திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-6–

கீழ் -வீற்று இருந்து ஏழ் உலகில் – தாம் அனுபவித்த அனுபவம் மானஸ அனுபவ மாத்ரமாய் பாஹ்ய கரண யோக்யம் அல்லாமையாலே
அத்யந்தம் அவசன்னரானார் -எத்தனையேனும் உயர ஏறினால் தகர விழுகைக்கு உறுப்பாமா போலே மோஹங்கதராய் -பிறர் அனுசந்தித்து
பரிஹரிக்க வேண்டும்படி தமக்கு பிறந்த தசையை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –
நோய் இன்னது -நோய்க்கு நிதானம் இன்னது என்றும் அறியாமையால் -வேர் அறிவார் மந்த்ரம் அறிவார் -ஒளஷதம் அறிவார் புகுந்து
பரிஹாரம் பண்ணிச் செல்லா நிற்க -அவ்வளவிலும் தேவதாந்த்ர ஸ்பர்சம் உடையாள் ஒரு கட்டுவிச்சி வந்து புகுந்து
-த்ரவ்யம் நிந்த்ய ஸூ ராதி தைவத மதி ஷூத்ரஞ்ச பாஹ்யாக மோ த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிக ஜநா-என்கிறபடியே –
பாஹ்ய ஆகமத்தை த்ருஷ்டியாகவும் -நிந்த்யமான த்ரவ்யங்களை உபகரணங்களாகவும் கொண்டு ஷூத்ர தேவதையால் ஆவிஷ்டையாய்-
அம்முகத்தாலே சிகித்சிக்க உபக்ரமிக்க -பந்துக்களும் இவளை பெறலாமோ -என்னும் ஆசையால் அனுமதி பண்ண –
இத்தசையிலே இவள் பிரக்ருதியையும் நோவையும் நேரே அறிந்த தோழியானவள் ஓடுகிற நோவைத் தான் அறிந்தாளாக சொல்லில் தன் காவல் சோர்வாம்
-பேசாது இருக்கில் இவளை இழக்க வரும் -என்று இவர்களோ பாதி தானும் நிரூபித்து அறிந்தாளாய் –
நோவும் பரிஹாரமும் நீங்கள் நினைக்கிறவை அல்ல –நோய் இன்னது -நோய்க்கு நிதானம் கிருஷ்ணனே -என்று சொல்லி நீங்கள் பண்ணுகிற பரிஹாரம்
இவளுடைய சத்தையையும் கூட இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை –
பரிஹாரம் பண்ண பார்த்தி கோளாகில் வைஷ்ணவ கோஷ்ட்டியில் பிரசித்தமான பகவான் நாம சக்ரீத நாதிகளாலே இவளை பிழைப்பியுங்கோள் -என்கிறாள்
இது திருவாய்மொழி யால சொல்லிற்று யாயிற்று -அஞ்ஞான தசையிலும்-தேவதாந்த்ர ஸ்பர்சமும்-ததீய ஸ்பர்சமும் விநாச ஹேதுவாய்
அத்தசையிலும் பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தா தாரகமாம் படி இவருடைய வைஷ்ணத்வம் அதிசயித்தபடி சொல்லுகிறது –

——————————————————————————————————

இப்பிராட்டி உடைய தோழி யானவள் -இந்நோய்க்கு நிதானத்தை சொல்லி -நீங்கள் பரிஹாரமாக நினைத்து
செய்கிறவை பரிஹாரம் அன்று -என்று அவற்றை நிவர்த்திப்பிக்கிறாள் –

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் –
இவர்கள் பரிஹாரம் பண்ணா நிற்கச் செய்தே-தீர்ப்பாரைத் தேடுகிறது -செய்கிறவை பரிஹாரம் அன்று என்கை –
தீர்ப்பாரைத் தேடுகையாலே இவள் பரிசரத்தில் பரிஹரிக்கைக்கு ஆள் இல்லை -மோஹிக்கைக்கு ஆள் உண்டு அத்தனை என்கை –
யாம் –
என்று தன்னையும் கூட்டிக் கொள்கிறாள் -இவர்களோபாதி தானும் நிரூபிக்கிறாளாய் தோற்றுகைக்காக-
கலகத்துக்கு இவர்களோடு தன்னோடு வாசி இல்லை என்று தோற்றுகைக்காக -என்றுமாம் –
இனி-
கடல் வண்ணார் இது செய்தார் காப்பார் யார் என்று ஒளஷதமே ரோத ஹேதுவானால் பரிஹாரம் உண்டோ –
நச்சு மா மருந்தம் இ றே மோஹிக்கப் பண்ணுகிறது
நிர்வாணம் பேஷஜம் பிஷக் -ஆனபின்பு
எங்ஙனம் நாடுதும் —
எங்கனே தேடுவோம் –
அன்னைமீர்!
இவளுக்கு காட்டுவோம் என்னா-இத்தைப் பரிஹரிக்கப் போமோ -பரிஹாரம் தேடுவது நோய் அறிந்தால் அன்றோ –
அது நீ அறிந்தாயோ என்ன
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
உங்களோபாதி நானும் இப்போது விசாரித்து பார்த்து அறிந்தேன் என்கிறாள் –
ஓர்ப்பால்-ஒருகையால் -ஆராய புக்கால் -ஒரு கூரத் தாழ்வானோடு ஒக்கும் காணும் இத் தோழி படி
இவ் வொண்ணுதல்-இவ் வழகை உடையவள் மொஹிக்கும் பொது விலக்ஷண விஷயம் ஆக வேண்டாவோ
ஸ்ரீ பரத ஆழ்வான் நோய் என்றால் ராம விரஹமாய் இருக்கும் அத்தனை போக்கி சாதுர்த்திகமாய் இராதே
ஒள்ளிய நுதலை உடையவள் –
அம்பு பட்டு முடித்தார் முகம் போலே இராது இ றே நீரிலே புக்கு முடித்தார் முகம் –
குணாதிக விஷயத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே உண்டான மோஹம் ஆகையால் முகத்திலே செவ்விக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி யாயிற்று இருப்பது
உற்ற
வேறு ஒன்றால் பரிஹரிக்க ஒண்ணாத படி மறுபாடுருவக் கொண்ட நோய்
நல் நோய்
பரமாபதமா பன்ன-என்கிறபடியே அடிக் கழஞ்சு பெற்ற நோய்
பக்த்யாத்வ அநந்யயா ஸக்ய-என்கிறபடியே இந்நோய் கைப்பட்ட போதே பரிஹாரமும் கைப்பட்டது என்கிறாள்
நான் இந்நோய் கொள்ளப் பெறாதே இதுக்குப் பரிஹாரம் பண்ண இருப்பதே என்கிறாள் –
இது தேறினோம்;
தெளிந்தோம் -இக் கோஷ்டிக்கு தெளிவு தேட்டமாய் இ றே இருப்பது
ரிஷிகள் கோஷ்ட்டியில் கலக்கம் தேட்டமாய் இருக்குமா போலே
அறிந்தாய் யாகில் சொல்லிக் காண் என்ன –
போர்ப்பாகு தான் செய்து
போருக்கு வேண்டும் நிர்வாஹம் எல்லாம் தானே பண்ணி
யஸ்ய மந்த்ரீச கோப்தாச-என்று எதிரிகள் பறித்துக் கொண்ட பரிகரம் எல்லாம் தானேயாய் நின்றபடி
தான்
வீற்று இருந்த ஏழ் உலகில் -தான் இ றே வந்து கையாளாக நின்றான்
செய்து
சங்கல்பத்தாலே இருந்த இருப்பில் உபய விபூதியையும் நடத்தக் கடவ அவன் இ றே கை தொடனானான்
இப்படிப் பட்ட ஆஸ்ரய பாரதந்தர்யத்திலே யாயிற்று இவள் மோஹித்தது
அன்று ஐவரை வெல்வித்த
ந காங்ஷே விஜயம் கிருஷ்ண -என்று இவர்கள் தாங்களும் யுத்தத்துக்கு ஆளாகாத படியான நூற்றுவர் எதிரிகளாக ஐவரான பாண்டவர்கள் வெல்லும் படி பண்ணினான்
அப்பஷத்துலே யாயிற்று இவள் ஈடுபட்டது
துர்யோத நாதிகளை தோற்பிக்கிலும் இவளை தோற்ப்பிக்கை அரிது
அவர்களை ஸ் வா தந்த்ர அபிமானத்தாலே தோற்பிக்க ஒண்ணாது -இவளை ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தாலே தோற்ப்பிக்க ஒண்ணாது
மாயப்போர்த்
ஆச்சர்யமான யுத்தம் என்னுதல்
வஞ்சகங்களை உடைய யுத்தம் என்னுதல்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும் -பகலை இரவாக்கியும் இரண்டும் இ றே வஞ்சகம்
தேர்ப் பாகனார்க்கு
அர்ஜுனனை அழியச் செய்ய நினைத்தவர்களுடைய அஸ்திர சஸ்திரங்கள் முகப்பில் தன் மேலேயாம்படி உடம்புக்கு ஈடு இடாதே நின்று தேரை நடத்தினவனுக்கு
இவள்
அவனுடைய சாராத்ய வேஷம் இவள் வடிவிலே நிழல் இட்டு தொடருகின்றது இல்லையோ
நிர்க்குண ப்ரமாத்ம ஸு தேஹம் தே வ்யாப்யதிஷ்டதி
சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே
இவள் சிந்தை -கடல் கலங்கிற்று என்றால் -மந்திரத்தால் என்று அறிய வேண்டாவோ
இவள் அந்தக்கரணம் கலங்கி மதி கெடுகிறது கிருஷ்ணனைப் பெறுகைக்காக
மயர்வற மதி நலம் அருளப்பெற்றவள் ஆகையால் -பரம பதத்தில் முதன்மைக்கு ஈடுபடுமவள் அன்று இ றே

——————————————————————————————————–

ஷூ த்ர தேவதா சாந்தியாலே இவள் நோய் போக்குகை அரிது -பகவத் விஷயத்தைச் சொல்லில் இவளை பெறலாம் என்கிறாள் –

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-

திசைக்கின்றதே இவள் நோய்-
இவள் நோய் நிமித்தமாக அறிவு கெடா நின்றி கோள் –
தாய் மார் கௌரவர்கள் ஆகையால் அறிவு கெடுகிறதே நாம் -என்கிறாள்
அவன் குணம் நிமித்தமாக இவள் அறிவு கெடா நின்றாள்
நீங்கள் இவள் நோய் நிமித்தமாக அறிவு கெடா நின்றி கோள்
நாங்கள் அறிந்திலோம் ஆகில் அறிந்த நீ சொல்லிக் காணாய் -என்ன –
இது மிக்க பெரும் தெய்வம்-
வானோர் தலை மகனாம் சீராயின தெய்வ நன்நோய் இது –
கம்பீர பரமோ தேவ -என்கிறபடி அபரிச்சின்னமாய் சர்வாதிகமான தெய்வம் அடியாக வந்தது
இது பர தேவதை அடியாக வந்தது ஆகையால் -கனவிய நோய் –
இசைப்பின்றி –
சேர்த்தி இன்றி
உங்களுக்கும் இச் செயலுக்கும் என்ன சங்கதி உண்டு
இவள் படிக்கும் இந்நோய்க்கும் நீங்கள் செய்கிறவற்றுக்கும் ஒரு சேர்த்தி இல்லை –
இச்செயல் உங்கள் ஸ்வரூபத்துக்கு சேராது -இவள் ஸ்வரூபத்துக்கும் சேராது இவள் நோய்க்கும் சேராது
நீர்
பகவத் விஷயத்தில் விக்ருதைகளாக கடவ நீங்கள்
அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
தேவா விஷ்டராய் ஆடுகிற ஷூ த்ர தேவதை அடியாக வந்த நோய் அன்று இது
திசைப்பின்றியே
நோய் அறியாதா போலே பரிஹாரத்திலும் அறிவு கெடாதே கொள்ளுங்கோள்
நோய்க்கு நிதானத்தை சொல்லுமா போலே பரிஹாரத்தையும் சொல்லாய் என்ன
சங்கு சக்கரம் என்று
சங்கு என்றும் சக்கரம் என்றும் இ றே இவள் நோய் இருப்பது
நோய் வந்த வழி இதுவானால் அவ் வழி யாலே பரிஹாரம் பண்ண வேண்டாவோ
இவள் கேட்க நீர்-இசைக்கிற்றீர் ஆகில்
மோஹித்து கிடக்கிற இவள் கேட்க வல்லள் ஆகில் யாயிற்று இவர்கள் சொல்ல வல்லராவது
இவள் இவ்விஷயத்தில் மோஹித்து கிடக்கிறாப் போலே யாயிற்று இவள் நோயில் இவர்கள் அறிவு கெட்டுக் கிடக்கிற
நன்றே
நன்றாய் தலைக் கட்டும் -நன்மை எவ்வளவு உண்டாம் என்னில்
இல் பெறும் –
ஆத்மாவுக்கு போகாயதநமான சரீரத்தைப் பெறும்-என்றாள்
க்ருஹீணியாக பெறும் என்கை
க்ருஹீணீ க்ருஹம் உச்ச்யதே –
நன்று எயில் பெறும் –என்று ஆய்
எயில் என்று கானமாய்-வார்த்தை சொல்லப் பெறும் என்கை
பண்ணை வென்ற இன் சொல் மங்கை -இ றே -மதுரா மதுரா லாபா
இது காண்மினே –
நீங்கள் செய்கிற்றோ பாதி இத்தையும் செய்து பார்க்க மாட்டி கோளோ
இது நதீ மாத்ருகம் போலே பல வ்யாப்தம் என்னவுமாம் –

———————————————————————————————————-

அயுக்தங்களை செய்யாதே எம்பெருமான் திருவடிகளை ஏத்துங்கோள் -அதுவே இந்நோய்க்கு பேஷஜம் -என்கிறாள் –

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

இது காண்மின் அன்னைமீர்!
நீங்கள் நியாமிகைகள் என்னா -நான் சொன்ன ஹிதம் கேளாது ஒழிய வேணுமோ
-யாரேனும் சொல்லினும் நல்வார்த்தைகள் சுவீகரிக்க வேண்டாவோ
புத்ரகா இதி ஹோ வாசா-என்னும் அதுவும் கேட்டிலி கோளே
இக்கட்டு விச்சி சொற் கொண்டு
ஒரு பரிஹாரம் பண்ண வேணும் என்னும் நிர்பந்தம் உண்டோ –
இவளைக் காண்பதே -இவள் சொன்ன வார்த்தையைக் கேட்பதே
நான் சொன்ன வார்த்தையை கேட்பதே -நான் சொன்ன வார்த்தையையே இவளும் சொன்னால் கேட்க்க கடவதோ-
நீசையான இவளுடைய அவிஸ்வாஸ நீயமான வார்த்தையைக் கொண்டு
நீர்
அதி வி லக்ஷணை களான நீங்கள் -உங்களைத் தானே அறிந்திலிகோளோ
தத்துவ தர்சிகளான ஞானிகள் அன்றோ உங்களுக்குத் சொல்லக் கடவர்
எதுவானும் செய்து
ஏதேனும் ஒன்றைச் செய்து -அசங்க தங்களை செய்து -ஏதேனுமாகிலும்
அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
துர்த்ரவ்யங்களால் வைஷ்ணவ க்ருஹத்தை தூஷியாதே கொள்ளுங்கோள்
அங்கு என்று தான் காண மாட்டாமையாலே -முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள்
இது பரிஹாரம் அன்றாகில் பரிஹாரத்தை சொல்லாய் என்ன
மதுவார் துழாய் முடி
ஸ்வ ஸ்பர்சத்தாலே மதுஸ்யந்தியான திருத் துழாயை திரு முடியில் உடையவன்
மாயப்பிரான்
ஸுந்தர்ய குண சேஷ்டிதங்களாலே ஆச்சர்ய பூதன்-ஆனவன்
பிரான் –
ஆவியடங்க -பக்தா நாம் -என்று இருக்கும் உபகாரகன் –
கழல் வாழ்த்தினால்
அவனுடைய திருவடிகளுக்கு மங்களா சாசனம் பண்ணினால் –
கழல் வாழ்த்த பெறாமையாலே இ றே மோஹித்தது –
போற்றி என்ன பெறாமையாலே வந்த நோய்
அதுவே –
பிராப்தமுமாய் போக்யமுமான அதுவே
இவள் உற்ற நோய்க்கும்
பரிஹாரம் இல்லை என்று மீளும்படி மாறுபாடுருவ கொண்ட நோய்க்கும்
அரு மருந்தாகுமே.–-
பெறுதற்கு அரிய மருந்தாம்-ஸ்பர்ஸ வேதியான மருந்தாம்
உங்கள் நோயும் இவள் நோயும் தீரும் என்றுமாம் –

——————————————————————————————————

வஞ்சகையான இவளுடைய பிரவ்ருத்தியால் ஒரு பிரயோஜனமும் இல்லை –
சர்வேஸ்வரன் திரு நாமத்தை சொல்லில் இவளைக் கிடைக்கும் என்கிறாள் –

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-

மருந்து ஆகும் என்று,
அபத்ய சேவை பண்ணா நின்றால் பத்த்யம் என்று வியவஹரிக்க வேணுமோ -மருந்தாம் என்றபடி –
என்று -அதஸ்மின் தத் புத்தி
அங்கு ஓர் –
அங்கு ஒருத்தி என்று அநாதர யுக்தி –
மாய வலவை சொற் கொண்டு,
வஞ்சகையாய் பிரதிபன்னங்களை சொல்லுகிற இவள் வார்த்தையைக் கொண்டு
நீர்
ருஜுக்களாய் நிரூபகரான சாத்விகர் வார்த்தை கேட்க்க கடவ நீங்கள்
சாத்விகாந்தம் அல்லது ஸ்பர்சியாது நீங்கள் –
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் –
தாமஸ அன்னமும் -அத்தோடு தோள் தீண்டியான ராஜஸ அன்னமும்
களன் இழைத்து என் பயன்?-
அந்த தேவதைகள் வந்து சந்நிதி பண்ணும் நாற்சந்தி முதலான ஸ்தலங்களில் அவற்றுக்குச் சொல்லுகிற நியமங்களோடு இட்டு
என்ன பிரயோஜனம் உண்டு -களன் -களம் –
இதில் பிரயோஜனம் இல்லை யாகில் பிரயோஜனம் உள்ளது ஒன்றை சொல்லிக் காண் என்ன –
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட-பெருந்தேவன்-
ஆஸ்ரித அநாச்ரித விபாகம் இன்றியே சர்வ லோகங்களையும் ஒரு காலே பிரளயம் கொள்ளாத படி திருவயிற்றிலே வைத்து நோக்கி
அத்தனை போதும் மறைய இருந்தது பொறுக்க மாட்டாமையாலே புறப்பட விட்ட பரதேவதை
களன் இளைக்க வேண்டா -அர்த்திக்க வேண்டா -ஆர்த்தியே பரிகரமாக ரக்ஷிக்குமவனை பற்றுங்கோள்-
அந்த பிரளயம் தீர்த்தவனே வேணும் -இந்த பிரளயத்துக்கும் –
நம்மோடு ஓக்க பிரளயத்தில் அழுந்தும் ஷூ த்ர தேவதையோ பற்றுவது
வரையாதே சர்வ ரக்ஷகனான சர்வாதிகனை அன்றோ பற்றுவது
பேர் சொல்லகிற்கில்,
திரு நாமத்தை சொல்ல வல்லி கோள் ஆகில் -இந்த துஸ்சீலைகளான தேவதைகளை போலெ துராராதனன் அல்லன்
இங்குத்தைக்கு விஷயீ கார அபேஷா ஸூசகமாய் இருபத்தொன்று அமையும்
இவளைப் பெறுதிரே.
நேர்த்தி அல்பமே யாகிலும் இவளை பெறுகிற மஹா லாபத்தை பெறலாம்
நீங்கள் இழிந்த துறையில் பெரு நேர்த்தி பட்டாலும் ஒரு பயன் இல்லை –

——————————————————————————————————–

நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் நோவை மிகப் பண்ணா நின்றது -நோய்க்கு யோக்யமான பரிகாரத்தை பண்ணுங்கோள் என்கிறாள் –

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5-

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;
இந்த நல் சரக்கை பெறுகைக்கு இந்த நிஷித்த அனுஷ்டானத்தையோ பண்ணுவது –
வி லக்ஷணையாய் இருக்கிற இவளை பெறுகைக்கு உபாயம் இந்த தேவாவிஷ்டமாய் ஆடுகிறது அன்று
அந்தோ!
இவள் இப்படி சொன்னாலும் அவர்கள் இதில் நின்றும் மீளாமையாலே அந்தோ என்கிறாள் –
அந்தோ -விபரீத பலமாகா நின்றது -இவளை இழந்தே போம் அத்தனை ஆகாதே -என்கிறாள் –
இது பரிஹாரமாகாது ஒழியும் அத்தனை போக்கி இழக்க வேண்டுவது என் என்ன -இவள் கண்ணும் முறுவலும் ஆனபடி பார்த்தி கோளோ-என்கிறாள்
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும்
குவளை போலேயாய் போக்தாக்கள் அளவன்றிக்கே பரப்பை உடைத்தான கண்ணும் கோவை போலே இருக்கிற அதரமும் விவர்ணம் ஆயிற்று
பயந்தனள்;
பசந்தனள் என்பர்கள் தமிழர்கள் –
பகவத் விஸ்லேஷத்திலும் அகஞ் சுரிப் படாத அழகுகள் தேவதாந்த்ர ஸ்பர்சத்தாலே அழிவதே -இனிச் செய்ய அடுப்பது என் என்ன
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
கவளம் கொண்டு இருப்பதாய் -கடாம் உண்டு -மத ஜலம்-அது ஒழுகா நிற்பதான குவலயா பீடத்தை முடித்த உபகாரகன்
வலிய பிரதிபந்தகங்களை வருத்தம் அற போக்க வல்லவனுடைய திரு நாமத்தை சொல்லுங்கோள்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத ரேணுவைக் கொண்டு இவள் மேலே நீங்கள் இடுங்கோள்
தவள பொடி-சுத்தமான பொடி –
நீர் இட்டிடுமின்;
பாபம் பண்ணுகைக்கு ஸஹ கரித்தவர்களுக்கும் பிராயச்சித்தம் பண்ண வேணும்
தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்குப் பரிஹாரம் -திரு நாம சங்கீர்த்தனம் –
ததீய சந்நிதிக்கு பரிஹாரம் -ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத தூளி
தணியுமே
கண்ணும் முறுவலும் தன் நிறம் பெறும் –

————————————————————————————————————-

இந்த பெரு நேர்த்தி எல்லாம் வேண்டா -தவள பொடி என்று சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
பாத தூளியை இவள் மேல் இட உத்யோகிக்க அமையும் என்கிறாள் –

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்;
தான் நிஷேதிக்க நிஷேதிக்க உச்சி வீடும் விடாதே நீங்கள் அணங்கு ஆடா நின்றி கோளே
அன்னைமீர்!
நீங்கள் பக்வைகள் ஏன்னா இளையவர்கள் வார்த்தை கேட்கலாகாதோ என்கிறாள்
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
உங்கள் பரிஹாரத்தால் நோய் போகை தவிர்ந்து பழைய நிலையிலும் நில்லாதே ப்ரவ்ருத்தமாய் வாரா நின்றது
காரண அனுவ்ருத்தியாலே கார்யம் அனு வர்த்திக்கிற படி
இது விபரீத பலமாயிற்றது ஆகில் பரிஹாரம் தான் ஏது எண்ணில்
மணியின் அணி நிற மாயன்
நீல மணியில் காட்டில் அழகியதான வடிவை உடையனாய் குண சேஷ்டிதங்களால் ஆச்சர்ய பூதனானவன்
தமர் அடி நீறு கொண்டு
அவனுடைய அழகுக்கும் குணங்களுக்கும் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாத தூளியைக் கொண்டு
வடிவு அழகுக்குத் தோற்று மோஹித்த இவளுக்கு அவற்றிலே தோற்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத ரேணுவை யே இடுங்கோள் –
அணிய முயலின்,
அணிய வேண்டா -உத்யோகிக்க அமையும் –
தவள பொடி கொண்டு நீர் இட்டுமின் என்று -என்று விசிஷ்ட குலத்தில் பிறந்த அபவாதம் ஆகையால் கனக்க விதித்தேன் அத்தனை
அதன் பிரபாவம் பார்த்தால் இட உபக்ரமிக்க அமையும்
தொண்டர் அடிப் பொடி யாட நாம் பெறில் -என்ன கடவது இ றே
தேர்ப் பாகனார்க்கு மோஹித்த இவளுக்கு மாயன் தமர் அடி நீர் கொண்டு பரிகாரம் ஆனபடி என் என்று பிள்ளை சீயரைக் கேட்க
மோர்க் குழம்பு கேட்க்கும் அளவில் கொடுக்கப் பெறாதா போலே ஆசைப்பட்ட அளவிலே அவனை கொடு வந்து காட்டப் பெறாமையாலே
மோகித்தால் சுக்கிட்டு ஓதி உணர்த்தி உண்டாக்க ஆசிவசிப்பிக்க வேண்டுகையாலே அருளிச் செய்தார் –
மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.
இவளை பெறுகைக்கு வேறு பரிஹாரம் இல்லை –
இவ் வப்ராக்ருத ஸ்வபாவைக்கு மற்று ஓன்று பரிஹாரம் ஆகாதே -இதுவே பரிஹாரம் ஆம்படி அன்றோ இவள் வைலக்ஷண்யம் என்கை –

—————————————————————————————————————

இதர தேவதைகளை ஆச்ரயித்தால் இவளுடைய வி நாசமே பலம் -பிழைக்க வேண்டி இருந்தி கோள் ஆகில்
ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-

அணங்குக்கு அருமருந்து என்று,
அப்ராக்ருத ஸ்வ பாவையான இவளுக்கு பெறுதற்கு அரிய மருந்து என்று –
இவள் வை லக்ஷண்யம் அறிந்திலி கோள் -செய்கிறதின் தண்மையும் அறிந்திலி கோள்
சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் -என்ன கடவது இ றே
அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,-
நிஷித்த த்ரவ்யங்களை பிரார்த்தித்து -பராய்-பரவி -பிரார்த்தித்து
துணங்கை எறிந்து,
துணங்கை கூத்து என்று கையைத் தட்டி ஆடுவது ஓன்று உண்டு -அது ஆதல் –
சுணம் என்றத்தை சுண்ணம் என்று ஆக்கி மஞ்சள் பொடியை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து ஆடுமது ஆதல் –
நும் தோள்குலைக் கப்படும் –
பகவத் விஷயத்தில் அஞ்சலி பண்ணும் கையைக் கொண்டு நீங்கள் படும் எளிவரவே இது
சாதனா அர்த்தமாக ஒரு அஞ்சலியும் மிகை என்று இருக்கக் கடவ நீங்களே இந்த பஹு வியாபாரங்களை பண்ணு கிறி கோளே
அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
ஜீவன ஹேதுவான வரீஹீ நசித்துப் போக கழுதையினுடைய உதட்டின் வியாபாரத்தை கண்டு இருக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –
அது போலே உங்களுக்கு ஜீவன ஹேதுவான இவள் நசியா நிற்க தேவதாந்த்ர ஸ்பர்சம் உடையாருடைய வியாபாரங்களை கண்டு
இருக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–
வேதம் வல்லரான மாயப்பிரான் தமரை ஆஸ்ரயிங்கோள் -அவனுடைய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களுக்கு
தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆஸ்ரயிங்கோள் –
வேதம் வல்லார் என்கிறது -நாராயண பரா வேதா -வேதைச்ச சர்வைரஹ மேவ வேத்ய-என்று சகல வேத தாத்பர்யமும் கைப்பட்டவர்கள் என்கை –
சகல தேவதைகளும் பகவத் பரதந்த்ரம் ஆகையால் அவற்றுக்குத் தனித்து உயிர் இல்லை என்று இருக்குமவர்கள் வேதம் வல்லவர்கள் –

——————————————————————————————————————-

ஸ்ரீ வைஷ்ணவர்களை புருஷகாரமாகக் கொண்டு சர்வேஸ்வரன் திருவடிகளில் சரணம் புக்கு இவளுடைய நோயைத் தீர்த்து
கொள்ளுகை தவிர்ந்து ஷூ த்ர தேவதா ஸமாச்ரயணம் பண்ணுமது உங்களுக்கு கீழ்மையை பண்ணும் -என்கிறாள் –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

வேதம் வல்லார்களைக் கொண்டு
சர்வேஸ்வரனே-ப்ராப்யமும் ப்ராபகமும்-என்கிற வேத தாத்பர்யம் கைப் பட்டவர்களை புருஷகாரமாகக் கொண்டு
வேறாக வேத்தியிருப்பாரை வெல்லும் என்கிறபடியே அவர்கள் தாங்களே ஆஸ்ரயணீயர்-
சஜாதீய பாவத்தால் அத்தனை ருசி விசுவாசங்கள் வாராதாகில் அவர்களை புருஷகாரமாக வாகிலும் கொல்லப் பாருங்கோள்-
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை –
பிதாமஹம் நாதமுனிம் வி லோக்ய ப்ரஸீத
விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து,
அயர்வறும் அமரர்கள் அதிபதி திருவடிகளில் பணிந்து
இவள் நோய் இது –
நோய் கொள்ளுகிறாள் இவள் -நோய் தான் இது
தீர்த்துக் கொள்ளாது –
அநாயாசேன போக்கிக் கொள்ளாதே
போய்,
அப்ராப்த விஷயங்களில் கை கழிய போய்
ஏதம் பறைந்து,
வக்த்வயம் அல்லாதவற்றைச் சொல்லி
அல்ல செய்து
கர்த்தவ்யம் அல்லாதவற்றைச் செய்து -நிஷித்தங்களை செய்து
,கள்ளூடு கலாய்த்தூஉய்,
நிஷித்த த்ரவ்யங்களை ஸ்ரீ வைஷ்ணவ க்ருஹங்களிலே -உள்ளே -கலந்து தூவி –
கீத முழவிட்டு,
நிஷித்தமான கீதத்தோடே கூடின வாத்தியங்களை ப்ரவர்த்திப்பித்து
கீத முழவு -பாட்டோடு கூடின வாத்யம்
நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–
நீங்கள் தேவா விஷ்டராய் ஆடுகிற இது -உங்களுக்கு அத்யாவஹம்
இது உங்கள் அளவிலே போகிறது இல்லை
ஸ் கந்த ருத்ர ம ஹே ந்த்ராத்யா –
பிரதி ஷித்தாஸ் து பூஜநே –
பிரதிபுத்தா ந சே வந்தே –

————————————————————————————————————–

நீங்கள் பண்ணுகிற நிஷ்ப்பல ப்ரவ்ருத்தி கள் நான் காண மாட்டேன் -கிருஷ்ணன் திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கோள் –
இவள் பிழைக்க வேண்டி இருந்தி கோள் ஆகில் -என்கிறாள் –

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9-

கீழ்மையினால்
உங்கள் தண்மையினால்-இவர்களுக்கு தண்மை யாவது -ரஜஸ் தமஸ்ஸூக்களாலே அபிபூதராகை
அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்-சண்டாளன் ப்ரவர்த்திப்பித்த வாத்தியத்தின் கீழே இருந்து
நாழ்மை பலசொல்லி,
நாழ்மை-குற்றம் -அவற்றுக்கு இல்லாத ஏற்றங்களைப் பலவும் சொல்லி
உண்டு உமிழ்ந்து கடந்தும் கிடந்தும் -என்று அவனைச் சொல்லும் ஏற்றங்களை இ றே சொல்லுவது
சிலர்க்கு இல்லாத ஏற்றங்களை சொல்லுகை இ றே குற்றம்
நாழ்மை-நறு வட்டாணித்தனம் என்றுமாம் –
நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
நீங்கள் தேவாவிஷ்டராய் ஆடுகிற நிஷ்ப்பல ப்ரவ்ருத்தியை நான் காண மாட்டு கிறி லேன்
பகவத் சஹகாரம் ஒழிய ஒரு தேவதைக்கு உயிர் உண்டாகில் இ றே அந்த வியாபாரம் கண்ணில் படுவது
இந்த நிஷ்ப்பல வ்ருத்தியால் நீ சொல்லுகிறதுக்கு தான் பலம் என் என்ன
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் –
சப்த ஜென்மங்களுக்கும் ரக்ஷை மேல் உண்டான ரஷையோ நாங்கள் தேடுகிறது -இந்நோவு போகை யன்றோ உத்தேச்யம் -என்ன
இந் நோய்க்கும் ஈதே மருந்து;
இவள் பிழைக்கைக்கும் இதுவே பரிஹாரம் -இது சகல பேஷஜம் அன்றோ -சகல பல பிரதோஹி விஷ்ணு -இ றே
ஊழ்மையில்
இவளை பிழைப்பிக்கையே அன்று -பிராப்தம் செய்ததாகவுமாம்-ஊழ்மை-முறைமை
கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–
கண்ணபிரான் கழல் உன்னித்து வாழுத்துங்கோள் -உபகார சீலனான கிருஷ்ணன் திருவடிகளை அனுசந்தித்து வாழ்த்தப் பாருங்கோள்
ஆயாஸ ஸ்மரேண கோ அஸ்ய ஸ்ம்ருதோயச்சத்தி சோபநம் -என்று ஸம்ருத்தி மாத்திரத்திலே போம் –

—————————————————————————————————————-

இவளுக்கு கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை அனுசந்தித்து அதுக்கு ஈடாக அவனை வாழ்த்துங்கோள்
-வாழ்த்தவே இவள் உஜ்ஜீவிக்கும் என்கிறாள் –

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
உன்னித்து -மதித்து -நெஞ்சால் ஒன்றாக நினைத்து கிருஷ்ணனை ஒழிய வேறு ஒரு தேவதையை தொழாள்
வேறு ஒன்றை தேவதை என்று மதித்தல் தொழுதல் செய்யுமவள் அல்லள்
தேவதாந்தர்ய ஸ் பர்சம் பொறாத இவளுக்கே இந்த பரிஹாரம் பண்ணுவது
நும் இச்சை சொல்லி
உங்களுக்கு பிரதிபந்தங்களை சொல்லி -இவளுக்கு தகாது என்று அறியாதே தோற்றிற்று சொல்லி
,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
நீங்களே இவ்விஷயத்தில் விக்ருதைகள் ஆவுதிகோள் –
உங்கள் தோளே இதுக்கு உபகரணம் ஆவது
ப்ராப்த விஷயத்திலும் அவிக்ருதராய் போரும் குடி படும் பாடே இது –
மன்னப் படுமறை
அப்யஸிக்கப் படும் மறை -அத்யயயன ப்ராப்தமான வேதம் -நித்தியமான வேதம் என்றுமாம் –
மறை வாணனை
நித்தியமான வேதத்தில் சர்வாதிகனாக ப்ரதிபாதிக்கப் பட்டவனை
வண் துவராபதி மன்னனை
இப்படி ஓலைப் புறத்தே கேட்டுப் போகாமே கண்டு அனுபவிக்கலாம் படி ஸ்ரீ மத் துவாரகைக்கு ராஜாவாகப் பிறந்தவனே
வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி ஏத்துங்கோள்
அவனை ஆஸ்ரயிக்கக் கடவ நீங்களே ஷூ த்ர தேவதையின் காலிலே விழுவுதி கோள்
ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–
உங்கள் ஸ்வரூப லாபமே அன்று-அதாஸோ அபயங்கதி பவதி -என்கிறபடியே ஏத்தின சம நந்தரத்திலே ப்ரபுத்தையாய் வியாபார க்ஷமையுமாம்
இவள் உணர்ந்தாள் செய்வது தொழுதல் விக்ருதை யாதல் போலே காணும்
நீர் ஏறுண்டு மோஹித்தார்க்கு நீரே பரிஹாரமாம் போலே நோவுக்கு அடியானை கிருஷ்ணனுடைய குண கீர்த்தனமே பரிஹாரம் என்று கருத்து –

———————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியை சஹ்ருதயமாக அப்யசிக்குமவர்கள் தாம் எம்பெருமானைப் பிரிந்து பட்ட வியசனம் படார் என்கிறார் –

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்கசீலம் இலர்களே.–4-6-11-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
தொழுது அந்த ஹர்ஷத்தாலே ஆடி ஆள் செய்து நோய் தீர்ந்த கீழ் பிறந்த அவசாத அதிசயத்தாலே பிறந்த உணர்த்தியை குவாலாகச் சொல்லுகிறது –
மேலே சீலம் இல்லா சிறியேன் ஆகையால் -உணர்ந்து கூப்பிடுகைக்கு வேண்டும் அளவே இ றே பிறந்தது
வண் துவாராபதி மன்னனை ஏத்துமின் என்று தோழி சொன்ன மாத்திரமே அமைந்தது இவள் பிரபுத்தி யாகைக்கு
இத் தோழி தானும் பகவத் பிரபாவம் அறிந்திலள்
தானும் சொல்லி அவர்களும் சொல்ல வேணும் என்று இருந்தாள்-
இது எல்லாம் வேண்டிற்று இல்லையே
வழுவாத தொல் புகழ்
அஞ்ஞான திசையிலும் தேவதாந்த்ர ஸ்பர்சம் விநாச ஹேதுவாய் இத்தசையிலும் பகவத் ஸ்பர்சம் சத்தா தாரகமாம் படியான
ஸ்வா பாவிகமான வைஷ்ணவ ஸ்ரீ யிலே நிலை நின்ற புகழை உடையவர் –
வண் குருகூர்ச் சடகோபன் சொல்-வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்-
ஒருத்தனுக்கு ஞாதவ்யார்த்தங்களில் ஒன்றும் குறையாமல் அருளிச் செய்த ஆயிரத்திலும்-வெறி விலக்கான இத் திருவாய்மொழியை-
வெறி விலக்காவது -ஒருவனை ஆசைப்பட்டு மோஹித்துக் கிடைக்க இவளை தேவாவிஷ்டை என்று ஆடு அறுப்பது பலி இடுவதாக-
தோழி ஒருவனுக்கு மோஹித்து கிடக்கிறாள் என்று அவர்களை விலக்குகை-என்று தமிழர் சொல்லுவது ஒரு துறை
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்கசீலம் இலர்களே.–-
சஹ்ருத்யமாக அனுசந்திப்பார் -துக்க ஸ்வ பாவம் இன்றிக்கே ஒழிவர -சீலம் -ஸ்வ பாவம்

————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: