேவும் என்று தேவாதி காரியங்களுக்கு காரணத்திலே லயத்தை சொல்லுகிறது என்று ஒரு தமிழன் சொன்னான் –
அன்று,
கரண களேபரங்களை இழந்து அசித் விசிஷ்டமாய்க் கிடந்த அன்று
நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
சதுர்முகனோடு கூட தேவ ஜாதியையும் லோகங்களையும் மனுஷ்யாதியாத்மாக்களையும் உண்டாக்கினான் –
இவை அழிந்தது என்கிற இடத்தில் மஹதாதிகளையும் சொன்னார் –ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மா தொடக்கமாக சொன்னார் இதுக்கு கருத்து என் என்னில்-மஹதாதிகளிலே பரத்வ சங்கை பண்ணுவார் இல்லாமையால் பரத்வ சங்கை பண்ணுகிற இடமே பிடித்துச் சொல்லுகிறார் -அவர்கள் பக்கல் பரத்வத்தை கழிக்கைக்காக-
சதுர்தச புவன சிரேஷ்டாவோடு -அவனாலே ஸ்ருஷ்டராய் நித்ய ஸ்ருஷ்டிக்கு கடவரான தச பிரஜாபதிகளோடு அவர்களுக்கு போக ஸ்தானமான லோகங்களோடு -அவர்களுக்கு குடி மக்களான மனுஷ்யாதிகளோடு வாசி அற படைத்தான்
போக மோக்ஷங்களை விளைத்து கொள்ளுகைக்காக கரணங்களைக் கொடுத்தான் –
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
ஸ்ருஷ்டரான சேதனர்க்கு ஆச்ரயண ருசி பிறந்த அன்று நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று திரு நகரியிலே நின்று அருளின ஸுலப்யத்தை சொல்லுகிறது –
குன்றம் போல் -மலைகளை கொடு வந்து சேர வைத்தால் போலே
மணி மாடம் -மணி மயமான மாடம்
நீடு -மாடங்களினுடைய ஒக்கம் இருக்கிற படி -ஆசிரயணீயன் தன்னோபாதி ஆகர்ஷகமான தேசம் என்கை
நின்ற –
ஆசயா யதிவா ராம -புனஸ் சப்தா பயேதி தி -என்றால் போலே நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு –
ந நமேயம் என்னாதே வணங்குதல் விலக்காது ஒழி தல் செய்வார்களோ -என்று அவசர பிரதீஷனாய் நின்ற படி
ஆதிப் பிரான் நிற்க,
புத்ரன் விமுகன் ஆனாலும் முகம் பார்க்குமோ என்ற பெற்ற மாதா நசை பண்ணி நிற்குமா போலே தன்னை உண்டாக்கின உபகாரகன் சந்நிஹிதனாக நிற்க –
மற்றைத் தெய்வம் நாடுதிரே-
லோகம் அடங்க கும்பிடுவாரும் கும்பீடு கொள்வாருமாய் ஆழி மூழையாய் செல்லா நிற்க -இவர் ஒருத்தரையும் காண் கிறிலர் யாயிற்று
அப்ரஹ்மாத்மகமாய் இருபத்தொரு வஸ்து இல்லாமையால்
நாடுதிரே –
தேடித் திரியும் அத்தனை ஒழிய ஆஸ்ரயணீயரைக் கிடையாது
ப்ராப்தனாய் ஸூ லபனாய் ஸ்வாராதனான இவனை விட்டு -அப்ராப்தமாய் துர்லபராய் துராதரராய் ஆராதித்தாலும் பலிப்பது ஓன்று இன்றிக்கே இருக்கிறவர்களை தேடித் திரிகிறிகோளே -என்று ஷேபிக்கிறார்-

—————————————————————

ஆஸ்ரயிக்கிற உங்களோடு ஆஸ்ரயணீயரான அவர்களோடு வாசி அற எல்லாரையும் உண்டாக்கினவன் நின்று அருளுகையாலே ப்ராப்யமான திரு நகரியை ஆஸ்ரயிங்கோள் என்கிறார்

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

நாடி –
ஸ்வத உதகர்ஷம் இன்றிக்கே இருக்க வசன ஆபாசங்களாலும் யுக்த ஆபாசங்களாலும் பொரி புறம் தடவி மேலாக உபபாதித்து -ஆஸ்ரயிக்கிறவர்கள் தங்கள் உத்கர்ஷம் தேடித் கொடுக்க வேண்டும்படி இ றே இருப்பது
நீர்
ராஷசராயும் தாமஸராயும் உள்ள நீங்கள் –
வணங்கும் தெய்வமும் உம்மையும் –
முற்பட அவர்களை ஸ்ருஷ்டித்து பின்பு உங்களை ஸ்ருஷ்ட்டித்தான்
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –அவன் ஸ்ருஷ்டித்திலன் ஆகில் நீங்கள் எங்கனே ஆஸ்ரயிக்கும் படி
நீர் என்று தம்மோடு தொற்று அற சொல்லுகிறார்
முன் படைத்தான்-பிரதமத்தில் ஸ்ருஷ்ட்டித்தான்
வீடில் சீர்ப்-ஸ்வத்தஸ் ஸித்தமான சம்பத்து -நீங்கள் ஆஸ்ரயிக்கிறவர்கள் உடைய ஐஸ்வர்யம் கர்மம் அடியாக வந்ததாகையாலே அஸ்திரம் –
நித்ய சித்த கல்யாண குணங்களை உடையவன் என்றுமாம் –
புகழ்
எல்லாரையும் ரக்ஷித்ததாலே வந்த புகழை உடையவன் -ரக்ஷகனாய் புகழ் படைத்தவன் அன்றோ ஆஸ்ரயணீயன் ஆவான் -யசஸ் சைகை பாஜநம் –
ஆதிப்பிரான்
ரஷியாதே பழி படைத்தாலும் விட ஒண்ணாத ப்ராப்தியை சொல்லுகிறது -காரணந்து த்யேய-என்கிறபடியே காரண வஸ்து வி றே உபாஸ்யம்
அவன் மேவி உறை கோயில்,
இவற்றை உண்டாக்கினவன் ஆஸ்ரயண அர்த்தமாக பொருந்தி வர்த்திக்கிற தேசம்
பரமபதத்தில் கரம்பு அறுக்க வேண்டாமையாலே சந்நிதி மாத்திரமே அமையும்
ரக்ஷக அபேக்ஷை உள்ளத்து இங்கேயேயாகையாலே-பொருந்தி வார்த்தைக்கும் தேசம் என்கை –
நல்ல படுக்கையும் போக்யங்களும் உண்டாய் இருக்க தொட்டில் கால் கிடை அல்லது பொருந்தாத தாய் போலே –
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூர்
மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழ்ந்து தர்ச நீயமான திரு நகரி -ப்ராப்ய பூமி என்று தோன்றும் படியாயிற்று இருப்பது
அதனைப்-பாடி ஆடிப் -பரவச் சென்மின்கள்,
நின்ற ஆதிப்பிரான் என்றது மிகையாய் இருக்கை-விஷ்ணோ ராயத நேவ சேத்-தேசோயம் சர்வ காம துக் -ப்ரீதி பிரேரித்தராய்ப் பாடி -அவ்வளவில் பர்யாப்தி பிறவாமையாலே அக்ரமாகப் புகழ்ந்து -இதுவே யாத்திரையாக வர்த்தியுங்கோள்
இத்தேசம் என்றால் எல்லார்க்கும் தன் திரு உள்ளம் போலே என்று இருக்கிறார்
பல்லுலகீர்!
தாந்தனாய் சமித்பாணியாய் வந்தவனுக்கு ஹிதம் சொல்லுகிறார் அன்றே
இவை என்ன உலகு இயற்கை -என்று லோகம் அடங்க நோவு படுகிற படியைக் கண்டு சொல்லுகிறார் ஆகையால் எல்லாரையும் காலைப் பிடிக்கிறார்
பரந்தே.–-
பெரிய திரு நாளுக்கு வந்து ஏறுமா போலே சர்வதோதிக்கமாக சென்று ஆஸ்ரயிங்கோள்
பல் உலகீர் பரந்து பாடியாடிப் பரவிச் சென்மின்கள் -என்று அன்வயம் –

—————————————————————–

ஜெகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலும் இவனே பரன்-இது இசையாதோர் என்னோடே வந்து பேசிக் காணுங்கோள் -என்கிறார்

பரந்த  தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

பரந்த தெய்வமும்
கொள் கொம்பு மூடப் பரந்து கை விஞ்சின தேவ ஜாதியும் நியாமகனோடு ஓக்க பரத்வ சங்கை பண்ணி நான் எடுத்து கழிக்க வேண்டும் படி இருக்கை –பிதாவையும் புத்ரனையும் பிரிக்க அரிதாமா போலே உத்பாதகனுக்கு அவ்வருகே கை விஞ்சின படி
பல் உலகும் படைத்து
அவர்கள் தனித்தனியே நியாமகராய் போரும்படி நியாம்யமான லோகங்களையும் ஸ்ருஷ்டித்து -ஸ்ருஷ்டியில் கர்மீ பவிக்கைக்கு நியாமகர் ஆனவர்களோடு நியாம்யங்களோடு வாசியில்லை என்கை –
அன்று
எல்லாருக்கும் இவன் கை பார்த்து இருக்க வேண்டும் ஆபத் தசையில்
உடனே விழுங்கிக்
ஸ்ருஷ்ட்டி காலம் போலே க்ரமம் பார்த்து இருக்க ஒண்ணாதே ஆபத் சமயத்திலே
கரந்து
பிரளயம் வந்து தேடினாலும் அதுக்கு எட்டாத படி கரந்து-திரு வயிற்றிலே வைத்து இருக்கச் செய்தே யும்-பண்டையிலும் இளைத்து காட்டலாம் படி இருக்கை –
உமிழ்ந்து-கடந்து இடந்தது-
உள்ளே இருந்து நோவு படாத படி உமிழ்ந்து
மஹா பாலி போல்வார் அபஹரிக்க எல்லை நடந்து மீட்டுக் கொண்டு நைமித்திக பிரளயத்தில் மஹா வராஹமாய் பூமியை பிரளயத்தின் நின்றும் எடுத்து –
கண்டும் தெளிய கில்லீர்
ப்ரத்யக்ஷத்திலும் -விசதமாய் இருக்கிற தாயிற்று இவர்க்கு சாஸ்திரம்
இவ்வதி மானுஷ சேஷ்டிதங்களாலே ஆஸ்ரயணீயன் என்று அறியலாய் இருக்க சக்தர் ஆகிறிலி கோள்-
இவர்கள் ஞான அஞ்ஞானங்கள் ஒழிய அர்த்தத்தில் மாறாட்டம் இல்லை என்கை –
அவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் இவனை அநீஸ்வரன் ஆக்குதல் செய்ய ஒண்ணாதாய் இருக்கை –
சிரங்களால் அமரர் வணங்கும்
ஸ்ருஷ்ட்யாதி அபதானங்கள் கிடைக்க ஆஸ்ரயணீய தேவதைகள் அவனை ஆஸ்ரயிக்க கண்டால் உங்களுக்கு விச்வாஸம் பிறக்கத் தட்டு உண்டோ –
நித்யத்வாதிகளால் வந்த துர்மானத்தை போக விட்டு தலை படைத்த பிரயோஜனம் பெற்றோம் என்று ஆஸ்ரயிக்கை-
பாதேந கமலா பே ந ப்ரஹ்ம ருத்ரார்ச்சி தே நச
திருக்குருகூர் அதனுள்-பரன் –
பரமபதத்திலும் வியாப்தியிலும் காட்டில் திருநகரியில் நின்ற நிலையிலே பரத்வம் மிக்கு இருக்கிற படி
மனுஷ்யத்வே பரத்வத்துக்கும் அவ்வருகே ஓன்று இ றே இது
வஸ்துவுக்கு குணாதிக்யத்தாலே யாகில் உத்கர்ஷம்-அது மிக்க இடத்திலே பரத்வம் உறைத்து தோற்றக் கடவது இ றே
திறமன்றிப்
அவனுக்கு பிரகாரமாய் கொண்டு அல்லது -திறம் -பிரகாரம் –
பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை -–
ஸ்வதந்திரமாய் இருபத்தொரு தெய்வம் இல்லை -தேவதைகளுடைய ஸ்வரூப நிஷேதம் பண்ணுகிறார் அல்லர் -ஈஸ்வர விபூதி யாகையாலே ஸ்வாதந்தர்ய நிஷேதம் பண்ணுகிறார்
அவனுக்கு பிரகாரம் என்று ஆச்ரயிக்கில் அவனுடைய ஆசிரயணீயத்திலே புகும்
ஸ்வதந்த்ர புத்தி பண்ணில் ஸ்வதந்திரமாய் இருப்பது ஓன்று இல்லை –தேஹ நா நாஸ்தி -யேய ஜந்தி
பேசுமினே.-
அவனுக்கு பிரகாரமாய் அல்லது ஸ் வ தந்திரமாய் இருபத்தொரு தெய்வம் இல்லை என்று சொன்ன என் முன்னே சர்வாதிகனை பிரகாரமாக யுடையதொரு தெய்வம் உண்டு என்று சொல்ல வல்லார் உண்டாகில் சொல்லுங்கோள் -என்கிறார்-

——————————————————————

வ்யாமாதீத நையாயிக வைசேஷிகாதிகள் வந்து ப்ரத்யவஸ்தி தராய்- ஜகத்து சவயவத்வாத் கார்யம் -ஆகையால் கர்த்ருமத்து -என்றும் -கர்த்ரு விசேஷ அபேக்ஷையில் உபநிஷத்தில் ஈசன் -என்றும் ஈசானன் என்றும் சொல்லுகிற ச்மஞ்ஜெய்யை துணையாகக் கொண்டு கீழ் சொன்ன அனுமானத்தாலும் அதுக்கு சாதகமான உபநிஷத்துக்களாலும் -ருத்ர தத்வம் பரம் என்று சாதிக்க இதிஹாச புராணாதிகளிலே பிரசித்தமான பிஷாடன தத் பரிஹராத்மகமான லிங்கத்தையும் அகாரார்த்தை சர்வேஸ்வரனாக சொல்லுகிற ஸ்ருதியையும் காட்டி ஆக இப்புடைகளாலே சகல உபநிஷத் பிரசித்தனான நாராயணனே பரதேவதை என்று காலாத்யயாபதிஷ்டமாகிற தூஷணத்தாலே அவர்களை நிராகரிக்கிறார்

பேச நின்ற  சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-

பேச நின்ற சிவனுக்கும்
கர்ம விதி சேஷமாகையாலே அந்நிய பரமாய் இருக்கிற அர்த்த வாதங்களால் சொல்லலாம் படி முட்டுப் பொறுத்து நிற்கிற ருத்ரனும் –
நீங்கள் ஈஸ்வரன் என்று பேசுகிற ருத்ரனுக்கும் -என்றுமாம் –
பிரமன் தனக்கும் -பிறர்க்கும்
அவனுக்கும் ஜனகனான ப்ரஹ்மாவுக்கும் -ப்ராஹ்மண புத்ரா யஜ்யே ஷ்டாய ஸ்ரேஷ்டாய-ப்ராஹ்மணச் ஸாபி ஸம்பூதச் சிவ-ருத்ரனுடைய ஈச்வரத்வம் பகவத் ப்ரஸாதயத்தம் -மஹா தேவஸ் சர்வமேத மஹாத் மாஹு தவாதமானம் தேவதேவோ பபூவ-
இவர் கருத்தால் இவர்களோடு பிறரோடு வாசி இல்லை -இவரே அன்று -சத்துவம் தலை எடுத்தால் அவர்களும் அப்படியே நினைத்து இருப்பது –தவாந்தராத்மா மமசயே சந்யே தேஹி சம்ஜிஞ்சிதா -என்றான் இ றே -ருத்ரனை நோக்கி ப்ரஹ்ம
நாயகன் அவனே
அவன் என்று ஸ்ருதி பிரசித்தி -அநந்ய பரமான நாராயண அனுவாக ப்ரஸித்தியையும் -யா பரஸ்ஸ மஹேஸ்வர -என்கிற அகாரார்த்த பிரசித்தியையும் நினைக்கிறார் –
ஜகத்தாகிற காரியத்துக்கு அநுரூபமான கர்த்ருத்வத்தை கற்பிக்கிலும் இவனே நிர்வாஹகானாக வேணும் என்னவுமாம்
கபால நன் மோக்கத்துக்-கண்டு கொண்மின்-
-இவ்வர்த்தத்தை கபால மோஹத்திலே கண்டு கொள்ளுங்கோள் –
எதிரிகளுக்கும் சம்பிரதி பன்னமான அநீஸ்ரத்வ ஹேது என்னுதல்
கண்டு கொண்மின்
உங்கள் ஆனந் நிவ்ருத்திக்கு ஆபன்னரையோ பற்றுவது –ஆபத் சகனை அன்றோ
நீங்கள் பரத்வ சங்கை பண்ணுகிற இருவரும் நின்ற நிலையை பாரி கோள்
தலை அறுப்புண்டு நிற்பான் ஒருவனும் -தலையை அறுத்து பாதகியாய் நிற்பான் ஒருவனுமாய் இ றே இருக்கிறது –
பிக்ஷை புக்கான் -என்பது அவனுக்கே பரத்வத்தை சொல்வதாகும் நீங்கள் எழுதி வைத்த கிரந்தங்களை பார்த்துக் கொள்ளுங்கோள் என்கிறார் –
தத்ர நாராயண ஸ்ரீ மான் மாயா பிஷாம் பிரயாசித்த-ததஸ்தே நஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம் –
விஷ்ணு ப்ரஸாதாத் ஸூ ரோணிகபாலம் தத்ச ஹஸ்ரதா ஸ் புடிதம் பஹு தாயாதம் ஸ்வப்ன லப்தம் தந்மயதா
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய –
சத்ருக்களுக்கு அனபிபவ நீயமாய் அரணாகப் போரும்படியான மதிலை யுடைத்தாய் தர்ச நீயமான
திருக்குருகூர் அதனுள்-ஈசன் பால் –
அஜஹத் ஸ்வபாவன் ஆகையால் இஸ் ஸுலப்யத்திலேயும் மேன்மை குறையாது இருக்கிறபடி
ய பரஸ்ஸ மஹேஸ்வர -என்றும் ஈஸதே பகவா நே க -என்றும் பிராமண பிரசித்தனான சர்வேஸ்வரன்
ஈசன் ஈசானன் என்கிற இது மஹாவ்ருக்ஷம் என்னுமா போலே சமாக்கிய மாத்ரமேயாய் அர்த்தம் இன்றிக்கே இருக்கை –
ஓர் அவம் பறைதல்
அநீசரத்வ சாதகமாக ஏதேனும் ஒரு ஆபாச யுக்திகளை சொல்லுகிறது -அத்தை தாம் சொல்ல மாட்டாமையாலே -அவன் என்கிறார் –
பறைதல் -ஸ்வ கோஷ்டிகளிலே ரஹஸ்யமாக சொல்லுமது ஒழிய சதாஸ்யம் அன்றிக்கே இருக்கை –என் முன்பே சொல்லுவது அன்று
என்னாவது இலிங்கியர்க்கே?
ஆனுமா நிகர்க்கு என்ன பிரயோஜனம் உண்டு –அந்த தேவதைகளுக்கு ஓர் உத்கர்ஷம் பெற்றி கோள் அன்று –
ஸமாச்ரயணத்துக்கு ஓர் பலம் பெற்றி கோள் அன்று
உங்கள் அனுமானம் ஸ்ருதி சந்நிதியில் ஜீவிக்க மாட்டாது
நீங்கள் சொல்லுகிற சமாக்கியை கபால மோக்ஷம் ஆகிற அர்த்த சாமர்த்யத்தின் முன்பு நிற்க மாட்டாது –

——————————————————————

லைங்க புராணம் தொடக்கமான குத்ருஷ்ட்டி ஸம்ருத்திகளையும் பாஹ்ய ஸம்ருத்திகளையும் ப்ரமாணமாகக் கொண்டு வந்தவர்களை நிஷேதிக்கிறார்

இலிங்கத்  திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-

இலிங்கத் திட்ட புராணத்தீரும் –
லிங்கம் என்று ஒரு வ்யக்தியை விசேஷித்து அதுக்கு உத்கர்ஷம் சொல்லுகையிலே ப்ரவ்ருத்தமான தாமஸ புராண நிஷ்டரும் –
சாத்விக புராணங்களில் காட்டிலும் ராஜஸ தாமஸ புராணங்களுக்கு வாசி இது –
யன்மயஞ்ச ஜகத் ப்ரஹ்மன்-என்று சாமான்யத்தில் ப்ரஸ்னமாக-விஷ்ணோஸ் ஸகாசா துத்ப்பூதம்-என்று கோல் விழுக்காட்டாலே பரிஹாரமாய் இருக்கை இ றே சாத்விக புராண லக்ஷணம்
ருஷிக்கு தமஸ் பிரசுர தசையில் தமஸ் அபி பூதன் கேட்கப் பிறந்த தாகையால் அவ்வோ தேவதைகளினுடைய உதகர்ஷத்துக்கு பிரமாணம் ஆக மாட்ட்டாது
சமணரும் சாக்கியரும்
ஆர்ஹதரும் ப்வத்தரும்
வலிந்து வாது செய்வீர்களும்
ஐயமே பலமான சுஷுக தர்க்கங்களைக் கொண்டு அர்த்த நிச்சயம் பண்ணுகிற சேஷித்த பாஹ்யரும்
மாயயா பஹ்ருதஞ்ஞானம் ஆசூரா பாவ மாஸ்ரிதா -சாஸ்திரமும் அதுக்கு அனுக்ரஹா கதர்க்கமும் இ றே அர்த்த நிர்ணயத்துக்கு பரிகரம்
பாஹ்ய குத்ருஷ்டிகளை ஓக்க சொல்லிற்று பல சமயத்தாலே -யாவேத பாஹ்யாஸ் ஸ் ம்ருதய
மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
உங்களோடு நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு வாசி அற ஆத்மதயா நின்றான் ஈஸ்வரன்
அத்தேவதைகளுக்கு உத்கர்ஷம் சொல்லும் போதும் அவற்றினுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகள் இவன் அதீனம் ஆகையால் இவனுடைய பரத்வத்தை இசையை வேணும் -ருத்ரனுடைய அதி மானுஷம் பகவாதத்தாம பாவத்தால் என்றது இ றே
விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய-அதர்வ சிரசில் ருத்ரன் தன்னுடைய சர்வாத்ம பாவம் சொல்லுகைக்கு அடி-சோந்தராதந்தாரம் ப்ராவிசத் -என்ற பரமாத்மா அநு பிரவேசத்தாலே என்று ஸ்ருதி தானே பரிஹரித்தது
அஹம்மனுரபம் ஸூ ரயச்ச-மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்கிற உபாசகர் பக்கலிலே பரத்வ சங்கை பண்ணினால் யாயிற்று -ருத்ரன் பக்கல் பரத்வ சங்கை பண்ணலாவது
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர்
செந்நெல் கதிர் கனத்தாலே அசைந்து வருகிற திரு நகரி –
சேதன அசேதன விபாகம் அற பொலிந்து நின்ற பிரானுக்கு அனுகூல வ்ருத்திகளை பண்ணுமாயிற்று
அதனுள்-பொலிந்து நின்ற பிரான்
பரம பதத்தை விட்டு இவ்வருகே தாழ நிற்க நிற்க குணங்கள் மேன்மேல் என விஞ்சி வருகிற படி
சொன்னார் சொன்ன யுக்திகள் எல்லா வற்றுக்கும் அவ்வருகாய் நிற்கை என்னவுமாம்
கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–
இத்தேவதைகள் பக்கல் உதகர்ஷம் எல்லாம் பொய்யாய் இருக்குமா போலே -இவ்விஷயத்தில் சொல்லுகிற உதகர்ஷத்துக்கு ஒன்றும் பொய்யில்லை
போற்றுமினே -சடக்கென ஆஸ்ரயிங்கோள் -நீங்கள் அபேக்ஷியாது இருக்க நான் சொல்லுகிறது உங்கள் துர்தசையைப் பற்ற –


பகவத் பரத்வம் நீர் அருளிச் செய்ய கேட்ட போது வெளிச்சிறத்து-அல்லாத தேவதாந்த்ர ப்ராவண்யம் உண்டாகா நின்றது –இதுக்கு அடி என் என்ன -உங்கள் பாபம் என்கிறார் -எம்பெருமானே சர்வேஸ்வரன் ஆகில் எங்களை தேவதாந்த்ர பிரவணர் ஆக்கி வைப்பான் என்னில் -உங்களை இங்கனே வைத்து சத் அஸத் கர்ம காரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்ம அனுகுண பலங்களை அனுபவிக்க கடவதான சாஸ்திர மரியாதை அழியும் என்று -ஆனபின்பு இத்தை அறிந்து எம்பெருமானை ஆஸ்ரயித்து அவன் வஞ்சனத்தை தப்புங்கோள் என்கிறார் –

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-

போற்றி மற்றோர் தெய்வம் –
உங்களுடைய ஆச்ரயணத்தில் ஒரு குறை இல்லை -அப்ராப்தம் ஆனதுவே குறை -யேப் யன்ய தேவதா பக்தா –
பேணப்
ஆஸ்ரயிக்கிற தேவதைகளுக்கு உத்கர்ஷம் சம்பாதிக்கை உங்களுக்கே பரம் என்கை –
புறத்திட்டு,
இவ்விஷயத்துக்கு புறம்பாம்படி பண்ணி -தேவதாந்தரங்களை இவ்வளவு அவகாஹிக்கும் படி பண்ணி
உம்மை இன்னே -தேற்றி வைத்தது,
தேற்றி-தெளிய பண்ணி -ஆனந்தம் ப்ராஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சந-என்று பகவத் விஷயத்திலே நான் பண்ணின விசுவாசத்தை இ றே கால் கட்டான தேவதாந்த்ரங்கள் பக்கலிலே பண்ணி வைத்தது
எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சத் அஸத் கர்மங்களை பண்ணுவாரை கர்ம அனுகூலமாக ஈஸ்வரன் அனுபவிப்பிக்கும் என்கிற சாஸ்திர மரியாதை குலையும் என்று -லோகம் என்று சாஸ்திரம் –
அதோஸ்மிலோ கே வேதேச -புண்ய புனையே ந கர்மணா பாப பாபே ந -என்கிற வியவஸ்தை குலையும் என்கை –தேவதாந்த்ர பஜ்ஜனத்துக்கு பலம் சம்சாரிக பலம் என்கை –
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
அவ் ஊரில் பதார்த்தங்கள் இசலி வளரா நிற்கும் என்கை –
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண்ணர்ங்கமே
ஆற்ற வல்லவன்
மிகவும் வல்லவன் –அதிசயித சக்திகன் -சேதனர் பண்ணின புண்ய பாபங்கள் கலசாத படி பல அனுபவம் பண்ணுவிக்க வல்லவன் –
மாயம் கண்டீர்
மம மாயா துரத்யயா -என்கிறபடியே தான் அகற்ற நினைத்தாரை தன் பக்கல் பிரக்ருதியை இட்டு வஞ்சித்து வைத்த படி கிடி கோள்
அது அறிந்தறிந்து ஓடுமினே.
அத்தை அறிந்து மாயா தரண உபாயமான ப்ரபத்தியைப் பண்ணி சம்சாரத்தை தப்ப பாருங்கோள்
மாமேவயே பிரபத்யந்தே -என்கிறபடியே அவனையே கால் கட்டி அவனை வெல்லப் பாருங்கோள் -என்கிறார் –

————————————————————

நெடுநாள் பச்சை இட்டுப் போந்த நாங்கள் இட்ட பச்சை வியர்த்தம் ஆகாத படி அபிலஷித புருஷார்த்தங்களுக்காக இன்னம் சில நாள் ஆஸ்ரயித்ததாலோ என்னில்
முன்பு ஆஸ்ரயித்து பெற்றது இ றே இனி ஆஸ்ரயித்தாரும் பெறுவது -ஆனபின்பு பொலிந்து நின்ற பிரானை ஆஸ்ரயிங்கோள் என்கிறார்

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து,
கதா கதம் காம காம லபந்தே என்கிறபடியே கர்ம அனுகூலமாக தட்டித் திரிந்த இத்தனை இ றே –
சகல யோனிகளிலும் அசங்க்யாதமான ஜென்மங்களை பண்ணி –
ஆத்மா நித்யன் –காலம் அநாதி -இடைவிடாமல் பிறந்து போந்த இதில் பலித்தது இ றே இனி பலிப்பது –
தங்களுடைய ஜென்ம பரம்பரைகள் அடைய இவர் வாயாலே கேட்க வேண்டும் படி இ றே இவர்களுக்கு அவிசதமாய் இருக்கிற படி
மற்றோர் தெய்வம்-
ஈஸ்வரனை ஒளியும் அத்தனையே வேண்டுவது -ஆரேனுமாக அமையும்
பாடி ஆடிப் பணிந்து
ஆச்ரயணத்தில் குறையால் பலியாது இருக்கிறது அன்று -அதில் குறையில்லை -ப்ரீதி பிரேரித்தராய் சொல்லி அவ்வளவில் பர்யவசியாதே விக்ருதரராய் -மாம் நமஸ் குரு -என்று பகவத் விஷயத்தில் அவகாஹிக்கும் அளவு உள் புக்கு
பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
ஒரு படியில் ஆஸ்ரயித்து விட்டு கோளோ-அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கச் சொல்லுகிற சாஸ்திர மரியாதை தப்பாமல் ஆஸ்ரயித்து அதன் பலமும் கண்டி கோள் அன்றோ
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆகில் செய்ய அடுப்பது என் –என்ன -நீங்கள் உகந்து இருக்கிற தேவதைகள் ஆபத்து வந்தவாறே அந்யோன்யம் சாதரவங்கள் சொல்லா நிற்க -ஏக கண்டராய் ஆஸ்ரயிக்கிற திரு நகரியிலே -தலையை அறுப்பாரும் தலை அறுப்புண் பாருமாய் இன்றே சாதரவங்கள் இருப்பது
உங்களை கும்பீடு கொள்ளுகிறவர்கள் செய்கிறதை காண்டாகிலும் ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–-
சேஷத்வ அனுசந்தானத்தால் வந்த ஹர்ஷ ப்ரகரஷத்தாலே ஆடா நின்ற பெரிய திருவடியை ரக்ஷகத்வ க்யாபன த்வஜமாக யுடையவன் –
ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு கொடி கட்டி ரக்ஷிக்குமவன் என்கை -கருட வாஹனத்வம் பரத்வ லக்ஷணம் இ றே –
காரணந்து த்யேய என்கிறபடியே ஜகத் காரண வஸ்து இ றே உபாஸ்யம் ஆவது
அவனுக்கு அடிமை புகப் பாருங்கோள் -செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பாடியாடிப் பணிந்து என்கிறது எல்லாம் வேண்டா
சர்வ ரக்ஷகனாய் -சர்வ ஜனகனாய் சர்வாந்தராமியான அவன் உடைமையை அவனுக்காக இசையை அமையும் –
பல்படிகால் வழி ஏறி கண்டீர் அடிமை புகுவதுவே -என்று விதிக்கிறார் –

—————————————————————-

மார்க்கண்டேயன் ருத்ரனை ஆஸ்ரயித்து ஸ்வ அபேக்ஷிதம் பெற்றிலேனோ என்ன -அது இருந்தபடியே கேட்கலாகாதோ -என்கிறார் –

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
அடிமையினால் புக்கு –வகுத்த சேஷி பக்கல் செய்யுமத்தை ருத்ரன் பக்கலிலே செய்தான் –இத்தால் ஆச்ரயணத்தில் குறையாய் இழந்தான் அல்லன் என்கை –
ஆசிரயணீயனைக் காணப் பெறாமையாலே இழந்தானும் அல்லன் –
மார்கண்டேயனானவனை -நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
நக்கன் -நக்நன் / பிரான் என்று ஸ்வ கோஷ்டியில் பிரசித்தி
மார்கண்டேயனானவனை ஆபத் தசையில் ரஷித்தது-
சர்வ ஸ்வாமி யான அவன் பிரசாதத்தாலே திருதியை யாதல் -இவன் புருஷகாரமாக அவன் பிரசாதத்தை பண்ணிக் கொடுத்தது -என்று த்வதீயை யாதல் –
நாராயணன் என்கையாலே அவனுக்கு சேஷமாம் இடத்தில் உன்னோடு என்னோடு ஒரு வாசியில்லை என்று அவன் திருவடிகளில் காட்டிக் கொடுத்தான் என்கை
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் –
கொக்கு போலே வெளுத்த நிறத்தை யுடைய பூக்களை யுடைத்தான பெரிய தாழை களை வேலியாக யுடைய திரு நகரி –நிலத்து இயல்பு இருக்கிறபடி
அதனுள் மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–
சர்வாதிகனாய் -ஜகத் காரண பூதனானவன் திரு நகரியிலே ஸூ லபனாய் நிற்க
மிக்க– ஆஸ்ரயண காலத்தில் ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு பல வேளையில் வேறு ஒருவன் வாசலிலே கொடு போக வேண்டும் படி குறைவாளன் இன்றிக்கே இருக்கை –
மற்றைத் தெய்வம் -நாரங்களிலே ஒன்றை ஈஸ்வரன் என்று பற்றவோ -பிரகாரமாய் கொண்டு அல்லது வஸ்துத்வம் இல்லாதவற்றை பிரகாரியாக பிரமிக்கிறி கோள் இ றே
விளம்புதிரே!–
இவனை ஒழிய வ்யவஹார யோக்யமாய் இருப்பது ஓன்று இல்லை என்று இருக்கிறீர் –

——————————————————————

உங்களுடைய உஜ்ஜீவனத்துக்கு அவன் அளவும் செல்ல வேணுமோ -அவன் வர்த்திக்கிற திரு நகரியை உங்கள் ஞானத்துக்கு விஷயமாக்க அமையாது -என்கிறார் –

விளம்பும்  ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-

விளம்பும் ஆறு சமயமும்,
பேச்சே போக்கி உள்ளீடான அர்த்தம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் -பிரமாணம் அனுகுணம் சுஷுக தர்க்கங்களாலே யுக்தி சாரமேயாய் இருக்கை
அவை ஆகியும் மற்றும்
மற்றும் அவற்றோடு ஒத்த குத்ருஷ்டிகளும் -தமோ நிஷ்டாஹி தாஸ் ஸ் ம்ருதா
தன்பால்-அளந்து காண்டற்கு அரியன் ஆகிய
தன்பக்கல் வந்தால் அவர்கள் இல்லை என்கைக்கும் -இவ்வளவு என்று பரிச்சேதிக்கைக்கும் ஒண்ணாத படி இருக்கும் -இல்லை என்னும் போது இன்னது இல்லை என்ன வேணும் -அதாகிறது இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிஸால்யமாய் இருக்கும் என்கை –
ஆதிப்பிரான்
தனக்கு உத்பாதகனை இல்லை என்கை யாவது தன்னை இல்லை என்கை இ றே
அமரும்-
அவன் பொருந்தி வர்த்திக்கும் தேசம் –
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை-
வி லக்ஷணமாய் சிரமஹரமான நீர் நிலங்களாலே சூழப் பட்டு தர்ச நீயமான திரு நகரியை
உளங்கொள் ஞானத்து வைம்மின் –
உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள் -பிரயோஜனம் என் என்னில்
உம்மை உயக்கொண்டு போகுறிலே.-
அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் -நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –

—————————————————————–

தன் ஐஸ்வர்யத்தில் ஒன்றுமே குறையுமே வந்து நின்று அருளின பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமை செயகையே  உறுவதாவது -என்கிறார் -உறுவதும் இது -ஆவதும் இது -சீரியதும் இது -ஸூ சகமும் இது –

உறுவது ஆவது  எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் –
எல்லா தேவதைகளும் அது தேவதைகளுக்கு போக ஸ்தானமான எல்லா லோகங்களும் -மற்றும் உண்டான சேதன அசேதனங்களும்
தன்பால் மறுவின் மூர்த்தியோடு ஒத்து-
தன் அளவில் வந்தால் மறு இல்லாத படி மூர்த்தியோடு வைத்து
இவை சரீரமாம் இடத்தில் அசாதாரண விக்ரஹத்தோ பாதி குறை இன்றிக்கே இருக்கை -மறு வாகிறது -குற்றம் -அதாகிறது குறை –பிரிந்து ஸ்திதியும் உபலம்பமும் இன்றிக்கே இருக்கை –அதவா ஸ்ரீ வத்ஸத்தை யுடைத்தான திருமேனி என்னுதல் -ஹேயபிரதிபடமான திருமேனி என்னுதல் –
இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே-
இவை அடங்க இருந்தபடியே தன் பக்கலிலே நிற்க -இவை எல்லாம் தான் இட்ட வழக்காய் இருக்கிற ஐஸ்வர்யத்தோடே வந்து நிற்கை -உபய விபூதி உக்தனாய் இருக்கிற ஐஸ்வர்யத்திலே ஒன்றுமே குறையாது இருக்கை -ராஜ புத்ரன் ஒலியல் உடுத்தாலும் ஐஸ்வர்யத்தில் குறை யாகாது இ றே –
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
செய்கையில் செந்நெலும் கரும்பும் இசலி வளரா நிற்கிற திரு நகரி
இவ் ஊரில் பதார்த்தங்களில் ஒன்றில் ஓன்று குறைந்து இருப்பது இல்லை –
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–
குறிய-ஆஸ்ரிதற்கு கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படி தன்னை தாழ விட்ட படி –
உண்டு என்று இட்ட போதொடு இல்லை என்ற போதொடு வாசி இன்றிக்கே முகம் மலர்ந்து போம் படி இரப்பிலே தகணேறினபடி
குடகு கூத்தாடுகிற போது கண்டாரோபாதி பிற்பாடராய் கேட்டார் வாய் கேட்டார்க்கும் சம காலம் போலே பிரியமாம் படி மநோ ஹரியான சேஷ்டிதத்தை யுடையவனுக்கு –
அந்த சேஷ்டிதங்களே அடிமை கொள்ளும் -நீங்கள் இசையும் அத்தனையே வேண்டுவது
ஆள் செய்வதே உறுவது ஆவது -என்று அந்வயம்

———————————————————

நிகமத்தில் இது திருவாய்மொழி கற்றார்க்கு பரமபதம் ஸூலபம் என்கிறார் –

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
முறையால் சர்வேஸ்வரனைப் பற்றினவர் -அடிமை செய்வித்துத் கொள்கைக்கு யாயிற்று -கையும் திரு வாழி யும் சேர்ந்த சேர்த்தி அழகு -ஆழ்வானுடைய வ்ருத்தத்தைக் காட்டி இவரையும் வ்ருத்தவான் ஆக்கின படி
சேர்ந்தவன்-கையும் திரு வாழி யும் பொருந்தினால் போலே யாயிற்று இவர் பொருந்தின படி -கெடு மரக்கலம் கரை சேர்த்ந்தால் போலே
இந்த நன்மைக்கு அடி -திரு நகரியில் பிறப்பு -ராம பக்திக்கு திரு அயோத்தியில் மண் பாடு போலே
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
நாள் தோறும் கமலா நின்றுள்ள திரு மகிழ் மாலையை திரு மார்பிலே யுடையவர்
நண்ணாதார் முறுவலிப்ப -திருவாய் மொழியில் சம்சாரிகள் கிலேசத்தை அனுசந்தித்து திரு உள்ளம் வாடின வாறே இட்ட மாலையும் வாடிற்று
பகவத் பரத்வத்தை உபதேசித்து -இவர்களுக்கு ஒரு குறை இல்லை -என்று திரு உள்ளமுகந்தவாறே அதுவும் செவ்வி பெற்றது
மாறன் சடகோபன் -பகவத் பிராப்தி பிரதிபந்தகங்களுக்கு எல்லாம் ம்ருத்யுவான ஆழ்வார்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்-மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–
சிலர் அர்த்திக்க வன்றிக்கே தம் அபி நிவேசத்தாலே அருளிச் செய்த இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் கையது மீட்சி இன்றி வைகுந்த மா நகர்
நச புனராவர்த்ததே என்கிற பரமபதமும் அவர்களுக்கு ஸூலபம்
பகவத் பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்-ஞான பல ரூபமான பரிமாற்றத்துக்கு ஏகாந்த தேசமும் அவர்களுக்கு ஸூலபம்
மற்றது என்று சம்சாரத்துக்கு ப்ரத்ய நீகமான தேசம் என்னுதல் -அவ்யயமாகக் கிடத்தல் -பாஹ்ய குத்ருஷ்டிகள் இல்லாமையால் உபதேசிக்க வேண்டாதே அனுபவமே யாய் செல்லும் தேசத்திலே புகப் பெறுவர்
இவர் இப்பாட்டில் தம்மை புகழ்ந்தது பர ப்ரதிபாத அர்ஹமாம் படி பரத்வ ஞானம் கை வந்த ஹர்ஷத்தாலே -வாலமீகிர் பகவான் ருஷி


கந்தாடை     அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: