ஸ்ரீ தேசிகன் ஸ்வாமி அருளிச் செய்த தசாவதார ஸ்லோகம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம

——————————————————————————-

ஸ்ரீ ரெங்கம் தசாவதார சந்நிதி —
திருமங்கை -பாடியவாளன் படித்துறை -வாள் வீசும் பரகாலன் அன்றோ –
28 ஸ்தோத்ர நூல்களில் தசாவதார ஸ்தோத்ரம் ஓன்று
வர்ஷா பிந்து சத்தை பெற பெய்து கடலில் சேருவது போலே அன்றோ ஸ்தோத்ரங்களுக்கு பெருமை –
கொடி சுற்றி மரத்துக்கு சத்தை இல்லை -வாக்கு சுத்திக்கும் நம் சத்தையும் தானே ஸ்துதி
ஸ்ரீ ரெங்கநாதன் தானே இந்த தசாவதாரம் செய்து அருளினான் முதல் ஸ்லோகம்
10 ஸ்லோகம் 10 அவதாரங்களும்
ஒரே ஸ்லோகம் பத்துக்கும் சேர்த்து 12 வது ஸ்லோகம்
13 -பல சுருதி சொல்லி தலைக் காட்டுகிறார்

——————————————————————————————————-

தேவோ ந ஸூபமாத நோது தச தா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைர் அத்யஷிதோ பாவுகை
யத்பா வேஷூ ப்ருதக் வி தேஷ்வ நுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ
யத்தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா -1-

தேவோ-விளையாட்டுடை -திவு காந்தி தேஜஸ் –
ந ஸூபமாத நோது -ஸூபம் ஆத நோது -விஸ்தாரமாக ஸூபம் கொடுக்கட்டும் –
தச தா நிர்வர்த்தயன் பூமிகாம் -பத்து விதமாக வேஷம் எடுத்து கொண்டு -பூமிகா -அவதாரம் -மூர்த்தி பேதம் —
ரங்கே தாமனி -நாடக மேடை ஸ்ரீரங்கம்
லப்த நிர்பர-கிடைக்கப் பெற்ற பூரணமான
ரஸைர் அத்யஷிதோ பாவுகை-ரசிகர்கள் -ஸ்ரீ ரெங்க வாசிகளால் – -சேவிக்கப் பெற்றவர் யாரோ
யத்பா வேஷூ ப்ருதக் வி தேஷ்வ-வேவேறே விதங்களில் அவனுக்கு தக்க
அநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ -அனுகுண மாக தானும் எடுத்துக் கொண்டு
யத்தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா-பஹு வித ரூபங்களை கொண்டு ஆனந்த ரசம் அனுபவிக்கும்

சகல மனுஷ நயன விஷயம் ஆவதற்கு -அவதாரணம் -இறங்கி -இடமும் -நிலையம் – -அவதார கந்தம் பாற் கடல் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராபதி நிகேதன–இத்யாதி –
பெருமைகளில் ஒன்றும் குறையாமல் -அவதரிக்கிறார் -அஜோபிசன்-இத்யாதி – -ஆமையான கேசனே –
முதல் அவதாரம் பிரதமஜ விஷ்ணு -இணைவனாம் இருவர் அவர் முதல்வர் தாம் –
புராணம் வராஹர் முதல் அவதாரம் -ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது
கிணற்றில் விழுந்தாரை தூக்கி எடுக்க அன்றோ அவதாரம் -கிருபையா கேவலம் -கோரம் அனந்தர சம்சார சாகரம் –
நாடக மேடை -அரங்கம் -ஸுசீல்ய குணம் வெளியிட்டு அருள
ஸ்ரீ ரங்கம் பிராட்டி க்காக அவன் இருக்கும் திவ்ய தேசம் -காவேரி தாயார் -சீர் கொடுக்க பாரித்து வந்து -மணல் மேட்டில் பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்து –
அவதாரமே வேஷம் தானே -மறைத்துக் கொண்டு அவதரிக்கிறார் –
வில்லால் அன்றோ ஆணை கட்டினான் -குரங்குகளை கொண்டு -வேஷம் இருந்தாலும் பரத்வம் பீறிடுமே
அவன் திரு மேனியே ஸூ பாஸ்ரயம் -ஞானம் தானே ஸூ பம் -ஆனந்தம் ஸூ பம் –
அவன் ஒளியால் அவனே சேவை சாதிக்கிறான் அவள் உடன் சேர்ந்து -நாம் ரசிக்க -மேகம் மின்னல் –
பரிபூரணமான ரசம் -அனுபவிக்க தெரிந்த -அவனே பிரதானம் இவர்களுக்கு –
180 நாள் புறப்பாடு உள்ள திவ்ய தேசம் அன்றோ -சதா பஸ்யந்தி பண்ணுபவர்கள் -மால் கொள்ளும் சிந்தையர்கள் -கண்ண நீர் சேறு -அவனுக்கே பித்தராவார்கள் –
பதின்மர் பாடும் பெருமாள்
ராக்வத் சீதை – கிருஷ்ணன் நப்பின்னை –வராகன் பூமி பிராட்டி –தேவ்தவே தேவி -யத் பாவேஷூ-மனசுக்கும் அணு குணமாக
-அதே தர்மம் உதவ -கிருபை ஆன்ரு சம்சயம் -புருவ நெருப்பே பிரமாணம் –

ஸூபம் சொல்லி அருளும் ஸ்லோகங்கள் என்பதால் அரக்கர் அசுரர் வார்த்தைகளே இல்லையே –

———————————————————————————–

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா தத்த ஷணைர் வீக்ஷணை
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் யவ்தன்வா தீ நா மபாம்
நிஷ் ப்ரத்யூக தரங்க ரிங்கண மித ப்ரத்யூட பாதஸ் சடா
டோலாரோஹ சதோ களம் பகவதோ மாத்ஸ்யம் வபு பாதுந–2-

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா -ஆழ்ந்த -அமிழ்ந்த வேதக் கூட்டங்கள் -தேடும் அவதாரம்
ஹயக்ரீவன் அசுரன் கடலிலே மறைக்க -மத்ஸ்ய மூர்த்தி அவதாரம் அன்றோ
தசா -நான்கு திசைகளிலும் -மீனுக்கு கண்கள் சுழலும்
தசா தத்த ஷணைர் வீக்ஷணை -தேடும் கண்கள் -கவனத்துடன் -பார்வைகளால் -தேட
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் -உள்ளே -அரவிந்த கஹானான் தாமரைக்கு காடு ஆனதே -உருவாக்கும் படி -கப்யாசம் புண்டரீகாக்ஷணம்
யவ்தன்வா தீ நா மபாம்-சமுத்திரம் -ஆப தண்ணீர் உடைய
நிஷ் ப்ரத்யூக தரங்க-தடங்கல் இல்லாத அலைகள் -கரையே இல்லையே பிரளயத்தில்
ரிங்கண மித ப்ரத்யூட -ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்டு -மேலே எழும்பி
பாதஸ் சடா -பய சமூகம் தண்ணீர் கூட்டம்
டோலாரோஹ சதோ களம் பகவதோ -டோலோஸ்த்வம் -பிரளயம் அன்றோ –தானே ஏற்பாடு -செய்து கொண்டு அருளி –
ஊஞ்சல்-ஆரோஹனம்-சதோ கதம் -பாட பேதம் -ஆசை உடைய -ஸ்ரீ ரெங்கநாதனுடைய
வால் பகுதி கொண்ட அசைந்து செதில்கள் அசைந்து -பெரிய திரு மேனி
மாத்ஸ்யம் வபு-திருமேனி -மத்ஸ்ய அவதாரம்
பாதுந-நம்மை ரக்ஷிக்கட்டும் –

சாளக்கிராமம் திரு மேனி -மத்ஸ்யம் -கண்களால் ரக்ஷணம் -நைமித்திக பிரளயம் மூன்று உலகம் -ப்ரஹ்மா தூக்கம் –
வேதம் கண்கள் போலே ப்ரஹ்மாவுக்கு -மூச்சுக்காற்று -அந்தணர் மாடு -ஹயக்ரீவன் அசுரன் திருடி போக
உச்சாரண அநு உச்சாரண -சப்த ரூபம் -பிரளயத்தில் மறைக்க -மீனாக தானே அவதரிக்க வேண்டும் –
நேராக பெரிய திரு மேனி கொள்ளாமல் -சத்யவ்ரதன் ராஜ ரிஷி உதவ -க்ருதமாலா நதி –
காவேரி பயஸ்வினி கொசித்-கொசித் -திராவிடேஷூ -பிரமாதாக்கள் அவதாரம் இங்கே
க்ருதமாலா நதி கரையில் நித்யப்படி ஜல தர்ப்பணம் பண்ண -சிறு குட்டி மீன் கையிலே வர –
விடும் பொழுது பேசி -தீன வத்சலா -என்று கூப்பிட்டு –
வியப்பாயா வியப்பு தத்ர ஏக ராத்திரியில் வர்த்தமான கமண்டலம் -அளவு வளர்ந்து -ஒரே முஹூர்த்தம் ஹஸ்த த்ரயம் அளவு வளர்ந்து –
சரோவரில் விட -அது போகாத படி வளர்ந்து -பெரிய ஏரி கடல் -சமுத்திரம் அளவு வளர -யோஜனம் சத்தம் 800 மைல் -அளவு
-ஹரி நாராயணன் புரிந்து கொண்டார் –
7 நாள் உனக்கு கர்தவ்யம் உண்டு -பிரளயக் கடலில் மூழ்கும் ரக்ஷிக்க வேண்டும் -என்னால் தூண்டப்படும் படகு-ஒற்றைக் கொண்புடன் வர
வாசுகி பெரும் பாம்பை கொண்டு என்னை கட்டி -ஒன்றைக் கொம்பால் -மத்ஸ்ய புராணம் –கட்டுவிக்க
இந்த முடிச்சு சம்சார முடிச்சு அவிழ்க்க -மாயா மத்ஸ்யம் உபதேசிக்க -சத்யாவிரதர் –
திரு நறையூர் பதிகம் –கொழும் கயலாய் –விளையாடும் ஈசன் -எழுந்து இனிது விளையாடும் –
வானோர் அளவும் -முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவில் -மீனாய் வந்து உய்யக் கொண்ட -தண் தாமரைக் கண்ணன்
-இத்தையே தேசிகன் -பார்த்த இடம் எல்லாம் தாமரை ஆனதே
அலை கடல் -நீர் குழம்ப –அக்கடாத ஓடி -வரு மீனை -மறவாது நினை இறைஞ்சு என் நெஞ்சே –
வேத அபஹார -குரு பாதக –தைத்ய பீடா -ஆபத் விமோசன -பிரஜா பாதி உமா பத்தி இந்திரா பத்தி -ரமாபதி அனுக்ரஹித்து
வேதம் பரம சஷூஸ் -கண்ணைத் தொலைத்தார் -மீனாக
கடல் நிசப்தம் என்பதால் மறைத்து வைத்தான் ஸ்ருதி ஸ்ம்ருதி என்பதால்
கண்ணை சிமிட்டாமல் -மீன் -கவனம் -இமையவர் இப்படியே -ஸ்வா பாவிக-
ஆமை நினைவால் ரக்ஷிக்கும் / சம்ஸ்பர்சம் -பறவை ரக்ஷிக்கும் /சங்கல்ப சூரியோதயம்

———————————————————————————————–

அவ்யா ஸூ ர் புவந த்ரயீ ம நிப்ருதம் கண்டூயா நைரத்ரிணா
நித்ரா ணஸ்யா பரஸ்ய கூர்ம வபுஷோ நிஸ் வாஸ வாதோர் மய
யத் விஷே பண சம்ஸ் க்ருதோ ததிபய ப் ரேங்கோள பர்யங்கிகா
நித்ய ஆரோஹண நிர் வ்ருதோ விஹரதே தேவ சஹவை ஸ்ரியா -3-

அவ்யா ஸூ ர் புவந த்ரயீ ம-மூன்று உலகத்தையும் ரக்ஷிக்கட்டும் -வேதமே மூச்சு காற்று -பிராண வாயுவாக பெருமாள் ரக்ஷிக்கட்டும்
நிப்ருதம் -எப்போதும் மலையாலே
கண்டூயா நைரத்ரிணா -சொரிதல் –
நித்ரா ணஸ்யா -நன்கு தூங்க
பரஸ்ய கூர்ம வபுஷோ -பெரிய பெருமாள் -ஆமையான கேசனே -லக்ஷம் யோஜனை
நிஸ் வாஸ வாதோர் மய-நிஸ் வாசம் உஸ் வாசம் –
யத் விஷே பண-காற்று வெளி வர -அலைகள் கிளம்பி
சம்ஸ் க்ருதோ ததிபய ப் ரேங்கோள-அசைகின்ற
பர்யங்கிகா -படுக்கையில் -கடல் அரசன் கைங்கர்யம் -வேதப்படுக்கை என்றுமாம்
நித்ய ஆரோஹண நிர் வ்ருதோ விஹரதே -ஸ்திரமான
ஆரோஹண –அங்கு உஊஞ்சல் -நித்யம் சொல்ல வில்லை -இங்கு ஆமை என்பதால் -நித்யம் –
ஸூ கப்பட்டு -பிராட்டி ஈன்று எடுத்த தாயார் தானே திருப் பாற் கடல்
தேவ சஹவை ஸ்ரியா-நித்ய கச்சபை – ஆமையான ஸ்ரீ யபதி –
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக்க அங்கு ஓர் வரை நட்டு இலங்கு சோதி ஆரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து திரிந்த வித்தகன் கலங்கல் முந்நீர் கண்ணபுரம் -ஆமையாய் –முந்நீர் –
வேதம் ரக்ஷிக்க மத்ஸ்யம்
அதுவே தனமாக கொண்ட தேவர்களுக்கு ஆமை
பர்வதம் பாக்யம் பெற்றதே ஸ்பர்சத்தாலே –
நன்கு தூங்கி மூச்சு விட –

மீனுக்கு உடம்பு எங்கும் தண்ணீர் போலே எங்கு தொட்டாலும் மஹா லஷ்மி –
உத்ஸாஹமாக விளையாடி -இதுவே வாழ்க்கை கை கொள்ள வேண்டும் –
ஸ்ரீ கூர்மம் -கை கால் மறைத்து -இந்திரியங்கள் பாடு போக்க -விஷய ஸூ கம் தேடித் போகாமல் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –
ஊஞ்சல் உத்சவம் -பர்யன்காசனம் அடுத்து -புறம் சூழ்ந்து காப்ப-ஆதி சேஷன் மட்டுமா கைங்கர்யம் செய்ய வேண்டுமோ –
திருப் பாற் கடல் -காட்டில் -அம்ருத மதனம் காலம் -இதிலும் வாசுகி கைங்கர்யம் உண்டே -கயிறாக –
பல தலை பாம்புகளில் ஆதி சேஷன் சர்ப்பங்களில் வாசுகியாக இருக்கிறேன் என்பான் கீதையில் –
மந்தர பர்வம் -தங்கி கொள்ள -ஆறு மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி–அப்பன் சாறு கொண்ட நான்றே
தாளும் தோளும் சமனிலாத பல பரப்பி -தோள்கள் ஆயிரத்தாய் —
கொசித் –நிறைய நடக்க -வைகுண்ட கபடம் குதிரை யானை அமிருதம் சந்திரன் -கவலை படாமல் தூங்க
-பிராட்டி வந்ததும் முழித்து அமுதினில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்த பெம்மான் -சங்கல்ப சூரியோதயம்
பச்யதாம்-பெண்களுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கம் இல்லையே -பட்டர் புருஷோத்தமன் அவன் மட்டும் தானே
கட்டில்-இருந்தால் மிதுனமாக இருக்க வேண்டுமே –

————————————————————————————————————

கோபா யேதநிசம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத
ப்ரஹ்மாண்ட பிரளய யோர்மி கோஷ குருபீர் கோணா ரவைர்க்குர்குரை
யுத்தம் ஷ் ட் ராங்குர கோடி காட கடநா நிஷ் கம்ப நித்ய ஸ் திதி
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸுதஸு பகவதீ முஸ் தேவ விஸ்வம்பரா -4-

கோபா யேதநிசம் ஜகந்தி-அனைத்து உலகத்தையும் ரக்ஷிக்க வேண்டும்
குஹநா போத்ரீ -வேஷம்
பவித்ரீ க்ருத -ப்ரஹ்மாண்ட- பவித்ரம் அடைந்தது
பிரளய யோர்மி கோஷ குருபீர்-பிரளய கடல் அலையில் பேர் இரைச்சலை ஒன்றும் இல்லாத படி
கோணா ரவைர்க்குர்குரை-குரு குரு சப்தம் -மூச்சு காற்று -இதுவே நம்மை ரக்ஷிக்கட்டும் –
யுத்தம் ஷ்ட்ராங்குர -கோரை பல்லின்
கோடி காட கடநா நிஷ் கம்ப நித்ய ஸ்திதி -நுனியில் -நன்கு சேர்ந்து -ஸ்திரமாக -அசையாமல் -நடுக்கம் இல்லாமல்
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸுதஸு -கோரிக் கிழங்கு இன்றும் ஸ்ரீ முஷ்ணம் -முஸ்தா-முளை தான் ப்ரஹ்மா -ஜகத் காரணம் ஸ்ரீ வராஹம் என்றவாறு
பகவதீ முஸ் தேவ விஸ்வம்பரா -கல்யாண குணங்கள் படைத்தவள் -பூமி பிராட்டி

ஸ்ரீ வராஹ அவதார அனுபவம் -சனகன் சனத்குமாரர் நால்வரும் -ஜய விஜயர்கள் -சாபம் –
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் -சேர்த்தி அனுபவம் –
கோலா வராகம் -ஏனமாய்-க்ரோட – வராஹ –
கேழலாய் உலகம் கீண்ட பூ கெழு வண்ணனாரை -போதரக் கனவில் கண்டு –வாக்கினால் மனத்தினால் கருமம் தன்னாலே
–வேட்க்கை மீதூர வாங்கி-ஆண்டாள் போலே கலியன் திருக் குறும் தாண்டகம் –
ரகஸ்ய சிகாமணி -ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் விளக்க தேசிகன் அருளிச் செய்து –
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் –
-வானத்தவர்க்கும் -எல்லா எவர்க்கும் ஞானப் பிரான் அல்லல் இல்லை நான் கண்ட நல்லதுவே
பட்டர் -தசாவதாரம் பற்றி அருளிச் செய்த வார்த்தை -ஸ்மரிப்பது
ஸ்ரீ கூர்மம் -ஸ்ரீ தேவி அடைய -ஸ்ரீ வராஹம் -ஸ்ரீ பூமி பிராட்டியை பெற -எங்கும் தம் கார்யம் –
பெரும் கேழலார் -புண்டரீகம் நம் மேல் ஒருங்கே -சிலம்பினை சிறு பரல் போலே -மேரு கணக்ணப்ப –கோமான் -மஹா வராஹ ஸ்புட பத்ம லோசனன்
யஜ்ஜை வராகன் -ஸூ கரம் சொன்ன ஸூ கர உபாயம் -இடந்தமை குலுங்கவோ -குடந்தையுள்-கிடந்தவாறு -ஆயாசம் தீர -பேசு வாழி கேசனே
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே -பாசி தூர்த்து கிடந்த -மாசு உடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாய் -பேசி இருப்பதுவும்
ரஷ்யத்தில் உள்ள பாரிப்பு -அடியார்க்கு என் செய்வான் என்று இருத்தி
கோலா வராகம் ஒன்றாய் -திருவாய் மொழி இறுதியிலும் ஆழ்வார் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் –
பொழில் எழும் ஏனம் ஒன்றாய் கோட்டின் நுனியில் வைத்தாய் –நுன பாதம் சேர்ந்தேன் –
ஏரார் உருவில் எடுத்த ஆற்றல் அம்மானே –ஸ்வேத வராஹம் கல்பம் -திரு வெள்ளறை ஸ்வேத கிரி சிபி சக்கரவர்த்தி
ஆதி முன் ஏனமாகி –நம்மை ஆளும் அரசே
ஜகத் சர்வம் சரீரம் -பூமி கோரைப் பல்லின் நுனியில் ஒட்டிக் கொண்டு -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
உச்சாரணம் -குரு குரு சப்தம் ஆச்சார்ய க்ருத்யம் -சப்தம் மூ உலகும் வியாபித்து -நித்ய ஸூ ரிகள்-வந்து சேவிக்கும் படி
ப்ரஹ்மாண்டம் பவித்ரம் ஆக்கியது நிர் ஹே துகமாக தம்முடைய பேறாக -நிர் வியாஜ கிருபை
தாய் -குழந்தை -எவ்வுயிர்க்கும் தாய் அன்றோ –
விஸ்வம் பரா -ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் -விஸ்வம் பரா பரா -அவன் -ஆழ்வார் விஸ்வம் பரா பரா பரஸ்ய —

—————————————————————————————————————–

ப்ரத்யா திஷ்ட புரா தன ப்ரஹரண க்ராம க்ஷணம் பாணி ஜை
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய குண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவா
யத் ப்ராதுர் பவநாத வந்த்ய ஜடரா யாதிருச்சிகாத் வேத சாம்
யா காசித் ஸஹஸா மஹா ஸூர க்ருஹ ஸ்தூணா பிதா மஹ்யா பூத் –5

ப்ரத்யா திஷ்ட புரா தன ப்ரஹரண க்ராம-தள்ளப் பட்ட பழம் காலத்து திவ்ய ஆயுதங்கள் ஒதுங்கப் பட்டன –
க்ஷணம் பாணி ஜை-கையில் இருந்து பிறந்த நகங்கள் இருப்பதால் மற்ற திவ்ய ஆயுதங்களை ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்க சொன்னானாம் –
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய -மூ வகை லோகங்களையும் க்ருத அக்ருத க்ருதாக்ருத -ரக்ஷிக்கட்டும்
அகுண்ட மஹிமா -தடை யற்ற மஹிமை
வைகுண்ட கண்டீரவா -ஸ்ரீ வைகுண்ட ஸிம்ஹன்-பாலும் சக்கரையும் கலந்தால் போலே –
யத் ப்ராதுர் பவநாத-வெளித்தோற்றம்
அவந்த்ய ஜடரா-மலடி இல்லாத வயிறு
யாதிருச்சிகாத் வேத சாம் -யதேச்சை பெருமாள் -ப்ரஹ்மாக்களுக்கு பாட்டியாக -இச்சை -அதிதி திதி பார்க்காமல் வருவார்
யா காசித் ஸஹஸா -த்வரையால்-அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான்
மஹா ஸூர க்ருஹ ஸ்தூணா பிதா மஹ்யா பூத்-தூண் பாட்டி ஆனதே உலகத் -தாத்தாவுக்கு பாட்டி இது தானே -அபூத்-ஆனதே
பிதாமகன் ப்ரஹ்மா -பெற்றவர் நாராயணன் -அவனை பெற்றதால் –
பேரன் பிறந்த பின்பு பாட்டி பிறக்கும் அக்கடிதகடனா சாமர்த்தியம் -ஸ்தம்பம் சொல்லாமல் –ஸ்தூணா ஸ்த்ரீ லிங்க சப்தம்

நார சிம்ஹ வபு ஸ்ரீ மான் -ஸ்ரீ லஷ்மி நரசிம்மன் -அழகியான தானே அரி உருவம் தானே –
வரத்தினில் சிரத்தை வைத்து —
கயாது-கர்ப்பத்தில் பிரகலாதன் -நாரதர் மூலம் -கர்ப்ப ஸ்ரீ மான் ஆனான் -கருவிலே திருவிலாதீர் காலத்தை கழிக்கின்றீரே-
கருவரங்கத்தில் இருந்து கை தொழுதேன் -சரவணம் கீர்த்தனம் –நவ வித பக்தன் -நானும் சொன்னேன் நமரும் சொல்மீன் -நாராயணா என்னும் நாமம் –
எங்கும் உளன் கண்ணன் –அளந்திட்ட தூணை அவன் தட்ட -அங்கே வாள் உகிர் சிம்ஹ உருவாய் உளம் தொட்டு –
ஹிரண்ய வைத்த -புறப்பட்டது செங்கண் சீயம் -அங்கோள் ஆளரியாய் –சிங்க வேழ் குன்றமே –
ஆழ் துயர் செய்து -பிளந்து வளைந்த உகிர் -பரியனாகி -பள்ளியில் ஓதி –தெள்ளிய சிங்கம் -உளம் தொட்டு
-தீய புஞ்சிக் கஞ்சன் -நினைத்த கருத்தை பிழைப்பித்த -சிந்தையினால் இகழ்ந்த இரணியன் -வரம் கெடுக்காத வரம் கேட்டான்
குலத்து உதித்தோரை கொல்லேன் -விரோசனன் பிள்ளை மஹா பாலி பிரகலாதன் பேரின்
நாதனை நரசிங்கனை –ஏத்தும் பாத தூளி படுத்தலால் பாக்கியம் செய்தது –

—————————————————————————————————————

வ்ரீடா வித்த வதான்ய தாநவ யசோ நா சீர தாடீ பட
த்ரை யக்ஷம் மகுடம் புநன் நவது நஸ் த்ரை விக்ரமோ விக்ரம
யத் பிரஸ்தாவ சமுச்சரித த்வஜ படீ வ்ருத்தாந்த சித்தாந்திபி
ஸ்ரோதோபி ஸூர சிந்துரஷ்ட ஸூ திஸா ஸுதேஷூ தோ தூயதே –6-

வ்ரீடா வித்த வதான்ய தாநவ-மஹா பலி புகழை பரப்ப
லஜ்ஜை வேட்க்கை -யால் பீடிக்கப் பட்ட பெரும் கொடை வள்ளல் -மஹா பலி -கொஞ்சமாக கொடுத்தோம் என்று
அன்றோ வெட்க்கினான் -இத்தாலேயே மூவடி கேட்ப்பாய் என்று நினைத்தான் -காமரு சீர் அவுணன்
யசோ நா சீர தாடீ பட -ஓடுகிற வேகம் -கட்டியம் சொல்லி பின்னே வரும் புகழை சொல்லிக் கொண்டே போனதே திருவடி –
அக்ர பாகம் -நுனிக்கு முன்னே போகும் -எச்சரிக்கை சொல்லிக் கொண்டே -புகழை சொல்லவே திருவவதாரம்
-அளக்கவே தானே புகழ் பரவிற்று -பறை சாற்றி போனதே
வதா அந்நிய வேறு கேளு என்றுமாம் –
தீர்த்தங்கள் இரண்டுக்கும் போட்டி என்றுமாம்-
த்ரை யக்ஷம் -முக்கணான்
மகுடம் புநன் நவது நஸ் -முடியை புனிதம் ஆகிற்றோ -ச சிவ சிவ பூத் -ஆளவந்தார்
த்ரை விக்ரமோ விக்ரம -மூன்று அடிகள் -ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியம் -அப்பன் –உலகம் கொண்ட வாறே -ஆழி எழ –ஸ்வஸ்தி -வாழி சொல்ல
முன்பு சொன்னவை மூன்று அடிக்கு விசேஷணங்கள்-
விக்ரம-வைத்த அடி -திருவடி பதித்த
யத் பிரஸ்தாவ சமுச்சரித -பிரஸ்தாவம் தொடங்கி-உயர்ந்து எடுத்துக் கட்டப்படட
த்வஜ படீ-கொடிகள் எட்டு திக்குகளிலும் கங்கை நீர் இந்த புகழுக்கு -ஆகாசத்தில் ஓடும் கங்கை நீரை கொடி போலே
ஒல்லை வா என்று கூப்பிடுவது போலே மிதிலை கொடிகள் இருந்தனவே –
கோவலன் -இங்கே வராதே என்று சிலப்பதிகாரம் -தார் குறிப்பு ஏற்று அணி -அலங்கார சாஸ்திரம் –
வ்ருத்தாந்த சித்தாந்திபி -சரித்திரம் -போன்ற -உயர்ந்த கோடி போன்ற ஒப்பானவை –
ஸ்ரோதோபி-ப்ரவாஹங்களினால்
ஸூர சிந்துரஷ்ட ஸூ திஸா ஸுதேஷூ தோ தூயதே
தேவ கங்கை -அஷ்ட ஸூ எட்டு திசைகள் அசையும் -திஸா ஸுதேஷூ மொட்டை மாடிகள்
அவது- இப்படி பண்ணிய திருவடிகள் எங்களை ரக்ஷிக்கட்டும் –
மூன்று லோகம் காக்க நரசிம்மர் இடம் அபேக்ஷித்தத்தை திரிவிக்ரமன் நிறைவேற்றினான் -என்றுமாம்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் அபேக்ஷிதத்தை திருப் பாண் ஆழ்வார் இடம் கொடுத்தால் போலே –

கவி தார்க்கிக ஸிம்ஹம் அன்றோ -மஹா பாலி உதார குணம் புகழ் பரவ -திருவடி தாவி விரைந்து அளக்க –
உபேந்த்ரன் — வாமனன் — அதீந்த்ரன் -தேவ யோனி எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –
சுருக்குவார் இன்றியே சுருங்கி -பெருக்குவாறும் இன்றியே பெருக்கம் எய்து பெற்றியோய் – ஓங்கிஉலகு அளந்த உத்தமன்
நித்ய ஸ்ரீ இருக்கவே ப்ரஹ்மச்சாரியாய் போவதே
அலம் புரிந்த நெடும் கை கொண்டு இரப்பதே-வாங்கிப் போவார்களா உதாரர் என்றவன் தானே இரப்பதே –
புலன்களை வாமனன் போலே சுருக்கினால் பக்தி ஞானம் ஓங்கி வளரும் –
வாமானி சுகானி நியதி -ஸூ கங்களை கொடுப்பவன் தன் திருவடிகளை சேவிப்பார்களை
கோட்டங்கை வாமனன் செய்த கூத்துக்கள் -கை நீட்டி பழகி கொண்டே போனானாம் –திரட்டுப்பால் -போலே அன்றி –
சுக்ல பக்ஷ த்வதாசி விஜயா முகூர்த்தம் -காயத்ரி மந்த்ரம் சூரியன் உபதேசிக்க -பிரஜாபதி -தானே வந்து பிரஹஸ்பதி பூணல் கொடுக்க
-பூமி மான் தோல் கொடுக்க -தண்டம் சந்திரன் -அதிதி குடை -கமண்டலம் ப்ரஹ்ம -தர்ப்பங்கள் சப்த ரிஷிகள் குபேரன் பிக்ஷை பாத்திரம்
உமா பிக்ஷை ஐடா -பிறந்தார் அன்றே உபநயனம் -அன்றே 7 வயசு -ஆல மரத்தின் வித்தை– அரும் குறள் ஆனான் -நீல நிறத்து நெடும் தொகை அன்றோ –
நர்மதா நதிக் கரையில் யஜ்ஜை வாடம்-இருந்ததாம்
கொள்வன் நான் –மாவலி -மூவடி –
சுக்கிரன் அன்னை துரும்பால் கிளறின சக்கரக் கையன் -ஒண் மிதியில் –அப்பால் மிக்கு -தாவி -உலகம் -கொண்டான்
-சலம் பொதி உடம்பு சந்திரன் வெங்கதிர் அஞ்ச –மால் புருடோத்தமன் வாழ்வு –
நாரணம் பாத துழாய் கொன்றை மலர் கலந்து இழி புனல்
சது முகன் கையில் –சதுர் புஜன் தாளில் சங்கரன் சடையில் தங்கி ஜடா தரன் கங்கா தரன்
அந்தரம் –பாதம் நம்மை ஆளும் அரசே -மதியினால் குறள் மாணாய-நிமிர்ந்த நீல் முடியின்
ஓ மண் அளந்த தாளாளா-நின் முகம் கண் உளவாகில் நீ இங்கே நோக்கிப் போ சிறுவன் வார்த்தையை தன்னை மாவலி இடம் சென்று கேள் –
திருவோணத்தான் உலகு ஆளும் -வருக நம்பி வாமன நம்பி -வாமணாஸ்ரமம் -பக்ஸர் சித்தாஸ்ரமம் –
ஆகாச கங்கை நாலாக பிரிந்து ஓன்று துருவன் மேலே தங்க
மூன்று ஆகாசம் பூமி அந்தரிக்ஷம்
ஆகாச கங்கை சிவன் பெற்று சிவன் ஆக –
பின்பு ஏழாக பிரிந்து -இவ்வளவுக்கும் பேர் உண்டே
ஒன்றை பகீதரன் பிரார்த்தித்து -சாப விமோசனம் பெற பாகீரதி அலக்நந்தா ஜங்கவி கங்கை -வாசகத்தால் கடுவினை கடுவிக்கும்

————————————————————————————————————–

க்ரோதாக்நிம் ஜமதக்னி பீடந பவம் சந்தர்ப்ப யிஷ்யன் க்ரமாத்
அக்ஷத்ராமிஹ சந்தஷய இமாம் த்ரி சப்த க்ருதவ ஷிதிம்
தத்வா க்ரமணி தக்ஷிணாம் க்வசன தாம் ஆஸ்கந்தய சிந்தும் வசந்
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவான் ஆ ப்ரஹ்ம கீடம் முனி –7-

க்ரோதாக்நிம் ஜமதக்னி பீடந பவம் -ஜாமதக்னீ -பரசு ராமன் -ஜமதக்கினி குமாரர் -க்ரோதம் அக்னியால் -பீடிக்கப் பட்டு –
சந்தர்ப்ப யிஷ்யன் க்ரமாத் -அக்னியை -திருப்தி செய்யப் பெற்று -அலம் புத்தி இல்லாத அக்னி கோபம் –
அக்ஷத்ராமிஹ சந்தஷய இமாம் -ஷத்ரியர்கள் இல்லாத படி
த்ரி சப்த க்ருதவ ஷிதிம்-21 தலை முறை இல்லாமல் பண்ணி
தத்வா க்ரமணி தக்ஷிணாம் க்வசன தாம் -கஸ்யபர் இடம் தக்ஷிணையாக கொடுத்து ஏதோ ஒரு யாகத்தில்
ஆஸ்கந்தய சிந்தும் வசந்-சமுத்திரம் வசமாக கொண்டு இருந்து
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவான் ஆ ப்ரஹ்ம கீடம் முனி -மங்களம் போக்க வேண்டும் -முனிவரான பரசுராமன் ப்ரஹ்மா தொடங்கி புல் வரை

அப்ரதான அவதாரங்கள் -பரசு ராம-பல ரா அவதாரங்கள் -ஸ்வரூப ஆவேச அவதாரங்கள் –
உபாசனம் அர்ஹம்
முழு சக்தி -ஸ்வரூப ஆவேசம் -சொல்ப -சக்தி ஆவேசம் ஒரு காரியத்துக்காக மட்டும் –
கார்த்த வீர்யார்ஜுனன் -பரசுராமன் -ராமர் -முக்கிய அவதாரம்
கண்ணன் பலராமன் -சந்திக்கலாம் -முக்கிய அவதாரங்கள் சந்தித்து கொள்ளாதே
-ரிசிகர் பாயாசம் -மாற்றி கொண்டு -ப்ராஹ்மணர் க்ஷத்ரியர் தேஜஸ் –
சத்யவதி க்கு அதீத கோபம் கொண்ட பிள்ளை சாபம் -இந்த பிள்ளை சாந்தம் அவன் பிள்ளை கோபிஷ்டர் –
ரேணுகா தேவி ஜமதக்கினி –தாய் தந்தை பரசுராமனுக்கு பிறப்பால் ப்ராஹ்மணர் வளர்ந்தது
விசுவாமித்திரர் –பிறப்பால் க்ஷத்ரியர் -ப்ரஹ்ம ரிஷி ஆனார்
இரு நில மன்னர் இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் -உடனே –
கோகுல மன்னரை மூ ஏழு கால் -மழு ஏந்தி –
விசித்ரன் கந்தர்வன் -ரேணுகா தேவி -தலை வெட்டி –
கர்வ பங்கம் ராமர் சந்தித்ததால் -தவத்தின் வலிமையில் பானம் விட்டு -கேரளா பரசுராம ஷேத்ரங்கள் –
கங்கை தீர்த்தமாடி 21 தலை முறை புண்ணியம் ஆகுமே –

—————————————————————————————————————-

பராவாரா பயோ விசோஷண கலா பாரீண காலா நல
ஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக வியாபார கோர க்ரம
சர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணை ஏக வ்ரதீ
தர்மோ விக்ரஹ வான தர்ம விரதிம் தன்வீ ச தன்வீ த ந–8-

பராவாரா-சமுத்திரம்
பயோ விசோஷண -தண்ணீரை வற்ற அடிக்க
கலா பாரீண-வித்யையில் கை தேர்ந்த
காலா நல-நெருப்பு -ஜாடராகினி வயிற்றில் போலே இது ஊழி தீ
ஜ்வாலா ஜால -தீ பிழம்பு கூட்டம் -சுடர்கள் ஸமூஹம்
விஹார ஹாரி-பெரும் விளையாட்டையும் அபஹரிக்கும்
விசிக வியாபார-பாணங்கள் உடைய செயல்கள்
கோர க்ரம-உக்ரமான விளையாட்டுகள் –
ஸ்ரீ ராம பணம் இப்படி சொல்லி -சாந்த ஸ்வரூபன் அன்றோ
சர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணை ஏக வ்ரதீ
எந்த திசையிலும் -ஒரு தடவை சரணம் புகும் ஜானகி கூட்டங்கள் -ரக்ஷணத்தில் ஒரே விரதம் கொண்டவன்
தர்மோ விக்ரஹ வான-தர்மம் உரு எடுத்த பிரசித்தர்
அதர்ம விரதிம்-அதர்ம விரதி-வெறுப்பு கொள்பவராக ஆக்கட்டும் -தீய செயல்களில் இருந்து ஒய்வு ஏற்படுத்தட்டும் –
தன்வீ ச தன்வீ த ந–சாரங்க பாணி -கோதண்ட பாணி –

வில்லாண்டான் தன்னை -நாண் தழும்பு -சீதா பிராட்டி விரும்பும் -வீர பத்னி -அடியார்களை ரசிப்பவன் -ஆலிங்கனம் செய்து -ரிஷிகளை ரஷித்ததும் –
நெருப்பில் இருந்து தானே தண்ணீர் -ஸ்ருஷ்டியில் —
பாடபாகனி குதிரை வடிவத்தில் கடலுக்கு உள்ளே -ஏரி மலை -போன்றவை நேருமே
தண்ணீர் நெருப்பில் சேரும் லயத்தின் பொழுது -இது ஊழி தீ
அனல -அலம் புத்தி இல்லாத நெருப்பு
சமுத்திர ராஜன் -விருத்தாந்தம் ராம பானம் மஹிமை அறிவோம் -குணக்கடல் ஜலக் கடலில் கிடந்ததே மூன்று நாள்கள்
-ஜிதக்ரோதன் கோபம் வச்யமானானே -ஜாபா மானய –சாகரம் சோக்ஷயிஷ்யாமி -சாராம்ச -ஆசீர் விஷம் –
ஒரு வில்லால் -ஓங்கு முந்நீர் அடைத்து –
ரகாரம் கேட்டே பயந்து மாரீசன் பேசினான் –
அக்னியை வெல்லும் பானம் -விபீஷணன் ராவணன் இடம் -வாயு தாண்டி போகும் -அக்னியை பெற்ற வாயுவையும் வெல்லும் என்றானே
ராமோ விராம -ஒய்வு -அம்பும் கையுமாக வந்தால் வரமும் வரம் கொடுத்தவர் வரம் வாங்கினவர் மூவரும் -ஒய்வு கொள்ளும் படியாகும்
–முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி -அவன் தவத்தை முற்றும் செற்றாய் –
வடிவாய் மழு ஏந்தி உலகம் ஆண்டு -திருக் கோவலூர் ஆயன் –
சார்ங்கம் உதைத்த சர மழை-சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்றானே –
பொன்னார் சார்ங்கம்கி உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
-கிள்ளிக் களைந்தான் –
கல்விச்சிலையால் -தாடகை -அழித்து–ராமன் சஸ்திர வ்ருத்தர் கண்ணன் கீதையில்
சாரங்க பாணி தளர் நடை நடவாய் -அலங்காரம் -ஆபரணம் ஆயுதம் -சவுரி ராஜர் -உத்சவர் நெற்றியில் வடு -அரையர் தாளம் எறிந்த வ்ருத்தாந்தம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றும் யாரும் இல்லை –
ஏழு வேலையும் -உலகங்கள் எழும் ஏழு குன்றமும் புரவியும் சப்த கன்னிகைகள் ரிஷிகள் நடுங்க ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கு -வில் கை வீரன் பெருமாள் -நாம்
வெறும் கை வீரன் -கோயம் குண -இன்று போய் நாளை வா –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் —தர்மஞ்ஞன் -தர்மம் அறியா குறும்பன் -அவன்
மனத்துக்கு இனியான் பெண்ணின் வருத்தம் அறியா பெருமான் -கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
சத்ருக்களும் கொண்டாடும் மஹிமை -ராமோ விக்ரகவான் தர்மம் -சர்வ பூத தயை -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –

—————————————————————————————————————-

பக்கத் கௌரவ பட்டண ப்ரப்ருத்ய ப்ராஸ்த ப்ரலம்பாதய
தாலங்கஸ்ய தாதாவிதா விஹ்ருதயஸ் தன்வந்து பத்ராணி ந
ஷீரம் சர்க்கர ஏவ யாபிர ப்ருதக் பூதா ப்ரபூதைர்க் குணை
ஆ கௌமார கமஸ் வதந்த ஜெகதே க்ருஷ்ணஸ்ய தா கேலய–9-

பக்கத் கௌரவ பட்டண ப்ரப்ருத்ய -இந்திர பிரஸ்தம் தொடக்கமான பட்டணங்கள் -ஆச்சார்யம் படும் படி -பக்கத்
யமுனை ஆற்றை இழுத்து போக்கை மாற்றி -கலப்பையால் பட்டணம் யமுனையில் தள்ளி
ப்ராஸ்த ப்ரலம்பாதய-ப்ரலம்பன் போன்ற அசுரர்கள் கொல்லப் பட்டவர் –
தாலங்கஸ்ய -பனை மரம் தேர் கொடி
தாதாவிதா விஹ்ருதயஸ் -விளையாட்டுகள்
தன்வந்து பத்ராணி ந -மங்களங்கள் செய்யட்டும்
ஷீரம் சர்க்கர ஏவ -பாலும் சக்கரையும் போலே சேஷ்டிதங்கள் கொண்டவர்கள் அன்றோ
யாபிர ப்ருதக் பூதா-விட்டுப் பிரியாமல் -ஒன்றாகவே செய்யப் பட்டவை
ப்ரபூதைர்க் குணை-கல்யாண குணங்கள்
ஆ கௌமார -சைஸவம் பால்யம் -6 வயசில் வரை 9 வயசு வரை கௌமாரம் -ஆ தொடக்கமான -ஆ பாத சூடம் போலே ஆ மௌலி பாதாந்தம் போலே
கமஸ் வதந்த ஜெகதே க்ருஷ்ணஸ்ய தா கேலய-லீலைகள் -உலகம் ரசிக்கும் -அஸ்வதந்த நன்கு ரஸ்யமாக இருக்கின்றன –

ஷேம கிருஷி பலன் -பக்தி உழவன் –அஹம் அன்னம் –அஹம் அந்நாத-நெஞ்சம் பெரும் செய்யுள் -பேரமர் காதல் விளைவித்த –
ஈர நெல் வித்து விளைத்து -கண்ணன் கடியனே –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -கலப்பை கொண்டே -கிருஷிகன் –
ஹிரண்ய கசிபு தம்பி – கால நேமி பிள்ளைகள் -ஆறு பேர் -உக்ரசேனர் பிள்ளை கம்சன் –
கால நேமியே கம்சனாக பிறந்தான் -சாபம்-மக்கள் அருவரை கல்லிடை மோத-
சூட்டு நன் மாலைகள் -அவதார பிரயஜன ஸூ ஷ்மம் ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
கர்ஷணம் இழுத்தல் – சங்கர்ஷணன் -சம்ஹாரம் –
யோக மாயா -தங்கை -நவமி இவள் கண்ணன் அஷ்டமியில் –
-செற்ற கொற்றத் தொழிலான்- கங்கையிலும் யமுனையில் நகரங்களை இழுத்து தள்ளிய வ்ருத்தாந்தம் உண்டே
-ஒற்றை குழையும் நாஞ்சிலும் -ஒரு பால் தோன்ற தான் தோன்றி
ராஜாக்கள் -ஒரு காதில் தனித்த தோடு குண்டலம் -இடுப்பில் சாதிக் கொத்து இருக்குமே -மேல் காத்து குத்தி –
சேஷ சேஷிகள் உடைய சக்கரை பால் போலே பிரியாத -இருவர்
-லக்ஷ்மணன் –ஆதி சேஷனே -பல ராமன் -ஆதி சேஷன் அம்சத்துடன் அவதரித்தவர்
சேஷி ராமானுஜன் -கண்ணன் -சேஷ ராமானுஜர் உடையவர் -சங்கராதி-எதிராஜ விம்சதியில் தேசிகன் காட்டி
-சங்கரர் கௌரவம் அடக்கி -யாதவ பிரகாசர் மதம் -யது குலம் பிரகாசம் கண்ணன் –
பர கத அதிசய –ஆதேநாய இச்சையா -சேஷத்வம் –
பால் பிரதானம் -கண்ணன் -சேஷி ராமானுஜன் -அப்ருதக் சித்த விசேஷணம் நாம் அனைவரும் சார்ந்தே விட்டுப் பிரியாமல் -அவனை தாரகன் –
பிரகாரம் -வேற சரீரம் வேற -உடல் மீசை உயிர் என கறந்து எங்கும் பரந்துளன்
உடல் தேகம் -பெருக்கும்–சரீரம் -இளைக்கும் தாது அர்த்தம் -சீரியதே இது சரீரம் தாது
யஸ்ய சேதனஸ்ய -யது த்ரவ்யம் எப்போதும் தாங்கப் பட்டு தன் பொருட்டு நியமிக்கப் பட்டு ஸர்வதா நியாந்தா தாராயிதும் அதன் பொருட்டேயாக இருப்பதே
இதே போலே ஆத்மாக்கள் ஈஸ்வரனுக்கு சரீரம் என்றவாறு -பிரகாரம் இன்றியமையாமல் சார்ந்து இருப்பது -மணம் புஷபம் /மாணிக்கம் ஒளி போலே
பலராமன் – கூட போகாத நாள் தான் காளியன் உச்சியில் நட்டம் ஆடி
அகாசுர வதம் அன்றும் -கூட போக வில்லை -மலைப்பாம்பு -வடிவம் -பிள்ளைகள் அண்ணாந்து வாய்க்குள் போக -திருமேனி வளர்ந்து வெளியில் வர –
தன்னேராயிரம் பிள்ளைகளும் சுற்றி உட்க்கார்ந்து -மஸ்ரன கவளம் -தத்யோன்னம் -ப்ரஹ்மாவுக்கு பாடம் புகட்டிய வ்ருத்தாந்தம் –
வெள்ளி மழை போலே முன்னே போக -பைய ஊர்வது போலே கரு மலை குட்டன் பெயர்ந்து நடப்பான் -கண்ணன்
-நம்பி மூத்த பிரான் -சம்ப்ரதாயம் -செம் பொன் கழல் அடி செல்வன் பல தேவன் –

——————————————————————————————————————

நாதா யைவ நம பதம் பவது நஸ் சித்ரைஸ் சரித்திர க்ரமை
பூயோ பிர்புவ நான்ய மூநி குஹனா கோபாய கோபாயதே
காளிந்தீ ரசிகாய காளிய பணி ஸ்பார ஸ்படா வாடிகா
ரங்கோத் சங்க வி சங்க ஸங்க்ரம துரா பர்யாய சர்யா யதே–10-

நாதா யைவ நம பதம் பவது நஸ்-
-நாதன் ரக்ஷகன் -அவன் ஒருவனுக்கே நமஸ்காரம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி
சித்ரைஸ் சரித்திர க்ரமை -விளையாட்டு வரிசை -பூதனை நிரசனம் தொடக்கமாக கேசி ஹந்த ஈறாக பல சேஷ்டிதங்கள் அன்றோ
பூயோ பிர்புவ நான்ய -மூநி குஹனா கோபாய கோபாயதே-கோக்களை ரக்ஷிக்கும் -மூ உலகையும் ரக்ஷிக்கும் -கோப வேஷம் கொண்டு
-ஷத்ரியனாக பிறந்து இடைப்பிள்ளையாகி -ஏறிட்டுக் கொண்டு -இரண்டு தாய் தந்தைகள் குலம் -மஹிஷிகள் -வார்த்தை உட்பட இரண்டு
மாலாய் பிறந்த -ஏலாப் பொய்கள் சொல்லுமவன் -பச்சைப் பசும் பொய் -கூட்டு வெளிப்படும் -நேர் எதிர் பெருமாள் –
காளிந்தீ ரசிகாய -யமுனை ஆற்றங்கரையில் விளையாடிய
காளிய பணி ஸ்பார ஸ்படா வாடிகா -காளியன் தலை -விரிய -வீதிகளில்
ரங்கோத் சங்க வி சங்க ஸங்க்ரம துரா-துரந்தரன் தலைவன் -நாட்டியம் கற்பார் களுக்கு முன்னோடி -அச்சம் அற்றவராக விசங்க நர்த்தனம்
பர்யாய சர்யா யதே-ஒப்பான நடத்தைகள் -பெரும் கூத்தாடி ஜல க்ரீடை ராசிக் க்ரீடை குரவை கூத்து –
மாயக் கூத்தன் -குடமாடு கூத்து -ஆரார் என்று ஆடுமது கண்டு –

கருடன் வரமுடியாத சாபம் ஸுபரி கொடுக்க காளியன் பொய்கையில் இருக்க -அத்தை ஒழிக்க வில்லை கடலை நோக்கி துரத்தி விட்டு
சூர்யா தனயன் -யமுனை காளிந்தி யமுனை சூரியன் தங்கை -கிருஷ்ணன் ஆனந்தம் கொடுப்பவன் பூமிக்கு –
பூத் தடம் கடம்பு ஏறி காளியன் தலையில் நர்த்தனம் ஆடி –
அம்ருத கலசம் பட்டு பூத்தது திருவடி ஸ் பர்சத்தால் பூத்தது
கோகுலம் போர்க்களம் ஆகும் படி ஆனதே –
காளிங்கன் பண்ணும் பாக்யம் என்னே -திருவடி ஸ்பர்சம் -எண்ணிக்கை நாட்டியம் –
கிருஷ்ணாஸ்ராயா க்ருஷ்ண பலாயா க்ருஷ்ண நாதாஸ்ய -சர்வம் கிருஷ்ண மயம் ஜகத் -அவனே நாதன்
-நம அவனுக்கே -ஏவ -நாராயணனே நமக்கே பறை தருவான் போலே -மாம் ஏகம் சரணம் வ்ரஜ –
நாகணை மீசை நம்பிரான் சரணே சரண் -உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -உனக்கே நாம் ஆட் செய்வோம் –
அம்பரமே தன்னாரே சோறே -கண்ணனைக் கொடுத்தால் ஏவ காரம் உம்மை யாகுமே -உண்ணும் சோறு -வா ஸூ தேவம் சர்வம் அன்றோ
அவதார ரகஸ்யம் -ஜென்ம கர்ம மே திவ்யம் -பிறந்தவாறும் வளர்ந்த வாறும்–

—————————————————————————————-

பாவிந்யா தசயா பவன் நிஹ பவ த்வம்சாய ந கல்பதாம்
கல்கீ விஷ்ணோ யசஸ் ஸூ தா கலி கதா காலுஷ்ய கூலங்கஷ
நிசேஷ ஷத கண்டகே ஷிதி தலே தாரா ஐலவ் கைர்த்ருத்வம்
தர்மம் கார்த்தயுகம் பிரரோஹயதி யன் நிஸ்த்ரிம்ச தராதர –11-

பாவிந்யா-அனந்தர பாவி
தசயா-அவதார தசை
பவன் நிஹ -இந்த ஸ்ரீ ரங்கத்தில் அர்ச்சா மூர்த்தியாக உள்ளவனே –
போன யுகம் கல்கி கொண்டே விக்கிரகம்
மிதிலை செல்வி -தன் சரிதை கேட்டான் -தாய் தந்தை கூப்பிட்டு வர சொல்லி -11000 வருஷம் அப்புறம் தன்னுடைச் சோதி போவதையும் சொல்லி –
அது போலே ஸ்லோகமும் விக்கிரகமும் முன்னே இங்கே
பவ த்வம்சாய ந கல்பதாம்
கல்கீ விஷ்ணோ யசஸ் ஸூ தா -விஷ்ணோ யசஸ்-பிள்ளை
கலி கதா காலுஷ்ய கூலங்கஷ-கலக்கமாக உள்ள நிகழ்வுகள் அக்கிரமத்தை -கரை புரண்டு ஓடும் -கல்கம் குதிரை –
நிசேஷ ஷத கண்டகே ஷிதி தலே-ஒன்றும் மிச்சம் இல்லாமல் முள்ளை நாசம் ஆக்கி
தாரா ஐலவ் கைர்த்ருத்வம் -ஜல பிரவாஹத்தால் –
தர்மம் கார்த்தயுகம் பிரரோஹயதி -கிருத யுக வர்ணாஸ்ரம தர்மத்தை உறுதியாக வ்ருத்தி பண்ணும் வாள் ரக்ஷிக்கட்டும்
யன் நிஸ்த்ரிம்ச தராதர-இரண்டும் கத்தியையே சொல்லும்
கத்தி வைத்து தீயவரை போக்கி -கிருதயுகம் உண்டாக்கி -இரண்டுக்கும் ஒரே திவ்ய ஆயுதம்
மலையை தன்னுள் தாங்கிய மேகம் போலே தாராதக –

சம்பள கிராமம் -விஷ்ணு யசஸ் ப்ராஹ்மணர் திருக் குமாரராக அவதாரம் -கல்கி -வெள்ளை குதிரை
கல்கம்-பெயரில் -வாஹனம் நீண்ட வாள் கையில் கொண்டு -கடும் பரி மேல் கல்கியை நான் கண்டு கொண்டேன்
தீயவர்களை கழித்து கலி யுகம் கிருத யுகம் பற்றி
1000 சதுர் யுகம் முடிந்தால்–ப்ரஹ்மாவின் பகல் காலம் தான் பிரளயம் வரும் -மூன்று லோகங்கள் அழியும்
ப்ரஹ்மா ஆயுள் காலம் முடிந்தால் தான் 14 லோகங்கள்
த்வீத பரார்த்தே -நாம் இருக்கும் -இரண்டாவது ஐம்பதில் -உள்ளோம் -ஸ்வேதா வராஹ கல்பம் -விவஸ்வான் மனு 77 மனுக்கள் ஒரு கல்பத்தில் –
71 சதுர் யுகம் ஒரு மனுவின் காலம் -28 சதுர் யுகத்தில் உள்ளோம் -அப்புறம் வேறு மனு வருவார்
ஒவ் ஒரு சதுர் யுகத்திலும் தசாவதாரங்கள் உண்டே -5117 வருஷம் தான் ஆகி உள்ளது இந்த கலி யுகத்தில் -கல்கியும் ஆனான் தன்னை –

———————————————————————————————

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா –12-

இச்சா மீன விஹார கச்சப-ஆசைப்பட்டு கொண்ட மத்ஸ்ய மூர்த்தி -விளையாட்டாக கொண்ட விஹாரம் கூர்மம் –
மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே -பூமா தேவி கிடந்த பெரும் கேழலார் –
நரத்வம் ஹரி -ஆளரி-தலை பிரதானம் என்பதால் ஹரே என்கிறார் -யாதிருச்சாயாக தோன்றினார் -அங்கே அவன் வீயத் தோன்றிய சிங்க பிரான்
விளிச் சொற்கள் இவை எல்லாம் -ஹே ஹே -என்று கூப்பிட்டு புண்ய கடைகள் நிறைந்தது என்றவாறு
திரு நாம சங்கீர்த்தனம் -முளைக் கதிரை போலே
ரஷா வாமன -ரக்ஷிப்பதற்காக ஸ்ரீ வாமனன்
ரோஷ ராம -ரோஷம் உருவாக்க கொண்ட
கருணா காகுத்ஸ்த-கருணையே -ராம சொல்லி -வாசி புரியாமல் இருக்க காகுத்ஸதா –
ஹேலா ஹலின் -ஹலம் கலப்பை
க்ரீடா வல்லவ -கோபி ஜன வல்லபன் -விளையாட்டுக்காக நாதன்
கல்க வாஹன தசா -கல்கிந்நிதி ப்ரத்யஹம் -கல்கம் வாகனமாக கொண்ட கல்கி தினப்படி
ஜல்பந்த புருஷா-ஜல்பம் உளறிக் கொண்டே சந்நிபதரைப் போலே சொல்ல சொல்ல
புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா-
புண்யங்கள் கிடைக்கும் -மேலே மேலே கிட்டும் -புவனங்களை புனிதம் ஆக்கி
அலையாக வரும் புண்ணியங்கள் வியாபார பொருள் -விற்கும் கடையாக திரு நாமம் சொல்பவர்கள் –
இச்சா மீனா -வேதம் திரும்பி மீட்டி -வேதம் கற்பதும் அதன் படி நடப்பதும் விலை போலே ஒவ் ஒன்றுக்கும்
பாகவத அபசாரம் செய்யாமல் -திருவடி தீண்ட ஆசைப் பட்டு
விலக்காமை ஒன்றே வேண்டும் அத்வேஷம் -கருணை மழை பொழிய சேர்த்து கொள்ள வேணும்
விளையாட்டு நினைத்து கால ஷேபம் செய்வதே வேண்டும்
வெள்ளை உருண்டை கங்கையில் மீனுக்கு சமர்ப்பித்து
ஸ்ரீ கூர்மம் –
முசுதேவ கோரிக் கிழங்கு
நரசிம்மம் பானகம்
வாமனன் -கேளா செவி அல்ல –

அன்னமும் மீன் உருவும் ஆளரியும் -பெரியாழ்வார்
மூ உருவில் ராமனாய் பெரியாழ்வார் 4 பத்து
மீனாய் –கல்கியும் -இன்னம் கார் வண்ணனே நம்மாழ்வார்
அன்னமும் -2-7 திருமங்கை
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும்
குப்ஜா குள்ள மா மரமாகவும்
கேழலும் அரியும் 5-4-
நாகை -9-2-அன்னமும் –கேழலும் மீனுமாகிய ஆதி

————————————————————————————————-

வித்யோதன்வதி வேங்கடேஸ்வர கவவ் ஜாதம் ஜகன் மங்களம்
தேவே ஸஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம் விவஷேத ய
வக்த்ரே தஸ்ய சரஸ்வதீ பஹு முகீ பக்தி பரா மனசே
ஸூ த்தி காபி தநவ் திஸாஸூ தச ஸூ க்யாதி ஸூ பா ஜ்ரும்பதே -13-

வித்யோதன்வதி வேங்கடேஸ்வர கவவ்-வித்யை -கல்வி கடலாக -ஸ்ரீ வேங்கட நாதன் –
ஜாதம் ஜகன் மங்களம் -உண்டான -பண்ண வில்லை -கர்த்ருத்வ புத்தி இல்லை -ஷேமங்கரமாக
தேவே ஸஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம்-ஸ்ரீ ரெங்க நாதன் அருளிச் செய்த தசாவதாரங்கள் பற்றிய ஸ்தோத்ரம்
விவஷேத ய -சொல்ல விரும்பினால் போதும் -பாடவும் மனனனம் பண்ணவும்
வக்த்ரே தஸ்ய சரஸ்வதீ பஹு முகீ -அவர்கள் உடைய வாயில் வாள் வைபவம் –கங்கா -பிரவாஹம் போலே
பக்தி பரா மனசே -மனசில் பக்தி குடி கொண்டு இருக்கும்
ஸூ த்தி காபி தநவ் -காய ஸூ த்தி வரும் -முக்கரணங்களும் சொல்லி –
திஸாஸூ தச -ஸூ க்யாதி ஸூ பா ஜ்ரும்பதே-பத்து திக்குகளிலும் -கொண்டாடப்படும் யசஸ் பெறுகிறான்

திருவவதாரம் பண்ணவே பக்தி வளர்க்கவும் வாயினால் பாடி தூ மலர் தூவி தொழவும் முக்கிய பிரயோஜனம் என்றவாறு

—————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: