திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-2–

ஐஸ்வர்யாதிகள் உடைய தோஷ அனுசந்தான பூர்வகமாக பகவத் வை லக்ஷண்யத்தை உபதேசிக்க -அது அவர்களுக்கு பலியாதே
தம் பக்கல் விடாய்க்கு யுத்தம்பகம் ஆயிற்று –
ராவணனுக்கு சொன்ன ஹிதம் அவனுக்கு செவிப்படாதே ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பெருமாளை பற்றுகைக்கு உறுப்பானால் போலே
வீடுமின் முற்றத்திலும் -சொன்னால் விரோதத்திலும் -ஒரு நாயகத்திலும் பரோபதேசம் பண்ணின இது தமக்கு வைஸத்யத்துக்கு உறுப்பாய்
மூன்று களை பறித்த பயிர் போலே தம்முடைய பிரேமத்தை சத்சங்கம் ஆக்கிற்று –
முடியானேயில் பிறந்த விடாய் ரசாந்தரங்களால் அபிபூதமானது தலை எடுத்து தேச காலங்களால் விபக்ருஷ்டமான அவன் படிகளை
இப்போதே காண வேணும் என்னும் விடாயைப் பிறப்பித்து அப்போதே அனுபவிக்கப் பெறாமையாலே அப்ரக்ருதிங்கதராய் தம்முடைய
தசையைக் கண்ட பந்துக்கள் சோகிக்கிற படியை –
எம்பெருமானை ஆசைப் பட்டு பெறாதே மோஹங்கதையாய் நோவு படுகிறாள் ஒரு பிராட்டியைக் கண்ட திருத் தாயார் பேச்சாலே அருளிச் செய்கிறார்
சாகரம் தர்த்து முத்யுக்தம் ரூபமப்ரதிமம் மஹத் த்ரஷ்டும் இச்சாமி தே வீர -என்ற திருவடியைக் கண்ட அநந்தரம்
கடல் கடந்த உன்னுடைய வடிவைக் காட்ட வேணும் -என்றான் -பீமா சேனன் –
பூத காலத்தே செய்ததை காட்ட வல்லன் -என்கிற சக்தியை அறிகையாலே-அப்படியே அவன் சக்தியை அறிகையாலும்
தன் சாபலத்தாலும் இவளும் தேச கால விபக்ருஷ்டமானவற்றை காண வேணும் என்று ஆசைப்படுகிறாள் –

———————————————————————————————–

வடதளி சாயியான சர்வேஸ்வரனுடைய திருவடிகளில் சாத்தின திருத் துழாயை செவ்வி மாறாதே இப்போதே பெற வேணும்
என்று ஆசைப்படா நின்றாள் என்று திருத் தாயார் சோகிக்கிறாள்-

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

பாலன் ஆய்,
ஆத்மா நம் மானுஷம் மன்யே-என்று மனிச்சுக்கு அவ்வருகு அறியாதாப் போலே இவ் வவஸ்தைக்கு அவ்வருகு திரு உள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை
முக்த சிசு என்றும் -தூய குழவியாய் என்றும் -படியாதுமில் குழவிப் படி என்றும் -சொல்லுகிறபடியே அதிசைஸவம் இருந்தபடி
ஏழ் உலகு உண்டு,
பால்யத்தின் கார்யம் இருந்த படி -பிரளய ஆபன்னமான லோகங்களை ஸாத்மிக்கும் ஸாத் மியாது -என்று அறியாதே எடுத்து திரு வயிற்றில் வைத்தான்
பரிவு இன்றி
பரிவு -வருத்தம் -லோகங்களை திரள வயிற்றிலே வைத்தால் சாத்யாமல் வரும் நோவு இன்றிக்கே இருக்கை –
ஆலிலை-
ஒரு பவனான ஆலிலையில் –
லோகங்கள் சாத்மியாது என்று அறியாதாப் போலே யாயிற்று இது படுக்கையாய் போராது என்று அறியாதபடியும்
அன்ன வசம் செயும்
அன்னம் என்று உணவு -அதுக்கு அனுகுணமான வியாபாரத்தை பண்ணுமவன்
அச் சைசைவத்திலும் ரக்ஷணத்தில் அவதானம் இருந்தபடி
இடக்கை கீழ்ப் படக் கிடந்தானாகில் லோகங்கள் ஜெரித்துப் போம் இ றே
அண்ணலார்
சர்வ ரக்ஷகனான ஸ்வாமி -அவன் சைசைவத்திலும் ரக்ஷணத்தில் அவதானம் போலே யாயத்து இவள் மோஹத்திலும் முறையில் கலக்கம் அற்று இருக்கும் படி
சம்சாரிகளை ஆபத்தே முதலாக ரஷித்த சர்வ ரக்ஷகன் ஆனவனை ஓர் அபலைக்கு உதவானோ -என்னா நின்றாள்
அண்ணலார் தாளிணை-
சேஷ பூதன் பற்றுவது சேஷியுடைய திருவடிகளை இ றே
தாளிணை மேல் அணி தண் அம் துழாய்
வட தள சாயியினுடைய திருவடிகளில் திருத் துழாயை செவ்வி மாறாமே அனுபவிக்க வேணும் என்னா நின்றாள்
அவன் அகடிதங்களை செய்திலனாகில் இவள் துர்லபங்களை ஆசைப்படாள் கிடீர்
துழாய் என்றே
கலியர் சோறு சோறு என்னுமா போலே பலகாலும் இத்தையே சொல்லா நின்றாள்
ஒரு காலத்திலே செய்து அற்று போனது இனிக் கிடையாது என்று நான் சொன்ன ஹித வசனம் செவிப் படாதே தான் நினைத்ததையே சொல்லா நின்றாள்
மாலுமால்
மாலுதல் -மயங்குதல் -மோஹியா நின்றாள்
கிடையாததை ஆசைப் பட்டால் மோஹமேயாய் தலைக் கட்ட வேணுமோ
மணியிலே அக்னி புத்தி பிறந்தால் சுட வேணுமோ
வல் வினையேன்
இவளை இப்படி காணும்படியான பாபத்தை பண்ணினேன்
மோஹித்தவளுக்கு துக்க அனுபவம் இல்லை
உணர்ந்து இருந்து கிலேசப் படுகிறாள் தான் ஆகையால் -வல்வினையேன் -என்கிறாள்
மட வல்லியே.–
மடப்பமாவது -பற்றிற்று விடாதே நின்று அத்தையே நினைக்கை
வல்லி-
ஒரு கொள் கொம்பிலே சேரா விடில் தரியாத படியான பருவம் -பதிசம்யோக ஸூ சலபம் வய

——————————————————————————————————

திருக் குரவையில் கிருஷ்ணனுடைய லீலா சேஷ்டிதங்களை காண ஆசைப் படா நின்றாள் என்கிறாள் –

வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

வல்லி சேர் நுண்ணிடை
வல்லி மருங்குல் -என்றால் போலே வல்லிக் கொடி போலே இருக்கிற இடையை உடையவர்கள் என்னுதல்
வல்லி போலே இருக்கிற வடிவை உடையவர்கள் என்னப் புக்கு இடைக்கு உவமானம் இல்லாமையால் -நுண்ணிடை என்னுதல்
ஆய்ச்சியர் தம்மொடும்
என் பருவத்தில் பெண்கள் அநேகருக்கு உதவினவன் எனக்கு உதவானோ என்கிறாள்
கொல்லைமை செய்து –
வரம்பு அழிந்த செயல்களை செய்து தன் ஸுந்தர்யாதிகளாலே அவர்கள் மரியாதைகளை அழித்து
குரவை பிணைந்தவர்
பெண்கள் கோவையில் தன்னைத் தொடுத்தான் –
நல்லடி மேல் -அவனுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளில்
அணி நாறு துழாய் என்றே
பெண்கள் அடியும் இவன் அடியும் பட்ட அடிச்ச சுவடு கந்தத்திலே தோற்றும் படியான திருத் துழாயை யாயிற்று இவள் ஆசைப் படுகிறது –
ப்ரஹ்மசாரி எம்பெருமான் திருவடிகளில் ஆசைப்படுமவள் அன்றே
என்றே சொல்லுமால்
பாவியேன் நினைத்த படி வாய் விடக் கடவுள் அன்றியிலே இருக்கிற இவளுடைய ஸ்த்ரீத்வம் எல்லாம் எங்கே போயிற்று
சூழ்வினை யாட்டியேன் பாவையே.–
தப்பாமல் அகப்படுத்தும் பாபத்தைப் பண்ணினேன் –
பாவையே -நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடையவள்
பாவை சொல்லுமால் –
நினைத்து வாய் விடக் கடவது அன்றிக்கே இருக்கும் ஸ்த்ரீத்வம் எல்லாம் போய் தன் அபிமதத்துக்கு தான்
வாய் விட வேண்டும்படி யாயிற்று என்னுடைய பாபம் இறே –

—————————————————————————————————-

திரு உலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளில் திருத் துழாயை ஆசைப் படா நின்றாள் என்கிறாள் –

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
பாக்களால் இயலப் பட்ட வேதம் -சந்தஸ் ஸூ க்களை உடைத்தான் வேதம்
அதில் நன்றான மாலைகளைக் கொண்டு -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு –
சர்வ வேதா யத் பத்மாம நந்தி -என்கிறபடியே அல்லாத இடங்களுக்கும் ப்ரதிபாத்யனே யானாலும் ஆராத நத்திலே யாதல் -விபூதியிலே யாதல் பரந்து இருக்கும் –
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற-
தேவர்களும் சனகாதிகளும் -சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே ஸ்தோத்ரம் பண்ண திரு உலகு அளந்த படி –
சேவடி -மேல் அணி செம் பொன் துழாய் என்றே-கூவுமால்
எடுத்த திருவடியில் கவிழ் வில் சிவப்பு எல்லாருக்கும் அனுபவிக்கலாய் இருந்த படி –
எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்து ரஷித்தவன் எனக்கு உதவாது ஒழியுமோ -என்னா நின்றாள்
அவன் திருவடிகளில் சாத்தின ஸ் ப்ருஹணீயமான திருத் துழாயைச் சொல்லிக் கூப்பிடா நின்றாள்
கோள்வினை-யாட்டியேன்
கொள்ளும் வினை –முடிக்கும் வினை என்னுதல் -கொள் என்று மிடுக்காய் வலிய பாபம் என்னுதல் –
கோதையே.–
இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்ட நாயகன் படும் பாட்டை இவள் தான் படா நின்றாள் -என்கிறாள் –

—————————————————————————————————-

சர்வ ஸ்மாத் பரனாய் திரு நாட்டிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளில்
திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள் –

கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

கோது இல்
கோது இன்றிக்கே இருக்கை -குணத்துக்கு கோது இல்லாமை யாவது -குணாந்தரத்தில் போகாத படி கால் காட்டுகை
வண்புகழ் கொண்டு,
கல்யாண குணங்களைக் கொண்டு
சமயிகள்-
சீல குணம் துவக்கு அற்று – அதில் காட்டில் வீர குணம் துவக்கு அற்று -அதில் காட்டில் ரூப குணமான ஸுந்தர்யாதிகள் துவக்கு அற்று
என்று ஓர் ஓர் கோடியிலே நிஷ்டரானவர் என்னுதல்
தஹர உபகோஸல சாண்டில்யாதி வித்யா நிஷ்டர்களை சொல்லவுமாம் –
பேதங்கள் சொல்லிப்
தாங்கள் பற்றின குணங்களுக்கு ஏற்றம் சொல்லி
பிதற்றும்
அவற்றிலே ஈடுபட்டு ஜ்வர சந்நிபதரைப் போலே அடைவு கெடச் சொல்லுகை –
பிரான்,
இப்படி இவர்கள் பேசும்படி குணங்களை உபகரித்தவன்
பரன்-பாதங்கள் மேல் அணி
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ வைகுண்ட நாதன் திருவடிகளில் நித்ய ஸூ ரிகள் சாத்தின
பைம் பொன் துழாய்
ஸ் ப்ருஹணீயமான திருத் துழாய்
என்றே-ஓதுமால்;
இதையே எப்போதும் சொல்லா நின்றாள்
ஊழ் வினையேன் –
ஊழ் என்று முறை -இதுவும் பிராப்தமாம் படியான பாபத்தை பண்ணினேன்
தடந் தோளியே.–-
நாயகனைப் பிச்சேற்ற வல்ல தோள் அழகை உடையவள் என்கை –

—————————————————————————————————-

நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்து அருளின கிருஷ்ணனுடைய திருவடிகளில் திருத் துழாயை ஆசைப் படா நின்றாள் -என்கிறாள்

தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ்தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—

தோளி சேர் பின்னை பொருட்டு
கிருஷ்ணனோடு துல்ய சீல வயோ வ்ருத்தையான நப்பின்னை பிராட்டிக்காக
அஸி தேஷணா-என்றால் போலே கிருஷ்ணனைக் காட்டில் இவளுக்கு தோள் அழகு தன்னேற்றம் –
இகாரத்தை அவயயமாக்கி தோள் சேர் பின்னை -என்று ஒரு தமிழன் சொன்னான் –
எருது ஏழ்தழீஇக்-கோளியார்,-
எருதுகள் ஏழையும் தழுவிக் கொள்ளுமவர் -அவளை பெறுகைக்கு ஹேது வாகையாலே போக ரூபமாய் இருந்தபடி –
கோவலனார்,குடக் கூத்தனார்-தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே-
அவனைப் பெறுகைக்கு ஈடான ஆபி ஜாத்யத்தையும் செருக்கையும் உடையவர் –
வில்லை முறித்தாலும் இஷுவாகு வம்ஸயர்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப் போலே எருது ஏழு அடர்த்தாலும்
இடைத் தனத்தில் புரை உண்டாகில் பெண் கொடார்கள் இறே
அவளுக்கு உதவின கிருஷ்ணன் திருவடிகளில் திருத்துழாயை யாயிற்று இவள் ஆசைப் பட்டது
நாளும் நாள் நைகின்றதால் –
ஒரு நாள் நைகைக்கு ஆஸ்ரயம் பொறாத மார்த்வத்தை உடையவள் நாள் தோறும் நாள் தோறும் நையா நின்றாள்
ஆச்ரயத்தையும் கொடுத்து நை யப் பண்ணும் விஷயம் இறே
நைகின்றதால் என்றன் மாதரே.-
நையா நின்றது என் பெண் பிள்ளை

——————————————————————————————————

மனிச்சு அழியாமல் நப்பின்னை பிராட்டிக்கு உதவினால் போல் அன்றியே ஸ்ரீ பூமிப பிராட்டிக்காக தன்னை அழிய
மாறினவனுடைய திருவடிகளில் திருத் துழாயை ஆசைப் படா நின்றாள் என்கிறாள் –

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும்மால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-

மாதர்
நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடையவள் -என்னுதல் ஸ்நேஹ யுக்தை என்னுதல்
மா மண் மடந்தை பொருட்டு
ஸ்லாக்த்யையான ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காக
ஏனமாய்,
பாசி தூர்த்து -இத்யாதி நீருக்கும் சேற்றுக்கும் இறா யாத வடிவைக் கொண்டு –
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்-பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே-
வராஹ கல்பாதியாய் அவதாரகாலம் ஆகையாலே ஸ்லாக்யமான காலத்திலே மஹா பிருத்வியை
அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து அருளினவருடைய திருவடிகளில்
ரோமாந்தரஸ் த்தா முனயஸ் ஸ் துவந்தி -என்று சனகாதிகள் இட்ட திருத் துழாயை யாயிற்று இவள் ஆசைப்படுகிறது
ஓதும்மால் எய்தினள்
எப்போதும் இத்தையே சொல்லும்படியான பிரேமத்தை -பிரமத்தை -உடையவள் ஆனாள்
என்றன் மடந்தையே.–
இவள் பருவத்தை கண்டார் யாயிற்று மால் எய்துவர் -அத்தலை இத்தலை யாவதே –

————————————————————————————————-

அம்ருத மதன தசையில் பெரிய பிராட்டியாரை திரு மார்பிலே வைத்து அருளின எம்பெருமானுடைய
திருவடிகளில் திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள் –

மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-

மடந்தையை
சர்வ காலமும் அனுபவ யோக்த்யையாய் இருக்குமவள் என்னுதல் -பருவத்தை சொல்லுதல் -பருவமும் எழிலும் ஓன்று அன்று இ றே
வண் கமலத் திரு மாதினைத்
நல்ல தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய திரு வாகிற மாதை -சாஷாத் லஷ்மியை
தடங்கொள் தார் மார்பினில்
அவளுக்கு அந்தபுரமாய் போரும் பரப்பை உடைத்தாய் ஸர்வேச்வரத்வ ஸூ சகமான தோள் மாலையை உடைத்தான் திரு மார்பிலே வைத்தவர்
பச்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே என்று தேவ ஜாதி அடங்கப் பார்த்து இருக்க
திரு மார்பிலே ஏற ஆதரித்து தம் பேறாக வைத்தவர்
வைத்தவர் தாளின் மேல்-வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே
திருவடிகளில் ஸ்பர்சத்தாலே தன் நிலத்தில் போலே வடம் கொள்ளா நிற்பதாய் அழகியதாய் குளிர்ந்து செவ்வியை உடைத்தான
திருத் துழாயை ஆசைப் படா நின்றாள்
அழகியதாத் தொடை யுண்ட துழாய் என்னவுமாம்
இவள் மடங்குமால்;
நையா நின்றாள்
மால் எய்தினாள் என்னும் அளவே அன்றியே சொல்லப் புக்கு சொல்ல மாட்டாதே சுருண்டு விழா நின்றாள்
வாணுதலீர்!
ஒளியை உடைய நுதலை உடைய நீங்கள் -உங்களை போலே இவளைக் காணப் பெறுவது எப்போது
என் மடக்கொம்பே.–
என்னைப் பிரியாதே அவிக்ருதையாய் இருந்தவள் படும் பாடே இது

————————————————————————————————

ஸ்ரீ ஜனகராஜன் திருமக்களுக்காக லங்கா தஹனம் பண்ணி – விரோதியைப் போக்கின -அருளின
சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளில் -நிரதிசய போக்யமான திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள்

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

கொம்பு போல் சீதை பொருட்டு,
வஞ்சிக் கொம்பு போலே இருக்குமவள் என்னுதல் -ஏவ அவஸ்த்தை ஏக தேசம் என்னுதல்
இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
சந்த்ர ஆதித்யர்களும் புகைப் பயப்படுமூர்
சர அக்னியை புக பிறப்பித்தவர் -கேவல அக்னி சோற்றை வேவிக்குமது ஒழிய பிரவேசிக்க கூசுமூர்
கையாலே சர அக்னியை பிரவேசிப்பித்தான்
யதா ராகவா நிர்முக்த சர -என்று திருவடி புகிலும் சரஸ்த நீயானாக இ றே புகுந்தது
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்-நம்புமால்;
பரிமளத்தை உடைத்தாய் இருக்கும் என்னுதல் -நித்ய அபூர்வமாய் இருக்கும் என்னுதல் –
பண்டு ஒருத்திக்கு உதவினவன் எனக்கு உதவானோ என்று ஆசைப்படா நின்றாள்
அசாதாரண விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கினால் போலே ஏதேனும் ஒரு புஷபத்தை சாத்தினாலும் திருத் துழாய் இதர சஜாதீயமாக ஆயிற்றாகக் கடவது
நான் இதற்கு என்செய்கேன்
கிருஷ்ணனைப் போலே சாதாரணன் அன்றிக்கே ஏக தாரா வ்ரதன் திருவடிகளில் திருத் துழாயை எங்கே தேடுவேன்
அவளும் அவனுமான சேர்த்தியிலே ஆசைப்பட்டாள் என்று அறிகிறிலள்
நங்கைமீர்?–
பூரணைகளான நீங்கள் சொல்ல வல்லி கோளே-என்கிறாள் –

—————————————————————————————————

அவனுடைய ஆயுதங்களை காண வேணும் என்று சொல்லப் புக்கு முடியா சொல்ல மாட்டாதே நோவு படா நின்றாள் -என்கிறாள் –

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–4-2-9-

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
உங்கள் பூர்த்தி நான் சொல்லக் கேட்டு அறிய வேணுமே உங்களுக்கு
நீங்களும் ஒரு பெண் பிள்ளையை பெற்று வளர்த்தி கோளே
நல்குகை -வளர்க்கை -இவள் பட்டது பட்டார் உண்டோ
உன் பெண் பிள்ளைக்கு வாசி என் என்ன
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
என்னுடைய பெண் பிள்ளை படி என்னாலே பாசுரம் இட்டுச் சொல்லாயோ இருக்கிறது
நங்கைமீர் என்று சம்போதிப்பது சஜாதீயரை -இவளுக்கு சஜாதீயர் ஆழ்வார்களாம் இத்தனை
நீங்களும் பகவத் விஷயத்தில் பிரவணர் நான் பட்டது பட்டார் உண்டோ -என்று கருத்து
யாதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை முடிய பேசிலும் இவ்விஷயத்தில் அவகாஹித்தார் படி பாசுரம் இட்டு சொல்ல முடியாது என்கை
சதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டாவ்யஸ் சர்வ தேஹிபி -என்று கண்டு இருக்கும் அத்தனை போக்கி பேசப் போகாது
ப்ரியோஹி ஜஃனானி நோஸ்யார்த்தம் -என்று இ றே அவன் வார்த்தையும்
கிடையாததிலே கிடைக்குமதில் பண்ணும் சாபல்யத்தை பண்ணுகிறவள்
உன்னால் சொல்லலாம் அம்சத்தை சொல்லிக் காண் என்ன
சங்கு என்னும்;
பெரு வருத்தத்தோடு -சங்கு -என்னா நின்றாள் -இப்படி அருமைப் பட்டோம் என்று மீள அறிகிறிலள்
சக்கரம் என்னும்;
சொல்லவும் மாட்டு கிறிலள் -மீளவும் மாட்டு கிறிலள் -இவை இரண்டுக்கும் நடுவே கிடக்கிற தோள் மாலையை நினைத்து
துழாய் என்னும்;
சங்கு சக்கரங்கள் என்றும் -கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி-என்றும் கூடச் சொல்ல மாட்டு கிறிலள்
ஆபத்து மிக்க திசையிலும் சங்க சக்ர கதா பாணே-என்றாள் இ றே
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–
சொல்லித் தலைக் கட்ட மாட்டாதே -மீளவும் மாட்டாதே -இப்படி சர்வ காலமும் சொல்லா நின்றாள் –
நான் ஸ்த்ரீத்வத்தை பார்த்து மீளப் பண்ணவோ -சொல்லித் தலைக் கட்டப் பண்ணவோ -என்கிறாள் –

——————————————————————————————————————-

உன் மகள்- நீ இட்ட வழக்கு அன்றோ – அவளுக்கு ஹிதம் சொல்லாய் என்றவர்களைக் குறித்து தான் சொல்லிற்றுக் கேளாதே
அவனை ஆசைப் பட்டு மிகவும் அவசன்னையாக நின்றாள் என்கிறாள் –

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-

என் செய்கேன்? என்னுடைப் பேதை
சொன்ன ஹிதம் கேட்க்கும் பருவம் அன்று
,என் கோமளம்,
ஹிதம் கேட்க்கிலள் என்று விட ஒண்ணாத படி வியஸன சஹம் இல்லாத ஸுகுமார்யத்தை உடையவள்
என் சொல்லும் என் வசமும் அல்லள்;
சொன்ன ஹிதம் கேட்பதும் செய்யாள் -ஹிதம் சொல்லலாம் படியும் இருக்கிறிலள்
நங்கைமீர்!
இவளை பெற்ற என்னைப் போல் அன்றிக்கே நீங்கள் பூரணைகள் இ றே
இவளைப் போலே இருக்கும் பெண் பிள்ளையை பெறாதவர்கள் ஆகையால் குறை வற்றவர்கள் இ றே
மின்செய் பூண் மார்பினன்
மின்னா நின்ற ஆபரணம் உண்டு -ஸ்ரீ கௌஸ்துபம் -அத்தை திரு மார்பிலே உடைய கிருஷ்ணனுடைய திருவடிகளில்
திருத் துழாய் விரஹ வைர்ண்யத்தையே ஆபரணமாக உடைய முலைக்கு –
பொன்னாலே செய்த ஆபரணத்தை உடைய முலை என்றுமாம்
ஸ்ரீ கௌஸ்துபம் புருஷோத்தம லக்ஷணம் ஆனால் போலே விரஹத்தில் வைவர்ணயம் ஸ்த்ரீத்வ லக்ஷணம் இ றே
கண்ணன் கழல் துழாய்-பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.
விரஹத்தாலே துவண்ட முலைக்கு வேணும் என்று சொல்ல நினைத்து முடியச் சொல்ல மாட்டாதே மெலியா நின்றாள்
மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து -என்கிற படியே ஸ்ரீ கௌஸ்துபம் தன் முலையிலே அழுந்த
அணைக்க ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது –
மெலியுமே.-
இவள் மெலியா நின்றாள் -நான் என் செய்கேன் -இவளுடைய அவஸ்தை இருக்கிற படியால் இவளைக் கிடைக்க மாட்டாதாய் இரா நின்றது
-நான் எங்கனே ஜீவிக்கக் கட வேன்-என்கிறாள் –

——————————————————————————————–

நிகமத்தில்-இத் திரு வாய் மொழியை அப்யஸிக்க வல்லார் அயர்வறும் அமரர்களுக்கு சத்ருசர் ஆவார் -என்கிறார்

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11-

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
இவ் வவ சாதனம் எல்லாம் தீரும்படி வந்து முகம் காட்டின கிருஷ்ணன் திருவடிகளில் –
மெலியும் என் செய் கேன்-என்று கை விட்டாள் திருத் தாயார் –
உடையவர்கள் கை விடார்கள் இ றே
நம் கண்ணன்-தாஸாம் ஆவிர் பூத் ஸவ்ரி என்று இப்படிப் பட்ட ஆபத்துக்களில் வந்து முகம் காட்டும் என்ற பிராமண பிரசித்தி
மலிபுகழ்- வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கிட்டாதவற்றையும் அனுபவிக்க ஆசைப் பட்டார் என்னும் புகழ் மிக்கு இருக்கிற ஆழ்வார் சொன்னது
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்-
ஆர்த்தியை விளைக்க வல்லவன்-பரிஹரிக்க வல்லவன் -அது தன் பேறாய் இருக்க வல்லவன் என்கிற கல்யாண குணங்களை
வ்யக்தமாகச் சொல்லுகிற இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே-
நித்ய அனுசந்தானம் பண்ணா நிற்க செய்தே விடாய் மிக்கு இருப்பவர் என்னும் புகழை உடைய நித்ய ஸூரிகளுக்கு -நல்ல சேர்த்தியாவர் –

————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: