திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-7–

பகவத் விஷயம் என்றால் மேட்டு மடையாய் தம்மாலே நிந்திதரான சம்சாரிகளோட்டை பரிமாற்றத்தாலே உறாவின ஆழ்வார் அவ் உறாவுதல் தீர
பகவத் குணங்களே தாரகமாய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஜென்ம வருத்தங்களால் குறைய நின்றார்களே யாகிலும்
அவர்கள் எனக்கு நாதர் -நான் அவர்களுக்கு அடியன் -என்று அவர்களோட்டை சம்பந்தத்தை அனுபவிக்கிறார்
அங்கன் அன்றிக்கே –
பகவத் ஸுலப்ய த்தை அர்ச்சாவதார பர்யந்தமாக உபதேசித்தார் கீழே சம்சாரிகளுக்கு
உபதேச நிரபேஷமாக பகவத் ப்ரவணராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களோட்டை சம்பந்தத்தை அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் என்றுமாம்
எம்மா வீடு -ப்ராப்யத்தின் உடைய பிரதம அவதி -இது – சரம அவதி -கச்சதா மாதுலம் குலம்-

————————————————————————————————————

வடிவு அழகிலும் குணங்களிலும் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்று
இத் திரு வாய் மொழியிலே சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
செறியா நின்றுள்ள மிக்க தேஜஸ்ஸையே விக்ரஹமாக உடையவனை
பயிலுகை -செறி கை -சுடர் என்றும் ஒளி என்றும் தேஜஸ்ஸாய் மிக்க தேஜஸ் ஸூ என்கை
சுத்த சத்வமாய் ஸ்வரூப ப்ரகாசகமான விக்கிரஹத்தை உடையவன் என்கை
இவ்வடிவிலே துவக்குண்டாரை அநந்யார்ஹம் ஆக்கும் கண் -அகவாயில் தண்ணளியை ஆனைத் தாளாய் இருக்காய் –
பயில இனிய –
இதர விஷயங்கள் பயின்றால் துக்க ஹேதுவாய் இருக்குமா போலே இவ்விஷயம் பயில பயில இனியதாய் இருக்கும் –
நம் பாற்கடற் சேர்ந்த –
ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்த –
வடிவு அழகிலே குறைவற்றால் போலே நீர்மையிலும் குறை வற்று இருக்கிற படி
பரமனைப்-
ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் குறை வற்று இருக்கையை அன்றிக்கே இவனுக்கு மேற்பட்டு இல்லை என்னும் படி இருக்கை
பயிலும் திருவுடையார்-
பிரயோஜ நாந்தரங்களைக் கொண்டு அகலாதே நிரதிசய போக்யனானவனை செறிகை யாகிற மஹா சம்பத்தை உடையார்
பகவத் அனுபவமே இ றே ஸ்வரூப அனுகூலமான ஐஸ்வர்யம் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -சது நாகவர ஸ்ரீ மான் -அந்தரி ஷகத ஸ்ரீ மான் –
உடையார் என்கிறார் -வைஸ்ரவணன் என்றால் போலே
எவரேலும் அவர்கண்டீர்
ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -அந்நிலையில் அவர்கள் எனக்கு உத்தேச்யர்
வைஷ்ணத்வ விரோதியான அபிமான ஹே துவான ஜென்மாதிகளில் குறைய நின்றவர்கள் அல்லாதாரில் உத்தேச்யர் என்று கருத்து
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–
ஒன்றன் மேல் ஒன்றாக நிரந்தரமாய் வருகிற ஜென்மங்களில் அவகாசம் தோறும் என்னை அடிமை கொள்ளும் ஸ்வாமிகள்
நின் பன் மா மாய பல் பிறவி -என்று நிந்தித்த ஜன்மத்தையும் அனுமதி பண்ணுகிறார் ததீய சேஷத்வ ரசத்தாலே
பரமரே.–
முன்பு அவனை பரமர் என்றீர் –
இங்கே இவர்களை பரமர் என்னா நின் றீரே -என்ன
அனுபாவ்ய குண ஆதிக்யத்தாலே சொல்லிற்று அங்கு
இங்கு அக் குணத்துக்கு தோற்றவர்களை சொல்லுகிறது
தத் சம்பந்தம் ஒழிய சொல்லில் பகவத் சம்பந்தம் அற்றதாம் –

———————————————————————————————————–

அவனுடைய அவயவ சோபைக்கு தோற்று இருக்குமவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-

ஆளும் பரமனைக்
இவ்வஸ்துவை ஆளும் போது ஒப்பு இல்லாதவனை –
அடியார்க்கு என்னை ஆட்படுத்தும் விமலன் -என்ன கடவது இ றே
கண்ணனை –
தான் கையாளாக நின்றாய்த்து ஆட்க்கொள்ளுவது
ஆட்க்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை
ஆழிப்பிரான் தன்னைத்-
ஆஸ்ரித ரக்ஷணத்தில் பகலை இரவாக்குகை பெரு நிலை நின்ற திரு ஆழியை உடையனாய் கொண்டு உபகரிக்குமவனை
கையும் திரு ஆழியுமான சேர்த்தியை காட்டி அநந்யார்ஹன் ஆக்குமவனை
தோளும் ஓர் நான்குடைத்
அதுக்கு மேலே கற்பக தரு பணைத்தால் போலே அத்விதீயமான நாலு திருத் தோளை உடையவனை
ஆயாதாச்சா ஸூ வ்ருத்தாச்சா
தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
பழிப்பற்ற நீல மணி போலே குளிர்ந்த திரு நிறத்தை உடையனாய் பாத்தாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
இவனை தொழ என்றால் பனைக்கக் கடவ அங்கங்களாய் இருக்கை
கை கூப்புகை ஒழிய தாள் கூப்புகை யாவது -நிரபிமானியாய் இருக்கிறமை தோற்ற அவயவங்களை ஒடுக்குகை –
கூப்பிப் பணிகை யாவது -நிப்ருத ப்ரணத ப்ரஹவ-என்கிறபடியே நிர்மமராய் தொழுகை
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–
என்றும் ஓக்க ஜென்மங்களில் அவகாசம் தோறும் என்னை அடிமை கொள்ளும் நாதர் –
அவன் தன் குணத்தைக் காட்டி அடிமை கொள்ளும் –
அக் குணத்துக்கு தோற்று அடிமை கொள்வர்கள் இவர்கள் –

————————————————————————————————————

தோளும் தோள் மாலையுமாய் இருக்கிற இருப்பில் தோற்றவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-

நாதனை
நிருபாதிக சேஷியை –
ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்-போதனைப் –
தோளும் தோள் மாலையுமாய் இருக்கும் இருப்பைக் கண்டால் நித்ய ஸூ ரிகளோடு அவிசேஷஞ்ஞரான சம்சாரிகளோடு வாசி அறப் புகழா நிற்பர்கள்
நறுந்துழாய்ப்-போது –
ஸ்வ ஸ் பர்சத்தாலே செவ்வி பெற்ற திருத் துழாய் பூ
பொன்னெடுஞ் சக்கரத்து
ஸ்ப்ருஹணீயமுமாய் அழகுக்கும் ஆபரணத்துக்கும் தனக்கு அவ்வருகு இன்றிக்கே இருக்கை –
போக்தாக்களுக்கு பிடிதோறும் நெய் வேண்டுமா போலே அடிக்கு அடியும் கையும் திருவாழியான சேர்த்தியை அனுபவிக்கிறார்
எந்தை பிரான் தன்னைப்
கையும் திரு வாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட உபகாரகனை
பாதம் பணிய வல்லாரைப்
பிறருடைய உத்கர்ஷம் பொறாத சம்சாரிகளில் நிர் மமனாய் திருவடிகளில் விழுகையில் அருமை இருக்கிறபடி
அந ஸூயவே என்று கொண்டாட வேண்டும்படி ஈஸ்வரனுடைய உத்கர்ஷம் பெறாதே இ றே சம்சாரிகள் இருப்பது
பணியுமவர்
சஜாதீயராய் அன்ன பா நாதிகளை தாரகமாக உடையவர்களை ததீயத்வ ஆகாரேண-தாரகர் என்று இருக்கும் போது பேர் அளவுடையனாக இருக்க வேணும் இறே
அவர் கிடீர் என்னை ஆளுடையார் என்கிறார் இவர் –
கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு
ஜாயஸ்ய ம்ரியஸ்ய-என்று அல்பமாகச் சொல்லும் பிறப்பில் அவகாசம் தோறும்
சாஸ்திரங்களில் நிஷேத் யதயா சொல்லும் ஜென்மம் ஆகவுமாம்
எம்மை ஆளுடை யார்களே.–
தேவா நாம் தாநவ நாஞ்ச -என்ற பொதுவானவன் அன்று
எனக்கு ஸ்வாமிகள் இவர்களே -அடியார்கள் குழாங்கள் இ றே இவர்க்கு ப்ராப்யம் -துராசாரோ அபி

————————————————————————————————————-

அவனுடைய ஆபரண சோபையிலே வித்தராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தோற்று இருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-

உடை ஆர்ந்த ஆடையன்
திருவரையிலே பூத்தால் போலே இருக்கிற திருப் பீதாம்பரம் -அஞ்சித கடீ சம்வாதி கௌசேயகம்
கண்டிகையன் –
திருக் கழுத்திலே சாத்துமவை
உடை நாணினன்
திரு வரையில் சாத்தும் கோவை
புடையார் பொன் நூலினன்
தான் கிடந்த பிரதேசத்துக்கு வேறு ஒரு ஆபரணம் வேண்டாத படி மேகத்திலே மின்னினால் போலே விளங்குகிற யஜ்ஜோபவீதம்
பொன்முடியன்
ஸ் ப்ருஹணீயமாய் உபய விபூதிக்கும் சூடின திரு அபிஷேகம்
மற்றும் பல்கலன்-நடையா உடைத்-
அனுக்தமான அநேகமான திரு ஆபரணங்களை நித்தியமாக உடையவன்
நடை
தனக்குத் தானே ஒப்பாய் வேறு ஒப்பு இன்றிக்கே இருக்கை என்றுமாம்
திரு நாரணன்
ஸ்ரீ மன் நாராயணன் –
ஆபரணங்களில் அந்நிய தமமாய் இருக்கிறபடி லஷ்மீ சம்பந்தமும்
ஆபரண சோபையினுடைய போக்யத்தையாலே சொல்லாது ஒழிய மாட்டார்
அசங்க்யாதம் ஆகையால் பேச மாட்டார் –
தொண்டர் தொண்டர் கண்டீர்-இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–
அந்த ஆபரண சேர்த்திக்கும் மிதுனத்துக்கும் தோற்று அடிமை புக்கவர்கள் அன்று
அவர்கள் தோற்ற தோல்விக்கு அடிமை புக்கவர்கள் எனக்கு நிரந்தரமான ஜென்மத்தில் அவகாசம் தோறும் சேஷிகள் –

—————————————————————————————————————

பிரயோஜனாந்தர பரருக்கும் அபேக்ஷித சம்விதானம் பண்ணும் உதார குணத்தில் தோற்றவர்கள்
-ஸ்வபாவத்துக்குத் தோற்றவர்கள் -எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-

பெருமக்கள் –
நித்ய ஸூ ரிகள்–பேராளன் பேரோதும் பெரியோர் என்றும் -ச மஹாத்மா ஸூ துர்லபா -என்றும்
முமுஷுக்களை யும் சர்வ உத்க்ருஷ்டராக சொல்லக் கடவதானால்-நித்ய சித்தராய்ச் சொல்ல வேண்டா இறே
உள்ளவர்-
நிரூபகமான சேஷத்வ ஞானம் நித்யம் ஆகையால் தாங்களும் நித்யராய் இருக்கை –
இங்கு உள்ளாரைப் போலே அசன்னேவா-என்பது சந்தமேனம்-என்பதாக வேண்டாதவர்கள் –
தம் பெருமானை –
அவர்களுக்கு நிர்வாஹகனை
அமரர்கட்கு
பிரயோஜனாந்தர பரரான இந்த்ராதிகளுக்கு
அருமை ஒழிய –
கடல் கடையும் வருத்தத்தை தன் தலையிலே ஆக்கி அவர்களுக்கு அம்ருத போகத்திலே அன்வயமாம் படி பண்ணி
அன்று
துர்வாச சாபத்தால் அஸ்ரீ பிரவேசித்து அ ஸூ ரர்கள் அபிபவித்துபோக்கற்ற தசையில்
ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்-
நிரதிசய போக்யமான அம்ருதத்தை புஜிப்பித்த நிருபாதிக சேஷியை –இவர்கள் பேறு தன் பேறாய் இருக்குமவன் –
பெருமை பிதற்ற வல்லாரைப் –
பிரயோஜனாந்த பரரையும்-உதாரா -என்னுமவனுடைய உதார குணத்திலே ஈடுபட்டு அக்ரமமாக பேசுமவர்களை
பிதற்றுமவர் கண்டீர்-
அவர்கள் பகவத் விஷயத்தில் இருக்கும் இருப்பை அவர்கள் தங்கள் பாக்களில் இருக்குமவர்கள்
வருமையும் இம்மையும்
ஐ ஹிக ஆமிஷ் மிகங்கள் இரண்டிலும் -அத்ர பரத்ர சாபி -என்கிறபடியே
நம்மை அளிக்கும் பிராக்களே.–
சம்சாரிகளிலே அந்நிய தமராய் இருக்கிற எங்களை அவர்களில் வியாவ்ருத்தராக்கி இங்கு ஆமுஷ் முகத்தில் நித்ய ஸூ ரிகளோடு ஒரு கோவையாக்கும் ஸ்வாமிகள் –

—————————————————————————————————————

கீழ்ச சொன்ன ஸுந்தர்யாதிகளை எல்லாம் திரள அனுபவிக்குமவர்கள் எனக்கு சர்வகாலமும் ரக்ஷகர் -என்கிறார் –

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6-

அளிக்கும் பரமனைக் –
ரக்ஷிக்கும் இடத்தில் தனக்கு மேற்பட்டார் இல்லாதவனை
கண்ணனை-
உபகரித்தது தன்னை யாயிற்று
ஆழிப் பிரான் தன்னைத்
நா யுதாநி -என்கிறபடி -தன்னோடே ஆயுதங்களோடு வாசி அற பக்தா நாம் என்று இருக்குமவனை
ஆளும் பரமனை -என்கிற பாட்டை நினைக்கிறது –
துளிக்கும் நறுங்கண்ணித் –
ஸ்வ ஸ் பர்சத்தாலே செவ்வி பெற்று துளியா நிற்கும் மதுவையும் பரிமளத்தையும் உடைய திருத் துழாய் மாலையை உடையனாய்
நாறும் துழாய் போதனை -என்றத்தை நினைக்கிறது
தூமணி வண்ணன் எம்மான்தன்னை
பழிப்பற்ற நீல மணி போலே இருக்கிற திரு நிறத்தை காட்டி என்னை அகப்படுத்திக் கொண்டவனை
தோளும் ஓர் நான்குடைத் தூ மணி வண்ணன் -என்றத்தை நினைக்கிறது –
ஒளிக்கொண்ட சோதியை
ஒளி மிக்க தேஜஸ் ஸூ -பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்றத்தை நினைக்கிறது
உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
குணங்களை அனுபவித்து வித்தராய் வாய் விட மாட்டாதே இருக்குமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் –
பகவத் ஸமாச்ரயணீயம் பண்ணினார் ப்ரஹ்மாதிகளாய் -ஈஸ்வரோஹம் -என்று மீளலாம் –
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆனால் யாயிற்று மீளாது ஒழிவது
சன்ம சன்மாந்தரம் காப்பரே
ஜென்ம பரம்பரைகளில் புகாதபடி ரக்ஷிப்பார்கள்-
முன்பு ஜன்மத்தையும் அனுமதி பண்ணினார் -அவர்கள் பக்கல் ஆதரத்தாலே
இங்கு அவர்கள் செய்யும் படி சொல்லுகிறார் –

——————————————————————————————————

ஆஸ்ரித விஷயத்தில் அவன் பண்ணும் மஹா உபகாரகங்களில் வித்தரானவர்களுக்குத் தோற்று இருக்குமவர்கள்
கிடீர் எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகள் என்கிறார் –

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

சன்ம சன்மாந்தரம் காத்து
ஜென்ம பரம்பரைகளில் புகாதபடி பரிஹரித்து
அடியார்களைக்
தன் பக்கலில் சர்வ பரந்யாசம் பண்ணி இருக்குமவர்களை
கொண்டு போய்த்-தன்மை பெறுத்தித் –
ஒரு நாடீ விசேஷத்தாலே புறப்படுத்தி அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே கொண்டு போய்
ஸ்வே ந ரூபேண அபி நிஷ்பத்யதே-என்று ஸ்வ ஸ்வரூபத்தைக் கொடுத்து
தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
சர்வாதிகனான தனக்கு சரண உபாதானத்தோ பாதி யாகக் கொள்ளும் நிருபாதிக சேஷியை
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
ஸ்வா பாவிகமான உதார குணத்திலே ஈடுபட்டு அக்ரமமாகப் புகழுமவர்கள் விஷயத்திலே வித்தராமவர்கள் கிடீர்
ஷிபாமி என்னுமது சோபாதிகம்-உதாரமே இவனுக்கு ஸ்வ ரூபம்
நன்மை பெறுத்து –
ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வத்தை தந்து –
எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–
அத்தை யாவதாத்மபாவி நடத்தக் கடவ விச்வஸ நீயர் -முதலிகள் என்றுமாம் –

—————————————————————————————————

அவனுடைய ஸ்ரீ யபதிவத்திலே வித்தராய் இருக்குமவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-

நம்பனை-
நம்பப் படுமவனை -ஏதேனும் தசையிலும் ஆத்மாவுக்கு தஞ்சமாமவனை –
கீழ்ச சொன்னவர்களும் நம்பராகைக்கு அடியானவனை –
இவனை ஒழிந்த பந்துக்கள் விஸ்வ நீயர் அல்லர் என்கை –
ச பித்ரா ச -எங்கே கண்டோம் என்னில்-
ஞாலம் படைத்தவனைத்
தனக்குத் தானும் இன்றிக்கே பிறரும் இன்றிக்கே அசித் கல்பனான தசையில் புருஷார்த்த உபயோகியான சரீரத்தை உண்டாக்கினவனை
திரு மார்பனை-
இப்படி உபகரித்தது பிராட்டிக்கு பிரியமாக என்கை -யஸ்யா விஷ்ய முகம் –
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
உபரி லோகங்களில் எத்தனையேனும் அதிசயித்த ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும் உணர முடியாது இருக்கிறவனை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்
மஹா பாப பலமான கும்பீ பாக நரகத்திலே கிடந்தும் அங்கே திரு நாமத்தை சொல்லுவார்கள் ஆகில்
அவர் கண்டீர்
ஏதேனும் துர்கதரே யாகிலும் அவ்விருப்பிலே நமக்கு ப்ராப்யர் என்கை
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–-
பலவகைப் பட்ட ஜென்மங்களில் அவகாசம் தோறும் திரு நாமத்தை சொன்னவர்களே யன்று உத்தேச்யர்
-அவர்கள் குலமாக எங்கள் குலத்துக்கு ஆச்சார்ய சந்தானம் –

————————————————————————————————–

கையும் திரு வாழி யுமான சேர்த்தி அழகிலே வித்தராய் இருப்பாருடைய அடியார் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார் –

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து
க்ரம விவாஹத்தாலும் அநு லோம பிரதி லோம விவாஹத்தாலும் உள்ள குலங்களை தரிப்பதான ப்ராஹ்மணாதியான நாலு ஜென்மத்திலும் கீழே கீழே போய்
எத்தனை நலந்தான் இலாத
அந்த சண்டாள ஜன்மத்துக்கு அடைத்த ஞானமும் வ்ருத்தமும் இன்றிக்கே இருக்கை
சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
நாம் சண்டாளரைக் கண்டால் விலங்குமா போலே அவர்கள் தங்கள் விலங்குமவர்கள் ஆகிலும் இவர்களை ஆதரிக்கைக்கு ஹேது சொல்லுகிறது
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு
வலவருகே தரிக்கப் பட்ட திரு வாழி யை உடையனாய் -அதுக்கு ஆச்ரயமான நீல மணி போலே சிரமஹரமான திரு நிறத்தை உடைய சர்வாதிகனுக்கு
ஆள் என்று உள்-கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.-
ஸ்வரூப ஞானம் முன்னாக அடிமை செயகையே பிரயோஜனம் என்று இருக்குமவர்களுடைய சம்பந்தி சம்பந்திகள் நாதர் என்கிறார் –

—————————————————————————————————-

ஐஸ்வர்யார்த்திகள் அதுக்கு பர்யவசனமான ப்ரஹ்ம பதத்தை ஆசைப்படுமா போலே இவரும் தாஸ்ய பர்யவசான பூமியை ஆசைப்படுகிறார் –

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
திருவடிகளுக்கு அளவான பூமியை அமுது செய்து ஒரு பவனான ஆலிலையில் உணவுக்கு ஈடாக இடம் வலம் கொள்ளும்
அதாகிறது அமுது செய்த ஜகத்து ஜரியாத படி வலக்கை கீழ்ப்பட கண் வளர்ந்து அருளுகை –
படியாதும் இல் குழவிப்படி-
ஒப்பு ஒன்றும் இன்றிக்கே இருக்கிற பிள்ளைத் தனத்தால்
யசோதா ஸ்தநந்தியமும் ஒப்பு அன்று வட தள சாயிக்கு –
தொட்டில் நின்றும் விழுவோம் என்று அறியாத மௌக்த்யம் அவனுக்கு
ஆலிலையில் நின்றும் பிரளயத்தில் விழவு தோம் என்று அறியாத மௌக்த்யம் இவனது
எந்தை பிரான் தனக்கு
அவன் அகடிதக்கடநா சாமர்த்தியத்தால் என்னைத் தோற்பித்த உபகாரகன்
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு-அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.-
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் -என்று சேஷித்வத்துக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதா போலே
சேஷத்வத்துக்கு தமக்கு அவ்வருகு இல்லாத படி அதன் எல்லையில் நிற்கிறார்
தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் மீண்டார் அல்லர்
சந்தஸ் ஸூ முடிய வேண்டுகையாலே மீண்டாராம் அத்தனை –

————————————————————————————————

பாகவத சேஷத்வ ப்ரதிபாதிதமான இத் திருவாய் மொழியை அப்யஸித்த வர்கள் இதுக்கு விரோதியான சம்சாரத்தை கடப்பார் என்கிறார் –

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-8-11-

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று
பாண்டவர்களை வனசாரிகள் ஆக்கி புத்தர மித்த்ராதிகளாலே பல்கி ராஜ்யத்திலே வேர் விழுந்த துர்யோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி
ஐவர்க்கு
தான் அல்லது தஞ்சம் அல்லாதவர்களுக்கு
அருள்செய்த
அவர்கள் இழவு எல்லாம் தீர -யஸ்யம இந்திரேச கோப்தாச-என்று சர்வமும் தானேயாய் பின்னையும்
நாதிஸ் வஸ்த்தம நா -என்கிறபடியே ஒன்றும் செய்யாதவனாக இருக்கிறவனை –
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
ஆழ்வார் வாசகமாக அந்தரங்க சேஷ வ்ருத்தி பண்ணின படி
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல் முடிவு
பாதங்கள் பூர்ணமான ஆயிரம் -பாத பத்தோ அக்ஷர சம -என்கிறபடியே
இத் திருவாய் மொழி ததீய சேஷத்வத்தை ப்ரதிபாதித்தது
ஈஸ்வரனை சொன்ன இடங்கள் உபசர்ஜ்ஜநா கோடியிலே யாம் அத்தனை
ஆரக் கற்கில்
நெஞ்சிலே படும்படி கற்க சக்தராகில் –
இதில் ஒரு பாட்டும் விழாத படி என்றுமாம் –
சன்மம் செய்யாமை முடியுமே.–
ததீய சேஷத்வத்துக்கு விரோதியான ஜென்ம அன்வயம் அறும்

——————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: