திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-4–

இப்படி பிரணயித்வ அனுசந்தானத்தால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே ஆஸ்ரயம் அழியும் படி வர -இவர் பிரக்ருதியை அறியுமவன் ஆகையால்
ப்ரீதி அரையாறு பட்டு சாத்மிக்கைக்காக அவன் பேர நிற்க-பிரிந்தது அவனை ஆகையால் ஆற்றாமை மேலிட்டு
தன லுப்தர் கிழிச்சீரையை விழ விட்டால் போலியான முடிகளை அது அது என்று பிரமிக்குமா போலே
அவனோடு சத்ருசமாயும் சம்பந்திகளாயும் இருந்த பதார்த்தங்களை -அவன் அவன் என்று பிச்சேறும் படியாக தமக்கு பிறந்த அவசாதத்தை
கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே இப்படி அலமாக்கிறாள் ஒரு பிராட்டி தசையை அனுசந்தித்தாள் ஒரு திருத் தாயார் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
திருத் தாயார் இவள் கிலேசத்தை சொல்லுவது -இத்தால் தனக்கு உண்டான நலிவைச் சொல்லுவதாய்க் கொண்டு
கை வாங்கும் அளவில் வந்து முகம் காட்டி ஆஸ்வசிப்பித்தானாய் இருக்கிறது –

—————————————————————————————————-

வினவ வந்தவர்களுக்கு தன் மகளை அவன் பிச்சேற்றின படிகளை சொல்லி –இதுக்கு என் செய்கேன் -என்கிறாள் –

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

மண்ணை இருந்து ;
மண்ணை -பூமியை –ப்ராதேசிகமான அளவன்று -மண் முழுதும் அகப்படுத்து நின்ற -என்கிறபடியே திருவடிகளுக்கு உள்பட்ட பூமி அடங்க
மயாது பக்த்யா தஸ்யைவ வாமனஸ் யோப புஜ்யதே-இருந்து என்கையாலே -முன்பு ஸ்திதி கமன சயநாதிகளிலே அரதியாய் சென்றமை தோற்றுகிறது-
துழாவி,
பித்தோபஹதர் சந்தன பங்கத்திலே கை வைக்குமா போலே விரஹ அக்னி நலியாமைக்காக தத் சம்பந்தம் உள்ளது ஒன்றிலே கை வைக்கிறாள்
‘வாமனன் மண் இது’ என்னும்
பிச்சேறினால் போலே மண்ணைத் துழாவுகிறது என் -என்ன அத்யாதரத்தோடே ஸ்ரீ வாமனனது அன்றோ -என்னா நின்றாள்
மஹா பலியதும் அன்று -இந்த்ரனதும் அன்று -தத் சம்பந்தமே யாயிற்று இவளுக்குத் தோற்றுகிறது
இது என்னும் –
ப்ரத்யக்ஷத்திலும் சம்சயம் உண்டோ என்னா நின்றாள் -பூத காலத்தில் உள்ளதும் வர்த்தமான காலத்தில் போலே
தோற்றுகிறது இறே இவளுக்கு -ஆனாலும் அளந்தவனைக் காண ஒண்ணாது இப்போது –
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
ஆகாசத்தை தொழுது -என்னோட்டை கலவி போலேயும்-அவதாரம் போலேயும் பிரிவோடே வியாப்தமாய் இருக்கை அன்றிக்கே-
அவன் நித்ய வாசம் பண்ணும் பரமபதம் என்று சொல்லப் புக்கு -பல ஹானியாலே தலைக் கட்ட மாட்டாதே ஹஸ்த சேஷ்டையாலே காட்டா நிற்கும் –
ஆகாசத்தை தொழுகிறது -நாம சாம்யத்தாலும் ஊர்த்வதையாலும்
அவன் மேவு வைகுந்தம்-பூத காலத்தில் உள்ளது காண்கிறாப் போலே லோகாந்தரத்தில் உள்ளதும் காண வல்லளாய் இருக்கிறபடி –
ஆர்ஷிடிஷேணன் ஆஸ்ரமத்தில் நிற்க பரமபதம் தோற்றுகிறதே பாவ பந்தத்தாலே –
என்று கை காட்டும்;
நித்ய ஸூரிகள் அனுபவத்தை அனுசந்தித்து தனக்கும் பிராப்தி ஒத்து இருக்க கிடையாமையாலே நா தளர்ந்து குறையும் ஹஸ்த முத்திரையால் காட்டா நின்றாள்-
கண்ணை உண்ணீர் மல்க நின்று,
பிராப்தி ஒத்து இருக்க இவ்வனுபவத்தை இழப்பதே -என்று கண்ண நீர் பாயா நின்றாள்
கீழ் அவதாரத்தை அனுசந்தித்த போது கண்ண நீர் பாய்ந்திலள்
அவர்களில் பிரிக்கதிர் பட்டு போந்தாள் ஒருத்தி என்னும் படி இ றே இவள் படி
‘கடல்வண்ணன்’ என்னும்;
அத்தேசத்தில் இருக்கும் ஸ்ரமஹரமான வடிவை சொல்லா நின்றாள்
இவளை பிச்சேற பண்ணின வடிவாயிற்று
அன்னே!
அம்மே என்னுதல் -மன்னே என்னுதல் -இரண்டும் விஷாதக ஸூ சகமான அவ்யயம்
என்-பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு-
கலவிக்கு உட்பட மாட்டாத பருவமாய் இருக்க கலந்தார்க்கும் அவ்வருகான ஆர்த்தியை யாயிற்று விளைத்தது
என் பெண்ணை
நாட்டார் பிச்சையும் தவிர்க்க வல்ல என் மகளைக் கிடீர்
பெரு மயல் -பெரும் பிச்சு -சத்ருச பதார்த்தத்தையும் சம்பந்தி பதார்த்தத்தையும் அவனாகப் பிரமிக்கும் பிச்சு
என் செய்கேன், –
அவனை வர பண்ணுவேனோ
இவளை ஆறி இருக்கப் பண்ணுவேனோ
நான் பொறுத்து இருப்பேனோ
பெய் வளையீரே!–
கையிலே இடப்பட்ட வளையை உடைய நீங்கள் இவள் கையில் வளை தொங்கும் மருந்து சொல்ல வல்லிகோளே-

————————————————————————————————————-

அப்ராக்ருத ரூபை யான இவள் செய்கின்றன ஒன்றும் தெரிகிறது இல்லை என்கிறாள் –

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

பெய் வளைக் கைகளைக் கூப்பி,
கடல் வண்ணன் -என்று அனுசந்தித்தவாறே கழன்ற வளைகள் ஒழிய சரிந்த வளைகள் பூரித்தன –
தொழு விக்கைக்கு ஒப்புவித்து தான் தொழா நின்றாள் -அவனை தொழு விக்கைக்கு இ றே ஒப்பித்தது
-வீரக் கழலோடே எதிரிகள் லையில் நோவு படுவாரைப் போலே –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம்-என்ற வல் நெஞ்சு ஆனவர்களையும் அழிக்கும் விஷயம் இ றே
‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
கடலோசை வந்து செவிப்பட்டது -என் ஆர்த்தி தீர்க்கைக்காக உபகாரகனானவன் வந்து கிடக்கிற கடல் என்னா நின்றாள்
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
இராத்திரி எல்லாம் சமுத்திர கோஷத்துக்கு ஆடல் கொடுத்து ஆதித்யன் உதித்தவாறே ஆதித்யனும் பிரபையும் சேர்ந்து
இருக்கிற படியைக் கண்டு -இது ஸ்ரீதரனுடைய வடிவு என்று ஹ்ருஷ்டை யாகா நின்றாள் –
பிரபா ப்ரபாவன்கள் உடைய சேர்த்தி மாத்ரத்தையே கொண்டு சொல்லா நின்றாள் –
செய்யதோர் ஞாயிற்றை –
அழகியதாய் அத்விதீயமான நாயிறு -தாயும் தமப்பனும் சேர இருந்த சந்நிதியிலே பசித்த பிரஜைகளை போலே சிதிலையாகா நின்றாள்
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்;
அந்த ஸைதில்யத்தாலே கண்ண நீர் மல்க நின்று தன்னோடே அவனுக்கு உண்டான சம்பந்தத்தை நினைத்து நாரணன் என்னும் –
சிரீதரன் என்னா -நாரணன் என்பதற்கு முன்னே சித்தியை யாகா நின்றாள் -ஸ்ரீ மன் நாராயணன் என்று கூடச் சொல்ல மாட்டு கிறிலள்
அன்னே!
அம்மே என்பாரைப் போலே -மைத்ரேய என்பாரைப் போலே தளர்த்திக்கு ஊற்றங்கால் தேடுகிறாள்
என்-தெய்வ உருவிற்
சத்ருசமாகவும் சம்பந்தியாகவும் உள்ள பதார்த்தங்களை அவனாக அனுசந்திக்க நித்ய ஸூரிகள் வடிவு போலே இவள் வடிவும் அப்ராக்ருதமாய் இருக்கிறபடி-
சிறுமான்
அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் –
அவர்கள் பிரதம ஜா யே புராணா-என்னும் படி இ றே இருப்பது
செய்கின்றது ஒன்று அறியேனே.–
இவள் தொடங்குகிறது எது-தலைக் காட்டுகிறது எது -என்று ஒன்றும் தெரிகிறது இல்லை –

————————————————————————————————————–

இவளுடைய அதி ப்ரவ்ருத்திகளை சொல்ல என்று புக்கு அவற்றுக்கு எண்ணில்லை என்கிறாள் –

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-

அறியும் செந்தீயைத் தழுவி,‘
தாஹகம் என்று அறிந்து போருமத்தை தழுவா நின்றாள்
மந்த்ர யவ்ஷாதிகளாலே பிரதிபந்தக சக்தி தான் உண்டாயத் தழுவுகிறாள் அன்றே
தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம் -என்று ஒளி உடைமையை பார்த்து தழுவா நின்றாள் –
பொரு நீர்க் கடல் தீப்பட்டு எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப -என்னுமா போலே
மாணிக்கப் படி சாத்தி வந்து தன்னோடே அணைவதாக நிற்கிறானாக கொண்டு தழுவா நின்றாள் –
அச்சுதன்’ என்னும்;
இத்தசையிலே வந்து சந்நிஹிதனாய்-என்னை மங்காமே நோக்கினான் என்னா நின்றாள்
எல்லா அவஸ்தையிலும் உள்ளவர்கள் உடைமையை நழுவ விடாதார்கள் இ றே
மெய் வேவாள்;
அதக்த காத்ரையாய் இரா நின்றாள்
இவள் பிரமித்தால் அது தன் கார்யம் செய்தால் ஆகாதோ –
பஸ்யாமி பத்மாஸ் தரணாஸ் த்ருதானி சீதானி சர்வாணி திஸாம் முகாநி -என்னக் கடவது இ றே
சீதோ பவ என்றாரும் இல்லை கிடீர் -சீதோ பவ என்றவள் தானே இ றே இங்கனே செய்கிறாள் –
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வீசுகிற குளிர்ந்த காற்றை தழுவி பசுக்களை மேய்த்து தன் ஆர்த்தி தீர வந்தான் -என்னா நின்றாள் –
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்கிறபடி நைந்து இருக்கையிலும்-தன் சத்தை பரார்த்தமாகையாய் இருக்கையிலும் பிரமிக்கிறாள்
லௌகீகர் படியும் அன்று விரஹிணிகள் படியும் அன்று
லௌகீகர் படியாகில் நெருப்பு சுட வேணும் -விரஹிணிகள் படியாகில் காற்று சுட வேணும் -இரண்டும் கண்டிலோம் என்கை
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற-
இத்தசையில் சம்ச்லேஷ ஸூ சகமான இந்த பரிமளம் எங்கனே உண்டாம் படி என்னில்
காற்றோடு புகுந்து அணைந்தார் என்று கார்யத்தைக் கொண்டு கல்பித்தல்
கோவை வாயாளில் அனுபவம் பத்துக் குளிக்கு நிற்கும் என்னுதல்
வந்தேறி கழிந்தால் ஆத்ம ஸ்வரூபம் பகவத் சம்பந்தியாய் இருக்கும் -என்னுதல்
அன்றி மற்று ஓர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல்-என்னக் கடவது இ றே
வினையுடை யாட்டியேன் பெற்ற –
பிரிவிலும் திருத் துழாய் மணம் மாறாத படி அவகாஹித்து போலி கண்டு பிரமிக்கும் படி ப்ரேமம் யாய் விட்டது
பாபத்தை பண்ணின என் வயிற்றிலே பிறப்பு இ றே
பாக்ய பலத்தை பாப பலமாக சொல்லுகிறாள் -இழவைப் பற்ற
செறிவளை முன்கைச்
முன் கையில் செறிந்த வளையை உடையவள் -முன்பு இருக்கும் படி யாதல் -பின்பும் இப்படியே இருக்கத் தகுமவள் என்னுதல்
செறிவளை-விஸ்லேஷம் கனாக் கண்டு அறியாதவளை
சிறுமான்
கலக்கும் பருவம் அல்லாத முக்தை
செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே
ஓன்று அன்று பல –
விரஹிணி என்ன ஒண்ணாது -திருத் துழாய் நாறுகையாலே
சம்லிஸ்ஷ்டை என்ன ஒண்ணாது -போலியான காற்றை தழுவுகையாலே
லௌகிகை என்ன ஒண்ணாது நெருப்பு சுடாமையாலே

————————————————————————————————

வியஸன சஹை அன்றிக்கே இருக்கிற இவளை இப்படி நோவு படுத்துவதே -என்கிறாள் –

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4-

ஒன்றிய திங்களைக் காட்டி,
கலைகள் எல்லாம் ஒன்றிப்பு பூர்ணனான சந்திரனை -அருகு நின்றார்க்கு காட்டி
‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
சம்போதியா நின்றாள் -புகரை உடைத்தான ரத்னம் போலே குளிர்ந்த வடிவோடே அணைக்க வந்ததே -என்னும் –
இவன் உஜ்ஜ்வல்யத்தை உடைய ஸர்வேஸ்வரனே என்று அவர்களுக்குச் சொல்லா நின்றாள்
இம் மழுங்கல் சந்திரன் அவனாகை யாவது என் என்பார்கள்
‘ஒளி மணி வண்ணனே-நிச்சித்தமே என்னா நின்றாள்
நின்ற குன்றத்தினை நோக்கி,- ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நின்றதொரு மலையை பார்த்து திரு உலகு அளந்து அருளுகைக்கு நிமிர வளர்ந்து நிற்கிறவாகனாகக் கொண்டு
என் ஆர்த்தி தீர வாராய் என்று அழைக்கும் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்
மால் என்று சர்வ சேஷியான பெருமை -நெடுமையாவது வளர்ந்து அருளின பெருமை
வியாமோஹ அதிசயத்தால் கால் வாங்க மாட்டாதே சாபராதன் ஆகையால் லஜ்ஜித்து புகுர மாட்டாதே நிற்கிறானாகக் கொண்டு
வாராய் என்னா நின்றாள் என்று சீயர் நிர்வஹிப்பர்
போது மறுத்து புறமே வந்து நிற்கிறானாக நினைக்கிறாள்
நெடுமாலே –
அதி வியாமோஹம் -அப்போது போக வல்ல உமக்கு இப்போது புகுர லஜ்ஜிக்க வேணுமோ -போன போதே ஸ்நேஹம் கண்டோம் இ றே
பிரணயிகளுக்கு அன்றோ அபராதம் -சாபராதர் அன்றோ லஜ்ஜிப்பர் –நீர் வாரீர் என்னா நின்றாள் –
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
கெட்டு மழை அன்றியே ஒரு நீர்ச் சாவியிலே வர்ஷிக்கும் மேகத்தை கண்டால் -நிர்ஹேதுகமாக சத்தையை நோக்குமவன் வந்தான் -என்று
மயில்கள் வர்ஷா காலத்தில் ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்ணுமா போலே ஸம்ப்ரமியா நின்றாள்
என்று
இப்படிகளைச் சொல்லி –
இன மையல்கள் செய்தார் –
இப்படி பிச்சுகளைப் பண்ணினார் -இப்படி பிச்சு ஏற்றிற்று என்று என்றுமாம்
எனக்கு பவ்யயாகை தவிர்ந்த பின்பு இதுக்கு எல்லாம் காலம் உண்டோ என்கிறாள்
என்னுடைக் கோமளத்தையே.–
அது தான் செய்யும் போது ஆஸ்ரயம் வேண்டாவோ
கலவியும் பொறாத அதி பால்யைக் கிடீர் விஸ்லேஷத்துக்கு இரை யாக்கிற்று

————————————————————————————————-

இவளுக்கு இவ்வவசாதம் எவ்வளவாய் முடியக் கடவது என்று அறிகிறிலேன்-என்கிறாள் –

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-

கோமள வான் கன்றைப் புல்கி,
பருவத்தால் இளையதாய் வடிவால் பருத்து இருக்கிற கன்றுகளை தழுவி என்னுதல்
ஸூ குமாரமாய் பருத்த கன்றுகளைத் தழுவி -கிருஷ்ணனுடைய பருவம் போலே யாயிற்று -இவற்றின் பருவம் இருப்பது
-கிட்டினாருக்கு சாம்யா பத்தி இ றே பலம் -வத்சமத்யகதம் பாலம் –
‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
இவற்றினுடைய ரக்ஷணத்துக்கு முடி சூடினவன் மேய்த்தவை –
ப்ராப்தனானவன் உணர்ந்து நோக்கினவை என்று தோற்றுகிறதாயிற்று
இவற்றின் வடிவில் புஷ்கல்யம்-கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -என்ன கடவது இ றே
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
போகிறதொரு சர்ப்பத்தை தொடர்ந்து போய்-இது அவன் படுக்கை -என்னா நின்றாள் –
இள நாகம் -நிரந்தர பகவத் அனுபவத்தால் வந்த இளமை என்று இருக்கிறாள்
பின் போய் -படுக்கையானது புக்க இடத்தே அவ
தாயார் சர்ப்பம் என்று இருக்கிறாள் -இவள் திரு வனந்த ஆழ்வான் என்று இருக்கிறாள்
ஆம் அளவு ஒன்றும் அறியேன் –
சர்ப்பம் என்று மீள மாட்டு கிறிலள்-இது என்னாய் விழக் கடவது -என்கிறாள் -இவளைக் கிடையாது ஒழிய அவனை கிடையாது
-அவனை கிடையாது ஒழிய உபய விபூதியும் கிடையாது -சர்வ சம்ஹாரமாக புகுகிறதோ என்கிறாள்
அருவினை யாட்டியேன் –
இவளை இவ்வவஸ்தான ஆபன்னை யாகக் காண்கைக்கு அடியானை பாபத்தை பண்ணினேன்
நெடும் காலம் கண்ணன் நல் நீண் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற -என்கிறபடியே செய்துமுடிக்கப் போகாத
புண்ணியங்களை பண்ணி பெற்ற ஸூ குமாரையானா இவளை என்றுமாம்
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–
வல்லி – பதி சம்யோக ஸூ லபம் வய -என்கிறபடியே உபனகத்தோடே சேர்க்க வேண்டும் பருவம்
மாயோன் -ஆச்சர்யமான பிரணயித்வத்தைக் காட்டி இவளை பிச்சேற்றினவன்
மால் செய்து -பிச்சேற்றி
செய்கின்ற கூத்து -அடிக்கிற ஆட்டம் -ஆமளவு ஒன்றும் அறியேன் -என்று அந்வயம்

—————————————————————————————————

தன் மகளுடைய பிச்சுக்கு நிதானம் இன்னது என்கிறாள் –

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6-

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,
கேவலம் கூத்துக்கு விக்ருத்தை யாகாள்-
குடகு கூத்தாவது -இடையர் செருக்குக்கு போக்கு வீடாவது ஓன்று –
ஆடில் என்கையாலே இவள் இருந்த ஊரில் குடக்கூத்து விளக்கி யாயிற்று கிடப்பது
-இவள் பிரமிப்பிக்கும் என்று வழிப் போக்கர் புகுந்து ஆடுவார்கள் ஆகில் ஆடும் அத்தனை
‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
குடக் கூத்தாடுகைக்கு செருக்குக்கு அடியான கோ ஸம்ருத்தியை உடையவன்
இரந்து திரிகிறவர்கள் அவனாகை யாவது என் என்பார்கள் -ஆம் என்று -அவன் அன்று காண் என்னுமவர்கள் வார்த்தை செவிப்படாதே காண ஓடும்
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
இசையால் விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி அற எல்லாரையும் வருத்தும் குழல் ஓசையைக் கேட்க்கில்
பசு மேய்க்கப் போய் தாழ்த்தால் பெண்கள் நெஞ்சில் மறம் மாறும்படி தாழ்ந்த சொற்களை வைத்து ஊதும் படியை அனுசந்தித்து மோஹியா நிற்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
ப்ராஹ்மணிகள் வெண்ணெய் கண்டால் அவிக்ருதையாய் இருக்கும்
இடைச்சிகள் கையில் முடை நாறுகிற வெண்ணெய்யைக் காணில் அவன் அமுது செய்த வெண்ணெய்யோடு சஜாதீயம் என்று விரும்பும்
இவள் இப்படி பிச்சேறுகைக்கு அவன் இவளுக்கு பண்ணின உபகாரத்தை சொல்லுகிறது மேல்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–
தாய் உதவாத தனிமையிலே பூதனை தாய் வடிவு கொண்டு நலிய புக அவளை முடித்து தன்னை அபகரித்த உபகாரத்துக்கு தோற்றாயிற்று இவள் பிச்சேறிற்று
பூத் தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி ஆறு தரு புணர்ச்சி –
அசிந்திதமாக கையிலே பூவைக் கொடுத்தல் -ஆணையின் கையிலே அகப்பட்டவர்களை மீட்டல் -ஆற்றிலே அமிழா நிற்க எடுத்தல்
செய்தவர்களுக்கு அவர்கள் அநன்யார்ஹைகள் -தம் தாமை உண்டாக்கினவர்களுக்கு இ றே அங்கு
அவன் தன்னை உண்டாக்கிக் தந்தத்துக்கு தன்னை அநந்யார்ஹம் ஆக்கினாள்
என் பெண் கொடி
நிருபாதிக்கமான ஸ்த்ரீத்வத்தை உடைய என் மகள் ஏறிய பிச்சு –

—————————————————————————————————–

தேறின போதோடு-தேறாத போதோடு வாசி இன்றிக்கே எப்போதும் -அவன் திறம் அல்லது அறிகிறிலள் -என்கிறாள்

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-

பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’-
இவள் பிச்சேறி இருக்கிற தசையில் இஜ் ஜகத்து எல்லாம் கிருஷ்ணனால் ஸ்ருஷ்டமாயிற்று என்னுதல்
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்தி -என்னா நின்றாள்
அவன் ஆதரித்து ஸ்ருஷ்டித்தது என்று தத் சம்பந்தத்தால் விபூதியையும் விரும்பா நின்றாள்
ஏதேனும் ஒரு பதார்த்தமும் தத் சம்பந்தம் ஒழிய தோற்றதாய் இருக்கிற படி
ப்ராஹ்மணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே கலங்கின போதும் வாசனையால் இவ்விஷயமேயாய் இருக்கிற படி –
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
பஸ்மத்தைக் கொண்டு மேல் நோக்கி இட்டவர்களை காணில் கலகத்தின் மிகுதியால் த்ரவ்ய ஸ்வரூபத்தை நிரூபிக்க அறியாதே
மேல் நோக்கி இட்ட மாத்ரத்தைக் கொண்டு அநு கூல ஜனங்களாகக் கொண்டு
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன் என்று அவர்கள் இருந்த இடத்தே செல்லா நின்றாள்
நெடுமால் அடியார் -என்று அதஸ்மின் தத்புத்தி –
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
போலி கண்டு பிரமிக்குமவள் அது தன்னைக்கண்டால் விடாள் இ றே –
பரிமிளிதமாய் செவ்வியை உடைத்தான திருத் துழாயைக் காணில் உபய விபூதி உக்தன் தன் ஐஸ்வர்ய ஸூசகமாக இட்ட தனி மாலை இது என்னா நின்றாள்
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே
நீறு செவ்வே -என்ற இடம் -தேறாமை-நாரணன் கண்ணி ஈது என்ற இடம் -தேற்றம் –
கோவை வாயாள் திருவாய்மொழி -தேற்றம் -இத்திருவாய்மொழி -தேறாமை
மாயோன் திறத்தனளே
ஞானம் அப்ரயோஜனமாம் படி ஆச்சர்யமான பிரணயித்வத்தை உடையவன் திறத்தனள்
இத் திருவே
இத்திரு என்றும் அத்திரு என்றும் விகல்பிக்கலாம் படி இருக்கிறது
அநபாய நிகளாய் இருக்கிற ஆகாரம் இருவருக்கும் ஒக்கும்
அவளுக்கு அவனே உத்தேச்யன்
இருவரும் உத்தேச்யரான ஏற்றம் உண்டே இவளுக்கு

———————————————————————————————————-

அத்யந்தம் துர்த்தசை வர்த்தியா நின்றாலும் இவள் தத் ஏக பரையாய் இருக்கும் என்கிறாள் –

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
குறைவற்ற ஐஸ்வர்யத்தை உடைய ராஜாக்களை காணில் ஸ்ரீ யபதியைக் காணப் பெற்றேன் என்னும்
-குறைவற்ற ஐஸ்வர்யம் உடையான் ஸ்ரீ யபதி இ றே
பெரிய முதலியார் ஒரு ராஜாவைக் கண்டு அவன் பின்னே தொடர்ந்து போனார் என்னவும்
ஒரு சாமந்தன் தலையிலே அடியிட்டு ஆனையிலே ஏறுகிற போதுஅத்தைக்கு கண்டு மோஹித்தார் என்னவும் கடவது இ றே
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
காயா குவளை கடல் இவை யாதல் -உறுப்பு பெற்ற சித்ரங்கள் ஆதல் காணில் இச்செவ்வி உள்ளது
த்ரிவிக்ரம க்ரமம் பண்ணின சர்வ ஸூலபனுக்கு-என்னா சப்ம்ரமியா நின்றாள்
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
ப்ரதிமா வத்தான தேவாலயங்களை எல்லாம் கண்டால் -பெரிய பெருமாள் உள்ளே கண் வளர்ந்து அருளுகிறார் என்னா நின்றாள்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.
தெளிவுடையாளாய் பந்துக்களுக்கு அஞ்சின போதோடு -அறிவழிந்து மோஹித்த போதோடு வாசி அற கிருஷ்ணன் திருவடிகளை விரும்பா நிற்கும்
அல்லாதவை அஸ்திரமாய் இவளுக்கு இது ஸ்திரமாய் செல்லா நின்றது
வெருவுகை -அஞ்சுகை / வீழ்கை -மோஹிக்கை –

——————————————————————————————————–

பெறுதற்கு அரியளான இப் பெண் பிள்ளையை தன்னையே வாய் வெருவி மோஹிக்கும் படி பண்ணா நின்றாள் என்கிறாள் –

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
ஞானாதி குண பரி பூர்ணராய் சப்தாதி விஷயங்களில் விரக்தரான சன்யாசிகளைக் காணில் கிருஷ்ணன் என்று நினைத்து அவர்களை ஆதரித்து
விஸ்மய நீயமான பூமியை பிரளய ஆபத்தில் ரஷித்தவனே என்னும் –
ரஷ்யத்தில் ஒன்றும் நோவு படாமல் நோக்கி நிரபேஷனாய் இருக்கும் நைரபேஷ்ய சாம்யா மாத்திரத்தாலே சொல்லுகிறாள்
வியலிடம் -விஸ்மய நீயமான பூமி
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
கறுத்து பெருத்த மேகங்களைக் காணில் கிருஷ்ணன் என்று நினைத்து பறப்பாரைப் போலே அலமரா நிற்கும்
இவளுக்கு மேக தர்சனத்திலே சிறகு எழும் போலே
ராஜேந்திர சோழனில் திரு வாய்க் குலத்து ஆழ்வார் வயல் பார்த்த வார்த்தை
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
சமக்ரமாய் தர்ச நீயமான பசு நிரையை காணில் அனுக்ரஹ சீலனான கிருஷ்ணனும் உடனே வருகிறான் என்று அவற்றின் பின்னே செல்லும்
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே
பெறுதற்கு அரிய பெண்ணினை மஹதா தபஸா ராம -என்று தன்னை பெறப் பட்ட தன்று கிடீர் -இவளை பெறுகைக்கு நான் பட்டது
மாயோன்
பிரணயித்வாதி கல்யாண குணங்களைக் காட்டி பெற்றாரை உறவு அறுக்குமவன்
குரவ கிங்கரிஷ்யந்தி-என்ன கடவது இ றே
எப்போதும் தன்னையே வாய் வெருவும் படி பண்ணி அவ்வளவிலும் அன்றிக்கே மோஹிப்பியா நின்றான் –

———————————————————————————————————————–

சத்ருச பதார்த்தங்களை அனுசந்திக்க ஷமம் இல்லாத வியஸன அதிசயத்தாலே இவளுக்கு
பிறந்த விக்ருதிகளை சொல்லி -நான் என் செய்வேன் என்கிறாள் –

அயர்க்கும்;சுற்று ம்பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-

அயர்க்கும்;
நின்றால் போலே நில்லா -சிந்தாவியாபாரம் ஓவி இவள் மோஹியா நின்றாள்
சுற்று ம்பற்றி நோக்கும்;
பின்னையும் அறிவு குடி புகுந்து தன்னுடைய தசையை ஹேதுவாக சாதரமாக சுற்றும் பாரா நின்றாள் –
அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;-
பின்னும் காணாமையாலே பிரதம பரிஸ்பந்தமே தொடங்கி காணலாம் படி அகல விட்டு அவன் இருக்க
சம்பவானை உள்ள தேசத்து அளவும் தூரா நோக்கா நின்றாள்
வியர்க்கும்;
அங்கு காணா விட்ட வாறே இத்தசையில் வாராது ஒழிவதே என்று குபிதையாய் வியரா நின்றாள் –
விரஹத்தில் ஸ்வேதம் கோபத்தால் இ றே
மழைக் கண் துளும்ப
கோபம் சோகமாய் பரிணமித்து அது தான் ஸ்வேதமாய் பரிணமித்து அது கண்ணீராய் ப்ரவஹியா நின்றது –
வெவ் வுயிர் கொள்ளும்
அதுவும் போய் செயல் அறுதியாலே நெடு மூச்சு எறியா நிற்கும்
;மெய் சோரும்;
அகவாயில் உள்ளது நேராக கழிந்த வாறே பரவச காத்ரை-யாகா நின்றாள்
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
அற முடிய ஒட்டாதே ஆசா பந்தம் -பின்னும் உணர்ந்து தன் ஆற்றாமையே செப்பேடாக வரும் என்று கொண்டு சம்போதியா நின்றாள்
அந்த பேர் வழியே பிறந்த அனுசந்தான பிரகர்ஷத்தாலே வந்த உரு வெளிப்பட்டால் வந்தானாகக் கொண்டு சம்போதித்து வரலாகாதோ என்னா நின்றாள் –
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே-
மதி கெடுகைக்கு உடலான அதி பிரமத்தை உடையவள்
ஆசா லேசம் உடையார்க்கு அனுபவிக்கலாம் வி லக்ஷண விஷயம் கிடீர் இவளுக்கு விபரீத பலம் ஆயிற்று
இவளுடைய அதி மாத்ர ப்ரேமம் பேற்றுக்கு உடலாகை அன்றிக்கே மயிலுக்கு உறுப்பாவதே
என் பேதைக்கு
இவ்வதி மாத்ர ப்ரேமம் ஆகாது என்றால் கேட்க்கும் பருவம் அன்று
என் செய்கேன்
இவளை மோஹியாமல் பண்ணவோ
அவனை வர பண்ணவோ
நான் இத்தை பொறுத்து இருக்கவோ
வல் வினையேனை
இவளை இப்படி காணும் படி மஹா பாபத்தை பண்ணினேன் –

——————————————————————————————————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழி சம்சார துரிதம் நீங்கி பகவத் விஸ்லேஷ கந்தம் இல்லாத திரு நாட்டிலே
எல்லாரும் சிரஸா வஹிக்கும் படி பெரு விடாயோடே -மேன்மை உடன் இருப்பார் என்கிறார் –

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11-

வல்வினை தீர்க்கும் கண்ணனை
பெற்றவர்கள் கை விட்டால் கைப்பிடித்தார் விடாரே
ஆஸ்ரிதர் உடைய விஸ்லேஷ ஹேதுவான மஹா பாபத்தை போக்கும் ஸ்வ பாவனான கிருஷ்ணனை
வண் குருகூர்ச் சடகோபன்
-பரம உதாரரான ஆழ்வார்
சொல் வினையாற் சொன்ன பாடல் -ஆயிரத்துள் இவை பத்தும்
சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத பக்தி பாரவஸ்யத்தாலே என்னுதல்
பகவத் குண பலாத்காரத்தாலே என்னுதல்
சொல் தொழிலாலே என்னுதல் -அதாகிறது வாசிகமான அடிமை
நல்வினை என்று கற்பார்கள்-
இவருடைய பிரேம பார்வஸ்யம் இல்லையே யாகிலும் விலக்ஷண்ய க்ருத்யம் என்று கற்குமவர்கள்
நலனிடை வைகுந்தம் நண்ணித்
விஸ்லேஷ கந்தம் இல்லாத பரமபதத்தை லபித்து-சத்ருச பதார்த்தங்களைக் கண்டு பிச்சேற வேண்டாதே
-பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கும் நித்ய ஸூ ரிகள் நடுவே சென்று
தொல் வினை தீர
அநாதி யான அவித்யாதிகள் நீங்கி
எல்லாரும் தொழுது எழ
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகளும் தொழுது ஆதரிக்க
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினார் -என்கிறபடியே அவர்களும் அநு வர்த்தித்து ஆதரிக்கும் படி யாவர்கள்
வீற்றிருப்பாரே.–
அவன் சேஷித்வத்துக்கு முடி சூட்டி இருக்குமா போலே இவர்களும் சேஷத்வ சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி இருக்கப் பெறுவார்கள்
ச ஸ்வராட் பார்வதி என்ன கடவது இ றே

———————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: