திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-8-

அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -என்று செய்ய தாமரை கண்ணனில் எழுந்த ஆசையானது
உத்தம்பகமான பயிலும் சுடர் ஒளி யில் அனுசந்தானத்தாலும் சதாசாகமாக பணைத்து தாம் அபேக்ஷித்தபடி காணப் பெறாமையாலே
அத்யந்தம் அவசன்னராய் ஒரோ ஒன்றே சர்வ இந்திரிய விருத்தியையும் ஆசைப்படுகிற தம்முடைய இந்திரியங்களும்
அப்படியே விடாய்த்த ஆழ்வார் தாமும் -துர்பிக்ஷ காலத்தில் தரித்ரனாய் பஹு ப்ரஜனானவன் பிரஜைகள் உடைய பசிக்கும்
தன் பசிக்கும் ஆற்றாமே கூப்பிடுமா போலே திவ்ய பூஷணங்களையும் திவ்ய ஆயுதங்களையும்
அப்ராக்ருதமாய் ஸ்வ அசாதாரணமான திரு மேனியையும் ஸமஸ்த கல்யாண குணங்களையும் ஆஸ்ரித அர்த்தமான சேஷ்டிதங்களையும்
உடையனான எம்பெருமானைக் காண வேணும் என்று கூப்பிடுகிறார் –
இந்திரியங்கள் ஆசைப் பட்டன வென்றும் -ஒரோ இந்த்ரியமே இந்த்ரியாந்தரங்களுடைய விஷயங்களையும் ஆசைப்பட்டது என்றும் சொல்லுகிற
இவற்றால் ஆழ்வாருடைய அபிநிவேசத்துக்கு அளவில்லாமை சொல்லிற்றாய் விட்டது –

————————————————————————————————————

திரு உள்ளம் எம்பெருமானைக் காண வேணும் என்று ஆசைப்பட்டு பெறாமையாலே அவசன்னமாய் கிடக்கிறபடியை அருளிச் செய்கிறார் –

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-

முடியானேஎ!-இத்யாதி
ஆதி ராஜ்ய ஸூ சகமாய் எப்போதும் தர்ச நீயமான திரு அபிஷேகத்தையும் உடையையுமாய் குணாகுண நிரூபணம் பண்ணாதே
சகல லோகங்களுக்கும் காரணம் ஆனவனே -அழகிய திருவடிகளை என் தலையில் வைக்கப் பெறுகிறதில்லை என்று கருத்து –
ஆழ்கடலைக் கடைந்தாய்-இத்யாதி
பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட மஹா வியாபாரங்களை பண்ணி அபேக்ஷித்ங்களைக் கொடுப்பதும் செய்து நினைப்பதுக்கு முன்னே
ஆஸ்ரிதர் இருந்த இடத்தில் செல்லுகைக்கும் -செல்லுமத்துக்கு முன்னே தூரத்திலே கண்டு வாரா நின்றான் என்று உகக்கைக்கும் ஈடாக பெரிய திருவடியை
வாகனமாகவும் த்வஜமாகவும் உடையையாய் -பெரிய திருவடி மேலே மேருவின் மேலே வர்ஷூகவலாஹம் போலே இருந்து அருளுவதும் செய்து
ஐஸ்வர்யாதிகளால் ப்ரஹ்மாதிகளில் காட்டிலும் அதுக்கான ஆனவனே –

———————————————————————————————————————————-

மன பூர்வோ வாக் உத்தர -என்னும் கணக்காலே மனசுக்கு அநந்தரமான வாக் இந்த்ரியத்தினுடைய சாபலத்தை அருளிச் செய்கிறார் –

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! -இத்யாதி –
ஹ்ருதயத்தை இட்டளம் இல்லாத நகரமாகக் கொண்டு இருந்த என் ஆபத்சகனே-
நெஞ்சமே என்கிற ஏவகாரம் வாக்கு மநோ வ்ருத்தியை ஆசைப்பட்டமையை ஸூ சிப்பிக்கிறது –
சர்வ இந்திரிய விருத்தியையும் ஆசைப்பட்டமைக்கு உப லக்ஷணம் -இப்படி எல்லா பாட்டுக்களிலும் அனுசந்திப்பது
தண் இலங்கைக்கு இறையைச் செற்ற-இத்யாதி
ஆஸ்ரித விரோதி நிரசன சமர்த்தனாய் அவர்களுடைய அபேக்ஷிதம் முடிக்கும் விரகு அறியுமவனே –

——————————————————————————————————————————

தம்முடைய கைகளுக்கு தனக்கு அடைத்த வ்ருத்தியிலும் வாக் வ்ருத்தியிலும் அகப்பட உண்டான சாபலத்தை அருளிச் செய்கிறார் –

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே!
அயர்வரும் அமரர்களுக்கு அதிபதியாய் வைத்து வாக்குக்கே ஸ்துதி சாமர்த்தியத்தை தந்தாய்
அப்படி நாங்களும் ஏத்தும்படி பண்ண வேண்டும் என்று கைகளுக்கு கருத்து
நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து-
இடையருடைய மூங்கில் குடில்களில் வெண்ணெய் களவு காணப் புக்கு வெண்ணெய் யைப் பெற்ற ப்ரீதி ப்ரகரஷத்தாலே பூர்ணனாய்
நாளால் இளையனான சந்திரனைப் போலே இருக்கிற திரு முகத்தின் ஒளி புறப்படும்படியாக ஸ்மிதம் பண்ணி
வெண்ணெய் அமுது செய்து ஆனாயர் பக்கல் தாய் போலே பரிவனானவனே

—————————————————————————————————————————————

கண்களானவை -கைகளுடைய பரிமாற்றமும் வேணும் -ஸ்வ வ்ருத்தியான தரிசனமும் வேணும் என்னா நின்றன -என்கிறார் –

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-

விடாய் தீரும்படி கைகளால் உன்னை மிகவும் தொழுது என்றும் ஒரு க்ஷணமும் இடைவிடாதே
உன்னுடைய ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு வனந்த ஆழ்வான் மேலே உறைகையாலே அதி சிலாக்யனாய் உள்ளவனே
உரு வெளிப்பாடு போல் அன்றியே மெய்யாக்க காண வேணும் என்று விரும்பா நிற்கும் –

—————————————————————————————————————-

ஸ்ரோத் இந்திரியம் -காணவும் வேணும் கேட்கவும் வேணும் -என்னா நின்றது -என்கிறார் –

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-

கண்களாற் காண வருங் கொல் -இத்யாதி
கண்களால் காண வருமோ என்னும் ஆசையினால் ஆஸ்ரிதர் இருந்த இடத்தே தானே வந்து அவர்கள் அபேக்ஷிதங்களை முடிக்கும்
ஸ்வபாவனான ஸ்ரீ வாமனன் -ஏறுகையாலே ஹ்ருஷ்டானாய்க் கொண்டு நடவா நின்றுள்ள பெரிய திருவடியினுடைய பண்ணை
வென்று இருக்கிற திருச் சிறகில் உண்டான ப்ருஹத்ரதந்தராதி சாம த்வனியை நினைந்து
திண் கொள்ள-இத்யாதி
அவன் வர உத்யோகத்தில் தொடங்கி இந்த த்வனியை கேட்க வேணும் என்று மிகவும் குறிக் கொண்டு இரா நின்றன –

———————————————————————————————————

என்னுடைய பிராணனானது உன்னுடைய கீர்த்தியை கேட்க வேணும் என்று ஆசைப் படா நின்றது என்கிறார் –

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-

செவிகளால்-இத்யாதி
உன்னுடைய கீர்த்தி ரூபமான கவியாகிற கனிகளை காலப் பண்ணாகிற தேனை மிகக் கலந்து செவிகளாலே பூர்ணமாக புஜித்து
புவியின் மேல்-இத்யாதி –
அற அழகியதாய் பெருத்து இருக்கிற திரு ஆழியை திருக் கையிலே உடையையாய் இருக்கிற உன்னை இங்கனே காணலாம் திரு நாட்டிலே
போய் அன்றியே காண கடவது அல்லாத சம்சாரத்திலே காண வேணும் என்று ஆசைப்படா நின்றது என்னுடைய பிராணன் –

————————————————————————————————————–

மஹா பாபி யாகையாலே நெஞ்சின் விடாய் தீர்க்கவும் பெற்றிலேனான நான் நெடு நாள் கூப்பிட்ட இடத்திலும்
உன்னுடைய அழகு காணவும் பெற்றிலேன் என்கிறார் –

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-

தாரகனுமாய் மிகவும் போக்யமும் ஆனவனே
பெரிய திருவடி மேலே இருந்த இருப்பைக் காட்டி என்னை அடிமை கொள்ளுவதும் செய்து
நிரவதிக தீப்தி யுக்தமான திருவாழியை உடையவனே
இவை இரண்டு பதத்தாலும் வருகைக்கும் விரோதி நிரசனத்துக்கும் பரிகரவத்யையைச் சொல்லிற்று என்றுமாம் –

—————————————————————————————————————-

உம்முடைய அபேக்ஷிதம் செய்கைக்கு ஈடான காலம் வர வேண்டாவோ -என்னும் பக்ஷத்தில்
அதுவும் நீ இட்ட வழக்கு அன்றோ -ஆனபின்பு நான் இழக்கப் போமோ -என்கிறார் –

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

அழகு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிறவன்
மநோ ஹரமான திருக் கண்களையும் வி லக்ஷணமாய் சிரமஹரமாய் நீல வர்ணத்தை வகுத்தால் போலே இருக்கிற
வடிவை உடையையாய் நீ நெடு நாள் பொகட்டாலும் மறக்க ஒண்ணாத படி என்னை ஈர்கிற சீலமே ஸ்வபாவகமாக ஆனவனே –
அதாவது -செந்தாமரைக் கண்ணா வில் சீலவத்தை –
பூத பவிஷ்யத் வர்த்தமான கால த்ரயமும் நீ இட்ட வழக்காம் படி இருக்கிறவனே –

———————————————————————————————————-

ஆஸ்ரித ரக்ஷண உபாயஜ்ஞ்ஞனுமாய் -பிரதிகூல நிரசன சமர்த்தனுமாய் இருக்கிற உன்னை நான் சேர்வது என்று என்கிறார் –

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-

மஹா பலீ எனக்கு மூவடி வேணும் தா -என்ற முக்தமான பேச்சாலே அவனை சர்வ ஸ்வாஹரணம் பண்ணினவனே –
கம்சன் உன் திறத்து செய்ய நினைத்த தீங்கு அவன் தன்னோடே போம்படி பண்ணி ருத்ரனை உடையம் என்கிற அபிமானம் எல்லாம்
பக்கனமாம் படி பாணனை அநாயாசேன ஆயிரம் தோலையும் துணிப்பதும் செய்து பெரிய திருவடியை யுத்தத்தில் கருத்து அறிந்து நடத்த வல்லவனே –

——————————————————————————————————-

உன்னுடைய குண ஜிதனாய் உன்னைக் காணப் பெறாத வ்யாசனத்தாலே துக்கப்படுகிற நான்
இன்னம் எத்தனை காலம் துக்கப் படக் கட வேன் என்கிறார் –

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-

அல்ப விவரமாய் பெருத்து இருக்கிற மருதுகளின் நடுவே அகப்படாதே போய் என்னை ரஷித்த மஹா ப்ரபாவனே
மருதின் நடுவே தவழ்ந்து போன திருவடிகளை காணவேணும் என்று ஆசைப்பட்டு
பெரிய வருத்தத்தோடு உன் குணத்தைச் சொல்லிக் கொண்டு –

———————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய்மொழி இயல் மாத்ரத்தை தரித்தவர் யாரேனும் ஆகிலும் இதில் பிராரத்த படியே
அனுபவிக்கையில் தட்டு இல்லாத நிரதிசய போக்யமான திரு நாட்டிலே செல்வர் என்கிறார் –

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-

எல்லாராலும் ஏத்தப் படும் குணங்களை உடையனாய்க் கொண்டு பூமியை அளந்து இக்குணத்தாலே எல்லாருக்கும் ஸ்வாமியாய் இருக்கிறவனை –
இது திருவாய் மொழியில் சொன்ன படியே பக்தியுடைய ஆழ்வார் அருளிச் செயலுமாய் எம்பெருமானை உள்ளபடி பிரதிபாதித்த ஆயிரத்தில் இப்பத்து –

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: