திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-3–

தாம் ஆசைப்பட்ட படியே எல்லாம் பெற்றாராம் படி தம்மோடு சம்ச்லேஷித்து அருளின எம்பெருமானுக்கு
தம் பக்கல் உண்டான -பிரணயித்தவத்தை அனுசந்தித்து அத்யந்தம் ப்ரீதரான ஆழ்வார் அந்த ப்ரீதி பிரகர்க்ஷத்தாலே
அவனுடைய பிரணயித்தவ குணத்தை பேசி அருளுகிறார் –
இது தன்னை மூன்று படியாக நிர்வஹிப்பார்கள்-
எம்பார் -தேச கால விப்ரக்ருஷ்டங்களை பெற ஆசைப் பட்ட இவர்க்கு ஒரு குண ஆவிஷகாரத்தை பண்ண
-அத்தாலே கீழ் பிறந்த இழவு எல்லாம் மறந்து அந்த குணத்தை அனுபவிக்கிறார் என்பர்
திருமலை நம்பி -சர்வேஸ்வரன் முகத்தை பார்த்து -அபேக்ஷித்த படியே செய்யக் கடவோம் என்ன -பெற்றாராய்க் க்ருதார்த்தர் ஆகிறார் -என்பர்
பட்டர் -தேச கால விப்ரக்ருஷ்டங்களை ஆசைப்பட்ட இவர்க்கு கால த்ரயத்திலும் உபாதியைக் கழித்து வர்த்தமான காலம்
போலே ஒரு போகியாக்கிக் கொடுக்க -எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார் என்பர்
சர்வ சக்தி யாகையாலும் காலத்துக்கு நியாமகன் ஆகையால் செய்ய முடியாதது இல்லை இ றே
தேச கால விப்ரக்ருஷ்டங்களை ஆசைப்படுவார் ஒருவரை பெறுகையாலே இவர் சத்தையே தனக்கு எல்லாமாம் படி இருக்கிற
பிரணயித்தவ குணத்தை அனுபவித்து பிரித்தார் ஆகிறார் –
ஈஸ்வரனுடைய -பாலனாய் ஏழ் உலகு -இது திருவாய் மொழி –

————————————————————————————————————————

ஆஸ்ரித விரோதிகளை நிரசிக்கிற இடத்தில் வந்து முகம் காட்டி நான் உதவப் பெறாது இருக்க என்னுடைய ஹ்ருதயத்தையே
தனக்கு போக்யமாகக் கொள்வதே -என்கிறார் –
நப்பின்னை பிராட்டியையும் ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளையும் பிரணயிநி களாக உடையனாய் இருக்க
என் சத்தையே தனக்கு எல்லாமாகக் கொள்வதே -என்கிறார் என்றுமாம் –

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

-ஏற்றின் எருத்தம் இறுத்தாய்!
எருது அடர்க்கைக்கு முன்பு வந்தவர் கையில் வெற்றி கிடக்கில் செய்வது என் என்று விமுகையாய் இருந்தவள்
கிருஷ்ணன் வந்த வாறே ஸ்மிதம் பண்ணினாள் -அத்தைக்கு கண்டு தவாஸ்மி -என்றபடி
கோவை வாயாள் பொருட்டு –
அந்த ஸ்மிதத்துக்கு தோற்று தன்னைப் பேணாதே மேல் விழுந்தபடி
எருக்கம் -அவற்றின் பிடர்-அவற்றுக்கு அபிமான ஹேது அது விறே-அத்தை முறித்தாய் –
ஆண் பிள்ளைகள் கையில் வில்லை சூரர் வெறும் கையேடு சென்று வாங்கினால் போலே இருப்பது ஓன்று ஆயத்து அவற்றுக்கு அது –
அப்போது கேவல ருஷபங்கள் அன்று -அஸூரா வேசம் உண்டு என்னப் பெற்றிலேன்
மாயமானின் பின்னே பெருமாள் தொடருகிற போது இளைய பெருமாள் -கேவலம் மான் அன்று ராக்ஷஸ மாயை என்றால் போலே
மதிள்இலங்கைக்-கோவை வீயச் சிலை குனித்தாய்!
இவ்ஊரும் மதிளும் எனக்கு உண்டு -என்னும் அதனால் ஆயிற்று அதிக்ரமங்களை பண்ணித் திரிந்தது
அது தன்னை அழியச் செய்ய வருகிறவருடைய சங்கல்பத்தாலே யாயிற்று ரஷகம் ஆவது என்று அறிந்திலன் –
ரக்ஷகனை எதிரியாக கொண்டான் -மதிளை தனக்கு ரக்ஷகமாக நினைத்தான்
இது இ றே தான் தனக்கு பண்ணிக் கொள்ளும் ரக்ஷை -அதுக்கு நிர்வாஹகானான ராவணன் முடிய
சிலை குனித்தாய் –
ராக்ஷசர் மாய பிரயோகம் அல்லது அறியாதாப் போலே செவ்விப் பூசல் அல்லது அறியார் இவர்
நீர் தர்ம யுத்தத்தில் குசலராய் இருக்குமா போலே ராக்ஷசர் மாய பிரயோக குசலர்-என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் மாத்திரம் அறிவிக்கப் பெற்றிலேன்
குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
ஆகரத்தில் பிறந்த ஆபீ ஜாதியத்தை உடைத்தாய் -சர்வ லக்ஷண சம்பன்னம் ஆகையால்
ஒருவருக்கும் கணிசிக்க அரியதாய் இருக்கிற குவலயா பீடத்தின் உடைய கொம்பை அநாயாசேன முறித்தாய்
அப்போது நசமம் யுத்தமித்யா ஹூ -என்னப் பெற்றிலேன்
போதால் – பூவை வீயா நீர்தூவிப் வணங்கேனேலும்,
அவ்வவ காலங்களில் பூவை இடா நீரைத் தூவி என்னுதல்
பூவை விடாத நீர் -பூவோடு கூடின நீர் என்னுதல்
ஒரு அனுகூலன் திருவடிகளில் வணங்கினால் ஸ்ரமம் எல்லாம் தீரும்படி யாயிற்று இருப்பது
இப்படி அவ்வோ காலங்களிலே சிசிரோ பசாரம் பண்ணப் பெற்றிலேனே யாகிலும் –
நின்-பூவை வீயாம் மேனிக்குப்
பூவை ஒழியா மேனிக்கு -பூவை ஒழியச் செல்லாத மேனி என்னுதல்
பூவைவீ யுண்டு -பூவைப் பூ -அது தான் மேனி -காயாம்பூவின் தன்மை உடைத்தாகை-
புஷப ஹாஸ ஸூகுமாரமான திருமேனி
மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே
அவ்வடிவுக்கு பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே –
ஸூ கந்த மேதத் –
அப்படி சாந்தில் உள்மானம் புறமானம் அறியுமவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே –

—————————————————————————————————

விடாய்த்த என்னுடைய கரண கார்யமான ஸ்ம்ருதியாதிகளை பூர்ணனாவனுக்கு போக உபகரணங்கள் எல்லாமாய் விடுவதே என்கிறார் –
அசேதனமான கரணத்தை போக்யமாக விரும்பின படியை கண்டு அந்த ப்ரீதியாலே பின்னாட்டிப் பின்னையும் -பூசும் சாந்து என்நெஞ்சமே-என்கிறார் –

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-

பூசும் சாந்து என்நெஞ்சமே; -புனையும் கண்ணி எனதுடைய-வாசகம் செய் மாலையே
இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று
வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே
இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இ றே சாந்துக்கு பூக்கட்டி இ றே மனம் கொடுப்பது
; வான் பட்டாடையும் அஃதே;
ஓன்று ஒரு போக உபகாரணமாகை தவிர்ந்து -அவனுக்கு பும்ஸவதாவஹமான பரிவட்டமும் என் யுக்தி யாவதே
வான் பட்டாடையும்-பெரு விலையனான திருப் பரிவட்டம்
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
தேஜஸ் கரமான திரு ஆபரணமும் என்னுடைய அஞ்சலி யாவதே
ராஜ மஹேந்த்ரன் படி போலே இவருடைய அஞ்சலி அவனுக்கு உதகர்ஷ ஹே துவாய் இருக்கிற படி
இவருடைய அஞ்சலி தேஜஸ் கரமாய் இருக்கிறது ஒரு குறைவாளனுக்கோ என்னில்
ஈசன்,
சர்வேஸ்வரனுக்கு -ரக்ஷகன் என்னும் பேரேயாய் உடைமை நோவு பட விட்டிட்டு இருக்குமோ -என்னில்
ஞாலம் உண்டு உமிழ்ந்த
ஜகத்துக்கு சர்வ பிரகார ரக்ஷகன்
எந்தை
அந்த ரஷானத்தாலே என்னை எழுதிக் கொண்டவன்
ஏக மூர்த்திக்கே.–
அத்விதீயமான திரு மேனியை உடையவனுக்கு
சர்வ கந்த என்கிற விக்கிரஹத்தை உடையவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே என்கிறார் –

—————————————————————————————————

தம்மோட்டை ஏவம் வித ப்ரணயத்தால் அவன் க்ருதார்த்தன் ஆனபடி சொல்லுகிறார் –

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3-

ஏக மூர்த்தி-
தம்மை இவ்வளவாக்க அவன் பண்ணின யத்னம் சொல்லுகிறது –
சதேவ என்று இவை இல்லாத அன்றும் தான் உளனாய்-தன உண்மையாலே இவற்றினுடைய ஸத்பாவத்தையும்
நிர்வஹித்துக் கொண்டு நிற்கிற நிலை ஸ்ருஷ்டிக்கு முன்புத்தை ஸ்வ அசாதாரண விக்ரஹத்தை சொல்லிற்று ஆகவுமாம்
இருமூர்த்தி –
ஸ்ருஷ்ட்டி உன்முகனாய் ப்ரக்ருதி மஹான்களை சரீரமாகக் கொண்டு நிற்கிற நிலை –
மூன்று மூர்த்தி பல மூர்த்தி-ஆகி ஐந்து பூதமாய்-
த்ரிவித அஹங்காரங்களையும் சாத்விக அஹங்கார கார்யமான -ஏகா தச இந்த்ரியங்களையும்-தாமஸ அஹங்கார கார்யமான
ப்ருதிவ்யாதி பூதங்களையும் தனக்கு சரீரமாக உடையவன்
இரண்டு சுடராய்
ஸூர்ய சந்த்ர மசவ் தாதா யதா பூர்வ மகல் பயத்-என்கிற படியே சந்த்ர ஸூ ர்யர்கள் கார்ய வர்க்கத்துக்கு உப லக்ஷணம்
அருவாகி
தத்த்ருஷ்ட்வா ததேவ அனுப்பிராவிசத்-என்கிறபடியே இவற்றினுடைய தாரண அர்த்தமாக அந்தர்யாமியாய் –
அசித்தை சொல்லிற்றாகில் –
அரு என்று ஆத்மாவைச் சொல்லிற்று ஆனாலோ என்னில் -அநேக ஜீவேன ஆத்மா நா அநு ப்ரவிஸ்ய -என்று ஜீவ
அந்தர்யாமிக்கு அநு பிரவேசம் ஆகையால் அதுவும் சொல்லிற்று ஆயிற்று –
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற
ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாதிகளுக்கு ஸமாச்ரயணீயன் ஆகைக்காக திருப் பாற் கடலில் நடுவே திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளினவனே
நாராயணனே!
இப்படி சர்வ காலமும் ஓக்க அனுக்ரஹ சீலனாகைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்லுகிறது
உன் ஆக முற்றும் அகத்து அடக்கி –
இதுக்கு பிரயோஜனம் உன் திருமேனிக்கு வேண்டும் போக உபகரணம் எல்லாம் என்னுள்ளே யாம் படி பண்ணுகை
அத்தைச் செய்து சாந்து பூ மாலை பரிவட்டம் ஆபரணம் இவை எல்லாம் என்னுள்ளே யாம்படி பண்ணி
ஆவி அல்லல் மாய்த்ததே
உன் திரு உள்ளம் நிர்த் துக்கம் யாயிற்றே -ஒரு படி கரை மரம் சேர்க்க வல்லேன் என்று இருந்த உன்
திரு உள்ளத்தில் பரகு பரகு கெட்டு க்ருதார்த்தன் ஆனாயே -என்கிறார்
என்னுடைய நெஞ்சில் துக்கம் ஒருபடி போயிற்றே என்றுமாம்
அவன் பிரணயித்தவம் சொல்லுகிற பிரகரணம் ஆகையால் அவனுடைய துக்க நிவ்ருத்தியே பொருளாக அமையும் –
இத்தை பர வ்யூஹ விபவங்களை சொல்லிற்றாக நிர்வஹிப்பாரும் உண்டு

—————————————————————————————————

பூத நாதிகளுடைய நிரசன சமயத்தில் சிரமம் தீர சிசிர உபசாரம் பண்ணப் பெற்றிலேன் யாகிலும்
சிசிர உபசாரத்தால் அல்லாது செல்லாத ஸூ குமாரமான திரு மேனிக்கு சிசிர உபசாரம் என் பிராணனாய் விடுவதே -என்கிறார் –

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4-

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த
ஜகத் உப சம்ஹாரம் பண்ண வாயிற்று கோலித்து வந்தது -பிரகாரியை நலிந்தால் பிரகார வஸ்துவுக்கு ஸ்திதிதி உண்டோ
-உயிர் நிலையில் நலிந்தால் அவயவம் தோறும் நலிய வேண்டா இ றே
அஸ்மான் ஹந்தும் ந சம்சய –என்றார் இ றே மஹா ராஜர்
‘வாய்முலை தந்த
ஆழ்வார் தம் திருப் பாவலத்திலே முலை தந்தால் போலே இருக்கையாலே தந்த என்கிறார்
தருகையும் கொடுக்கையும் பர்யாயம் -கொடுத்த என்றுமாம்
மாயப் பேய்
ஜென்மத்தால் வந்த அறிவு கேட்டுக்கும் மேலாய் வஞ்சனை பரையாய் வந்தாள்
அதாவது பேயாய்த் தோற்றாதே தாயாய்த் தோற்றின படி
உயிர்-மாய்த்த
ஜகத் உப சம்ஹாரத்தை கோலி வர அத்தை ஒரு வியக்தியிலே பர்யவசிப்பித்தான்
இவன் பிள்ளையாய் முலை உண்டான் -ஆ சூரா வர்க்கத்துக்கு நஞ்சாமவனாகிற வாஸ்து ஸ்வ பாவத்தால் முடிந்தாள் அத்தனை
ஆய மாயனே!
ஆச்சர்ய சக்தி உக்தனான ஆயனே-
வாமனனே!
பூதனை ஸ்நந்ய பானத்துக்கு பரத் யவ்ஷதமாக தன் முலையில் அம்ருதத்தை கொடுக்கைக்கு ஒரு தாய் உண்டாயிற்று -அதுவும் இல்லையே இவ்வவதாரத்துக்கு
மாதா பிதாக்கள் தபஸிலே அந்நிய பரர்-பிறந்த அன்றே அசுரர்கள் இருந்த இடத்தே வந்து கிட்டினான்-அவ்வஸ்தையிலும் உதவப் பெற்றிலேன்
மாதவா!
இருவரும் சேர இருந்தால் -இச் சேர்த்திக்கு என் வருகிறதோ என்று மங்களா சாசனம் பண்ண வேண்டியதாயிற்று இருப்பது
வடிவாய் நின் வள மார்பினில் நின்ற மங்கையும் பல்லாண்டு -என்னக் கடவது இ றே
பூத்தண் மாலை கொண்டு- உன்னைப் போதால் வணங்கேனேலும்
குளிந்த பூ மாலையைக் கொண்டு -பூதனை வந்து கிட்டின போது ஆதல் -அசுரர்கள் இடத்தே சென்ற போது ஆதல்
-பிராட்டியும் தானும் இருந்த போது ஆதல் -அவ்வவ காலங்களில் வணங்கேனேலும்
திருவடிகளில் விழுந்து சிசிர உபசாரம் பண்ணப் பெற்றிலேன் யாகிலும்
,நின்-பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.
குளிர்ந்த பூ மாலையோடு நித்ய சித்தமாய்ச் செல்லுகிற உன்னுடைய திரு அபிஷேகத்துக்கு ஆதரித்து சாத்தும் மாலை என் பிராணன் ஆவதே
பிராணன் -சத்தை –

—————————————————————————————————

தம்முடைய ஸ்நேஹாதிகள் ஆனவை ஒரோ ஒன்றே அவனுக்கு ஆபரணாதி சர்வமும் ஆவதே என்கிறார் –

கண்ணி எனது உயிர்காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல்கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5-

கண்ணி எனது உயிர்காதல்
நான் என்னது என்று இருக்கிறத்தை கிடீர் அவன் தனக்கு மாலையாகக் கொள்ளுகிறது
மார்வத்து மாலை என்கிறவளை தனக்கு மாலையாகக் கொள்ளுகை பிராப்தம் -அது ஒழிய என் சத்தையைக் கிடீர் தனக்கு மாலையாகக் கொள்ளுகிறது
காதல் கனகச் சோதி முடி முதலா-எண்ணில் பல்கலன்களும்;
ஸ் ப்ருஹணீயமாய்-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகம் முதலாக எண்ணிறந்த பல வகைப் பட்ட திரு ஆபரணங்களும் என்னுடைய காதல்
இவர் ஸ் நே ஹத்துக்கு விஷயமாகப் பெற்ற இத்தையே சர்வ ஆபரண பூஷண பூதனாக அவன் நினைத்து இருக்கை
ஏலும் ஆடை யும் அஃதே;
திரு அரைக்கு தகுதியாக புருஷோத்தம லக்ஷணமான திருப் பீதாம்பரமும் என்னுடைய காதல் –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து என்று இவருடைய காதல் சத்தா ப்ரயுக்தமாய் இ றே இருப்பது
திருப் பரிவட்டம் வெளுப்பித்த ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான் வார்த்தை
மஹா ராஜதம் வாச -பொய்யில் பாடல் ஆகையால் இது கூடுமோ என்ன வேண்டா இ றே
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கிட்டி இருந்ததே குடியாக ஏத்தும் தன்னுடைய கீர்த்தியும் -காதலே
அவனுடைய புகழ் என்றால் ஒருவர் அறிந்து ஒருவர் அறியாதே இருக்குமது அன்று இ றே
ஆகையால் எல்லாரும் ஓக்க இருந்ததுவே குடியாக ஏத்துகை
இவர் தன்னை ஸ்தோத்ரம் பண்ண -அது எல்லாரும் தன்னை ஸ்தோத்ரம் பண்ணினார்களாக நினைத்து இருக்கிறான் –
காதலுக்கு கிருஷி பண்ணின படி சொல்கிறது
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.-
கையும் திரு ஆழியுமான அழகைக் காட்டி எனக்கு அநந்ய பரத்வ மஹா உபகாரத்தை பண்ணி தொழுது எழும் படி பண்ணின ஸ்வாமியான கிருஷ்ணனுக்கு
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -என்ன கடவது இ றே
கால சக்கரம்
காலத்தை நடத்துகிற திரு வாழி
கால வஸ்யத்தையை தவிர்க்கும் திரு ஆழி என்னுதல்
நார்ச்ச யிஷ்யந்தி-என்கிற காலத்திலும் திருக் கையோட்டை சேர்த்தியாலே ருசி ஜனகமான திரு ஆழி –

————————————————————————————————

இப்படி பிரணாயியாய் இருந்துள்ள நீ என்னைக் கிட்டாது ஒழிந்தாயே யாகிலும் உன் சத்தையே எனக்கு தாரகாதிகள் என்கிறார் –
நான் உதவப் பெற்றிலேன் யாகிலும் என் சத்தை உனக்கு தாராகாதிகள் ஆனால் போலே நீ வாராய் யாகிலும்
உன் சத்தை எனக்கு தாரகாதிகள் என்கிறார் –
அவன் பிரணயித்தவம் சொல்லுகிறதின் நடுவே தம் பிரணயித்தவம் சொல்லுவான் என் என்னில் அவனுடைய
பிரணயித்தவ அதிசயம் தம்மையும் பிரணயியாய் யாக்கிற்று என்கைக்காக –

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
பிரதி கூலருக்கு மிருத்யுவான திரு வாழி ஆழ்வானோடு திரு நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் -அவற்றையும் ஆபரணம் ஆக்கும் திருக் கையிலே ஏந்தினவனே
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு வெளுப்பு போலே யாயிற்று திரு வாழிக்கு பிரதி கூல நிரஸனம் நிரூபகமாய் இருக்கும் படி
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த
பிரளய ஆபத்தில் வரையாதே திரு வயிற்றிலே ரக்ஷித்து ஸ்ருஷ்ட்டி காலத்திலே வெளி நாடு காண உமிழ்ந்த
நாராயணனே!’
வரையாதே ரஷிக்கைக்கும் பிரதியுபகார நிரபேஷமாக ரஷிக்கைக்கும் அடியான பிராப்தி இருந்தபடி சொல்லுகிறது
என்றுஎன்று,
கையும் ஆழ்வார்களுமான அழகையும் கால அனுகூலமான ஆபத் சகத்வத்தையும் இவை இல்லாத போதும்
விட ஒண்ணாத பிராப்தியையும் சொல்லி வீப்சையால் -தனித்த தனியே ஆழம் கால் பட்டு
ஓல மிட்டு நான் அழைத்தால் –
நான் கூப்பிட்டு அழைத்தக்கால் -பல ஹீனனான நான் நீ இருந்த இருப்பை நிலை குலைந்து வந்து
முகம் காட்டும் படி காண வாராய் என்று அழைத்தக்கால்-
ஒன்றும் வாராயாகிலும்,-
குசஸ்த்தலே நிலசதி சச ப்ராத ரிஹைஷ்யதி-என்று புறப்பட்டான் அங்கே -இங்கே விட்டான் என்று வருகைக்கு பிரசங்கம் ஒன்றும் இல்லையே யாகிலும்
நாம க்ராஹஞ்ச நாதஸ்ய சீதல காஹள த்வனி -என்ன கடவது இ றே
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.
பிராப்தமுமாய் போக்யமுமான திருவடிகள் –
சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர்பவிஷ்யதி -என்னும் என் சென்னிக்கு போக்யமுமாம் –
தாரகாதிகளுக்கும் உப லக்ஷணம்
குரை -பரப்பு -போக்யதா பிரகர்ஷத்தை சொல்லுதல் -ஆபரண த்வனியை சொல்லுதல்
வாராய் யாகிலும் கோலமாம் என்பான் என் என்னில்
-வாராது ஒழி கை கூடாது -கூடிலும் என் நினைவு இது என்கிறார் -என்னை இப்படி ஆக்கினாய் என்று கருத்து –

———————————————————————————————————-

கீழ் சொன்ன ப்ரேமமும் தத் அநு கூல ப்ரவ்ருத்திகளும் இன்றிக்கே இருக்கிலும் என் சத்தையே உனக்கு ஜீவன ஹேது வாவதே -என்கிறார் –

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7-

குரை கழல்கள் –
மிக்க போக்யதை உடைய -என்னுதல் -ஆபரண த்வனி என்னுதல் –
நீட்டி மண் கொண்ட-
மண் முழுதும் அகப்படுத்து என்கிறபடியே பூமியை அடங்க உள்ளே யாம் படி
கோல வாமனா!
இந்திரனுக்கு ராஜ்ஜியம் கூறு பட்டால் போலே தமக்கு அழகு கூறு பட்ட படி
கீழ் ப்ராப்தியை சொல்லிற்றாய் அஞ்சலி மாத்ர சாம்யம் என்கிறது
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற
குரை கழலிலே கை கூப்புவார்கள் உன்னைக் கூட என்னுதல்
உன்னைக் கை கூப்புவார் குரை கழலைக் கூட நின்ற என்னுதல்
திருவடிகள் அஞ்சலிக்கு விஷயமாய் அஞ்சலி சாத்தியமுமாய் இ றே இருப்பது
மாயனே!
அஞ்சலி மாத்ர சாத்யனான ஆச்சர்யம் -ஸூ ரி போக்யமான விஷயம் அஞ்சலி மாத்ர சாத்யமாவது ஆச்சர்யம் இ றே
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
இப்படி ஸூலபனாய் அஞ்சலி மாத்ர சாத்யனானால் புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு அடிமை செய்கையை இ றே பிராப்தம்
அது செய்திலனே யாகிலும் –
பரிமளத்தை உடைத்தான் நீரும் பரிமளத்தை உடைத்தான் பூவும் க்ருத்ஸநாம் ஹிம சீ தேன வாரிணா
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–
உரை கொள்ளுகையாவது காண ஆசைப்பட்டு அது அது என்று வாய் புலற்றும் படியாய் இருக்கை
ராமோ ராமோ ராம இதி பிரஜா நாம பவன் கதா –ராம பூதம் ஜகதாபூத் ராமே ராஜ்ஜியம் பிரசாஸதி –
பேச்சுக்கு அவிஷயம் என்றுமாம்
மாற்றும் உரையும் அற்ற திருமேனி என்னவுமாம் -சுட்டுரைத்த நன் பொன் என்ன கடவது இ றே
என்னதாவி மேலதே –
உன்னுடைய திரு மேனி என்னுடைய சத்தியின் மேலது
ஸூ ரி போக்யமான வடிவுக்கு தாரகாதிகள் என் ஆத்ம சத்தை யாவதே –

——————————————————————————————————————-

ஒருவரை ஒழிய ஒருவருக்கு செல்லாத படி பிறந்த கலவி பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார் –

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8-

என்னது ஆவி மேலையாய்!- ஏர் கொள் ஏழ் உலகமும்-
என்னைப் பெறுகைக்கு உண்டான அபி நிவேசத்தால் ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் ஒரூரை வளையுமா போலே சர்வகதன் ஆனான் -என்னுதல்
இவரைப் பெற்ற பிரியத்தால் வியாப்திலேயும் ஒரு புஷ்கல்யம் உண்டாயிற்று என்னுதல்
இவரைப் பெறுகையாலே விபூதி த்வயமும் புதுக் கணித்தது
துன்னி முற்றும் ஆகிநின்ற
எங்கும் ஓக்க நெருங்கி வியாபித்து நின்ற நிலை -ஜாதி வியக்தி தோறும் பரி ஸமாப்யா வர்த்திக்குமா போலே –
சோதி ஞான மூர்த்தியாய்!-
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
விசத தமமான-ஞான ஸ்வரூபன் ஆனவனே -என்னுடைய ஆத்மா நீ இட்ட வழக்காய்-உன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபம் நான் இட்ட வழக்காம் படி யானோம்
ஸ்வ தந்த்ரன் இட்ட வழக்காவது என் என்னில்-கூடில் கூடுவது அது -இது விசார விஷயம் அன்று -என்று அருளிச் செய்தார் ஆளவந்தார்
பாபம் மேலிட்ட போது அல்லேன் என்னும் இவன் -அவன் தன்னை சிலருக்கு ஆக்குவோம் என்றால் நிவாரகர் இல்லை -நிலை நிற்பது அதுவே –
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?
இப்படியே நின்றாய் -இது என்னால் பாசுரம் இட்டுச் சொல்லாயோ இருக்கிறது –

————————————————————————————————————–

அனுபூதமானது பேசத் தட்டு என் என்ன -உன் பிரணயித்வ ப்ரகர்ஷம் என்னுடைய பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார் –

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்-கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
எனக்கு ஸ்ரத்தை உண்டு என்னா-பிரணயித்வ குணத்துக்கு என்னால் பாசுரம் இட்டுச் சொல்லப் போமோ –
வல்ல கொற்றம் பேசினாலோ என்னில் -உன்னுடைய முடிவு இல்லாத பிரணயித்வத்தால் வந்த கீர்த்தியின் வெள்ளத்தின் கரையில்
என்று செல்லக் கட வேன்-ஒரு காலத்திலும் முடியாதே –
ஆனால் நீர் பேச உபக்ரமிப்பான் என் என்ன -ப்ரேமாந்தனாய் பிரமித்தேன்
பிரேம ஆலம்பனம் ஏது என்ன -நித்ய ஸூ ரிகள் ஏத்த காண்கையாலே பேசினேன் -நித்ய ஸூ ரிகளோடே இவரோடு வாசி அற்று இ றே-விஷயம் இருப்பது
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
நிரவதிகமான பிரணயித்வ குண ஸத்பாவத்தில் கண் அழிவு இல்லாதா போலே என்னோட்டை சம்ச்லேஷத்திலும் புரை இன்றியே
அத்தாலே வந்த புகர் வடிவிலே தோற்ற இருக்கிறவனே
சர்வ ஸ்மாத் பரன் என்னுமதில் கண் அழிவு இல்லாதாப் போலே என்னோடே சம்ச்லேஷித்து உண்டான புகரிலும் கண் அழிவு அற்று இருக்கிறவனே என்றுமாம்
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–
பரமபக்தி உக்தரான நித்ய ஸூ ரிகள் கடல் கிளர்ந்தால் போலே இறைத்து ஏத்தக் காண்கையாலே நானும் ஏத்தினேன்
இத்தனை போக்கி நான் சக்தனாய் பேசினேனோ என்கிறார்

—————————————————————————————————————

ஸ்வ பர விபாகம் இன்றிக்கே ஈஸ்வர ஈஸித்வய விபாகம் இன்றிக்கே ஏக கண்டராய் ஏத்தினாலும்
ஏத்தப் போகாத விஷயத்தை என்னுடைய செல்லாமையாலே ஏத்தினேன் என்கிறார் –

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்-தானுமேத்திலும்-
மயர்வற மதிநலம் அருள பெற்ற நானும் -அந்நிய பரராய் அஞ்ஞரானவர்களோடு -அநந்ய பரராய் ஞானாதிகர்களோடு -வாசி அறவும்
ஸ்வ வ்யதிரிக்தருடைய ஞானத்துக்கு ஊற்றாய் ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் தொடங்கின கார்யம் தலைக் கட்ட வல்ல சர்வ சக்தனான தானும் ஏத்தினாலும்
தன்னை யேத்த வேத்த –
ஏத்தின அம்சம் அளவு பட்டு ஏத்தாத அம்சம் விஞ்சும் படி இருக்கும்
வேத்த -வெங்கு எய்தும்
எங்கே கிட்டும் -இப்படி அபரிச்சின்னம் என்று அறிந்த நீர் இவ்விஷயத்தில் இழிவான் என் என்னில்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப-யானும் எம்பிரானையே ஏத்தினேன்
சர்வ ரஸ-என்கிற ரஸ்யத்தையாலும் தன பிரணயித்வ குணத்தை அபகரித்த உபகார ஸ்ம்ருதியாலும் இழிந்தேன்
திருப்பாவாடை ரசித்தது என்னா தன் வயிறு அறியாதே பரிச்சேதிக்க இழிவார் உண்டோ -என்னில் கலியர் மேல் விழும் போது விவேகித்தோ இழிவது
யானுய்வானே –
தேச கால விப்ரக்ருஷ்டமான அவனுடைய படிகளை காண வேணும் என்று ஆசைப்பட்ட நான் உஜ்ஜீவைக்காக -பரிச்சேதிக்கைக்காக அன்று –

————————————————————————————————————–

நிகமத்தில் ஈசுவரனுடைய உபய விபூதியும் இது திருவாய் மொழியையும் அப்யசித்தார் இட்ட வழக்காம் -என்கிறார் –

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
அவன் பிரணயித்வ குணத்தை பேசா விடில் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தெளிந்து –
வேறு இல்லாமை -அவதரித்து தன் பிரணயித்வ குணத்தை ஆவிஷ் கரித்த கிருஷ்ணன் திருவடிகளில்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்-பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்-
ஆழ்வார் பிரணயித்வ குண அனுசந்தானத்தாலே தரித்தவாறே ஊரும் தளிரும் முறியுமாயிற்று -அகாலப்பலிநோ வ்ருஷா
சிவந்த தாமரையை உடைய பழனங்களை உடைத்தாய் தெற்குத் திக்குக்கு ஸ்லாக்யமான திரு நகரியை உடைய ஆழ்வார்
ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்கிறபடியே திருவாய் மொழி எல்லாவற்றுக்கும் ஆதல்
அவாப்த ஸமஸ்த காமன் ஒரு சம்சாரியினுடைய சத்தாதிகளே தனக்கு போக உபகரணமாக இருந்தான் -என்கிற
பிரணயித்வத்தில் ஒரு பொய் இன்றிக்கே இருக்கிற பத்து என்னுதல் –
வையம் மன்னி வீற்றிருந்து –
பூமியிலே எம்பெருமானார் எழுந்து அருளி இருந்த காலம் குறைவற்று ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே இருந்தது
-நம்மைப் போலே வாய் புகு சோற்றை பறி கூடாதே என்று சீயர் உரு தோறும் அருளிச் செய்வார்
விண்ணும் ஆள்வர் மண்ணூடே.-
இங்கே இருக்கச் செய்தே பரமபதம் தங்கள் சிறு முறிப் படியே செல்லும்படி ஆள்வர்கள்-
அங்கனே சென்றால் ஆண்மின்கள் வானகம் என்னும் அளவன்று

—————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: