திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-8–

அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே -என்று செய்ய தாமரைக்கு கண்ணனில் எழுந்த ஆசைக்கு
பயிலும் சுடர் ஒளி யில் அனுசந்தானமும் -பாகவத ஸ்வரூப நிரூபகமான பகவத் ஸ்வரூபம் பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி யாகையாலே
பாகவதர்களோடு போதயந்த பரஸ்பரம் பண்ணி தரிக்கைக்கு உடல் அன்றிக்கே ஸ்மாரகமாய்-காத்ரைஸ் சோகாபி கர்சிதை -இத்யாதிப்படியே
விடாய்க்கு உத்தம்பகமாய் சதசாகமாக விடாய் பிறந்தவாறே ஓன்று ஒன்றே சர்வ இந்திரிய வ்ருத்தியை ஆசைப்படுகிற
தம்முடைய கரண க்ராமமும் அப்படியே விடாய்த்த தாமும் –
நாம் அவனை என்றோ காண்பது என்று துர்பிக்ஷ காலத்தில் தரித்ரனாய்-பஹு பிரஜனானவன் பிரஜைகள் பசிக்கும் தன பசிக்கும் ஆற்றாமே
கூப்பிடுமா போலே ஆபரணங்களையும் திவ்ய ஆயுதங்களையும் இவற்றுக்கு ஆச்ரயமான வடிவு அழகையும் குணங்களையும் சேஷ்டிதங்களையும்
உடையவனாய் காணப் பெறுவது என்றோ என்று கேட்டார் அடைய நீர்ப் பண்டமாம் படி கூப்பிடுகிறார் –
குஹேந சார்த்தம் தத்ரைவ ஸ்திதி தோஸ்மி திவசான் பஹூன் -என்று ஸூ மந்த்ரனுக்கு குஹ ஸஹவாசம் ஆனால் போலே இவருக்கும் பாகவத ஸஹவாசம்
அசேதனமாய் ஞானப்ரசர த்வாரமான இந்திரியங்கள் சேதன சமாதியாலே ஆசைப்பட்டது என்றும் –
ஒரோ இந்த்ரியமே இந்த்ரியாந்தரங்களினுடைய விஷயங்களை ஆசைப்பட்டது என்றும் சொல்லுகிற இவற்றால் ஆழ்வாருடைய விடாய்க்கு
அளவில்லாமையைச் சொன்ன படி –
இந்த்ரியாந்தர விஷயம் இந்த்ரியாந்தரத்துக்கு விஷயமாகக் கூடுமோ -என்னில்-ஈஸ்வர இச்சையால்
சர்ப்பத்துக்கு சாஸூஸ்ரவஸ்த்வம் கூடினால் போலே இவற்றுக்கும் அது அடியாகக் கூடும் –

————————————————————————————————————————

தம்முடைய திரு உள்ளத்துக்கு உண்டான அபிநிவேச அதிசயத்தை அருளிச் செய்கிறார் –

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-

முடியானேஎ! –
ஆதிராஜ்ய ஸூ சகமாய் உபய விபூதிக்கும் தவித்த முடி இ றே-சேஷ பூதனுக்கு சேஷித்வம் இ றே முதல் காணப்படுவது
அவன் சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகத்தில் முந்துறக் கண் வைக்கிறார் -தர்ச நீயமான திரு அபிஷேகம்
இவருடைய அபிநிவேச அதிசயம் இசையின் ஓசையிலே அறியும் அத்தனை –
மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! –
அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இ றே விழுவது
குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே
மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து
ஆழ்கடலைக் கடைந்தாய்!
இந்த சம்பந்த அனுரூபமான புருஷார்த்தம் அன்றிக்கே ஷூத்ரங்களை அபேக்ஷிக்கிலும் உடம்பு நோவக் கடந்து கொடுக்குமவன் –
அப்ரமேயோ மஹோததி என்கிறபடியே அத்யகாதமான கடலை குளப்படி போலே கலக்கின படி
புள்ளூர்-கொடியானேஎ! –
பெரிய திருவடியை வாகனமாகவும் கொடியாகவும் உடையவனே -ஆஸ்ரிதர் இருந்த இடத்தே செல்லுகைக்கு வாகனமாய்
தூரத்திலே கண்டு வாரா நின்றான் என்று தரிக்கைக்கு த்வஜமாகை
கொண்டல்வண்ணா!
மேருவின் மேலே ஒரு காள மேகம் படிந்தால் போலே யாயிற்று பெரிய திருவடி மேல் இருப்பு –
அண்டத்து உம்பரில் நெடியானேஎ! –
பெரிய திருவடியின் முதுகில் இருப்பைக் கண்டால் ப்ரஹ்மாதிகளுடைய ஐஸ்வர்யம் ஷூத்ரமாய்-இவனே சர்வாதிகன்-என்று தோற்றும்படி இருக்கை-
வடிவு அழகோபாதி இவர்க்கு ஐஸ்வர்யமும் ஆகர்ஷகமாய் இருக்கிற படி –
என்று கிடக்கும்என் நெஞ்சமே.-
இப்படிகளைச் சொல்லி அச் சொல்லைத்த தலைக் கட்டாமே கிடக்கும்-
உக்த்வார்யேத்தி சக்ருத்தீ நம் புனர் நோவாச கிஞ்சன -என்ற ஸ்ரீ பரத்தாழ்வானை போலே
ன் நெஞ்சமே.-
என் மனனே என்கிறார் அல்லர் -நான் செய்தபடி செய்ய இப்பிரஜையைக் கொண்டு என் செய்கேன் -என்கிறார் –

———————————————————————————————————————————–

மன பூர்வோ வாக் உத்தர -என்ற மனசுக்கு அநந்தரமான வாக்கு -தன விருத்தியையும் நெஞ்சின் விருத்தியையும் ஆசைப்படா நின்றது என்கிறார் –

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே!
வாக் இந்த்ரியத்தின் வார்த்தை இறுக்கியபடி -அவதாரணத்தால் மநோ வ்ருத்தியை வாக்கு ஆசைப்பட்டது என்கை
நெஞ்சின் பக்கலிலேயோ எப்போதும் இருக்கலாவது -என் பக்கல் ஒரு கால் இருந்தால் ஆகாதோ
நீள் நகராக
கலங்கா பெரு நகரிலே இருக்கும் இட்டளம் தீரும்படி யாயிற்று இவர் திரு உள்ளத்தில் பாரிப்பு
என் தஞ்சனே!
ஆபத் சகனே –விடாய்த்து கூப்பிடப் பண்ணின உபகாரம்
சம்சாரிகள் விஷயாந்தரங்களைப் பற்றி கூப்பிடா நிற்க இவர் இவ்விஷயத்தில் கூப்பிடுகிறது நெஞ்சிலே இருக்கை இறே
தண் இலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே!
கட்டளை பட்ட லங்கைக்கு இறைவனான ராவணனை நிரசித்து அவனுக்கு நஞ்சானவனே
அஹோ வீர்ய மஹோதைர்ய மஹோசத்தவ மஹோத்யுதி ஸ்வர்க்கோயம் தேவலோகயம்இந்த்ரசியேயாம்
புரீ பவேத் சித்திர்வேயம்-என்று பரம விரக்தனான திருவடியும் மதித்த ஐஸ்வர்யம் இறே
ஞாலம் கொள் வான் குறளாகிய
ராவணனைப் போலே மகாபலியை தலையை அறா விட்டது உதாரன் ஆகையால்
அவனால் அபஹ்ருதையான பூமியை மீடகைக்கு விரகு அறியுமவனே
சர்வாதிகனான தன்னை அர்த்தியாக்கி இந்திரனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்த விரகு
வஞ்சனே!
சிறு காலாலே மூவடி என்று வேண்டிப் பெரிய காலாலே இரண்டு அடியிலே அடங்கின வஞ்சனம்-
கொள்வான் -என்கிறார் இந்திரன் பேறு தன் பேறாக இருக்கையாலே
வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–
அவ்வஞ்சனத்தையே சர்வ காலமும் சொல்லா நின்றது என் வாக்கானாது
அவ்வஞ்சனத்தை அனுசந்தித்த பின்பு ராமாவதாரத்தில் செவ்வையிலும் போகிறது இல்லை
ஸ்வரூபம் அறியாமை செய்த இடம் இ றே அவ்வவதாரம் -தன்னை அழிய மாறின இடம் இறே இது
எப்போதும்
கலியன் சோறு சோறு என்னுமா போலே

————————————————————————————————————————–

கைகளானவை வாக் விருத்தியையும் தன் விருத்தியையும் ஆசைப்படா நின்றது –

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே!
கைகளின் வார்த்தை இருக்கிறபடி-இவ்வாக்கே ஏத்திப் போம் அத்தனையோ -நான் ஒரு கால் ஏத்தினால் ஆகாதோ -என்னா நின்றது –
தத் விப்ராசோ விபன்யவ-என்கிறபடியே நித்ய ஸூ ரிகள் ஏத்த இருக்கிற உனக்கு வாக்கு ஏதேனும் பச்சை இட்டது உண்டோ –
நித்ய ஸூ ரிகளை போலே வாக்குக்கு ஏத்துகையே ஸ்வ பாவமாக கொடுத்தவன் என்னுதல்
நித்ய ஸூ ரிகளை போலே எனக்கும் ஏத்துகையே ஸ்வ பாவமாக வேணும் என்னுதல்
நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
நாளால் இளையனான சந்திரனைப் போலே -அபி நவமான சந்திரனைப் போலே என்கை -கோள்-ஒளி -திரு முகத்தின் ஒளி புறப்படும்படி ஸ்மிதம் பண்ணி
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட –
இடையருடைய மூங்கில் குடில்களில் வெண்ணெய் களவு கண்டா
இடைச்சிகள் மறையச் சேமித்து வைத்த வெண்ணெய்யைக் களவு காணப் புக்கு நிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தில் இருளாலும் தெரியாமையாலே
தடவ பாக்ய வசத்தால் கையிலே தட்டின ஹர்ஷத்தாலே ஸ்மிதம் பண்ணி அதுவே கை விளக்காக வெண்ணெய் அமுது செய்யும் என்கை –
ஆன் ஆயர் தாயவனே!
இடையாருக்கு தாய் போலே பரிவன் ஆனவனே
என்று தடவும் என் கைகளே.–
அவன் வெண்ணெய் களவு காணப் புக்க இடத்தே வழியைக் கட்டிப் பிடித்துக் கொள்ள தேடா நின்றது என் கைகள்
நவநீத ஸுர்ய வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்தவாறே கைகளுக்கு கண் தோற்றுகிறது இல்லை -என்னவுமாம் -ராமம் மே அநு கதாத்ருஷ்ட்டி –

—————————————————————————————————

கண்களானவை கைகளின் வ்ருத்தத்தையும் ஸ்வ வ்ருத்தியான தரிசனத்தையும் ஆசைப்படா நின்றது என்கிறார் –

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-

கைகளால்
தொழுகைக்காக கண்ட கைகளால்
ஆரத் தொழுது தொழுது
பசியர் வயிறு நிறைய உண்ண வேணும் என்னுமா போலே
வீபசையாலே தொழுகை தானே பிரயோஜனம் என்கை
ஒரு பிரயோஜனத்துக்கு தொழில் அது கிட்டினவாறே தவிர்க்கும்
அநந்ய பிரயோஜனம் ஆனாலும் சாதனா புத்தயா தொழில் சாத்தய சித்தி அளவில் மேலும்
இது தானே பிராப்யம் ஆகையால் நித்தியமாய் இருக்கும் -நித்யாஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்னக் கடவது இ றே
உன்னை
அஞ்சலிக்கு வகுத்த உன்னை
இத்தலை தொழுது அல்லாதது தரிக்க மாட்டாதா போலே தொழுவித்துக் கொண்டு அல்லது தரிக்க மாட்டாத உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
சர்வ காலமும் ஒரு க்ஷணமும் இடை விடாதே -நித்ய அக்னிஹோத்ர வ்யாவ்ருத்தி
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே!
இப்படி தொழுகைக்கு
அடியான சர்வாதிகத்வமும் ஸ்ப்ருஹநீயத்வமும் சொல்லுகிறது –
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு வனந்த ஆழ்வான் மேலே நித்ய வாசம் பண்ணுகையாலே
தகட்டில் அழுந்தின மாணிக்கம் போலே ஸ்ப்ருஹணீயமாய்-இருக்கை
அனந்த சாயி என்கிறபடியே சர்வாதிகாத்வம் சொல்லிற்று ஆகவுமாம்
உன்னை
இப்படி பிராப்தனும் போக்யமுமான உன்னை
மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–
மானஸ அநு பவமாதரமாய் -பாஹ்ய சம்ச்லேஷத்துக்கு எட்டாது ஒழிகை அன்றிக்கே மெய்யாகக்காண வேணும் என்று விரும்பா நின்றன –

—————————————————————————————————–

செவிகளானவை காண வேணும் கேட்க வேணும் என்னா நின்றது -என்கிறார் –

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-

கண்களாற் காண வருங் கொல் என்று
சஷூச்ச த்ரஷ்டவ்யஞ்ஜ நாராயண -என்கிறபடியே கண்ணுக்கு வகுத்த விஷயத்தை காண வருமோ என்னா நின்றது -எத்தாலே என்னில்
ஆசையால்
அபி நிவேசமே ஹேதுவாக
மண் கொண்ட வாமனன்
தன் வஸ்துவை பிறர்க்கு விட்டுக் கொடாமைக்காக தன்னை அர்த்தி யாக்கினவன்
ஏற மகிழ்ந்து செல்
அவன் மேற்கொள்ளுகையால் உண்டான ஹர்ஷத்தாலே அதுக்கு போக்கு விட்டு சஞ்சரியா நிற்கை
பண் கொண்ட புள்ளின்
பரிஷ்க்ரியை உடைய என்னுதல் -ப்ருஹத் ரதந்த்ராதி சாம த்வனியை வென்ற சிறகு ஒலி என்னுதல் –
சிறகு ஒலி பாவித்துத்
சிறகு ஒலியாலே அவன் வரவை அனுசந்தித்து
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.-
முன்னே நின்று சிலர் சொன்ன வார்த்தையும் கேளாத படி திண்ணியதாக அவதானம் பண்ணிக் கொண்டே இரா நின்றன
ஸ்ரீ பரதாழ்வான் கிலிகிலா சப்தத்துக்கு செவி மடுத்துக் கொடு கிடந்தால் போலே –

—————————————————————————————————————————————————-

என்னுடைய பிராணனானது உன்னுடைய கீர்த்தியை கேட்க வேணும் என்று ஆசைப் படா நின்றது -என்கிறார் –

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே –
செவிகள் வயிறு நிறையும்படியாக உன் கீர்த்தி ரூபமாய் கனி போலே இருக்கிற கவிகளை
கவி கனி போலே இருக்கை அன்றிக்கே கனி கவி யாயிற்று என்கிறது இ றே போக்யதாதிசயத்தாலே –
காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
செருக்கர் நல்ல பலன்களை தேனில் தோய்த்து புஜிக்குமா போலே காலப் பண்ணாகிற தேனை மிகக் கலந்து அனுபவித்து
புவியின் மேல்
இவ்வனுபவம் ஒரு தேச விசேஷத்திலே ஆகாதபடி பூமியின் மேலே –
ஒரு தேசத்திலே விடாய்த்தாரை பிரதேசாந்தரத்திலே விடாய் தீர்க்குமா போலே அன்றியே ஆசைப்பட்ட கரணங்களோடு இங்கே பெற வேணும் என்கை
பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே
தேசம் இதுவே யானவோபாதி விஷயமும் இதுவே யாக வேணும்
ஸ்ப்ருஹணீயமாய் போக்யதைக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற திரு ஆழியை நிரூபகமாக உடைய உன்னை
தாமஸ பரமோ தாதா சங்கு சக்ர கதா தாரா
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–
விச்சேதம் இல்லாதபடி ஆதரியா நின்றது
துர்லபம் என்று பாராதே கை புகுரு விஷயத்திலே போலே சாபலம் பண்ணா நின்றது
எனது ஆவியே.–
அவன் அருள் பெரும் அளவு ஆவி நில்லாது என்கிற ஆவி –

————————————————————————————————————

கரணங்களை ஒழிய தம்முடைய இழவை சொல்லுகிறார் –

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-

ஆவியே!
அபி நிவேசம் மிக்காலும் ப்ராப்யன் ஆகிறான் சேஷியானால் வரும் தனையும் பாடாற்ற வேண்டாவோ என்னில் –
பிராணனை ஒழிய தரிக்க வல்லோமோ என்கிறார் –
ஆரமுதே;
தாரகமான அளவன்றிக்கே போக்யமுமாய் இருக்கை –
என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!
மற்றை அம்ருதத்தை கொண்டு வருமவனே இவ்வம்ருதத்தையும் கொண்டு வருவான் –
பெரிய திருவடியின் முதுகில் இருப்பைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே –
என்னை ஆளுடைத் தூவி அம் புள்-என்று பெரிய திருவடியோடே அன்வயித்துச் சொல்லவுமாம் –
சேர்க்குமவர்களுக்கு சேஷம் என்று இ றே இவர் இருப்பது
சுடர் நேமியாய்!
போக்யத்தைக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் தானே அமைந்து இருக்கை –
தாரகமுமாய் போக்யமுமாய் -சேர்ப்பாரும் உண்டாய் பிரதிபந்தகம் போக்குவாரும் உண்டாய் இருக்க நான் இழக்கும் படி எங்கனே என்கிறார் –
பாவியேன்
பகவத் விஷயத்தில் ஆசைப் பட்டாரில் இழந்தார் இல்லை கிடீர்
பாவியேன் நெஞ்சம்-
எனக்கு கரணமாய் இ றே இதுக்கும் இழக்க வேண்டிற்று -மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் -இத்யாதி
புலம்பப்
இழவோடே கூப்பிட
பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.-
அதுக்கு மேலே நான் பல காலும் கூப்பிடவும்
ஓர் யுக்தி மாத்ரத்துக்கு முகம் கொடுக்கும் விஷயத்தை கிடீர் இப்படிப் பட்டும் காணாது ஒழி கிறது –
கூவியும் காணப்பெறேன் –
ஸ்வரூபம் பெற்றேன் அல்லேன்-அபிமதம் பெற்றேன் அல்லேன் என்கிறார்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கப் பெற்றிலேன்
மடலூர்ந்தார் பெற்ற பேற்றை பெற்றேன் அல்லேன்
என் ஸ்வரூபத்தை நோக்கினேன் அல்லேன் -அவன் ஸ்வரூபத்தை நோக்கினேன் அல்லேன்
உன்னுடைய நீர்மையும் அழித்தேன்-என்னுடைய சேஷத்வத்தையும் அழித்தேன் –
உன கோலமே
இரண்டு தலையையும் அழித்தே யாகிலும் பெற வேண்டும் விஷய வை லக்ஷண்யத்தை சொல்லுகிறது
வ்யதிரேகத்தில் புறம்பே போது போக்குதல் கண் உறங்குதல் செய்யும் விஷயம் அன்று இறே –

———————————————————————————————————————–

உம்முடைய அபேக்ஷிதம் செய்கைக்கு ஈடான காலம் வர வேண்டாவோ -என்னில் அதுவும் நீ இட்ட வழக்கு அன்றோ என்கிறார் –

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

கோலமே!
அழகு என்றும் தாதாஸ்ரயம் என்றும் இரண்டு அன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை
ஞான ஸ்வரூபன் என்றும் ஞான குணகன் என்றும் சொல்லக் கடவது இ றே ஞாதாவை
தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே!
தாமரையை ஒரு போலியாகச் சொல்லலாம் படி யான திருக் கண்களை உடையையாய் அதுக்கு பரபாகமாய் சிரமஹரமான வடிவை உடையவனே
அஞ்சனம் என்றும் நீலம் என்றும் சொல்லுகையாலே ஓன்று ஒப்பாக மாட்டாமையாலே கதிர் பொறுக்குகிறார்
நீலம் தன்னை வடிவாக வகுத்தால் போலே இருக்கை –
நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே!
வியதிரேகத்தில் வடிவை மறக்கிலும் பின்பு நின்று பின்னாடி மறக்க ஒண்ணாத படி என் நெஞ்சை ஈரா நின்றுள்ள சீலமே ஸ்வரூபம் ஆனவனே
செய்ய தாமரைக் கண்ணனில் நெஞ்சினால் நினைப்பான் எவன் என்கிற அர்ச்சாவதாரத்தில் நீர்மையை இ றே இவர் நினைக்கிறது
சென்று செல்லாதன-
தேஹ குணங்களும் ஆத்ம குணங்களும் குறைவற்று இருந்தாலும் இன்ன காலத்தில் பெற கடவது என்று அன்றோ இருப்பது என்னில்
பூத பவிஷ்ய வர்த்தமான கால த்ரயமும் நீ இட்ட வழக்கு அன்றோ என்கிறார்
காலஸ்யச ஹாய் ம்ருத்யோச்ச ஜங்கம ஸ்தாவரஸ்யஸ
ஈசதே பகவா நேகஸ் சத்யமேதத் பிரவீ மிதே சத்யம் -இத்யாதி -பகவத் விஷயத்தில் அர்த்த வாதம் இல்லை
முன் நிலாம் காலமே!
முன்னே வர்த்திக்கிற காலமே
உன்னை
சர்வ பிரகார வி லஷணனாய் கால த்ரயமும் நீ இட்ட வழக்கான உன்னை
எந்நாள் கண்டு கொள்வனே?–
நான் பெரும் நாள் இன்ன நாள் என்ன வேணும் –
பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று ஸ்ரீ பரத ஆழ்வானுக்குச் சொன்னால் போலே சொல்ல வேணும் என்கிறார் –

——————————————————————————————————————

ரக்ஷண உபாயஜ்ஞ்ஞனுமாய் -பிரதிகூல நிரசன சமர்த்தனுமாய் இருக்கிற உன்னை நான் சேர்வது என்று என்கிறார் –

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-

கொள்வன் -நான்
பெற்றால் அல்லது போகேன் என்னுதல்
வி நீத வேஷத்தைக் கண்டு நம் பக்கலிலே ஒன்றைக் கொள்ளுவது காண் என்று இருந்த அவன் நினைவு அறிந்து நான் கொள்வன்-என்னுதல் –
மாவலி!
இதுக்கு முன்பு ஒரு பிரபுவுக்கு தாழ்வு சொல்லி அறியானே
அவதாரத்துக்கு முன்பு அறியான் -பிரபு இல்லாமையால்
அவதரித்த பின்பு பிறந்த அன்றே பிக்ஷையில் அதிகரிக்கையாலே கற்கைக்கு அவசரம் இல்லை
அவன் தன்னை முதல் பேர் சொல்லி கண்டு அறியாமையால் இவனைப் பார்த்து இவன் பருவத்தால் ப்ரீதனாய்
உனக்கு வேண்டுவது என் என்ன
மூவடி தா –
மூவடி என்றான்
தன்னை வேண்டும் தரம் அன்றிக்கே இருக்கையாலே அநாதரிக்க தா என்றான்
என்ற கள்வனே!
சுக்ராதிகள் விரோதிக்க அவர்கள் செவிப்படாத படி உன் முக்தமான பேச்சாலே அவனை அபஹரித்தவனே
கஞ்சனை வஞ்சித்து
கம்சன் குவலயா பீடத்தில் நலிய நினைக்க அந்நினைவை அவன் தன்னோடே போம்படி பண்ணி
வாணனை-உள்வன்மை தீர,-ஓர் ஆயிரம் தோள் துணித்த-
ஷூ த்ர தேவதையை பற்றி -அத சோ அபயங்கதோ பவதி -என்று இருக்குமா போலே இருந்த வாணன் நெஞ்சு வலி போம்படியாக
பெரிய திருவடி மேல் ஏறி சாரிகை வந்து அவனுடைய பாஹு வனத்தை சேதித்தவனே
புள்வல்லாய்!-
வாள் வல்லான் -தாள் வல்லான் -என்றால் போலே
உன்னை
சர்வஞ்ஞனாய் -சர்வ சக்தனாய் -ப்ராப்தனாய் இருந்துள்ள உன்னை
எஞ்ஞான்று பொருந்துவனே?–
பிரிந்தவன் கூடினால் போலே இ றே இவர்க்கு ஸ்வரூப ஞானம் பிறந்த படி
அநன்யார்ஹையான பிராட்டி அசோகவ நிகையிலே இருந்தால் போலே யாயிற்று ஸ்வரூப ஞானம் பிறந்தால் சம்சாரத்தில் இருக்கும் இருப்பு –

——————————————————————————————————–

உன்னைக் காணப் பெறாத வ்யாசனத்தாலே துக்கப்படுகிற நான் -இன்னம் எத்தனை காலம் துக்கப் படக் கட வேன் என்கிறார் –

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-

பொருந்திய
இவனை நலிய நினைத்து க்ருத சங்கேதராய் நின்றபடி -நிரவிவரம் என்னவுமாம் –
மாமருதின்னிடை போய-
அவ்வருகே சாய்ந்து அவன் மேலே சாய்ந்ததாகில் என் படக் கட வேன் -என்று வயிறு பிடிக்கிறார்
ஓன்று என்னலாம் படி அவகாசம் இன்றியே நிற்க அவகாசம் உள்ள இடத்தில் போமோ போலே அதன் நடுவே போனபடி
எம் பொருந் தகாய்!
அதில் அகப்படாதே சேஷியான உன்னை எனக்குத் தந்த பெரியோனே
உன் கழல் காணிய பேதுற்று
உன் திருவடிகளைக் காண வேணும் என்று ஆசைப் பட்டு
யாமலார்ஜு நயோர் மத்யே ஜகாம கமலேஷண -தத் கட கடா சப்த சமா கர்ணன தத் பர-என்று மருது முறிந்த ஓசையைக் கேட்டு
புரிந்த பார்த்த போதைச் சிவந்த திருக் கண்களையும் அப்போதைத் திருவடிகளின் சிறப்பையும் காண வாய்த்து இவர் ஆசைப்பட்டது –
பேதுற்று
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஞானமும் போயிற்று
வருந்தி
ஆசைப்பட்ட விஷய அநு குணமாய் இறே நோவு பாடும் இருப்பது –ஒரு சொல் தொடை எடுக்கையாகிறது ஒரு மலையை எடுத்தால் போலே இருக்கிறது
நான்
விரஹம் பொறுக்க மாட்டாத மேன்மையை உடைய நான்
வாசக மாலை கொண்டு
உன் குணத்துக்கு வாசகமான சொல் தொடையைக் கொண்டு
உன்னையே இருந்திருந்து
யதோ வாசோ நிவர்த்தந்தே-என்னும்படியான உன்னையே
ஒரு வார்த்தை தலைக் கட்டுகைக்கு நடுவே பல படி இளைப்பாற வேண்டி இருக்கை
எத்தனை காலம் புலம்புவனே?–
இதுக்கு முடிவு என்று -என்கிறார் -சாதனா புத்தியா சொல்ல மாட்டார் -ப்ராப்யபுத்தியாலே தவிர மாட்டார்

—————————————————————————————

நிகமத்தில் இது திருவாய்மொழி இயல் மாத்ரத்தை தரித்தவர் யாரேனும் ஆகிலும் இதில் பிராரத்த படியே
அனுபவிக்கையில் தட்டு இல்லாத நிரதிசய போக்யமான திரு நாட்டிலே செல்வர் என்கிறார் –

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-

இருந்ததே குடியாக ஏத்தும் படியான குணங்களை உடையனாய் தன் விபூதியை
அளந்து கொள்ளுகையினாலே ஸ்வாமி யானவனை யாய்த்து கவி பாடுகிறது
இதில் சொன்ன பேறு விடாயை உடைய ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள்
ப்ரதிபாத்யனை விளாக் குலை கொண்டு இருக்கும் -என்னுதல்
ப்ரதிபாதன சாமர்த்யார்த்த்தை உடைய ஆயிரம் என்னுதல்
அத்விதீயமான இப்பத்தை சொன்னால் இன்னார் இனையார் என்னாதே
பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் இல்லாத வை லக்ஷண்யத்தை உடைய பரமபதத்தை பிராபிக்க பெறுவர் –

———————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: