திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -4-5–

எம்பெருமான் ஆழ்வாரோடு விஸ்லேஷிக்கையாலே அத்யந்தம் அவசன்னரான ஆழ்வாருக்கு தன்னைப் பிரிகையாலே
அஷணத்திலே தன்னை பூர்ணமாகப் புஜிப்பிப்பைக்கு ஈடான பக்த்யாரோக்யம் பிறந்தபடியைக் கண்டு
ஸ்ருதீதிஹாசாதிகளுக்கு தாத்பர்ய பூமியாய் ப்ரஹ்மாதிகளாலே அறிய முடியாதே சுபாஸ்ரய பிரகரணங்களில் சொல்லுகிற படிகளாலே
எப்போதும் தியானம் பண்ணப் படுவானுமாய் தனக்கே அசாதரணமான ஐஸ்வர்யத்தை உடையவனாய் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில்
அயோத்யை என்றும் அபராஜிதை என்றும் ஸ்ருதிகளில் பேசப்படுகிற திரு நகரியிலே ஆனந்த மயமான திவ்ய ஆஸ்தானத்தில்
திவ்ய பர்யங்கத்திலே ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் சர்வ பூஷண பூஷிதனாய் சர்வ ஆயுத உபேதனாய்
அயர்வறும் அமரர்கள் நித்ய சேவை பண்ண பெரிய பிராட்டியாரோடே கூட வீற்று இருந்து அருளி
அவ்விருப்பிலே உபய விபூதியையும் நடத்துவதும் செய்து ப்ரணத ஜன பரித்ராண அர்த்தமாக தேவ மனுஷ்யாதி ரூபேண அவதீர்ணனாய்
அகில ஜன மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டித்த விசிஷ்டனாய் ஆதமேஸ்வரனாய் ஆத்மாவுக்கு சரண்யமாய்
ஆத்மாவுக்கு நிரதிசய போக்யமாய் இருக்கிற தன்னை தன்னுடைய கிருபையால் சாஷாத் கரிப்பிக்க
இவரும் வந்தன ஸ்தோத்ர பூர்வகமாக அடிமைகளை எல்லாம் செய்து தாம் க்ருதக்ருத்யராய் எம்பெருமானைப் பெற்றாரில்
உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை என்று அதி ப்ரீதர் ஆகிறார் –

———————————————————————————————————————-

சர்வேஸ்வரனாய் வைத்து -மனுஷ்ய சஜாதீயனாய் வந்து -திருவவதாரம் பண்ணி யருளி ஆஸ்ரித சம்ரக்ஷணம் பண்ணி அருளுகிற
கிருஷ்ணனைக் கவி பாடப் பெற்ற எனக்கு ஒரு நாளும் ஒரு குறை இல்லை -என்கிறார் –

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல,-
சர்வேஸ்வரனான வேறுபாடு தோற்றும்படி இருந்து சகல லோகங்களும் தன்னுடைய சாசனம் செல்லும் படி
ஏழு என்று லீலா விபூதிக்கு உப லக்ஷணம்
வீவு இல் சீர்ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை
ஒரு நாளும் அழிவு இல்லாத நித்ய விபூதியை அநுத்தனாய் ஆளுமவனை
சுத்த சத்வ மயமாயும் -ரஜஸ் தமஸ் மிஸ்ரமாய் இருந்துள்ள ப்ரக்ருதி த்வயமும் இரண்டின் உடைய கார்யங்களுமாக
நாலும் நித்ய சித்த பக்த முக்த கோடி த்ரயமுமான சேதனர்களுமாக ஏழு லோகம் என்றுமாம் –
வீவில் சீர் -என்று கல்யாண குணங்கள் என்றும் சொல்லுவார் –
வெம்மா பிளந்தான்றனைப்
இவ்வவதாரத்தை ஆற்றல் மிக்கு ஆளுகைக்கு உதாஹரணம் என்றும் ஆற்றல் மிக்கு ஆளுமவன் இன்னான் என்று சொல்லுகிறது என்றும் சொல்வர்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்-ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே
போற்றி என்று நிரந்தரமாக சொல்லா நின்று கொண்டு கைகளின் விடாய்கள் எல்லாம் தீர தொழுது
நல்ல ஸ்ரக்குகள் போலே சிரஸா வஹிக்கும் படியாக திருவாய் மொழி பாடுகைக்கு ஈடான பாக்யம் பண்ணின எனக்கு –

————————————————————————————————————–

இந்த மஹா ஐஸ்வர்யத்துக்கு நிதானமான லஷ்மீ நாதத்வத்தை அருளிச் செய்கிறார் –

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-

அஸி தேஷணையாய் மலரின் மேலே உறையக் கடவ பெரிய பிராட்டியார் மலரில் காட்டில் விரும்பி
தன் கண்களாலே வர்ஷித்துக் கொண்டு நித்ய வாஸம் பண்ணுகிற திரு மார்பை உடையவனுமாய்
அவளோட்டை சம்ச்லேஷ அதிசயத்தாலே மது பான மத்தரைப் போலே சிவந்து அழகியதான திருக் கண்களை உடையனாய்
இவ் வழகு காட்டில் எறிந்த நிலா வாகாமே இதுக்கு போக்தாக்களான நித்ய ஸூ ரிகளை உடையனாய் செறிந்த சொற்களால்
இசை மாலைகளைக் கொண்டு ஏத்தி நினைக்கப் பெற்றேன்
இப்பூமியில் இருக்கச் செய்தே சாம்சாரிக சகல துரிதங்களும் போம்படி
லோகத்தில் துரிதங்கள் எல்லாம் நசிக்கும் படி என்றுமாம் –

————————————————————————————————————–

ஆனந்த வல்லி யில் ஓதப்பட்ட சர்வேஸ்வரனுடைய நிரதிசய ஆனந்தத்தை விஞ்சிற்று -திருவாய் மொழி பாடி
அடிமை செய்யப் பெறுகையால் தமக்கு பிறந்த ஆனந்தம் என்கிறார் –

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்–
நித்தியமாய் நிரதிசயமான ஆனந்தத்தை உடையனாக பிரசித்தனாய் -இப்படியாலே அச்சுதன் என்னும் திரு நாமத்தை உடையனாய்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான்றனை-
இவ் வாநந்தத்துக்கு அடியாய் நித்தியமான சம்பத்தை உடையனாய் –
இச்சம்பத்தை உடையவன் என்று அறியலாம் படி அழகிய திருக் கண்களை உடையவனை
இஸ் சம்பந்தத்துக்கு அயர்வறும் அமரர்களைப் போக்தாக்களாகப் பெற்றது என்னும் ப்ரீதி அதிசயத்தினாலே
பாட்டுக்கள் தோறும் விண்ணோர் பெருமான் என்கிறார் –
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
முடிவில்லாத காலம் திருவாய்மொழி பாடி அனுபவிக்கப் பெற்றேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.-
இப்படி அனுபவித்து நித்ய நிரதிசய ஆனந்தி யானேன் –

—————————————————————————————————

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து அத்யந்த நிஹீனனான என்னை விஷயீ கரித்து அருளினான் என்று
அந்த மஹா உபகாரகத்தை அனுசந்தித்து அதிலே ஈடுபடுகிறார் –

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்களுடைய சகல துக்கங்களும் நீங்கும் படி சம்ச்லேஷிக்கும் உபகாரகனாய்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை –
தர்சநீய வேஷனான பெரிய திருவடியையும் பிரதிபக்ஷ நிரசன சீலனான திரு வாழி ஆழ்வானையும் உடைய சர்வேஸ்வரன்
தூவி -சிறகு
பாட்டுத் தோறும் சொல்லுகிற விண்ணோர் ஆவார் -இவர்கள் முதலானோர்
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்
நெஞ்சின் வருத்தம் இன்றிக்கே வாக் ப்ரவ்ருத்தி மாத்திரத்தாலே பிறந்த திருவாய்மொழியைக் கொண்டு அவனை ஏத்தி அனுபவிக்கப் பெற்றேன் –
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.
ஸர்வேஷாம் ஆத்மபூதன் ஆனவன் -அத்யந்த நிஹீனனான என் விஷயத்தில் செய்த உபகாரத்தின் உடைய
பெருமையை என்னாலே நிலையிட ஒண்கிறது இல்லை

—————————————————————————————————–

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து அர்ஜுனனுக்கு சகல அர்த்தங்களையும்
அருளிச் செய்தினால் போலே -எனக்கு பொறுக்க தன் குண சேஷ்டிதங்களைக் காட்டி அவ் வழியாலே என்னை அடிமை கொண்டவனை
அனுபவித்து மிகவும் ப்ரீதன் ஆனேன் என்கிறார் –

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-

துக்கங்களும் துக்க ஹேதுவான கர்மங்கள் எல்லாம் சடக்கென தக்தமாம் படி சொல்மாலையைத் தொடுத்து
ஏத்தி நாள் தோறும் ப்ரீதான் ஆனேன் –

———————————————————————————————————

உமக்கு வேண்டுவது என் -என்று எம்பெருமான் கேட்க -நான் பெறாதே இனி சாதித்து தர வேண்டுவது ஒரு பொருள் உண்டோ என்கிறார் –

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்-பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை-
கரிய விழியினுடைய அழகுக்கு மேலே அளவே இடப்பட்ட அஞ்சன சூரணத்தை உடையதாய் பெருத்து அழகியதான திருக் கண்களை உடையனாய்
அயர்வறும் அமரர்களாலும் புஜித்து முடிய ஒண்ணாத படி அற மிக்கு இருந்துள்ள அழகை உடையவனை
கறுத்த திரு உடம்பின் அழகுக்கு மேலே என்றுமாம்
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு-
நேரே வாசகமான சொல்லாலே இசை மாலைகள் ஏத்தி அவனை நினைக்கப் பெற்ற எனக்கு –

———————————————————————————————————–

இஸ் சம்பத்து எல்லாம் அவன் பிரசாதத்தாலே பெற்றேன் என்கிறார் –

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-

தன் ஐஸ்வர்யத்தை ஆவிஷ்கரியாதே மனுஷ்யாதி மாத்ரமாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளின இடத்திலும்
என்றும் ஒரு வகையாலும் தனக்கு ஒத்தாரையும் மிக்காரையும் இல்லாத சர்வலோகேஸ்வரனை
தனக்கு ரக்ஷணீய ஜந்துக்கள் மழையால் நோவு படக் கிடந்ததொரு மலையை எடுத்து அவ்வாபத்தை பரிஹரித்து அருளின
மஹா உபகாரகனை திருவாய்மொழி ஆகிற அவன் மாலைகள் அவன் விரும்பும்படி சூட்டுகைக்கு பாக்யத்தைப் பண்ணினேன் –

———————————————————————————————–

எம்பெருமானுக்கு தம் பக்கல் உண்டான சங்காதிசயத்தை அனுசந்தித்து இப்படி இருக்கிற
சர்வேஸ்வரனை கவி பாட வல்ல எனக்கு திரு நாட்டிலும் நிகர் இல்லை என்கிறார் –

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை
தன் திருவடிகளை ஆஸ்ரயித்த நம் திறத்தில் பெரிய பிராட்டியார் பக்கலில் காட்டிலும் ஸ்நிக்த்தன் ஆனவனை
ஞாலத்தார்-தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத்
எம்பெருமான் இப்படி ஸ்நேஹிக்கைக்கு காரணம் நிசர்க்க ஸித்தமான சேஷ சேஷி பாவம்
தண் தாமரை-சுமக்கும் பாதப் பெருமானைச்
குளிர்ந்து இருந்துள்ள ஆசன பத்மத்தால் அல்லது செல்லாத படியான ஸூ குமாரமான திருவடிகளை உடைய சர்வேஸ்வரனை
ஆசன பத்மத்தோடு ஓக்க என் சொல் மாலைகளும் அவனுக்கு ஸ்ப்ருஹணீயம் என்று கருத்து
சொல்மாலைகள் சொல்லுமாறு-அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே-
எம்பெருமானுடைய குணங்களை நினைத்து கலங்கச் செய்தே கவி பாடுகைக்கு ஈடாக நெஞ்சை நிலை நிறுத்தி அதிலே உபக்ரமிக்க கடவ எனக்கு
ஒரு கவி சொல் என்றால் அப்போதே சொல்ல வல்ல எனக்கு என்றும் சொல்லுவர் –

—————————————————————————————————

அவனுடைய வ்யாபித்தியாவதாரங்களில் எங்கும் புக்கு கவி சொல்ல வல்லேன் என்று ஹ்ருஷ்டராகிறார் –

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-

ஸ்வர்க்கம் தொடக்கமான மேலில் லோகங்களிலும் பூமி தொடக்கமான கீழில் லோகங்களிலும் அவ்விடங்களில் எல்லாம் உண்டான
தேவ மனுஷ்யாதி பதார்த்தங்கள் எல்லா வற்றிலும் நிரந்தரமாக வியாபித்து நின்றவனை
சங்கு சக்கர கதா தரனாய்க் கொண்டு அப்ராக்ருத திவ்ய தேகத்தோடே ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக மனுஷ்யாதி ரூபேண வந்து
திருவவதாரம் பண்ணி அருளி அதி மநோ ஹரமான குடக்கூத்து முதலான திவ்ய சேஷ்டிதங்களை உடையனான
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கவி சொல்ல வல்ல எனக்கு எதிர் உண்டோ –

—————————————————————————————————-

தாம் பாடுகிற கவிகளின் இனிமையை தாம் அனுசந்தித்து எம்பெருமானுக்கு நல்லராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இவற்றைக் கேட்டால் எங்கனே இனியராய் இருக்கிறாரோ என்கிறார் –

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-

உண்டும் உமிழ்ந்தும் -இத்யாதி
உண்பது உமிழ்வது தொடக்கமாக உண்டான திவ்ய திவ்ய சேஷ்டிதங்கள் எல்லா வற்றாலும் கண்டபடியால்
தனக்கே சேஷம் இஜ் ஜகத்-என்று சொல்லும் படி நின்ற சர்வேஸ்வரனை
கொண்ட கோலத்தோடு வீற்று இருக்கை யாவது -எல்லாருடைய மன நயன ஹாரியாம் படி ஒப்பித்து வீற்று இருக்கை
மணம் கூடுகையாவது -பூமிக்கு அபிமானியான பிராட்டியோடே சம்ச்லேஷிக்கை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.-
திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம் பண்ணினேன் –
வண்தமிழ் -ஆகையாவது -எம்பெருமானை உள்ளபடி காற்றவற்றாகை
இன்ப மாரியே.–இன்பத்தை உண்டாக்கும் மேகம் –

——————————————————————————————————

நிகமத்தில் நமக்கும் பூவின் மீசை நங்கைக்கும் -என்கிற இம் மஹா குணத்தில் ஈடுபட்டு இருக்கிற பெரிய பிராட்டியார்
இக்குணத்தை அறிந்து அருளினை ஆழ்வாரை தமக்கு துணையாகப் பெற்றோம் என்னும் ப்ரீதியாலே
இவர் அருளிச் செய்த இக்குண ப்ரதிபாதகமான இப்பத்தையும் கற்றவர்களை தனக்கே பாரமாகக் கொண்டு
ஸமஸ்த துக்கங்களையும் போக்கி ரஷித்து அருளும் என்கிறார் –

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-

நிரந்தர வர்ஷத்தாலே ஸ்ரமஹரமான திருமலையை தனக்கு திவ்ய தாமமாக உடையனான திருவேங்கடமுடையானை –
தாம் எம்பெருமானைப் பெறுகையாலே சம்ருத்தமான திரு நகரியை யுடைய ஆழ்வார்
வேரி -பரிமளம் –

—————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

—————————————————————————————————————

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: