Archive for August, 2016

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-7-

August 25, 2016

பகவத் தாஸ்யம் வருந்திக் கற்க வேண்டும்படியான அவர்களோட்டை பரிமாற்றத்தால் உறாவின ஆழ்வார்
அவ் உறாவுதல் தீர எம்பெருமானுக்கு அடிமை செய்ய என்றால் அடைத்தேற்றல் அன்றிக்கே அடிமையே தாரகமாய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஜென்ம வ்ருத்த ஸ்வ பாவங்களால் குறைய நின்றார்களே யாகிலும்
அவர்கள் எனக்கு நாதர் என்றும் நான் அவர்களுக்கு அடிமை என்றும் அவர்களோட்டை சம்பந்தத்தை அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் –
எம்மா வீடு -ப்ராப்யத்தின் உடைய பிரதம அவதி -இத் திரு வாய்மொழி சரம அவதி –

———————————————————————————————————–

எம்பெருமானுடைய அழகிலும் குணங்களிலும் தோற்று அடிமை செய்யுமவர்கள் யாரேனும் ஆகிலும்
எனக்கு ஸ்வாமிகள் என்று தச கார்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்-பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
அத்யந்த விலக்ஷணமாய் செறிந்து இருந்துள்ள தேஜஸ்ஸையே திரு உடம்பாக உடையனாய் –
இவ்வடிவு அழகிலும் அகப்படாதாரையும் அகப்படுத்திக் கொள்ள வற்றான அழகிய திருக் கண்களையும்
உடையனும் ஆகையால் பயில இனியனுமாய் ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக
திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுவதும் செய்து குண வத்தையால் எல்லார்க்கும் மேலாய் உள்ளவனை
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்-
பிரயோஜ நாந்தரங்களைக் கொண்டு அகலாதே நிரதிசய போக்யனான தன்னையே செறிகை யாகிற மஹா சம்பத்தை உடையராய்
ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையவரே யாகிலும் அவர் கிடீர் வைஷ்ணவத்வ விரோதியான அபிமான ஹேதுவான
ஜென்ம வ்ருத்தங்களில் குறைய நின்றாரே யாகிலும் உத்தேசியர் என்று கருத்து
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே-
ஒன்றின் மேல் ஒன்றாக நிரந்தரமாக வருகிற ஜென்மங்களின் இடம் தோறும் என்னை அடிமை கொள்ளக் கடவ ஸ்வாமிகள் –

————————————————————————————————————

எம்பெருமானுடைய திவ்ய அவயவ ஸுந்தர்ய வசீக்ருத்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள் -என்கிறார் –

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-

ஆளக் கடவ ஸ்வாமியான கிருஷ்ணனை -கையும் திரு ஆழியுமான அழகைக் காட்டி அநு கூலரை வாழ்விக்கும் ஸ்வ பாவனாய்
கல்பகத் தரு பணைத்தால் போலே விலக்ஷணமான நான்கு திருத் தோள்களையும் உடையனாய்
பழிப்பற்ற நீல மணி போலே குளிர்ந்து இருக்கும் நிறத்தை உடையனாய் அவ் வழகாலே என்னை அடிமை கொண்டவனை
தன்னை தொழ வென்றால் தடுத்துக் கொடுக்கக் கடவதான அங்கங்களோடு கூடப் பணியுமவர் கண்டீர்
பிறந்த இடம் தோறும் அதிலே வைத்துக் கொண்டு நாடோறும் என்னை அடிமை கொள்ள கடவ நாதர் –

—————————————————————————————————————-

திருத் துழாயாலே அலங்க்ருதனான எம்பெருமானுடைய அழகிலே ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்-போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்-
இருந்ததே குடியாக எல்லார்க்கும் நாதனாய் விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே எல்லார்க்கும் ஆகர்ஷகமான திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதன் ஆவதும் செய்து ஒளியை உடைத்தாய் அறப் பெருத்து இருக்கிற திரு வாழி யின் அழகைக் காட்டி என்னை அடிமை கொண்ட உபகாரகனே
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்-ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே-
அபிமானத்தை தவிர்ந்து திருவடிகளில் பணியும் மஹாத்மாக்களை பணியுமவர் கிடீர்
-பிறந்தான் -என்ற சொல் மாத்திரம் அமையும் படியான பிறப்பிடை தோறும் என்னை அடிமை கொள்ளக் கடவர்
ஓதும் பிறப்பு-சாஸ்திரங்களில் நிஷேத் யதயா ஓதுகின்ற பிறப்பு என்றுமாம் –

——————————————————————————————————————

திரு அணிகலங்களின் அழகிலே ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை புக்கு இருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-

திரு வரையிலே பூத்தால் போலே தகுதியான திருப் பரிவட்டம் திருக் கழுத்திலே சாத்துவன-திருவரையில் சாத்தும் கோவை
-திரு யஜ்ஜோபவீதம் திரு அபிஷேகம் முதலான மற்றும் அநேகம் திரு ஆபரணங்களை நித்தியமாக உடையனாய்
ஸ்ரீ மானான நாராயணனுடைய அடியார் அடியார் கிடீர் எங்களுக்கு நிரந்தரமான ஜென்மம் தோறும் ஸ்வாமிகள் –
புடையார் கை -தான் கிடந்த பார்ஸ்வம் தன் ஒளியால் பூர்ணமாகை

——————————————————————————————————————

பிரயோஜ நான்தர பரருடைய அபேக்ஷிதத்தை கொடுக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானுடைய தன்மையை அனுசந்தித்து கலங்கி
அவற்றை சொல்லுமவர்களுடைய குணத்தை பிதற்றுமவர்கள் இஹ லோக பர லோகங்களில் நம்மை ரக்ஷிக்கும் ஸ்வாமிகள் என்கிறார் –

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-

எம்பெருமானுக்கு அடிமை என்று இசைகையாலே என்றும் உளரான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய்
இந்த்ராதி தேவர்களுக்கு தாரித்ர்யம் நீங்கும் படி நிரதிசய போக்யமான அம்ருதத்தை புஜிப்பித்த பரம பந்துவை
இம் மஹா உபகாரத்திலே ஈடுபட்டு அக்ரமமாக பேசுபவர்கள் –

——————————————————————————————————————–

கீழ்ச சொன்ன ஸுந்தர்யாதிகளை எல்லாம் திரள நெஞ்சிலே அனுபவிக்குமவர்கள் எனக்கு சர்வகாலமும் ரக்ஷகர் -என்கிறார் –

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6-

அளிக்கும் பரமனைக் கண்ணனை-
ரக்ஷண ஸ்வ பாவத்தில் தனக்கு மேற்பட்டார் இல்லாத கிருஷ்ணனை
ஆழிப் பிரான் தன்னைத்-இத்யாதி –
கையும் திரு ஆழியுமான அழகை காட்டி சேதனரை உஜ்ஜீவிப்பதும் செய்து திரு மேனியின் ஸ் பர்சத்தாலே மதுஸ் யந்திகளான மாலைகளை உடையனாய்
பழிப்பற்ற நீல ரத்னம் போலே சிரமஹரமான திரு நிறத்தை உடையானுமாய்
அத்தாலே என்னை அடிமை கொள்வதும் செய்து வி லக்ஷணமான அழகை உடையவனை நெஞ்சிலே அனுபவிக்குமவர்கள் கிடீர்
சலிப்பின்றி யாண்டு-
நபித்ர்ய மனுவர்த்தந்தே-என்னும் படியாலே ஜெகஜ் ஜனனியான பெரிய பிராட்டியார் சாயல் ஆகையால் குற்றம் கண்டாலும் என்னை விடாத படியாக பரிக்ரஹித்து –

————————————————————————————————————————–

ஆஸ்ரித விஷயத்தில் அவன் பண்ணும் மஹா உபகாரகங்களை அனுசந்தித்து அப்படிகளை பிதற்ற வல்லாரை
பிதற்றுமவர்கள் கிடீர் எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகள் என்கிறார் –

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

சன்ம சன்மாந்தரம்-இத்யாதி
ஜென்மங்கள் தோறும் வந்து ரக்ஷித்து ஆஸ்ரிதரைக் கொண்டு போய் பரி பூர்ண ஞானராக்கி தன் திருவடிக் கீழே
நிரந்தர கைங்கர்யம் கொள்ளும் பரம பந்துவை –
தொன்மை பிதற்ற வல்லாரைப்-இத்யாதி
நை சர்க்கிகமான குணங்களில் ஈடுபட்டு பேசுமவர்களை பிதற்றுமவர் கிடீர் பாகவத சேஷத்வ சம்பந்தத்தை
நமக்கு தந்து அத்தை என்றும் நடத்தக் கடவ முதலிகள் –

—————————————————————————————————————————

அவனுடைய சர்வ சம்பதுக்கும் நிதானமான ஸ்ரீயபதித்தவத்தை அனுசந்தித்து இருக்குமவர்கள்
எனக்கு பிறந்த பிறவிகள் எல்லாம் ச சந்தானமாக வந்த்யர் என்கிறார் –

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-

நம்பனை ஞாலம் படைத்தவனைத்-இத்யாதி
ஏதேனும் திசையிலும் ஆத்மாவுக்கு தஞ்சமாக நம்பப்படுவனுமாய் ஜகத்தை எல்லாம் உண்டாக்குவதும் செய்து
இந்நீர்மைக்கு அடியான ஸ்ரீ யபதியுமாய்-மேலான லோகங்களில் எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளுக்கும் உணர முடியாது இருக்கிறவனை –
ஞாலம் படைத்தவனை என்றது கரண களேபரங்களை கொடுத்து ஸ்ருஷ்டிக்கையாலே தஞ்சம் என்னும் இடத்துக்கு உதாஹரணம் –
கும்பி நரகர்கள் -இத்யாதி –
கும்பீ பாகமான நரகத்தை அனுபவியா நின்றே ஏத்தினாரே யாகிலும் அவர்கள் கிடீர்
கும்பி நரகர்கள் என்றது -ஏதேனும் துர்க்கதரே யாகிலும் அவ்விருப்பிலே நமக்கு ப்ராப்யர் என்று கருத்து –

—————————————————————————————————————————–

கையும் திரு வாழி யுமான அழகைக் கண்டு அடிமை புக்கவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகள் -என்கிறார் –

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

குலந்தாங்கு சாதிகள்-இத்யாதி
சந்தானங்களைத் தரிக்கக் கடவதான ப்ராஹ்மணாதி ஜாதிகள் நாளிலும் கீழ்ப் பட்டு ஒரு நீர்மையும் இன்றிக்கே
ப்ராஹ்மணர்க்கு சண்டாளர் நிக்ருஷ்டர் ஆனால் போலே சண்டாளர்க்கும் கூட நிக்ருஷ்டர் ஆனாலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்-இத்யாதி –
சிரமஹரமான திரு நிறத்தை உடையனாய் அதுக்கு மேலே வலவருகே தரியா நின்றுள்ள திரு வாழி யை உடையனாய்
அவ் வழகாலே எல்லாரையும் அடிமை கொண்டவனுக்கு அடிமையே பிரயோஜனம் என்று இருக்குமவர்களுக்கு அசாதாரணமான அடியார் எனக்கு ஸ்வாமிகள் –

—————————————————————————————————————————

ஐஸ்வர்யார்த்திகள் ஐஸ்வர்யத்தில் இனி இல்லை என்ன மேற்பட்ட நிலத்தை ஆசைப்படுமா போலே வட தள சாயியினுடைய ஆச்சர்யமான
படிகளில் ப்ரவணராய் இருந்தவர்களுடைய தாஸ்யத்தை தொடங்கி-தாஸ்யத்தின் உடைய பர்யவஸனா பூமியை ஆசைப்படுகிறார் –

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-

திருவடிகளுக்கு அளவான ஜகத்தை திரு வயிற்றில் வைத்துக் கொண்டு அதுக்கு ஈடாக ஆலிலையில் இடம் வலம் கொள்ளும் ஸ்வ பாவனாய்
ஒப்பும் ஒன்றும் இன்றிக்கே இருக்க தன்னுடைய பிள்ளைத் தனத்தால் என்னை அடிமை கொண்டு என்னை உஜ்ஜீவிப்பித்தவனுக்கு –

———————————————————————————————————————-

நிகமத்திலே பாகவத சேஷத்வ ப்ரதிபாதிதமான இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள்
இப் புருஷார்த்தத்துக்கு விரோதியான சம்சாரத்தை கடந்தே விடுவார் -என்கிறார் –

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-8-11-

அடி ஓங்கு நூற்றுவர் வீய-இத்யாதி –
ராஜ்யத்தில் வேர் விழுந்த துர்யோதனாதிகள் நூற்றுவரும் முடியும் படி பாண்டவர்களுக்கு பண்ணலாம் பிரசாதங்கள் எல்லாம் பண்ணி
பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் ஸ்வ பாவத்தை உடைய எம்பெருமானை
குற்றேவல்கள்-இத்யாதி –
அந்தரங்க வ்ருத்தி ரூபமாய் பாதங்கள் பூர்ணமான ஆயிரம் திரு வாய் மொழியிலும் இத் திரு வாய் மொழி
வைஷ்ணவ சேஷத்வமே புருஷார்த்தம் என்று உபபாதித்தது
இத்தை நெஞ்சிலே படும்படி கற்க சக்தராகில் –

———————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-7–

August 25, 2016

பகவத் விஷயம் என்றால் மேட்டு மடையாய் தம்மாலே நிந்திதரான சம்சாரிகளோட்டை பரிமாற்றத்தாலே உறாவின ஆழ்வார் அவ் உறாவுதல் தீர
பகவத் குணங்களே தாரகமாய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஜென்ம வருத்தங்களால் குறைய நின்றார்களே யாகிலும்
அவர்கள் எனக்கு நாதர் -நான் அவர்களுக்கு அடியன் -என்று அவர்களோட்டை சம்பந்தத்தை அனுபவிக்கிறார்
அங்கன் அன்றிக்கே –
பகவத் ஸுலப்ய த்தை அர்ச்சாவதார பர்யந்தமாக உபதேசித்தார் கீழே சம்சாரிகளுக்கு
உபதேச நிரபேஷமாக பகவத் ப்ரவணராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களோட்டை சம்பந்தத்தை அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் என்றுமாம்
எம்மா வீடு -ப்ராப்யத்தின் உடைய பிரதம அவதி -இது – சரம அவதி -கச்சதா மாதுலம் குலம்-

————————————————————————————————————

வடிவு அழகிலும் குணங்களிலும் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்று
இத் திரு வாய் மொழியிலே சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
செறியா நின்றுள்ள மிக்க தேஜஸ்ஸையே விக்ரஹமாக உடையவனை
பயிலுகை -செறி கை -சுடர் என்றும் ஒளி என்றும் தேஜஸ்ஸாய் மிக்க தேஜஸ் ஸூ என்கை
சுத்த சத்வமாய் ஸ்வரூப ப்ரகாசகமான விக்கிரஹத்தை உடையவன் என்கை
இவ்வடிவிலே துவக்குண்டாரை அநந்யார்ஹம் ஆக்கும் கண் -அகவாயில் தண்ணளியை ஆனைத் தாளாய் இருக்காய் –
பயில இனிய –
இதர விஷயங்கள் பயின்றால் துக்க ஹேதுவாய் இருக்குமா போலே இவ்விஷயம் பயில பயில இனியதாய் இருக்கும் –
நம் பாற்கடற் சேர்ந்த –
ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்த –
வடிவு அழகிலே குறைவற்றால் போலே நீர்மையிலும் குறை வற்று இருக்கிற படி
பரமனைப்-
ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் குறை வற்று இருக்கையை அன்றிக்கே இவனுக்கு மேற்பட்டு இல்லை என்னும் படி இருக்கை
பயிலும் திருவுடையார்-
பிரயோஜ நாந்தரங்களைக் கொண்டு அகலாதே நிரதிசய போக்யனானவனை செறிகை யாகிற மஹா சம்பத்தை உடையார்
பகவத் அனுபவமே இ றே ஸ்வரூப அனுகூலமான ஐஸ்வர்யம் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -சது நாகவர ஸ்ரீ மான் -அந்தரி ஷகத ஸ்ரீ மான் –
உடையார் என்கிறார் -வைஸ்ரவணன் என்றால் போலே
எவரேலும் அவர்கண்டீர்
ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -அந்நிலையில் அவர்கள் எனக்கு உத்தேச்யர்
வைஷ்ணத்வ விரோதியான அபிமான ஹே துவான ஜென்மாதிகளில் குறைய நின்றவர்கள் அல்லாதாரில் உத்தேச்யர் என்று கருத்து
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–
ஒன்றன் மேல் ஒன்றாக நிரந்தரமாய் வருகிற ஜென்மங்களில் அவகாசம் தோறும் என்னை அடிமை கொள்ளும் ஸ்வாமிகள்
நின் பன் மா மாய பல் பிறவி -என்று நிந்தித்த ஜன்மத்தையும் அனுமதி பண்ணுகிறார் ததீய சேஷத்வ ரசத்தாலே
பரமரே.–
முன்பு அவனை பரமர் என்றீர் –
இங்கே இவர்களை பரமர் என்னா நின் றீரே -என்ன
அனுபாவ்ய குண ஆதிக்யத்தாலே சொல்லிற்று அங்கு
இங்கு அக் குணத்துக்கு தோற்றவர்களை சொல்லுகிறது
தத் சம்பந்தம் ஒழிய சொல்லில் பகவத் சம்பந்தம் அற்றதாம் –

———————————————————————————————————–

அவனுடைய அவயவ சோபைக்கு தோற்று இருக்குமவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-

ஆளும் பரமனைக்
இவ்வஸ்துவை ஆளும் போது ஒப்பு இல்லாதவனை –
அடியார்க்கு என்னை ஆட்படுத்தும் விமலன் -என்ன கடவது இ றே
கண்ணனை –
தான் கையாளாக நின்றாய்த்து ஆட்க்கொள்ளுவது
ஆட்க்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை
ஆழிப்பிரான் தன்னைத்-
ஆஸ்ரித ரக்ஷணத்தில் பகலை இரவாக்குகை பெரு நிலை நின்ற திரு ஆழியை உடையனாய் கொண்டு உபகரிக்குமவனை
கையும் திரு ஆழியுமான சேர்த்தியை காட்டி அநந்யார்ஹன் ஆக்குமவனை
தோளும் ஓர் நான்குடைத்
அதுக்கு மேலே கற்பக தரு பணைத்தால் போலே அத்விதீயமான நாலு திருத் தோளை உடையவனை
ஆயாதாச்சா ஸூ வ்ருத்தாச்சா
தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
பழிப்பற்ற நீல மணி போலே குளிர்ந்த திரு நிறத்தை உடையனாய் பாத்தாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
இவனை தொழ என்றால் பனைக்கக் கடவ அங்கங்களாய் இருக்கை
கை கூப்புகை ஒழிய தாள் கூப்புகை யாவது -நிரபிமானியாய் இருக்கிறமை தோற்ற அவயவங்களை ஒடுக்குகை –
கூப்பிப் பணிகை யாவது -நிப்ருத ப்ரணத ப்ரஹவ-என்கிறபடியே நிர்மமராய் தொழுகை
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–
என்றும் ஓக்க ஜென்மங்களில் அவகாசம் தோறும் என்னை அடிமை கொள்ளும் நாதர் –
அவன் தன் குணத்தைக் காட்டி அடிமை கொள்ளும் –
அக் குணத்துக்கு தோற்று அடிமை கொள்வர்கள் இவர்கள் –

————————————————————————————————————

தோளும் தோள் மாலையுமாய் இருக்கிற இருப்பில் தோற்றவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-

நாதனை
நிருபாதிக சேஷியை –
ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்-போதனைப் –
தோளும் தோள் மாலையுமாய் இருக்கும் இருப்பைக் கண்டால் நித்ய ஸூ ரிகளோடு அவிசேஷஞ்ஞரான சம்சாரிகளோடு வாசி அறப் புகழா நிற்பர்கள்
நறுந்துழாய்ப்-போது –
ஸ்வ ஸ் பர்சத்தாலே செவ்வி பெற்ற திருத் துழாய் பூ
பொன்னெடுஞ் சக்கரத்து
ஸ்ப்ருஹணீயமுமாய் அழகுக்கும் ஆபரணத்துக்கும் தனக்கு அவ்வருகு இன்றிக்கே இருக்கை –
போக்தாக்களுக்கு பிடிதோறும் நெய் வேண்டுமா போலே அடிக்கு அடியும் கையும் திருவாழியான சேர்த்தியை அனுபவிக்கிறார்
எந்தை பிரான் தன்னைப்
கையும் திரு வாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட உபகாரகனை
பாதம் பணிய வல்லாரைப்
பிறருடைய உத்கர்ஷம் பொறாத சம்சாரிகளில் நிர் மமனாய் திருவடிகளில் விழுகையில் அருமை இருக்கிறபடி
அந ஸூயவே என்று கொண்டாட வேண்டும்படி ஈஸ்வரனுடைய உத்கர்ஷம் பெறாதே இ றே சம்சாரிகள் இருப்பது
பணியுமவர்
சஜாதீயராய் அன்ன பா நாதிகளை தாரகமாக உடையவர்களை ததீயத்வ ஆகாரேண-தாரகர் என்று இருக்கும் போது பேர் அளவுடையனாக இருக்க வேணும் இறே
அவர் கிடீர் என்னை ஆளுடையார் என்கிறார் இவர் –
கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு
ஜாயஸ்ய ம்ரியஸ்ய-என்று அல்பமாகச் சொல்லும் பிறப்பில் அவகாசம் தோறும்
சாஸ்திரங்களில் நிஷேத் யதயா சொல்லும் ஜென்மம் ஆகவுமாம்
எம்மை ஆளுடை யார்களே.–
தேவா நாம் தாநவ நாஞ்ச -என்ற பொதுவானவன் அன்று
எனக்கு ஸ்வாமிகள் இவர்களே -அடியார்கள் குழாங்கள் இ றே இவர்க்கு ப்ராப்யம் -துராசாரோ அபி

————————————————————————————————————-

அவனுடைய ஆபரண சோபையிலே வித்தராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தோற்று இருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-

உடை ஆர்ந்த ஆடையன்
திருவரையிலே பூத்தால் போலே இருக்கிற திருப் பீதாம்பரம் -அஞ்சித கடீ சம்வாதி கௌசேயகம்
கண்டிகையன் –
திருக் கழுத்திலே சாத்துமவை
உடை நாணினன்
திரு வரையில் சாத்தும் கோவை
புடையார் பொன் நூலினன்
தான் கிடந்த பிரதேசத்துக்கு வேறு ஒரு ஆபரணம் வேண்டாத படி மேகத்திலே மின்னினால் போலே விளங்குகிற யஜ்ஜோபவீதம்
பொன்முடியன்
ஸ் ப்ருஹணீயமாய் உபய விபூதிக்கும் சூடின திரு அபிஷேகம்
மற்றும் பல்கலன்-நடையா உடைத்-
அனுக்தமான அநேகமான திரு ஆபரணங்களை நித்தியமாக உடையவன்
நடை
தனக்குத் தானே ஒப்பாய் வேறு ஒப்பு இன்றிக்கே இருக்கை என்றுமாம்
திரு நாரணன்
ஸ்ரீ மன் நாராயணன் –
ஆபரணங்களில் அந்நிய தமமாய் இருக்கிறபடி லஷ்மீ சம்பந்தமும்
ஆபரண சோபையினுடைய போக்யத்தையாலே சொல்லாது ஒழிய மாட்டார்
அசங்க்யாதம் ஆகையால் பேச மாட்டார் –
தொண்டர் தொண்டர் கண்டீர்-இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–
அந்த ஆபரண சேர்த்திக்கும் மிதுனத்துக்கும் தோற்று அடிமை புக்கவர்கள் அன்று
அவர்கள் தோற்ற தோல்விக்கு அடிமை புக்கவர்கள் எனக்கு நிரந்தரமான ஜென்மத்தில் அவகாசம் தோறும் சேஷிகள் –

—————————————————————————————————————

பிரயோஜனாந்தர பரருக்கும் அபேக்ஷித சம்விதானம் பண்ணும் உதார குணத்தில் தோற்றவர்கள்
-ஸ்வபாவத்துக்குத் தோற்றவர்கள் -எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-

பெருமக்கள் –
நித்ய ஸூ ரிகள்–பேராளன் பேரோதும் பெரியோர் என்றும் -ச மஹாத்மா ஸூ துர்லபா -என்றும்
முமுஷுக்களை யும் சர்வ உத்க்ருஷ்டராக சொல்லக் கடவதானால்-நித்ய சித்தராய்ச் சொல்ல வேண்டா இறே
உள்ளவர்-
நிரூபகமான சேஷத்வ ஞானம் நித்யம் ஆகையால் தாங்களும் நித்யராய் இருக்கை –
இங்கு உள்ளாரைப் போலே அசன்னேவா-என்பது சந்தமேனம்-என்பதாக வேண்டாதவர்கள் –
தம் பெருமானை –
அவர்களுக்கு நிர்வாஹகனை
அமரர்கட்கு
பிரயோஜனாந்தர பரரான இந்த்ராதிகளுக்கு
அருமை ஒழிய –
கடல் கடையும் வருத்தத்தை தன் தலையிலே ஆக்கி அவர்களுக்கு அம்ருத போகத்திலே அன்வயமாம் படி பண்ணி
அன்று
துர்வாச சாபத்தால் அஸ்ரீ பிரவேசித்து அ ஸூ ரர்கள் அபிபவித்துபோக்கற்ற தசையில்
ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்-
நிரதிசய போக்யமான அம்ருதத்தை புஜிப்பித்த நிருபாதிக சேஷியை –இவர்கள் பேறு தன் பேறாய் இருக்குமவன் –
பெருமை பிதற்ற வல்லாரைப் –
பிரயோஜனாந்த பரரையும்-உதாரா -என்னுமவனுடைய உதார குணத்திலே ஈடுபட்டு அக்ரமமாக பேசுமவர்களை
பிதற்றுமவர் கண்டீர்-
அவர்கள் பகவத் விஷயத்தில் இருக்கும் இருப்பை அவர்கள் தங்கள் பாக்களில் இருக்குமவர்கள்
வருமையும் இம்மையும்
ஐ ஹிக ஆமிஷ் மிகங்கள் இரண்டிலும் -அத்ர பரத்ர சாபி -என்கிறபடியே
நம்மை அளிக்கும் பிராக்களே.–
சம்சாரிகளிலே அந்நிய தமராய் இருக்கிற எங்களை அவர்களில் வியாவ்ருத்தராக்கி இங்கு ஆமுஷ் முகத்தில் நித்ய ஸூ ரிகளோடு ஒரு கோவையாக்கும் ஸ்வாமிகள் –

—————————————————————————————————————

கீழ்ச சொன்ன ஸுந்தர்யாதிகளை எல்லாம் திரள அனுபவிக்குமவர்கள் எனக்கு சர்வகாலமும் ரக்ஷகர் -என்கிறார் –

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6-

அளிக்கும் பரமனைக் –
ரக்ஷிக்கும் இடத்தில் தனக்கு மேற்பட்டார் இல்லாதவனை
கண்ணனை-
உபகரித்தது தன்னை யாயிற்று
ஆழிப் பிரான் தன்னைத்
நா யுதாநி -என்கிறபடி -தன்னோடே ஆயுதங்களோடு வாசி அற பக்தா நாம் என்று இருக்குமவனை
ஆளும் பரமனை -என்கிற பாட்டை நினைக்கிறது –
துளிக்கும் நறுங்கண்ணித் –
ஸ்வ ஸ் பர்சத்தாலே செவ்வி பெற்று துளியா நிற்கும் மதுவையும் பரிமளத்தையும் உடைய திருத் துழாய் மாலையை உடையனாய்
நாறும் துழாய் போதனை -என்றத்தை நினைக்கிறது
தூமணி வண்ணன் எம்மான்தன்னை
பழிப்பற்ற நீல மணி போலே இருக்கிற திரு நிறத்தை காட்டி என்னை அகப்படுத்திக் கொண்டவனை
தோளும் ஓர் நான்குடைத் தூ மணி வண்ணன் -என்றத்தை நினைக்கிறது –
ஒளிக்கொண்ட சோதியை
ஒளி மிக்க தேஜஸ் ஸூ -பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்றத்தை நினைக்கிறது
உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
குணங்களை அனுபவித்து வித்தராய் வாய் விட மாட்டாதே இருக்குமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் –
பகவத் ஸமாச்ரயணீயம் பண்ணினார் ப்ரஹ்மாதிகளாய் -ஈஸ்வரோஹம் -என்று மீளலாம் –
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆனால் யாயிற்று மீளாது ஒழிவது
சன்ம சன்மாந்தரம் காப்பரே
ஜென்ம பரம்பரைகளில் புகாதபடி ரக்ஷிப்பார்கள்-
முன்பு ஜன்மத்தையும் அனுமதி பண்ணினார் -அவர்கள் பக்கல் ஆதரத்தாலே
இங்கு அவர்கள் செய்யும் படி சொல்லுகிறார் –

——————————————————————————————————

ஆஸ்ரித விஷயத்தில் அவன் பண்ணும் மஹா உபகாரகங்களில் வித்தரானவர்களுக்குத் தோற்று இருக்குமவர்கள்
கிடீர் எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகள் என்கிறார் –

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

சன்ம சன்மாந்தரம் காத்து
ஜென்ம பரம்பரைகளில் புகாதபடி பரிஹரித்து
அடியார்களைக்
தன் பக்கலில் சர்வ பரந்யாசம் பண்ணி இருக்குமவர்களை
கொண்டு போய்த்-தன்மை பெறுத்தித் –
ஒரு நாடீ விசேஷத்தாலே புறப்படுத்தி அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே கொண்டு போய்
ஸ்வே ந ரூபேண அபி நிஷ்பத்யதே-என்று ஸ்வ ஸ்வரூபத்தைக் கொடுத்து
தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
சர்வாதிகனான தனக்கு சரண உபாதானத்தோ பாதி யாகக் கொள்ளும் நிருபாதிக சேஷியை
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
ஸ்வா பாவிகமான உதார குணத்திலே ஈடுபட்டு அக்ரமமாகப் புகழுமவர்கள் விஷயத்திலே வித்தராமவர்கள் கிடீர்
ஷிபாமி என்னுமது சோபாதிகம்-உதாரமே இவனுக்கு ஸ்வ ரூபம்
நன்மை பெறுத்து –
ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வத்தை தந்து –
எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–
அத்தை யாவதாத்மபாவி நடத்தக் கடவ விச்வஸ நீயர் -முதலிகள் என்றுமாம் –

—————————————————————————————————

அவனுடைய ஸ்ரீ யபதிவத்திலே வித்தராய் இருக்குமவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-

நம்பனை-
நம்பப் படுமவனை -ஏதேனும் தசையிலும் ஆத்மாவுக்கு தஞ்சமாமவனை –
கீழ்ச சொன்னவர்களும் நம்பராகைக்கு அடியானவனை –
இவனை ஒழிந்த பந்துக்கள் விஸ்வ நீயர் அல்லர் என்கை –
ச பித்ரா ச -எங்கே கண்டோம் என்னில்-
ஞாலம் படைத்தவனைத்
தனக்குத் தானும் இன்றிக்கே பிறரும் இன்றிக்கே அசித் கல்பனான தசையில் புருஷார்த்த உபயோகியான சரீரத்தை உண்டாக்கினவனை
திரு மார்பனை-
இப்படி உபகரித்தது பிராட்டிக்கு பிரியமாக என்கை -யஸ்யா விஷ்ய முகம் –
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
உபரி லோகங்களில் எத்தனையேனும் அதிசயித்த ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும் உணர முடியாது இருக்கிறவனை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்
மஹா பாப பலமான கும்பீ பாக நரகத்திலே கிடந்தும் அங்கே திரு நாமத்தை சொல்லுவார்கள் ஆகில்
அவர் கண்டீர்
ஏதேனும் துர்கதரே யாகிலும் அவ்விருப்பிலே நமக்கு ப்ராப்யர் என்கை
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–-
பலவகைப் பட்ட ஜென்மங்களில் அவகாசம் தோறும் திரு நாமத்தை சொன்னவர்களே யன்று உத்தேச்யர்
-அவர்கள் குலமாக எங்கள் குலத்துக்கு ஆச்சார்ய சந்தானம் –

————————————————————————————————–

கையும் திரு வாழி யுமான சேர்த்தி அழகிலே வித்தராய் இருப்பாருடைய அடியார் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து
க்ரம விவாஹத்தாலும் அநு லோம பிரதி லோம விவாஹத்தாலும் உள்ள குலங்களை தரிப்பதான ப்ராஹ்மணாதியான நாலு ஜென்மத்திலும் கீழே கீழே போய்
எத்தனை நலந்தான் இலாத
அந்த சண்டாள ஜன்மத்துக்கு அடைத்த ஞானமும் வ்ருத்தமும் இன்றிக்கே இருக்கை
சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
நாம் சண்டாளரைக் கண்டால் விலங்குமா போலே அவர்கள் தங்கள் விலங்குமவர்கள் ஆகிலும் இவர்களை ஆதரிக்கைக்கு ஹேது சொல்லுகிறது
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு
வலவருகே தரிக்கப் பட்ட திரு வாழி யை உடையனாய் -அதுக்கு ஆச்ரயமான நீல மணி போலே சிரமஹரமான திரு நிறத்தை உடைய சர்வாதிகனுக்கு
ஆள் என்று உள்-கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.-
ஸ்வரூப ஞானம் முன்னாக அடிமை செயகையே பிரயோஜனம் என்று இருக்குமவர்களுடைய சம்பந்தி சம்பந்திகள் நாதர் என்கிறார் –

—————————————————————————————————-

ஐஸ்வர்யார்த்திகள் அதுக்கு பர்யவசனமான ப்ரஹ்ம பதத்தை ஆசைப்படுமா போலே இவரும் தாஸ்ய பர்யவசான பூமியை ஆசைப்படுகிறார் –

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
திருவடிகளுக்கு அளவான பூமியை அமுது செய்து ஒரு பவனான ஆலிலையில் உணவுக்கு ஈடாக இடம் வலம் கொள்ளும்
அதாகிறது அமுது செய்த ஜகத்து ஜரியாத படி வலக்கை கீழ்ப்பட கண் வளர்ந்து அருளுகை –
படியாதும் இல் குழவிப்படி-
ஒப்பு ஒன்றும் இன்றிக்கே இருக்கிற பிள்ளைத் தனத்தால்
யசோதா ஸ்தநந்தியமும் ஒப்பு அன்று வட தள சாயிக்கு –
தொட்டில் நின்றும் விழுவோம் என்று அறியாத மௌக்த்யம் அவனுக்கு
ஆலிலையில் நின்றும் பிரளயத்தில் விழவு தோம் என்று அறியாத மௌக்த்யம் இவனது
எந்தை பிரான் தனக்கு
அவன் அகடிதக்கடநா சாமர்த்தியத்தால் என்னைத் தோற்பித்த உபகாரகன்
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு-அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.-
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் -என்று சேஷித்வத்துக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதா போலே
சேஷத்வத்துக்கு தமக்கு அவ்வருகு இல்லாத படி அதன் எல்லையில் நிற்கிறார்
தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் மீண்டார் அல்லர்
சந்தஸ் ஸூ முடிய வேண்டுகையாலே மீண்டாராம் அத்தனை –

————————————————————————————————

பாகவத சேஷத்வ ப்ரதிபாதிதமான இத் திருவாய் மொழியை அப்யஸித்த வர்கள் இதுக்கு விரோதியான சம்சாரத்தை கடப்பார் என்கிறார் –

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-8-11-

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று
பாண்டவர்களை வனசாரிகள் ஆக்கி புத்தர மித்த்ராதிகளாலே பல்கி ராஜ்யத்திலே வேர் விழுந்த துர்யோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி
ஐவர்க்கு
தான் அல்லது தஞ்சம் அல்லாதவர்களுக்கு
அருள்செய்த
அவர்கள் இழவு எல்லாம் தீர -யஸ்யம இந்திரேச கோப்தாச-என்று சர்வமும் தானேயாய் பின்னையும்
நாதிஸ் வஸ்த்தம நா -என்கிறபடியே ஒன்றும் செய்யாதவனாக இருக்கிறவனை –
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
ஆழ்வார் வாசகமாக அந்தரங்க சேஷ வ்ருத்தி பண்ணின படி
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல் முடிவு
பாதங்கள் பூர்ணமான ஆயிரம் -பாத பத்தோ அக்ஷர சம -என்கிறபடியே
இத் திருவாய் மொழி ததீய சேஷத்வத்தை ப்ரதிபாதித்தது
ஈஸ்வரனை சொன்ன இடங்கள் உபசர்ஜ்ஜநா கோடியிலே யாம் அத்தனை
ஆரக் கற்கில்
நெஞ்சிலே படும்படி கற்க சக்தராகில் –
இதில் ஒரு பாட்டும் விழாத படி என்றுமாம் –
சன்மம் செய்யாமை முடியுமே.–
ததீய சேஷத்வத்துக்கு விரோதியான ஜென்ம அன்வயம் அறும்

——————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-6–

August 24, 2016

கீழ் பகவத் குணங்களில் அவிகிருதராய்-தம்மால் நிந்திதரராய் இருந்து உள்ளவர்களை பார்த்து இவர்களுக்கும்
ஈஸ்வரனோடு சம்பந்தம் ஒத்து இருக்க இங்கண் அவிகிருதரராய் ஆகைக்கு அடி -பகவத் குண ஞானம் இல்லாமை -என்று பார்த்து
பத்துடை அடியவரில் பிறந்த ஸுலப்யம் முதல் திருவாய்மொழியில் பரத்வத்தோடு ஒக்கும்படியான அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்ய காஷ் டையை உபதேசிக்கிறார்
அர்ச்சாவதார ஸுலப்யத்துக்கு ஏற்றம் என் என்னில் -அர்ச்சயஸ் சர்வ ஸஹிஷ்ணுர் அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதிதி-என்று
சேதனர் பண்ணும் அபசாரங்களை தன் பொறைக்கு விஷயமாக்க்க கடவனாய் இருக்கும்
அவதாரமாவது அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகை –
இங்கு ஆஸ்ரிதன் உகந்ததொரு த்ரவ்யத்தை திருமேனியாக நினைத்தால் -அத்தை அசாதாரணமான திவ்ய விக்கிரகத்தோ பாதி அபிமானித்து இருக்கும் –
ஸ்வ வ்யதிரிக்தங்கள் உடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் ஸ்வ அதீனமாக நடத்தக் கடவதான தன் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் அர்ச்சக அதீனமாம் படியாய் இருக்கும் –
இவன் அநு கூலித்த போது அவ்விருப்பிலே போக மோக்ஷங்கள் கொடுக்கக் கடவனாய் இருக்கும்
ஒரு தேச விசேஷத்திலே விலக்ஷண சரீரத்தை பெற்று பண்ணும் அடிமையை ஹேய விஷயங்களுக்கு பணி செய்து போந்த சரீரத்தை கொண்டு
கொள்ளக் கடவனாய் இருக்கும் -இப்படிப்பட்ட ஸுலப்ய காஷ் டையை உபதேசிக்கிறார்

————————————————————————————————————–

ஜகத் ஸ்ருஷ்டித்வாதி குணகனான எம்பெருமானை உத்தேசித்து அவனுக்கு புண்டரீகாக்ஷத் வாதிகளை
விதியா நின்று கொண்டு ஸமாச்ரயணீயனான புருஷன் இன்னான் என்கிறார் –
ஸுலப்யம் ஆகில் இங்குச் சொல்கிறது பரத்வம் சொல்லுகிறது என் என்னில் –
சர்வாதிகன் தாழ நின்றான் என்னில் இ றே குணம் ஆவது -எளியவன் தாழ நின்றான் ஸ்வரூபமாம் அத்தனை இறே –

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு-ஏழும் உண்ட அவன் கண்டீர்-
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-என்றும்
யஞ்ஜேசோ யஞ்ஞ புருஷ புண்டரீகாக்ஷ சம்ஞ்சித -என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே
செவ்வியை உடைத்தாய் சிவந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் அழகை உடையனாய்
பிரளய ஆர்ணவத்திலே அந்தர படாத படி ஜகத்தை திரு வயிற்றில் வைத்தவன் கிடீர் –
வடிவு அழகில் புண்டரீகாக்ஷத்வம் போலே குணங்களில் பிரளய ஆபத் ஸகத்வமும்
வையம் வானம் மனிசர் தெய்வம்-
பூமியும் மேல் உள்ள லோகங்களும் அவற்றில் வர்த்திக்கக் கடவ மனுஷ்யரும் தேவதைகளும் –
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்–
திர்யக் ஸ்தாவரங்களும் -ஜகத் ஆரம்பகமான மஹா பூதங்களும் -மஹதாதிகளும்-முற்றுமாக இவை எல்லாம் –
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்-பட்டு இவை படைத்தான்
வெளிப்பட்டவை என்கிறது பிரமாண பிரதி பன்னமான இவை என்கை –
செய்ய -ஞானத்துக்கு செவ்வை யாவது -வருத்தம் அற்று இருக்கை –
சூழ் -கார்ய ஜாதத்தை எல்லாம் வியாபிக்க வற்றாய் இருக்கை
சுடர் -விசத தமமாய் இருக்கை
ஞானமாய் -இப்படிப் பட்ட சங்கல்ப ஞானத்தால் படைத்தான் என்னுதல் –
முற்றவும் உண்டாக்குகைக்காக -செய்ய சூழ் சுடர் ஞானமாய் -என்னுதல் -அப்போது -வெளிப்பட்டு -என்றது -ஸ்ருஷ்ட்டி உன்முகனாய் என்றபடி –
பின்னும்-மொய்கொள் சோதியோடு ஆயினான்-
லீலா விபூதி உக்தனானதுக்கு மேலே -அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தானம் -என்கிற நித்ய விபூதி உக்தனாய்
மெய் கொள் சோதி -செறிந்த தேஜஸ் ஸூ –
தேஜ ப்ரப்ருதி கல்யாண குணங்களை உடையவன் என்னவுமாம்
தேஜஸ் ஸூ குணங்களுக்கு எல்லாம் உப லக்ஷணம்
ஒரு-மூவர் ஆகிய மூர்த்தியே.-
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு அந்தர்யாமியாய் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களைப் பண்ணி ஸ்வேந ரூபேண பாலனத்தைப் பண்ணும் சர்வேஸ்வரன்
ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களை சொல்லிற்று ஆகவுமாம் –
மூவராகிய மூர்த்தி –செய்ய தாமரைக் கண்ணனாய் -உலகம் ஏழும் உண்ட அவன் கண்டீர் -என்று அந்வயம் –

——————————————————————————————————-

இப்படி சர்வேஸ்வரனாய் இருக்கிற இவனைக் கிட்டப் போமோ -என்னில் -ஆச்ரயண அர்த்தமாக சஜாதீயனாய் வந்து
அவதரித்த சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-

மூவர் ஆகிய மூர்த்தியை- முதல்-மூவர்க்கும் முதல்வன் தன்னைச்-
ப்ரஸ்துதமான சாமாநாதி கரண்ய நிபந்தம் சொல்லுகைக்காக கீழ்ச சொன்ன சாமாநாதி கரண்யத்தை அநு பாஷிக்கிறது –
ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ர இந்த்ராதிகளுக்கு காரணம் ஆனவனை
இஸ் சாமாநாதி கரண்யம் கார்ய காரண பாவ நிபந்தம் என்கிறது –
சாவம் உள்ளன நீக்குவானைத்-
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகளால் இவர்களுக்கு வரும் ஆபத்துக்களை போக்குமவனை
சாவம் உள்ளன-
அவன் கிருபைக்கு இவர்கள் பண்ணும் அபராதம் போராது என்கை
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
இன்னம் இவர்களுக்கு இடர் வந்த போது தூரஸ்தன் ஆக ஒண்ணாது என்று ஷீராபதியிலே கண் வளர்ந்து அருளின படி –
தேவ தேவனைத் –
அங்கே கிடக்கிறது ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்காக -அவர்கள் அபேக்ஷிக்க வந்து அவதரித்த படி -சபலம் -இத்யாதி –
தென்னிலங்கை-எரி எழச்செற்ற வில்லியைப்-
அக்னி புகப் பயப்படும் ஊரிலே நினைத்த படி புக்கு வியாபிக்க பண்ண வல்ல வில் வலியை உடையவனை
தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை தேவ தேவனை -என்று மனுஷ்யத்வே பரத்வத்தை சொல்லிற்று ஆகவுமாம்
நித்ய ஸூ ரிகள் ஏத்துகிறவனை ஆஸ்ரயிங்கோள் என்றுமாம்
பாவ நாசனைப்
ஹேய பிரதிபடனை -கையும் வில்லுமாய் இருக்கிற படியை காண சர்வருடைய பாபங்களும் போம்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ ரகு நந்தன
பங்கயத் தடங்-கண்ணனைப் –
பாபத்தை உண்டாக்கிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவனை -ராம கமல பத்ராஷ
பரவுமினோ.–
ஜிதந்தே புண்டரீகாஷ – என்று அக்ரமாக புகழுங்கோள் –

——————————————————————————————————–

கீழ்ச சொன்ன ராமாவதாரம் பரதசை என்னும்படியான கிருஷ்ணாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-

பரவி வானவர் ஏத்த நின்ற-பரமனைப்
நித்ய ஸூரிகள் அக்ரமமாக ஏத்த அத்தாலே சமாதிக ரஹிதனாய் நின்றவனை –
நித்ய ஸூ ரிகள் ஏத்தினாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத அவ்வருகாய் நின்றவனை -என்றுமாம்
பரஞ்சோதியைக்
அவர்கள் ஏத்த அத்தாலே உஜ்ஜவலனாய் இருக்கிறவனை
விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே -என்று அவர்கள் ஏத்துகை தன் பேறாக நினைத்து அது வடிவிலே தோற்ற இருக்கிறபடி
பரஞ்சோதி ரூப சம்பந்த்ய -சேஷிக்கு அதிசயத்தை பண்ணுகை சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் இ றே
குரவை கோத்த குழகனை-
இப்படி வி லஷணனாய் இருந்து வைத்து நித்ய ஸூ ரிகளோடே இடைப் பெண்களோடு பரிமாற்றத்தில் வாசி அற கலக்க வல்லவனை
மணிவண்ணனைக்
அவர்களை அநன்யார்ஹைகள் ஆக்க வல்ல வடிவு அழகு உடையவனை
குடக்கூத்தனை
இப்பெண்களின் தாழ்ந்தார் இழந்து போகை அன்றிக்கே -திருக் குரவையில் தப்பினார் இழவாத படி மன்றிலே நின்று குடக் கூத்தாடி
அவ் வடிவு அழகை சர்வ ஸ்வதானம் பண்ணினவனை
அரவம் ஏறி -அலைகடல் அமருந் துயில் கொண்ட அண்ணலை-
குடக் கூத்தாடின சிரமம் தீர ஷீராப்தியிலே சாய்ந்த படி
அலைகடல்
தன் சந்நிதியால் கிளர்த்தியை உடைத்தாய் இருக்கை
அமருந் துயில் கொண்ட
நாய்ச்சிமாராலும் உணர்த்த ஒண்ணாது இருக்கை –
அண்ணலை
சாய்ந்து கிடக்கிற போது சர்வாதிகன் என்று தோற்ற இருக்கை –
சமயாபோதித-ஸ்ரீ மான் -ஸூ க ஸூ ப்த பரந்தப-என்ன கடவது இ றே
இரவும் நன் பகலும் விடாது
ஏத்துகைக்கு உறுப்பான காலம் ஆகையால் நல்ல இரவும் நல்ல பகலும்
காலம் நடையாடாத தேசத்திலே சென்று அனுபவிக்க வேண்டிய விஷயத்தை காலம் நடையாடும் தேசத்திலே இருந்தே அனுபவிக்கலாம் என்கை –
என்றும்-ஏத்துதல் மனம் வைம்மினோ.-
எப்போதும் ஏத்துகையிலே மனசை வைக்க அமையும் -தானே கொண்டு முழுகும் -பின்னை உபதேசிக்க வேண்டா –

————————————————————————————————————-

அபிமான பிரசுரரான ப்ரஹ்மாதிகளுக்கும் தடை இன்றிக்கே புக்கு ஆஸ்ரயிக்கலாய் இருக்கிற சீலவத்யையைப் பேசுகிறார் –

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
உங்களுடைய ஹ்ருதயத்தில் வையுங்கோள் என்று நான் சொல்லுகிற ஆச்சர்யமான ஸுந்தர்யாதி
குண சேஷ்டிதங்களை உடையனான அவனுடைய சீலவத்யையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அதுநிற்க;
ஸ்நேகிகளான என் போல்வார் சொல்லுமது என் -அது கிடக்க கிடீர்
நாடொறும் வானவர்-தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
சர்வ காலமும் தேவர்களுடைய நன்மை தீமைகளை ஆராய்ந்து அவர்களுக்கு சேஷியான இந்திரனும் சதுரத்தசப்புவன சிரேஷ்டாவான
ப்ரஹ்மாவும் -சாதக வேஷத்தோடே ஈஸ்வர அபிமானியான ருத்ரனும் –
செம்மையால் அவன் பாத பங்கயம்-சிந்தித்து ஏத்தித் திரிவரே.–
அநந்ய பிரயோஜநரோபாதி தடை இன்றிக்கே புக்கு நிரதிசய போக்யமான திருவடிகளை நினைத்தும்
அது உள்ளடங்காமே புகழ்ந்தும் அது தானே யாத்ரையாய் சஞ்சரிப்பர்கள்-நாடொறும் செம்மையால் என்னவுமாம் –

————————————————————————————————————-

வாத்சல்யத்தாலே எப்போதும் விபூதியோடே கூட அவன் தோற்றரவு இருப்பது என்கிறார் –
அதவா பூதானாம் ஈஸ்வரோ அபிசன் -என்னும் படியால் ஐஸ்வர்யாதிகளோடே கூடி வந்து அவதரிக்கும் என்னுதல் –

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கி டந்த கடல்- எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
-சதகதியான கதி-
ஸ்வ இதர சமஸ்தத்துக்கும் அவகாச பிரதானம் பண்ணும் ஆகாசம்
கடின ஸ்வை பாவையான பூமி
கரையை அதிக்ரமிக்க மாட்டாத கிடக்கிற கடல் –
ஊர்த்வ ஜ்வலனமான அக்னி
ப்ரகாசகரான சந்த்ர ஸூ ர்யர்கள்
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவரங்கள்
ஆய் -தத் சரீரியாய் -ஆக ஜெகதாகாரத்வம் சொல்லிற்று –
கரிய மேனியன்
அசாதாரண விக்கிரஹத்தை சொல்லுகிறது
செய்ய தாமரைக் கண்ணன்
வாத்சல்ய ஸூ சகமான கண் அழகை உடையவன்
கண்ணன்
சர்வ ஸமாச்ரயணீயன் ஆகைக்காக ஸூ லபன் ஆனவன்
விண்ணோர் இறை
அந்நிலையில் நித்ய ஸூ ரிகளும் வந்து ஆஸ்ரயிக்கலாம் படி பரத்வத்தை உடையவன்
சுரியும் பல் கருங்குறிஞ்சி
சுழன்று அலகலகாக எண்ணிக் கொள்ளலாம் சிரமஹரமான மயிர் முடியை உடையனாய்
எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –
அநந்ய பிரயோஜனர்க்கு அநுபாவ்யமாய் ஆதி ராஜ்ய ஸூசகமாய் ஒளியை உடைத்தான திரு அபிஷேகத்தை உடைய சர்வேஸ்வரனுடைய
தோற்றம் -பிரகாசம் -என்னுதல் -அவதாரம் என்னுதல்

—————————————————————————————————-

இவர்களை போலே கேட்க இராதே உபதேச நிரபேஷமாக நிரதிசய போக்யமான நரசிம்ஹத்தை ஒழிய
வேறு ஒரு தாரகம் இல்லையாகப் பெற்றேன் இ றே -என்கிறார் –

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-

தோற்றக் கேடு அவை இல்லவன்
உத்பத்தி விநாசாதி ஷட் பாவ விகாரங்கள் இல்லாதவன்
உடையான்
ஜென்மாதி தோஷ யுக்தமான சகல பதார்த்தங்களும் நிர்வாஹகனானவன்
அவன்
கர்மம் அடியாக ஜென்மம் இல்லாதவன்
ஒரு மூர்த்தியாய்ச்
அத்விதீயமான அத்யந்த வி லக்ஷணமான நரசிம்ஹமமாய்
சீற்றத்தோடு அருள் பெற்றவன்
ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்கச் செய்தே பிரசாதத்துக்கு பாத்திர பூதனானவன்
ஹேது இன்றிக்கே இருக்க பிறந்தாப் போலே இருப்பது ஓன்று இ றே -கோபமும் பிரசாதமும் –
அடிக்கீழ்ப் புக நின்ற
திருவடிகளில் கிட்டலாம் படி நின்ற -சீற்றத்தோடே இருக்க கிட்டலாம் படி எங்கனே என்னில் இவன் பக்கல்
வாத்சல்ய கார்யம் ஆகையால் அச் சீற்றம் இவனுக்கு கிட்டத் தட்டதல்ல
செங்கண்மால்
ஹிரண்யன் பக்கல் சீற்றத்தாலும் ப்ரஹ்லாதன் பக்கல் வாத்சல்யத்தாலும் சிவந்த திருக் கண்களையும்
மால்
ஹிரண்யனுக்கு கிட்ட ஒண்ணாத பெருமையையும் -ப்ரஹ்லாதனுக்கு கிட்டலாம் படியான வ்யாமோஹத்தையும் உடையவன்
நாற்றம் -கந்தம் / தோற்றம் -ரூபம் /சுவை -ரசம் /ஒலி-சப்தம் /உறல் -ஸ்பர்சம் –
ஆகி நின்ற
சப் தாதி கள் எல்லாம் எனக்கு தானே யாகி நின்ற -என் போலே என்னில்
எம்வானவர்ஏற்றையே
நித்ய ஸூ ரிகளுக்கு எல்லா போக்யமும் தானே யாய் இருக்குமா போலே
அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–
கால தத்வம் உள்ள தனையும் வேறே சிலரை உத்தேச்யமாக உடையேன் அல்லேன் –

—————————————————————————————————-

இப்படி ஸூ லபனான பின்பு அவன் பக்கல் துர்லபத்வ சங்கையை தவிர்ந்து அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார்-

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை
கால தத்வம் உள்ளதனையும் தன் சுவடு அறியாதே இதர விஷய ப்ரவணமான என் நெஞ்சுக்கு பரம போக்யனானவனை
எனது ஆருயிர்-கெழுமிய கதிர்ச் சோதியை
அநாதியாக சம்சரித்துப் போந்த என் ஆத்மாவோடு கலந்து அத்தாலே உஜ்ஜவலனானவனை
தம்மை கிட்டுகை அங்குத்தைக்கு நிறக்கேடு என்று இருந்தார்
மற்றைப் படியே தம்மைச் செறிய செறிய தீப்தனாய் இருந்தான் அவன்
மணிவண்ணனைக் குடக் கூத்தனை
இத்தலையில் இசைவு பாராதே மேல் விழுந்து அகப்படுத்திக் கொள்ளுகைக்காக ஹேதுக்கள் இருந்த படி
வடிவு அழகையும் மநோ ஹாரியான சேஷ்டிதங்களையும் உடையவனை
நீல மணி போலே முடிந்து ஆளலாம் படி இருக்கிறவன் என்றுமாம்
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்
ஆக்கரான தேவதைகள் அன்றிக்கே சீரியரான வைகுந்தத்து அமரர்க்கும் முனிவருக்கும்
கன்னற் கனியினைத்
கன்னல் போலேயும் கனி போலேயும் நிரதிசய போக்யன் ஆனவனை -சர்வ ரஸ என்ன கடவது இ றே
கன்னற் கனியினைத் தொழுமின்
இது வன்றோ உங்களை நான் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்
பாலை குடிக்கைக்கு இ றே காலைப் பிடிக்கிறது
ஸ்வயம் பிரயோஜனமாக தொழுங்கோள்
தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–-
துர்லபனோ ஸூ லபனோ-என்று சம்சய க்ராந்தர் ஆகாதே
சாம்சாரிகமான துக்கங்கள் நிஸ் சேஷமாகப் போம்

——————————————————————————————————-

அல்லாதார்க்கும் ருசி பிறக்கைக்காக நான் சக்கரவர்த்தி திருமகனை அல்லது ஆபத்தனமாக பற்றி இரேன்
என்று ஸ்வ சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய்-
துக்க ஏக ஹேது வான புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நியாமகனாய்
அவை அல்லனாய்
தான் அகர்ம வஸ்யனாய்
உயர நின்றது ஓர் சோதியாய்
தமஸ பரஸ்தாத் வர்த்தமான பரம பதத்தை உடையனாய்
உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
இப்படி புஷ்கலனான தான் விபூதி ஏக தேசமான சம்சாரத்துக்கு பிரளய ஆபத்து வந்தால் அத்தை வயிற்றிலே வைத்து நோக்கி
ஸ்ருஷ்ட்டி காலத்திலே வெளி நாடு காண உமிழுமவனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை
தன்னை ஆச்ரயித்தாரை அறிவு கெடும் படி சரீர விஸ்லேஷத்தை பண்ணும் யமைப்பதற்கு காற்ற ஒண்ணாத நஞ்சு ஆனவனே –
அச்சுதன் தனைத்
அவர்களை நழுவ விடாதே நித்ய சம்ச்லேஷம் பண்ணுமவனை -எங்கே கண்டோம் என்னில்
தயரதற்கு மகன் தனையன்றி
ராவண வைத்த சமனந்தரத்திலே முதலிகளிலே சிலரை காணாது ஒழிய தேவதைகளைக் கொண்டு மீட்டும்
ஒரு பாலனுக்கு அகால ம்ருத்யு வர அம்பாலே மீட்டுக் கொடுத்தும் செய்த சக்கரவர்த்தி திருமகனை அன்றி –
ததவ் கௌசிக புத்ராய -என்று ராஜ்யத்தை தந்தேன் என்னா அத்தை தவிர்ந்து காடு ஏறப் போம் என்னா ஒரு சம்சாரிக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனவனை –
பவான் நாராயணோ தேவ -என்று ஈஸ்வர அபிமானிகள் தங்கள் வந்து சொன்னால் ஆத்மா நம் மானுஷம் மன்யே என்னுமவன் –
மற்றிலேன் தஞ்சமாகவே.-
மற்று என்று பகவத் வியக்த்ரந்தரங்களை நினைக்கிறார் –தஞ்சம் -ஆபத் தனம் –

———————————————————————————————————-

பரத்வம் எங்களுக்கு கோசாரம் அன்று -அவதாரத்துக்கு பிற்பாடார் ஆனோம் -நாங்கள் ஆஸ்ரயிக்கும் படி என் என்ன
நீங்கள் உகந்தபடியே உகந்து அருள பண்ண அதிலே அப்ராக்ருத சமஸ்தானத்தோடே ஓக்க விரும்பும் அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –
இது திருவாய் மொழிக்கு நிதானமான பாட்டாயிற்று இது –

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு
ஷாம காலம் வந்தால் தூற்றடியிலே வைத்துப் போதல் -விற்று உண்ணுதல் செய்யுமவர்களைப் போல் அன்றிக்கே அழிய மாறி நோக்கும் தாயும் தந்தையாய்
அவ்யய பிதா -தந்தை யானவன் தாய் ஆக மாட்டான் –ஸர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதாச மாதவ –
தங்களை
தஞ்சமாகிய தானுமாய் –
வயிறு நொந்த போதாக கழுத்திலே கயிற்றை இட்டு கொள்ளும் தானும் அன்ரியிலே இருக்கை
அவை அல்லனாய்-
தந்தை தாய் தான் என்னும் இவ்வளவு அன்றியே அல்லாத பந்து வர்க்கமுமாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல்
எஞ்சல் ஆகிறது -சுருங்குதல் -பகவத் அனுபவத்தில் சங்கோசம் இல்லாத நித்ய ஸூ ரிகள் குலம் உண்டு -திரள் -அதுக்கு நிர்வாஹகனை –
அவர்களுக்கு ஜீவன ஹேது வானவனை என்றுமாம் –
மூவர் தம்முளும் ஆதியை
ப்ருஹ்ம ருத்ர இந்த்ராதிகளுக்கு அந்தர்யாமியாய் நிர்வாஹகனுமானவனை-
மூவரில் வைத்துக் கொண்டு ப்ரதானன் ஆனவனை என்றுமாம் –
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் –
சர்வாதிகனை ஆச்ரயிக்கப் போமோ -என்று அஞ்சி -உலகத்தில் உள்ளீர்களான நீங்கள் கலங்கி
அவன் இவன் என்று கூழேன்மின்;
அவன் ஆகிறான் வி லக்ஷண தேசத்தில் அசாதாரண விக்ரஹ விசிஷ்டானாய் இருப்பான் ஒருவன்
இங்கு நாம் உகந்ததொரு த்ரவ்யத்தை திரு மேனியாக விரும்பும் அளவாய் இருக்கையாலே இவ்விடம் பரிச்சின்னம் -அவ்விடம் அபரிச்சின்னம் என்று ஸம்ஸியாதே
நெஞ்சினால் நினைப்பான் எவன்?
மனசாலே யாது ஒன்றை ஸ்வரூபமாக நினைத்தி கோள்
அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–
அபரிச்சேதய மஹிமானான சர்வேஸ்வரன் அத்தையே தனக்கு அசாதாரண மாக விரும்பும்
ப்ரதிமாஸ் வபரப்புத்தா நாம் -என்னும் ருஷிகளைப் போலே தம் வாயால் சொல்ல மாட்டாமையாலே -அவன் இவன் என்கிறார் –
நீள்கடல் வண்ணனே.–-
அங்குத்தைக்கு உகந்து அருளினை இடத்தை விபூதியாக நினையாதே இங்குத்தைக்கு அவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள்-என்று நிர்வகிக்கும் ஆண்டான்
குணாதிக்யம் இங்கே யாகையாலும் குணாதிக்யத்தாலே வஸ்துவுக்கு ஏற்றம் சொல்லுகையாலும் –

——————————————————————————————————–

தான் உபதேசிக்கத் தொடங்கின ஸுலப்ய காஷ் டையை உபதேசித்து சமைந்து கீழ் ப்ரஸ்துதமான -தாம் அகப்பட்ட துறையான –
கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்க ஆசைப்படுகிறார் –
திருவடி போகிற இடம் விலக்ஷணம் என்று அறியா நிற்கச் செய்தே-பாவோ நான்யத்ர கச்சதி -என்று அவ்வருக்கு போக மாட்டாதாப் போலே
இவரும் அர்ச்சாவதார ஸுலப்யம் அறிந்து இருக்கச் செய்தே எத்திறம் -என்று மோஹிக்கப் பண்ணும் கிருஷ்ணாவதாரத்துக்கு இவ்வருகே போக மாட்டாது இருக்கிறார்

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்-பட அரவின் அணைக் கிடந்த
விண்ணவர் கரு மாணிக்கம் -பட அரவின் அணைக் கிடந்த-பரஞ்சுடர் -கடல் வண்ணன் கண்ணன்-எனது ஆர்உயிர்-
நித்ய ஸூ ரிகளுக்கு போக்யமானவன் கலங்கா பெரு நகரை விட்டு ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்காக
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடையனாய் -அரவு என்கையாலே மென்மை குளிர்த்தி நாற்றங்களை உடைய
திரு வனந்த ஆழ்வான் மேலே ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளினவனாய்
பரஞ்சுடர்
திருவனந்த ஆழ்வான் மேலே சாய்ந்த படியால் தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே புகர் மிக்கு இருந்தபடி என்னுதல்
சர்வாதிகன் என்று தோற்றும்படி இருக்கும் என்னுதல்
கடல் வண்ணன் கண்ணன்
அபரிச்சேத்ய மஹீனனான கிருஷ்ணன் என்னுதல்
சிரமஹரமான வடிவை உடைய கிருஷ்ணனை என்னுதல்
எனது ஆர்உயிர்-
எனக்கு தாரகாதிகள் எல்லாம் தானே யானவன்
பண்டு நூற்றுவர்-அடவரும் படை மங்க –
முன்பு ஒரு நாளிலே துர்வர்க்கமாய் பிரதானரான நூற்றுவரோடே முடிக்க வந்த சேனை நசிக்கும் படி –
சாரதீ சாரதீ-என்று வாய் பாறி வந்த சேனை இ றே
ஐவர்கட்கு ஆகி
கிருஷ்ணாச்ரய கிருஷ்ண பலா என்று தான் அல்லது தஞ்சம் அல்லாத பாண்டவர்கட்க்காக
வெஞ்சமத்து அன்று தேர்-கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–
யுத்தத்திலே அன்று தேரிலே ரதியாய் அன்றிக்கே கையாளாய் சாரத்யம் பண்ணினவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை
காண்பது எஞ்ஞான்று கொலோ என்கிறபடியே பட்டினியாய்க் கிடக்கிற கண்கள் காண்பது
சேனா தூளியும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறுமான வடிவைக் காண்பது என்றோ –
கனைக்கை-த்வநிக்கை-என்னுதல் – செறிகை-என்னுதல் –

————————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியை அப்யஸிக்க பகவத் ப்ரேமம் உண்டாம் -இத்தை அப்யசிங்கோள் என்கிறார் –

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அகவாயிலே மிகவும் பிரகாசிக்கிற படி –
இவருக்கு எங்கும் இதுவே சம்ச்லேஷ விஸ்லேஷன்களுக்கு பிரயோஜம்
சம்ச்லேஷம் ஆகிறது -மானஸ அனுபவம் -விஸ்லேஷம் ஆகிறது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே மானஸ அனுபவத்துக்கு வரும் குலைதல்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
நித்ய ஸூ ரிகளுக்கு ஸூ லபன் ஆனால் போலே-சம்சாரிகள் என்று வாசி வையாதே அர்ச்சாவதார முகத்தால் வந்து ஸூ லபனானவனை
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
வண்டுகளின் மிடற்று ஓசை யாலே பண் மிக்கு இருந்துள்ள சோலை
திரு வழுதி வள நாட்டுக்கும் திரு நகரிக்கும் நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால்
வண்டுகளின் நினைவை ஒழிய அவற்றின் மிடற்று ஓசை பண்ணாய் விழுந்தால் போலே பகவத் குண அனுபவம் வழிந்த
பேச்சுக்கள் விழுக் காட்டாலே பண்ணோடு கூடி இருந்த படி
பத்தராகக் கூடும் –
எல்லாம் கிடைக்கிலும் கிடையாதாயிற்று பகவத் பக்தி -அதுவே நிரூபகமாகை நிச்சிதம்
பயிலுமினே.-
அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்யத்தை சொல்லுகிற இது திரு வாய்மொழியை அப்யசியுங்கோள்-

—————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-6-

August 24, 2016

எம்பெருமான் இப்படி அடிமையாலே உகப்பிக்க கடவனாய் இருக்கச் சேதனர் இவன் பக்கல் விமுகராய் ஸ்தப்தராய் இருக்கைக்கு காரணம்
பகவத் குண ஞானம் இல்லாமை என்று பார்த்து அருளி
முதல் திருவாய்மொழியே தொடங்கி இவ்வளவும் வர தாம் அனுபவித்த ஐஸ்வர்ய ஸுல ப்யாதிகளை அநு பாஷித்து
-பத்துடை அடியவரில்-சொன்ன ஸுலப்யமும் -முதல் திருவாய் மொழியில் சொன்ன பரத்வத்தோடு ஒக்கும் என்னும் படியான
-அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்ய காஷ்டையை அருளிச் செய்து அவனை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்
பத்துடை அடியவரில் காட்டில் அர்ச்சாவதார ஸுலப்யமாவது என் என்னில் -எல்லா காலத்திலும் அனுபவவிக்கலாம் படி சந்நிதி உண்டாகையும்
ஆஸ்ரிதன் ஆனவன் ஏதேனும் த்ரவ்யத்தை திரு உடம்பாக்க கோலினால் அத்தையே மிகவும் விரும்பக் கடவனாயும் எல்லாருக்கும் அனுபவிக்கலாம் படி
கை வந்து போஜன சம்பாஷண ஆசன சயனாதிகள் தொடக்கமான சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஆஸ்ரித பராதீனகையும் இவை தொடக்கமான
இப்படிகளை ஸ்ரீ யபதி யான தான் ஒரு ஹேதுவால் அன்றிக்கே நை சர்க்கிகமாக உடையனாய் இருக்கை –

————————————————————————————————————————————-

ஜகத் ஸ்ருஷ்டித்வாதி குணகனான எம்பெருமானை உத்தேசித்து அவனுக்கு புண்டரீகாக்ஷத் வாதிகளை
விதியா நின்று கொண்டு ஸமாச்ரயணீயனான புருஷன் இன்னான் என்கிறார் –

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

செய்ய தாமரைக் கண்ணனாய்-இத்யாதி
ஸ்ருதி இதிஹாச புராணாதி களில் ஈச்வரத்வ ஏகாந்தமாக சொல்லப்படுகிற அப்போது அலர்ந்த
செந்தாமரைப் பூ போலே இருந்த திருக் கண்களை உடையனாய் பிரளய ஆர்ணவத்திலே அந்தர படாத படி ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து
ரஷித்த அவன் கிடீர் பூமியும் மேல் உள்ள லோகங்களும் அவற்றில் வர்த்திக்க கடவ மனுஷ்யரும் தேவதைகளும் திர்யக் ஸ்தாவரங்களும்
ஜகத் ஆரம்பகமான பூத பஞ்சகங்களும் மஹதாதி விகாரங்களுமாய் கொண்டு பிரத்யஷாதி பிராமண பிரதிபன்னமான இவற்றை எல்லாம்
வருத்தம் இன்றிக்கே வியாபியா நின்ற விசததமமான தன்னுடைய சங்கல்ப ஞான ஞானத்தால் படைத்தான்
பின்னும்-மொய்கொள் சோதியோடு ஆயினான்-
இதுக்கு மேலே அப்ராக்ருத நித்ய விபூதி உக்தன் ஆனான் -தேஜ ப்ரப்ருத்ய அசங்கக்யேய கல்யாண குண விசிஷ்டதையும்-என்பர் –
ஒரு-மூவர் ஆகிய மூர்த்தியே.-
ப்ரஹ்மாவுக்கும் ருத்ரனுக்கும் அந்தர்யாமியாய் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களைப் பண்ணி ஸ்வேந ரூபேண ஜகத் ரக்ஷணம் பண்ணுகிற சர்வேஸ்வரன் —
ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்கள் மூவரையும் மூர்த்தியாக உடையவன் என்றுமாம் –

————————————————————————————————————-

இரண்டாம் பாடல் தொடங்கி மேல் எல்லாம் அவனுடைய ஸுலப்யம் சொல்லுகிறது –
இதில் -இப்படி சர்வேஸ்வரனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரயிப்பார்க்கு எளியனாகைக்காக அவர்களோடு சஜாதீயனாய் வந்து
திருவவதாரம் பண்ணி அருளின ஸ்ரீ தசரத சக்ரவர்த்தி திருமகனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-

மூவர் ஆகிய மூர்த்தியை- முதல்-மூவர்க்கும் முதல்வன் தன்னைச்-
ப்ரஸ்துதமான சாமாநாதி கரண்ய நிபந்தம் சொல்லுகைக்காக கீழ்ச சொன்ன சாமாநாதி கரண்யத்தை அநு பாஷிக்கிறது –
ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ர இந்த்ராதிகளுக்கு காரணம் ஆனவனை
இஸ் சாமாநாதி கரண்யம் கார்ய காரண பாவ நிபந்தம் என்கிறது –
சாவம் உள்ளன நீக்குவானைத்-
அவர்களுக்கு உள்ள சாபங்களை அநாயாசேன போக்குமவனை –
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவர்களுடைய ஆபன் நிவாராணாதி களுக்காக அவர்களுக்கு அணித்தாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனை
தேவ தேவனைத் –
அங்கே கண் வளர்ந்து அருளுகிறது தேவர்களுக்கு ஸமாச்ரயணீயனாய் மனுஷ்ய சஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளினாலும்
மனுஷ்யரைக் காட்டில் தேவர்கள் வி லக்ஷணராய் இருக்கிறாப் போலே தேவர்களைக் காட்டிலும் வி லஷணன் ஆனவனை என்றுமாம்
தென்னிலங்கை-எரி எழச்செற்ற வில்லியைப்-பாவ நாசனைப் பங்கயத் தடங்-கண்ணனைப் பரவுமினோ.–
ராவணனுக்கு அஞ்சி இருந்த அக்னி தட்டும் தடையும் இன்றிக்கே வியாபாரிக்கும் படி தன் வில் வலியால் லங்கையைச் செற்று
கையும் வில்லும் கண்டாருடைய சகல பாபங்களையும் போக்கும் ஸ்வ பாவனாய்
ஒரு பாபங்களையும்போக்கா விடிலும் காண்கையே பிரயோஜனம் போரும்படியான உத்தப்புல்ல புண்டரீக தடாகம் போலே
இருக்கிற திருக் கண்களையும் உடையவனை –

—————————————————————————————————————————————-

தசரதாத் மஜனானவனில் காட்டிலும் ஸூ லபனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளின
ஸ்ரீ நந்த கோபர் திருமகனை நிரந்தரமாக ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் -என்கிறார் –

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-

ஓத்தாரும் மிக்காரும் இன்றிக்கே தன்னுடைய ஸுந்தர்யாதி களுக்கு தோற்று அயர்வறும் அமரர்கள் அக்ரமமாக ஏத்தும் படியை உடையனாய் –
அவர்கள் ஏத்துகையாலே தீப்யமானனுமாய் இங்கனே விலஷணனாய் இருந்து வைத்து ஸ்ரீ நந்த கோபர் திரு மகனாய்
திருக் குரவை கோத்து அருளி இடைப் பெண்களை ஈடுபடுத்தி அவர்களோடே கலக்க வல்லனுமாய் அத்தாலே பெரு விலையனான
மாணிக்கம் போன்ற அழகை உடையனுமாய் -பெண்களே வாழ்ந்து போகை அன்றிக்கே எல்லாரும் கண்டு வாழும்படி குடமாடி அருளுவதும் செய்து
அத்தால் உண்டான இளைப்பு ஆறும் படி திருப் பாற் கடலிலே திரு அனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளின நிரதிசய போக்ய பூதனை –

—————————————————————————————————————

மிகவும் அபிமானிகளான ப்ரஹமேசாநாதிகளுக்கும் தடை இன்றிக்கே புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற எம்பெருமானுடைய சீலவத்யையை பேசுகிறார் –

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-

வைம்மின் நும் மனத்து-இத்யாதி –
உங்கள் மனசில் வைத்து ஆஸ்ரயிங்கோள் என்று நான் சொல்லுகிற ஸுந்தர்யாதிகளால் அத்யார்ச்ச பூதனான அவனுடைய
சீர்மையை என் போல்வார் உரைத்தால் பக்தி வாதம் என்கிறி கோள்-அது கிடக்க கிடீர்
நாடொறும் வானவர்-இத்யாதி
தேவாதிபதியான இந்திரனும் சதுர்முகனும் சாதகனாய் இருந்து வைத்து ஈஸ்வரத்வேந அபிமானியான ருத்ரனும்
என்றும் ஓக்க தடை இன்றிக்கே புக்கு அவனை ஸமாச்ரயித்து வேண்டின படி சஞ்சரியா நிற்பர்கள் –

———————————————————————————————

தன் விபூதியில் ஒன்றை பிரியில் தனக்கு செல்லாமையாலே எப்போதும் அவற்றோடு கூடி எம்பெருமானுடைய தோற்றரவு இருப்பது என்கிறார்
-பூதானாம் ஈஸ்வரோ அபிசன்-என்னும்படியாலே ஐஸ்வர் யாதிகளோடு கூட வந்து திரு வவதாரம் பண்ணும் என்றுமாம் –

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

திரியும் காற்றோடு -இத்யாதி –
தனித்தனியே நியத ஸ்வபாவமான பூத பஞ்சகங்கள் சந்த்ர ஸூ ர்யர்கள் தேவர்கள் மநுஷ்யர்கள் திர்யக் ஸ்தாவரங்கள் இவை இத்தனையோடும் கூடி
கண்ணன் விண்ணோர் இறை-இத்யாதி
கிருஷ்ணனான நீர்மையாலே அயர்வறும் அமரர்களை அடிமை கொண்டு சுழன்று தனித் தனியே
எண்ணிக் கொள்ளலாம் படியான திருக் குழலை உடையனாய் -ஆஸ்ரித பரதந்த்ரத்தயா நிர்வதிக தேஜஸான
திரு அபிஷேகத்தை உடையனான சர்வேஸ்வரனுடைய தோற்றரவு –

————————————————————————————————–

அயர்வறும் அமரர்களுக்கு போலே எல்லாப் படியாலும் எனக்கு போக்யனான நரசிம்மத்தை ஒழிய காலம் உள்ளதனையும்
மற்று ஒருவரை எனக்கு தாரகாதிகளாக உடையேன் அல்லேனாகப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்-

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-

உத்பத்தி விநாசாதி ரஹிதனாய் ஜென்மாதி தோஷ யுக்த பதார்த்தங்களை எல்லாம் நியாமகன் ஆனவன்
அத்யந்த வி லக்ஷணமான திரு மேனியை உடையனாய் ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்கச் செய்தே-
தன்னுடைய அனுக்ரஹ பாத்திரமான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு வந்து அணையலாம் படி நிற்பதும் செய்து
ஹிரண்யன் மேல் உள்ள சீற்றத்தாலும் பிள்ளை பக்கல் உள்ள வாத்சல்யத்தாலும் கலங்கி சிவந்த திருக் கண்களையும்
உடையனாய் அவன் பக்கல் வியாமுக்தனாய்
அயர்வறும் அமரர்களுக்கு சர்வ பிரகார போக்யமானால் போலே எனக்கு எல்லா படியாலும் போக்யமானவனை யல்லது
மற்று ஒருவரை காலம் உள்ளதனையும் உஜ்ஜீவன ஹே துவாக உடையேன் அல்லேன் –

———————————————————————————————–

இப்படி ஆஸ்ரித ஸூ லபனான பின்பு அவன் பக்கல் நீங்கள் பண்ணின துர்லபத்வ சங்கையை தவிர்ந்து அவனை ஆஸ்ரயிங்கோள்
உங்கள் துக்கங்கள் நிஸ் சேஷமாக போம் -என்கிறார் –

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-

காலம் உள்ளதனையும் எனக்கு நிரதிசய போக்யனாய் அத்யந்த நிக்ருஷ்டமான என் ஆத்மாவோடு வந்து கலந்து
பெறா பேறு பெற்றால் போலே உஜ்ஜவலனுமாய் எல்லாரையும் தன் பக்கலிலே ஆகர்ஷித்துக் கொள்ள வற்றான
ஸுந்தர்ய சேஷ்டிதங்களை உடையனுமாய் பேர் அளவுடைய வைகுந்தத்து அமரருக்கும் முனிவருக்கும் ஸ்ப்ருஹணீயமான போக்யதையை உடையவனை

————————————————————————————————-

மற்று உள்ளாறும் தம்முடைய பக்ஷத்தை அறிந்து அதிலே ருசி பண்ணுகைக்காக நான் தசரத சக்கரவர்த்தி திருமகனை அல்லது
மற்று ஒருவரை ஆபத் தனமாக பற்றி இரேன் என்று ஸ்வ சித்தாந்தத்தை சொல்லுகிறார் –

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-

துக்க ஏக ஹேதுவான புண்ய பாப ரூபா கர்மங்களுக்கு நியாமகனாய் -தான் அகர்ம வஸ்யனாய் -தமஸ பரஸ்தாத் வர்த்தமனமாய் –
அப்ராக்ருத தேஜோ ரூபமான திரு நாட்டை உடையனாய் இங்கனே புஷ்கலனாய் இருந்து வைத்து தன்னைத்தானே
ஷூத்ர சம்சார விபூதி ஏக தேசத்துக்கு பிரளய ஆபத்துக்கள் வந்தால் தானே கை தொட்டு நோக்குமவனே
அங்கனே பொதுவான ரக்ஷணத்தை ஒழிய திருவடிகளை ஆஸ்ரயித்தார்க்கு யமாத உபாதைகள் மறுவல் இடாத படி போக்க வல்லனுமாய்
அவர்களோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணும் ஸ்வபாவன் ஆனவனை-
தயரதற்கு மகன் என்று விதேயத்வம் சொல்லுகிறது –

———————————————————————————————-

எம்பெருமான் ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருக்கும் இருப்பு எங்களுக்கு கோசாரம் அன்று –
திருவவதாரம் பண்ணி சர்வ ஸூ லபனாய் வர்த்தித்து அருளுகிற காலத்தில் உதவப் பெற்றிலோம்
எங்கனே அவனைக் கண்டு ஆஸ்ரயிக்கும் படி -என்னில் நீங்கள் ஏதேனும் ஒரு படி உகந்து அருள பண்ணி ஆச்ரயிப்பது
-அது ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூ லபம் ஆகையால் அது திரு உடம்பையே அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடே ஓக்க விரும்பும் என்கிறார் –

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு -இத்யாதி –
தங்களை அழிய மாறி நோக்கும் தாயும் தந்தையும் போலே பரிவுடையனாய் -ஆத்மா தான் தனக்குப் பண்ணும் ஸ்நேஹத்தையும் பண்ணி
இங்கண் சில த்ருஷ்டாந்தங்களால் அளவிட ஒண்ணாத நிரவதிக ஸ்நேஹத்தையும் உடையனாய்
பகவத் அனுபவ சங்கோசம் இன்றிக்கே பரஸ்பரம் கூடி அல்லது செல்லாத படியான அமர சமூகத்துக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருந்து வைத்து
ப்ரஹ்ம ருத்ரர்களுடைய ஹ்ருதயத்திலேயும் வந்து நின்று அருளி அவர்களுக்கு நியாமாகனுமானவனை -மூவரில் வைத்துக் கொண்டு ஆதியானவனை என்றுமாம் –
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்-இத்யாதி –
லோகத்தில் உள்ள நீங்கள் கலங்கி -அவன் அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்தான உக்தன் –
இங்கு நாங்கள் காண உகந்து அருளினை படியாவான் அன்று
ஆகையால் ஸமாச்ரயணம் கூடாது என்று சம்சயிக்க வேண்டா
யாதொன்றை அவனுக்கு ஸ்வரூபமாக நினைத்தி கோள்-அத்தையே அவன் தன்னுடைய சமஸ்தானத்தோடே ஓக்க விரும்பும்
இங்கு உகந்து அருளினை இடத்தை நீள் கடல் வண்ணனான இடத்துக்கு விபூதி என்று இராதே உகந்து அருளினை இடத்துக்கு
நீள் கடல் வண்ணனான இடம் விபூதியாக கொள்ளுங்கோள் -என்றுமாம் –

————————————————————————————————-

தாம் உபதேசிக்கத் தொடங்கின ஸுலப்ய காஷ் டையை உபதேசித்து சமைந்து ப்ரஸ்துதமான கிருஷ்ண விருத்தாந்தத்தை ஸ்மரி த்து
திருத்தேரில் இருந்தும் சாரத்த்யம் பண்ணினவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை என்றோ நான் காணப் பெறுவது -என்கிறார் –

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

கடல் வண்ணன் கண்ணன்-இத்யாதி
கடல் வண்ணனான கண்ணன் -விண்ணவர்க்கு போக்யமானால் போலே எனக்கு போக்யமாக்கைக்கு ஈடாக வருகைக்காக
திருப் பாற் கடலிலே தன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு அனந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகையாலே அத்யுஜ்ஜ்வலனாய் உள்ளான்
பண்டு நூற்றுவர்-இத்யாதி
பண்டு பாதகமாய் வருகிற சேனையோடு கூடின நூற்றுவர் மங்கும்படி பாண்டவர்களுக்காக யுத்தம் செல்லா நிற்க
கனைக்கை-த்வநிக்கை-செறிகை என்றுமாம்
பண்டு என்ன செய்தே திரியும் அன்று என்பான் என் என்னில் ஓன்று போன காலத்தில் இங்கண் வ்ருத்தம் என்கிறது
-ஓன்று அன்றைக்கு உதவாதே நான் இழந்தேன் என்கிறது –

—————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியை அப்யஸிக்க பழுது இல்லாத பக்தராகை நிச்சிதம் –
ஆனபின்பு இது திரு வாய்மொழியை அப்யசிங்கோள் என்கிறார் –

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்-
கண்ணால் காண அரியனாய்-ஹ்ருதயத்தில் மிகவும் ஸூ லபனாய் -இது சம்ச்லேஷ விஸ்லேஷன்களுக்கு ப்ரயோஜகம்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
அயர்வறும் அமரர்களுக்கு ஸூ லபனாய் போலே சம்சாரிகள் எல்லாருக்கும் ஸூலபனாகைக்கு ஈடான அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்யத்தை உடையவனை
பண்கொள் சோலை
வண்டுகளுடைய த்வனியை உடைத்தாகை

——————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-5-

August 23, 2016

மது வனம் புக்க ஹனுமத் பிரமுகரான முதலிகளைப் போலே பகவத் குண பலாத்க்ருதராய்க் கொண்டு அடிமை செய்யப் பெற்று
ஹ்ருஷ்டராய் களித்த ஆழ்வார் -ஸ்ரீ கீதையில் எம்பெருமான் தேவ அஸூர விபாகம் பண்ணி அருளி
ஆஸூர ப்ரக்ருதிகளை நிந்தித்து தேவ ப்ரக்ருதிகளைக் கொண்டாடினால் போலே –
அறிவில்லாதாரையும் பகவத் சம்பந்திகள் அன்றிக்கே சிஷ்ட அபிமானிகளாய் இருப்பாரையும் சதிர் அடிப்பாரையும் அபஹூஸ்ருதரையும்
எம்பெருமானையும் ஆஸ்ரயித்து -பிரயோஜ நான்தர பரர்களையும் ராக்ஷஸ ப்ரக்ருதிகளையும் ஆஸூர ப்ரக்ருதிகளையும் அகப்பட
ஆரேனுமாக எம்பெருமானுடைய குணங்களை அனுசந்தித்தால் பரவசராய் கும்பீடு நட்டமிட்டு ஆடி கோகு கட்டுண்டு உழலாதாரை நிந்தித்து
பகவத் குண பிரஸ்தாவத்திலே கலங்கும் ப்ரக்ருதியானவர்களுடைய படி நமக்கு நினைக்கவும் பேசவும் நிலம் அல்ல வென்று இவர்களைக் கொண்டாடுகிறார் –
சாத்விக அஃரணிகளாய் இருக்கிற ஆழ்வாருக்கு களிக்கையும் சிலரை இகழ்க்கையும் கூடின படி என் என்னில்
விஷயாஸ் வத்தாலே பிறந்த தர்ப்பமும் ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய் தேயும் சிலரை இகழ்க்கையும் ஆகாது என்றாய்த்து சாஸ்திரம் சொல்லுகிறது
பகவத் தாஸ்ய அனுபவத்தால் வந்த களிப்பும் அது இல்லாதாரை இகழ்க்கையும் சாஸ்த்ரங்களோடு அவ்ருத்தம் என்னும் இடமும் முக்தருடையவும்
ஸ்ரீ நாரத பகவானுடையவும் வ்ருத்தாந்தங்களிலே பகவத் அனுபவ ஜெனிதமான ப்ரீதியில் அவையாம் என்றும் கொள்வது –

—————————————————————————————————————————–

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரக்ஷித்து அருளினை எம்பெருமானுடைய இந்த ஆச்ரித வாத்சல்யத்தை அனுசந்தித்தும்
அவிகிருதரராய் இருப்பார் வியர்த்த ஜன்மாக்கள் என்கிறார் –

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

மொய்ம்மாம் பூம் பொழில் –
மநோ ஹரமாய பெருத்து இருக்கிற திருச் சோலை -கைம்மா -யானை
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்-
வடிவு அழகால் என்னை அடிமை கொண்ட கிருஷ்ணனை -சொல்லிப் பாடி என்று மேலுக்கு எல்லாம்
வாயாலே பேசி குண ஜிதராயப் பாடி இருந்த இடத்திலே இருக்க மாட்டாதே பறப்பாரைப் போலே நெஞ்சு துடிக்க மாட்டாதார்
தங்களுடைய ஸத்பாவத்தில் இஹலோக பர லோகங்களில் கொண்ட பிரயோஜனம் என்
இப்பூமியில் உள்ளீர் சொல்லீ கோளே-
தண் கடல் வட்டத்து உள்ளீரே
இப் பூமியில் பிறந்தது அவனுடைய குண அனுசந்தானம் பண்ணுகைக்கு என்று கருத்து –

———————————————————————————————-

சகல ஜகத்தினுடைய உபத்திரவங்களை போக்கி ரக்ஷிக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ யபதி யினுடைய இந்நீர்மையில் அகப்படாதார்
மஹா துக்கம் பொறுக்க ஒண்ணாத படி வந்து அனுபவிக்க சம்சாரத்திலே வந்து பிறக்கிறவர்கள் -என்கிறார் –

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.–3-5-2-

தண் கடல் -இத்யாதி –
ஜகத்தில் உள்ளாரை நிர் நிபந்தனமாக கொண்டு தந்தாமுக்கு இரையாக புஜித்து இங்கனே இருக்கும் அநீதிகள் பண்ணுகைக்கு
காலிலே ஒருவரால் தவிர்க்க ஒண்ணாத வீரக் கழல் இட்டு இருக்கிற அஸூரர்க்கு பிராட்டியும் தானும் கூட அனர்த்தங்களை எண்ணா நிற்குமவனை
பண்கள்-இத்யாதி –
பண்கள் உஜ்ஜவலமாம் படி நெஞ்சம் அலமந்து கூத்தாடி இதுவே படியாய்த் திரியாதார்

—————————————————————————————–

உபகாரம் அறியாத பசுக்களுக்கும் -தத் பிராயருக்கும் வந்த ஆபத்தை நீக்குகைக்காக கோவர்த்தன உதாரணம் பண்ணி அருளின
இம் மஹா குணத்தை அனுசந்தித்து வைத்து அவிகிருதராய் இருக்கும் இருப்பு கிடீர் நரக அனுபவம் ஆவது என்கிறார் –

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-

தொலைவு தவிர்த்த பிரானை-
விநாசத்தை தவிர்த்த மஹா உபகாரகனை
தலையினொடு-இத்யாதி –
கும்பிடு நட்டையும் குணாலையும் இட்டு ஸம்ப்ராந்தகர் ஆகாதார் துக்க பஹுளமான நரகத்திலே நாள் தோறும் துக்கப் படா நின்று கொண்டு
யமபடர்க்கு பாத்யதயா அபூர்வவத் லால நீயர் ஆனவர்கள்

———————————————————————————————–

நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்து அவளோடு சம்ச்லேஷித்த பிரணயித்தவ குணத்தை அனுசந்தித்து
ஈடுபடாதவர்கள் வைஷ்ணவர் நடுவே என் செய்யப் பிறந்தார் என்கிறார் –

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?–3-5-4-

வம்பு அவிழ் கோதை பொருட்டா-இத்யாதி
நறு நாற்றம் புறப்படா நின்றுள்ள பூ மாலையை உடைய நப்பின்னை பிராட்டிக்காக பெரிய விடை ஏழையும் ஊட்டியாக நெருக்கி
அவை பாத்தம் போராமே முறுவல் செய்கையாலே சிவந்து தோன்றின திருப் பவளத்தை உடையனாய் இத்தாலே பிறந்த
வீர ஸ்ரீ யையும் உடையனான கிருஷ்ணனுடைய பிரணயித்தவ குணத்தை ப்ரீதியா சொல்லி
கும்பிடு நட்டம் இட்டு-இத்யாதி –
ஹர்ஷ பிரகரக்ஷத்தாலே கும்பிடு நட்டமிட்டு கூத்தாடி அமர்யாதமான ப்ரவ்ருத்திகள் மிக்கு இதுவே போக்யமாய் வர்த்தியார் –

————————————————————————————————

ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக ஸ்வ அசாதாரண திவ்ய ரூப விசிஷ்டானாய்க் கொண்டு திரு வவதாரம் பண்ணின
குணத்தைக் கேட்டால் அவிக்ருதராய் இருக்குமவர்கள் வஸ்து பூதர் அன்று என்கிறார் –

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-

ஆதி அம் சோதி உருவை-இத்யாதி
நித்தியமாய் அப்ராக்ருத தேஜோ ரூபமான திரு உடம்பை அங்கு இருந்த படியே வைத்துக் கொண்டு இங்கே வைத்து
பிறப்பதும் செய்து இப்படி வேத ப்ரத்யனானவனை –
ஓதி உணர்ந்தவர் முன்னா-
ஓதி உணர்ந்து வைத்து ஞான பலம் இல்லாமையால் அவர்கள் நிந்தியரில் பிரதம பாவிகள் என்று கருத்து –
என் சவிப்பார் மனிசரே?–
எத்தை ஜபிப்பது -அவர்கள் சேதனரோ

———————————————————————————————

மனுஷ்யாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணி அருளின எம்பெருமானுடைய போக்யதையை அனுசந்தித்து
பரவசராய் இருப்பார்கள் ஆகில் அவர்கள் எல்லா அறிவின் உடைய பலமும் கை வந்தவர்கள் என்கிறார் –

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-

மனிசரும் -இத்யாதி
மனுஷ்யாதி ரூபேண அத்தியாச்சார்யமான பிறவியை உடையனாய்க் கொண்டு வந்து பிறப்பதும் செய்து இந்நீர்மையில்
தனக்கு ஒருவரும் அகப்படாதே தானேயாம்படி தனியனானால் சோம்பி விடக் கடவன் அன்றிக்கே இதுக்கு முன்பு
ஆஸ்ரிதற்காக பிறவாதானாய் திரு அவதாரங்களுக்கு எல்லாம் அடியாக திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து
அருளி சகல ஜந்துக்கள் பக்கலிலும் அனுக்ரஹ சீலன் ஆனவனை
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்-இத்யாதி –
நிரதிசய போக்யனானவனை அநஸூயுக்களாய் ஏத்திக் குனிப்பார் –
முனித்வம் ஆகிற தெளிவின்றிக்கே ஏத்திக் குனிப்பார் என்றுமாம் –

——————————————————————————————————-

ஆஸ்ரிதரான பாண்டவர்களுடைய விரோதிகளை போக்கின எம்பெருமானுடைய
குண அனுசந்தானத்தாலே சிதிலர் ஆகாதார் ஜநநீ க்லேசகாரிகள் என்கிறார் –

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-

நீர்மை இல் நூற்றுவர் வீய-இத்யாதி
பந்துக்கள் ஜீவிக்க வேணும் என்னும் நீர்மை ஒன்றும் இன்றிக்கே இருக்கிற துரியோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி
பாண்டவர்களுக்கு பிரசாதத்தை பண்ணி நின்று பூமிக்கு பாரமாம் படி பல்கின சேனை எல்லாம் முடிப்பதும் செய்து
சாரத்ய வேஷம் ஆகிற விலக்ஷணமான அழகை உடையவனை நினைத்து ஹர்ஷ ப்ரகரஷத்தாலே ஆடி –
நீர் மல்கு கண்ணினர் ஆகி-இத்யாதி –
கண்ண நீர் செற்றி சிதில அந்தகரணராய் ஓசியாதே சரீரங்கள் மாம்சளமாய் பிசல் பருத்து இருக்குமவர்கள்
வைஷ்ணவர்களுக்கு ஒரு பிரயோஜனத்துக்கு உறுப்பு அல்லர் –

———————————————————————————————

சம்சாரத்திலே இருந்து வைத்து -சர்வ காலத்திலும் சர்வ ஆசிரயணீயனான திருவேங்கடமுடையானுடைய குணங்களுக்கு
ஈடுபடுமவர்கள் அயர்வறும் அமரர்களிலும் சிரேஷ்டர் என்கிறார் –

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.–3-5-8-

நிரதிசய போக்யமான திருமலையில் நின்று அருளி என்னை அடிமை கொண்ட திருவேங்கடமுடையானுடைய
விபூதிமுகமாக வாசகமான நாமங்களையும் அசாதாரணமான நாமங்களையும் சொல்லிப் பிதற்றி –
வைஷ்ணவர்கள் அல்லாதார் பித்தர் என்று சொல்லும் படி –
வைஷ்ணவர்களுடைய விஷயீ காரத்திலும் அவைஷ்ணவர்கள் இகழ்க்கையே புருஷார்த்தம் என்று கருத்து
மனுஷ்யர் சந்நிதத்தோடு அசந்நிதத்தோடு வாசி இன்றிக்கே லௌகீகர் சிரித்த அச் சிரிப்பே தாளம் போலே
உத்தம்பாகமாம் படி சசம்ப்ரம சேஷ்டிதத்தை உடையராய் அபி நிவேசம் மிக்கு கூத்தாடுமவர்கள் –

——————————————————————————————————

கைவல்ய புருஷார்த்த நிஷ்டரை நிந்தித்து மாற்று உள்ளார் எல்லாரும் பிரேம பரவசராய்
குணங்களை அனுபவியுங்கோள்-இதுவே புருஷார்த்தம் என்கிறார்-

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .–3-5-9-

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் சர்வேஸ்வரனாய் இருந்துள்ள எம்பெருமானை மனசிலே தயலுற யோகாப்யாஸம் பண்ணி
அவனோடு சாம்யத்தை பிராபிக்க வேணும் என்று துணிய வல்லாரை ஒழிய அல்லாதவர் எல்லாம் பகவத் குணங்களை
நெஞ்சிலே ஈடுபடும் படி அனுசந்தித்து கிளம்பி யாடி யவற்றை சொல்லிக் கூப்பிடுகையே கர்த்தவ்யம் –

—————————————————————————————————–

பகவத் குணங்களைக் கேட்டால் விக்ருதர் அன்றிக்கே இருக்கும் இருப்பாகிற அறிவு கேட்டைத் தவிர்ந்து
எல்லீரும் அவனுடைய குணங்களை அனுசந்தித்து பரவசராய் லஜ்ஜை அபிமானங்களை விட்டு அவனை ஏத்துங்கோள் என்கிறார்-

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.-3-5-10-

கருமமும் கரும பலனும்-இத்யாதி –
புண்ய பாப ரூபமான கர்மங்களுக்கும் கர்ம பலன்களும் நியந்தாவாய் -சர்வ ஜகத் காரணமுமாய் வடிவு அழகையும்
கண் அழகையும் காட்டி அயர்வறும் அமரர்களைப் போலே என்னை அடிமை கொண்டவனை –
ஒருமை மனத்தினுள் வைத்து-இத்யாதி –
அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஹ்ருதயத்தில் வைத்து சிதில அந்த கரணராய் கிளம்பி ஆடி –

——————————————————————————————————

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு-பகவத் குண அனுசந்தானத்தால் ஒரு விக்ருதி
பிறவாமை யாகிற மஹா பாபத்தை இது தானே நிச்சேஷமாகப் போக்கும் என்கிறார் –

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-

தீர்ந்த அடியவர் தம்மைத்-இத்யாதி –
எம்பெருமானையே ப்ராப்யமும் பிராப்பகமும் என்று அத்யவசித்து இருக்கும் ஆஸ்ரிதரை நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராக்கி
அடிமை செய்வித்துத் கொள்ளும் மிக்கு இருந்துள்ள புகழை உடையவனாய் அவர்களோடு நித்ய சம்லிஸ்ஷடன் ஆனவனை –
அமரர் பிரானைஎம் மானை-
தான் ஒருவன் உளன் என்று அறியாத என்னை அயர்வறும் அமரர்களோடு ஓக்க அடிமை கொண்டவனை –
வாய்ந்த வளவயல் சூழ்தண்-வளம் குரு கூர்ச்சட கோபன்-
வாய்ந்த திருநகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழி –

——————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-5–

August 23, 2016

கீழ் தமக்கு உண்டான பகவத் அனுபவ ப்ரீதி ஹர்ஷத்தாலே கழித்து -அதுக்கு தூரஸ்தரானாரை இகந்து அதுக்கு கூட்டாரானாரை கொண்டாடுகிறார்
முந்நீர் ஞாலத்தில் இவருக்கு உண்டான சோகம் நமக்கு நிலமாகில் யாய்த்து இந்த ஹர்ஷம் நமக்கு நிலமாவது
-வீத ராகராய் இருப்பார்க்கு சோக ஹர்ஷங்களும் தத் ப்ரயுக்தமான ராக த்வேஷங்களும் சாஸ்திரங்களில் நிஷேதியா நிற்க
சாத்விக அக்ரேஸரான இவர்க்கு இவை கூடின படி எங்கனே என்னில் –
விஷயத் செருக்கால் வந்த ஹர்ஷமும் தத் அபாவத்தில் பிறக்கும் சோகமும் தத் ப்ரயுக்தமான ராக த்வேஷமும் யாயிற்று சாஸ்திரங்களில் நிஷேதித்தது –
பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷமும் அதுக்கு தூரஸ்தரை நிந்திக்கையும் -இவ்வனுபவத்துக்கு கூட்டானாரை கொண்டாடுகையும் சாஸ்த்ர சித்தம் –
இது தான் முக்தர் பக்கலிலும்-சர்வ சம்சய நிர்முக்தோ நாரதஸ் சர்வதர்மவித்-என்கிற ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலும்
மது வனம் அழித்த திருவடி முதலான முதலிகள் பக்கலிலும் காணலாம்
இவரும் பகவத் அனுபவ பலாத்க்ருதராய் அஞ்ஞரையும் விஷய பிரவணரையும் பகவத் சம்பந்தம் இன்றிக்கே சிஷ்ட அபிமானிகள் ஆனாரையும்
பரபரக்கு அற்று அவிசேஷஞ்ஞானரையும் -எம்பெருமானை ஆஸ்ரயித்து பிரயோஜனாந்தர பரரானாரையும் ராக்ஷஸ ப்ரக்ருதிகளையும்
ஆஸூர ப்ரக்ருதிகளையும் நிந்தித்து பகவத் குண பிரஸ்தாவத்திலே விக்ருதராய் இருக்குமவர்களைக் கொண்டாடுகிறார் –

—————————————————————————————————————-

ஆனைக்கு உதவின நீர்மையை அனுசந்தித்து ஈடுபடாதே அவிகிருதரராய் இருப்பார் வியர்த்த ஜன்மாக்கள் என்கிறார் –

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

மொய்ம்மாம் பூம்பொழிற்-
செறிந்து பரந்து தர்ச நீயமான பொழில் என்னுதல் -செறிந்து பூத்த மாம் பொழில் என்னுதல்
மா பொழில் -மொய் பூம் பொய்கை-
மாம் பொழிலையும் செறிந்த பூவையும் உடைய பொய்கை என்னுதல் –
நெடு நாள் பூத் தேடி விடாய்த்த ஆனைக்கு விடாய் கெடுகைக்கு உடல் ஆகையால் பொய்கையோபாதி சோலையும் உத்தேசியமாய் இருக்கிறது இவருக்கு
பொய்கை முதலைச் சிறைப்பட்டு-
வெளி நிலம் அல்லாமையாலே யானைக்கு நிலம் அன்றிக்கே முதலைக்கு நிலம் ஆகையால் சிராய்ப்பு பட்டதாய்த்து –
முதலைச் சிறைப்பட்டு-
ஷூ தர ஜந்துவின் கையிலே அகப்பட்டது -ஸிம்ஹம் அன்று -சஜாதீயமான யானை என்று -புலி என்று
நின்ற-
திவ்யம் வர்ஷ சகஸ்ரகம் -என்று நெடு நாள் செல்லுகை -வியாபார ஸூ ன்யமாய் நின்ற என்றுமாம் –
கைம்மா-
எல்லாவற்றையும் கையாலே தள்ளிப் பொகடவற்று -என்னுதல் –
துதிக்கை ஒழிய முழுத்தும் படி முதலையின் கையிலே அகப்பட்டு வியாபாரிக்க மாட்டாதே நின்று என்னுதல் -முழு வலி முதலை இ றே
அருள் செய்த
அதன் கையில் பூவை செவ்வி அழியாத படி திருவடிகளில் இடுவித்துக் கொண்டு அத்தை ஆசுவாசிப்பித்த படி
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
அதன் விடாய் கெடும் படியான சிரமஹரமான வடிவும் ஸுலப்யமும் –
ஆனையின் நோவாற்ற வந்த விசல்ய கரணியும் சந்தான கரணியும் யாயிற்று இவை
எம்மானைச்
அவன் வந்த போதே ஆனையின் சிறை போயிற்று -அந்நீர்மையில் இவர் சிறை பட்டார்
தன் மேன்மை பாராதே ஒரு திர்யக்க்குக்கு உதவுவதே என்று தாம் எழுதிக் கொடுக்கிறார்
சொல்லிப் பாடி-எழுந்தும் பறந்தும் துள்ளாதார்-
அந்நீர்மையை வாயாலே பேசி -ப்ரீதி பிரேரித்தராய் பாடி இருந்த இடத்திலே இருக்க மாட்டாதே எழுந்து இருந்து தரையிலே கால் பாவாதே
சாசம்ப்ரம ந்ருத்தம் பண்ணாதவர்கள்
நமக்கு ஒரு ஆபத்து வந்தால் இருந்த இடத்தில் இராதே விக்ருதனாம் போதும் அவனே வேணும் –
அவன் நூறாயிரம் செய்தாலும் அவிகிருதராம் போதும் நாமே வேணும் என்று பட்டர் அருளிச் செய்வார்
தம்மால் கருமம் என்?
தங்கள் ஸத்பாவத்தால் இஹ லோக பர லோகங்களில் கொண்ட பிரயோஜனம் என்
தங்கள் கருத்தால் கண்ட பிரயோஜனம் என்
சொல்லீர்,-தண் கடல் வட்டத்து உள்ளீரே!–
சதுஸ் சஹார பர்யந்த பூமியில் உள்ள நீங்கள் சொல்லி கோளே
இப்பூமியில் பிறந்தது பகவத் அனுபவத்துக்காக என்கை
ப்ரஹ்ம தேசத்தில் அப்பன் பிள்ளையோடு திருவாயமொழி கேட்ட போதை வார்த்தை நினைப்பது –

———————————————————————————————

தங்களுக்கு இடர் உண்டு என்றும் அறியாத சம்சாரிகளுடைய விரோதியைப் போக்கும் நீர்மையிலே
அகப்படாதார் மஹா பாபம் அபிபவிக்க பிறக்கிறவர்கள் என்கிறார் –

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.–3-5-2-

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
துஷ் ப்ரக்ருதிகள் நலிகைக்கு பண்ணும் அபகாரம் ஏக தேச வாஸித்வமான பாந்தவமே உள்ளது
தண் கடல் வட்டத்தில் உண்டு உடுத்து திரியுமதுவே ஹே துவாக –
தே வயம் பயதா ரஷ்யா பவத் விஷய வாஸின -என்று ஈஸ்வரனுக்கு ரஷிக்கைக்கு பற்றாசான அதுவே இவர்களுக்கு நலிகைக்கு பற்றாசு –
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
தங்கள் சரீர போஷணத்துக்கு உடலாக -கொன்று ஜீவிக்கும் –
திண் கழற்கால் அசுரர்க்குத்
திண்ணிய வீரக் கழலை ஹிம்ஸார்த்தமாக காலிலே இட்டு இருக்கும் அ ஸூ ரர்க்கு
ஏதத் வ்ரதம் மம-என்று ரக்ஷகன் தீஷித்து இருக்குமா போலே யாயிற்று இவர்கள் ஹிம்சையில் தீஷித்து இருக்கிற படி –
அவனுக்கு கிருபையால் யாயிற்று இவர்களுக்கு க்ரூர்யமும்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
மித்ர பாவேந-என்னுமவனும் -பவேயம் சரணம் ஹி வ -என்னுமவளாக இவர்களை முடிக்கும் விரகுகளை எண்ணா நிற்பார்கள்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பண்கள் உஜ்ஜவலமாம் படி -என்னுதல் -ஹர்ஷத்தாலே ஒரு பண்ணிலே எல்லாப் பண்ணும் கூடும்படி அடைவு கெடப் பாடி என்னுதல் –
பறந்தும் குனித்தும் உழலாதார்-
தரையிலே கால் பாவாதே ஆடி -இதுவே யாத்ரையாய்த் திரியாதார்
வல்வினை -மலைந்தே.-மோத –மண் கொள் உலகிற் பிறப்பார்-
மஹா பாபம் மேலிட்டு எற்றுகை யாயிற்று பிறவிக்கு பலம் –
பகவத் குணம் கேட்டால் இறுக்கு வாதம் வலித்து-அவிகிருதராய் இருப்பார்கள் –சாதுர்த்திகம் எடுத்து அறையும் போது செய்யலாவது இல்லையே –

————————————————————————————————–

உபகாரம் அறியாத பசுக்களுக்கும் தத் பிராயர்களுக்கும் வந்த ஆபத்தை நீக்கின மஹா குணத்தை அனுசந்தித்து
அவிகிருதரராய் இருக்குமவர்கள் நித்ய சம்சாரிகளாய்ப் போவார்கள் என்கிறார் –

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-

மலையை எடுத்துக் கல் மாரி-காத்துப்
இந்திரன் பசிக் கோபத்தால் கல் வர்ஷமாக வர்ஷிக்க -நம்மாலே வந்தது இ றே இது என்று தாம் ரக்ஷகமாக அருளிச் செய்த மலையை எடுத்து ரஷித்த படி –
அவனை அழியச் செய்ய வேண்டும் அபராதம் உண்டாய் இருக்க இயற்றி இல்லாதாரைப் போலே மலையைத் தரித்துக் கொடு நிற்பான் என் என்னில்
அநு கூலனுக்கு காதாசித்கமாக வந்ததாகையாலே அஸூரர்கள் திறத்து செய்யுமத்தை செய்ய ஒண்ணாது என்று இருந்தான் –
நீர் வர்ஷமாகில் கடலை எடுத்து ரக்ஷிக்குமாயிற்று –
பசு நிரை தன்னைத்-தொலைவு தவிர்த்த பிரானைச்-
உபகாரம் அறியாத பசுக்களுடைய வி நாசத்தை தவிர்த்த மஹா உபகாரகனை
பிரானை -அது தமக்கு உபகரித்தது என்று இருக்கிறார் –
சொல்லிச் சொல்லி-நின்று –
பத்த பரிகரஸ் தேந மோஷாய கமநமபிரதி சக்ருத்துச்சரிதம் யேந ஹரிரித்ய ஷரத்வயம் –என்று ஒரு கால் சொல்லி விடுவது பலார்த்தம் ஆகில் இ றே
எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்-தடு குட்டமாய்ப் பறவாதார்-
தலை தரையிலே தட்டப் பண்ணும் அங்க விகாரத்தை உடையராய் ஸம்ப்ராந்தர் ஆகாதார் –
அலை கொள் நரகத்து அழுந்திக்-கிடந்து உழக்கின்ற –
துக்கோர்மி பஹு லமான சம்சாரத்திலே புறப்பட விரகு அறியாத க்லேசிக்கிற நம்பர்
வம்பரே.–
எம படர்க்கு அபூர்வவத் ஆதரணீயர் ஆகை –
அப்பாவங்களுக்கு அபூர்வவத் லால நீயராய் இருக்கை
பகவத் குண அனுபவத்தில் அவிகிருதராய் இருக்கும் இருப்பு தானே நரக அனுபவம் என்றுமாம் –
புநரபி-
மலையை -இத்யாதி
ஆஸ்ரிதர் உடைய ஆபத்தில் அரியன செய்து ரக்ஷிக்குமவன்
பசு நிரை இத்யாதி
ரக்ஷணத்துக்கு வேண்டுவது ஆபத்தும் விலக்காமையும்
பிரானை –
தென்றல் தண்ணீர் போலே பரார்த்தமாய் இருக்குமவன்
சொல்லி இத்யாதி
அவாக்ய அநாதர -என்கிறவன் இப்படி விக்ருதனாய் ரக்ஷிக்கிற மஹா குணத்தை அனுசந்தித்து
அவிகிருதரராய் இருக்குமவர்கள் நித்ய சம்சாரிகளாய் போவார்கள் –
அவன் தன்னை தங்களுக்காக ஒக்கினால்-அவனுக்காக தங்களை ஒக்காதார் அவஸ்துக்கள் என்கை
தடு குட்டம் -குணாலை கூத்து –

—————————————————————————————————-

நப்பின்னைப் பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்த பிரணயித்தவ குணத்துக்கு ஈடு படாதவர்கள்
சாத்விகர் நடுவே என்ன பிரயோஜனத்துக்காக பிறந்தார்கள் -என்கிறார் –

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?–3-5-4-

வம்பு அவிழ் கோதை பொருட்டா
வம்பு -பரிமளம் / அவிழ்க்கை -அத்தைப் புறப்பட விடுகை / கோதை -மாலை / பொருட்டா -அவ்வொப்பனை அழகுக்கு தோற்று-தவாஸ்மி-என்றபடி
மால் விடை ஏழும் அடர்த்த
எருதுகளின் பெருமை கணிசிக்க ஒண்ணாதே பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை –
அவளை அணைக்கையில் த்வரையாலே க்ரமத்தால் அன்றிக்கே ஏழையும் ஒரு காலே ஊட்டியாக நெரித்த படி
செம் பவளத்திரள் வாயன்
இவளை அணைய பெறுகையால் உண்டான ஹர்ஷத்தாலே ஸ்மிதம் பண்ணினான்
எருதுகள் தனக்கு இரை போராமையாலே ஸ்மிதம் என்றுமாம் –
பவளத் திரள் போலே சிவந்து தோற்றின திருப் பவளத்தை உடையவன் –
சிரீதரன்
எருதுகளை நிரசித்து வீர லஷ்மியோடே நின்ற நிலை -பார்த்தாரம் பரிஷஸ்வஜே -என்று அவள் தான் வந்து அணைக்க வேண்டும்படி நின்ற நிலை
தொல் புகழ்
ஸ்வரூப அனுபந்தியான பிரணயித்தவ குணத்தை
பாடிக்
அந்தப்புரத்தில் உள்ளாரைப் போலே பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கும்பீடு நட்டம் இட்டுக் கூத்தாடி
கோகு உகட்டு உண்டு உழலாதார்
கோகு -அடைவு கேடு / உதட்டு -தலை மண்டையிட்டு / உண்டு -இதுவே ஜீவனம் ஆகி / உழலாதார்-அதுவே யாத்திரையாக இராதார்
தம் பிறப்பால் பயன் என்னே-சாது சனங்க ளிடையே?–
பகவத் குணங்களில் விக்ருதராய் வர்த்திக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே பிறந்த இத்தால் பெற்ற பிரயோஜனம் என் –
திருப்புன்னைக்கீழ் ஒருவர் இருக்குமிடத்திலே நம் முதலிகள் பத்துப்பேர் கூட நெருக்கிக்கொண்டிருக்கச்செய்தே, கிராமணிகள்,
மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து
நெருக்குமாறு போலேகாண்’ என்று பிள்ளைப்பிள்ளை ஆழ்வான் அருளிச்செய்வர்.–பிள்ளைப்பிள்ளை ஆழ்வான்– கூரத்தாழ்வான் சிஷ்யர்.-

——————————————————————————————

ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு திருவவதாரம் பண்ணின
குணத்தை அனுசந்தித்தால் அவிக்ருதமாய் இருக்குமவர்கள் அவஸ்துக்கள் என்கிறார் –

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-

சாது சனத்தை நலியும்-கஞ்சனைச் சாதிப்பதற்கு
சாது ஜனம் என்று நினைக்கிறது ஸ்ரீ வ ஸூ தேவரையும் தேவகி முதலானாரையும்
தான் அவதரிக்க நினைத்த ஸ்தலத்தில் நலிந்து நெடு நாள் சிறை வைத்துப் போந்த கம்சனை நிரசிக்கைக்காக
ஆதி அம் சோதி உருவை-அங்கு வைத்து இங்குப் பிறந்த
நித்தியமாய் அப்ராக்ருத தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹத்தை அங்கே இருக்கிற படியே தன் பக்கலிலே வைத்துக் கொண்டு இங்கே பிறந்த
வேத முதல்வனைப்
இப்படி வேத ப்ரதிபாத்யனானவனை –
அஜாயமானோ பஹுதா விஜாயதே –
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்ட்யாய சம்பவாமி
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்தி
பாடி
அவதரித்த பிரகாரத்தை ப்ரீதி பிரேரிதனாய் சொல்லி
தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோனிம்
பிறந்தவாறும் வளர்ந்தவாறும்
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓர் அளவில் நில்லாதே நெடும் தெருவோடு குறும் தெருவோடு வாசியற ஆடாதார் -மிளகு ஆழ்வான் வார்த்தை –
ஓதி உணர்ந்தவர் முன்னா
பரபரக்கற்ற அறிவுடையராக தங்களை நினைத்து இருக்குமவர்கள் ஞான பலம் இல்லாமையால் நிந்தியரில் பிரதம பாவிகள் என்கை –
விதுஷோ அதிக்ரமே தாண்ட பூயஸ்தம்
என் சவிப்பார்
எத்தை ஜெயிப்பது
மனிசரே?–
சாஸ்த்ர அதிகாரிகளும் அல்லர்
ஜெப பயனை அறியாமையால் ஜபமும் நிஷ்பலம்
சாஸ்த்ர ப்ரதிபாத்யனை அறியாமையால் சாஸ்த்ர அதிகார ஜென்மமும் அஸத் சமம் –
ஆன் விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –

—————————————————————————————-

ஈஸ்வரன் போக்யதையை அனுசந்தித்தால் விக்ருதர்கள் ஆவார்கள் ஆகில் –
அவர்கள் எல்லா அறிவின் பலமும் கை வந்தவர்கள் என்கிறார் –

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மற்றும் -என்கிறது தேவர்களை -/ முற்றும் என்கிறது திர்யக் ஸ்தாவரங்களை -ஸூ ர நர திரச்சாமவதரன்
மாயப் பிறவி பிறந்த
அத்யாச்சர்யமான பிறவி -ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே ஹேது உடையாருக்கும் அவ்வருகே பிறக்கை
தனியன் –
இவ்வாதாரங்களில் நீர்மைக்கு ஒருவரும் அகப்படாமையால் போம் போது தனியே போம் அத்தனை –
தாஸ்யம் ஐஸ்வர்ய வாதேன ஞானீ நாம் ச கரோம்யஹம் அர்த்த போக்தாச்ச போகா நாம்
பிறப்பிலி தன்னைத்
அநேக அவதாரங்கள் பண்ணின உபகாரத்தாலும் ஆஸ்ரிதற்கு ஒன்றும் செய்தானாய் இராது ஒழிகை
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
அவதரிக்கைக்கு உடலாக அவதார கந்தமான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற மஹா உபகாரகனை
வெல்லத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்ன கடவது இ றே
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்-கட்டியைத் தேனை அமுதை-
அதில் சாய்ந்த போதை அழகை அனுபவிக்கிறார் -கண்ட போதே நுகரலாய் -கோது கழிந்த ரசமாய் –
சர்வதோமுகமான போக்யமாய் ஆயாசிக்க வேண்டாத படி பருகலாம் படியாய் இனிமையே யன்றிக்கே சாவாமைக்கு மருந்துமாய் இருக்கை
முனிவு இன்றி
அவதாரம் ஆகிற மஹா குணத்திலே அநீஸ்வரத்வ தோஷத்தை அனுசந்திக்கிற அ ஸூ யையிலே இழியாதே-
முனிவு என்று முனித்வமாய்அவதாரத்தை அனுசந்தித்து தெளிவு உடையராய் அவிகிருதராகை இன்றிக்கே இருக்கை –
ஏத்திக் குனிப்பார்
வாசிக காயிகமான விக்ருதிகளை உடையராய் இருக்கை –
முழுது உணர் நீர்மையினாரே.–
முழுதும் உணர்ந்த ஸ்வ பாவத்தை உடையார் ஆவார்கள் –
ஒன்றுமே கற்றிலரே யாகிலும் -ஏக விஞ்ஞாநேந சர்வ விஞ்ஞானம் -என்கிறபடியே எல்லாம் அறிந்த பூர்த்தியை உடையவர்கள் –

——————————————————————————–

ஆஸ்ரித பக்ஷபாதம் ஆகிற மஹா குணத்தில் ஈடுபடாதே சரீர போஷண பரராய்த் திரிகிறவர்கள்
வைஷ்ணவர்களுக்கு எதுக்கு உறுப்பாக பிறந்தார்கள் என்கிறார் –

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-

நீர்மை இல் நூற்றுவர் வீய-ஐவர்க்கு அருள்செய்து நின்று-பார் மல்கு சேனை அவித்த-
பந்துக்கள் ஜீவிக்க வேணும் என்று இருக்கும் நீர்மை இல்லாதவர்கள்
-ஒரு முடகுத்தும் கொடோம்-பந்துக்கள் ஜீவிக்கில் ஜீவியோம் -என்றார்கள் இ றே -நிர்க்ருணர் ஆகையால் –
ஆஸூ ர பிரக்ருதிகள் என்று நூற்றுவரும் முடியும் படி பாண்டவர்களுக்கு அருள் செய்து -கிருஷ்ணாஸ்ரயா-என்கிறபடியே
தன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இ றே அவர்கள் இருப்பது
யேஷா மர்த்தே காங்ஷிதம் ந -என்று இ றே இத்தலையில் நீர்மை இருப்பது
யஸ்ய மந்த்ரீச கோப்தாச-என்று தானே அவர்களுக்கு எல்லாமாய் நின்றபடி
பூமிக்கு பாரமாம்படி மிக்க சேனையை எல்லாம் விளக்கு வைத்தால் போலே அநாயாசேன முடித்த படி
பரஞ் சுடரை நினைந்து ஆடி-நீர் மல்கு கண்ணினர் ஆகி-நெஞ்சம் குழைந்து நையாதே-ஊன் மல்கி மோடு பருப்பார்-
சேனா தூளியும்-முட் கோலும் சிறு வாய்க் கயிறுமாய் சாரத்ய வேஷத்தோடே நின்ற அழகை உடையவனை
ஆஸ்ரித அர்த்தமாக நின்ற இவன் வியாபாரத்தை நினைத்து விக்ருதராய் ஆடி -ஆஹ்லாத சீத நேத்ராம்பு -என்று
ஆனந்த ஸ்ருவை இட்டு நிரூபிக்க வேண்டும்படி அகவாயும் நெகிழ்ந்து சிதிலராகாதே மாம்சளமாய்
பிசல் பருத்து இருக்கும் படி சரீர போஷண பரராய் இருக்கிறவர்கள் –
உத்தமர்கட்கு என் செய் வாரே!–
பகவத் குண அனுசந்தானத்தாலே வார்ந்து வடிந்த சரீரங்களை உடைய வைஷ்ணவர்களுக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு உறுப்பு ஆகிறார்களோ
வைஷ்ணவர்களுக்கு உறுப்பாம் அதுவே ஜன்மத்துக்கு பிரயோஜனம் என்கிறார்
-ஈஸ்வரன் தன்னையும் தன் விபூதியையும் ததீயா சேஷம் ஆக்கி இ றே வைப்பது-

———————————————————————————

திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுமவர்களை கொண்டாடுகைக்கு நாம் யார் –
நித்ய ஸூ ரிகள் அன்றோ அவர்களைக் கொண்டாடுமவர் -என்கிறார்

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.–3-5-8-

வார் புனல் அம் தண் அருவி-வட திரு வேங்கடத்து எந்தை-
வீழா நின்ற புனலை உடைத்தாய் தர்ச நீயமாய் சிரமஹரமான திரு அருவியை உடைத்தாய் வடக்கே யான திருமலையில்
நின்று அருளி என்னை அடிமை கொண்ட திருவேங்கடமுடையானுடைய
பேர் பல சொல்லிப்
விபூதி விஷயமாகவும் ஸ்வரூப ரூப குண விஷயமாகவும் தாம் புகழு நல் ஒருவனில் -அனுபவித்தவற்றை நினைக்கிறார் –
பிதற்றிப்
அக்ரமமாகவும் சொல்லி
பித்தர் என்றே பிறர் கூற
பூமி என்கோ எண்ணா -கண்ணனை க் கூவுமாறே -என்னா நின்றார் -வ்யாஹதமாய் இரா நின்றதீ -பிராந்தரோ -என்று
என்னைச் சொல்லுமா போலே தங்களையும் கண்டார் கண்ட இடத்தே சொல்லும் படி –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்கீகாரத்தில் காட்டிலும் அவைஷ்ணவர் நிந்தையே உத்தேச்யம் என்று இருக்கிறார்
மிளகு ஆழ்வான் அகரம் பெற போன இடத்தில் வார்த்தை
பேயரே எனக்கு யாவரும் -இத்யாதி
ஊர் பல புக்கும் புகாதும்-உலோகர் சிரிக்க நின்று ஆடி-
மனுஷ்ய சந்நிதத்தோடு அ சந்நிதத்தோடு வாசி அற -விசேஷஞ்ஞர் உள்ள இடத்தோடு இல்லாத இடத்தோடே வாசி அற
லௌகீகர் சிரிக்க அதுவே தளமாக நின்று ஆட
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அபி நிவேசம் மிக்கு விக்ருதரமாவார்கள்
அமரர் தொழப்படுவாரே.–
பகவத் அனுபவத்தால் களித்து-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்னுமவர்களாலே கொண்டாடப் படுவார்கள்

————————————————————————————-

சீலாதி குண விசிஷ்டனான இவனை விட்டு ஆத்மமாத்ரத்தையே விரும்புகிற கேவலரை நிந்தித்து மற்று உள்ளார் எல்லாரும்
பிரேம பரவசராய் பகவத் குணங்களை அனுபவிக்கும் இதுவே புருஷார்த்தம் என்கிறார் –

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .–3-5-9-

அமரர் தொழப் படுவானை-
நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான பெருமையை உடையவனை
அனைத்து உலகுக்கும் பிரானை-
நித்ய விபூதியோடு லீலா விபூதியோடு வாசி யற சர்வ லோகேஸ்வரனை
அமர மனத்தினுள் யோகு-புணர்ந்து
அவனை நெஞ்சிலே உற்று இருக்கும் படி யோக அப்பியாசம் பண்ணி
அவன் தன்னோடு ஒன்றாக-அமரத் துணிய வல்லார்கள்-ஒழிய
சரம தசையில் அவனோடே சாம்யத்தை பிராபிக்க வேணும் என்று ஆத்ம மாத்ரத்தையே விரும்பும் சாஹசிகரை ஒழிய –
சாம்யம் ஆகிறது சுத்தி யோகத்தால் வந்த சாம்யம் –
ஒன்றாக வென்று சாம்யத்தை சொன்னபடி என் என்னில் –
பஜத்யேகத்வ மாஸ்த்தித-என்று அருளிச் செய்ய -சாம்யேன மது ஸூதன -என்று அநு பாஷித்தான் இ றே
அங்கண் இன்றிக்கே இது தான் வி லக்ஷண அதிகாரிகளை சொல்லிற்றாய் -அல்லாதவர் என்று அத்தனை அளவன்றிக்கே இருக்கிற
யாத்ருச தாத்ருஸரை இங்கனே செய்யுங்கோள் என்றது ஆனாலோ என்னில்
ஓதி உணர்ந்தவர் என்று -வி லஷணரையும் நிந்தித்து -முழுது உணர் நீர்மையினார்-என்று ஒன்றும் கற்றிலர்களே யாகிலும்
விக்ருதியை உடையார் சர்வஞ்ஞர் என்றும் கொண்டாடிப் போருகிற பிரகரணம் ஆகையால் அங்கண் ஆக ஒண்ணாதே
அல்லாதவர் எல்லாம்
கைவல்யத்தில் அகப்படாதே பகவத் குண ஜிதரானார் எல்லாரும்
அமர நினைந்து –
பகவத் குணங்களை நெஞ்சிலே உற்று இருக்கும் படி ஸ்வயம் பிரயோஜனமாக அநு சந்தித்து
எழுந்து ஆடி அலற்றுவதே கருமம்மே.–
கிளர்ந்து ஆடி -அக்ரமமாகச் சொல்லுவதே பிரயோஜனம் –

————————————————————————————-

கேவலரை நிந்தித்தார் கீழில் பாட்டில் -இதில் அநந்ய பிரயோஜனர் எல்லாம் பகவத் குணங்களை
பக்தி பாரவஸ்யத்தாலே அக்ரமமாக பேசுங்கோள் -என்கிறார்

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10-

கருமமும் கரும பலனும்-ஆகிய –
புண்ய பாப ரூபமான கர்மங்களுக்கும் நியந்தாவாய் -கர்ம பலன்களும் நியந்தாவாய்
காரணன் தன்னைத்-
காரணந்து த்யேய-என்கிறபடியே ஸமாச்ரயணீயன் ஆனவனை
திரு மணி வண்ணனைச்
உபாசிப்பார்க்கு சுபாஸ்ரயமான வடிவை உடையவனை –
-திரு என்று காந்தி -காந்தியை உடைத்தான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை
செங்கண்-மாலினைத் –
ஸமாச்ரயணீயன் புண்டரீகாக்ஷன் இ றே
தேவ பிரானை
இவ்வடிவு அழகையும் கண் அழகையும் நித்ய ஸூ ரிகளை அனுபவிப்பிக்குமா போலே என்னையும் அனுபவிப்பித்தனே –
ஒருமை மனத்தினுள் வைத்து-உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்-பெருமையும் நாணும் தவிர்ந்து-பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.-
ஒருபடிப்பட நெஞ்சிலே வைத்து -அநந்ய ப்ரயோஜனராய் ஹ்ருதயத்தில் வைக்கை-
ஒரு பலத்துக்காக அன்றிக்கே நெஞ்சு சிதிலமாய் ப்ரீதியாலே கிளர்ந்து ஆடி அபிமாநக்ருத்யமான பெருமையையும் நின்றார் எதிரே
விக்ருதராக ஒண்ணாது என்கிற லஜ்ஜையையும் இத்தைத் தாழ்வாக நினைக்கும் மதி கேட்டையும் தவிர்ந்து அக்ரமமாக ஏத்துங்கோள்-
புகழு நல் ஒருவனில் விபூதியாக ததீயத்வ ஆகாரேண உத்தேச்யமாக அநு சந்தித்தார்
இங்கு சிலரை நிந்தித்து சிலரை கொண்டாடினார் –
இத்தால் சொல்லிற்று யாய்த்து -அவன் சர்வ சேஷி யாகையாலே சர்வமும் ததீயமாக தோற்ற கடவது
அந்த சேஷித்வத்தை குறைவற அனுசந்தித்தார் அங்கு
தம்முடைய சேஷத்வத்தை அனுசந்தித்தவாறே அஞ்ஞர் புறம்பாய் பகவத் குண ஜிதர் உள்ளாராய்த் தோற்றிற்று-
அந்த சேஷத்வத்தை குறைவற அனுசந்தித்தார் இங்கு –

——————————————————————————————

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு-பகவத் குண அனுசந்தானத்தால் ஒரு விக்ருதி
பிறவாமை யாகிற மஹா பாபத்தை இது தானே நிச்சேஷமாகப் போக்கும் என்கிறார் –

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-

தீர்ந்த அடியவர் தம்மைத்-திருத்திப் பணிகொள்ள வல்ல-
அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யாவசித்த ஆஸ்ரிதரை பிரதிபந்தகங்களைப் போக்கி அடிமை கொள்ளும் சக்தியை உடையவன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருப்பாரை-க்ரியதாம் இதி மாம் வத-என்று அடிமை கொள்ளும் என்றுமாம்
ஆர்த்த புகழ்அச் சுதனை
மிக்க புகழ் -அடிமையில் நழுவ விட்டுக் கொடாதவனை
அமரர் பிரானைஎம் மானை
நித்ய ஸூ ரிகளை கொள்ளும் அடிமையை ஆசா லேசம் இல்லாத என்ன கொண்டு அருளினவனை
வாய்ந்த
கிட்டின -பகவத் குணங்களில் அவிக்ருதரை நிந்தித்து விக்ருதரைக் கொண்டாடும்படி தாம் இவ்விஷயத்தில் உள்புகுந்த படி
வளவயல் சூழ்தண்-வளம் குரு கூர்ச்சட கோபன்
வயலுக்கும் நகரத்துக்கும் சொல்லும் சிறப்பு எல்லாம் உண்டாய் இருக்கை –
நேர்ந்த
சொன்ன
ஓர் ஆயிரத்து இப் பத்தும்-
அரு வினை நீறு செய்யுமே.–
பகவத் குணங்களை கேட்டால் அவிகிருதரராய் இருக்கைக்கு அடியாகிற மஹா பாபத்தை போக்கும் –

————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-4–

August 22, 2016

தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு
ஸம்ப்ராந்தரான ஆழ்வார் பூதங்களையும் பவ்திகங்களையும்-விளக்குகளில் உஜ்ஜ்வல பதார்த்தங்களையும் ரஸ்யமான பதார்த்தங்களையும்
செவிக்கு இனிய காநாதிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும்
ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில்
ஆத்ம தயா வியாபித்து ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே
இவ்விபூதி யோகத்தால் தன்னுடைய அசாதாரண மான திரு மேனியால் பெறும் ஏற்றத்தையும் உடையனாய்
ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்
-கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும்
கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும்
விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும்
அவற்றைச் சொல்லும் சொல்லாலே இவனைச் சொல்லி வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –

——————————————————————————————————————————-

முதல் பாட்டில் இது திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

புகழும் நல் ஒருவன் என்கோ!
சுருதி ஸ்ம்ருதி யாதிகளால் புகழப் பட்ட நன்மையை உடையனான அத்விதீய புருஷன் என்பேனோ
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
ஒப்பில்லாத க்ஷமாதி குணங்களை உடைய பூமி என்பேனோ
திகழும் தண் பரவை என்கோ-தீ என்கோ! வாயு என்கோ!-நிகழும் ஆகாசம் என்கோ!-
ஸ்வ வ்யதிரிக்த பூத சதுஷ்ட்யம் ஸம்ஹ்ருதம் ஆனாலும் சில நாள் வர்த்திக்கும் ஆகாசம் என்பேனோ –
நீள் சுடர் இரண்டும் என்கோ!
மிக்க ஒளியை உடைய சந்த்ர சூ ர்யர்கள் என்பேனோ
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!-கண்ணனைக் கூவு மாறே.————
ஓன்று ஒழியாமே இப்பதார்த்தங்கள் எல்லாம் என்பேனோ –

————————————————————————————————

பூதங்களினுடைய கார்யமான பதார்த்தங்களையும் அடைவே பேசி அவற்றை விபூதியாக உடையனான தன்மையை அருளிச் செய்கிறார் –

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-

நாவியல் கலைகள் என்கோ!-
நாவினால் இயற்றப் படா நின்றுள்ள வாயு கார்யமான வித்யைகள் என்பேனோ –
வித்யைகளுக்கு வாயு கார்யத்வம் ஆவது -வித்யா ரூப சப்த உச்சாரணம் -வாயு ஜன்ய பிரயத்தன கார்யம்
ஞான நல் ஆவி என்கோ!
ஆவி என்று லக்ஷணையாலே சரீரத்தை சொல்லுகிறது –
ஞானத்துக்கு சரீரம் என்று ஞான சாதனமான சப்தத்தை சொல்லுகிறது –

————————————————————————————————

இந்த விபூதி யோகம் அவனுடைய அப்ராக்ருதமாய் திவ்ய பூஷணாதி களாலே அலங்க்ருதமான திருமேனியோடு ஓக்க தகுதியாய்
இருக்கும் என்னும் இடம் தோற்றுகைக்காக விபூதி கதனத்தின் நடுவே அவனுடைய திரு மேனியின் அழகைப் பேசுகிறார் –

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

மற்றைப் பாட்டுக்களிலும் அவனுடைய அசாதாரணமான படியை பேசின இடங்களுக்கும் இதுவே பிரயோஜனம்
கதிர் -என்று ஒளி
சாதி மாணிக்கம் என்கிறது -நிர்த்தோஷமாய்-சகஜமான அழகை உடையவன் என்கை –

————————————————————————————————–

தேஜோ விசிஷ்டமான மாணிக்யாதி பதார்த்தங்களை விபூதியாக உடையனான படியைப் பேசுகிறார் –

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-

சாதி மாணிக்கம் என்கோ!
ஆகரத்தில் பிறந்த மாணிக்கம் என்பேனோ
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
நிறைந்த ஒளியை உடைய பொன் என்பேனோ -நீர்மையை உடைத்த முத்தம் என்பேனோ –
சாதி நல் வயிரம் என்கோ!-
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
விச்சேதியாத அழகை உடைய பிரகாசம் என்பேனோ
ஆதி அம் சோதி என்கோ!
வி லக்ஷண தேஜோ ரூபமான திரு நாட்டிலே எழுந்து அருளி இருக்கிற இருப்பு –
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை-அச்சுதன் அமலனையே.–
எனக்கு ஒரு துணை இல்லாத காலம் நிர்ஹேதுகமாக அடிமை கொண்டு என்னை மங்காத படி காத்தவன் –

———————————————————————————————————

ரஸ வஸ்துக்கள் எல்லாம் அவனுக்கு விபூதி என்கிறார் –

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—

நித்ய விபூதியோடே கூடி இருக்கும் இருப்புக்கு ஒரு நாளும் ஓர் அழிவு இல்லாதானாய் -தன் பக்கல் ஆச்ரயண லேசம் உடையாரை
உபேக்ஷிக்கை யாகிற தோஷம் இன்றிக்கே அவர்களை அங்கீ கரிக்கும் ஸ்வ பாவன் என்பேனோ –
நச்சப்படும் மஹா ஒளஷதம்
கீழ் சொன்ன அமுதம் போலே இருந்த சுவை
நெய்ச்சுவை என்பேனோ மது என்பேனோ –

————————————————————————————————-

வேதம் தொடக்கமான இயலும் இசையுமான சப்த ராசியை விபூதியாக உடையனாய் இருக்கிற படியை பேசுகிறார் –

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.–3-4-6-

பிரமாண ஜாதத்தில் சார பூதமான வேதம் நாலும் என்பேனோ
வைதிக சமயத்துக்கு உப ப்ரும்ஹணமான சாஸ்திரங்கள் என்பேனோ
ஸ்ரவண மாத்திரத்திலே ஈடுபடுத்த வல்ல இசை என்பேனோ
இவற்றிலும் அற விலக்ஷண பாக்ய தமம் என்பேனோ
சாதன ரூபமான யத்னத்தின் அளவன்றிக்கே அதிமாத்ரமான பல ரூபம் என்பேனோ
வானவர் என்பது ப்ரஹ்மாதிகளை –

—————————————————————————————————–

ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்கள் எல்லாவற்றையும் விபூதியாய் உடையனாய் இருக்கிற படியை பேசுகிறார் –

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-

அயர்வறும் அமரர்களுக்கு ஸ்வரூப ஸ்தித் யாதிகளும் மற்றும் உள்ளன வெல்லாம் என்பேனோ –
பரி பூர்ணமான மோஷாதி புருஷார்த்தம் என்பேனோ –
வி லக்ஷணமான அழகை உடையவனை –

—————————————————————————————————

ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளை விபூதியாக உடையானுடைய படியை பேசுகிறார் –

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-

ஒருவன் என்று ஏத்த நின்ற-நளிர் மதிச் சடையன் என்கோ!
பிரதானம் என்று ஏத்துகைக்கு பாத்தம் உண்டாய் நின்ற ருத்ரன் என்பேனோ -நளிர் மதி -குளிர்ந்த சந்திரன்
நான் முகக் கடவுள் என்கோ!-
சதுர்முகனான தேவம் என்பேனோ
அளி மகிழ்ந்து-கிருபையை உகந்து/ களி -என்று தேன்

——————————————————————————————————-

அவனுடைய விபூதி விஸ்தாரங்கள் தனித்தனியே பேச முடியாது -கார்ய காரண ரூபமான சேதன அசேதனங்கள் அடைய
அவனுக்கு விபூதி என்று ப்ரயோஜகத்தாலே சொல்லலாம் அத்தனை என்கிறார்-

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-

ஷூத்ர புருஷார்த்தத்தை இரந்தார்கள் என்று பாராதே தானே ஆயாசித்து அவர்களுடைய ப்ரயோஜனங்களை
முடித்துக் கொடுத்த பெரியோனை – அச்சுதனை -ஆஸ்ரிதற்கு ஸ்யுதி இல்லாத படி இருக்கிறவனை –

—————————————————————————————————–

சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மா தயா வியாபித்து நின்றால் தத்கத தோஷை அச்மஸ்ப்ருஷ்டனாய் இருக்கும் –

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-

யாவையும் எவரும் தானாய்-அவர் அவர் சமயந் தோறும்-தோய்வு இலன்;
சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மாவாய் வைத்து அவற்றினுடைய துக்கித்தவ பரிணாம -இத்வாதி வியவஸ்தைகள் ஒன்றிலும் தோய்விலன்
அவரவர் என்று இரண்டுக்கும் உப லக்ஷணம்
புலன் ஐந்துக்கும்-சொலப்படான்;
சஷூராதி கரணங்களுக்கு விஷயமாக சொல்லப் படான்-
உணர்வின் மூர்த்தி;
ஞான ஸ்வரூபன்
ஆவி சேர் உயிரின் உள்ளால்-ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,-அவனையும் கூட லாமே.–
அநாதி காலம் கார்ய காரண உபய ரூபமான ப்ரக்ருதியோடே கலசி இருக்கிற பிரத்யாகாத்மாவுக்கு
பிரக்ருதியினுடைய பரிணாமித்வாதிகள் தட்டாதே இருக்கிறா போலே எம்பெருமானுக்கு இரண்டோடு கலசி
இருந்து வைத்தே அவற்றினுடைய ஸ்வ பாவம் தட்டாதே இருக்கக் கூடும் –

—————————————————————————————————-

நிகமத்தில் இப்பத்தும் கற்றவர்கள் நித்ய கைங்கர்யத்தை பெற்று அயர்வறும் அமரர்களாலே விரும்பப் படுவர் என்கிறார் –

கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-

வண்டுகள் எல்லாம் கூடி வந்து அலைக்கும் படியான போக்யதையை உடைத்தான் மாலையையும் வர்ஷூக வலாஹம் போலே
இருக்கிற நிறத்தை உடையவனை
இத் திருவாய் மொழியில் பேசின விபூதி தோளில் தோள் மாலை உடன் நிறத்தோடும் ஓக்க தகுதி என்னும் இடத்தை
நிகமத்திலே சொல்லுகிறது என்று கருத்து –
ஏவம்வித திவ்ய ரூபத்தை உடையனாய்க் கொண்டு என்றும் திரு நாட்டிலே எழுந்து அருளி இருக்கும் என்றும் சொல்லுவர்
அசேஷ தோஷ ப்ரத்ய நீகனாய் ஆஸ்ரிதரோடு நித்ய சம்ச்லேஷ ஸ்வ பாவனாய் ஆச்ரித ஜன ஸமஸ்த துக்காபேநோதன ஸ்வ பாவனாய்
-பரம உதாரனாய் இருக்கும் என்றும் சொல்லுவர் -மாடு -பர்யந்தம் -பாடல் -கானம்

——————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-4–

August 22, 2016

தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு
பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால்
பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ் ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும்
செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும்
ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து
ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே
ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்-
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும்
கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும்
விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும்
விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால்
அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –

————————————————————————————————————————–

முதல் பாட்டில் இது திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

புகழும் நல் ஒருவன் என்கோ!
சுருதி ஸ்ம்ருதி யாதிகளால் புகழப் பட்ட நன்மையை உடையனான அத்விதீய புருஷன் என்பேனோ
என்கோ என்கிறது என்பேனோ என்றபடி
பிள்ளான் -சர்வைஸ் சம்ஸ் தூயமாநன் -என்பேனோ என்னும் –
கீழ்ச சொன்ன குண யோகத்தால் வந்த வை லக்ஷண்யத்தோடு ஓக்க விபூதி யோகம் சொல்லுகிறது மேல் –
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
ஒப்பில்லாத க்ஷமாதி குணங்களை உடைய பூமி என்பேனோ -பொரு-ஒப்பு
திகழும் தண் பரவை என்கோ-தீ என்கோ! வாயு என்கோ!-
காரணத்தவத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தையும் குளிர்த்தியையும் உடைத்த ஜல தத்வம் –தத் காரணமாய் ஊர்த்தவ ஜலனமான அக்கினி -தத் காரணமான வாயு –
நிகழும் ஆகாசம் என்கோ!-
நிகழுகையாவது -வர்த்திக்கை
இதர பூதங்களுக்கு முன்னே ஸ்ருஷ்டமாய் இவை ஸம்ஹ்ருதம் ஆனாலும் சில நாள் நிற்கும் என்னுதல்-
தன்னை ஒழிந்தவை தன்னுள்ளே வர்த்திக்கும் படியாய் இருக்கும் என்னுதல் –
நீள் சுடர் இரண்டும் என்கோ!
மிக்க ஒளியை உடைய சந்த்ர சூ ர்யர்கள் என்பேனோ –
கார்ய வர்க்கத்துக்கு உப லக்ஷணம்
தாபத்தை ஆற்றுகைக்கும் -நீர்க் களிப்பை அறுக்கைக்கும் உறுப்பான சந்த்ர சூ ர்யர்கள்
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!-
ஓன்று ஒழியாமே எல்லாம் என்னுதல் -உபாதேய தமமான எல்லாம் என்னுதல் –
கண்ணனைக் கூவு மாறே.-
அர்ஜுனன் -ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்றத்தோடு -பூமி -என்றத்தோடு வாசி அற்று இருக்கிறது இ றே-

—————————————————————————————————————-

கார்ய வர்க்கத்தை சொல்லுகிறது –

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-

கூவுமாறு அறிய மாட்டேன்,
பக்தி பாரவசியத்தாலே-பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டேன் என்னுதல் –
இயத்தா ராஹித்யத்தாலே சொல்ல மாட்டேன் என்னுதல் அல்லது அர்த்தங்களில் அவிசதமாய் இருப்பது ஓன்று உண்டாய் சொல்லுகிறார் அல்லர்
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
கீழ்ச் சொன்ன பூமி என்கோ என்கிறதின் காரியமாய் -அதனுடைய காடின்யம் திரண்டால் போலியாய் -பூமிக்கு தாயகமான பர்வதங்கள் என்பேனோ
மேவு சீர் மாரி என்கோ!
திகழும் தண் பரவையினுடைய கார்யம் -வடிவு அழகாலும் குளிர்த்தியாலும் எல்லாராலும் மேவப்படும் ஸ்வபாவத்தை உடைய மேகம் என்பேனோ
இவருக்கு இரண்டு ஒரு காரியமாக இருக்கிறது இ றே திருமேனிக்கு போலியாய் இருக்கையாலே
விளங்கு தாரகைகள் என்கோ!
தீ என்கோ என்கிறதன் கார்யம் –விளக்கத்தை உடைய நக்ஷத்ராதிகள் –
நாவியல் கலைகள் என்கோ!
வாயு என்கோ என்கிறதன் கார்யம் -நாவால் இயற்றப் பட்ட சதுஷ்ஷட்டி கலைகள் –
வாயு கார்யம் -பிரயத்தனம் -பிரயத்தன அபிவியங்கம் இ றே வித்யை -ஆகையால் சொல்லுகிறது –
ஞான நல் ஆவி என்கோ!
நிகழும் ஆகாசம் என்றதன் கார்யம் -ஞானத்துக்கு சாதனமான சப்தம் –ஆவி என்று லக்ஷணையால் சரீரத்தை சொல்லுகிறது
ஞான சரீரம் என்று ஞான சாதனமான சப்தத்தை சொல்லுகிறது
குண வாசி சப்த்தத்தாலே குணியை நினைக்கிறது
நல்லாவி என்று இந்திரியங்களை வியாவ்ருத்திக்கிறது
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பரந்த குணங்களை உடைய கிருஷ்ணன்
பங்கயக் கண்ண னையே.–
தன் கண் அழகால் என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனை –

—————————————————————————————————-

அசாதாரணமான விக்ரகத்தை அனுபவிக்கிறார் -விபூதியின் நடுவே திவ்ய மங்கள விக்கிரகத்தை சொல்லுகிறது –
விபூதியும் திருமேனியோபாதி தகுதியாய் இருக்கும் என்னும் இடம் தோற்றுகைக்காக –

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

பங்கயக் கண்ணன் என்கோ!
கிட்டினாரோடு முதல் உறவு பண்ணும் கண்
பவளச் செவ் வாயன் என்கோ!
கண் அழகிலே துவக்கு உண்டாரை ஆதரித்து ஸ்மிதம் பண்ணும் போதை திரு அதரத்தின் பழுப்பை அனுபவிக்கிறார் –
அங் கதிர் அடியன் என்கோ!
நோக்குக்கும் முறுவலுக்கும் தோற்றார் விழும் திருவடிகள் –
அஞ்சன வண்ணன் என்கோ!
திருவடிகளில் விழுந்தார்க்கு அநு பாவ்யமாய் -சிரமஹரமாய் ஸூபாஸ்ரயமான வடிவு
செங் கதிர் முடியன் என்கோ!
அனுபவிக்கிற விஷயம் பிராப்தமுமாய் சர்வாதிகமுமாய் இருக்கிற படியை கோள் சொல்லித் தருகிற திரு அபிஷேகம் -செம்மை -அழகு
திரு மறு மார்பன் என்கோ!
அவன் ஸ் வா தந்தர்யத்தைக் கண்டு அகல வேண்டாத படியான லஷ்மீ சம்பந்தத்தை சொல்லுகிறது
திருவையும் மறுவையும் உடைய மார்பை உடையவன்
சங்கு சக்கரத்தின் என்கோ
இவர்கள் சேர்த்திக்கு என் வருகிறதோ என்று பயப்பட வேண்டாத படி ஆழ்வார்களை உடையவனை
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்னா
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்னக் கடவது இ றே
சாதி மாணிக்கத்தையே!–
ஆகரத்தில் பிறந்ததாய் பெரு விலையனான ரத்னம் போலே சிலாக்கியமான திரு மேனியை உடையவன்
நிர்த்தோஷமாய் சகஜமான அழகை உடையவன் என்கை –

————————————————————————————————-

தேஜோ விசிஷ்டமான மாணிக்யாதி பதார்த்தங்களை விபூதியாக உடையனான படியைப் பேசுகிறார்
வேதாந்த வ்யுத்பத்தி பிறந்தால் -யத்யத் விபூதிமத் சத்தவம் ஸ்ரீமதூர்ஜ் ஜிதமேவ வா -என்கிறபடியே
ஸ்வ தந்திரம் அன்றிக்கே சகல பதார்த்தங்களும் அவனுக்கு விபூதியாகத் தோற்றுகையாலே அருளிச் செய்கிறார் –

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-

சாதி மாணிக்கம் என்கோ!
ஆகாசத்தில் பிறந்த மாணிக்கம் என்பேனோ
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
புகர் விஞ்சின பொன் என்பேனோ -நீர்மை மிக்க முத்து என்பேனோ
சாவி என்று பொன்னிலே யான போது புகராய் -முத்திலே ஆனபோது நீர்மையாய் கடவது –
சாதி நல் வயிரம் என்கோ!
ஆகரத்தில் பிறந்த நன்றான வைரம்
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
விச்சேதம் இல்லாத நன்றான விளக்கம் என்பேனோ –
விளக்கம் என்று அந்த தீபத்தின் உடைய பிரகாச அம்சத்தை சொல்லிற்று ஆகவுமாம்
ஆதி அம் சோதி என்கோ!
ஜகத் காரணமாய் நிரவதிக தேஜோ ரூபமான பரமபதம் –
காரியாணாம் காரணம் பூர்வம் -அத்யாக்கா நல தீபம் –
ஸ்ரீ கௌஸ்துபத்தைப் பற்றி ஜீவ சமஷ்டியும்-ஸ்ரீ வத்ஸத்தைப் பற்றி அசேதனமும் கிடைக்கும் என்கிற
அஸ்திர பூஷண அத்யாய க்ரமத்தாலே திருமேனியைச் சொல்லிற்று ஆகவுமாம்
ஆதி அம் புருடன் என்கோ!
சர்வ காரணமாய் அத்தேசத்திலே எழுந்து அருளி இருக்கிற புருஷோத்தமன்
ஆதும் இல் காலத்து எந்தை
எனக்கு ஒரு துணை அல்லாத சம்சார அவஸ்தையில் தன்னோடே உண்டான சம்பந்தத்தை அறிவித்தவன்
அச்சுதன் அமலனையே.
என்னை நழுவ விடாதவன்
இந்தச் செயல் ஒரு பிரயோஜனத்துக்காக அன்றிக்கே தன் பேறாகச் செய்தவன்
அன்றிக்கே பிரளய காலத்தில் தன் ஸ்வாமித்வ ப்ராப்தியாலே இவை நழுவாமே தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நின்று
தத்கத தோஷை அச்மஸ்ப்ருஷ்டனாய் நிற்கிறவன் என்றுமாம் –

———————————————————————————————-

ரஸவத் பதார்த்தங்கள் அவனுக்கு விபூதி என்கிறார் –

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—

அச்சுதன் அமலன் என்கோ!
அச்சுதன் என்கிறது பரமபதத்தில் இருப்பை –
அமலன் ஹேய ப்ரத்ய நீகனாய் கல்யாண குணகனாய் இருக்கும் என்கை –
அடியவர் வினை கெடுக்கும்
தன் பக்கலிலே நிஷிப்பத பரராய் இருப்பார் உடைய சகல துரிதங்களையும் போக்குபவன்
தூரஸ்தன் என்று கூசாதே விசுவசிக்கலாம் படி மடுவின் கரையில் ஆனைக்கு வந்து உதவுகை
நச்சு மா மருந்தம் என்கோ!
நச்சப்படும் மஹா ஒளஷதம்
மா மருந்தம் -வியாதியின் அளவு இன்றிக்கே இருக்கை-அபத்ய ஸஹமான ஒளஷதம் –
நலம்கடல் அமுதம் என்கோ!
கடைய வேண்டாதே-கடலிலே கிடக்கிற அமுதம்
அச்சுவைக் கட்டி என்கோ!
கீழ்ச சொன்ன அம்ருதத்தின் சுவையை உடைய கருப்புக் கட்டி
அறுசுவை அடிசில் என்கோ!
ஷட்ரஸ யுக்தமான அடிசில்
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
சுவையை உடைய ணெய் என்பேனோ -சுவையை உடைத்தான் மது என்பேனோ
கனி என்கோ! பால்என் கேனோ!–
கனி – ஓர் அவஸ்தையில் ரசிக்குமது
பால் -நை சர்க்கிகமான ரசம் –

————————————————————————————-

வேதம் தொடக்கமான இயலும் இசையுமான சப்த ராசியை விபூதியாக உடையனாய் இருக்கிற படியை பேசுகிறார் –

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ

பால் என்கோ!-
முன்புத்தை ரசம் பின்னாட்டுகிற படி
நான்கு வேதப்பயன் என்கோ!
பிரமாண ஜாதத்தில் சார பூதமான நாலு வேதம்
சமய நீதிநூல் என்கோ!
வைதிக சமயத்துக்கு நிர்வாஹகமான சாஸ்திரம் -வேத உப ப்ரும்ஹணமான இதிஹாச புராணாதிகள்
நுடங்கு கேள்வி-இசை என்கோ!
ஸ்ரவண மாத்திரத்திலே ஈடுபடுத்த வல்ல இசை
இவற்றுள் நல்ல-மேல் என்கோ!
இவற்றிலும் வி லக்ஷணமான போக்யம் என்பேனோ
வினையின் மிக்க-பயன் என்கோ!
அல்ப யத்னத்தாலே நிரதிசய பலத்தை தருமது என்பேனோ
சாதன ரூபமான யத்னத்து அளவில்லாத அதி மாத்ர பலம் என்பேனோ
மித்ர பாவம் அடியாக யாவதாத்ம பாவியான அநுபவித்தை தரும் என்கை –
கண்ணன் என்கோ!
உனக்கு நான் உளேன் -மா ஸூ ச –நீ சோகியாதே கொள்-என்னுமவன் என்பேனோ
மால் என்கோ!
ஆச்ரித விஷயத்தில் வ்யாமுக்தன் என்பேனோ
மாயன் என்கோ
தூத்ய சாரத்யங்கள் பண்ணும் ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்பேனோ
வானவர் ஆதி யையே.–
ப்ரஹ்மாதிகளுக்கும் சத்தா ஹேது வானவனை –
தன் சத்தை ஆச்ரித அதீனையாய் இருக்கும் என்கை –

——————————————————————————–

ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்கள் எல்லாவற்றையும் விபூதியாய் உடையனாய் இருக்கிற படியை பேசுகிறார் –

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-

வானவர் ஆதி என்கோ!
நித்ய ஸூ ரிகளுக்கு சத்தா ஹேது என்பேனோ
வானவர் தெய்வம் என்கோ!
அவர்களுக்கு சூட்டு நன் மாலை படையே ஆராத்யன் என்பேனோ
வானவர் போகம் என்கோ!-வானவர் முற்றும் என்கோ!-
அவர்களுக்கு உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் ஆனவன்
முற்றும் -அனுக்தமான சர்வவித பந்துவும்
ஊனம்இல் செல்வம் என்கோ!
அனஸ்வரமான சம்பத்து
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
த்வம்ச என்னாதே ஆகல்பாவ சானமான சுவர்க்கம்
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஆத்ம அனுபவம் மாத்திரம் அன்றிக்கே பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம்
ஒளிமணி வண்ண னையே!
சிலாக்கியமான மணி போலே இருக்கிற திரு நிறத்தை உடையவனை
வி லக்ஷணமான அழகை உடையவன் என்கை
கீழ்ச சொன்னவையோடே இவ்வழகோடு வாசி யற அனுபவிக்கிறார் –

————————————————————————————–

பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளை விபூதியாக உடையானுடைய படியை அருளிச் செய்கிறார் –

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-

ஒளி மணி வண்ணன் என்கோ!
கீளில் வடிவு அழகு பின்னாடுகிற படி
ஒருவன் என்று ஏத்த நின்ற
தம பிரசுரராய் இருப்பார் அத்விதீயன் என்று ஏத்தா நின்றால்-தான் ஈஸ்வரனாக பிரமித்து ஆசிரயணீயனாய் இருக்கும் –
நளிர் மதிச் சடையன் என்கோ!
அது பிரமம் என்னும் இடத்தைக் காட்டுகிறது -சாதக வேஷமும் -போக ப்ராதான்யமும் -நளிர் மதி -குளிர்ந்த சடையன்
நான் முகக் கடவுள் என்கோ!
அவனுக்கு ஜனகனான சதுர்முகனான தைவம்-
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்-படைத்து அவை ஏத்த நின்ற
கிருபையை உகந்து -ஸ்ருஷ்ட்யாதி ரக்ஷணத்தை உகந்து –
லோகத்தை எல்லாம் ஸ்ருஷ்டித்து -அந்த ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் பெற்று அவர்கள் ஏத்தும் படி நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்-
தேனையையும் மலரையும் உடைய திருத்த துழாயாலே அலங்க்ருதனாய் -அத்தாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன்-களி -தேன்
கண்ணனை மாயனையே.–
எத்திறம் என்று மோஹிக்கும் படியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணனை –

———————————————————————————————

நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே-என்று அவன் படிகள் என்னால் பேச முடியாது
கார்ய காரண உபய அவஸ்தமான சகல சேதன அசேதனங்களும் அவனுக்கு விபூதி என்று
பிரயோஜகத்தில் சொல்லலாம் அத்தனை என்கிறார் –

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-

கண்ணனை மாயன் றன்னைக்
ஸுலப்யமும்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களும் பின்னாடுகிற படி
கடல் கடைந்து அமுதம் கொண்ட-அண்ணலை –
ஷூத்ர பிரயோஜனத்தை அபேக்ஷித்தார்கள் என்னாதே உடம்பு நோவ கடல் கடைந்து அவர்கள் பிரயோஜனத்தை கொடுக்கும் ஸ்வாமியை
அச்சு தன்னை
அநந்ய பிரயோஜனராய் கிட்டினாரை துக்க சாகரத்தில் நழுவ விடாதவனை
அனந்தனை
ஸ்வரூப ரூப குணங்களுக்கு எல்லை இல்லாதவனை
அனந்தன் றன்மேல்-நண்ணி நன்கு உறைகின்றானை
அபரிச்சின்னனான தன்னையும் விளாக்குலை கொள்ள வல்ல அவன் மேலே கிட்டி நாய்ச்சிமாறாலும் எழுப்ப ஒண்ணாதபடி கண் வளர்ந்து அருளுகிறவனை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
ஆபத்து கண்டால் படுக்கையில் பொருந்தாதே ரக்ஷிக்கும் சர்வேஸ்வரனை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
இவன் படிகளுக்கு என்னால் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது
யாவையும் எவரும் தானே.–
சேதன அசேதனங்கள் உடையான் என்று பிரயோஜகத்தை சொல்லலாம் அத்தனை -என்கிறார் –

————————————————————————————————–

சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மா தயா வியாபித்து நின்றால் தத்கத தோஷை அச்மஸ்ப்ருஷ்டனாய் இருக்கும் –

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-

யாவையும் எவரும் தானாய்-அவர் அவர் –
சகல சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மாவாய் அவற்றினுடைய துக்கித்தவ பரிணாமித்வங்கள் தட்டாத படி யாய் இருக்கிறவன் –
சமயந் தோறும்-தோய்வு இலன்;
அசித்துக்கு பரிணாமித்வமும்-தத் ஸம்ஸ்ருஷ்ட சேதனனுக்கு துக்கித் வாதிகளும் வியவஸ்திதம் என்கை
புலன் ஐந்துக்கும்-சொலப்படான்;
சஷூராதி கரணங்களுக்கு விஷயமாகச் சொல்லப் படான் -அவற்றால் அறியப் படான் என்கை –
உணர்வின் மூர்த்தி;
ஞான ஸ்வரூபன்
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆவி என்று சரீரம் -அத்தோடு சேர்ந்த ஆத்மாவில் சரீரத்தில் உண்டான பரிணாமித்வாதி தோஷங்கள் தட்டாது என்கிற
விவேக அனுசந்தானம் ஆத்மாவின் பக்கலிலே கூடுமாகில் –
உள்ளால்-உள்–ஆல்-அசை-உள் -உள்ளே
ஆதும் ஓர் பற்று இலாத
ஏதேனும் ஒரு தொற்று இல்லாத
பாவனை அதனைக் கூடில்,
அதனை -ஆத்மாவை -ஆத்மாவின் பக்கலிலே என்றபடி
அவனையும் கூட லாமே.–
அசித் கத பரிணாமாதிகளும் -சேதன கதமான துக்கத்வாதிகளும் தட்டாது என்கிற இதுவும் சர்வேஸ்வரன் பக்கலிலே கூடலாம்
இப்பாட்டில் பக்தி உடையோருக்கு அவனைக் கிட்டலாவது என்கிறார் என்பாரும் உண்டு –
இதர விஷய சங்கம் அற்றார்க்கு அவனைக் கிட்டலாவது என்கிறார் என்பாரும் உண்டு
அந்திம ஸ்ம்ருதி உடையோருக்கு கிட்டலாம் என்பாரும் உண்டு
சர்வாத்ம பாவம் சொல்லி நிற்கையாலே அவற்றின் பக்கல் தோஷம் தட்டாதான் ஒருவன் என்னும் இடம்சொல்ல வேணும்-
அத்தை சொல்லுகிறது என்பர் எம்பெருமானார் –

—————————————————————————————————

இப்பத்தைக் கற்றவர்கள் நித்ய கைங்கர்யத்தை பெற்று நித்ய ஸூ ரிகளால் விரும்பப் படுவர் -என்கிறார் –

கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-

கூடிவண்டு அறையும் தண்தார்க்-கொண்டல்போல் வண்ணன் றன்னை-
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே வண்டுகள் திரண்டு மது பானம் பண்ணி த்வநிக்கிற தோள் மாலையையும்
வர்ஷூக வலாகஹம் போலே சிரமஹராமான வடிவையும் உடையவனை யாய்த்து கவி பாடிற்று
கீழ்ச் சொன்ன விபூதி தோள் மாலையோ பாதி தகுதியாய் இருக்கும் என்றதாய்த்து
மாடுஅலர் பொழில் குருகூர்-வண்சட கோபன் சொன்ன
பர்யந்தம் ஆடிய அலர்ந்த பொழிலை உடைய திரு நகரி
பாடல்ஓர் ஆயி ரத்துள்-
பாடல் கானம் -புஷபம் பரிமளத்தோடே அலருமா போலே இசை முன்னாகத் தோற்றின ஆயிரம்
இவையும்ஓர் பத்தும் வல்லார்-வீடுஇல போகம் எய்தி
விச்சேதம் இல்லாத கைங்கர்ய போகத்தை பெற்று
விரும்புவர் அமரர் மொய்த்தே.
நித்ய ஸூ ரிகள் சூழ்ந்து கொண்டு ஆதரிக்கும் படி ஆவர்
ததீயத்வ ஆகாரேண லீலா விபூதியை அநுஸந்திக்குமது தங்களதே யாகையாலே இங்கேயே இருந்து இவ் வனுசந்தானம் உடையார் சென்றால் ஆதரிப்பார்கள் –

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-3–

August 22, 2016

உன்னை அனுபவிக்கைக்கு விரோதியான பிரக்ருதியை போக்க வேணும் என்று எம்பெருமானை ஆழ்வார் அர்த்திக்க
உமக்கு பிரக்ருதி நம்மோட்டை பரிமாற்றத்துக்கு விரோதி யல்ல -அநு கூலம்-இப்பிரக்ருதியோடே கூட உம்மை அடிமை கொள்ளுகையில்
உள்ள அபி நிவேசத்தாலே அன்றோ இங்கே நிற்கிறது என்று வேதைக சமதி கம்யனான தான் திருமலையில் நின்று அருளுகிற படியைக் காட்டி
அருளக் கண்டு ப்ரீதராய் அவன் திருவடிகளில் எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்ய வேணும் என்று
-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்த இளைய பெருமாளை போலே மநோ ரதிக்கிறார் –

————————————————————————————————————

திருவேங்கடம் உடையானுக்கு எல்லா அடிமைகளும் செய்ய வேணும் -என்கிறார் –

ஒழிவு இல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

ஒழிவு இல் காலம்எல்லாம்-அநந்த காலம் எல்லாம்
உடனாய் -சர்வ தேசத்திலும்
மன்னி-சர்வ அவஸ்தையிலும் –
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்-சர்வ சேஷ வ்ருத்தியும் பண்ண வேணும் –
நாம் என்கிற பன்மை -திரு உள்ளத்தை யாதல்
மேவும் தன்மையும் ஆக்கினான் -என்று சொல்லப் பட்ட அநு கூல ஜனங்களை யாதல் குறித்து –
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து-எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே-
ஸ்ரமஹரமாய் கம்பீரமாக த்வனியா நின்றுள்ள திரு அருவியை உடைய திரு மலையில் நில மிதியாலே
நிறம் பெற்ற தன்னுடைய ஸ் வா பாவிகமான அழகை உடையனாய் -அவ் வழகாலும்
திருமலையில் நின்று அருளின ஸுலப்யத்தாலும்-என்னைத் தோற்பித்து எனக்கு பரம சேஷியான திருவேங்கடம் உடையானுக்கு –

———————————————————————————————————

திரு நாட்டிலே சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்கை அன்றோ எல்லாருக்கும் பரம ப்ராப்யம் என்னில்
திரு நாட்டில் உள்ள நித்ய ஸூ ரிகளும் ஆசைப் படும்படி முடிவு இல்லாத ஸுந்தர்ய சீலாதிகளை உடைய திருவேங்கடமுடையான்
என்னை தனக்கு அத்யந்த சேஷமாக்கிக் கொண்டான் -ஆனபின்பு அவனுக்கு சர்வ சேஷ வ்ருத்தியும் பண்ண வேணும் -என்கிறார் –

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-

ஸ்ரீ சேனாபதி ஆழ்வானோடும் கூட அயர்வறும் அமரர்கள் உபஹாரமாகத் தூவின பூக்கள் நில மிதியில்
குளிர்த்தியாலே செவ்வி பெரும்படியான திருமலையிலே -அண்ணல் -சர்வேஸ்வரன் –

———————————————————————————————————

ஏவம் விதமான ஸ்வ அனுபவ ரூப ஸம்ருத்தியைத் தந்து அருளுமோ -என்னில்
நிரதிசய ஸுந்தர்யத்தையும்-எண்ணில்லாத கல்யாண குணங்களையும் உடைய தன்னை
அசங்க்யேயரான நித்ய சித்த புருஷர்கள் எல்லாருக்கும் புஜிக்க கொடுத்துக் கொண்டு இருக்கிறான் ஒரு பரம உதாரன் அல்லனோ
-அவன் ஆதலால் நமக்குத் தன்னை புஜிக்கத் தரும் என்கிறார் –

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –3-3-3-

திருமலையில் வந்த ஐஸ்வர்யத்தினால் அத்யாச்சார்ய பூதனாய் தானே ஆபரணமாம் படியான அழகிய திருக் கண்களை உடையான்
தெளிந்து நிறைந்து இருந்துள்ள நீரை உடைத்தான் சுனைகளாலே அலங்க்ருதமான திரு மலையிலே –

————————————————————————————————————

அதி நிக்ருஷ்டனான என் பக்கலிலே சங்கத்தை பண்ணினவனுக்கு அயர்வறும் அமரர்களுக்கு
ஆத்ம தானம் பண்ணினான் என்னும் இது ஒரு ஏற்றமோ என்கிறார் –

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

அநாதம குணத்துக்கு எல்லாம் ஒரு ஆகாரமாய் -ஆத்மகுண கந்தம் இல்லாதேன் –
என் பக்கலிலே சங்கத்தைப் பண்ணி சம்ச்லேஷிக்கையாலே அது உஜ்ஜவலனாய் இருக்கிறவனுக்கு –

———————————————————————————————————–

திருவேங்கடமுடையான் படிக்கு என்னை விஷயீ கரித்தான் என்றால் தான் குணமாகப் போருமோ-என்கிறார் –

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-

அத்யந்த விலக்ஷணமான ஸுந்தர்யாதி கல்யாண குணங்களை உடையனான தன்னை எனக்கு எனக்கு
புஜிக்கத் தந்தான் என்ற இது அவனுக்கு ஒரு ஏற்றமாகப் போருமோ –
நிக்ருஷ்டத்தைக்கு தமக்கு அப்பால் இல்லாமையால் -எல்லா உலகும் தொழும் என்னவே தம்மையே சொல்லிற்றாம்
வைதிகருடைய தனமான வேதங்கள் எல்லா வற்றாலும் நிரதிசய போக்யமாக ப்ரதிபாதிக்கப் படுகிறவனை –
அவனுடைய சீருக்கு தீது இல்லாமை யாவது -இன்னார் ஆவர் இன்னார் ஆகார் -என்று வரையாமே ஒரு குணம் அன்றிக்கே ஸ்வரூபம் ஆகை –

————————————————————————————————————–

பிரதிபந்த கர்மங்கள் அடிமைக்கு விக்நத்தை பண்ணாவோ என்னில் -அடிமை செய்வோம் என்று இசையவே -தானே வசிக்கும் என்கிறார் –

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—

ருண த்ரயங்களும் தேஹ உபபாதிகமான பாபங்களும் தானே நசிக்கும்-உத்தர பூர்வாகங்கள் நசிக்கும் -இது சத்யம் என்றுமாம் –
தாங்கள் தங்களுக்கு ப்ராப்யம் என்று இருந்த அடிமைகளை செய்ய அமையும்
திருவேங்கடமுடையானுக்கே சேஷம் -எனக்கு உரியேன் அல்லேன்-என்று ஆத்மாவுக்கு பிராப்தமுமாய் எளியதுமாய் இருக்கிற
இந்த யுக்தி மாத்திரத்திலே உத்யுக்தர் ஆனவர்களுக்கு –

—————————————————————————————————————

நம்முடைய அபி லஷிதமான அடிமைகள் எல்லாம் பெறுகைக்காக திரு வேங்கடமுடையானை
ஆஸ்ரயிக்க வேண்டியது இல்லை -திருமலை தானே தரும் என்கிறார் –

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-

சிலாக்கியமான புஷபாத் யுபகரணங்களை சாதரமாகத் தரித்துக் கொண்டு –
பரமை காந்திகளைப் போலே இந்திராதி தேவர்களும் ப்ரயோஜ நாந்தரங்களை மறந்து பூண்டு அடிமை செய்து
உஜ்ஜீவிக்கும் படியான நில மிதியை உடைய திரு வேங்கடமான தடம் குன்றமே நமக்கு தன்னுடைய சேஷத்வம் போலே இருக்கும் சேஷத்வத்தைத் தரும்
சமன் கொள் என்றது -ஆத்மாவுக்கு சத்ருசம் ஆகவுமாம்-

——————————————————————————————————————

கோவர்த்தன உத்தரணாதி களாலே நிரதிசய போக்யனான எம்பெருமானுக்கு கூட பரம ப்ராப்யமான திருமலை தானே
நமக்கு ஓன்று தர வேணுமோ -அது தானே பரம ப்ராப்யம் என்கிறார் –

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

கோவர்த்தன உத்தாரணம் பண்ணி ஆஸ்ரிதருடைய ஆபத்தைப் போக்கும் ஸ்வ பாவனாய் -அவ்வளவு அன்றிக்கே
ஆஸ்ரிதருக்காக லோகத்தை எல்லாம் அளக்கை யாகிற மஹா உபகாரத்தைப் பண்ணின சர்வேஸ்வரன் –
சென்று தனக்கு பரம ப்ராப்யமாகப் பற்றும் திருமலை ஒன்றையுமே அனுபவிக்க ஒரு பிராப்யம் பெற்றிலோம் என்னும் வியசனம் நீங்கும்
ஆஸ்ரயிப்பார்க்கு உண்டான அடிமைக்கு விரோதியை திருமலை தானே போக்கும் என்றுமாம் –

—————————————————————————————————————–

அடிமை தருகைக்கும் அதுக்கு விரோதி நிரசனத்துக்கும் திருமலை எல்லாம் வேண்டா –
-திருமலைக்கு அவயவ பூதனான திருவேங்கடமுடையான் அமையும் என்கிறார் –

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-

ஜென்மாதி சகல துக்கங்களும் ஓயும்
சகல துக்க நிவர்த்தகனாய் திருமலையில் நின்று அருளின சர்வ ஸூ லபனான-
திருவேங்கடமுடையானுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை மநோ வாக் காயங்களினால் அனுபவிப்பார்க்கு –

——————————————————————————————————————-

தம்முடைய ப்ரீதி ப்ரகரஷத்தாலே எல்லீரும் திருத் தாழ் வரையை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-

திருமலைக்கு போகைக்காக ஈஸ்வரன் நியமித்த ஆயுஸ்ஸின் எல்லை அளவில் அணித்ததாகச் சென்று திருமலையை
அனுசந்திக்க ஒண்ணாத படி கலங்கி அவசன்னர் ஆவதற்கு முன்னே ஆஸ்ரயிங்கோள் –
தன்னோட்டை ஸ்பர்ச ஸூ க அதிசயத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு வனந்த வாழ்வானைக் காட்டிலும் எம்பெருமானுக்கு
நிரதிசய போக்யமான திருமலையினுடைய செறிந்து இருந்துள்ள திருச் சோலைகளையும் அழகிய பூத்த பொய்கைகளையும் உடைய திருத் தாழ் வரையை –

———————————————————————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர் ஆழ்வார் மநோ ரதித்த படியே
எப்பேர்ப்பட்ட அடிமையையும் செய்யப் பெறுவார் என்கிறார் –

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-

ஸ்ரீ வாமனான தன்னுடைய குண சேஷ்டி தாதிகளாலே லோகத்தை அடைய அடிமை கொண்ட திருவேங்கடமுடையானை
பரம்பி இருந்த திருச் சோலையாலே அலங்க்ருதமான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செயலான ஒப்பு இல்லாத ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
இஜ் ஜகத்தில் உள்ளார் இவனைப் புகழ பெற்று க்ருதார்த்தர் ஆனோம் என்று புகழும் படி
இத் திருவாய்மொழியில் தாம் மநோ ரதித்தால் போலே அடிமை செய்யப் பெறுவர்-

——————————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-3–

August 22, 2016

உன்னை அனுபவிக்கைக்கு விரோதியான பிரக்ருதியை போக்க வேணும் என்று இவர் பிரார்த்திக்க
இப் பிரக்ருதி நம்மோட்டை பரிமாற்றத்துக்கு விரோதி யல்ல –இப்பிரக்ருதியோடே கூட உம்மை அடிமை கொள்ளுகையில் உள்ள
அபி நிவேசத்தாலே அன்றோ இங்கே நிற்கிறது என்று வேதைக சமதி கம்யனான தான் திருமலையில் நின்று அருளுகிற படியைக் காட்டி
அருளக் கண்டு ப்ரீதராய் அவன் திருவடிகளில் எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்ய வேணும் என்று
-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்த இளைய பெருமாளை போலே மநோ ரதிக்கிறார் –

———————————————————————————————————————-

திருவேங்கடம் உடையானுக்கு எல்லா அடிமைகளும் செய்ய வேணும் -என்கிறார் –

ஒழிவு இல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

ஒழிவு இல் காலம்எல்லாம்-முடிவு இல்லாத காலம் எல்லாம்
உடனாய் -சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே
மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற
வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும்
செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –
நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்
கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து-
அடிமை கொள்ளுகைக்கு அத்தலையில் பாரிப்பு இருக்கிற படி
இவர் இருந்த இடத்தே பாரித்தார் -அவன் கலங்கா பெரு நகரின் நின்றும் வந்து பாரித்தான்
கம்பீரமான த்வனியை உடைய அருவி கைங்கர்ய ருசியை உடையாரை அழைத்தால் போலே இருக்கை
அர்ச்சிராதி கதியாலே-ஓரு தேச விசேஷத்திலே விலக்ஷண சரீரத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவ இவன்
இச் சரீரத்தோடு அனுபவிக்கலாம் படி ஸூ லபனாய் நிற்கிற திருமலையிலே
எழில் கொள் சோதி எந்தை –
துர்லபன் ஆகிலும் விட ஒண்ணாத வடிவு அழகு -அந்த நிலம் மிதியாலே நிறம் பெற்ற அழகு
விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத பிராப்தி -எந்தை -என்கிறது -ஸுலப்யத்தாலும் அழகாலும் தோற்பித்த படி சொல்லிற்று –
தந்தை தந்தைக்கே-
பரம சேஷி யானவனுக்கு -ப்ராப்ய பிரதானமான திரு மந்திரத்தில் உள்ளது எல்லாம் சொல்லுகிறது இப்பாட்டாலே –

————————————————————————————————————————-

இவ்வடிமை ஒரு தேச விசேஷத்திலே சென்றால் செய்யுமது அன்றோ -என்ன -அங்கு உள்ளாறும் இங்கே வந்து
அடிமை செய்யா நின்றால்-எனக்கு அடிமை செய்யக் குறை என் என்கிறார் –

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்-முந்தை –
அடியார் அடியார் -என்று ஸ்வ ஸ்வரூபத்தை நிரூபிக்கும் போது-அத்தலையே தொடங்குமா போலே
பர ஸ்வரூபத்தை நிரூபிக்கும் போது இத்தலையே பிடித்து அவ்வளவும் செல்லுகிறார்
வானவர் வானவர் கோனொடும்-
நித்ய ஸூ ரிகள் ஸ்ரீ சேனாபதி ஆழ்வானோடும் கூட ஆராதன அர்த்தமாக தூவின புஷபங்கள் நில மிதியாலே செவ்வி பெறும்படியான திருமலை
சிந்து பூ-
திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு தோற்று அக்ரமமாக பிரயோகிக்கிற படி –
இங்கு உள்ளார் அங்கு சென்றால் மேன்மை கண்டு படும் பாடு எல்லாம் அங்கு உள்ளார் எல்லாம் இங்கு நீர்மை கண்டு படும் படி
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் இ றே
மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க்-
பரம பதத்தில் சாவதி என்னும் படி யாயிற்று திருமலையில் வந்த பின்பாயிற்று புகழ் நிரவதிகம் ஆயிற்று
கார்எழில் அண்ணலே
நிர் குணன் ஆகிலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத ஸ்வாமித்வம் –
கார் எழில் அண்ணலே-எந்தை தந்தை தந்தைதந்தைதந்தைக்கும்-முந்தை யானபின்பு
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி-வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்-

————————————————————————————————————————–

நீர் அனுபவிக்கப் பாரியா நின்றீர் -இது உமக்கு சித்திக்குமோ -என்னில் கண் அழிவு அற்ற ருசியை உடைய நித்ய சித்தருக்கு
தன்னைக் கொடுத்துக் கொடு நிற்கிறவன் நமக்குத் தரும் என்கிறார் –

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –3-3-3-

அண்ணல்-குறிஞ்சி நிலத்துக்கு நிர்வாஹகன் எண்ணுதல் -ஸ்வாமி த்வத்தை சொல்லுதல்
மாயன் -திருமலையில் நிலையால் அத்யாச்சர்யமான ஐஸ்வர்யத்தை உடையவன் –
அணிகொள்செந் தாமரைக்கண்ணன் –
அந்த ஐஸ்வர்ய ஸூ சகமான திருக் கண்களை உடையவன் -தனக்குத் தானே ஆபரணமாக திருக் கண்கள்
செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
அந்நோக்கில் அகப்பட்டாரை துவக்கும் முறுவல்
ஸ்மிதத்திலே துவக்கு பட்டாரை கொண்டு மூழ்கும் ஸ்ரமஹரமான வடிவு
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து-
தெளிந்து நிறைந்த சுனைகளால் அலங்க்ருதமான திரு மலையிலே -வடிவே அன்றிக்கே திரு மழையும் ஸ்ரமஹரமாய இருக்கிற படி
எண் இல் தொல்புகழ் –
எண்ணிறந்த ஸ்வா பாவிகமான குணங்களை உடையவன் -யதா ரத்நானி ஜலதே –
வானவர் ஈசனே. –
அக் குணங்களுக்குத் தோற்று அடிமை செய்கிற நித்ய ஸூ ரிகளுடைய சத்தாதிகளை நடத்துகிறவன்
கண் அழிவற்ற ருசி உடையாரை தன்னை அனுபவிப்பிக்கும் என்கை –

——————————————————————————————————-

அத்யந்தம் நீசனான என் பக்கலிலே சங்கத்தை பண்ணினவனுக்கு நித்ய ஸூரிகளுக்கு தன்னைக் கொடுத்தான் என்னும் இது ஒரு ஏற்றமோ -என்கிறார் –

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

ஈசன் வானவர்க்கு என்பன்-
நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் என்பேன்
என்றால் அது-தேசமோ-
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கை ஏற்றம் அன்றோ என்னில் -அது வைகுண்ட நாதனுக்கு ஏற்றம் அத்தனை போக்கி
திரு வேங்கடத் தானுக்கு?
திருவேங்கடம் உடையானுக்கு தேஜஸ் ஸோ-
திருமலையை இட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டும்படி நிற்கிறவனுக்கும் இது ஒரு ஏற்றமோ
கானமும் வானரமும் விடுமா இவற்றுக்கும் ஓலக்கம் கொடுக்கிறவனுக்கு நித்ய ஸூ ரிகளுக்கு ஓலக்கம் கொடுக்கை ஏற்றமோ
முடி சூடினவனை தட்டியிலே இருந்த படி சொல்லுகை ஏற்றமோ
திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாக நீர் நினைத்தது என் என்ன –
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் –
என் பக்கல் சங்கத்தைப் பண்ணின இது இ றே –
அ நாதமே குணங்களுக்கு ஆகாரமாய் ஆத்ம குண கந்தம் இல்லாதவன் –
என்கண்-பாசம் வைத்த –
வானவர்க்கு ஈசன் ஆனவன் என் கண் பாசம் வைத்தான்
அவர்களோடு கலந்து அவர்கள் சத்தைக்காக
என்னோடு கலந்து தனக்கு சத்தை உண்டாக்குகைக்காக
தன் விஷயத்தில் பாசம் உண்டாம் படி என்னைப் பண்ணினான் என்றும் சொல்லுவார்
பரஞ்சுடர்ச் சோதிக்கே.–
என்னோட்டை கலவியாலே அது உஜ்ஜவலனமாம் படி
சங்கத்தாலே கலந்தான் என்னும் இடம் வடிவில் தோற்றி இருக்கை-

—————————————————————————————————-

திருவேங்கடமுடையான் படிக்கு என்னை விஷயீ கரித்தான் என்றால் தான் குணமாகப் போருமோ-என்னிலும்
தாழ்ந்தாரைத் தேடி அது பெறாதே இருக்கிறவனுக்கு – என்கிறார் –

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5

சோதி ஆகி,-
நிரவதிக தேஜோ ரூபமான திருமேனியை உடையனாய் –தேஜஸாம் ராசி மூர்ஜிதம்
எல்லா உலகும் தொழும்-
எல்லா உலகும் தொழும் படி யானவன் -இப்படி சொன்னால் தான் அவனுக்கு இது ஒரு ஏற்றமோ
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசன் என்னா-ஈசன் வானவர்க்கு என்பான் -என்று அநு பாஷித்தால் போலே
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்கிறாரோ என்னில் -விழுக் காட்டாலே சொன்னார் -எங்கனே என்னில்
கீழே நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் என்று சொன்னாரே -தம்மைத் தாழ்வுக்கு எல்லாரிலும் அவ்வருகாக
மேலில் படி அமிழ்ந்து என்றால் கீழில் படி அமிழ்ந்து என்ன வேண்டா இ றே
தாம் தொழுத போதே எல்லா உலகும் விழுக் காட்டாலே தொழுததாக குறை இல்லை –
தொழும் –
யதார்ஹம் கேசவ வ்ருத்தி மவஸா-பிரதி பேதிரே -என்று விமுகரும் தொழும் படி இ றே அழகால் வந்த ஒளி இருப்பது
ஆதி மூர்த்தி –
ஜகத் காரண பூதன்-ஸ்ரீ வைகுண்ட நாதன் என்னவுமாம் –
என்றால்அளவு ஆகுமோ,-
எண் கண் பாசம் வைத்த இது ஒரு ஏற்றமோ
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்-
ப்ராஹ்மணோ நாம் தனம் வேத -என்கிற வேதனருடைய
வேதைஸ்ஸ சர்வைர் அஹம் ஏவ வித்ய -என்கிறபடியே வேதைக சமதி கம்யனாய்-பரம போக்யனானவனை –
ஆனந்தோ ப்ரஹ்ம-ரஸோவை ச -சர்வ ரஸா -என்னக் கடவது இ றே
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?-
சீருக்கு தீதாவது -ஆஸ்ரயிப்பாருடைய குணாகுண நிரூபணம் பண்ணுகை
திரு வேங்கடத் தானை-வரையாமை குணம் அன்றிக்கே ஸ்வரூபம் ஆகை –

——————————————————————————————————–

அவன் படி இதுவானாலும் பிரதிபந்த கர்மங்கள் விக்நத்தை பண்ணாவோ என்னில் -அடிமையில் இழியவே தானே நசிக்கும் என்கிறார் –

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—

வேங் கடங்கள்
கடம் என்று கடனாய் ருண த்ரயத்தை சொல்லுகிறது
மெய் மேல்வினை முற்றவும்,-
தேஹ உபாதிகமான கர்மங்களும் அடங்க நசிக்கும் –என்று ஆளவந்தார் –
உத்தர பூர்வாகங்கள் நசிக்கும் இது மெய் -என்று எம்பெருமானார்
உத்தராகத்துக்கு விநாசம் சொல்லுகிறது நாச பர்யாயமான நைஷப்பல்யத்தை பற்றி
இரண்டும் இவனை ஸ்பர்சியாது என்கை –
மெய் என்கிறது துஷ்ட காரண பிரசங்கம் உள்ள ப்ரத்யக்ஷம் போல் அன்றிக்கே நிர்த்தோஷ சாஸ்த்ர சித்தம் என்கை -ஆனால் கர்த்தவ்யம் என் என்னில்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,-
தாங்கள் தங்களுக்கு நன்று என்று இருந்த அடிமைகளை செய்ய அமையும்
நன்று என்று இருக்கிறது என் என்னில்
வேங்கடத்து உறைவார்க்கு –
சதுர்த்தியில் பிரார்த்தனையைச் சொல்கிறது
நம –
தனக்காய் இருக்கும் இருப்பை கழிக்கிறது
என்னல்-
யுக்தி மாத்திரமே அமையும்
வருணனுக்கு தொடுத்த அம்பை மருகாந்தரத்திலே விட்டால் போலே –
இவ்விடத்தில் பட்டர் மொட்டைத் தலையன் விஷயமான இதிகாசம் –
ஆம்
ஸூசகம்
கடமை
பிராப்தம்
அது சுமந் தார்கட்கே.–
இக் கோட்டை எல்லாம் சுமந்தார்கட்க்கு என்று என்று ஆழ்வார் கருத்தால் யாதல்
இது தானே குவாலாய் இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே யாதல்
பூயிஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம-

———————————————————————————————————–

அபேக்ஷிதமான அடிமையைத் திருமலை தானே தரும் என்கிறார் –

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
சிலாக்கியமான புஷபாத் யுபகரணங்களை சுமந்து கொண்டு –
சுமந்து என்கிறது கனத்த ஆதாரத்தோடு செய்கை என்னுதல்-
இவ்வாதாரத்தை அவன் தான் கனக்க நினைத்து இருக்கையாலே என்னுதல்
ஸ்ரீ புருஷோத்தமுடையான் செண்பகப் பூவின் கனத்தை பொறுக்க மாட்டாதாப் போலே
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நித்ய ஸூ ரிகள் -ஸ்ரீ சேனாபதி ஆழ்வானோடு என்னுதல்
தேவர்களோடு ப்ரஹ்மா என்னுதல் -அமர்ந்து -அநந்ய பிரயோஜனராய்
நமன்று எழும்-
தொழுது எழு-என்னும் தம்மைப் போலே என்கை -பக்கன அபிமானராய் உத்தியோகிக்கும்
திருவேங்கடம் –
பிரயோஜ நான்தர பரரை-அநந்ய பிரயோஜனர் ஆக்கும் -நில மிதியாலே
நங்கட்குச்
ருசி உடைய நமக்கு
சமன் கொள் வீடு தரும்-
பரமம் சாம்யம் உபைதி –ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்கிறபடியே சாமியா பத்தி என்னுதல்
ஸ்வரூபத்துக்கு சத்ருசம் ஆனது என்னுதல்
திருமலை ஆழ்வார் தம்முடைய சேஷத்வத்தை நமக்கு தருவர் என்னுதல்
தடங் குன்றமே.–
திருவேங்கடமுடையானுக்கு ஸ் வைர சஞ்சாரம் பண்ணுகைக்கு இடம் உடைத்தாய் இருக்கை –

————————————————————————————————————-

திருமலை தானே நம் விரோதியைப் போக்கும் என்கிறார் -அவனுக்கும் ப்ராப்யமான திருமலை நமக்கு ஓன்று
தர வேணுமோ -அது தானே ப்ராப்யம் என்கிறார் என்றுமாம் –

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
ஒரு மலையைக் கொண்டாயிற்று துக்க நிவ்ருத்தி பண்ணிற்று –
கோ கோபீ ஜன சங்குலம் -அதீவார்த்தம் -என்று அவர்கள் குளிரடி உண்கிற தசையில் ரஷித்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
அது ஓரூர் அளவிலே இ றே –
இந்திரனுடைய பூமியை மஹா பலி பறித்துக் கொள்ள எல்லை நடந்து மீட்டு பூமியை ரஷித்த உபகாரகன் –
பரன் –சர்வேஸ்வரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை-
சேஷியானவன் விரும்புகிற தேசம் சேஷ பூதனுக்கு ப்ராப்யமாகச் சொல்ல வேணுமோ
ஒன்றுமே தொழ –
ஒன்றையுமே அனுபவிக்க –
உள் நிற்கிறவனை தேடிப் போக வேண்டாம் என்கை –
நம்வினை ஓயுமே.–
அடிமைக்கு விரோதியை திருமலை தானே போக்கும் என்னுதல் –
ஒரு ப்ராப்யம் பெற்றிலோமே -என்னும் வியசனம் நீங்கும் என்னுதல் –

————————————————————————————————————–

துக்க நிவ்ருத்திக்கு திருமலை ஆழ்வார் எல்லாம் வேணுமோ -திருமலைக்கு அவயவ பூதனான திருவேங்கடமுடையான் அமையும் என்கிறார் –

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப்
ஜென்ம ஜரா மரணாதிகள் ஓயும் -ஓயும் என்கையாலே இதுக்கு முன்பு உச்சி வீடும் விடாதே சென்றது என்கை
பிணி -சரீர சம்பந்த ஹேதுவான கர்மம் –
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து-ஆயன்-
துக்க நிவ்ருத்திக்காக திருமலையில் வந்து நின்ற ஸூ லபன் ஆனவன்
நாள்மலராம் அடித் தாமரை-
நிரதிசய போக்யமான திருவடிகளை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–
மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பார்ப்பார்க்கு
இது இ றே துக்க நிவ்ருத்திக்கு குடிக்கிற வேப்பன்குடி நீர் –

————————————————————————————————————–

திருமலையே ப்ராப்யமான பின்பு எல்லாரும் கரண பாடவம் உள்ள போதே திருத் தாழ் வரையை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
திருமலைக்கு போகைக்காக ஈஸ்வரன் நியமித்த ஆயுசின் இறுதியினுடைய எல்லையான நாள் குறுகி
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
ஸ்ரத்தை யேயாய் கரண பாடவம் இன்றிக்கே இருக்கும் தசையில் சென்று திரு மலையை அனுபவிக்க ஒண்ணாத படி கலங்கி
அவசன்னர் ஆவதற்கு முன்பே ஆஸ்ரயிங்கோள் -இருந்ததே குடியாக அபேக்ஷிக்கிறார்
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
ஸ்வ ஸ்பர்ஸ ஸூ காதி அதிசயத்தால் விகசிதமான பணங்களை உடைய திரு அனந்த ஆழ்வானைக் காட்டிலும் விரும்பி வர்த்திக்கிற திரு மலை
திரு மலையை திரு அனந்த ஆழ்வானாக வும் சொல்லக் கடவது
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–
செறிந்த சோலையையும் -பரப்பு மாறப் பூத்த பொய்கையும் உடைய திருத் தாழ் வரையை –
தாள்வரை –எய்த்து, இளைப்பதன் முன்னம்- அடைமினோ-வைத்த நாள்வரை எல்லை குறுகி எய்த்து இளைப்பதன் முன்னம்- சென்று அடைமினோ-என்றுமாம் –

——————————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர் ஆழ்வார் மநோ ரதித்த படியே
அடிமையையும் செய்யப் பெறுவார் என்கிறார் –

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-

தாள் பரப்பி –
கடினமான தரையிலே நாள் பூவை பரப்பினால் போலே யாயிற்று திருவடிகளை பரப்பிற்று –
மண் தாவிய ஈசனை-
உலகம் அளந்த பொன்னடி -என்று திருவேங்கடமுடையானை ஸ்ரீ வாமனனாக சொல்லக் கடவது
வரையாது ஒழி கையாலும்-ஜகாத்தை அடைய திருவடிகளின் கீழே சேர்த்துக் கொள்ள நிற்கிற நிலையாலும் –
ஈசனை –
ஸ்வாமியை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
இவருக்கு அடிமையில் மநோ ரதத்தில் பரப்போ பாதி போருமாயிற்று-திருச் சோலையில் பரப்பு –
கேழ்இல்
ஒப்பு இல்லாத -இப்பத்து ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தை சொல்லுகையாலே ஒப்பு இல்லாத பத்து
ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–
இவர் பிரார்த்தித்த கைங்கர்யத்தை பெற்று சிறியார் பெரியார் என்று இன்றிக்கே தம் தாம் பேறாக புகழும் படி அடிமை செய்யப் பெறுவர்கள் –

——————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-