திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-9–

தம்முடைய கரண க்ராமமும் எம்பெருமானைக் காண ஆசைப்பட்டு நெடும் போது கூப்பிட்டு பெறாமையாலே மிகவும் அவசன்னரான ஆழ்வார்
நம்மோடு சக துக்கிகளாய் இருப்பார் உண்டோ என்று பார்த்த இடத்தில் தாம் ஒழிய வ்யதிரிக்தர் எல்லாம் தாம்
பகவத் ப்ரவணர் ஆனால் போலே சப் தாதி விஷயங்களில் மிகவும் ப்ரவண ராய் அதுக்கு உறுப்பாக
மனுஷ்யாதிகளை கவி பாடி திரிகிற படியைக் கண்டு தம்முடைய இழவை எல்லாம் மறந்து
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் அத்யந்த ஸூ ந்தரனாய் ஸ்ரீ யபதியாய்-இப்படி இருக்கையாலே கவி பாடுகைக்கு விஷயம் போந்து
தன்னைப் பாடின கவியைக் கொண்டாடுகைக்கு ஈடான பரிஜனங்களை யும் உடையவனாய்-கேட்டாரார் வானவர்கள் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -கவி பாடினார்க்கு வழங்குகைக்கு ஈடான
விபூதிகளையும் உடையவனாய் -எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்கும் என்னும் படி -ஸ்வ ஆராதனாய் அவர்களுக்கு
போக மோஷாதி சகல புருஷார்த்தங்கள் கொடாவிடிலும்-தன்னைப் பாடுகையே பிரயோஜனம் போந்து இருக்கிற எம்பெருமானை ஒழிய
-கவி பாடுகைக்கு ஈடான நன்மைகள் ஒன்றும் இன்றிக்கே -கவி பாடினார்க்கு தருவதும் ஒன்றும் இன்றிக்கே தங்கள் நிஸ் ஸ்ரீ கராய் அதுக்கு மேலே
கவி பாடினவர்கள் சந்திக்கும் தனை நாள் -நிலை நிற்பதுவும் செய்யாதே முடியும் ஸ்வபாவராய்
கவி பாடினால் ஒரு பிரயோஜனம் பெறாமையே அன்றியே கவி பாட்டு உண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை
ஏறிட்டு பாடுகையாலே அவனுக்கு உள்ள தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே அவனுக்கு அவத்யாவஹராய் அபிராப்த விஷயத்தில் பாடுகையாலே
கவி பாடினார் நரகம் புகும் படி இருக்கிற ஷூ த்ரரை பகவத் அர்ஹமான உங்களுடைய அழகிய கவிகளைக் கொண்டு ஸ்துதிக்கை ஈடு அன்று
என்று அருளிச் செய்து -உங்களை போலே அன்றியே நான் வேறு சிலரை ஸ்துதிக்கை அநர்ஹ கரணனாக பெற்றேன் என்று ப்ரீதராய் முடிக்கிறார்
ஊனில் வாழ் உயிரிலே ப்ரீதிக்கு நித்ய ஸூரிகளை சஜாதீயராக தேடினால் போலே இங்கு வியசனத்துக்கு சம்சாரிகளை
சஜாதீயராகக் கருதி இங்கண் அல்லாமையாலே அவர்களை திருத்தப் பார்க்கிறார் —
இவர் தம்முடைய இழவுக்கு கூப்பிடுகை தவித்து தங்கள் இழவுக்கு கூப்பிடும்படி பண்ணுவதே சம்சாரிகள் —

——————————————————————————————————————-

ஷூ த்ர விஷயங்களை கவி பாடுகை ஹிதம் அன்று என்று உபதேசிக்கையிலே ப்ரவ்ருத்தர் ஆனவர் அவர்களுக்கு ருசி பிறைக்கைக்காக
நான் இருக்கிற படி கண்டி கோளே-என்று தம்முடைய மதத்தை அருளிச் செய்கிறார் –

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

சொன்னால் விரோதம் இது, -ஆகிலும் சொல்லுவன் –
நீங்கள் சில பிரயோஜனங்களை நினைத்து கவி பாடா நிற்க -நான் அத்தை தவிருங்கோள் என்றால் உங்களுக்கு அது அஸஹ்யமாகிலும்
உங்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே சொல்லத் தவிரேன் -அஸேவ்ய சேவை நிஷேத்யத்தயா சொல்லவும் ஆகாதபடியாய் இருக்க
சொல்லுகிற எனக்கே விரோதமாய் பலிக்கிலும் உங்கள் அநர்த்தம் கண்டு சொல்லப் புக்கேன் ஆகையால் நீங்கள் மீளும் தனையும் சொல்லத் தவிரேன்
சொன்னால் உங்களுக்கு விரோதம் என்று பிரதிபன்னமாய் இருந்ததே யாகிலும் சொல்லுகிறேன் என்றுமாம்
யோ அவசதாஸ் ச உச்சயதாம் -என்று திரு நாமத்தை சொன்னால் அநந்தரம் இடி விழும் என்று வரும் அனர்த்தத்தை சொன்னிகோள் ஆதல்
திரு நாமத்தை சொன்னி கோள் ஆதல் செய்யுங்கோ ள் என்றான் இறே ப்ரஹ்லாத ஆழ்வான்
நீங்கள் அஹிதத்தில் பிரவணராய் மீள மாட்டாதாப் போலே உங்கள் ஹிதத்திலே பிரவணனான நானும் மீள மாட்டேன் என்கிறார் –
கேண்மினோ!
அனுஷ்ட்டிக்க வேண்டா -நீங்கள் செவி தாழ்க்க அமையும் –
ஸ்ரவணம் அனுஷ்டான சேஷமாக வேண்டாவோ -ஸ்ரவணம் மாத்திரமே அமையுமோ என்னில் -விஷய ஸ்வபாவத்தால் அனுஷ்டான பர்யந்தமாக முடியும் என்று இருக்கிறார்
பஹு வசனத்தால் அநர்த்தம் சர்வ சாதாரணம் ஆகையால் எல்லாரையும் ஓக்க கால் பிடிக்கிறார் –

என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
யஸ் யை தே தஸ்ய -என்கிறபடியே தம்மைப் போலே தம்முடைய நாவும் அவனுக்கு அநந்யார்ஹ சேஷம் -என்கிறார் –
நாப்படைத்த கார்யம் கொண்டேன் நான் ஒருவனுமே யன்றோ -என்கிறார் -இவள் இராப்பகல் வாய் வெரீஇ -என்னும் படியான நா வி றே
இன்கவி –
அவனுக்கு இனிதாகை யாலே தமக்கும் இனிதாய் இருக்கிறபடி –
சேஷிக்கு இனிதான வழியாலே தனக்கு இனிதாகை இ றே -சேஷத்வத்தினுடைய எல்லை
யான்
அநந்யார்ஹ சேஷ பூதனான நான்
ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
அத்யந்த பரதந்த்ரமாக சொல்லி வைத்து கொடுக்கிலேன் என்பான் என் என்னில் -அவன் தான் இத்தாலே அநேகம் பெற்றானாய்
இருக்கையாலே புறம்பு கொடேன் என்கையாலே இங்குத்தைக்கே அநந்யார்ஹம் என்கை
கொடுக்கிலேன் -கொடுக்க ஷமன் அல்லேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் —
நிரதிசய போக்யமாய் கவி பாடுகைக்கு விஷயம் போந்து இருக்கும் விஷயத்தை யாயிற்று இவர் கவி பாடுகிறது
பகவத் விஷயத்தில் ப்ரத்யாசத்தியை உடைய திர்யக்குகளோடு முமுஷுக்களோடு வாசி அற்று இருக்கிற படி
திரு வேங்கடத்து என் ஆனை-
வேதத்தில் காட்டில் ஸ்ரீ ராமாயணத்துக்கு உண்டான வாசி போலே –
ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தில் காட்டில் தாம் கவி பாடுகிற விஷயத்தின் ஏற்றம் அருளிச் செய்கிறார் –
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் -என்னக் கடவது இ றே
என் ஆனை
கவி பாடிப் பெற்ற ஆனை-தன்னை ஒழிய வேறு ஒன்றை கொடுக்குமவன் அன்று இ றே இவர் கவி பாடிற்று
ஆனை என்கையாலே கவி பாடுகைக்கு விஷயம் போந்து இருக்கை –
என் அப்பன்,-
நாட்டார் பிறரை கவி கவி பாடி திரியா நிற்க அவர்களுக்கும் ஹிதம் சொல்லும் படி பண்ணின மஹா உபகாரகன்
எம்பெருமான்
அபஹாரங்களையே பண்ணினாலும் விட ஒண்ணாத பிராப்தி இருக்கிறபடி
உளனாகவே-
சேதனர் தன்னை கிட்டாத போது -அசன்னேவ –வாய் இருக்குமா போலே என் வாயால் ஒரு சொல் கேளாத அன்று உளன் ஆகாதவனாய் இருக்கை
ஸூலபனாய் கவி பாடுகைக்கு விஷயம் போந்து உபகாரகனாய் -ப்ராப்தனாய் -வத்சலனாய் -இருக்கிற இவனை ஒழிய வேறு சிலரை நான் கவி பாட சக்தனோ -என்கிறார்
நான் செய்கிறபடியே யன்றோ உங்களுக்கு செய்ய அடுத்து என்கிறார் –

———————————————————————————————-

சத்தியமாய் சமக்ரமாய் இருந்த கல்யாண குண சம்பத்துக்களை உடையனாய் இருந்துள்ள எம்பெருமானை ஒழிய
இதுக்கு எதிர் தலையானவர்களை கவி பாடினால் என்ன பிரயோஜனம் உண்டு என்கிறார் –

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

உளனாகவே எண்ணித்
அசன்னேவ -என்றும் -நேஹ நா நா அஸ்தி -என்றும் பிரமாணம் சொல்லுகையாலே இல்லை என்று அத்யவசித்து இறே இவர் இருப்பது –
தன்னைக் கட்டிக்க கொண்டு போகச் செய்தே-நேயமஸ்தி புரீ லங்கா நியூயம் நச ராவண -யஸ்மா திஷவாகு நாதேந பத்தம் வைரம் மஹாத்மநா-என்றான் இறே திருவடி
தன்னை
என்றும் உளனாய் இருக்கிற ஈஸ்வரனை இல்லை என்று இருக்கையாலே அஸத் கல்பனான தன்னை
-உளன் கண்டாய் நல் நெஞ்சே -என்னும் அன்று இறே தானும் உளனாவது
தன்னை ஒன்றாகத்
தன்னை ஒரு சரக்காக புத்தி பண்ணி –
தன் செல்வத்தை-
தனக்குத் தான் இன்றிக்கே இருக்க தனக்கு ஓர் ஐஸ்வர்யம் உண்டாக நினைத்து
சதி தர்மிணி தர்மா சிந்த்யந்தே -அதி ஷூத்ரமான சம்பத்தை –
வளனா மதிக்கும் –
வளன் என்று அழகு ஆதல் -ஏற்றம் ஆதல் –
சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யத்துக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கை –
தானே யாயிற்று இத்தை ஒன்றாக நினைத்து இருப்பான் –
வேறு ஒருவன் நினைத்து இருக்கும் போது இவன் தன்னை அவஸ்துவாக இறே நினைத்து இருப்பது
கல் ப்ரஹ்ம தேசத்தில் கரிக்கால் ப்ரஹ்ம ராயன் வார்த்தை –
இம் மானிடத்தைக்
கீழ் பிரஸ்துரான அஞ்ஞரை -மனுஷ்யர் என்று சொல்லப் பாத்தம் போராமையாலே மானிடம் என்கிறார் –
கவி பாடி என்-
இவர்கள் மறைத்திட்டு வைத்த குற்றங்களை ப்ரபந்ததீ கரித்து வெளியிட்டால் உங்களுக்கு என்ன பிரயோஜனம் உண்டு
குளன் ஆர் கழனி சூழ் –
விளை நிலத்தில் காட்டில் நீர் நிலம் விஞ்சி இருக்கை –
குளன்-குளம் -ரஷ்யத்தில் காட்டில் ரக்ஷகம் விஞ்சி இருக்கை
கண்ணன் குறுங்குடி
சர்வேஸ்வரன் என்னது என்று அபிமானித்த தேசம்
கண் நல் குறுங்குடி என்று நிர்வஹித்தான் ஒரு தமிழன் –
மெய்ம்மையேஉளன் ஆய
சொன்ன குணங்கள் எல்லாம் பத்தும் பத்தாக உடையவனாய் இருக்கை –
இவ்விஷயத்தில் அர்த்தவாதம் இல்லை -புறம்பு உள்ளத்தில் அர்த்த வாதம் இல்லாதது இல்லை
இவ்விஷயத்தில் உள்ளது எல்லாம் சொல்ல ஒண்ணாது -புறம்பு உள்ளத்தில் சொல்லலாவது ஒன்றும் இல்லை
எந்தையை -எந்தை பெம்மானை ஒழியவே?
நான் கவி பாடுகைக்கு தன் குணங்களை பிரகாசிப்பித்து வைத்த உபகாரகனை –
கவி பாடுகைக்கு ப்ராப்த விஷயம் என்னவுமாம்
பிராப்தி தம் அளவில் பர்யவசியாமையாலே -என் குல நாதன் என்கிறார் –
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் ப்ராப்தனுமாய் இருந்துள்ள அவனை ஒழிய ஷூத்ர மனுஷ்யரைக் கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு என்கிறார்

—————————————————————————————————————–

விலஷணனாய் உபகாரகனான எம்பெருமானை ஒழிய ஷூத்ர மனுஷ்யரை கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு -என்கிறார்

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் –
கால தத்வம் உள்ளதனையும் இடைவிடாதே
நிலாவ -வர்த்திகைக்கு
ந ச புனர் ஆவர்த்ததே -என்கிறபடியே யாவதாத்மபாவி ப்ரக்ருதி சம்பந்தம் அற்று ஸ்வராதீனனாய் வர்த்திகைக்கு
போம்-வழியைத் தரும்-
பேற்றில் காட்டில் வழிப் போக்கே அமைந்து இருக்கும் அர்ச்சிராதி மார்க்கத்தை தரும் என்னுதல்
தன்னைக் கிட்டும் உபாயத்தை தரும் என்னுதல் -ப்ராப்யம் என்னுதல்
வழியை தருகை யாவது -உபாயமாகை-ப்ராப்யமான போது தான் போம் ரீதியாய் -அதாகிறது ஸ்வ பாவமாய் சஹஜ கைங்கர்யத்தை சொல்லுகிறது
நங்கள் வானவர் ஈசனை
அவன் எல்லா ஏற்றங்களையும் தந்தாலும் செய்தது போராது என்னும் ஓலக்கம்
நிற்கப் –
இப்படிப் பட்டவன் இவன் வாயாலே ஒரு சொல் கேட்க்கை தன் பேறாக நினைத்து நிற்க
போய்க்
அபிராப்தராய் -கவிக்கு பரிசில் கொடுக்க ஷமர் அல்லாமையாலே ஒளித்துப் போம் அவர்களை இ றே தேடித் போவதே –
கழிய மிக நல்ல –
எத்தனையேனும் மிக நல்ல
வான்கவி
கனத்த கவி -தது பாக்த ஸமாஸ சந்தியோகம் -என்று சொல் சேர்ந்து இருக்கை
கொண்டு புலவீர்காள்!
கவிக்கும் விஷயத்துக்கும் வாசி அறியும் விஸேஜ்ஞரான நீங்கள்
இழியக் கருதி -ஓர் மானிடம் பாடல் என்னாவதே?
நின்ற நிலையும்அழியும்படி பார்த்து
த்ருஷ்டத்தில் ஸ்வரூப ஹானி -அத்ருஷ்டத்தில் நரகம்
அறிவுக்கு பிரயோஜனம் மேல் மேல் என உயர்ந்த தேடுகை அன்றோ
ஷூ த்ர மனுஷ்யரை கவி பாடுகிறது ஏதுக்காக-
பகவத் சேஷ பூதராய் இருக்கிற உங்கள் ஸ்வரூபத்துக்கு சேர்ந்ததோ
உங்கள் கவிக்கு சேர்ந்ததோ
பாட்டு உண்கிறவனுக்கு ஒரு நன்மை உண்டாகவோ –

—————————————————————————————————————–

கவி பாடினார்க்கு தன்னோடு ஒத்த வரிசையை கொடுக்குமவனை ஒழிய
மந்த ஆயுஸ்ஸூக்களான ஷூத்ரரைக் கவி பாடப் போவது ஏன் என்கிறார் –

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-

என்னாவது,
ஒன்றும் ஆவது இல்லை -ஒன்றும் இல்லை என்கிறது என்-கவி பாடுவாரும் கொடுப்பாருமாய் அன்றோ -செல்லுகிறது என்ன
எத்தனை நாளைக்குப் போதும்,
நிரூபித்தால் கவி பாட்டு இட்டு இறையாய் இ றே இருப்பது
சஹகாரிகளையும் கூட்டி கவி பாடினால் பெறுமது பாடின நாளைக்கு போராதாக வாயிற்று இருப்பது
புலவீர்காள்!
உங்கள் வாசி அறிவுக்கு போருமோ இது
மன்னா மனிசரைப்
நிலை இல்லாத மனுஷ்யரை
கவி பாடி கேட்ப்பிக்கும்தனை நாள் அவர்கள் இருக்கில் இ றே அல்பம் தானும் உள்ளது
பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
இந்த ஸ்ரீ யபதி குறைவற கொடானோ -என்று ஷேப யுக்தி
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
ஓளி மிக்க மணிகளை உடைய முடி
விண்ணவர்க்கு விசேஷணம் ஆனபோது கவி பாடினார்க்கு கொடுக்கச் சூடின முடி -என்கை –
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.
தனக்காக கொண்டு என்னுதல்
சாம்யா பத்தியை கொடுக்கும் என்னுதல்
நீசரை கவி பாடுகைக்கு அடியான சரீர சம்பந்தத்தை அறுக்கும்
தலையில் முடியை வைத்து விலங்கை வெட்டி விடுமா போலே நித்ய ஸூ ரிகள் பேற்றைக் கொடுத்தாயிற்று சம்சார சம்பந்தத்தை அறுப்பது –

—————————————————————————————————————–

ஹேயராய் கவி பாடினால் பெறுவதும் ஓன்று இன்றியே இருக்கிறவர்களை ஒழிய ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய்
சகல பிரதனான சர்வேஸ்வரனை கவி பாட வாருங்கோள் என்கிறார் –

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5-

கொள்ளும் பயன் இல்லை,
கவி பாடுவது தங்களுக்கு ஒரு பிரயோஜனத்துக்கும் எதிர் தலைக்கு ஒரு நன்மை வரும் இ றே –
பெறக் கடவது ஒரு பிரயோஜனம் இல்லை -அப்ராப்த விஷயம் ஆகையால் இது தானே பிரயோஜனமாக கவி பாடும் விஷயம் அன்று
குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
அவர்களுக்கு பிரயோஜனம் ஆகாது ஒழியுமோ என்னில் -அதுவும் விபரீத பலம் –
குப்பையை கிளறினால் இருக்கிற சம்பத்தை
அவர்கள் மறைத்திட்ட வைத்த தோஷங்களை வெளியிடுகையாலே அவர்களுக்கு அவத்யாவஹமாம் அத்தனை –
வள்ளல் புகழ்ந்து,-
நன்றாக புகழ்ந்து -மஹா வம்ச ப்ரஸூதன் -உதாரன் என்று இறே கவி பாடுவது
அதற்கு எதிர்தலையான அவர்கள் தோஷத்தை வாயிற்று அது பிரகாசிப்பது
இது அவர்களுக்கு பிரயோஜனம் –
நும் வாய்மை இழக்கும் –
உங்களுக்கு பிரயோஜனம் உங்களுடைய வாக்மிதையை இழக்கை-
வாய்மை யாகிறது -மெய் -அத்தை இழந்து பொய்சொல்லி கள்-என்று பிரசித்தராம் அத்தனை
புலவீர்காள்!
உங்கள் விசேஷ ஞானம் இருந்தபடி என்
கொள்ளக் குறைவிலன்
கீழ் சொன்னதுக்கு எதிர்தலையாய் இருக்கை -நீங்கள் வைத்துச் சொல்லும் நன்மைகளை எல்லாம் ஸ்வீகரிக்கைக்கு ஒரு குறை உடையான் அல்லன்
-ஸமஸ்த கல்யாண குணாத்மகன் ஆகையால் -வேண்டிற்று எல்லாம் தரும்
பவ்மம் மநோரதம் ஸ்வர்க்க்யம் ஸ்வர்க்கி வந்த்யஞ்ச யத்பதம்–ததாதி த்யாயி நாம் நித்யமப வர்க்க ப்ரதோ ஹரி
சகல பல பிரதோஹி விஷ்ணு –
கோதுஇல் –
கொடைக்கு கோதாவது -கொடுத்தோம் என்று இருக்கையும் -பிரதியுபகாரத்தை நினைத்து கொடுக்கையும் -வரைந்து கொடுக்கையும்
நீர் இது அறிந்தபடி என் என்ன –
என்-வள்ளல் –
அநு பூத அர்த்தத்தை சொல்லுகிறேன்
மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–
ஒரு பிரயோஜனம் இல்லை யாகிலும் கைக்கு கூலி கொடுத்து கவி பாட வேண்டும் அழகை உடையவன் என்கை –
ரூபா ஆபாசம் கண்ட இடத்தே உங்கள் உடைமையைக் கொடுத்தான் மேல் விழா நின்றி கோள்
இப்படிப் பட்ட விஷயத்தை பிற காலியாதே கவி பாட வாருங்கோள் என்கிறார் –

—————————————————————————————————————–

ஜீவன அர்த்தமாக மனுஷ்யாதிகளை கவி பாடுகிறோம் என்ன ஷூத்ரரை கவி பாடி ஜீவிப்பதில்
உடம்பு நோவ பணி செய்து ஜீவிக்கை நன்று -என்கிறார் –

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

வம்மின் –
காட்டுது தீயில் அகப்பட்டாரை பொய்கையைக் காட்டி அழைப்பாரை போலே வாருங்கோள் என்கிறார்
புலவீர்!
நல்லதும் தீயதும் அறியும் நீங்கள் –
நீர் அழைக்கிறது என் -பிறரைக் கவி பாடி யாகிலும் தேஹ யாத்திரையை நடத்த வேண்டாவோ என்ன -உங்கள் தரம் குலையாதே ஜீவிக்கல் ஆகாதோ –
நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத் தொழில் செய்து ஜீவிக்கப் பாருங்கோள் -என்பர் எம்பார் –
அத்தால் ஜீவனம் பூர்ணம் ஆகாது -பிறரைக் கவி பாடி யாகிலும் ஜீவிக்க வேணும் என்ன –
இம்மன் உலகில் செல்வர்-
பிரவாஹ ரூபமான நித்தியமாய் செல்லுகிற இஜ்ஜாகத்தில் செல்வர் இல்லை –
உங்களுக்கு பின்னையும் சிலரை ஆர்த்தியாமல் பூர்ணமாக தருகைக்கு ஈடான சம்பத்து உடையார் இல்லை
இப்போது இல்லை நோக்கினோம்;
பண்டே சம்சாரிகளில் செல்வர் இல்லை -இவர் சம்சார யாத்திரையில் கண் வைக்குமவர் அல்லர்
இவர்கள் பிரயோஜனத்துக்காக இப்போது ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் குறை தீர்க்க வல்லார் இன்றிக்கே இருந்தது
நும் இன் கவி கொண்டு -நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
மனுஷ்யர் பக்கல் அன்றோ பசை இல்லாதது -எங்கள் இஷ்ட தேவதைகளை கவி பாடுகிறோம் என்ன உங்கள் கவி அவர்களுக்கு ஸ் துதியாக மாட்டாது என்கிறார்
பகவத் விஷயத்துக்கு சேரும் கவிகளைக் கொண்டு உங்கள் இஷ்ட தேவதைகளை ஏத்தினால் -உங்கள் குண அநு ரூபமாக ராஷசராயும் தாமஸரராயும் உள்ள
தேவதைகளை ஏத்தினால் -அப் புகழ்ச்சிக்கு அடியான குணங்கள் இல்லாமையால் அவர்களுக்கு சேராது -ஆருக்கு சேர்வது என்னில்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே-
ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை உடைய ஸ்ரீ யபதிக்கே சேரும்
புண்டரீகாக்ஷன் என்றும் -ஸ்ரீ மான் என்றும் மஹா உதாரன் என்றும் இ றே கவி பாடுவது
அது உள்ள இடத்தில் சொல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை
கவி பாட்டு உண்கிற தேவதையின் பேரும் தத் அந்தர்யாமி அளவும் செல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை
உங்களுக்கு ஸுர்யமே சித்திப்பது -பகவத் விஷயம் ஒழிய கவி பாட வேணும் என்னும் நிர்பந்தம் உங்களுக்கு உண்டானாலும்
அது கிட்டாத பின்பு இவனையே கவி பாட வாருங்கோள் என்கிறார்
யேய ஜந்தி பித்ரூன் தேவன் ப்ராஹ்மணான் சஹு தாசனான் சர்வ பூதாந்த்ராத்மானம் விஷ்ணுமேவ யஜந்திதே-

———————————————————————————————————-

வழி அடிக்கும் இடத்திலே தன் கைப் பொருள் கொண்டு தப்பினவன் உகக்குமா போலே -இவர்களை போல் அன்றியே
பகவத் விஷயத்தை ஒழிய வேறு சிலரை கவி பாடுகைக்கு நான் ஷமன் அன்றிக்கே ஒழிய பெற்றேன் -என்று பிரித்தார் ஆகிறார் –

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,
கொடையாலே சேர்ந்த புகழுக்கு எல்லை இல்லாதவனை -தகுதியான கொடையால் உண்டான புகழுக்கு எல்லை இல்லாதவனை – என்றுமாம்
ஓர் ஆயிரம்-பேரும் உடைய பிரானை
ஜமபில என்று ஒரு சந்தஸியிலே வைத்து கவி பாட ஒண்ணாதாய் இருக்கை இன்றிக்கே கவி பாடுகைக்கு விஷயமான
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் அசங்க்யேயமான திரு நாமங்களை உடையவனை
ஓராயிரம் -ஓர் ஒன்றே கவி பாடுகைக்கு விஷயம் போந்து இருக்கும் படி அத்விதீயமாய் இருக்கை
பிரானை –
அவற்றை எனக்கு பிரகாசிப்பித்த மஹா உபகாரகனை
அல்லாம்,மற்று யான்கிலேன்;
வேறு சிலரை கவி பாடுகைக்கு நான் ஷமன் அல்லேன் -இவர் பாடாது ஒழி கிறது என் என்னில்
மாரி அனைய கை,-
கொடுக்கை தான் பிரயோஜனமாக கொடுத்து -கொடுக்கப் பெறாத போது உடம்பு வெளுக்குமவன்
மால்வரை ஒக்கும் திண்தோள் -என்று
பெரிய மலை போல் திண்ணியதான தோளை யுடையவன் என்னுதல் -கொடுக்க என்றால் தேம்புகிற தோளை -கொடுக்க கொடுக்க பணைக்கும் தோள் என்கை
பாரில்-
போக பூமியில் அன்றிக்கே பூமியிலே வர்த்திக்கிற
ஓர் பற்றையைப்
உத்பத்தி ஸ் திதி வி நாசங்கள் தனக்கும் உறுப்பு அன்றிக்கே பிறருக்கும் உறுப்பு அன்றிக்கே இருக்கும் சிறு தூற்றை
ஒரு தமிழன் பாரில் -என்கிறது ஒரு நத்தம் இல்லை என்கை -பற்றை என்கிறது கண்டது எல்லாம் பற்ற கடவனாய் விடக் கடவது ஒன்றும் இன்றிக்கே இருக்கை என்றான்
த்ருண சமன் என்றாய்த்து சொல்லிப் போருவது
பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–
மெய் கலவாத பொய் சொல்ல நான் ஷமன் அல்லேன் –
ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மாற்று பாரில் ஓர் பற்றையைபச்சை பசும் பொய்கள் பேச யான் கிலேன்-

———————————————————————————————————

நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண கணனாய் இருக்கிறவனை -உள்ளத்தை கவி பாடி
சரீர சம்பந்தத்தை அறுத்து அவன் திருவடிகளில் அடிமை செய்ய வேணும் என்னும் அபி நிவேசத்தை உடைய நான்
ஷூத்ர மனுஷ்யரை என் கரணத்தைக் கொண்டு கவி பாட ஷமன் அல்லேன் -என்கிறார் –

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-

வேயின் மலிபுரை தோளி-
பசுமைக்கும் சுற்று உடைமைக்கும் வேயைக் காட்டிலும் விஞ்சின அழகை உடைத்தாய் -பரஸ்பர சத்ருசமான தோள்களை உடைய
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் ஆனவனை
பிறரை கவி பாடுகைக்கு யோக்கியமான சரீர சம்பந்தத்தை அறுக்கைக்கும்-வி லக்ஷண சரீரத்தைப் பெற்று
திருவடிகளை கிட்டுக்கைக்கும் புருஷகாரம் நப்பின்னை பிராட்டி என்கை
அச் சேர்த்தியில் கவி பாடக் கடவ நான் மற்றும் சிலரை கவி பாடவோ
பின்னைக்கு மணாளனை
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத்தேஜ
ஆய
ஆயப் பட்டு இருக்கை -ஹேய பிரதிபடமாய் இருக்கை
ஆய -என்று ஆன-என்று ஆய் -ஸ்வரூப அநு பந்தி என்றுமாம்
பெரும்புகழ் –
ரூப குணத்தோடு ஆத்ம குணத்தோடு வாசி அற ஒரோ ஒன்றோ நிரவதிகமாய் இருக்கை
எல்லை இலாதன –
இப்படிப் பட்ட குணங்கள் அசங்க்யாத மாய் இருக்கை –
பாடிப்போய்க்-காயம் கழித்து,-
இக் குணங்களை ப்ரீதி பிரேரிதனாய் சொல்லி இதுவே யாத்திரையாக -பின்னை இச் சரீரத்தை விட்டு
பாண்டரஸ்யா தபத் ரஸ்ய ச் சாயாயாம் ஜரிதம்மயா-என்று சக்கரவர்த்தி பிரஜா ரக்ஷண அர்த்தமாக சுற்றும் பயணம் திரிந்து
முத்துக் குடை நிழலிலே சரீரத்தை ஜெரிப்பித்தால் போலே பகவத் குண அனுபவத்தால் சரீரத்தை ஜெரிப்பித்து என்கிறார்-
அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
அவன் பக்கலிலே பிரயோஜனாந்தரங்களை கொள்ள இராதே விலக்ஷண சரீரத்தை பெற்று தாய் முலைக்கீழ் ஒதுங்கும்
ஸ்தந்த்ய பிரஜையை போலே திருவடிகளின் கீழே ஒதுங்கிடுவன் என்னும் அபி நிவேசத்தை உடையனான நான்
மாய மனிசரை
உத்பத்தியோடே வியாப்தமான விநாசத்தை உடையவர்களை
என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–
பகவத் விஷயத்துக்கு அர்ஹமான இக்கரணத்தைக் கொண்டு பிறரை கவி பாட வல்லேனோ -என்கிறார்
ப்ரேமம் அவன் திருவடிகளில் கிடைக்க விஷயாந்தரத்துக்கு நானும் என் கரணமும் இல்லை என்கை –
வேறே ஒரு கரணம் பெற்றேனாகில் வேறே சிலரைக் கவி பாடலாயிற்று –

——————————————————————————————

பரம உதாரனாய் இருந்துள்ள எம்பெருமானாலே தன்னை என் கவிக்கு விஷயமாகி வைத்த பின்பு
இதர ஸ்தோத்ரங்களில் அதிகாரம் அல்லேன் என்கிறார் –

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய என்கிறபடியே அவன் தன்னை ஏத்துகைக்காக தந்த வாக்கைக் கொண்டு ஷூ த்ரரைக் கவி பாட பிறந்தேன் அல்லேன்
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை கவி பாடப் போமோ -என்னில்
தன்னை எனக்கு விஷயம் ஆக்கித் தந்தால் கவி பாடக் குறை என் என்கிறார்
ஆய் கொண்ட சீர்
ஆயப்பட்ட சீர் -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகணன்
வள்ளல்
பரம உதாரன்
ஆழிப் பிரான்
இக்குணங்களை காத்தூட்ட வல்ல பரிகரத்தை உடையவன்
எனக்கே உளன்;
என் கவிக்கே தன்னை விஷயம் ஆக்கினான் –
சாய் கொண்ட இம்மையும் சாதித்து,
ஒளியை உடைத்தான் ஐஹிக ஸூ கத்தையும் தந்து
சாய் -ஓளி -கொள்கை -உடைத்தாகை
மோக்ஷ ஸூ கத்திலும் நன்றாம்படி ஐஹி கத்தில் ஸ்வ அனுபவமே யாத்ரையாம் படி பண்ணித் தருகை
வானவர் நாட்டையும்
அத்தேசம் நித்ய ஸூ ரிகளுக்கு இட்ட வழக்காய் இருக்கை
குடி இருப்பாரோ பாதி யாயிற்று ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு –
நீ கண்டு கொள் என்று –
க்ருசம் தச குணம் மயா-என்று பண்டாரத்தை வளர்த்து வைத்து பெருமாள் மீண்டு எழுந்து அருளினை போது ஸ்ரீ பரத ஆழ்வான் காட்டிக் கொடுத்தால் போலே
நித்ய ஸூ ரிகளோபாதி இவர் கையில் காட்டிக் கொடுக்கை
அபூர்வ லாபம் அன்றிக்கே இழந்தது கண்டானாய் இருக்கை என்றுமாம்
வீடும் தரும்
கைங்கர்ய ஸூ கத்தையும் தரும் -முக்திர் மோஷோ மஹா நந்த –
நின்று நின்றே.–
இப்படி முழுக்க கொடுத்தாலும் இவனுக்கு என் செய்தோம் -என்று குறைப் பட்டு இருக்கும் -என்று நம்முடைய பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்
ஒரு தமிழன் அடைவடைவே என்றான்
முந்துற ஐ ஹிகத்திலே அனுபவிப்பித்து பின்பு ஒரு தேச விசேஷத்தை காட்டிக் கொடுத்து பின்பு கைங்கர்ய ஸூகத்தை கொடுக்கும்
இவை தரும் இடத்தில் சாத்மிக்க சாத்மிக்க தரும் -என்றுமாம் –

————————————————————————————————

சர்வேஸ்வரன் கவியான எனக்கு இதர ஸ்தோத்திர கரணமானது அநு ரூபம் அன்று என்கிறார் —

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

நின்று நின்று பல நாள்
பல நாள் நின்று நின்று -அநாதி காலம் இடைவிடாதே
உய்க்கும்
அனுபவிக்கும் -பாதிக்கும்
இவ்வுடல்
த்ருஷ்ட்டி விஷம் போலே பய ஸ்தானமாய் இருக்கிறபடி
நீங்கிப் போய்ச்
விட்டுப் போய்
சென்று சென்றாகிலும்
நெடும் காலம் கூட வாகிலும்
கண்டு,
நம்மை இவன் கண்டு
சன்மம் கழிப்பான்
ஜென்ம சம்பந்தம் அரும்படி பண்ண வேண்டும் என்று
எண்ணி,
மநோ ரதித்து
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்
ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான்
கவி ஆயினேற்கு
கவியாயினுக்கு
அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–
கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ
வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்
இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
– ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ –
சென்று சென்று ஆகிலும் கண்டு நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் ஜன்மம் கழிப்பான் எண்ணி
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு என்றும் என்றும் இனி மாற்று ஒருவர் கவி ஏற்குமோ –

—————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியை -இயல் மாத்ரத்தை -சொல்ல வல்லார்க்கு -பிறரைக்
கவி பாட யோக்கியமான நீச ஜென்மம் இல்லை என்கிறார் –

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
தகுதியான மிக்க புகழை உடையனாய் நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் -அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷ்யத்தவே பரத்வத்தை உடையவனும்
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
உபய விபூதி உக்தன் என்றால் -அவனுக்கு தக்கு இருக்குமா போலே சர்வேஸ்வரன் கவி என்றால் அதுக்கு போரும்படி இருக்கிற ஆழ்வார் –
சொல் ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள்-
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை விளா க்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதுக்கு போரும்படி ஆயிரம்
இவையும் ஓர்பத்து ஏற்கும் பெரும்புகழ் -சொல்ல வல்லார்க்கு
ஆயிரத்திலும் இப்பத்துக்கு தகுதியான புகழை உடைத்து ஸ்வரூப அநு குணமாக அப்ராப்த விஷயத்தை தவிர்ந்து
ப்ராப்த விஷயத்திலே கவி பாட சொல்லிற்று ஆகையால் ஏறிட்ட நன்மை எல்லாம் பொறுக்கை
இல்லை சன்மமே.
பிறரை கவி பாட வேண்டா -என்று உபதேசிக்க வேண்டுகிறது இஸ் சம்சாரத்தில் பிறப்பு இ றே -அந்த ஜென்ம சம்பந்தம் அறும் என்கிறார் –

——————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: