திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -4-3–

தாம் ஆசைப்பட்ட படியே எல்லாம் பெற்றாராம் படி தம்மோடு சம்ச்லேஷித்து அருளின எம்பெருமானுக்கு
தம் பக்கல் உண்டான -பிரணயித்தவத்தை அனுசந்தித்து அத்யந்தம் ப்ரீதரான ஆழ்வார் அந்த ப்ரீதி பிரகர்க்ஷத்தாலே
அவனுடைய பிரணயித்தவ குணத்தை பேசி அருளுகிறார் –

——————————————————————————————————

ஆஸ்ரித விரோதி நிரசனங்களால் வந்த ஸ்ரமம் போகைக்கு ஈடான சிசிர உபசாரங்கள் செய்யப் பெற்றிலேனே யாகிலும்
என் ஹ்ருதயத்தின் உடைய சத்தையே சிசிர உபசாரமாய் விட்டது -என்கிறார் –

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்!
நப்பின்னை பிராட்டியினுடைய முறுவலுக்கு தோற்று அவளோட்டை சம்ச்லேஷத்துக்காக எருதுகளினுடைய பெரிய கழுத்துக்களை முறித்தாய்
மதிள்இலங்கைக்-கோவை வீயச் சிலை குனித்தாய்!
அப்ரதிருஷ்யமான லங்காதிபதியான ராவணன் முடியும்படி வில்லை வளைத்து அருளினாய்
குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
நல் குலத்திலே பிறந்து சர்வ லக்ஷண சம்பந்தம் ஆகையால் ஒருவருக்கும் கணிசிக்க முடியாதே இருக்கிற
ஆனையினுடைய கொம்பை அநாயாசேன முறித்து அருளினாய்
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும்,
பூவோடு கூடின நீரைக் கொண்டு ப்ராப்த காலங்களிலே பரிசர்யை பண்ணப் பெற்றிலனே யாகிலும்
பூவை வீயா- பூவை இட்டு -என்றுமாம்
நின்-பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.
பூவைப் பூவின் தன்மையான மேனிக்கு -பூவை ஒழியச் செல்லாத மேனி என்றுமாம் –

——————————————————————————————————

என்னுடைய ஸ்ம்ருதியாதிகள் அவனுக்கு அங்க ராகாதிகளாய் விட்டதே என்று இனியராகிறார் –

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-

பூசும் சாந்து –
பூசி அல்லது தரிக்க ஒண்ணாத சாந்து
புனையும் கண்ணி-
விரும்பி சூடும் பூ மாலை
வான் பட்டாடையும்
அதி ஸ்லாக்க்யமான திருப்பரி வட்டம்
தேசமான அணிகலனும்
தேஜஸ் கரமான திரு அணிகலன்கள்
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே-
சர்வேஸ்வரனாய் ஜகத்துக்கு பலபடியாலும் ரக்ஷகனாய் அச்செயலாலே விசேஷித்து எனக்கு
ஸ்வாமியுமாய் விலக்ஷணமான திருமேனியை உடையவனும் –

——————————————————————————————————–

தம்மோட்டை ஏவம் வித ப்ரணயத்தால் எம்பெருமானுக்கு உண்டான கார்த்தார்த்த்யம் சொல்லுகிறார் –

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3-

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி-ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி-
ஸ்ருஷ்டிக்கு முன்பு ஸ்வ அசாதாரணமான திரு மேனியை உடையையாய் -ப்ரக்ருதி மஹான்களையும்-த்ரிவித அஹங்காரத்தையும்
-மனா ப்ரப்ருதி கரணங்களையும் ஐந்து பூதங்களையும் சந்த்ர ஸூர்யர்களையும் ஸ்ருஷ்டித்து –
அவற்றினுடைய தாரண அர்த்தமாக அவற்றுக்கு ஆத்மாவாய்
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!-
உன்னாலே ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணனன் ஆகைக்காக-திருப் பாற் கடலின் நடுவே திரு அனந்த ஆழ்வான் மேலே
ஏறிக் கண் வளர்ந்து அருளி ஸமஸ்த ஜந்துக்கள் பக்கலிலும் அனுக்ரஹ சீலன் ஆனவனே –
ஆக முற்றும் அகத்து அடக்கி-உன்-ஆவி அல்லல் மாய்த்ததே.
உன்னுடைய திருமேனிக்கு வேண்டும் தாரக போஷகாதிகள் எல்லாம் என்னுடைய மன ப்ரக்ருதிகளாயாகக் கொண்டு
உன்னுடைய மனஸ் நிர்த்துக்கம் யாயிற்றே
நான் நிர்த்துக்கன் ஆனேன் என்றுமாம் –

———————————————————————————————————

பூதனா ஸ்தன்ய பானாதி வியாபாரங்களால் உள்ள ஆயாசத்துக்கும் ஸ்ரீ யபதியான-உன்னுடைய ஸுகுமார்யத்துக்கும்
ஈடான சிசிர உபசாரத்துக்கும் என்னுடைய பிராணன் ஆய்விட்டதே என்று ப்ரீதர் ஆகிறார் –

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4-

குளிர்ந்த பூ மாலையைக் கொண்டு ப்ராப்த காலத்திலே வந்து ஸந்நிஹிதனாய் பரிசர்யை பண்ண மாட்டிற்று இலேனே யாகிலும்
குளிர்ந்த திருமாலையால் அல்லது செல்லாத உன் திருமுடிக்கு சாத்தும் திருமாலை என்னுடைய பிராணனாய் விட்டதே –

—————————————————————————————————

தம்முடைய ஸ்நேஹாதிகள் ஆனவை ஒரோ ஒன்றே அவனுக்கு ஆபரணாதி சர்வ பரிச்சத்தங்களும் -என்கிறார் –

கண்ணி எனது உயிர்காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல்கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5-

விலக்ஷணமான திரு அபிஷேகம் முதலாக அசங்க்யேயமான திரு அணி கலன்களும்-திருவரைக்கு தகுதியான திருப் பரிவட்டமும்
இருந்ததே குடியாக ஆதரித்து ஏத்தும் தன்னுடைய கீர்த்தியும் இவை எல்லாம் என்னுடைய காதலே
காலத்தை நடத்தக் கடவ திரு வாழியை திருக் கையிலே உடையனாய் அவ் வழகை காட்டி எனக்கு
அநந்ய பரத்வ பரம உபகாரத்தை பண்ணும் ஸ்வ பாவனாய் எனக்கு ஸ்வாமியான கிருஷ்ணனுக்கு –

——————————————————————————————————

இப்படி பிரணயியாய் இருந்துள்ள நீ என்னுடன் சம்ச்லேஷித்திலை யாகிலும் உன்னுடைய சத்தத்தையே
எனக்கு தாரகாதிகள் எல்லாம் என்கிறார்
தம்முடைய பிரணயித்தவம் பேசுவான் என் என்னில் -எம்பெருமானுடைய பிரணயித்தவ அதிசயம்
தம்மையும் பிரணயியாம் படி பண்ணிற்று என்னும் கணக்காலே-

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-

பிரதிபக்ஷ நிரசனமே ஸ்வ பாவமான திரு வாழி யோடே திரு நிறத்துக்கு பகைத் தொடையான வெண்மையை உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
அழகிய திருக் கையிலே ஏந்தி அருளினவனே என்று அழகைச் சொல்லியும்
ஸ்வ சேஷமான ஜகத்தை எல்லாம் உண்பது உமிழ்வதாய் அவற்றுக்கு தத் தத் கால உசிதமான ரக்ஷைகளை பண்ணா நின்று கொண்டு
அவற்றின் பக்கலிலே மிகவும் வத்சலன் ஆனவனே என்று நான் கூப்பிட்டு அழைத்தக்கால் வருகைக்கு பிரசங்கம் இல்லையே யாகிலும்
உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகள் எனக்கு போக்யமாம் –

————————————————————————————————-

ஸ்நேஹமும் ஸ்நேஹ அநு ரூப வ்ருத்திகளும் இன்றிக்கே இருக்கிலும் என்னுடைய சத்தையே உனக்கு ஜீவன ஹேதுவாகா நின்றது
-ஒரு பிரணயித்தவம் இருக்கும் படியே என்று விஸ்மிதர் ஆகிறார்

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7-

குரை கழல்கள் -பெருத்த திருவடிகள் -த்வநிக்கிற என்றுமாம் –
குரை கழல்கள்-இத்யாதி –
அல்ப ஆபி முக்கியம் பண்ணினவருக்கும் பிராபிக்கலாம் படி நின்ற ஆச்சர்ய பூதனே
விரைகொள்-இத்யாதி
நல்ல உபகாரகங்களைக் கொண்டு பரிசர்யை பண்ண மாட்டானே யாகிலும் பேச்சுக்கு நிலம் அல்லாத படி இருக்கிற
தேஜோ ரூபமான உன்னுடைய திருவடிக்கு என்னுடைய ஆத்ம சத்தையே தாரகம் ஆயிற்று -இது என்ன ஆச்சர்யம் –

—————————————————————————————————

ஒருவருக்கு ஒருவராலே ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் ஆம்படி எம்பெருமானுக்கு தமக்கும்
-விளைந்த சம்ச்லேஷம் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார் –

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8-

என்னோடு சம்ச்லேஷிக்கைக்காக எனக்கு தப்ப ஒண்ணாத படி சர்வகதனாய்-ததார்த்தமாக அறிவையே ஸ்வரூபமாக உடையவனே –
என்னோட்டை சம்ச்லேஷ ஜெனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே புதுக் கணித்த விபூதியை உடையையாய் அவற்றுக்கு உள்ளே
பூர்ணமாய்க் கொண்டு வ்யாப்தமான ஞானத்தை ஸ்வரூபமாக உடையவன் என்னுதல்-
என் ஆத்மாவும் நீ இட்ட வழக்கு -உன்னுடைய திவ்யாத்மா ஸ்வரூபமும் நான் இட்ட வழக்காயிற்று –
நீயே நோக்க வந்து நிற்கிறபடி இன்னபடி நின்றாய் என்று சொல்ல நிலமன்று –

————————————————————————————————-

உன்னுடைய பிரணயித்வ பிரகர்ஷம் என்னுடைய பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார்–

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-

-உன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன் நான்-
வல்ல அம்சத்தை சொன்னாலோ என்னில் -உன்னுடைய அபரிச்சேதயமான பிரணயித்வ குணத்தின் கரையிலும் ஒரு நாளும் செல்ல முடியாது
காதல் மையல் ஏறினேன்;
நீர் பின்னை உபக்ரமிப்பான் என் என்னில் ஸ்நேஹத்தால் மதி கெட்டேன்
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
உன்னுடைய பிரணயித்வ குணத்தில் ஒன்றும் குறையாமே-எனக்கு காட்டி என்னோடே கலந்த கலவியையே நிரவதிக தேஜஸ்ஸாக உடையவனே –
பிரணயித்வ பிரகர்ஷமும்-அத்தாலே வந்த ஹர்ஷ ப்ரகர்ஷமும் வடிவிலே காணலாம் படி இருக்கிறபடி என்றுமாம்
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்-
பரம பக்தி உக்தரான அயர்வறும் அமரர்கள் யதா பலம் வருந்தி ஏத்தினால் போலே நானும் ஏத்தினேன் –

————————————————————————————-

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-

என்னாலும் ஸமஸ்த லோகங்களாலும் சர்வேஸ்வரன் தன்னாலும் புகழ்ந்து முடிக்க ஒண்ணாத ப்ரணித்வ குண விசிஷ்டனான
தன்னை ரஸ்யத்தையின் மிகுதியால் விட மாட்டாத நான் உஜ்ஜீவிக்கைக்காக ஏத்தினேன் என்கிறார் –

—————————————————————————————-

நிகமத்தில் ஈசுவரனுடைய உபய விபூதியும் இது திருவாய் மொழியையும் அப்யசித்தார் இட்ட வழக்காம் -என்கிறார் –

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-

உய்வு உபாயம் மற்று இன்மை-இத்யாதி –
பிரணயித்வம் பேசி அல்லது வேறு தரிக்கைக்கு உபாயம் இல்லாமையை அனுசந்தித்து நிரதிசய போக்யமான
ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடிகளில் சிவந்து இருக்கிற தாமரையை உடைய பழனத்தை உடைத்தான தென்னாட்டு
திரு நகரியை உடைய ஆழ்வாருடைய ஆயிரம் திருவாய் மொழியிலும் இப்படி எம்பெருமான் நிரவதிகமான
அபி நிவேசத்தோடே கலந்து பரிமாறின பரிமாற்றத்தில் ஒரு பொய்-இல்லை -மெய் -என்று சொல்லுகிற இது திருவாய் மொழி வல்லார்
வையம் மன்னி வீற்றிருந்து-வைஷ்ணவ ஸ்ரீ யோடே கூடி நெடும் காலம் பூமியிலே இருந்து

—————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: