திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-8–

இப்படி அவசன்னராய் கூப்பிடச் செய்தேயும் அவன் வந்து முகம் காட்ட காணாமையாலே -ப்ராப்தனாய் சீலனாய் -விரோதி நிரசன
சமர்த்தனாய் இருக்கிறவனை உதவாது ஒழி கிறது இக்கலையை வேண்டாது ஒழிகை இ றே
அவனுகுக்காக கண்ட என்னுடைய ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு ஆதரணீயம் அன்றாகில் எனக்கும் அவற்றால் கார்யம் இல்லை என்று
அவற்றால் தாம் நசை அற்ற படியை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்
கோவை வாயாள் -திருவாய் மொழியில் படி விரும்பினவன் இப்படி உபேக்ஷித்த பின்பு என்னாலும் என் உடைமையாலும்
எனக்குத் தான் என்ன கார்யம் உண்டு என்கிறாள் –
ஆத்மாத்மீயங்களை அவன் விரும்பின வழியாலே விரும்ப வாயிற்று பிராப்தம் –அல்லது தான் உகந்த வழியாலே விரும்புமது
தேஹாத்ம அபிமானத்தோடே ஒக்கும் அத்தனை –
முந்துற ஆத்மாவை வேண்டேன் என்னாதே-உடைமையை வேண்டேன் -என்றது -இவள் தன்னிலும் இவள் உடைமையை அவன் விரும்புகையாலே
அவன் விரும்புன அடைவே உபேக்ஷிக்கிறாள்
என்னுடைமையை வேண்டேன் என்று திரளச் சொல்லாதே வ்யக்தி தோறும் வேண்டேன் என்கிறது என் என்னில் –
அவன் வ்யக்தி தோறும் விரும்புகையாலே -நதேஹம் ந பிராணன் -நஹிமே ஜீவிதே நார்த்த-ந தேவ லோகா க்ரமணம்


அத்யந்த குணவானாய் -விரோதி நிரசன சமர்த்தனுமாய் இருக்கிறவன் விரும்பாத சிலாக்கியமான நிறத்தால்  எனக்கு ஒரு கார்யம் இல்லை என்கிறாள் –

ஏறு ஆளும்  இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறைஇலமே.–4-8-1-

ஏறு ஆளும் இறையோனும்,
வேதாத்மாவான பெரிய திருவடிக்கு எதிராக ஒரு எருத்தை வாஹனமாகக் கொண்டு திரியுமவன்-
ஆளும் -இவனுடைய உபய விபூதி இருக்கிறபடி-
இறையோனும்,-உபய விபூதி நாதன் -ஈஸ்வரோஹம் -என்றான் என்னா தானும் மஹா வ்ருக்ஷம் போலே ஈஸ்வரோஹம் -என்று இருக்கை –
திசைமுகனும்,
அவனுக்கும் ஜனகனுமாய் -சபூரி திவ்யாஹரத் -என்கிறபடியே -நாலு வேதங்களையும் உச்சரிக்கைக்கு நாலு முகத்தை உடைய ப்ரஹ்மாவும்
ஈஸ்வரோஹம் என்று இருப்பாரும் அணைகிற உடம்பை -அடியேன் என்று இருக்கிற நான் இழப்பதே –
ஸ்வ தந்த்ர புத்தி பண்ணுவார் பெற்ற உடம்பை பிரகாரமாக புத்தி பண்ணி இருக்கிற நான் இழப்பதே
திருமகளும்,
அநந்யா என்கிற பிராட்டியும்
கூறு ஆளும் –
கூறிட்டு ஆளும் -அதிகாரி புருஷர்கள் என்று பிராட்டி இடத்தில் நலிதல்-படுக்கைப் பற்றில் உள்ளார் என்று அவர்கள் இடத்தில் நலிதல் செய்யாத படி சமமாய் இருக்கை –
தபஸா தோஷி தஸ்தே ந விஷ்ணு நா ப்ரபவிஷ்ணு நா ஸ்வ பார்ஸ்வே தஷிணே சம்போ நிவாஸ பரிகல்பிதம் -என்னும்படி கூறிட்டுக் கொடுத்தான் இ றே
தனி உடம்பன்,
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு நிறம் கொடுக்கும் படி
இவ்வுடம்பு இ றே வரையாதே எல்லார்க்கும் அணையலாய் இருக்கிறது
இப்படி சீலவானாய் இருக்க இழப்பதே
குலம் குலமா அசுரர்களை
விரோதிகள் பல்கின படியால் திரள் திரளாக வாயிற்று அஸூர வர்க்கத்தை அழிப்பது –
நீறு ஆகும் படியாக
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -என்கிற படியே தூளியாக
நிருமித்து, படை தொட்ட
மயை வைத-நிஹதா -பூர்வமேவ -என்கிறபடியே -அழிக்கக் காட்டுவதாக சங்கல்பித்து -ஆயுதம் எடுக்குமவன் –
நிரூ மித்த -நிர்மித்து ஸ்ருஷ்டியாதிகளை சங்கல்பத்தாலே நிர்வஹிக்குமவன்
ஆஸ்ரித விரோதிகள் என்றவாறே சாயுதனாய் மேல் விழும்
ஸ்ருஷ்ட்யாதிகளில் சத்ய சங்கல்பனாய் இருக்கும்
ஆஸ்ரித விரோதிகள் அளவில் அசத்திய சங்கல்பனாய் இருக்கும்
யஞ்ஞ விக் நகரம் ஹந்யாம் பாண்டவ நாஞ்ச துர்ஹருதம்-என்னை மிடறு பிடத்தாரையும் என் உயிர் நிலையில் நலிவாரையும் நலிவேன் என்னுமவன் –
மாறாளன்
மாற்றான் -எதிரி என்னுதல் -பெரு மிடுக்கன் என்னுதல் -த்விஷதன்னம் நபோக்த்வயம்-
நிருமித்து, படை தொட்ட-
சங்கல்பத்திலே விரோதி வர்க்கம் தூளி யாயிற்று –
அவதாரத்திலும் ஆழ்வார்கள் ஸ்வரூப சித்த்யர்த்தமாக ஆழ்வார்களை தரித்த இத்தனை என்றுமாம்
கவராத மணிமாமை குறைஇலமே.-
இப்படி சீலவானாய் பெரு மிடுக்கனானவன் விரும்பாத இந்நிறத்தால் என்ன கார்யம் உண்டு
குணவான் கச்ச வீர்யவான் -என்ன கடவது இ றே -மணி -ஓளி-


இச்சீலத்துக்கும் அடியான-பிராட்டியோடே கூடின வடிவு அழகைக் காட்டி அடிமை கொண்டவன் விரும்பாத பவ்யமான நெஞ்சால் என்ன கார்யம் உண்டு என்கிறாள்-

மணி மாமை  குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-

மணி மாமை குறையில்லா-
நித்ய சம்ச்லேஷத்தால் வி லக்ஷணமாய் பூர்ணமான திரு நிறத்தை யுடையவன் –அநபாயினி யாகையாலே மணிமாமை குறைவிலம்-என்று அறியாதவள் –
மலர் மாதர் –
நிறமே அன்றிக்கே பிரியாத தகாத ஸுகுமார்யத்தை உடையவள் -பரிமளத்தை வடிவாக வகுத்தால் போலே இருக்கை –
உறை மார்பன்-
நித்ய வாசம் பண்ணுகிற திரு மார்பை யுடையவன் -பூவில் பிறப்பே யாய் நித்ய வாசம் பண்ணுவது திரு மார்பிலேயாய் இருக்கை
தான் பிறந்த பூ நெருஞ்சி முள்ளோபாதி யாம் படி மார்பு படைத்தவன் –
பிராட்டி பெருமாளைக் கைப் பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினைக்கில் யாயிற்று -இவள் பூவை நினைப்பது –
அவள் அகலகில்லேன் என்கிற வடிவை நான் இழப்பதே
ந கச்சின் ந அபராத்யதி என்கிறவள் நித்ய வாசம் பண்ணா நிற்க நான் இழப்பதே
அணி மானத் தடைவரைத் தோள்
அணி என்று ஆபரணம் -மானம் என்று அளவு –ஆபரணத்துக்கு ஆபரணமாக தோள்-என்று சீயர் அருளிச் செய்வார்
அணி பெருகிய தோள் -என்று ஒரு தமிழன்
ஆபரணஸ் யாபரணம் -என்று அழகியதாய் -ஆயத்தாச்சா என்று நீண்டு -ஸூ வ்ருதச்ச என்று திரட்சி பெற்று பரிகோபமா என்று -திண்ணியதான தோள்
அடல் ஆழித் தடக்கையன்
அவளும் அவனுமான சேர்த்திக்கும் அது தோள் அழகுக்கும் கல் மதிள் இட்டால் போலே ரக்ஷகனான திரு வாழி –
பிரதிபக்ஷத்தை அதற்கும் ஸ்வ பாவமான திருவாழி யாலே பூர்ணமான திருக் கையை யுடையவன்
பணி மானம் பிழையாமே –
பணி-கைங்கர்யம் -மானம் -அளவு -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இ றே பார்ப்பது -அதிலே ஒன்றுமே தப்பாமே –
அடியேனைப் பணிகொண்ட
ராஜா புத்ரனனுக்கு ராஜ்யத்தை கொடுத்தால் போலே சேஷ பூதனான எனக்கு ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைத் தந்து
பணி கொண்ட மணி மாயன்
பிராட்டியும் தானும் சேர இருந்து கையும் திரு வாழியுமான அழகையும் பிராப்தியையும் காட்டி யாயிற்று அடிமை கொண்டது
கையிலே திரு வாழையை உடைய வஸ்து இ றே ப்ராப்ய வஸ்து
மணி மாயன்
நீல ரத்னம் போலே இருக்கிற மாயோன் -கரியோன்
கவராத மட நெஞ்சால் குறை இலமே.–
ந ஜீவேயம் க்ஷணம் அபி என்று அவன் மேல் விழாத பவ்யமான நெஞ்சால் எனக்கு என்ன கார்யம் உண்டு
கோவை வாயா ள் -திரு வாய் மொழியில் -பூசும் சாந்து என் நெஞ்சமே என்னும் படி விரும்பினவன் உபேக்ஷித்த நெஞ்சால் எனக்கு என்ன கார்யம் உண்டு என்கிறாள் என்று இவ்விடத்தில் சீயர் அருளிச் செய்வர்-
உடையவன் தன் உடைமையை போனான் ஆகில் நானோ இத்தை நோக்குவேன் என்கிறாள் –


விரோதி நிரசன சமர்த்தனாய் அத்யந்த விலக்ஷணனாய் முன்பு என் பக்கலிலே அபி நிவிஷ்டனானவன்-விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டா என்கிறாள் –

மடநெஞ்சால்  குறையில்லா மகள் தாய்செய்து ஒருபேய்ச்சி
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி
படநாகத்து அணைக்கிடந்த பருவரைத்தோட் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறையிலமே.–4-8-3-

மடநெஞ்சால் குறையில்லா
மடப்பம் -மார்த்வம் –முலை உண்ணும் போது யசோதை பிராட்டிக்கு பிறக்கும் பரிவையும் ஏறிட்டுக் கொண்டு வந்த படி
வடிவை மாறாடுகை யன்றிக்கே நெஞ்சிலே க்ரூர்யத்தையும் மாறாடின படி
மகள் தாய்செய்து
தாய் மகளாகச் செய்து -பேயான தன்னை மனுஷியை யாக்குகை அன்றிக்கே தாயாகவும் பண்ணினாள் -மக்கள் என்னக் கடவது இ றே-மனுஷ்யரை –
ஒருபேய்ச்சி
நிக்ருதிக்கு அத்விதீயை என்கை -அதாவது கொடுமை –நலிய வந்தாள் என்னும் சிவிடகாலே அநாதர யுக்தி யாகவுமாம் –
விடநஞ்ச முலைசுவைத்த –
விடம் என்றும் நஞ்சு என்றும் மீமிசையாய் –நாட்டில் விஷயங்கள் எல்லாம் அம்ருத கல்பம் என்னலாம் படியான விஷம் என்னுதல்
பேய்ச்சி விட –
பேயானாவள்உயிரை விடும் படி -நஞ்ச முலை சுவைத்த என்னுதல் -சுவைத்த -பசை யற உண்டபடி -பிராண சஹி தம்பபவ்
மிகுஞானச் சிறுகுழவி
மௌக்யத்தில் குறைவற்று இருக்கிற ரஸ ஞானத்தாலே-இது வேற்று முலை என்று அறிந்த பேர் அறிவை உடையவன் –
இவளை முடித்தது ஐஸ்வர்யமான ஞானத்தால் அன்று -ரஸ ஞானத்தாலே சிவடக்குப் பிறந்து அசுர வர்க்கம் கிட்டினால் முடியாக் கடவதான வாஸ்து ஸ்வ பாவத்தால் முடிந்தாள் இத்தனை –
படநாகத்து அணைக்கிடந்த
இவ்விரோதிகளை நிரசித்து போய் படுக்கையிலே சாய்ந்த படி என்னுதல் –
அப்படுக்கையை விட்டு வந்து விரோதி நிரசனம் பண்ணின படி என்னுதல் –
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய -என்ன கடவது இ றே
பட நாகம் -ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான படத்தை உடையனாகை-அசுர வர்க்கம் கிட்டினால் முடியுமானால் போலே யாயிற்று அனுகூல வர்க்கம் கிட்டினால் வாழும் படியும் –
பருவரைத்தோட்
திரு அநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகையாலே தோள்கள் மலை போலே வளர்ந்த படி
சேஷ பூதனுக்கு பிறந்த விக்ருதி போலே சேஷிக்கு பிறந்த விக்ருதி சொல்லுகிறது
கர்ம நிபந்தமான விக்ருதி இ றே குறை யாவது –
ஆஸ்ரித சம்ச்லேஷங்களில் வரும் விகாரங்கள் குணம் இ றே
பரம்புருடன்
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே அவன் மேலே சாய்ந்த பின்பாயிற்று -சர்வாதிகத்வம் தோற்றுகிறது
நெடுமாயன்
அப்படுக்கையை உபேக்ஷித்து கிடீர் என் பக்கல் வியாமுக்தன் ஆயிற்று
பனிக்கடலில் பள்ளி கோளை பழக விட்டு ஓடி வந்து
கவராத நிறையினால் குறையிலமே.–
அப்படி அளவற ஆதரித்தவன் இப்படி உபேக்ஷிக்க நான் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கவோ
தன் அகவாயில் உள்ளது பிறருக்குத் தெரியாத படி இருக்கும் அடக்கம் -ஸ்த்ரீத்வம் ஆவது –


தன்னைப் பேணாதே பெண் பிறந்தாரைப் பேணும் கிருஷ்ணன் விரும்பாத நிறம் எனக்கு வேண்டா -என்கிறாள் –

நிறையினால்  குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-

நிறையினால் குறைவில்லா
கிருஷ்ணன் தன்னைப் பெறுகைக்கு எருதுகளின் மேலே விழுகிற வியாபாரங்களில் -தான் அவிக்கருத்தையாய் இருக்கிற ஸ்த்ரீத்வத்தால் குறைவற்று இருக்கை
விகார ஹேது உண்டாய் இருக்க -அவிக்கருத்தையாய் இருந்த படி
நெடும் பணைத் தோள்
கீழ் ஆத்மகுணம் சொல்லிற்று -இங்கு ரூப குணம் சொல்லுகிறது -நெடிதாய் பணைத்த தோள் என்னுதல்
நெடிய வேய் போலே இருந்துள்ள தோள் என்னுதல்
அரியன செய்தும் பெற வேண்டும்படி அழகு –
மடப்பின்னை-
ம்ருது ஸ்வபாவை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
வியசன சஹானாய் -சம்ச்லேஷிக்கைக்காக-எருதுகள் கொம்பாலும் குளம்பாலுமாக நெறுக்குண்ட இத்தை அவளுடைய முலையால் பிறந்த விமர்த்தமாக நினைத்து இருந்தான்
பொருவிடை -கேவல ருஷபங்கள் அல்ல -அஸூரா வேகத்தால் உத்தோன்முகமான ருஷபங்கள் -ஏழு -ஓன்று இரண்டு அல்ல –
அடர்த்து -ஏழையும் ஒரு காலே ஊட்டியாக நெரிக்கை-
உகந்த -அவை நிரஸ்தமானவாறே-இனி இவளை லபித்தோம் என்று உகந்தான் –
மடப்பின்னை முலை அணைவான்-பொறையினால் -பொரு விடை -ஏழு -அடர்ந்து உகந்தான் –
கறையினார் துவர் உடுக்கைக்
கறை மிக்கு துவரூட்டின -சிவந்த தோலாயிற்று -உடுக்கை -இடையர் காட்டிலே போனால் முன் கிழியாமைக்கு உடுக்கும் உடைத் தோலைச் சொல்லுகிறது –
துவர் என்னைச் செய்தே-கறையினார் என்கிறது -காட்டில் பழங்களை அறுத்து இடுகையாலே கறை மிக்கு இருக்கை –
கடையாவின் –
கடியாவையும் -கறக்கும் மூங்கில் குழாயையும்
கழி கோல் கை-கழி கோல் ஆகிறது -வீசு கோல்
கடையாவையும் -வீசு கோலையும் கையிலே உடையவர்
காலத்தில் கறக்க ஒட்டாத பசுக்களை பாங்கான போது கறைக்கக்கு ஒரு கடை யாவையும் -அபவ்யமான பசுக்களை நியமிக்கைக்கு ஒரு வீசு கோலையும் கொண்டு திரிகை –
கழி கோல் -கன்றுகள் பசுக்களோடு போனால் முலை உண்ணாமைக்கு வாயிலே கட்டும் கொறுக் கோல் என்றுமாம்
சறையினார் -சறைகை மணி என்று ஒரு மணி -இடையர் அரையிலே சேர்த்துக் கட்டி பசுக்கள் த்வனி வழியே வருகைக்காக முன்னே ஓடுவார்கள் –அத்தை உடையவர் என்னுதல் –
சறை என்று தாழ்வாய்-தாழ்ந்த இடை ஜென்மத்தில் பிறந்தவர் என்னுதல்
சறாம்பி இருக்கையாய் உடம்பை பேணாது இருக்கை என்னுதல்
பசுக்களின் பின்னே திரிகையாலே தன்னைப் பேண அவசரம் இன்றிக்கே இருக்கை –
ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரக்ஷணத்துக்காக தன்னைப் பேணாத வடிவை யாயிற்று இவள் ஆசைப் படுகிறது
தீஷிதம் வ்ரத சம்பன்னம் வராஜி நதரம் சுசிம் குரங்க ஸ்ருங்க பாணிஞ்ச பஸ்யந்தீத்வா பஜாம்யஹம் –
கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே-
அவன் விரும்பாத தளிர் நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
கீழ் மணிமாமை என்ற இடம் -அழகிய நிறம் என்றது
இங்கு தளிர் நிறம் என்றது -ஸ்நிக்தமான நிறத்தைச் சொல்லுகிறது –


பரம பிரணயி யான சர்வ ரக்ஷகனான  தசரதத் மஜன் விரும்பாத அறிவினால் ஒரு பிரயோஜனம் இல்லை என்கிறார் –

தளிர்  நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-

தளிர் நிறத்தால் குறையில்லாத்
பூர்ண சந்திராநநாம் ஸூ ப்ரூம் சாருவ்ருத்த பயோதராம் சர்வாவி திமிராதிச-
பத்துத் திக்கிலும் உண்டான அந்தகாரத்தைப் போக்கும் ஒளியை உடைய நிறத்தால் பூர்ணை யானவள்
தனிச்சிறையில்
பிரபையையும் ப்ரபாவனையும் பிரித்தால் போலே பெருமாளை பிரிந்து ராக்ஷஸே மத்யத்திலே நிருத்தையாய் இருந்த படி
விளப்புற்ற
கிருசா மனஸ நே நச-என்று திருவடியால் பெருமாளுக்கு சொல்லப் பட்டவள்
தேவ ஸ்த்ரீகள் காலில் விலங்கு கழற்றுகைக்கு தான் சிறை இருந்தாள் என்று லோகத்தில் ப்ரஸித்தியானவள் என்றுமாம் –
கிளி மொழியாள் காரணமாக்
மதுரா மதுரா லாபா -என்று அவள் பேச்சை அவன் வார்த்தை வழியே நினைத்து அவள் நிமித்தமாக
கிளர் அரக்கன்
தாயையும் தமப்பனையும் சேர இருக்க ஒட்டாதே பிரித்த மிகையை யுடையவன்
நகர் எரித்த
ராவணனுடைய சம்ருத்தமான நகரத்தை தக்தமாக்கினவன்
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
ராவண வத அநந்தரம் மீண்டு எழுந்து அருளி -முடி சூடி வைத்த வளையமும் தாமுமாய் இருந்த படி
தேனை யுடைத்தாய் மலர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலையால் கமழா நின்றுள்ள திரு முடியை உடையவன்
களி -தேன் -அலங்கல் -மாலை
அவள் இதர சஜாதீயனாய் வந்து அவதரித்தால் அது திருத் துழாயும் அங்குத்தைக்கு அனுரூபமான புஷபங்களாகக் கடவது
அவன் கரு முகை மாலை சூடினும் அத்தையே சொல்லாக கடவது
பாண்டியன் ஏதேனும் ஒன்றைச் சூடிலும் வேப்பம்பூ என்ன கடவது இ றே
கடல் ஞாலத்து அளி மிக்கான்-
சம்சாரிகள் பக்கலிலே தண்ணளி மிக்கவன்
தேவர்கள் பிராட்டியை பிரிப்பது இளைய பெருமாளை பிரிப்பதாய் எழுந்து அருளிவிக்கும் படி இ றே
சம்சாரிகள் நோவைக் கண்டு தண்ணளியால் எழுந்து அருளி இறுக்கியபடி
கவராத அறிவினால் குறையிலமே.–
இப்படி தண்ணளி மிக்கவன் விரும்பாத அறிவினால் எனக்கு என்ன கார்யம் உண்டு –


அறிவில்லாதார்க்கு ஸ்வ ப்ராப்தயுபாயங்களை உபதேசித்து அறிவு பிறக்கைக்காக யோக்யதை இல்லாதாரை வடிவு அழகாலே தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன் விரும்பாத லாவண்யத்தால்-என்ன கார்யம் உண்டு என்கிறாள் –

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-

அறிவினால் குறையில்லா
பகவத் விஷயத்தில் அறிவு கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே இருக்கை –
அன்ன பா நாதிகள்-பெறா விடில் செல்லாதாய் இருக்கும் அறிவு ஒன்றிலுமாயிற்று நிரபேஷராய் இ றே இருப்பது
அகல் ஞாலத்தவர்
இந்த பூமிப பரப்பில் உள்ளாரில் அறிவில் குறை பட்டு இருப்பார் இல்லை –
அவர் அறிய,
கல்லில் துளை யுண்டாக்கினால் போலே சம்சாரிகள் அறியும் படி –
நெறி எல்லாம் எடுத்து உரைத்த
சேதன பேதத்தோ பாதி போறும் இ றே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி
கர்ம ஞான பகுதிகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்மாபிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த
நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
நிறைந்த ஞானத்தை உடைய அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் –
ஞானாதிகன் சோஜன்னது இ றே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியானை ஞான பூர்த்தியை யுடையவன் –
குறிய மாண் உருவாகி,
அறிவிக்கைக்கு அயோக்யராய் இருப்பாரை -அழகாலே அகப்படுத்தின படி –
கூறிய -கோடியை காணிக்கை யாக்கினாப் போலே வளர்ந்ததிலும் காட்டில் வாமன வேஷமே ஆகர்ஷகமான படி
மாண் உருவாகி,-முன்பும் இதுவேயோ ஸ்வரூபம் -என்னும் படி பிறந்த அன்றே இரப்பிலே தகண் ஏறின படி
கொடுங் கோளால் –
வெட்டிய கோளாலே அழகைக் காட்டி அல்லேன் என்ன ஒண்ணாத படி நெறுக்கிக் கொள்கை –
வஞ்சித்துக் கொண்ட -என்றுமாம் –
அதாகிறது மூவடி என்று இரந்து ஈரடியாலே அடக்கியும் -சிறிய காலைக் காட்டி பெரிய காலால் அளந்தும் செய்த படி
அவன் செவ்வைக் கேட்டுக்கு ஈடாக தானும் செவ்வைக் கேட்டாலே வாங்கின படி
நிலங்கொண்ட
பூமியை தன்னாக்கிக் கொண்ட
கிறி அம்மான்
பெரு விரகனான சர்வேஸ்வரன் -அவன் தரும் வழியை அறிந்து வாங்கின விரகு
கவராத கிளர் ஒளியால் குறையிலமே.
ஆஸூர ப்ரக்ருதிகளையும் வஞ்சித்து தன்னதாக்கிக் கொள்ளுமவன் -ஆதரித்து இருக்கிற என்னை உபேக்ஷிக்குமாகில் இந்த லாவண்யத்தால் என்ன கார்யம் உண்டு -என்கை -கிளர் ஒளி -மிக்க ஒளி -சமுதாய சோபை –


தமப்பன்  எதிரியாக பாலன் ஆனவனுக்கு உதவினவன் தான் உதவாமே நோவு படுகிற எனக்கு உதவானாகில் என்னுடைய ஆபரணங்களால் என்ன கார்யம் உண்டு -என்கிறாள் –

கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-

கிளர் ஒளியால் குறைவில்லா
பெருகா நின்றுள்ள ஒளியால் மிக்கு இருக்கை -ஜ்வலந்தம் என்கிற மந்த்ர லிங்கம் தோற்ற சொல்லுகிறாள்
அரி உருவாய்க்
சிம்ம ரூபியாய் தன்னை அழிய மாறி உதவின படி –
கிளர்ந்து எழுந்து,
சீறிக் கொண்டு தோன்றி -பிறை எயிற்று அன்று அடலரியாய் பெருகினானை -என்கிறபடியே ஆஸ்ரித வாத்சல்யத்தாலே சீறிக் கொண்டு கிளர்ந்த கிளர்த்தி –
கிளர் ஒளிய இரணியனது
மிக்க தேஜஸை யுடைய ஹிரண்யன் -நரசிம்ஹமும் பிற்காலிக்க வேண்டும்படி யாயிற்று -அவன் கிளர்த்தி –
அகல்மார்பம் –
தேவர்களுடைய வரத்தை ஊட்டியாக இட்டுத் திரு யுகிருக்கு இரை போரும்படி வளர்ந்த மார்பை –
கிழித்து உகந்த,
நரசிம்மத்தின் உடைய தோற்றரவிலே ஒத்துப் பதம் செய்தது -அநாயாசேன கிழித்தான் –
சிருக்கனுடைய விரோதி போகப் பெற்றது என்று உகந்த படி –
மத்பிதுஸ் தத் க்ருதம் பாபம்-என்று இவன் கால் கட்டாது ஒழிய பெற்றோம் என்று உகந்தபடி –
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன்,
கிளர்கிற அக்னி போலே இருக்கிற திவ்யாயுதங்களை யுடையவன்
ஹிரண்யன் திரு உகிருக்கு இரையாய் போகையாலே திவ்யாயுதங்களுக்கு அவகாசம் இல்லையாய் யாயிற்று -பாத்தாலே வந்த கிளர்த்து –
மணி நீல-வளர் ஒளியான்-
நீல மணி போலே வளரா நின்றுள்ள ஒளியை யுடையவன் –
வெளுத்த திரு நிறமாய் இருக்க -நீலமாகச் சொல்லிற்று -விரோதி போன பின்பு பிறந்த குளிர்த்தியை பற்ற
சீற்றம் எல்லாம் தெளிந்து சீதளமான நிரவதிக தேஜஸை யுடையவன்
கவராத வரிவளையால் குறையிலமே.–
அவன் வாங்கித் தன் கையில் இட்டுக் கொள்ளாத விலக்ஷணமான வளையால் என்ன கார்யம் உண்டு-

—————————————————————-

ஜகத்துக்காக உபகரிக்குமவன் தனக்கு அசாதாரணை யான என்னை உபேக்ஷிக்குமாகில் -என் உடம்பை பேணி இருக்குமதுக்கு என்ன பிரயோஜனம் உண்டு என்கிறாள் –

வரி  வளையால் குறையில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8-

வரி வளையால் –
வளை என்று சங்கு -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தாலே –
குறையில்லாப் பெரு முழக்கால்
சத்ருக்கள் அளவல்லாத மஹா த்வனியாலே
சகோஷாதார்த்த ராஷ்டராணாம் ஹ்ருதயா நிவ்தாராயத் -என்கிறபடியே –
வரி வளையால் -பெரு முழக்கால்
ஹஸ்தேன ராமேண -என்னுமா போலே
அடங்காரைஎரி அழலம் புக ஊதி
எரிகிற அழலம்-எரிகிற அக்னி -எதிரிட்ட துர்யோத நாதிகள் நெஞ்சிலே பய அக்னி குடி புகும் படி ஊதி –
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனி தான் பிரதி கூலர் மண் உண்ணும் படியாய் அனுகூலர் வாழும் படியாய் இ றே இருப்பது
தேவானாம் வவ்ருதே தேஜ ப்ரஸாதஸ் சைவயோகி நாம் –
சகோஷா தார்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயா நிவ்யதாரயாத்
இருநிலம் முன் துயர் தவிர்த்த
பரப்பை யுடைத்தான பூமிக்கு பண்டு உண்டான துக்கத்தைப் போக்கினவன்
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும்
பாரத சமரத்தில் வீர ஸ்ரீ க்கு தோற்று ப்ரஹ்மாதிகள் திருவடிகளில் விழுந்து ஏத்தும் கீர்த்தியை யுடையவன் –
தெரிவரிய-துர்ஜேயராகை -ஈஸ்வரனோடே மசக்குப் பரலிடும்படி யாய் இருக்கை –
விரிபுகழான்
எல்லாரும் ஏத்தினாலும் எத்தின இடம் அல்பமாய்-ஏத்தாத இடம் மிக்கு இருக்கை –
கவராத மேகலையால் குறையிலமே.–
அவன் மாறாடாத பரிவட்டத்தால் என்ன கார்யம் உண்டு –
ரக்ஷணத்தில் குறைந்த அம்சம் அவனுக்கு அவத்யம்-
தன் உடைமை தனக்காய் இருக்கிறது இவளுக்கு அவத்யம் – –

——————————————————————–

ஆஸ்ரித விரோதிகளை அழியச்  செய்து சர்வரும் உஜ்ஜீவிக்கும் வழி எண்ணுமவன்  விரும்பாத உடம்பு கொண்டு கார்யம் என் -என்கிறாள் –

மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9-

மேகலையால் குறையில்லா
உடை அழகியதாய் இருக்கை
மெலிவுற்ற
ம்ருது ஸ்வ பாவை -பிரியாத தகாதவள்
அகல்அல்குல
அகன்ற நிதம்ப பிரதேசத்தை யுடையவன்
போகமகள்
போக யோக்யையான பெண்
ஒப்பனையாலும் ஆத்மகுணத்தாலும் ரூபகுணத்தாலும் பருவத்தாலும் குறைவற்றவள்
புகழ்த்தந்தை
உஷா யினுடைய பிதா வென்னும் வார்த்தைப் பாட்டை யுடையவன் என்னுதல்
ஸுர்ய வீர்யாதி குண பிரதை –
விறல்வாணன்
மிடுக்கை யுடைய வாணன் -பாராயமம கிம்புஜை -என்ற யுத்த கண்டூதியாலே-மிடுக்குக்கு போக்கு விட வேண்டும்படியானவன்
ஒரு தேவதா சந்நிதியில் சத்வம் உத்ரிக்த்மாகை ப்ராப்தமாய் இருக்க பரஹிம்ஸை இ றே வேண்டிக் கொண்டது
புயம்துணித்து
தலை யறுக்கைக்கு குற்றம் போந்து இருக்க உஷை பித்ரு ஹீனை யாக ஒண்ணாது என்று தோள்களை துணித்து விட்டான்
நாகமிசைத் துயில்வான்போல்-உலகெல்லாம் நன்கொடுங்க-யோகுஅணைவான்
பூ பாரமான விரோதிகள் போன பின்பாயிற்று படுக்கையிலே பொருந்திற்று
துயில்வான்போல்-கண் வளர்கிறான் என்று பேர் -சேதனருடைய ஹித சிந்தை யாயிற்றுப் பண்ணுகிறது
சகல சேதனரும் -நம்மோடே சேர்ந்து தலைக்கு கட்ட வற்றே -என்று யோக நித்திரை பண்ணுகிறவன்
கவராத உடம்பினாற் குறையிலமே.–
இப்படி சர்வரையும் ஆதரிக்கிறவன் என்னை ஆதரியான் ஆகில் என் உடம்பைக் கட்டிக் கொண்டு கிடக்கவோ-
அவன் பக்தாநாம் என்று இருக்குமா போலே இவளும் அவனது என்று இ றே இருப்பது –


முதல் பாட்டில் சொன்ன சீல குணத்தையும் விரோதி நிவ்ருத்தியையும்  சொல்லி -அவன் விரும்பாத சத்தையால் எனக்கு என்ன கார்யம் உண்டு -என்று உபக்ரமத்தோடே சேர உபசம்ஹரிக்கிறாள்-

உடம்பினால்  குறையில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-

உடம்பினால் குறையில்லா-அசுரர்
ஆத்ம வஸ்து குறைய உடம்பை குறைவற பேணுமவர்கள் –
ஆத்ம வஸ்துவில் பண்ணும் அஹம் புத்தியை உடம்பிலே பண்ணி அதுக்கே நன்மையை பண்ணிப் போந்தவர்கள்
உயிர்பிரிந்த மலைத்துண்டம்-கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம்- துணித்து
பிராணங்களோடே சஞ்சரித்து திரிந்த பர்வதங்கள் இந்திரன் கையில் வஜ்ராயுதத்தால் துணியுண்டு பல சகலங்களாய் கிடந்தால் போலே திரள் திரளாக வந்த அஸூர ஸமூஹத்தை துணித்து
உகந்த-
ஆஸ்ரித விரோதிகள் போகப் பெற்றோம் என்று உகந்தான் -பிராப்தி ஒத்து இருக்க அழியச் செய்து அவர்கள் விநாசம் பிரியமாம் படி இ றே ஆஸ்ரித பக்ஷ பாதம் –
தடம்புனல சடைமுடியன்
பெரு வெள்ளமான கங்கா ஜலத்தை ஜடையிலே ஏக தேசத்திலே தரியா நின்றேன் என்ற அபிமானத்தை யுடைய ருத்ரன் –
தனிஒருகூ றமர்ந்துறையும்
தானே தனக்கு அடைத்த கூற்றிலே நிரந்தர வாஸம் பண்ணும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–
பிராட்டி திரு மார்பை அபிமானித்து இருக்குமா போலே துர்மானிக்கும் அணையலாம் படி உடம்பு கொடுத்து இருக்குமவன்
இப்படி பொதுவான உடம்போடு என்னை அணைக்கைக்கு அவன் மேல் விழாத பின்பு என்னால் எனக்கு என்ன கார்யம் உண்டு
முன்பு ஆத்மாத்மீயங்களைவேண்டா என்றது -அதுக்கு எல்லாம் ஆச்ரயமான ஆத்மவஸ்துவும் வேண்டா என்கிறாள் –


நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றார் காழ்ப்பு ஏறின சம்சாரத்தை அறுத்து பரமபதத்தில் புகப் பெறுவார் என்கிறார்  –

உயிரினால்  குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-

உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
சிங்க்யாதரான ஆத்மாக்களால் பூர்ணமான-ஸமஸ்த லோகங்களுடைய நிர்வாகத்தையும் தன் சங்கல்பத்தாலே பண்ணி
தயிர் வெண்ணெய் உண்டானைத்
ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்யமே தாயகமாக யுடையவனை -இத்தால் சர்வேஸ்வரனாய் வைத்து ஆஸ்ரித ஸூ லபனானவனை என்கை
தடங் குருகூர்ச் சடகோபன்-செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
பரைப்பை யுடைத்தான திரு நகரி -ஈஸ்வரன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள் வேண்டா என்கிற இவர்படி காணத் திரண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் இடம் போந்து இருக்கை –
செயிர் -குற்றம் –இல் – இல்லாமை -குற்றமற்ற இப்பத்து –
ஈஸ்வரன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள் வேண்டா என்கிற இடம் அகவாயிலும் உண்டாம் படி இருக்கை –
வயிரம் சேர் பிறப்பு அறுத்து
தனக்கு அநிஷ்டம் ஆனால் தன்னால் கழிக்க ஒண்ணாத படி காழ்ப்பு ஏறின சம்சாரத்தை அறுத்து
வைகுந்தம் நண்ணுவரே.–
இங்கே இருந்து அவன் விரும்பாதவை வேண்டா வென்று க்லேசப்படாதே அநேக சரீரம் பரிக்ரஹம் பண்ணி அனுபவிக்கலாம் தேசத்தை பெறுவர்கள்


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: