திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-6-

எம்பெருமான் இப்படி அடிமையாலே உகப்பிக்க கடவனாய் இருக்கச் சேதனர் இவன் பக்கல் விமுகராய் ஸ்தப்தராய் இருக்கைக்கு காரணம்
பகவத் குண ஞானம் இல்லாமை என்று பார்த்து அருளி
முதல் திருவாய்மொழியே தொடங்கி இவ்வளவும் வர தாம் அனுபவித்த ஐஸ்வர்ய ஸுல ப்யாதிகளை அநு பாஷித்து
-பத்துடை அடியவரில்-சொன்ன ஸுலப்யமும் -முதல் திருவாய் மொழியில் சொன்ன பரத்வத்தோடு ஒக்கும் என்னும் படியான
-அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்ய காஷ்டையை அருளிச் செய்து அவனை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்
பத்துடை அடியவரில் காட்டில் அர்ச்சாவதார ஸுலப்யமாவது என் என்னில் -எல்லா காலத்திலும் அனுபவவிக்கலாம் படி சந்நிதி உண்டாகையும்
ஆஸ்ரிதன் ஆனவன் ஏதேனும் த்ரவ்யத்தை திரு உடம்பாக்க கோலினால் அத்தையே மிகவும் விரும்பக் கடவனாயும் எல்லாருக்கும் அனுபவிக்கலாம் படி
கை வந்து போஜன சம்பாஷண ஆசன சயனாதிகள் தொடக்கமான சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஆஸ்ரித பராதீனகையும் இவை தொடக்கமான
இப்படிகளை ஸ்ரீ யபதி யான தான் ஒரு ஹேதுவால் அன்றிக்கே நை சர்க்கிகமாக உடையனாய் இருக்கை –

————————————————————————————————————————————-

ஜகத் ஸ்ருஷ்டித்வாதி குணகனான எம்பெருமானை உத்தேசித்து அவனுக்கு புண்டரீகாக்ஷத் வாதிகளை
விதியா நின்று கொண்டு ஸமாச்ரயணீயனான புருஷன் இன்னான் என்கிறார் –

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

செய்ய தாமரைக் கண்ணனாய்-இத்யாதி
ஸ்ருதி இதிஹாச புராணாதி களில் ஈச்வரத்வ ஏகாந்தமாக சொல்லப்படுகிற அப்போது அலர்ந்த
செந்தாமரைப் பூ போலே இருந்த திருக் கண்களை உடையனாய் பிரளய ஆர்ணவத்திலே அந்தர படாத படி ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து
ரஷித்த அவன் கிடீர் பூமியும் மேல் உள்ள லோகங்களும் அவற்றில் வர்த்திக்க கடவ மனுஷ்யரும் தேவதைகளும் திர்யக் ஸ்தாவரங்களும்
ஜகத் ஆரம்பகமான பூத பஞ்சகங்களும் மஹதாதி விகாரங்களுமாய் கொண்டு பிரத்யஷாதி பிராமண பிரதிபன்னமான இவற்றை எல்லாம்
வருத்தம் இன்றிக்கே வியாபியா நின்ற விசததமமான தன்னுடைய சங்கல்ப ஞான ஞானத்தால் படைத்தான்
பின்னும்-மொய்கொள் சோதியோடு ஆயினான்-
இதுக்கு மேலே அப்ராக்ருத நித்ய விபூதி உக்தன் ஆனான் -தேஜ ப்ரப்ருத்ய அசங்கக்யேய கல்யாண குண விசிஷ்டதையும்-என்பர் –
ஒரு-மூவர் ஆகிய மூர்த்தியே.-
ப்ரஹ்மாவுக்கும் ருத்ரனுக்கும் அந்தர்யாமியாய் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களைப் பண்ணி ஸ்வேந ரூபேண ஜகத் ரக்ஷணம் பண்ணுகிற சர்வேஸ்வரன் —
ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்கள் மூவரையும் மூர்த்தியாக உடையவன் என்றுமாம் –

————————————————————————————————————-

இரண்டாம் பாடல் தொடங்கி மேல் எல்லாம் அவனுடைய ஸுலப்யம் சொல்லுகிறது –
இதில் -இப்படி சர்வேஸ்வரனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரயிப்பார்க்கு எளியனாகைக்காக அவர்களோடு சஜாதீயனாய் வந்து
திருவவதாரம் பண்ணி அருளின ஸ்ரீ தசரத சக்ரவர்த்தி திருமகனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-

மூவர் ஆகிய மூர்த்தியை- முதல்-மூவர்க்கும் முதல்வன் தன்னைச்-
ப்ரஸ்துதமான சாமாநாதி கரண்ய நிபந்தம் சொல்லுகைக்காக கீழ்ச சொன்ன சாமாநாதி கரண்யத்தை அநு பாஷிக்கிறது –
ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ர இந்த்ராதிகளுக்கு காரணம் ஆனவனை
இஸ் சாமாநாதி கரண்யம் கார்ய காரண பாவ நிபந்தம் என்கிறது –
சாவம் உள்ளன நீக்குவானைத்-
அவர்களுக்கு உள்ள சாபங்களை அநாயாசேன போக்குமவனை –
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவர்களுடைய ஆபன் நிவாராணாதி களுக்காக அவர்களுக்கு அணித்தாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனை
தேவ தேவனைத் –
அங்கே கண் வளர்ந்து அருளுகிறது தேவர்களுக்கு ஸமாச்ரயணீயனாய் மனுஷ்ய சஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளினாலும்
மனுஷ்யரைக் காட்டில் தேவர்கள் வி லக்ஷணராய் இருக்கிறாப் போலே தேவர்களைக் காட்டிலும் வி லஷணன் ஆனவனை என்றுமாம்
தென்னிலங்கை-எரி எழச்செற்ற வில்லியைப்-பாவ நாசனைப் பங்கயத் தடங்-கண்ணனைப் பரவுமினோ.–
ராவணனுக்கு அஞ்சி இருந்த அக்னி தட்டும் தடையும் இன்றிக்கே வியாபாரிக்கும் படி தன் வில் வலியால் லங்கையைச் செற்று
கையும் வில்லும் கண்டாருடைய சகல பாபங்களையும் போக்கும் ஸ்வ பாவனாய்
ஒரு பாபங்களையும்போக்கா விடிலும் காண்கையே பிரயோஜனம் போரும்படியான உத்தப்புல்ல புண்டரீக தடாகம் போலே
இருக்கிற திருக் கண்களையும் உடையவனை –

—————————————————————————————————————————————-

தசரதாத் மஜனானவனில் காட்டிலும் ஸூ லபனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளின
ஸ்ரீ நந்த கோபர் திருமகனை நிரந்தரமாக ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் -என்கிறார் –

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-

ஓத்தாரும் மிக்காரும் இன்றிக்கே தன்னுடைய ஸுந்தர்யாதி களுக்கு தோற்று அயர்வறும் அமரர்கள் அக்ரமமாக ஏத்தும் படியை உடையனாய் –
அவர்கள் ஏத்துகையாலே தீப்யமானனுமாய் இங்கனே விலஷணனாய் இருந்து வைத்து ஸ்ரீ நந்த கோபர் திரு மகனாய்
திருக் குரவை கோத்து அருளி இடைப் பெண்களை ஈடுபடுத்தி அவர்களோடே கலக்க வல்லனுமாய் அத்தாலே பெரு விலையனான
மாணிக்கம் போன்ற அழகை உடையனுமாய் -பெண்களே வாழ்ந்து போகை அன்றிக்கே எல்லாரும் கண்டு வாழும்படி குடமாடி அருளுவதும் செய்து
அத்தால் உண்டான இளைப்பு ஆறும் படி திருப் பாற் கடலிலே திரு அனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளின நிரதிசய போக்ய பூதனை –

—————————————————————————————————————

மிகவும் அபிமானிகளான ப்ரஹமேசாநாதிகளுக்கும் தடை இன்றிக்கே புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற எம்பெருமானுடைய சீலவத்யையை பேசுகிறார் –

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-

வைம்மின் நும் மனத்து-இத்யாதி –
உங்கள் மனசில் வைத்து ஆஸ்ரயிங்கோள் என்று நான் சொல்லுகிற ஸுந்தர்யாதிகளால் அத்யார்ச்ச பூதனான அவனுடைய
சீர்மையை என் போல்வார் உரைத்தால் பக்தி வாதம் என்கிறி கோள்-அது கிடக்க கிடீர்
நாடொறும் வானவர்-இத்யாதி
தேவாதிபதியான இந்திரனும் சதுர்முகனும் சாதகனாய் இருந்து வைத்து ஈஸ்வரத்வேந அபிமானியான ருத்ரனும்
என்றும் ஓக்க தடை இன்றிக்கே புக்கு அவனை ஸமாச்ரயித்து வேண்டின படி சஞ்சரியா நிற்பர்கள் –

———————————————————————————————

தன் விபூதியில் ஒன்றை பிரியில் தனக்கு செல்லாமையாலே எப்போதும் அவற்றோடு கூடி எம்பெருமானுடைய தோற்றரவு இருப்பது என்கிறார்
-பூதானாம் ஈஸ்வரோ அபிசன்-என்னும்படியாலே ஐஸ்வர் யாதிகளோடு கூட வந்து திரு வவதாரம் பண்ணும் என்றுமாம் –

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

திரியும் காற்றோடு -இத்யாதி –
தனித்தனியே நியத ஸ்வபாவமான பூத பஞ்சகங்கள் சந்த்ர ஸூ ர்யர்கள் தேவர்கள் மநுஷ்யர்கள் திர்யக் ஸ்தாவரங்கள் இவை இத்தனையோடும் கூடி
கண்ணன் விண்ணோர் இறை-இத்யாதி
கிருஷ்ணனான நீர்மையாலே அயர்வறும் அமரர்களை அடிமை கொண்டு சுழன்று தனித் தனியே
எண்ணிக் கொள்ளலாம் படியான திருக் குழலை உடையனாய் -ஆஸ்ரித பரதந்த்ரத்தயா நிர்வதிக தேஜஸான
திரு அபிஷேகத்தை உடையனான சர்வேஸ்வரனுடைய தோற்றரவு –

————————————————————————————————–

அயர்வறும் அமரர்களுக்கு போலே எல்லாப் படியாலும் எனக்கு போக்யனான நரசிம்மத்தை ஒழிய காலம் உள்ளதனையும்
மற்று ஒருவரை எனக்கு தாரகாதிகளாக உடையேன் அல்லேனாகப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்-

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-

உத்பத்தி விநாசாதி ரஹிதனாய் ஜென்மாதி தோஷ யுக்த பதார்த்தங்களை எல்லாம் நியாமகன் ஆனவன்
அத்யந்த வி லக்ஷணமான திரு மேனியை உடையனாய் ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்கச் செய்தே-
தன்னுடைய அனுக்ரஹ பாத்திரமான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு வந்து அணையலாம் படி நிற்பதும் செய்து
ஹிரண்யன் மேல் உள்ள சீற்றத்தாலும் பிள்ளை பக்கல் உள்ள வாத்சல்யத்தாலும் கலங்கி சிவந்த திருக் கண்களையும்
உடையனாய் அவன் பக்கல் வியாமுக்தனாய்
அயர்வறும் அமரர்களுக்கு சர்வ பிரகார போக்யமானால் போலே எனக்கு எல்லா படியாலும் போக்யமானவனை யல்லது
மற்று ஒருவரை காலம் உள்ளதனையும் உஜ்ஜீவன ஹே துவாக உடையேன் அல்லேன் –

———————————————————————————————–

இப்படி ஆஸ்ரித ஸூ லபனான பின்பு அவன் பக்கல் நீங்கள் பண்ணின துர்லபத்வ சங்கையை தவிர்ந்து அவனை ஆஸ்ரயிங்கோள்
உங்கள் துக்கங்கள் நிஸ் சேஷமாக போம் -என்கிறார் –

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-

காலம் உள்ளதனையும் எனக்கு நிரதிசய போக்யனாய் அத்யந்த நிக்ருஷ்டமான என் ஆத்மாவோடு வந்து கலந்து
பெறா பேறு பெற்றால் போலே உஜ்ஜவலனுமாய் எல்லாரையும் தன் பக்கலிலே ஆகர்ஷித்துக் கொள்ள வற்றான
ஸுந்தர்ய சேஷ்டிதங்களை உடையனுமாய் பேர் அளவுடைய வைகுந்தத்து அமரருக்கும் முனிவருக்கும் ஸ்ப்ருஹணீயமான போக்யதையை உடையவனை

————————————————————————————————-

மற்று உள்ளாறும் தம்முடைய பக்ஷத்தை அறிந்து அதிலே ருசி பண்ணுகைக்காக நான் தசரத சக்கரவர்த்தி திருமகனை அல்லது
மற்று ஒருவரை ஆபத் தனமாக பற்றி இரேன் என்று ஸ்வ சித்தாந்தத்தை சொல்லுகிறார் –

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-

துக்க ஏக ஹேதுவான புண்ய பாப ரூபா கர்மங்களுக்கு நியாமகனாய் -தான் அகர்ம வஸ்யனாய் -தமஸ பரஸ்தாத் வர்த்தமனமாய் –
அப்ராக்ருத தேஜோ ரூபமான திரு நாட்டை உடையனாய் இங்கனே புஷ்கலனாய் இருந்து வைத்து தன்னைத்தானே
ஷூத்ர சம்சார விபூதி ஏக தேசத்துக்கு பிரளய ஆபத்துக்கள் வந்தால் தானே கை தொட்டு நோக்குமவனே
அங்கனே பொதுவான ரக்ஷணத்தை ஒழிய திருவடிகளை ஆஸ்ரயித்தார்க்கு யமாத உபாதைகள் மறுவல் இடாத படி போக்க வல்லனுமாய்
அவர்களோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணும் ஸ்வபாவன் ஆனவனை-
தயரதற்கு மகன் என்று விதேயத்வம் சொல்லுகிறது –

———————————————————————————————-

எம்பெருமான் ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருக்கும் இருப்பு எங்களுக்கு கோசாரம் அன்று –
திருவவதாரம் பண்ணி சர்வ ஸூ லபனாய் வர்த்தித்து அருளுகிற காலத்தில் உதவப் பெற்றிலோம்
எங்கனே அவனைக் கண்டு ஆஸ்ரயிக்கும் படி -என்னில் நீங்கள் ஏதேனும் ஒரு படி உகந்து அருள பண்ணி ஆச்ரயிப்பது
-அது ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூ லபம் ஆகையால் அது திரு உடம்பையே அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடே ஓக்க விரும்பும் என்கிறார் –

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு -இத்யாதி –
தங்களை அழிய மாறி நோக்கும் தாயும் தந்தையும் போலே பரிவுடையனாய் -ஆத்மா தான் தனக்குப் பண்ணும் ஸ்நேஹத்தையும் பண்ணி
இங்கண் சில த்ருஷ்டாந்தங்களால் அளவிட ஒண்ணாத நிரவதிக ஸ்நேஹத்தையும் உடையனாய்
பகவத் அனுபவ சங்கோசம் இன்றிக்கே பரஸ்பரம் கூடி அல்லது செல்லாத படியான அமர சமூகத்துக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருந்து வைத்து
ப்ரஹ்ம ருத்ரர்களுடைய ஹ்ருதயத்திலேயும் வந்து நின்று அருளி அவர்களுக்கு நியாமாகனுமானவனை -மூவரில் வைத்துக் கொண்டு ஆதியானவனை என்றுமாம் –
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்-இத்யாதி –
லோகத்தில் உள்ள நீங்கள் கலங்கி -அவன் அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்தான உக்தன் –
இங்கு நாங்கள் காண உகந்து அருளினை படியாவான் அன்று
ஆகையால் ஸமாச்ரயணம் கூடாது என்று சம்சயிக்க வேண்டா
யாதொன்றை அவனுக்கு ஸ்வரூபமாக நினைத்தி கோள்-அத்தையே அவன் தன்னுடைய சமஸ்தானத்தோடே ஓக்க விரும்பும்
இங்கு உகந்து அருளினை இடத்தை நீள் கடல் வண்ணனான இடத்துக்கு விபூதி என்று இராதே உகந்து அருளினை இடத்துக்கு
நீள் கடல் வண்ணனான இடம் விபூதியாக கொள்ளுங்கோள் -என்றுமாம் –

————————————————————————————————-

தாம் உபதேசிக்கத் தொடங்கின ஸுலப்ய காஷ் டையை உபதேசித்து சமைந்து ப்ரஸ்துதமான கிருஷ்ண விருத்தாந்தத்தை ஸ்மரி த்து
திருத்தேரில் இருந்தும் சாரத்த்யம் பண்ணினவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை என்றோ நான் காணப் பெறுவது -என்கிறார் –

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

கடல் வண்ணன் கண்ணன்-இத்யாதி
கடல் வண்ணனான கண்ணன் -விண்ணவர்க்கு போக்யமானால் போலே எனக்கு போக்யமாக்கைக்கு ஈடாக வருகைக்காக
திருப் பாற் கடலிலே தன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு அனந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகையாலே அத்யுஜ்ஜ்வலனாய் உள்ளான்
பண்டு நூற்றுவர்-இத்யாதி
பண்டு பாதகமாய் வருகிற சேனையோடு கூடின நூற்றுவர் மங்கும்படி பாண்டவர்களுக்காக யுத்தம் செல்லா நிற்க
கனைக்கை-த்வநிக்கை-செறிகை என்றுமாம்
பண்டு என்ன செய்தே திரியும் அன்று என்பான் என் என்னில் ஓன்று போன காலத்தில் இங்கண் வ்ருத்தம் என்கிறது
-ஓன்று அன்றைக்கு உதவாதே நான் இழந்தேன் என்கிறது –

—————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியை அப்யஸிக்க பழுது இல்லாத பக்தராகை நிச்சிதம் –
ஆனபின்பு இது திரு வாய்மொழியை அப்யசிங்கோள் என்கிறார் –

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்-
கண்ணால் காண அரியனாய்-ஹ்ருதயத்தில் மிகவும் ஸூ லபனாய் -இது சம்ச்லேஷ விஸ்லேஷன்களுக்கு ப்ரயோஜகம்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
அயர்வறும் அமரர்களுக்கு ஸூ லபனாய் போலே சம்சாரிகள் எல்லாருக்கும் ஸூலபனாகைக்கு ஈடான அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்யத்தை உடையவனை
பண்கொள் சோலை
வண்டுகளுடைய த்வனியை உடைத்தாகை

——————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: