திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -4-8–

இப்படி அவசன்னராய் கூப்பிடச் செய்தே-ஸுசீல்யாதி-குணோததியாய்-பிரதிகூல நிரசன சமர்த்தனான எம்பெருமான்
-வாராது ஒழிந்த வாறே தம்மை உபேக்ஷித்தானாக கருதின ஆழ்வார் தத்தார்த்தமாக யுண்டான ஆத்மாத்மீயங்கள்-
அவனுக்கு ஆதரணீயங்கள் அல்லவாகில் எனக்கும் அவற்றால் கார்யம் இல்லை என்று
அவற்றில் தாம் நசை அற்ற படியை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்-


அத்யந்தம் குணவானுமாய் விரோதி நிரசன சமர்த்தனுமாய் இருக்கிற எம்பெருமான் விரும்பாத சிலாக்யமான நிறம் கொண்டு ஒரு கருமமும் இல்லை என்கிறாள் –

ஏறு ஆளும்  இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறைஇலமே.–4-8-1-

கூறு ஆளும் – ஒரோ பிரதேசத்தை கூறாகக் கொள்ளும்
தனி உடம்பு – இப்படி பரார்த்தம் ஆகையால் அத்விதீயமான உடம்பு
நிருமித்து, படை தொட்ட மாறாளன் – சங்கல்பித்து ஆயுத கிரஹணம் பண்ணின ஆண் பிள்ளை


 

மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-

பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணுகிற திரு மார்பை உடையவனுமாய் -அழகியதாய் கொழுந்து விட்டு -திரட்சி பெற்று சிக்கென்று இருந்த திருத் தோளையும் பிரதிபக்ஷத்தை அடக்கும் ஸ்வ பாவமான திரு வாழி யாலே பூர்ணமான கையையும் உடையவனாய் -அடிமை கொள்ளும் இடத்தில் பெரிய பிராட்டியாரோடு ஓக்க என்னை அடிமை கொள்ளுவதும் செய்து இந்திர நீலம் போலே கறுத்த திரு நிறத்தை யுடையனானவன் –


அத்யந்த விலக்ஷணனாய் இருந்து வைத்து பண்டு என் பக்கலிலே அத்ய அபி நிவேசத்தை பண்ணினவன் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டா என்கிறாள் –

மடநெஞ்சால்  குறையில்லா மகள் தாய்செய்து ஒருபேய்ச்சி
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி
படநாகத்து அணைக்கிடந்த பருவரைத்தோட் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறையிலமே.–4-8-3-

மடநெஞ்சால் குறையில்லா-இத்யாதி –
பரிவை உடைய யசோதை பிராட்டி போலே ஒரு ஸ்த்ரீ வேஷத்தைக் கொண்டு நிக்ருதி பரதைக்கு-தன்னோடு ஒப்பார் இல்லாத பூதனை முடியும் படி நஞ்சை உடைய முலையைச் சுவைத்த பிள்ளைத் தனத்திலே தாய் முலை யன்று என்று அறிந்த பேர் அறிவை உடையவன்
படநாகத்து அணைக்கிடந்த-இத்யாதி –
தன்னுடைய ஸ்பர்சத்தாலே பணம் விரித்து இருந்துள்ள திரு அநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகையாலே மலை போலே வளர்ந்த தோள்களையும் உடையனாய் புருஷோத்தமனுமாய் உள்ளான்-


ஸ்வ ஆச்ரிதார்த்த ப்ரவ்ருத்திகள் எல்லாம் தமக்கு போகமாக உடையனான கிருஷ்ணன் விரும்பாத தளிர் போலே இருக்கிற நிறத்தால் கார்யம் இல்லை என்கிறாள் -மடப்பம் -மார்த்வம்

நிறையினால்  குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-

சம்ச்லேஷிக்கைக்காக வ்யஸன சஹனாய் -ஹிம்சிரமாய் வந்து மேல் விழுகிற விடை ஏழையும் -அநாயாசேன நிரசிப்பதும் செய்து மிகவும் கறை ஏறி இருக்கிற சிவந்த தோலை உடையாக யுடையராய் கறக்கும் மூங்கில் குழாயையும் பிடிக்கும் வீசு கோலையும் கையிலே உடையராய் -வடிவு பேணாதே பசுக்களின் பின்பே திரிகையாலே சறைந்து இருந்துள்ளவர்-
சறை-என்றது சறை மணி -சறை யினார் ஆகிறார் -அது உடையார் என்றுமாம் –


பரம பிரணயி யான தசரதத் மஜன் விரும்பாத அறிவினால் ஒரு பிரயோஜனம் இல்லை என்கிறார் –

தளிர்  நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-

தளிர் நிறம் என்று தொடங்கி –
தளிர் போலே இருக்கிற நிறத்தால் பரிபூர்ணையாய்-ராக்ஷஸி மத்யத்திலே நிருத்தையாய் இருந்தாள் என்று திருவடியால் விண்ணப்பம் செய்யப்பட ஆஸ்ரிதற்காக லோக பிரசித்தமாய் சிறை இருந்தபடி என்றும் சொல்லுவர்
கிளி மொழி -என்றும் தொடங்கி –
இனிய பேச்சை உடைய பிராட்டி நிமித்தமாக ராவணனுடைய சம்ருத்தமான நகரத்தை தஹிப்பதும் செய்து
தேனை யுடைத்தாய் மலர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலை யாலே கமழா நின்றுள்ள திரு முடியை உடையான்
இது மீண்டு எழுந்து அருளி ஒப்பித்து இருக்கிற படி க்கு உப லக்ஷணம்
கடல் ஞாலத்து-அளி மிக்கான்
சம்சாரிகள் பக்கலிலே மிகவும் அனுக்ரஹ சீலனானவன்-

 


 

சகல லோகங்களுக்கும் ஸ்வ பிராப்தி யுபாயங்களும் எல்லாம் தானே அருளிச் செய்து ஹித உபதேசத்துக்கு பங்கு அல்லாதவர்களை தன் அழகாலே வசீகரிக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ வாமனன் விரும்பத்த மிக்கு இருந்துள்ள லாவன்யத்தால் கார்யம் உடையோம் அல்லோம் என்கிறாள் –

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-

அறிவினால் குறையில்லா-இத்யாதி
தன் திறத்தில் அறிவு கொண்டு கார்யம் இல்லாத சம்சாரிகள் அறியும் படி பிரபத்தி பர்யந்தமான சகல உபாயங்களையும் வ்யக்தமாக அருளிச் செய்து அருளினை பரிபூர்ண ஞானத்தை உடையனாய் அத்விதீய ஸ்வரூபனாய் உள்ளான் –
குறிய மாண் உருவாகி-இத்யாதி
குறளான பிள்ளை வடிவை உடையனாய்க் கொண்டு மஹா பலியை அழகாலே மிகவும் நெருக்கிப் பூமியை வாங்கிக் கொண்ட விரகனான சர்வேஸ்வரன் –


ஆஸ்ரித விரோதியான ஹிரண்ய நிரஸனம் பண்ணும் இடத்தில் அவன் அளவு அல்லாதபடியாக சீறி அவனை முடிக்கும் ஸ்வ பாவனான விரும்பாத விலக்ஷணமான வளை கொண்டு கார்யம் உடையோம் அல்லோம் என்கிறாள்-

கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-

கிளர் ஒளியால் குறைவில்லா-இத்யாதி
பெருகா நின்றுள்ள ஒளியால் மிக்கு சிம்ம ரூபியாய் சீறிக் கொண்டு தோன்றி -மிக்க தேஜஸை உடையனாய் இருந்துள்ள ஹிரண்யனுடைய விஸ்திருதமான மார்பை அநாயாசேன பிளந்து -ஆஸ்ரித விரோதி போகப் பெற்றது என்று உகப்பதும் செய்து திரு யுகிர்களாலே முந்துற ஹிரண்யன் முடிகையாலே தங்களுக்கு இரை பெறாத சீற்றத்தின் மிகுதியால் நெருப்பை உமிழா நின்றுள்ள சங்க சக்ராதி திவ்யாதா உபேதனாய்
மணி நீல-வளர் ஒளியான்-
கோபம் எல்லாம் தணித்த சீதளமான நிரவதிக தேஜஸை யுடையவன் –

————————————————————–

பாதகர் ஆனவர்களை எல்லாம் முடித்து லோகத்தின் உடைய உபத்ரத்வத்தை எல்லாம் போக்கின குணத்திலே -ப்ரஹ்ம ஈஸ நாதிகளாலே ஸ்தூயமானாய் இருந்தவன் விரும்பாத மேகலையால் ஒரு கார்யம் இல்லை என்கிறாள் –

வரி வளையால் குறையில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8-

பிரதிபக்ஷத்தின் அளவல்லாத த்வனியை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருப் பவளத்திலே மடுத்து துர்யோத நாதிகளை மஹா பயம் பிரவேசிக்கும் படி ஊதிப் பண்டு இம் மஹா பிருத்வியினுடைய துக்கம் போக்குவதும் செய்து துர்ஜேயரான ருத்ராதிகள் தன்னுடைய வீர ஸ்ரீ க்குத் தோற்று திருவடிகளில் விழுந்து ஏத்தும்படியான மிக்கு இருந்துள்ள கீர்த்தியை யுடையவன் ஆனான் –

—————————————————————–

ஆஸ்ரித விரோதியான பாணனுடைய பாஹு வனத்தை கழித்து -திரு வனந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுமவன் போலே சகல ஜந்துக்களும் உஜ்ஜீவிக்கும் பிரகாரத்தை திரு உள்ளத்தாலே ஆராயா நின்றுள்ள எம்பெருமான் விரும்பாத உடம்பு கொண்டு கார்யம் இல்லை என்கிறாள் –

மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9-

ம்ருது ஸ்வ பாவையாய் -மேகல அலங்க்ருதமாய் விஸ்திருதமான நிதம்ப பிரதேசத்தை யுடையையாள் போக யோக்யையான உஷையுடைய தமப்பனுமாய்
ஸுர்ய வீர்யாதி ப்ரதயை யுடையனுமாய் பெரு மிடுக்கனுமாய் பாணனுடைய பாஹு வனத்தை கழித்து –

——————————————————

பிரதி பக்ஷம் எத்தனையேனும் மிக்கதாகிலும் போக்கும் ஸ்வ பாவனாய் அத்யந்த சீலவானாய் உள்ள எம்பெருமான் கவராத உயிரினால் கார்யம் உடையோம் அல்லோம் என்கிறாள்

உடம்பினால் குறையில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-

ச பிராணனாய்க் கொண்டு சஞ்சரிக்கிற பெரிய பர்வதங்கள் பிராண ஹீனமாய் முறிந்து விழுந்து கிடந்தால் போலே பல துணியாம் படி பேர் உடம்பை உடையரான அஸூர சமூகங்களை சேதித்து-ஆஸ்ரித விரோதி நீங்குகையாலே நிரவதிக ப்ரீதி யுக்தனாகவதும் செய்து -பெரு வெள்ளமான கங்கா ஜலத்தை ஏக தேசத்தே அடக்க வற்றான ஜடையோடே கூடின முடியை யுடையனான ருத்ரன் தனக்கு அடைத்த தேசத்திலே தானே நிரந்தர வாசம் பண்ணும் படியான திருமேனியை யுடையான் –


நிகமத்தில் சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து ஆஸ்ரித ஸூ லபனான எம்பெருமானை சொன்ன இது திருவாய் மொழியை வல்லார் காழ்ப்பு ஏறின சம்சார துரிதம் அற்று திரு நாட்டிலே புகுவார் என்கிறார் –

உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-

அசங்க்யரரான ஆத்மாக்களை யுடைய ஸமஸ்த லோக நிர்வாஹத்தை எல்லாம் தன் சங்கல்பத்தாலே பண்ணி ஆஸ்ரித க்ருஹங்களிலே வந்து திருவவதாரம் பண்ணி அவர்களுடைய வஸ்துக்களே தாரகமான தன்மையை யுடையவன்
செயிர்-குற்றம் –

————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: