திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -4-7–

வர்ஷேண பீஜம் பிரதி சஞ்ஜஹர்ஷ -என்னும் படியாலே-ம்ருத சஞ்சீவனமான பகவத் திரு நாம ச்ரவணத்தாலே உணர்ந்து
பொறுக்க ஒண்ணாத படி தமக்கு வந்த அலாபத்தை அனுசந்தித்த ஆழ்வார் –
ரக்ஷகனாய் சர்வஞ்ஞனாய் ஆத்மநாதனாய் எப்போதும் தர்ச நீயனாய் இருந்துள்ள எம்பெருமானைக் காண வேணும் என்று கூப்பிடுகிறார் –


நெடும் காலம் கூப்பிடச் செய்தே-நீ என்னை விஷயீகரியாதபடியாக நான் பண்ணின பாபத்தின் மிகுதி இருந்தபடி என் என்கிறார் –

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
நன்மை ஒன்றும் இன்றிக்கே -அதி ஷூ த்ரனாய் இருந்தேனே யாகிலும் -சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயத்திலும் பெரிது -நான் பண்ணின பாபம் –
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று-காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
ஆபத்துக்கு உதவும் ஸ்வ பாவனே -ஆபன் நிவாரண உபாயம் அறியுமவனே -நிருபாதுக பந்துவே -என்று பலகாலம் சொல்லி
க்ஷணம் தோறும் நிரந்தரமாக தொழுது இருந்தால்
கைதலை பூசல் இடுகையாவது -தலையிலே கையை வைத்து கூப்பிடுகை என்றுமாம்
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.
உன்னுடைய அழகிய திருவடியை காண வருவதுவும் செய்கிறிலை
நீ வாரா விட்டால் என்னை அங்கே அழைத்து கொள்வதுவும் செய்கிறிலை-

 


எம்பெருமான் தம் திறத்தில் பண்ணின உபகாரங்களை சொல்லி  -இப்படி உபகாரகனான நீ நான் அவசன்னனாய் உன்னைக் காண வேணும் என்று கூப்பிட்ட இடத்திலும் வருகிறிலை-என்று இன்னாதாகிறார் –

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–4-7-2-

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்-வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
உன் பக்கல் மேன்மேல் என திருஷ்ணையைப் பிறப்பிப்பதுமாய் -புறம்பு எங்கும் வைத்ருஷ்யண்யத்தை பிறப்பிப்பதுமாய் -என்றும் அனுபவியா நின்றாலும் குறையாத நிரதிசய ஆனந்தத்தை எனக்குத் தந்து இது தானே உனக்கு பேறாய் இருக்குமவனே
ஆஸ்ரிதற்கு உபகரிக்கைக்காக உன்னுடைய ஐஸ்வர்யமான படியைத் தவிர்ந்து அர்த்தியானவனே-உன்னுடைய சம்ச்லேஷத்தாலே போக்கக் கடவ நல்ல காலம் எல்லாம் வியசனத்தாலே நான் இருந்து கூப்பிட்டால் –
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
உன்னை விஸ்லேஷித்த ஸூன்யமான காலம் என்றுமாம்
நள் இ ராவும்-மத்யர்த்தம்
கள்ள மாயா!
என் கண்களுக்கு தோற்றாது இருக்கிறவனே
உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–
என் கண்கள் காண வந்து உன்னை எனக்கு தந்து அருளுகிறது இல்லை
கண் காண வந்து ஈய வேணும் என்றும் சொல்லுவர்


எனக்கு உனக்கு காட்டாது ஒழிந்தால் -நீ என்னைக் காண்கைக்கு பாக்யம் பண்ணிற்று இல்லை என்று நான் நிராசனமாம் படி ஒன்றும் சொல்லுகிறிலை என்று இன்னாதாகிறார் –

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-

அனுபவ விநாசியம் இல்லாத தான எத்தனை பாபங்களை பண்ணினேனோ
நல்லார் தீயார் என்று பாராதே அவர்களுடைய அபேக்ஷிதங்களை அநாயாசேன செய்து அச்செயலாலே என்னை அடிமை கொண்டவனே
ஆஸ்ரிதற்கு அத்யந்த பவ்யனானவனே-என்று கூப்பிட்டு அந்த தாருண த்வனியாலே அந்தக்கரணம் நீராய்க் கண்ண நீர் பாயா நின்றால்-


ப்ரஹ்மாதிகளும் கூட ஆசைப்பட்டுக் காண மாட்டாத படியான பெருமையை உடைய சர்வேஸ்வரனை அதி ஷூ த்ரனான நான் காண வேணும் என்று கூப்பிடா நின்றேன் -என்ன நிர் லஜ்ஜனோ -என்கிறார் –

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ
நான் காணும் படியாக என் கண் எதிரே வந்து –
தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்கள் மிளிர –
பிறழ,-விளங்க என்றும் சொல்லுவார் –
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்
ஓட்டற்ற செம்பொன் போலே இருக்கிற அழகிய திருவடியைக் காட்டி என்னை அடிமை கொண்டவனே
நின்று அருளாய் என்று என்று,-நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
நிர் லஜ்ஜனாய் அதி ஷூ த்ரனான நான் இவ்வுலகத்தில் இருந்து கதறினால் என்ன பிரயோஜனம் உண்டு


ப்ரஹ்மாதிகளுக்கும் காண முடியாது இருக்கிற உன் அழகைக் காண வேணும் என்று ஆசைப்பட்டு தரிக்க மாட்டாமையாலே
இப்பொழுதே வந்திடாய் என்று அபேக்ஷித்து வரும் போது தப்பாமே காண வேனும் என்று பார்த்து இருப்பான்
என்னுடைய சாபலம் இருந்தபடி என் என்கிறார்-

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5-

உபகாரகனே -பிரதிகூல நிரசன ஸ்வ பாவனான திரு வாழியை உடையவனே –
ஆஸ்ரிதருடைய அபேக்ஷிதங்கள் செய்து கொடுக்கைக்கு ஈடான சாமர்த்தியத்தை உடையவனே
அழகிய தோளும் கையும் திரு வாழியும் கணக்கு கூடுமேயோ என்று
உன் அழகை நினைத்து எப்போதும் கண்ண நீர் பாயா நின்று கொண்டு பிராணன் அற உலர்ந்து-

—————————————————————

என் பக்கலிலே சதா ஸந்நிஹிதனாய் இருந்து வைத்து உன்னைக் காட்டாது ஒழி கிறது -நீ உன்னைக்காட்ட நினையாமை என்று அறிந்து வைத்து -பிரதி க்ஷணம் காண வேணும் என்று ஆசைப்படா நின்றேன் -அதுக்கு அடிஅறிவு கேடு என்கிறார் –

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-

உன்னைக் காண்கைக்காக எங்கும் பார்த்து உன்னைக் காண வேணும் என்று வாயாரச் சொல்ல மாட்டாதே
என் நெஞ்சினுள்ளே மிகவும் ஆசைப்படா நின்றேன்
ஞானம் இல்லை -அறிவில்லை
என்றும் ஓக்க என்னுடைய ஆத்மாவிலும் சரீரத்திலும் மற்றும் இந்திரியாதிகளிலும் பிரியாதே எங்கும் ஸந்நிஹிதனாய் இருந்து வைத்து செய்யாது ஒழிகிறது செய்ய நினையாமை இ றே என்று மிகவும் அறிந்து வைத்தே –


நீர் கிடந்து கூப்பிடுகிறது என் -எம்மை அறிவித்து உம்முடைய சம்சார துக்கம் எல்லாம் கெடுத்தோம் இ றே என்ன அத்தால் போராது என்கிறார் –

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

அறிந்து அறிந்து, தேறித் தேறிஇத்யாதி
உன்னுடைய பிரசாதத்தாலே அறிவு பிறந்து அது ஒரு காலுக்கு ஒரு கால் அந்தக்கரணம் தெளிவதும் செய்து
தெளிந்த மனசிலே பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை விசததமமாக அனுசந்தித்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும்-இத்யாதி
நிரஸ்த சாம்சாரிக துக்கம் ஆனேன் -அதி பரிமளமான திருத் துழாய் மாலையை உடைய சர்வேஸ்வரனான உன்னை நான் கண்டு கொண்டு


இனி உமக்குச் செய்யாதது என் என்னில் -இஸ் சம்சாரத்தில் தேவரீரைக்  கண்டு அடியோங்கள் எல்லா அடிமைகளும் செய்து உஜ்ஜீவிக்கும் படி வருகிறிலை என்கிறார் –

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

கண்டு கொண்டு, என் கைகள் ஆர-இத்யாதி –
என் கண்கள் விடாய் தீரக் கண்டு கொண்டு என் கைகள் பூரிக்கும் படி நிரதிசய போக்யமான உன் திருவடிகளில் மிகவும் அடிமை செய்து நிரவதிக ப்ரீதியாலே ஸ்ரீ வைஷ்ணவர்களோடே நான் பாடியாட-
சூழ் கடல் ஞாலத்துள்ளே-வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.
சம்சாரத்தின் உள்ளே ஸர்வேச்வரத்வ ஸூ சகமான திருத் துழாய் மாலையை உடைய சர்வேஸ்வரனான நீ


எம்பெருமானைக் காண் கைக்கு ஈடான கர்மயோகாதி உபாயங்கள் இன்றிக்கே இருக்கிற நான்
காண வேணும் என்று ஆசைப்பட்டால் காண்கைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்-

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-

இடகிலேன் ஒன்று-இத்யாதி
எம்பெருமான் இனியனாம் படி பசித்தார்க்கு சோற்றை இடுதல் -தாஹித்தார்க்கு தண்ணீர் வார்த்தால் செய்ய மாட்டு கிறிலேன்-
அர்த்த லோபத்தாலே அவை செய்யா விட்டால் இந்திரியங்களை வெல்லவும் மாட்டு கிறிலேன்
கடவனாகி –
அதிலே கடவனாய் –
மட வல் நெஞ்சம் -என்று தொடங்கி
பகவத் குணங்களில் விழும் ஸ்வ பாவமாய் விழுந்தால் எம்பெருமான் தன்னாலும் எடுக்க முடியாதபடியான நெஞ்சில் ஸ்நேஹம் மிக்குத் திருவடிகளில் தாஸ்ய ரசத்தை அறிந்து வைத்தே நினைத்த படி கிடையாமைக்கு ஈடான பாவத்தை பண்ணின நான் ஐஸ்வர்ய ஸூ சகமான திரு வாழியை ஏந்தின அழகை உடைய சர்வேஸ்வரனை –


காணப் பெறா விட்டால் மறந்து ஸூ கமே இருக்க ஒண்ணாத படி எனக்குத் தக்கதொரு ஞான  த்ருஷ்ட்டி எங்கனே உண்டாயிற்று -என்று இன்னாதாகிறார் –

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-

சக்கரத்து அண்ணலே! -இத்யாதி –
திரு வாழி யைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே என்று இவ்வுக்தியோடே கூட தரப்பட்டு கண்ண நீர் ததும்பும்படி நீ வந்து தோற்றி யருள சம்பாவனை யுள்ள தொரு பார்ஸ்வத்தை நோக்கி நின்று ஸாலத் தளர்ந்தேன்
மஹா பாபி யாகையாலே காணப் பெறுகிறிலேன் –
மிக்க ஞான மூர்த்தி-இத்யாதி –
பரிபூர்ண ஞானாகாரனாய் வேதைக ஸமதி கம்யனாய் இருக்கிறவனை –
கண்டு தழுவுவனே-கண்டு அனுபவிப்பேன்


நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றார் எம்பெருமானோடே நித்ய சம்ச்லேஷம் பண்ணலாம் திரு நாட்டிலே செல்லுவார் என்கிறார் –

தழுவி  நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்-
நான் விடுவேன் என்றாலும் விட ஒண்ணாதபடி அவனைத் தழுவி நின்ற அதிமாத்ர ஸ்நேஹத்தாலே இப்படிப்பட்ட ஸ்நேஹத்தை விளைப்பித்த திருக் கண்களை உடையவனை
குழுவு மாடம்-என்று தொடங்கி –
சம்ருத்தமான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செயலாய் -பகவத் குணங்களுக்கும் பூர்ணமாக வாசகமாய் -ஸூ பாதகமான ஆயிரம் திருவாய் மொழியிலும் இது திருவாய் மொழியை –
தழுவ-இதில் ஓடுகிற கருத்தோடு கூட –


ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: