திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-5–

கீழ் தமக்கு உண்டான பகவத் அனுபவ ப்ரீதி ஹர்ஷத்தாலே கழித்து -அதுக்கு தூரஸ்தரானாரை இகந்து அதுக்கு கூட்டாரானாரை கொண்டாடுகிறார்
முந்நீர் ஞாலத்தில் இவருக்கு உண்டான சோகம் நமக்கு நிலமாகில் யாய்த்து இந்த ஹர்ஷம் நமக்கு நிலமாவது
-வீத ராகராய் இருப்பார்க்கு சோக ஹர்ஷங்களும் தத் ப்ரயுக்தமான ராக த்வேஷங்களும் சாஸ்திரங்களில் நிஷேதியா நிற்க
சாத்விக அக்ரேஸரான இவர்க்கு இவை கூடின படி எங்கனே என்னில் –
விஷயத் செருக்கால் வந்த ஹர்ஷமும் தத் அபாவத்தில் பிறக்கும் சோகமும் தத் ப்ரயுக்தமான ராக த்வேஷமும் யாயிற்று சாஸ்திரங்களில் நிஷேதித்தது –
பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷமும் அதுக்கு தூரஸ்தரை நிந்திக்கையும் -இவ்வனுபவத்துக்கு கூட்டானாரை கொண்டாடுகையும் சாஸ்த்ர சித்தம் –
இது தான் முக்தர் பக்கலிலும்-சர்வ சம்சய நிர்முக்தோ நாரதஸ் சர்வதர்மவித்-என்கிற ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலும்
மது வனம் அழித்த திருவடி முதலான முதலிகள் பக்கலிலும் காணலாம்
இவரும் பகவத் அனுபவ பலாத்க்ருதராய் அஞ்ஞரையும் விஷய பிரவணரையும் பகவத் சம்பந்தம் இன்றிக்கே சிஷ்ட அபிமானிகள் ஆனாரையும்
பரபரக்கு அற்று அவிசேஷஞ்ஞானரையும் -எம்பெருமானை ஆஸ்ரயித்து பிரயோஜனாந்தர பரரானாரையும் ராக்ஷஸ ப்ரக்ருதிகளையும்
ஆஸூர ப்ரக்ருதிகளையும் நிந்தித்து பகவத் குண பிரஸ்தாவத்திலே விக்ருதராய் இருக்குமவர்களைக் கொண்டாடுகிறார் –

—————————————————————————————————————-

ஆனைக்கு உதவின நீர்மையை அனுசந்தித்து ஈடுபடாதே அவிகிருதரராய் இருப்பார் வியர்த்த ஜன்மாக்கள் என்கிறார் –

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

மொய்ம்மாம் பூம்பொழிற்-
செறிந்து பரந்து தர்ச நீயமான பொழில் என்னுதல் -செறிந்து பூத்த மாம் பொழில் என்னுதல்
மா பொழில் -மொய் பூம் பொய்கை-
மாம் பொழிலையும் செறிந்த பூவையும் உடைய பொய்கை என்னுதல் –
நெடு நாள் பூத் தேடி விடாய்த்த ஆனைக்கு விடாய் கெடுகைக்கு உடல் ஆகையால் பொய்கையோபாதி சோலையும் உத்தேசியமாய் இருக்கிறது இவருக்கு
பொய்கை முதலைச் சிறைப்பட்டு-
வெளி நிலம் அல்லாமையாலே யானைக்கு நிலம் அன்றிக்கே முதலைக்கு நிலம் ஆகையால் சிராய்ப்பு பட்டதாய்த்து –
முதலைச் சிறைப்பட்டு-
ஷூ தர ஜந்துவின் கையிலே அகப்பட்டது -ஸிம்ஹம் அன்று -சஜாதீயமான யானை என்று -புலி என்று
நின்ற-
திவ்யம் வர்ஷ சகஸ்ரகம் -என்று நெடு நாள் செல்லுகை -வியாபார ஸூ ன்யமாய் நின்ற என்றுமாம் –
கைம்மா-
எல்லாவற்றையும் கையாலே தள்ளிப் பொகடவற்று -என்னுதல் –
துதிக்கை ஒழிய முழுத்தும் படி முதலையின் கையிலே அகப்பட்டு வியாபாரிக்க மாட்டாதே நின்று என்னுதல் -முழு வலி முதலை இ றே
அருள் செய்த
அதன் கையில் பூவை செவ்வி அழியாத படி திருவடிகளில் இடுவித்துக் கொண்டு அத்தை ஆசுவாசிப்பித்த படி
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
அதன் விடாய் கெடும் படியான சிரமஹரமான வடிவும் ஸுலப்யமும் –
ஆனையின் நோவாற்ற வந்த விசல்ய கரணியும் சந்தான கரணியும் யாயிற்று இவை
எம்மானைச்
அவன் வந்த போதே ஆனையின் சிறை போயிற்று -அந்நீர்மையில் இவர் சிறை பட்டார்
தன் மேன்மை பாராதே ஒரு திர்யக்க்குக்கு உதவுவதே என்று தாம் எழுதிக் கொடுக்கிறார்
சொல்லிப் பாடி-எழுந்தும் பறந்தும் துள்ளாதார்-
அந்நீர்மையை வாயாலே பேசி -ப்ரீதி பிரேரித்தராய் பாடி இருந்த இடத்திலே இருக்க மாட்டாதே எழுந்து இருந்து தரையிலே கால் பாவாதே
சாசம்ப்ரம ந்ருத்தம் பண்ணாதவர்கள்
நமக்கு ஒரு ஆபத்து வந்தால் இருந்த இடத்தில் இராதே விக்ருதனாம் போதும் அவனே வேணும் –
அவன் நூறாயிரம் செய்தாலும் அவிகிருதராம் போதும் நாமே வேணும் என்று பட்டர் அருளிச் செய்வார்
தம்மால் கருமம் என்?
தங்கள் ஸத்பாவத்தால் இஹ லோக பர லோகங்களில் கொண்ட பிரயோஜனம் என்
தங்கள் கருத்தால் கண்ட பிரயோஜனம் என்
சொல்லீர்,-தண் கடல் வட்டத்து உள்ளீரே!–
சதுஸ் சஹார பர்யந்த பூமியில் உள்ள நீங்கள் சொல்லி கோளே
இப்பூமியில் பிறந்தது பகவத் அனுபவத்துக்காக என்கை
ப்ரஹ்ம தேசத்தில் அப்பன் பிள்ளையோடு திருவாயமொழி கேட்ட போதை வார்த்தை நினைப்பது –

———————————————————————————————

தங்களுக்கு இடர் உண்டு என்றும் அறியாத சம்சாரிகளுடைய விரோதியைப் போக்கும் நீர்மையிலே
அகப்படாதார் மஹா பாபம் அபிபவிக்க பிறக்கிறவர்கள் என்கிறார் –

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.–3-5-2-

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
துஷ் ப்ரக்ருதிகள் நலிகைக்கு பண்ணும் அபகாரம் ஏக தேச வாஸித்வமான பாந்தவமே உள்ளது
தண் கடல் வட்டத்தில் உண்டு உடுத்து திரியுமதுவே ஹே துவாக –
தே வயம் பயதா ரஷ்யா பவத் விஷய வாஸின -என்று ஈஸ்வரனுக்கு ரஷிக்கைக்கு பற்றாசான அதுவே இவர்களுக்கு நலிகைக்கு பற்றாசு –
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
தங்கள் சரீர போஷணத்துக்கு உடலாக -கொன்று ஜீவிக்கும் –
திண் கழற்கால் அசுரர்க்குத்
திண்ணிய வீரக் கழலை ஹிம்ஸார்த்தமாக காலிலே இட்டு இருக்கும் அ ஸூ ரர்க்கு
ஏதத் வ்ரதம் மம-என்று ரக்ஷகன் தீஷித்து இருக்குமா போலே யாயிற்று இவர்கள் ஹிம்சையில் தீஷித்து இருக்கிற படி –
அவனுக்கு கிருபையால் யாயிற்று இவர்களுக்கு க்ரூர்யமும்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
மித்ர பாவேந-என்னுமவனும் -பவேயம் சரணம் ஹி வ -என்னுமவளாக இவர்களை முடிக்கும் விரகுகளை எண்ணா நிற்பார்கள்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பண்கள் உஜ்ஜவலமாம் படி -என்னுதல் -ஹர்ஷத்தாலே ஒரு பண்ணிலே எல்லாப் பண்ணும் கூடும்படி அடைவு கெடப் பாடி என்னுதல் –
பறந்தும் குனித்தும் உழலாதார்-
தரையிலே கால் பாவாதே ஆடி -இதுவே யாத்ரையாய்த் திரியாதார்
வல்வினை -மலைந்தே.-மோத –மண் கொள் உலகிற் பிறப்பார்-
மஹா பாபம் மேலிட்டு எற்றுகை யாயிற்று பிறவிக்கு பலம் –
பகவத் குணம் கேட்டால் இறுக்கு வாதம் வலித்து-அவிகிருதராய் இருப்பார்கள் –சாதுர்த்திகம் எடுத்து அறையும் போது செய்யலாவது இல்லையே –

————————————————————————————————–

உபகாரம் அறியாத பசுக்களுக்கும் தத் பிராயர்களுக்கும் வந்த ஆபத்தை நீக்கின மஹா குணத்தை அனுசந்தித்து
அவிகிருதரராய் இருக்குமவர்கள் நித்ய சம்சாரிகளாய்ப் போவார்கள் என்கிறார் –

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-

மலையை எடுத்துக் கல் மாரி-காத்துப்
இந்திரன் பசிக் கோபத்தால் கல் வர்ஷமாக வர்ஷிக்க -நம்மாலே வந்தது இ றே இது என்று தாம் ரக்ஷகமாக அருளிச் செய்த மலையை எடுத்து ரஷித்த படி –
அவனை அழியச் செய்ய வேண்டும் அபராதம் உண்டாய் இருக்க இயற்றி இல்லாதாரைப் போலே மலையைத் தரித்துக் கொடு நிற்பான் என் என்னில்
அநு கூலனுக்கு காதாசித்கமாக வந்ததாகையாலே அஸூரர்கள் திறத்து செய்யுமத்தை செய்ய ஒண்ணாது என்று இருந்தான் –
நீர் வர்ஷமாகில் கடலை எடுத்து ரக்ஷிக்குமாயிற்று –
பசு நிரை தன்னைத்-தொலைவு தவிர்த்த பிரானைச்-
உபகாரம் அறியாத பசுக்களுடைய வி நாசத்தை தவிர்த்த மஹா உபகாரகனை
பிரானை -அது தமக்கு உபகரித்தது என்று இருக்கிறார் –
சொல்லிச் சொல்லி-நின்று –
பத்த பரிகரஸ் தேந மோஷாய கமநமபிரதி சக்ருத்துச்சரிதம் யேந ஹரிரித்ய ஷரத்வயம் –என்று ஒரு கால் சொல்லி விடுவது பலார்த்தம் ஆகில் இ றே
எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்-தடு குட்டமாய்ப் பறவாதார்-
தலை தரையிலே தட்டப் பண்ணும் அங்க விகாரத்தை உடையராய் ஸம்ப்ராந்தர் ஆகாதார் –
அலை கொள் நரகத்து அழுந்திக்-கிடந்து உழக்கின்ற –
துக்கோர்மி பஹு லமான சம்சாரத்திலே புறப்பட விரகு அறியாத க்லேசிக்கிற நம்பர்
வம்பரே.–
எம படர்க்கு அபூர்வவத் ஆதரணீயர் ஆகை –
அப்பாவங்களுக்கு அபூர்வவத் லால நீயராய் இருக்கை
பகவத் குண அனுபவத்தில் அவிகிருதராய் இருக்கும் இருப்பு தானே நரக அனுபவம் என்றுமாம் –
புநரபி-
மலையை -இத்யாதி
ஆஸ்ரிதர் உடைய ஆபத்தில் அரியன செய்து ரக்ஷிக்குமவன்
பசு நிரை இத்யாதி
ரக்ஷணத்துக்கு வேண்டுவது ஆபத்தும் விலக்காமையும்
பிரானை –
தென்றல் தண்ணீர் போலே பரார்த்தமாய் இருக்குமவன்
சொல்லி இத்யாதி
அவாக்ய அநாதர -என்கிறவன் இப்படி விக்ருதனாய் ரக்ஷிக்கிற மஹா குணத்தை அனுசந்தித்து
அவிகிருதரராய் இருக்குமவர்கள் நித்ய சம்சாரிகளாய் போவார்கள் –
அவன் தன்னை தங்களுக்காக ஒக்கினால்-அவனுக்காக தங்களை ஒக்காதார் அவஸ்துக்கள் என்கை
தடு குட்டம் -குணாலை கூத்து –

—————————————————————————————————-

நப்பின்னைப் பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்த பிரணயித்தவ குணத்துக்கு ஈடு படாதவர்கள்
சாத்விகர் நடுவே என்ன பிரயோஜனத்துக்காக பிறந்தார்கள் -என்கிறார் –

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?–3-5-4-

வம்பு அவிழ் கோதை பொருட்டா
வம்பு -பரிமளம் / அவிழ்க்கை -அத்தைப் புறப்பட விடுகை / கோதை -மாலை / பொருட்டா -அவ்வொப்பனை அழகுக்கு தோற்று-தவாஸ்மி-என்றபடி
மால் விடை ஏழும் அடர்த்த
எருதுகளின் பெருமை கணிசிக்க ஒண்ணாதே பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை –
அவளை அணைக்கையில் த்வரையாலே க்ரமத்தால் அன்றிக்கே ஏழையும் ஒரு காலே ஊட்டியாக நெரித்த படி
செம் பவளத்திரள் வாயன்
இவளை அணைய பெறுகையால் உண்டான ஹர்ஷத்தாலே ஸ்மிதம் பண்ணினான்
எருதுகள் தனக்கு இரை போராமையாலே ஸ்மிதம் என்றுமாம் –
பவளத் திரள் போலே சிவந்து தோற்றின திருப் பவளத்தை உடையவன் –
சிரீதரன்
எருதுகளை நிரசித்து வீர லஷ்மியோடே நின்ற நிலை -பார்த்தாரம் பரிஷஸ்வஜே -என்று அவள் தான் வந்து அணைக்க வேண்டும்படி நின்ற நிலை
தொல் புகழ்
ஸ்வரூப அனுபந்தியான பிரணயித்தவ குணத்தை
பாடிக்
அந்தப்புரத்தில் உள்ளாரைப் போலே பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கும்பீடு நட்டம் இட்டுக் கூத்தாடி
கோகு உகட்டு உண்டு உழலாதார்
கோகு -அடைவு கேடு / உதட்டு -தலை மண்டையிட்டு / உண்டு -இதுவே ஜீவனம் ஆகி / உழலாதார்-அதுவே யாத்திரையாக இராதார்
தம் பிறப்பால் பயன் என்னே-சாது சனங்க ளிடையே?–
பகவத் குணங்களில் விக்ருதராய் வர்த்திக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே பிறந்த இத்தால் பெற்ற பிரயோஜனம் என் –
திருப்புன்னைக்கீழ் ஒருவர் இருக்குமிடத்திலே நம் முதலிகள் பத்துப்பேர் கூட நெருக்கிக்கொண்டிருக்கச்செய்தே, கிராமணிகள்,
மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து
நெருக்குமாறு போலேகாண்’ என்று பிள்ளைப்பிள்ளை ஆழ்வான் அருளிச்செய்வர்.–பிள்ளைப்பிள்ளை ஆழ்வான்– கூரத்தாழ்வான் சிஷ்யர்.-

——————————————————————————————

ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு திருவவதாரம் பண்ணின
குணத்தை அனுசந்தித்தால் அவிக்ருதமாய் இருக்குமவர்கள் அவஸ்துக்கள் என்கிறார் –

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-

சாது சனத்தை நலியும்-கஞ்சனைச் சாதிப்பதற்கு
சாது ஜனம் என்று நினைக்கிறது ஸ்ரீ வ ஸூ தேவரையும் தேவகி முதலானாரையும்
தான் அவதரிக்க நினைத்த ஸ்தலத்தில் நலிந்து நெடு நாள் சிறை வைத்துப் போந்த கம்சனை நிரசிக்கைக்காக
ஆதி அம் சோதி உருவை-அங்கு வைத்து இங்குப் பிறந்த
நித்தியமாய் அப்ராக்ருத தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹத்தை அங்கே இருக்கிற படியே தன் பக்கலிலே வைத்துக் கொண்டு இங்கே பிறந்த
வேத முதல்வனைப்
இப்படி வேத ப்ரதிபாத்யனானவனை –
அஜாயமானோ பஹுதா விஜாயதே –
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்ட்யாய சம்பவாமி
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்தி
பாடி
அவதரித்த பிரகாரத்தை ப்ரீதி பிரேரிதனாய் சொல்லி
தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோனிம்
பிறந்தவாறும் வளர்ந்தவாறும்
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓர் அளவில் நில்லாதே நெடும் தெருவோடு குறும் தெருவோடு வாசியற ஆடாதார் -மிளகு ஆழ்வான் வார்த்தை –
ஓதி உணர்ந்தவர் முன்னா
பரபரக்கற்ற அறிவுடையராக தங்களை நினைத்து இருக்குமவர்கள் ஞான பலம் இல்லாமையால் நிந்தியரில் பிரதம பாவிகள் என்கை –
விதுஷோ அதிக்ரமே தாண்ட பூயஸ்தம்
என் சவிப்பார்
எத்தை ஜெயிப்பது
மனிசரே?–
சாஸ்த்ர அதிகாரிகளும் அல்லர்
ஜெப பயனை அறியாமையால் ஜபமும் நிஷ்பலம்
சாஸ்த்ர ப்ரதிபாத்யனை அறியாமையால் சாஸ்த்ர அதிகார ஜென்மமும் அஸத் சமம் –
ஆன் விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –

—————————————————————————————-

ஈஸ்வரன் போக்யதையை அனுசந்தித்தால் விக்ருதர்கள் ஆவார்கள் ஆகில் –
அவர்கள் எல்லா அறிவின் பலமும் கை வந்தவர்கள் என்கிறார் –

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மற்றும் -என்கிறது தேவர்களை -/ முற்றும் என்கிறது திர்யக் ஸ்தாவரங்களை -ஸூ ர நர திரச்சாமவதரன்
மாயப் பிறவி பிறந்த
அத்யாச்சர்யமான பிறவி -ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே ஹேது உடையாருக்கும் அவ்வருகே பிறக்கை
தனியன் –
இவ்வாதாரங்களில் நீர்மைக்கு ஒருவரும் அகப்படாமையால் போம் போது தனியே போம் அத்தனை –
தாஸ்யம் ஐஸ்வர்ய வாதேன ஞானீ நாம் ச கரோம்யஹம் அர்த்த போக்தாச்ச போகா நாம்
பிறப்பிலி தன்னைத்
அநேக அவதாரங்கள் பண்ணின உபகாரத்தாலும் ஆஸ்ரிதற்கு ஒன்றும் செய்தானாய் இராது ஒழிகை
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
அவதரிக்கைக்கு உடலாக அவதார கந்தமான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற மஹா உபகாரகனை
வெல்லத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்ன கடவது இ றே
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்-கட்டியைத் தேனை அமுதை-
அதில் சாய்ந்த போதை அழகை அனுபவிக்கிறார் -கண்ட போதே நுகரலாய் -கோது கழிந்த ரசமாய் –
சர்வதோமுகமான போக்யமாய் ஆயாசிக்க வேண்டாத படி பருகலாம் படியாய் இனிமையே யன்றிக்கே சாவாமைக்கு மருந்துமாய் இருக்கை
முனிவு இன்றி
அவதாரம் ஆகிற மஹா குணத்திலே அநீஸ்வரத்வ தோஷத்தை அனுசந்திக்கிற அ ஸூ யையிலே இழியாதே-
முனிவு என்று முனித்வமாய்அவதாரத்தை அனுசந்தித்து தெளிவு உடையராய் அவிகிருதராகை இன்றிக்கே இருக்கை –
ஏத்திக் குனிப்பார்
வாசிக காயிகமான விக்ருதிகளை உடையராய் இருக்கை –
முழுது உணர் நீர்மையினாரே.–
முழுதும் உணர்ந்த ஸ்வ பாவத்தை உடையார் ஆவார்கள் –
ஒன்றுமே கற்றிலரே யாகிலும் -ஏக விஞ்ஞாநேந சர்வ விஞ்ஞானம் -என்கிறபடியே எல்லாம் அறிந்த பூர்த்தியை உடையவர்கள் –

——————————————————————————–

ஆஸ்ரித பக்ஷபாதம் ஆகிற மஹா குணத்தில் ஈடுபடாதே சரீர போஷண பரராய்த் திரிகிறவர்கள்
வைஷ்ணவர்களுக்கு எதுக்கு உறுப்பாக பிறந்தார்கள் என்கிறார் –

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-

நீர்மை இல் நூற்றுவர் வீய-ஐவர்க்கு அருள்செய்து நின்று-பார் மல்கு சேனை அவித்த-
பந்துக்கள் ஜீவிக்க வேணும் என்று இருக்கும் நீர்மை இல்லாதவர்கள்
-ஒரு முடகுத்தும் கொடோம்-பந்துக்கள் ஜீவிக்கில் ஜீவியோம் -என்றார்கள் இ றே -நிர்க்ருணர் ஆகையால் –
ஆஸூ ர பிரக்ருதிகள் என்று நூற்றுவரும் முடியும் படி பாண்டவர்களுக்கு அருள் செய்து -கிருஷ்ணாஸ்ரயா-என்கிறபடியே
தன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இ றே அவர்கள் இருப்பது
யேஷா மர்த்தே காங்ஷிதம் ந -என்று இ றே இத்தலையில் நீர்மை இருப்பது
யஸ்ய மந்த்ரீச கோப்தாச-என்று தானே அவர்களுக்கு எல்லாமாய் நின்றபடி
பூமிக்கு பாரமாம்படி மிக்க சேனையை எல்லாம் விளக்கு வைத்தால் போலே அநாயாசேன முடித்த படி
பரஞ் சுடரை நினைந்து ஆடி-நீர் மல்கு கண்ணினர் ஆகி-நெஞ்சம் குழைந்து நையாதே-ஊன் மல்கி மோடு பருப்பார்-
சேனா தூளியும்-முட் கோலும் சிறு வாய்க் கயிறுமாய் சாரத்ய வேஷத்தோடே நின்ற அழகை உடையவனை
ஆஸ்ரித அர்த்தமாக நின்ற இவன் வியாபாரத்தை நினைத்து விக்ருதராய் ஆடி -ஆஹ்லாத சீத நேத்ராம்பு -என்று
ஆனந்த ஸ்ருவை இட்டு நிரூபிக்க வேண்டும்படி அகவாயும் நெகிழ்ந்து சிதிலராகாதே மாம்சளமாய்
பிசல் பருத்து இருக்கும் படி சரீர போஷண பரராய் இருக்கிறவர்கள் –
உத்தமர்கட்கு என் செய் வாரே!–
பகவத் குண அனுசந்தானத்தாலே வார்ந்து வடிந்த சரீரங்களை உடைய வைஷ்ணவர்களுக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு உறுப்பு ஆகிறார்களோ
வைஷ்ணவர்களுக்கு உறுப்பாம் அதுவே ஜன்மத்துக்கு பிரயோஜனம் என்கிறார்
-ஈஸ்வரன் தன்னையும் தன் விபூதியையும் ததீயா சேஷம் ஆக்கி இ றே வைப்பது-

———————————————————————————

திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுமவர்களை கொண்டாடுகைக்கு நாம் யார் –
நித்ய ஸூ ரிகள் அன்றோ அவர்களைக் கொண்டாடுமவர் -என்கிறார்

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.–3-5-8-

வார் புனல் அம் தண் அருவி-வட திரு வேங்கடத்து எந்தை-
வீழா நின்ற புனலை உடைத்தாய் தர்ச நீயமாய் சிரமஹரமான திரு அருவியை உடைத்தாய் வடக்கே யான திருமலையில்
நின்று அருளி என்னை அடிமை கொண்ட திருவேங்கடமுடையானுடைய
பேர் பல சொல்லிப்
விபூதி விஷயமாகவும் ஸ்வரூப ரூப குண விஷயமாகவும் தாம் புகழு நல் ஒருவனில் -அனுபவித்தவற்றை நினைக்கிறார் –
பிதற்றிப்
அக்ரமமாகவும் சொல்லி
பித்தர் என்றே பிறர் கூற
பூமி என்கோ எண்ணா -கண்ணனை க் கூவுமாறே -என்னா நின்றார் -வ்யாஹதமாய் இரா நின்றதீ -பிராந்தரோ -என்று
என்னைச் சொல்லுமா போலே தங்களையும் கண்டார் கண்ட இடத்தே சொல்லும் படி –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்கீகாரத்தில் காட்டிலும் அவைஷ்ணவர் நிந்தையே உத்தேச்யம் என்று இருக்கிறார்
மிளகு ஆழ்வான் அகரம் பெற போன இடத்தில் வார்த்தை
பேயரே எனக்கு யாவரும் -இத்யாதி
ஊர் பல புக்கும் புகாதும்-உலோகர் சிரிக்க நின்று ஆடி-
மனுஷ்ய சந்நிதத்தோடு அ சந்நிதத்தோடு வாசி அற -விசேஷஞ்ஞர் உள்ள இடத்தோடு இல்லாத இடத்தோடே வாசி அற
லௌகீகர் சிரிக்க அதுவே தளமாக நின்று ஆட
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அபி நிவேசம் மிக்கு விக்ருதரமாவார்கள்
அமரர் தொழப்படுவாரே.–
பகவத் அனுபவத்தால் களித்து-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்னுமவர்களாலே கொண்டாடப் படுவார்கள்

————————————————————————————-

சீலாதி குண விசிஷ்டனான இவனை விட்டு ஆத்மமாத்ரத்தையே விரும்புகிற கேவலரை நிந்தித்து மற்று உள்ளார் எல்லாரும்
பிரேம பரவசராய் பகவத் குணங்களை அனுபவிக்கும் இதுவே புருஷார்த்தம் என்கிறார் –

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .–3-5-9-

அமரர் தொழப் படுவானை-
நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான பெருமையை உடையவனை
அனைத்து உலகுக்கும் பிரானை-
நித்ய விபூதியோடு லீலா விபூதியோடு வாசி யற சர்வ லோகேஸ்வரனை
அமர மனத்தினுள் யோகு-புணர்ந்து
அவனை நெஞ்சிலே உற்று இருக்கும் படி யோக அப்பியாசம் பண்ணி
அவன் தன்னோடு ஒன்றாக-அமரத் துணிய வல்லார்கள்-ஒழிய
சரம தசையில் அவனோடே சாம்யத்தை பிராபிக்க வேணும் என்று ஆத்ம மாத்ரத்தையே விரும்பும் சாஹசிகரை ஒழிய –
சாம்யம் ஆகிறது சுத்தி யோகத்தால் வந்த சாம்யம் –
ஒன்றாக வென்று சாம்யத்தை சொன்னபடி என் என்னில் –
பஜத்யேகத்வ மாஸ்த்தித-என்று அருளிச் செய்ய -சாம்யேன மது ஸூதன -என்று அநு பாஷித்தான் இ றே
அங்கண் இன்றிக்கே இது தான் வி லக்ஷண அதிகாரிகளை சொல்லிற்றாய் -அல்லாதவர் என்று அத்தனை அளவன்றிக்கே இருக்கிற
யாத்ருச தாத்ருஸரை இங்கனே செய்யுங்கோள் என்றது ஆனாலோ என்னில்
ஓதி உணர்ந்தவர் என்று -வி லஷணரையும் நிந்தித்து -முழுது உணர் நீர்மையினார்-என்று ஒன்றும் கற்றிலர்களே யாகிலும்
விக்ருதியை உடையார் சர்வஞ்ஞர் என்றும் கொண்டாடிப் போருகிற பிரகரணம் ஆகையால் அங்கண் ஆக ஒண்ணாதே
அல்லாதவர் எல்லாம்
கைவல்யத்தில் அகப்படாதே பகவத் குண ஜிதரானார் எல்லாரும்
அமர நினைந்து –
பகவத் குணங்களை நெஞ்சிலே உற்று இருக்கும் படி ஸ்வயம் பிரயோஜனமாக அநு சந்தித்து
எழுந்து ஆடி அலற்றுவதே கருமம்மே.–
கிளர்ந்து ஆடி -அக்ரமமாகச் சொல்லுவதே பிரயோஜனம் –

————————————————————————————-

கேவலரை நிந்தித்தார் கீழில் பாட்டில் -இதில் அநந்ய பிரயோஜனர் எல்லாம் பகவத் குணங்களை
பக்தி பாரவஸ்யத்தாலே அக்ரமமாக பேசுங்கோள் -என்கிறார்

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10-

கருமமும் கரும பலனும்-ஆகிய –
புண்ய பாப ரூபமான கர்மங்களுக்கும் நியந்தாவாய் -கர்ம பலன்களும் நியந்தாவாய்
காரணன் தன்னைத்-
காரணந்து த்யேய-என்கிறபடியே ஸமாச்ரயணீயன் ஆனவனை
திரு மணி வண்ணனைச்
உபாசிப்பார்க்கு சுபாஸ்ரயமான வடிவை உடையவனை –
-திரு என்று காந்தி -காந்தியை உடைத்தான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை
செங்கண்-மாலினைத் –
ஸமாச்ரயணீயன் புண்டரீகாக்ஷன் இ றே
தேவ பிரானை
இவ்வடிவு அழகையும் கண் அழகையும் நித்ய ஸூ ரிகளை அனுபவிப்பிக்குமா போலே என்னையும் அனுபவிப்பித்தனே –
ஒருமை மனத்தினுள் வைத்து-உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்-பெருமையும் நாணும் தவிர்ந்து-பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.-
ஒருபடிப்பட நெஞ்சிலே வைத்து -அநந்ய ப்ரயோஜனராய் ஹ்ருதயத்தில் வைக்கை-
ஒரு பலத்துக்காக அன்றிக்கே நெஞ்சு சிதிலமாய் ப்ரீதியாலே கிளர்ந்து ஆடி அபிமாநக்ருத்யமான பெருமையையும் நின்றார் எதிரே
விக்ருதராக ஒண்ணாது என்கிற லஜ்ஜையையும் இத்தைத் தாழ்வாக நினைக்கும் மதி கேட்டையும் தவிர்ந்து அக்ரமமாக ஏத்துங்கோள்-
புகழு நல் ஒருவனில் விபூதியாக ததீயத்வ ஆகாரேண உத்தேச்யமாக அநு சந்தித்தார்
இங்கு சிலரை நிந்தித்து சிலரை கொண்டாடினார் –
இத்தால் சொல்லிற்று யாய்த்து -அவன் சர்வ சேஷி யாகையாலே சர்வமும் ததீயமாக தோற்ற கடவது
அந்த சேஷித்வத்தை குறைவற அனுசந்தித்தார் அங்கு
தம்முடைய சேஷத்வத்தை அனுசந்தித்தவாறே அஞ்ஞர் புறம்பாய் பகவத் குண ஜிதர் உள்ளாராய்த் தோற்றிற்று-
அந்த சேஷத்வத்தை குறைவற அனுசந்தித்தார் இங்கு –

——————————————————————————————

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு-பகவத் குண அனுசந்தானத்தால் ஒரு விக்ருதி
பிறவாமை யாகிற மஹா பாபத்தை இது தானே நிச்சேஷமாகப் போக்கும் என்கிறார் –

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-

தீர்ந்த அடியவர் தம்மைத்-திருத்திப் பணிகொள்ள வல்ல-
அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யாவசித்த ஆஸ்ரிதரை பிரதிபந்தகங்களைப் போக்கி அடிமை கொள்ளும் சக்தியை உடையவன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருப்பாரை-க்ரியதாம் இதி மாம் வத-என்று அடிமை கொள்ளும் என்றுமாம்
ஆர்த்த புகழ்அச் சுதனை
மிக்க புகழ் -அடிமையில் நழுவ விட்டுக் கொடாதவனை
அமரர் பிரானைஎம் மானை
நித்ய ஸூ ரிகளை கொள்ளும் அடிமையை ஆசா லேசம் இல்லாத என்ன கொண்டு அருளினவனை
வாய்ந்த
கிட்டின -பகவத் குணங்களில் அவிக்ருதரை நிந்தித்து விக்ருதரைக் கொண்டாடும்படி தாம் இவ்விஷயத்தில் உள்புகுந்த படி
வளவயல் சூழ்தண்-வளம் குரு கூர்ச்சட கோபன்
வயலுக்கும் நகரத்துக்கும் சொல்லும் சிறப்பு எல்லாம் உண்டாய் இருக்கை –
நேர்ந்த
சொன்ன
ஓர் ஆயிரத்து இப் பத்தும்-
அரு வினை நீறு செய்யுமே.–
பகவத் குணங்களை கேட்டால் அவிகிருதரராய் இருக்கைக்கு அடியாகிற மஹா பாபத்தை போக்கும் –

————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: