திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-1–

த்வயத்தில் உத்தர கண்டார்த்தத்தை அருளிச் செய்தார் கீழ் மூன்று பத்தாலும்-
இனி மூன்று பத்தாலே பூர்வ கண்டார்த்தத்தை அருளிச் செய்கிறார் –
கீழ் பகவத் அனுபவத்தால் ஹ்ருஷ்டரானவர் அந்த ப்ரீதி ப்ரகரஷத்தாலே இவ்விஷயத்தை ஒழிய ஐஸ்வர்யாதிகளில் மண்டி
கிடக்கிறவர்களைப் பார்த்து –இவர்கள் இவற்றினுடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களை அறியாமையால் இவற்றை விரும்புகிறார்கள் -என்று
இவற்றினுடைய தோஷங்களை உபபாதியா நின்று கொண்டு பரம புருஷார்த்த பூதனான எம்பெருமான் திருவடிகளை ஆஸ்ரயின்கோள் -என்கிறார்
வீடுமின் முற்றவும் -திருவாய் மொழியில் பகவத் ஸமாச்ரயணத்தில் நோக்கு
சொன்னால் விரோதம் – திருவாய் மொழியில் பகவத் அர்ஹ காரணங்களைக் கொண்டு அபிராப்தமாய் நிஷ் பிரயோஜனமான விஷயங்களை
கவி பாடி பாழே போக்காதே கொள்ளுங்கோள் என்றார்
அத்தாலே ஸித்தித்த த்ரவ்யமும் அஸ்திரம் என்கிறது இதில் –

—————————————————————————————————————————–

முதல் பாட்டில் சர்வ பவ்மரானவர்கள் ராஜ்யத்தை இழந்து இரந்து ஜீவிக்கும் படி துர்க்கதராவார் –
ஆனபின்பு நித்ய ஸ்ரீ யான சர்வேஸ்வரனைப் பற்றப் பாருங்கோள் என்கிறார் –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

ஒரு நாயகமாய்
சர்வ பூமிக்கும் வேறு எதிர் இன்றிக்கே-ஏகாதிபதிகளாய் -பதிம் விஸ்வஸ்ய-என்கிற சர்வேஸ்வரனாக வாய்த்து பாவிப்பது
ஓட
காலமும் அறுபதினாறாயிரம் ஆண்டு இ ரே சக்கரவர்த்தி ஜீவித்தது -அப்படியே நெடும் காலமும்
உலகு உடன் ஆண்டவர்
தன்னோடே லோகம் மருவும்படி ஆண்டவர் என்னுதல்-
பாபம் பண்ணினார் முன்னே கையும் வில்லுமாய் நின்ற சகஸ்ர பாஹ்வர்ஜுனனைப் போலே-லோகம் எங்கும் ஆண்டவர் என்னுதல்
அகார்யசிந்தா சமகாலமேவ -என்கிறபடியே பாபம் செய்தவர் முன்பே கையும் வில்லுமாய்க் கொண்டு போந்த கார்த்த வீர்ய அர்ஜுனனைப் போலே என்னுதல்
ராஜ்யம் நாம் மஹாவியாதி ரசிகித் ஸ் யோ வி நாசன -ப்ராதரம் வா ஸூதம்வா அபி த்யஜந்தி கலு பூமி பா –
கருநாய் கவர்ந்த காலர்-
ராஜ்யத்தை இழந்து -பிக்ஷை ஒழிய ஜீவனம் இன்றிக்கே பகலில் புறப்பட லஜ்ஜித்து இருளிலே புறப்பட்டால் இருள் செறிவு போலே
கிடந்த நாய்களின் வாயிலே காலை இடுகையாலே அவற்றால் கவ்வப்பட்ட காலை உடையவர்
கரு நாய் -கருமை -சீற்றமாய் -வெட்டிய நாய் என்றுமாம்
கரு நாய் -குட்டியிட்ட நாய் என்றுமாம்
முன்பு ஸார்வ பவ்மன் என்று சொல்லுமதுவும் போய் நாய் கவர்ந்த காளான் என்று நிரூபகமாய் –
சிதைகிய பானையர்-
கண்ட இடம் எல்லாம் பொளிந்து-உபயோக அர்ஹம் இன்றிக்கே பொகட்டு கிடந்தது ஒன்றை எடுக்கும் –
பண்டு பொன் காலத்தில் அல்லது ஜீவியானே
பெரு நாடு காண
முன்பு ராஜாக்கள் தங்களைக் காண அவசரம் பெறாதே நிற்கும் படி இருந்தவர்கள் இருந்ததே குடியாக திரண்டு காணும் படி-

தாங்கள் சம்ருத்தராய் வாழ்ந்த தேசத்தில் உள்ளார் எல்லாரும் காணும் படி
இம்மையிலே
தாங்கள் ஜீவித்த ஜென்மத்திலே
பிச்சை தாம் கொள்வர்
முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கும் –
இன்று பிக்ஷை தனக்குத் தேட்டமாய் இருக்கும் –
முன்பு ராஜாக்கள் ரத்நாதிகளை பச்சையாகக் கொண்டு வந்தால் அநாதரித்து இருக்குமவனுக்கு பிக்ஷை திட்டமான படி
முன்பு ராஜாக்கள் கொண்டு வந்த பச்சையை ஆள் இட்டு இ றே வாங்குவது
இப்போது இவன் அபேக்ஷையே போக்கி இடுவார் இல்லை ராஜ்ய ஸ்ரீ இங்கனே யானபின்பு
திரு நாரணன்
இடர் கெடுத்த திருவாளன் இணை அடி-
தத்ர நாராயண ஸ்ரீ மான்
ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்
ஒரு மிதுனம் இ றே ஆசிரயணீயமும் ப்ராப்யமும் -ஒரு மிதுனத்துக்கு இ றே சேஷம் இ றே இது
தாள்
சேஷ பூதம் பற்றுவது திருவடிகளை இ றே
காலம் பெறச் –
ஜீவிதும் மரணாந்தம் ஹி ஜராந்தே ரூபா யவ்வனே சம்பதச்ச வி நா சாந்தா ஜானன் கோ த்ருதிமாப் நுயாத்-
நாளை செய்கிறோம் என்னுமது அன்று
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வா ஸூ தேவோ ந சிந்தயந்தே
வா ஸூ தேவ தருச்சாய சாகி மர்த்தம் ந ஸேவ்யதே
சிந்தித் துய்ம்மினோ-
ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார்
நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது
அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார் –

————————————————————————————————————-

ராஜ்யத்தை இழக்கையே யன்றிக்கே சத்ருக்கள் கையிலே அபிமதைகளான ஸ்த்ரீகளையும் பறி கொடுப்பர் -என்கிறார் –

உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-

உய்ம்மின் திறை கொணர்ந்து’
ராஜாக்களை -உங்கள் சர்வஸ்வத்தையும் தந்து பிராணனைக் கொண்டு பிழைத்துப் போங்கோள் -என்றாய்த்து சொல்வது
பீஷாஸ்மாத் வாத பாவத-என்கிற அத்தை அநு கரிக்கிறார்கள்
என்று உலகு ஆண்டவர்
படையும் குதிரையும் கொண்டு திறை கொள்ள வேண்டா -ஒரு யுக்தி மாத்திரத்தாலே லோகத்தை அடையச் செலுத்தினவர்கள்
இம்மையே-
இப்படி வாழ்ந்த இந்த ஜென்மம் தன்னிலே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத்
தங்களுக்கு போக்யைகளாய் அசாதாரணை களான ஸ்திரீகளை சத்ருக்கள் பரிக்ரஹிக்க
நஹுஷன் இந்திராணியை ஆசைப் பட்டதும் துரியோதனன் திரௌபதியை ஆசைப்பட்டதும் உதா ஹரணம்
தாம் விட்டு-
பிராண ரக்ஷணத்துக்காக தாங்களே பிரார்த்தித்து விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க்
அவர்களுக்குச் செல்லும் நாட்டிலே வர்த்திக்கப் பெறாதே நிர்மானுஷமான காட்டிலே போய்
வெவ்விய மின்னொளி உண்டு -பேய்த்தேர் -அத்தையும் வெயிலையும் உண்டான காடு என்னுதல்
குமைதின்பர்கள்;
இவர்கள் போன இடத்தே சத்ருக்களாலே நலிவு படுவர்கள்-தப்பித் போனாலும் வி நாசத்தோடே யாயிற்றுத் தலைக் கட்டுவது
செம்மின் முடித் திரு மாலை விரைந்து –
இப்படி பரிபூதராகாதே வாழ வேண்டி இருக்கில் -சிவந்து மின்னா நின்ற திரு அபிஷேகத்தை உடைய ஸ்ரீ யபதியை ஆஸ்ரயிங்கோள் –
ஆஸ்ரயித்தார் தலையிலே வைக்க முடி உண்டு -தருவிப்பாரும் உண்டு என்கை -விரையாமையால் உள்ள இழவே உள்ளது -அவன் மூடியைத் தரிலும்
அடி சேர்மினோ. –
திருவடிகளில் தலையைச் சேருங்கோள் –யாவன்ன சரணவ் ப்ராது –

————————————————————————————————————-

ராஜாக்கள் தங்கள் காலிலே விழுந்தால் அநாதரித்து இருக்கும் மதிப்புடையவர்கள் ஒரு சேதனன் என்று
ஒருவர் நினையாத படி மதிப்பு அறுவர்கள் என்கிறார் –

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-

அடி சேர் முடியினர் ஆகி
தூரத் தண்டன் இடுகை அன்றிக்கே-தங்கள் முடியும் இவன் காலும் சேரும்படி தண்டன் இடுகை
அரசர்கள்
ஈஸ்வர அபிமானிகள்
தாம் தொழ
ஸ்ரீ பாதத்தே தண்டன் இடப் பெற்றோம் என்று அந்தரங்க சேவை பண்ணினாராய் திருப்தராவார்கள்
இவன் அநாதரித்து இருக்க தான் அறிந்த அறிவாக தொழுது என்றுமாம்
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
இடி போலே இருந்த வாத்தியங்கள் முற்றத்திலே முழங்க இருந்தவர்
வந்தவர் தண்டன் இட்டுக் கிடக்க அநாதரித்து ஆடல் பாடல் கண்டு இருந்தான் ஆயத்து
சிரஸா யாசதஸ் தஸ்ய என்னும் விஷயத்தை அன்றே தண்டன் இட்டது
பொடி சேர் துகளாய்ப் போவர்கள்
பொடியோடு சேர்ந்த தூளியாய்ப் போவர்கள்
தனித்து பிரதிபத்தி பண்ண ஒண்ணாதே ஒன்றோடு கூட்டி பிரதிபத்தி பண்ண வேண்டும்படி யாவார்கள்
துகைத்தால் ஒரு சேதனன் என்று கூச வேண்டாம் படி மதிப்பு அறுவர்கள்
ஆதலில் நொக்கெனக்
ஆனபின்பு சடக்கென
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–
ஸர்வேச்வரத்வ ஸூ சகமான திருத் துழாய் மாலையால் அலங்க்ருதமான கிருஷ்ணன் திருவடிகளை நினையுங்கோள் –
திருமுடியோட்டை ஸ் பர்சத்தாலே நாள் செல்ல நாள் செல்ல பரிமளம் பரிமளம் மிகா நிற்கை
பரிகர மது ஸூதன ப்ரபந்நான் -என்று யமாதிகள் அஞ்சும் மதிப்பை பெறுவர் –

———————————————————————————————————-

ஐஸ்வர்யமும் மதிப்பும் அன்று நிலை நில்லாதது போக்தாக்களும் சபரிகரமாக நசிப்பர் என்கிறார் –

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-

நினைப்பான் புகின்
கடலிலே இழிந்தாரைப் போலே எல்லை காணப் போகாது -என்னுதல்
தாம் லோக யாத்திரையை நினையாதவர் என்னுதல்
கண்டு ஆற்றேன் என்ற பர துக்க அஸஹிஷ்ணுக்கள் -என்னுதல்
கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
கடலில் எக்கலில் நுண்ணிய மணலில் அநேகர்
எனைத்தோர் உகங்களும்
அநேக யுகங்கள்
இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்-முடிந்தவரை
சகஸ்ர யுக பயந்த மஹர்யத் ப்ரஹ்மணோ விது
கங்கா யாஸ் சிகதாதாரா யதா வர்ஷதி வாஸவே-சகியா கணயிதும் லோகே நவ்ய தீதா பிதாமஹா
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
வாழ்ந்த மனையிடம் -மருங்கு -பார்ஸ்வம் -அற-இரண்டுக்கும் பேதம் தெரியாதபடி
கனக்க ஜீவித்தான் ஆகில் அசலிட்டு பார்வஸ்த்தர்க்கும் அநர்த்தமாம்
பெரு மரம் விழும் போது அருகு நின்றவற்றையும் நசிப்பிக்கும்
நசிக்குமது ஒழிய ஸ் திதரராய் இருப்பார் ஒருவரையும் கண்டிலோம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–
பனை போலே பயாவஹமான காலை யுடைத்தாய் மத்த கஜமான குவலயா பீடத்தை கொன்றவன் திருவடிகளில் தலை சாயுங்கோள் –
கீழ்ப் பாட்டில் மாம் -இன் அர்த்தம் -இதில் அஹம் -இன் அர்த்தம் -வலிய பிரதிபந்தகங்களை நிரயத்னமாக தள்ள வல்லவனை ஆஸ்ரயிங்கோள் –

————————————————————————————————————-

செல்வக் கிடப்போ பாதி அங்கநா சம்ச்லேஷ ஸூ கமும் அஸ்திரம் என்கிறார் –

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-

பணிமின் திருவருள் என்னும்-
படுக்கையில் ஸ்திரீகளை வைத்து தான் தாழ நின்று திரு உள்ளத்து ஓடுகிறது என்-அருளிச் செய்யலாகாது -என்னுமாயிற்று
தன்னை ஒழிந்தார் எல்லாரும் தன்னை அனுவர்த்திக்க தான் ஸ்திரீகளை அனுவர்த்திக்கிறான் இ றே -தன் ரசிகை தோற்ற
அம் சீதப் பைம் பூம் பள்ளி
தர்ச நீயமாய் குளிர்ந்து பரந்த பூவாலே செய்த படுக்கையிலே யாயிற்று அவர்களை வைப்பது
அணி மென் குழலார்
இவர்கள் கொண்டாட்டத்தை அநாதரித்து குழலைப் பேணுவது –ஆபரணத்தை திருத்துவது ஆகா நிற்பர்கள்
இன்பக் கலவி அமுது உண்டார்
அவர்கள் அநங்கீகார பிரமுகமான சம்ச்லேஷத்தால் வந்த ஆனந்த அம்ருதத்தை புஜித்தவர்கள்
அல்லி மலர் மகள் போக மயக்குகளை அனுகரிக்கிறார்கள்
பணிமின் திருவருள் -என்கிற இத்தை அணி மென் குழலாரிலே சேர்த்து நிர்வஹிப்பார்கள் பூர்வர்கள்
பட்டர் இன்பக் கலவி அமுது உண்டாரிலே சேர்த்து நிர்வஹிப்பர்
துணி முன்பு நாலப்
அந்த ஸ்திரீகளை வேறே சிலர் அபஹரித்து அனுபவிக்கிற இடத்திலே தன் சாபல அதிசயத்தாலே துணியாய் பின்புத்தைக்கு எட்டாம் போராமையாலே
முன்பை மறைத்து செல்வர்கள்-சாடீ மாச்சாத்திய துச்சதாம் -என்ற த்ரிஜடைனைப் போலே
பல் ஏழையர் தாம்
முன்பு இவனை ஒழிய தங்களுக்கு செல்லாத சபலைகள் ஆனவர்கள் தாங்களே
இழிப்பச்
இவனுடைய கார்ப்பண்யத்தையும் கார்ஸ்யத்தையும் சொல்லி அநாதர வசனங்களை பண்ண
செல்வர்
தம்மோட்டை பாவ பந்தத்தாலே யன்றோ சொல்லுகிறது -என்று அத்தையும் புத்தி பண்ணாதே செல்வர்
திருஷ்ணை கா நிருபத்ரவா -இ றே
மணி மின்னு மேனி
ஆனபின்பு பக்தா நாம் என்று இருக்குமவன் உடம்பை பற்றுங்கோள்
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து -ஸூ லபமாய் நிரவாதிக தேஜோ ரூபமான வடிவை உடையவன்
நம் மாயவன்
ஆஸ்ரித விஷயத்தில் செய்தது போராது என்று இருக்குமவன்
இப் பேற்றுக்கு செய்ய வேண்டுவது என் என்னில்
பேர் சொல்லி வாழ்மினோ.–
திரு நாமத்தைச் சொல்லி நிரதிசய போகத்தில் அந்வயின்கோள் –

—————————————————————————————————————

நாட்டிலே நிலை நிற்க ஜீவிக்கிறாரும் சிலர் இல்லையோ என்னில் -ஸ்ருஷ்ட்டி காலம் தொடங்கி இற்றை யளவும்
வர ஏக ரூபமாக ஜீவித்தார் ஒருவரும் இல்லை -என்கிறார் –

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது-
லோகத்தில் ஜீவித்தவர்கள் ஜீவித்தது இவர் வி நாசமாக நினைத்து இருக்குமத்தை இ றே அவர்கள் வாழ்வாக நினைத்து இருக்கிறது
இன்னம் கெடுப்பாயோ -என்றார் இ றே இவர் –
மாமழை மொக்குளின்
பெரு மழைக் குமிழி போலே -ஜல புத்புத வத்சமம் -மா மழை என்கிறது அநந்தரம் விழும் துளியோடே வசிக்கும் என்கைக்காக
மாய்ந்து மாய்ந்து
நசித்து நசித்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ;
ஜீவித்த நாள் பண்ணின பாபத்தாலே அதோ கதியில் விழுமது ஒழிய ஸ்ருஷ்ட்டி காலமே தொடங்கி இற்றை அளவும் வர ஜீவித்தவர்கள் ஒருபடிப்பட
ஜீவித்தார்கள் என்னும் அர்த்தம் தான் முதலிலே இல்லை -அர்த்தம் தான் முதலிலே உண்டாகில் இறே இவர்களுக்கு உண்டு இல்லை என்ன வேண்டுவது
நிற்குறில்-
நிலை நின்ற புருஷார்த்தம் வேண்டி இருக்கில்
ஆழ்ந்தார் கடற்-
ஆழ்ந்து ஆர் கடல் -ஆழ்ந்து பரந்த கடலை
பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–
படுக்கையாக உடைய சர்வேஸ்வரன் –
உறுத்தாத படி ஆழத்தையும் அங்குசிதமாக கண் வளர்ந்து அருளுகைக்கு பரப்பையும் உடைத்தாகை-
திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்தது -கர்ம நிபந்தனமாக அன்று இ றே -ஆஸ்ரயணீயன் ஆகைக்காக இ றே
அவன் நினைவோடு சேர ஸ்வரூப அனுகுணமான புருஷார்த்தை பற்றுங்கோள்
ஆமின் –
சேஷம் அல்லாத வஸ்து இன்று சேஷம் ஆயிற்றாக நினைத்து இருக்கும் சர்வேஸ்வர அபிப்ராயத்தாலே சொல்லுகிறது –

—————————————————————————————————————

அன்ன பாநாதி போகங்களும் அநித்தியம் என்கிறார் –

ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–4-1-7-

ஆமின் சுவை –
இனிதான சேவை -ஆம் -என்றது ஆன என்றபடி -சித்தமானவை என்கை
அவை ஆறோடு
ஷட் ரசம் என்று பிரசித்தமானவற்றோடு கூட
அடிசில்
அடிசில் என்று ஷேபிக்கிறார்-முதலியார் என்றும் -அடிசில் என்னும் இ றே வ்யவஹரிப்பது
உண்டு ஆர்ந்த பின்
பூர்ணமாக ஜீவித்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
பரிவாலும் பேச்சின் இனிமையாலும் மறுக்க ஒண்ணாத படி அசாதாரணை களான ஸ்த்ரீகள் இரக்கப் பின்னும் ஜீவிக்குமவர்கள்
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ;
அவர்களை வேறே சிலர் கொண்டு போன இடங்களிலே தன் வயிறு வாழாமையால் சென்று -எல்லாருமாக எனக்கு ஒரு பிடி தர வேணும் -என்னும்
எமக்கு -பண்டு அல்லது கண்டால் தன் வாயில் இடாதே அவர்களுக்கு கொடுக்குமவன் தன் செல்லாமையாலே எமக்கு என்கிறான் இ றே
இடறுவர்-அவர்கள் முகம் பாராது ஒழிந்தாலும் தட்டித் திரிவர்
ஆதலின்,
ஜீவத்தினுடைய நிலையாமை இதுவான பின்பு
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–
ஜகத் காரண பூதனாய் நிரவதிக ஸுந்தர்ய உக்தனாய் -ஒப்பனை அழகை உடையனான ஈஸ்வரனுடைய
நிரவதிக கல்யாண குணங்களை சேர்த்து அனுபவியுங்கோள் –
அந்நாத– சோஸ்னுதே-என்று -ஓவாத ஊணாக உண்-என்கிறபடியே அனுபவியுங்கோள்

—————————————————————————————————————

ராஜ்யத்தின் உடைய அஸ்தைர்யம் புருஷ தோஷத்தால் அன்றோ -இவன் திருந்தவே அதுவும் ஸ்திரம் ஆகாதோ என்னில்
ஆனாலும் இந்திர ராஜ்யாதி போகங்கள் எம்பெருமானை ஆஸ்ரயியா விடில் கிடையா -ஆஸ்ரயித்துப் பெற்றாலும்
அவை தன் ஸ்வ பாவத்தால் நிலை நில்லா -ஆனபின்பு அவன் தன்னையே ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-

குணங்கொள் நிறை புகழ் மன்னர்
குணவான்களாய் குண வத்தா பிரதையையும் உடையராய் இருக்கை-குணவான் ஆகிலும் அப்ராப்தான் ஆகில் உபேக்ஷிப்பார்கள்
மன்னர் -அபிஷிக்த ஷத்ரிய புத்ரராகை-பிறப்பித்தார் ஆகிலும் கிட்டுவார் இல்லையே லுப்தனாகில்
கொடைக்கடன் பூண்டிருந்து-
கொடுக்கையே ஸ்வ பாவமாய் இருப்பது -உதாரமாய் கொடை வழங்கினாலும் மேன்மை பாவித்து இருக்குமாகில் பொருத்தம் இன்றிக்கே இருக்கும் இ றே
இணங்கி
எல்லோரோடும் பொருந்தி வர்த்திக்கை
உலகு உடன் ஆக்கிலும்,
லோகத்தை தங்களோடு சேர்த்துக் கொண்டார்களே யாகிலும் -ராமோ ராஜ்யம் உபாசித்தவா -என்னக் கடவது இ றே
ஆங்கு அவனை இல்லார்
அவன் பிரசாதம் அடியாக பெறாதார்க்கு ராஜ்யம் தான் கிடையாது
மணங்கொண்ட போகத்து
செவ்வியை உடைத்தான் ஐஸ்வர்யம்
மன்னியும் மீள்வர்கள்-
அது கிட்டினாலும் அதுக்கு அஸ்திரத்வம் ஸ்வ பாவம் ஆகையால் மீள்வர்கள்
மீள்வு இல்லை;
புநாரா வ்ருத்தி இல்லை -எத்தாலே என்னில்
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–
ஸ்வ ஸ் பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு அனந்த ஆழ்வானை நிரூபகமாக் உடையவனுடைய திரு நாமங்களில் பிரவணர் ஆகுங்கோள்
திரு நாமத்தால் பிரவண ரானாரை திரு வனந்த ஆழ்வானோ பாதி விடான் என்கை
ஏவம்வித் பாதே நாத்யா ரோஹதி -என்னும் படுக்கையை உடையவன் என்றுமாம்
பலாபிசந்தி ரஹிதமாக தான தர்மத்தை அனுஷ்ட்டித்து எம்பெருமானை உத்தேச்யம் ஆக்காதே பலாபிசந்தி யுக்தமாக
அனுஷ்ட்டித்து ஸ்வர்க்காதி போகங்களை பற்றினால் நிலை நில்லா என்றுமாம் –

—————————————————————————————————————

கீழ் எட்டுப் பாட்டாலே ஐஹிக போகம் அஸ்திரம் என்றது -ஐஹிகமான ராஜ்யாதிகளே என்று நிலை நில்லாதவை
உடம்பை ஒறுத்து பெறும் ஸ்வர்காத் ஐஸ்வர்யங்களும் நிலை நில்லாதன என்கிறார் –

படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன்வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-

படி மன்னும் பல்கலன்
க்ரமாதகமாய் வருகிற ஆபரண ஜாதங்கள் என்னுதல் -படி கால் படி கால் வருகிற ஆபரணம் -என்னுதல் –
பற்றோடு அறுத்து-
அவற்றை விட்டு வர்த்திக்கை இன்றிக்கே வாசனையும் போகை
,ஐம் புலன்வென்று,
அவற்றில் ருசிக்கு அடியானை இந்திரியங்களை ஜெயித்து -இந்திரியாணி புராஜித்வா –
செடி மன்னு காயம் செற்றார்களும்,
தபஸ் ஸூ க்குக்காக தீர்க்க அனுசந்தானத்தாலே தூறு மண்டும்படி சரீரத்தை செறுத்து தபஸைப் பண்ணினாலும் -நெறியார் குழல் கற்றை –
ஆங்கு அவனை இல்லார்-
அவன் பிரசாதம் ஒழிய அவன் தன்னை உத்தேச்யமாக பண்ணாத போது என்னவுமாம்
குடி மன்னும் இன் சுவர்க்கம் -பெற்றாலும் மீள்வர்கள்
எய்தியும் மீள்வர்கள்
பூமியிலே போலே அன்றிக்கே தீர்க்க காலம் இருக்கலாய் விலக்ஷணமான ஸ்வர்க்கம் பெற விரகு இல்லை –
மீள்வு இல்லை;
பு நாரா வ்ருத்தி இல்லை –
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –
ஆஸ்ரிதரை தனக்கு நிரூபகமாகக் கொள்ளும் சர்வாதிகன் திருவடிகளை கிட்டப் பாருங்கோள்
நித்ய ஆஸ்ரிதரோடு இன்று ஆஸ்ரயிக்கிறவனோடு வாசி அற முகம் கொடுக்குமவன் என்கை –

—————————————————————————————————————

ஐஸ்வர்யம் நிலை நில்லாது ஆகில் நிலை நின்ற புருஷார்த்தமான கைவல்யத்தை பற்றுகிறோம் என்ன –
கைவல்ய புருஷார்த்தம் துஸ் சாதம் என்றும் -அது தான் அபுருஷார்த்தம் என்றும் ப்ரதிபாதிக்கிறார் –

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி-
குறுக- கிட்ட விட்டு -தூரம் போய் விஷயங்களை க்ரஹிக்கும் மனசை ப்ரதயக்கர்த்த விஷயமாகி –
ப்ரத்யாஹ்ருந்த்ரியனுக்கே இ றே இவ்வநுஸந்தானம் உண்டாவது
மிக உணர்வத்தொடு நோக்கி-
அந்த மனசை ஞான ஸ்வரூபனான ஆத்மாவோடு சேர்த்து ஆத்ம பிரவணம் ஆக்கி
மிக நோக்கி -விசத தமமாக அனுசந்தித்து -ஆத்ம அவலோகனத்தை பண்ணி
எல்லாம் விட்ட
ஐஸ்வர் யத்தோடு பகவத் அனுபவத்தோடு வாசி அற விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும்
இந்த சங்கோசத்தையும் மோக்ஷமாக நினைத்து இருக்கும் ஞான நிஷ்டனுக்கும்
இறுகல்-பகவத் அனுபவத்தைப் பற்ற தமக்கு சங்குசிதமாய் இருக்கை
இறப்பு -மோக்ஷம்
அப்பயன் இல்லையேல்,-
எம்பெருமானை சுபாஸ்ரயமாக பற்றா விடில் ஆத்ம அனுசந்தானம் பண்ண ஒண்ணாது
இவர் தாம் பிரயோஜனமாக நினைத்து இருக்கிறதை யாயிற்று அவன் ஆத்ம ப்ராப்திக்கு சாதனமாகப் பற்றுகிறது
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; –
தேவோஹம் மனுஷயோஹம்-என்கைக்கு அடியான பந்தம் உண்டாம் -அவித்யாதிகள் சதாசாதகமாக பணைக்கும்
பின்னும் வீடு இல்லை,-
அவனை சுபாஸ்ரயமாகப் பற்றினாலும் அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் மோக்ஷ சித்தி இல்லை –ஆதிபரதனைப் போலே மானாய்ப் போம் இத்தனை
மறுகல் இல் ஈசனைப் பற்றி
ஹேய ப்ரத்ய நீகனாகவும் ஞான ஏக ஆகாரகனாகவும் அனுசந்தித்து அவனோடு சஜாதீயனாகவும் ஆத்மாவை அனுசந்தித்து
மறுகல் இல்-மறுகுகிற சமயத்தில் -சரீர விஸ்லேஷ சமயத்தில் என்னவுமாம் –
விடாவிடில், வீடு அஃதே.–
இப்படி துஸ் சாதகம் ஆகையால் -ஈஸ்வர சாபேஷம் யாகையாலும் -பகவத் அனுபவத்தை குறித்து தண்ணிது யாகையாலும்
தண்ணிது ஆனது தானே ஸ்த்திரம் ஆகையால் மிகவும் அபுருஷார்த்தம் ஆகையால் -அபிராப்த புருஷார்த்தம் ஆகையால்
அண்ணல் கழல்கள் குறுகுமினோ -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்யமே புருஷார்த்தம் –

—————————————————————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றார் ஐஸ்வர்ய ஷூ த்ர புருஷார்த்தங்களை தவிர்ந்து பகவத் கைங்கர்ய ஏக போகர் ஆவார் -என்கிறார் –

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-

-அஃதே உய்யப் புகும் ஆறு என்று-
நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று
அது ஏது என்னில்
கண்ணன் கழல்கள் மேல்-நினைமினோ என்கிறது –
ஸூ லபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்-
நித்ய வசந்தமான சோலை சூழ்ந்த திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் யாயிற்று கவி பாடினார்
-செய்கோலத்து ஆயிரம்
கவிக்கு
செய் -செய்த கவி –வாசிகமான அடிமை என்னுதல்
கோலத்து ஆயிரம்–கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால் குறைவற்று இருக்கை
சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
கல்யாண குணங்களை தொடுத்துச் சொன்ன இது திருவாய் மொழி
அஃகாமல் கற்பவர்
தப்பாமல் -இவற்றில் ஒரு பாட்டும் விடாதபடி கற்றால் ஆயத்து ஐஸ்வர் யாதிகளுடைய தோஷம் விசததமமாவது
ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–
ஐஸ்வர் யாதிகளில் உபா தேய பாவத்தால் வரும் துக்கம் போய் -உஜ்ஜீவனமே ஸ்வ பாவமாக உடையவர் ஆவார்
காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ என்று தாம் சொன்னபடியை உடையராகை –

—————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: