திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-9-

தம்முடைய கரண க்ராமமும் எம்பெருமானைக் காண ஆசைப்பட்டு நெடும் போது கூப்பிட்டு பெறாமையாலே மிகவும் அவசன்னரான ஆழ்வார்
நம்மோடு சக துக்கிகளாய் இருப்பார் உண்டோ என்று பார்த்த இடத்தில் தாம் ஒழிய வ்யதிரிக்தர் எல்லாம் தாம்
பகவத் ப்ரவணர் ஆனால் போலே சப் தாதி விஷயங்களில் மிகவும் ப்ரவண ராய் அதுக்கு உறுப்பாக
மனுஷ்யாதிகளை கவி பாடி திரிகிற படியைக் கண்டு தம்முடைய வியசனம் எல்லாம் மறந்து
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் அத்யந்த ஸூ ந்தரனாய் ஸ்ரீ யபதியாய்-இப்படி இருக்கையாலே கவி பாடுகைக்கு விஷயம் போந்து
தன்னைப் பாடின கவியைக் கொண்டாடுகைக்கு ஈடான பரிஜனங்களை யும் உடையவனாய் கவி பாடினார்க்கு வழங்குகைக்கு ஈடான
விபூதிகளையும் உடையவனாய் -ஸ்வ ஆராதனாய் அவர்களுக்கு போக மோஷாதி சகல புருஷார்த்தங்கள் கொடா விடிலும்
தன்னைப் பாடுகையே பிரயோஜனம் போந்து இருக்கிற எம்பெருமானை ஒழிய -கவி பாடுகைக்கு ஈடான நன்மைகள் ஒன்றும் இன்றிக்கே
கவி பாடினார்க்கு தருவதும் ஒன்றும் இன்றிக்கே தங்கள் நிஸ் ஸ்ரீ கராய் அதுக்கு மேலே கவி பாடினவர்கள் சந்திக்கும் தனை நாள்
நிலை நிற்பதுவும் செய்யாதே முடியும் ஸ்வபாவராய்
கவி பாடினால் ஒரு பிரயோஜனம் பெறாமையே அன்றியே கவி பாட்டு உண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை
ஏறிட்டு பாடுகையாலே அவனுக்கு உள்ள தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே அவனுக்கு அவத்யாவஹராய் அபிராப்த விஷயத்தில் பாடுகையாலே
கவி பாடினார் நரகம் புகும் படி இருக்கிற ஷூ த்ரரை பகவத் அர்ஹமான உங்களுடைய அழகிய கவிகளைக் கொண்டு ஸ்துதிக்கை ஈடு அன்று
என்று அருளிச் செய்து -உங்களை போலே அன்றியே நான் வேறு சிலரை ஸ்துதிக்கை அநர்ஹ கரணனாக பெற்றேன் என்று ப்ரீதராய் முடிக்கிறார்
ஊனில் வாழ் உயிரிலே ப்ரீதிக்கு நித்ய ஸூ ரிகளை சஜாதீயராக தேடினால் போலே இங்கு வியசனத்துக்கு சம்சாரிகளை
சஜாதீயராகக் கருதி இங்கண் அல்லாமையாலே அவர்களை திருத்தப் பார்க்கிறார் –

—————————————————————————————————

வேறு சிலரை கவி பாடுகிறவர்களுக்கு ஹிதம் உபதேசிக்கைக்காக ப்ரவ்ருத்தரான ஆழ்வார்
அவர்களுக்கு ருசி பிறக்கைக்காக தம்முடைய மதத்தை அருளிச் செய்கிறார் –

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்
பிரயோஜனாந்தர பரராய் இருக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிற ஹிதம் அஸஹ்யமாகக் கடவது –
ஆகிலும் உங்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே சொல்லாத் தவிரேன்
எம்பெருமானை ஒழிய வேறு சிலரை கவி பாடாதே கொள்ளுக்குங்கோள் என்று நிஷேதயத்தயா சொல்லுகையும் ஈடு அல்லாவாகிலும்
பகவத் அநு ரூபமாய் இருக்கிற உங்களுடைய கவிகள் அவனுக்கே யாக வேணும் என்னும் லோபத்தாலே சொல்லுகிறேன் என்றுமாம் –
கேண்மினோ!
நான் சொன்ன பொருள் அனுஷ்ட்டிக்க மாட்டி கோள் ஆகிலும் இத்தனையும் கேட்டுத் தீர வேணும்
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
நிரதிசய போக்யமாய் எம்பெருமானுக்கே அர்ஹமான கவிகளை அவனுக்கு தவிர மாற்று ஒருவருக்கு நான் கொடுக்க ஷமன் அல்லேன் –
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து-என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே-
நிரதிசய போக்யமான திருமலையில் எனக்கு நித்ய அபூர்வமாய் கவி பாட விஷயம் போந்து எனக்கு மஹா உபகாரத்தை பண்ண வல்லனாய்
அபிராப்த ஸ்தலத்திலே கவி பாடுகை ஆகாதபடி எனக்கு நாதனுமாய் இருக்கிறவன் என்னை கவி பாடுத்திக் கொள்ள வந்து நிற்க –

————————————————————————————————

சத்தியமாய் சமக்ரமாய் இருந்த கல்யாண குண சம்பத்துக்களை உடையனாய் இருந்துள்ள எம்பெருமானை விட்டு
அஸத் கல்பராய் அவஸ்து பூத சம்பத்துக்களை உடையர் ஆனவர்களை கவி பாடுவாரை நிந்திக்கிறார் –

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

உளனாகவே -இத்யாதி –
அசன்நேவ ச பவதி -என்னும் கணக்காலே இன்றிக்கே இருக்கிற தன்னை ஒரு சரக்காக அனுசந்தித்து தனக்கு தக்க ஷூ த்ர சம்பத்தை
ஒரு சம்பத்தாகக் கொண்டாடும் இம் மதி கேடரை கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு –
குளன் ஆர் கழனி-இத்யாதி –
நல்ல பொய்கை களால் அலங்க்ருதமான கழனி சூழ்வதும் செய்து எம்பெருமான் என்னது என்று அபிமானிக்க வேண்டும்படி நன்றாய் இருந்துள்ள
திருக் குறுங்குடியிலே சொன்ன குணங்கள் எல்லாம் பத்தும் பத்தாக உடையனாய் எனக்கு நாதனுமாய் என் குடிக்கு நாதனுமாய் நிக்கிறவனை ஒழிய –

——————————————————————————————————

அத்யந்த விலஷணனாய் மஹா உபகாரகனான எம்பெருமானை ஒழிய ஷூத்ர மனுஷ்யரை கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு -என்கிறார்

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

ஒழிவு ஒன்று இலாத -இத்யாதி –
காலம் உள்ளதனையும் இடைவிடாதே ப்ரக்ருதி வஸ்யன் அன்றிக்கே ஈஸ்வர பரதந்த்ரனாய் வர்த்திகைக்கு ஈடான உபாயத்தை
அயர்வறும் அமரர்களும் தானும் கூட விரும்பித் தருமவனை தவிர வேறு கவி பாடுகைக்கு விஷயம் தேடித் போய்
வழி என்று அர்ச்சிராதி மார்க்கம் என்றும் -ப்ராப்யமான கைங்கர்யம் என்றும் சொல்லுவர்-
கழிய மிக நல்ல-இத்யாதி
அற மிக்க நல்லவாய் வலியவான கவிகளைக் கொண்டு விசேஷஞ்ஞரான நீங்கள் உங்களுக்கு ஸ்வரூப ஹானி வரும்படி பார்த்து –

———————————————————————————————————————–

தன்னை கவி பாடினார்க்கு தன்னோடு ஒத்த வரிசையை கொடுக்குமவனை தவிர மந்த ஆயுசு ஸூக்களாய்
இருக்கிற மனுஷ்யரைக் கவி பாடினால் பெறுவது அத்யல்பம் என்கிறார்-

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-

என்னாவது, எத்தனை-இத்யாதி –
கவி பாடினார் கவி கொண்டு வந்து கேட்பீக்கும் தனை நாள் இருக்கைக்கு ஆயுஸ் ஸூ இல்லாத மனுஷ்யரைக் கவி பாடினால்
அவர்கள் இருந்தார்களே யாகிலும் பெறுமது ஓன்று பெற்றாலும் அதியல்பம்
பெரும் பொருள் என்று உபாலம்பம்
மின்னார் மணிமுடி-இத்யாதி
ஓளி மிக்கு இருந்துள்ள மணிகளோடு கூடின முடியை உடைய அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கவி பாடினால்
தன்னோடு ஒத்த வரிசையைக் கொடுத்து பின்னை சம்சாரத்தையும் அறுக்கும்
தன்னாகவே கொண்டு–தனக்கு ஆக்கிக் கொள்ளும் என்றுமாம்
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதை-என்றதுக்கு கருத்து
கவி பாடினவர்கள் தலையிலே முடியை வைத்து அயர்வறும் அமரர்களும் தானும் கொண்டாடும் என்று –

——————————————————————————————————————–

ஹேய குணராய் உபகாரகரும் இன்றிக்கே இருந்துள்ள ஜனங்களை விட்டு -ஸமஸ்த கல்யாண குணகரனாய்
நமக்கு அபேக்ஷிதம் எல்லாம் தரும் ஸ்வ பாவனான எம்பெருமானைக் கவி பாட வாருங்கோள் என்கிறார் –

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5-

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை-வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
அவர்கள் பக்கல் கொள்ளக் கடவது ஒரு பிரயோஜனம் இன்றிக்கே குப்பையை கிளறினால் போலே ஆராயப் புகில்
ஹேயமாய் இருக்கிற சம்பத்தை நன்றாகக் புகழ்ந்து அவர்களுடைய தோஷத்தை வெளிப்படுத்தி உங்களுடைய வாக்மிதையையும் இழந்து இருக்கிற
நீங்கள் விசேஷஞ்ஞராய் இருக்கிறிகோள் –
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்-வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ-
நம்முடைய கவிக்கு விஷயமாக வேண்டும் புஷ்கல்யத்தை உடையனாய் அபேக்ஷித்தமான போக மோஷாதிகளை எல்லாம் தரும் ஸ்வ பாவனாய்
உபகரிக்கும் இடத்தில் ஜல ஸ்தல விபாகம் பாராதே புஷ்கலமாக கொடா நின்றால்-இங்கனம் கொடா நின்றோம் என்ற அபிமானமும் இன்றிக்கே
இந்நீர்மைகள் ஒன்றும் இல்லை யாகிலும் கைக்கூலி கொடுத்துக் கவி பாட வேண்டும் அழகை உடையனானவனை கவி சொல்ல வாருங்கோள் –

———————————————————————————————————————-

ஜீவன அர்த்தமாக மனுஷ்யாதிகளை ஸ்துதிக்கிறோம் -என்று அவர்கள் சொல்ல -அதி ஷூ த்ரரான மனுஷ்யரை ஆஸ்ரயித்து
ஜீவனம் பெறுமத்தைக் காட்டிலும் சரீரங்கள் நோவ சுமை சுமந்தும் கைத் தொழில்கள் செய்தும் ஜீவிக்கை நன்று என்ன –
அவர்களும் அத்தாலே எங்களுக்கு வேண்டுவது எல்லாம் கிடையாது -ஆதலால் எங்கள் இஷ்ட தேவதைகளை கவி பாடி எங்கள் அபேக்ஷிதங்களை பெறுவோம் என்ன
நீங்கள் அவர்களை ஸ் துதிக்கைக்கு ஈடான நீர்மைகள் அவர்களுக்கு இல்லாமையால் அந்நீர்மைகளை உடைய எம்பெருமான் பக்கலிலே சேரும்
உங்களுக்கு ஸுர்யமே சித்திப்பது -ஆனபின்பு எம்பெருமானையே கவி பாட வாருங்கோள் என்கிறார் –

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

வாருங்கோள் -நித்தியமாய் வருகிற இவ்வுலகத்தில் உங்கள் கவியின் தரம் அறிந்து கொண்டாடிக் கொடுக்கும் செருக்குடையாரை
இப்போது ஆராய்ந்து பார்த்த இடத்தில் கண்டிலோம் -கவி பாட்டு உண்கிற தேவதையின் பேரும் அவ்வளவும் சென்று
அவற்றுக்கு வாசகமாம் வகையிலும் அவனையே கவி பாடிற்றாம் –

—————————————————————————————————————

எம்பெருமானை ஒழிய வேறு சிலரை கவி பாடுகைக்கு நான் ஷமன் அன்றிக்கே ஒழியப் பெற்றேன் -என்று பிரித்தார் ஆகிறார் –

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-

சேரும் கொடை புகழ் -இத்யாதி
ஏதேனும் கொடுத்தான் என்றாலும் அவனுக்கு ஆகிற்கும் என்று இருக்கிற தன்னுடைய கொடையாலே வந்த புகழுக்கு எல்லை இல்லாதானுமாய்
கவி பாடுகைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளுக்கு ப்ரதிபாதகமான அசங்க்யாதமான திருநாமங்களை உடையானை ஒழிய
மாரி அனைய-இத்யாதி –
உதாரணத்துக்கு கை மேகத்தோடு ஒக்கும் -திண்மைக்கு தோள் மலையோடு ஒக்கும் -என்று பூமியிலே
தருண சமானாய் இருப்பான் ஒருவன் ஆகிற ஷூ த்ர ஜந்துவை கவி பாடுகை ஆகிற கலப்பில்லாத பொய் சொல்ல
பாரில் ஓர் பற்றையை-குடிப் பற்று இல்லாத அதி லுப்தனை என்றுமாம் –

——————————————————————————————————————–

அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண சாகரமாய் நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கிறவனை ஒழிய
வேறு சில ஷூ த்ர மனுஷ்யரை கவி பாட நான் உபக்ரமிக்கிலும் என் வாய் அதுக்கு பங்கு ஆகாது என்கிறார்-

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-

வேயிற் காட்டிலும் அழகியதாய் பரஸ்பரம் ஒத்த தோளை உடைய நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் ஆணவனுடைய கல்யாணமாய்
அசங்க்யாதமான மஹா குணங்களை நெடுநாள் இனிதாக அனுபவித்துப் பின்னை இந்த பிராகிருத சரீரத்தை விட்டு
பகவத் அர்ஹமான அப்ராக்ருத சரீரத்தை பெற்று அவன் திருவடிக்கு கீழ் புகை வேண்டி இருந்த நான் –

——————————————————————————————————————-

பரம உதாரனாய் இருந்துள்ள எம்பெருமானாலே தன்னை கவி பாடுகையே ஸ்வபாவமாக பண்ணப் பட்டேனான எனக்கு
இதர ஸ்தோத்ரங்களில் அதிகாரம் இல்லை என்கிறார் –

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் திரு ஆழி முதலான திவ்ய ஆயுதங்களை உடையவன் பரம உதார குணத்தால் என்னுடைய
கவிகளுக்கே தன்னை விஷயமாக தந்து அருளினான் –
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்-நீ கண்டு கொள் என்று வீடும் தரும் –
மோக்ஷ ஸூ கத்திலும் நன்றாம்படி இஹ லோகத்தில் ஸ்வ அனுபவத்தை எனக்கு பண்ணித்த தந்து ஸ்ரீ வைகுண்டத்தை
நீ கண்டு கொள் என்று அந்த மோக்ஷத்தை தரும் -பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று மிறுக்கு படா நிற்கும் –
நின்று நின்றே
கீழ்ச சொன்னவை தரும் இடத்து அடைவடைவே தரும் என்றுமாம் –

———————————————————————————————————————

சர்வேஸ்வரன் கவியான எனக்கு இதர ஸ்தோத்திர கரணமானது அநு ரூபம் அன்று என்கிறார் –

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

நெடும் காலம் கூட வாகிலும் நின்று நின்று பல நாளும் ஆத்மாவுக்கு பாதகமான சரீரத்தை விட்டுப் போய் இனிப் பிறவாத படி
இவ்வாத்மாக்களை பண்ண வேணும் என்று எண்ணி அதிலே மிகவும் ஒருப்பட்டு லோகத்தை எல்லாம் உண்டாக்கினவனுடைய
கவியான எனக்கு காலம் உள்ள தனையும் வேறு சிலரை கவி பாடுகை தகுதி அன்று –
நெடுநாள் கூடாவாகிலும் தன்னைக் கண்டு என்றுமாம் –

——————————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியை பாட மாத்ரத்தை சொல்ல வல்லார்க்கு வேறு சிலரைக் கவி பாட வேண்டா வென்று
கற்பிக்க வேண்டும்படியான சம்சாரத்தில் ஜென்மம் இல்லை என்கிறார் –

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-

இப்பாட்டுக்கு தகுதியான மிக்க புகழை உடையனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்துள்ள கிருஷ்ணன் தனக்கு
ஏற்று இருந்துள்ள பெரும் புகழை உடைய ஆழ்வார் அருளிச் செயலாய் சொன்ன புகழ் எல்லாம்
தக்கு இருந்துள்ள ஆயிரத்துள்ளே ஏற்கும் புகழான இது திரு வாய் மொழி சொல்ல வல்லார்க்கு –

———————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: