திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-7–

வாதா தப க்லாந்தமிவ ப்ரணஷ்டம் வர்ணேஷ பீஜம் ப்ரதி சஞ்ஜ ஹர்ஷ என்னும் படியாலே -ம்ருத சஞ்சீவனமான பகவன் திரு நாம ஸ்ரவணத்தாலே –
மோஹம் போய் உணர்த்தி பிறந்து -இத்தாலே மோஹத்தையும் இழந்த இத்தனை இ றே
மோஹித்த போது கிலேசம் இல்லை -உணர்த்தி பிறந்தது பேற்றுக்கு உறுப்பாகை அன்றியே அலாபத்தை அனுசந்தித்து க்லேசப்படுகைக்கு உறுப்பாயிற்று-

-பொறுக்க ஒண்ணாத படி தமக்குப் பிறந்த -அலாபத்தை அனுசந்தித்த ஆழ்வார் -ஆபத் சகனாய் -ஆபத்துக்கு நிதானம் அறிந்து பரிஹரிக்கை அடியான சார்வஞ்ஞத்தை உடையனாய் உதவுகைக்கு அடியான ப்ராப்தியை உடையனாய் உதவிற்று இலனேயாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவனாய் இருந்துள்ளவனை காண வேணும் என்று கேட்டார் அடங்க நீராம் படி கூப்பிடுகிறார் –

——————————————————————-

நெடும் காலம் கூப்பிடச் செய்தே-நீ என்னை விஷயீகரியாதபடியாக நான் பண்ணின பாபத்தின் மிகுதி இருந்தபடி என் என்கிறார் –

சீலம்  இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

சீலம் -என்று வருத்தம் -இல்லா -என்கிறது இல்லாமை -அதாவது நன்மை ஒன்றும் இன்றிக்கே இருக்கை-சிறியே னேலும்-இதுக்கு முன்பு நன்மை இல்லா விட்டால் –இனி நன்மை உண்டாக்குவோம் -என்றாலும் –அதுக்கும் ஆஸ்ரயம் இன்றிக்கே இருக்கிறபடி-
ஸ்வரூபம் அணுவாய் -ஞானத்தால் விபூவாய் இருக்கிற ஆத்மவஸ்து ஆற்றாமையால் அந்த ஞான பிரபையும் அழிந்து அணு பரிணாமமான ஸ்வரூபமே யாய் இருக்கை
இப்படி அதி ஸூத்ரனாய் இருந்தேனேயாகிலும்
செய்வினையோ பெரிதால்;
நான் பண்ணின பாபம் சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயத்திலும் பெரிசு
ஈஸ்வரனைப் போலே சங்கல்பத்தாலே உண்டாக்கினேன் அல்லேன்-
என் ஸ்வரூபத்தில் உள்ளது ஓன்று அன்று -நான் சூழ்த்துக் கொண்ட பாபம்
அவன் தந்த அறிவையும் விளாக்குலை கொண்டு அவனுடைய ஷமாதி குணங்களுக்கும் அவ்வருகாம் படி இ றே என் பாவத்தின் பெருமை –
அவன் தந்த பக்தி ரூபா பன்ன ஞானமும் கார்ய கரம் அன்றிக்கே-அவன் குணங்களுக்கும் அவிஷயமாய் இருக்கை
ஓ என்கிறது ஆச்ரயத்தின் சிறுமையையும் -பாபத்தின் பெருமையையும் பார்த்து ஆச்சர்யத்தில் யாதல் -விஷாதி அதிசயத்தில் யாதல்
திரு நாம ஸ்ரவணத்தால் உணர்த்தி பிறந்ததாகில் இப்போது இவருக்கு பாபம் என் என்னில்-
சத்தா தாரகமான விஷயத்தை தெரிந்து இருக்கும் போது இதுக்கு அடியாய் இருபத்தொரு பாபம் உண்டாக வேண்டாவோ –
பெரிது என்னும் இத்தனை போக்கி பரிச்சேதிக்க ஒண்ணாது -சமர்த்தாவபி தவ் யன்மாம் –
தம்முடைய பாபப்ரஸுர்யத்தை அனுசந்தித்த அனந்தரம் அதுக்கு பரிஹாரமாக-அவனுடைய ஆபத் ஸகத்வத்தை அனுசந்திக்கிறார் –

ஞாலம் உண்டாய்!
தம் தாமல் பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்துக்கு உதவுமவனே
ஜகத்துக்கு வந்த நோவு ஒருவனுக்கே உண்டானால் உதவலாகாதோ
அறிந்து கூப்பிடுவார்க்கு உதவலாகாதோ
பிரளயங்கதையான பூமி தன்னை எடுத்துக் கொள்ளில் அன்றோ நான் பாபத்தை போக்குகைக்கு பிராப்தி உள்ளது
ஞான மூர்த்தி!
ஆபத் சகன் ஆனாலும் ஆபன் நிவாரண உபாயம் அறியான் ஆகில் பிரயோஜனம் இல்லையே என்னில் -அக்குறையும் இல்லை –
நித்ய சம்சாரியாய்ச் சூழ்த்துக் கொள்ளும் அறிவு இத்தலையில் உள்ளது
நல் வழி போக்குகைக்கு அடியான அறிவு உள்ளது அவன் பக்கலிலே-
நைவ கிஞ்சித் ப்ரோஷம்தே
நாராயணா!
ரஷிக்க பிராப்தன் ஆனவனே -ஞான சக்திகள் உண்டானாலும் பிராப்தி இல்லையாகில் செய்வார் இல்லையே
உடைமையோ உடையவனோ பேற்றுக்கு அர்த்திப்பார்
என்று என்று
ஒரு கால் சொல்லி பின்பு தானே வருகிறான் என்று இருக்கிறேனோ
காலந் தோறும்
க்ஷணம் தோறும் -நிரந்தரமாக –
யான்
கண்டு அல்லது தரிக்க மாட்டாத நான்
இருந்து,
முடிவு இன்றிக்கே இருந்து -குணாதிக விஷயம் ஆகையால் நசை முடிய ஒட்டாது -பிரிவு தரிக்க ஒட்டாது
கைதலை பூசலிட்டால்,
தலையிலே கையை வைத்து கூப்பிட்டால் என்னுதல்-
கையும் தலையும் மாறாதே தொழுதால் என்னுதல்
கோல மேனி
இப்படி விடாயைப் பிறப்பிக்கும் வடிவு -விடாய்த்தார்க்கு காட்ட அன்றோ வடிவு படைத்தது -பக்தா நாம் அன்றோ –
காண
காண்கை இ றே பிரயோஜனம் -சதா பஸ்யந்தி இ றே
கருமுகை மாலை தேடுவார் சூட வன்றோ தேடுவது -சும்மாட்டைக் கொள்ள அன்றே
வாராய்;
இப்போதும் அவன் வரவால் பெறுகை முறை என்கை -வருகிறிலை
கூவியும் கொள்ளாயே.
இஷ் ஷூ த்ர ஜந்துவின் பக்கலிலே நான் செல்லவோ என்று இருந்தாயாகில் என்னை அழைத்துக் கொள்ளலாம் –அதுவும் செய்கிறிலை
ஞாலம் உண்டாய் என்று தொடங்கி-காண வருகிறிலை -கூவியும் கொள்ளுகிறிலை -சீலமில்லா சிறியேனாலும் செய் வினையோ பெரிதால் -என்று அந்வயம்-


அவன் முன்பே உபகரித்த படியைச் சொல்லி -இப்படி உன் சுவடை அறிவித்து வைத்து நான் கூப்பிட எழ வாங்கி நிற்கை உனக்கு உனக்கு போருமோ என்கிறார்

கொள்ள மாளா  இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–4-7-2-

கொள்ள மாளா இன்ப வெள்ளம்
கொள்ள மாளாத ஆனந்த சமுத்திரத்தை -அனுபவிக்க அனுபவிக்க குறையாது இருக்கை-வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்றது இ றே -அது ஆகிறது
கோது இல தந்திடும்
ஆனந்தத்துக்கு கோதாகிறது -அனுபவித்தால் அமையும் என்று இருத்தல் -புறம்பே ஒன்றை அபேக்ஷித்தல் செய்கை – அது இன்றிக்கே ஒழிகையாவது -மேன் மேல் என அபேக்ஷை வர்த்திக்கையும் -இதர விஷய வைராக்ய ஜனகமாகையும்-
கோதில-வ்யதிரேகத்தில் மோஹிப்பிக்கை-
என் வள்ளலேயோ –
நிர்ஹேதுகமாக அபகரித்து வைத்து கூப்பிட பேசாது இருக்கிறது என்
உன் பேறாக அபகரித்து அபகரித்து இப்போது என் பேறாக கூப்பிடப் பண்ணுகிறது என் -இப்படிக் கூப்பிட பண்ண நினைத்தால் வீற்று இருந்து ஏழு உலகில் படியை அனுபவிப்பத்தது என்
வையம் கொண்ட வாமனாவோ!’
வையம் கொண்ட பின்பும் -வாமன வேஷமே யாய்த்து-இவருக்கு பட்டு இருப்பது –
உன்னை இந்திரன் இரக்க-அத்தியாய உபகரிக்குமவன் அல்லையோ
எனக்கு நீ இரந்து தந்து இன்று நான் இரக்க இருக்கிறது என்
என்று என்று
இந்திரனைப் போலே ஒரு பிரயோஜனாந்தரத்தைக் கொண்டு போகிறார் அல்லரே
அவ்வடிவும் நீர்மையையும் இ றே இவர்க்குப் பேறு
நள் இ ராவும் நன்பகலும்
சம்ச்லேஷத்தால் போகக் கடவ காலம் எல்லாம் வியாசனத்தோடு போக விடுவதே
நன் பகல் என்று விபரீத லக்ஷணையாய்-ஸூன்யமான பகல் என்றுமாம்
நள் என்று செறிவாய் செறிந்த இருள் என்னுதல்
நள் என்று நடுவாய் -மத்திய ராத்திரி என்னுதல்
நள் என்று ராத்திரியில் த்வநியாய-மத்திய ராத்ரம் என்னுதல் –
நான் இருந்து,ஓலம் இட்டால்
கூப்பிடவும் பலம் இல்லாத நான் இருந்து கூப்பிட்டால்
கள்ள மாயா!
கண்ணுக்கு அவிஷயமாய் மறக்க ஒண்ணாத படி
நெஞ்சிலே பிரகாசியா நிற்கும் ஆச்சர்ய பூதனே
உன்னை
கண்டு அல்லது தரிக்க ஒண்ணாத உன்னை
என்கண் காணவந்து ஈயாயே.–
விடாய்த்த என் கண்ணாலே காண வந்து உபகரிக்க வேணும் –
ஈகிறிலை-என்ற பாடமாக போது-செய்வினையோ பெரிதால் -என்று அந்வயம்


எனக்கு உனக்கு காட்டாது ஒழிந்தால் -நீ என்னைக் காண்கைக்கு பாக்யம் பண்ணிற்று இல்லை என்று என் கண் முகப்பே வந்து  நான் நிராசனமாம் படி ஒன்றும் சொல்லுகிறிலை என்று இன்னாதாகிறார் –

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-

ஈவு இலாத தீ வினைகள்-
பெரிதால்-என்று பெரிதான அளவும் அன்றிக்கே-அனுபவ விநாசியம் அல்லாத பாபத்தையோ பண்ணிற்று
நா புக்தம் ஷீயதே கர்ம-என்கிறதுவும் விபரீத பலமாயிற்று
புக்தமாக புக்தமாக வர்த்தியா நின்றதீ
எத்தனை செய்தனன் கொல்?
செய்வினை என்று ஓன்று அன்றிக்கே அநேகம் –எத்தனை பாபங்களை பண்ணினேன் -தாவி வையம் கொண்ட எந்தாய்!
அரிய செயல்களை செய்து அச்செயலாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே
தாமோதரா!
ஒரு இடைச்சிக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி பவ்யனானவனே-
என்று என்று,-கூவிக் கூவி
இவ் வபதானங்களை சொல்லி இடைவிடாதே கூப்பிட்டு
நெஞ்சு உருகி,
நான் கூப்பிடுகிற தாருண த்வனியாலே அந்தகாரணமும் த்ரவ்யத்ரயமாய்
கண்பனி சோர நின்றால்,
உருகினத்துக்கு கண் வழியே போக்கு விடா நின்றால்
பாவி நீ என்று ஒன்று சொல்லாய்,
இரண்டு அவதாரத்துக்கும் புறம்பாம் படியான பாபத்தை பண்ணினாய் நீ என்று நான் நிராசனாயத் தரிக்கும் படி ஒரு வார்த்தை சொல்லாய்
ஒன்று சொல்லாய்,
பாக்யவானே-என்னவும் அமையும் -இச் சப்தத்தில் அர்த்தம் கொண்டு கார்யம் இல்லை -இப்பாசுரம் கேட்க்குமதுவே அமையும் –
இன்னமும் எனக்கு வேண்டுவது ஓன்று உண்டு
பாவியேன் காணவந்தே.–
கண்ணாலே காணலாம் படி என் முன்னே வந்து சொல்ல வேணும் சொல்லுகிறிலை என்றுமாம்
ஈவில்லாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல் -என்று அந்வயம் –


ப்ரஹ்மாதிகளும் கூட ஆசைப்பட்டுக் காண மாட்டாத படியான பெருமையை உடைய சர்வேஸ்வரனை அதி ஷூ த்ரனான நான் காண வேணும் என்று கூப்பிடா நின்றேன் -என்ன நிர் லஜ்ஜனோ -என்கிறார் –

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-

காண வந்து,என் கண் முகப்பே
மானஸ அனுபவம் மாத்திரம் அன்றிக்கே கண் எதிரே காணும் படி வந்து காணும் படி வர வேண்டும் என்றுமாம் –
தாமரைக் கண் பிறழ,
தாமரை போன்ற திருக் கண்கள் கடல் கிடந்தால் போலே மிளிர –பிறழ,-விளங்க என்றுமாம் –
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்!
ஓட்டற்ற செம்பொன் போலே இருக்கிற அழகிய திருவடியைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே
நின்று அருளாய் என்று என்று,
ஒரு கால் சொன்னால் வாரா விட்டால் விடவல்லர் அல்லரே
நாணம் இல்லாச் சிறு தகையேன்
நிர் லஜ்ஜனாய் -அதி ஷூ த்ரனான -என் பூர்வ வ்ருத்தத்தை பாராதே சொல்லுகிறது
லஜ்ஜா ஸூநயனாய்-பெரியவர்கள் சொல்லும் வார்த்தை சொல்லுகிறது அதி ஷூ த்ரனாய்
நான் இங்கு அலற்றுவது என்
அவனுக்கு புகுர ஒண்ணாத படி குத்ஸிதமான நிலத்தில் இருந்து கூப்பிடுகிற இதுக்கு என்ன பிரயோஜனம் உண்டு
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–
ப்ரஹ்மாதிகள் ஆசைப்பட்டுக் காண முடியாதான பீடு உண்டு -பெருமை –
அத்தையுடைய சர்வேஸ்வரனை ப்ரஹ்மாதிகளுக்கும் குத்ஸிதமான நிலத்திலே இருந்து அவர்களுக்கும் நிலம் இல்லாத விஷயத்தை கூப்பிட்டு என்ன பிரயோஜனம் உண்டு –


இப்படி துர்லபமான விஷயத்தை காண ஆசைப்பட்டு தரிக்க மாட்டாமையாலே காண்கையில் த்வரிக்கிறது என்னுடைய சாபல அதிசயம் இ றே என்கிறார் –

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5-

அப்பனே!
நீ முகம் காட்டாத அளவிலும் உன்னையே சொல்லிக் கூப்பிடும்படி புகுர நிறுத்தின மஹா உபகாரகனே
அடல் ஆழி யானே!
பிரதிகூல நிரசன ஸ்வ பாவ ஆர்ணமாய்-தர்ச நீயமான-திரு வாழி யை உடையவனே
ஆழ் கடலைக் கடைந்த-துப்பனே!
உன்னை உகவாதே பிரயோஜனத்தை கணிசித்தற்கு அகாதமான கடலைக் கடைந்து அபேக்ஷிதங்களை செய்யும் சாமர்த்தியத்தை உடையவனே
‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
கடல் கடைகிற போதே வ்யாபரித்த தோள்களை யாயிற்று இவர்கள் ஆசைப்படுகிறது
உன் தோள்கள் நாலையும் கண்டுவிடக் கூடுமோ என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு,
சர்வ காலமும் கண்ணும் கண்ண நீருமாய் கொண்டு
கிடைக்கைக்கு சம்பாவனை உள்ள விஷயத்தில் போலே கிலேசப்படுகை
ஆவி துவர்ந்து துவர்ந்து,
பிராணன் ஆனது பசை அற உலர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று
ஆர்த்தியே செப்பேடாக இனி ஒரு க்ஷணமும் தாழாதே இப்போது வர வேணும் என்று ஆசைப்படா நின்றேன்
ஏழையேன் நோக்குவனே.–
வர சம்பாவனை இன்றிக்கே இருக்க சாபல அதிசயத்தாலே வரும் போது காண வேணும் என்று அத்திக்கை பாரா நின்றேன் –

——————————————————————

என் பக்கலிலே சதா ஸந்நிஹிதனாய் இருந்து வைத்து உன்னைக் காட்டாது ஒழி கிறது -நீ உன்னைக்காட்ட நினையாமை என்று அறிந்து வைத்து -பிரதி க்ஷணம் காண வேணும் என்று ஆசைப்படா நின்றேன் -அதுக்கு அடிஅறிவு கேடு என்கிறார் –

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-

நோக்கி நோக்கி,
அடுத்து அடுத்து பார்த்து
உன்னைக் காண்பான்,
சர்வாதிகனாய் துர்லபனான உன்னை காண் கைக்காக
யான்
அதிசபலனான நான்
எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன்,
வாயால் சொல்ல மாட்டாதே நெஞ்சினுள்ளே ஆசைப்படா நின்றேன்
ஞானம் இல்லை;
இதுக்கு அடி என் அறிவு கேடு இ றே
இவ்விஷயத்தில் ஆசையும் அறிவு கேடு ஆகிற படி என் என்னில்-சதா ஸந்நிஹிதனாய் சக்தனாய் இருக்க முகம் காட்டாது ஒழி கிறது -வர நினையாமை என்று இருக்க மாட்டாது ஒழி கிறது அறிவு கேட்டாலோ என்றோ
நாள்தோறும்
சர்வ காலமும்
என்னுடைய ஆக்கை யுள்ளும்
பேற்றுக்கு பிரதி பந்தகமான சரீரத்தின் உள்ளும்
ஆவியுள்ளும் 
பெறுகைக்கு இருக்கிற ஆத்மாவினுள்ளும்
அல்ல புறத்தினுள்ளும்
மற்றும் இந்த்ரியங்களிலும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய்
பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்
நின்னை அறிந்து அறிந்தே.–
இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழி கிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இ றே


நீர் கிடந்து கூப்பிடுகிறது என் -எம்மை அறிவித்து உம்முடைய சம்சார துக்கம் எல்லாம் கெடுத்தோம் இ றே என்ன-
பெற்ற அம்சம் இது உண்டு -அத்தால் போராது என்கிறார்-

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

அறிந்து அறிந்து, தேறித் தேறி,
பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து
யான்
ஞானம் பிறந்த நான் –
எனது ஆவியுள்ளே
தெளிந்த மனஸிலே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
பிறப்பதும் இறப்பதுமாய் நின்று நான் தடுமாறித் திரிகிற அறிவு கேடு போகப் பெற்றேன்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்று நான் அபேக்ஷித்து பெற்றேன்
நறுந்து ழாயின் கண்ணி அம்மா!
இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று
நான் உனைக் கண்டு கொண்டே.
பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் –
நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –


பெற்ற அம்சம் சொன்னாராய் பெறாத அம்சம் இது என்கிறார் –

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

கண்டு கொண்டு,
காண விரும்பும் என் கண்கள் -என்று விடாய்த்த கண்களின் விடாய் தீரக் கண்டு கொண்டு
என் கைகள் ஆர,
தடவும் என் கைகள் -என்று உறாவின என் கைகளின் விடாய் தீர -வயிறார உண்ண வேணும் என்னுமா போலே
நின் திருப்பாதங்கள் மேல்
அப்ராப்த விஷயத்தில் அனுவர்த்தனம் முன்பும் உண்டு இ றே
ப்ராப்தமாய் நிரதிசய போக்யமான திருவடிகளில்
எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி,
தம் விடாய்க்கும் விஷய வை லக்ஷண்யத்துக்கும் அனுரூபமாக
உகந்துகந்து,
ப்ரவ்ருத்தி தோறும் ப்ரீதனாய்
தொண்டரோங்கள் பாடி ஆட,
அடிமையில் சுவடு அறிந்த நாங்கள் ப்ரீதி ப்ரீதராய் பாடுவது ஆடுவதாம் படியாக –
கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லரே
இது ஒரு தேச விஷயத்திலே ஏதத் சாமகாயன் ஆஸ்தே -என்று களிக்குமது அன்றோ -என்ன அங்கண் ஆக ஒண்ணாது
சூழ் கடல் ஞாலத்துள்ளே
சம்சாரத்துக்கு உள்ளே வர வேணும் –
எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்கவோ
வண் துழாயின் கண்ணி வேந்தே!
சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாயாலே அலங்க்ருதனான ஸர்வேச்வரனே
இங்கே வரவும் வேணும்
அங்கு உள்ளவர்க்கு காட்சி கொடுக்கும் ஒப்பனையோடே வர வேணும் என்கை –
வந்திட கில்லாயே.–
வருகிறலை –

——————————————————————

காண் கைக்கு முதல் இன்றிக்கே இருக்க சாபலத்தாலே கூப்ப்பிட்டால் காண்கைக்கு உபாயம் உண்டோ என்கிறார்

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்
பசித்தார்க்கு சோற்றை இடுதல் -தாஹித்தார்க்கு தண்ணீர் வார்த்தல் செய்ய மாட்டு கிறிலேன்
யஞ்ஞா தான தப கர்ம – என்கிறபடியே தானம் கர்ம யோகாந்தர்பூதமாய் இருக்க -அதுக்கு ஆள் ஆகிறிலேன்-என்கை –
ஐம்புலன் வெல்லகிலேன்;-
அர்த்த லோபத்தாலே அவை செய்யா விட்டால் இந்திரியங்கள் விஷயத்தில் பட்டி புகாத படி நியமிக்க மாட்டிற்று இலேன்
கடவனாகிக் -நியதனாய்
காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
சமாராதனத்துக்கு விஹிதமான காலத்தில் -திருப் பள்ளித் தாமம் பறித்தல் பரிமாறுதல் செய்யப் பெற்றிலேன் –
சததம் கீர்த்த யந்த-என்கிறபடி திரு நாம சங்கீர்த்தனம் பண்ணிற்று இலேன்
இவை உண்டாயிற்றாகில் பக்தி சரீரத்தில் நிவேசிக்கலாம் -அதுவும் இல்லை என்கிறார் -இவற்றினுடைய ஸ்வரூப நிஷேதம் பண்ணுகிறது அன்று –உபாயத்வத்தை நிவேதிக்கிறது –
மட வல் நெஞ்சம்-
மட வென்று மென்மை-பகவத் குண பிரசங்கத்தில் சிதிலமாகை
வல் நெஞ்சம் -பகவத் குணங்களில் விழுந்தால் ஈஸ்வரனாலும் மீட்க முடியாது இருக்கை –காதல் கூர, -ஸ்நே ஹம்-மிக
வல்வினையேன் –
பிரேம அனுரூபமாக காணப் பெறாத படி பாபத்தை பண்ணின நான் –
காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்-இத்தை அகஞ்சுரிப் பகுத்தப் பெற்றேன் அல்லேன் –
ஆசா லேசம் உடையோருக்கு முகம் கொடாதவனாய் இழந்தேன் அல்லேன் -என் பாபம் இருந்தபடி என்
அயர்ப்பாய்த் தடவுகின்றேன்
அறிவு கேட்டை உடையேனாய் முன்னே வந்து நின்றாலும் காண முடியாத படி தடவா நின்றேன்
நத்வா பச்யாமி கௌசல்யே -என்கிறபடியே
எங்குக் காண்பன்-
ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க கூப்பிடா நின்றேன் -எங்கே காணப் பெறுகிறேன்
சக்கரத்து அண்ணலையே?
கையும் திரு வாழியுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் அகப்பட்டது –


காணப் பெறா விட்டால் மறந்து பிழைக்க ஒண்ணாத படி எனக்குத் தக்கதொரு ஞான த்ருஷ்ட்டி எங்கனே உண்டாயிற்று -என்கிறார் –

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து,
திரு வாழியே காட்டி என்னை எழுதிக் கொண்டவனே -என்று இவ்வுக்தியோடே தரைப்பட்டு
கண்ணீர் ததும்ப,
இவருடைய அவசாதனத்தினுடைய எல்லை காண்பது கண்ண நீரிலே யாயிற்று –
பக்கம் நோக்கி நின்று, ‘
வருகைக்கு சம்பாவனை உண்டான திகைப்பு பார்த்தே நின்று
அலந்தேன்;
வெறுத்தேன் -பரம ஆபதாமபன்ன-என்னும் அளவு இ றே
பாவியேன் காண்கின்றிலேன்;
ஆபத்சகனாய் இருக்க மஹா பாபியாகையாலே நான் காணப் பெறுகிறிலேன்
காணப் பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம் படி நெஞ்சில் பிரகாசியாது ஒழியத் தான் பெற்றேனோ –
மிக்க ஞான மூர்த்தியாய-
பரிபூரணமான ஞானத்தையே ஸ்வரூபமாக யுடைய –
வேத விளக்கினை
வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை
என்-தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.
எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-
காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது
மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது


நிகமத்தில் இத் திருவாய்மொழி கற்றார் அவனோடே நித்ய சம்ச்லேஷம் பண்ணலாம் திரு நாட்டிலே செல்லப் பெறுவார் என்கிறார் –

தழுவி  நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-

தழுவி நின்ற காதல் தன்னால் –
நான் விடுவேன் என்னிலும் விட ஒண்ணாத உடன் வந்தியான-அதிமாத்ர ப்ரேமத்தாலே
தாமரைக் கண்ணன்றனைக் –
இக்காதலுக்கு கிருஷி பண்ணினாராய்ச் சொல்லுகிறார்
கண்ணாலே குளிர நோக்கி யாயிற்று -இவருக்கும் காதலை விளைவித்தது –
செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மண்ணினான் -என்ன கடவது இ றே -இது இ றே மதி நலம் அருளின படி
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்-
சம்ருத்தமான திரு நகரியுடைய ஆழ்வார் –
ஸ்ரீ பரதாழ்வான் ஆர்த்தியைக் கண்டு பெருமாள் வரவை நிச்சயித்து திரு அயோத்தியில் உள்ளார் தளராது இருந்தால் போலே -திரு நகரியில் உள்ளார் தளராது இருந்தபடி
த்வததீ நம் ஹி ஜீவிதம் -என்றார்கள் இ றே -அங்கண் இன்றியிலே விபரீத லக்ஷணையாய் இவருடைய தசையைக் கொண்டு ஸூ ன்யமாய்க் கிடந்த படி -என்றுமாம் –
வழு விலாத ஒண் தமிழ்கள்- ஆயிரத்துள் இப்பத்தும்-
பகவத் குணங்களில் ஒன்றும் குறையாத படியுமாய் ஸூ போதமுமாய் இருக்கை
தழுவப் பாடி ஆட வல்லார்-
இதில் இவருக்கு ஓடுகிற பாவத்தில் பாடே பக்கமே பாடுமவர்கள் –
இவருடைய ஹர்ஷம் நேரே சிலர்க்கு உண்டாகாதிறே –
தழுவப் பாடி-இதில் ஓடுகிற கருத்தோடு கூடப் பொருந்த படி -என்றுமாம் –
வைகுந்தம் ஏறுவரே-
பக்கம் நோக்கி நின்று அலர்ந்தேன்-பாவியேன் காண்கின்றிலேன் -என்று சோகிக்க வேண்டாதே-சதா தரிசனத்துக்கு போக்யமான தேசத்தை பெறுவர்


கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: