திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-4–

தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு
பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால்
பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ் ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும்
செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும்
ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து
ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே
ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்-
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும்
கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும்
விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும்
விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால்
அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –

————————————————————————————————————————–

முதல் பாட்டில் இது திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

புகழும் நல் ஒருவன் என்கோ!
சுருதி ஸ்ம்ருதி யாதிகளால் புகழப் பட்ட நன்மையை உடையனான அத்விதீய புருஷன் என்பேனோ
என்கோ என்கிறது என்பேனோ என்றபடி
பிள்ளான் -சர்வைஸ் சம்ஸ் தூயமாநன் -என்பேனோ என்னும் –
கீழ்ச சொன்ன குண யோகத்தால் வந்த வை லக்ஷண்யத்தோடு ஓக்க விபூதி யோகம் சொல்லுகிறது மேல் –
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
ஒப்பில்லாத க்ஷமாதி குணங்களை உடைய பூமி என்பேனோ -பொரு-ஒப்பு
திகழும் தண் பரவை என்கோ-தீ என்கோ! வாயு என்கோ!-
காரணத்தவத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தையும் குளிர்த்தியையும் உடைத்த ஜல தத்வம் –தத் காரணமாய் ஊர்த்தவ ஜலனமான அக்கினி -தத் காரணமான வாயு –
நிகழும் ஆகாசம் என்கோ!-
நிகழுகையாவது -வர்த்திக்கை
இதர பூதங்களுக்கு முன்னே ஸ்ருஷ்டமாய் இவை ஸம்ஹ்ருதம் ஆனாலும் சில நாள் நிற்கும் என்னுதல்-
தன்னை ஒழிந்தவை தன்னுள்ளே வர்த்திக்கும் படியாய் இருக்கும் என்னுதல் –
நீள் சுடர் இரண்டும் என்கோ!
மிக்க ஒளியை உடைய சந்த்ர சூ ர்யர்கள் என்பேனோ –
கார்ய வர்க்கத்துக்கு உப லக்ஷணம்
தாபத்தை ஆற்றுகைக்கும் -நீர்க் களிப்பை அறுக்கைக்கும் உறுப்பான சந்த்ர சூ ர்யர்கள்
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!-
ஓன்று ஒழியாமே எல்லாம் என்னுதல் -உபாதேய தமமான எல்லாம் என்னுதல் –
கண்ணனைக் கூவு மாறே.-
அர்ஜுனன் -ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்றத்தோடு -பூமி -என்றத்தோடு வாசி அற்று இருக்கிறது இ றே-

—————————————————————————————————————-

கார்ய வர்க்கத்தை சொல்லுகிறது –

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-

கூவுமாறு அறிய மாட்டேன்,
பக்தி பாரவசியத்தாலே-பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டேன் என்னுதல் –
இயத்தா ராஹித்யத்தாலே சொல்ல மாட்டேன் என்னுதல் அல்லது அர்த்தங்களில் அவிசதமாய் இருப்பது ஓன்று உண்டாய் சொல்லுகிறார் அல்லர்
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
கீழ்ச் சொன்ன பூமி என்கோ என்கிறதின் காரியமாய் -அதனுடைய காடின்யம் திரண்டால் போலியாய் -பூமிக்கு தாயகமான பர்வதங்கள் என்பேனோ
மேவு சீர் மாரி என்கோ!
திகழும் தண் பரவையினுடைய கார்யம் -வடிவு அழகாலும் குளிர்த்தியாலும் எல்லாராலும் மேவப்படும் ஸ்வபாவத்தை உடைய மேகம் என்பேனோ
இவருக்கு இரண்டு ஒரு காரியமாக இருக்கிறது இ றே திருமேனிக்கு போலியாய் இருக்கையாலே
விளங்கு தாரகைகள் என்கோ!
தீ என்கோ என்கிறதன் கார்யம் –விளக்கத்தை உடைய நக்ஷத்ராதிகள் –
நாவியல் கலைகள் என்கோ!
வாயு என்கோ என்கிறதன் கார்யம் -நாவால் இயற்றப் பட்ட சதுஷ்ஷட்டி கலைகள் –
வாயு கார்யம் -பிரயத்தனம் -பிரயத்தன அபிவியங்கம் இ றே வித்யை -ஆகையால் சொல்லுகிறது –
ஞான நல் ஆவி என்கோ!
நிகழும் ஆகாசம் என்றதன் கார்யம் -ஞானத்துக்கு சாதனமான சப்தம் –ஆவி என்று லக்ஷணையால் சரீரத்தை சொல்லுகிறது
ஞான சரீரம் என்று ஞான சாதனமான சப்தத்தை சொல்லுகிறது
குண வாசி சப்த்தத்தாலே குணியை நினைக்கிறது
நல்லாவி என்று இந்திரியங்களை வியாவ்ருத்திக்கிறது
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பரந்த குணங்களை உடைய கிருஷ்ணன்
பங்கயக் கண்ண னையே.–
தன் கண் அழகால் என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனை –

—————————————————————————————————-

அசாதாரணமான விக்ரகத்தை அனுபவிக்கிறார் -விபூதியின் நடுவே திவ்ய மங்கள விக்கிரகத்தை சொல்லுகிறது –
விபூதியும் திருமேனியோபாதி தகுதியாய் இருக்கும் என்னும் இடம் தோற்றுகைக்காக –

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

பங்கயக் கண்ணன் என்கோ!
கிட்டினாரோடு முதல் உறவு பண்ணும் கண்
பவளச் செவ் வாயன் என்கோ!
கண் அழகிலே துவக்கு உண்டாரை ஆதரித்து ஸ்மிதம் பண்ணும் போதை திரு அதரத்தின் பழுப்பை அனுபவிக்கிறார் –
அங் கதிர் அடியன் என்கோ!
நோக்குக்கும் முறுவலுக்கும் தோற்றார் விழும் திருவடிகள் –
அஞ்சன வண்ணன் என்கோ!
திருவடிகளில் விழுந்தார்க்கு அநு பாவ்யமாய் -சிரமஹரமாய் ஸூபாஸ்ரயமான வடிவு
செங் கதிர் முடியன் என்கோ!
அனுபவிக்கிற விஷயம் பிராப்தமுமாய் சர்வாதிகமுமாய் இருக்கிற படியை கோள் சொல்லித் தருகிற திரு அபிஷேகம் -செம்மை -அழகு
திரு மறு மார்பன் என்கோ!
அவன் ஸ் வா தந்தர்யத்தைக் கண்டு அகல வேண்டாத படியான லஷ்மீ சம்பந்தத்தை சொல்லுகிறது
திருவையும் மறுவையும் உடைய மார்பை உடையவன்
சங்கு சக்கரத்தின் என்கோ
இவர்கள் சேர்த்திக்கு என் வருகிறதோ என்று பயப்பட வேண்டாத படி ஆழ்வார்களை உடையவனை
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்னா
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்னக் கடவது இ றே
சாதி மாணிக்கத்தையே!–
ஆகரத்தில் பிறந்ததாய் பெரு விலையனான ரத்னம் போலே சிலாக்கியமான திரு மேனியை உடையவன்
நிர்த்தோஷமாய் சகஜமான அழகை உடையவன் என்கை –

————————————————————————————————-

தேஜோ விசிஷ்டமான மாணிக்யாதி பதார்த்தங்களை விபூதியாக உடையனான படியைப் பேசுகிறார்
வேதாந்த வ்யுத்பத்தி பிறந்தால் -யத்யத் விபூதிமத் சத்தவம் ஸ்ரீமதூர்ஜ் ஜிதமேவ வா -என்கிறபடியே
ஸ்வ தந்திரம் அன்றிக்கே சகல பதார்த்தங்களும் அவனுக்கு விபூதியாகத் தோற்றுகையாலே அருளிச் செய்கிறார் –

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-

சாதி மாணிக்கம் என்கோ!
ஆகாசத்தில் பிறந்த மாணிக்கம் என்பேனோ
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
புகர் விஞ்சின பொன் என்பேனோ -நீர்மை மிக்க முத்து என்பேனோ
சாவி என்று பொன்னிலே யான போது புகராய் -முத்திலே ஆனபோது நீர்மையாய் கடவது –
சாதி நல் வயிரம் என்கோ!
ஆகரத்தில் பிறந்த நன்றான வைரம்
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
விச்சேதம் இல்லாத நன்றான விளக்கம் என்பேனோ –
விளக்கம் என்று அந்த தீபத்தின் உடைய பிரகாச அம்சத்தை சொல்லிற்று ஆகவுமாம்
ஆதி அம் சோதி என்கோ!
ஜகத் காரணமாய் நிரவதிக தேஜோ ரூபமான பரமபதம் –
காரியாணாம் காரணம் பூர்வம் -அத்யாக்கா நல தீபம் –
ஸ்ரீ கௌஸ்துபத்தைப் பற்றி ஜீவ சமஷ்டியும்-ஸ்ரீ வத்ஸத்தைப் பற்றி அசேதனமும் கிடைக்கும் என்கிற
அஸ்திர பூஷண அத்யாய க்ரமத்தாலே திருமேனியைச் சொல்லிற்று ஆகவுமாம்
ஆதி அம் புருடன் என்கோ!
சர்வ காரணமாய் அத்தேசத்திலே எழுந்து அருளி இருக்கிற புருஷோத்தமன்
ஆதும் இல் காலத்து எந்தை
எனக்கு ஒரு துணை அல்லாத சம்சார அவஸ்தையில் தன்னோடே உண்டான சம்பந்தத்தை அறிவித்தவன்
அச்சுதன் அமலனையே.
என்னை நழுவ விடாதவன்
இந்தச் செயல் ஒரு பிரயோஜனத்துக்காக அன்றிக்கே தன் பேறாகச் செய்தவன்
அன்றிக்கே பிரளய காலத்தில் தன் ஸ்வாமித்வ ப்ராப்தியாலே இவை நழுவாமே தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நின்று
தத்கத தோஷை அச்மஸ்ப்ருஷ்டனாய் நிற்கிறவன் என்றுமாம் –

———————————————————————————————-

ரஸவத் பதார்த்தங்கள் அவனுக்கு விபூதி என்கிறார் –

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—

அச்சுதன் அமலன் என்கோ!
அச்சுதன் என்கிறது பரமபதத்தில் இருப்பை –
அமலன் ஹேய ப்ரத்ய நீகனாய் கல்யாண குணகனாய் இருக்கும் என்கை –
அடியவர் வினை கெடுக்கும்
தன் பக்கலிலே நிஷிப்பத பரராய் இருப்பார் உடைய சகல துரிதங்களையும் போக்குபவன்
தூரஸ்தன் என்று கூசாதே விசுவசிக்கலாம் படி மடுவின் கரையில் ஆனைக்கு வந்து உதவுகை
நச்சு மா மருந்தம் என்கோ!
நச்சப்படும் மஹா ஒளஷதம்
மா மருந்தம் -வியாதியின் அளவு இன்றிக்கே இருக்கை-அபத்ய ஸஹமான ஒளஷதம் –
நலம்கடல் அமுதம் என்கோ!
கடைய வேண்டாதே-கடலிலே கிடக்கிற அமுதம்
அச்சுவைக் கட்டி என்கோ!
கீழ்ச சொன்ன அம்ருதத்தின் சுவையை உடைய கருப்புக் கட்டி
அறுசுவை அடிசில் என்கோ!
ஷட்ரஸ யுக்தமான அடிசில்
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
சுவையை உடைய ணெய் என்பேனோ -சுவையை உடைத்தான் மது என்பேனோ
கனி என்கோ! பால்என் கேனோ!–
கனி – ஓர் அவஸ்தையில் ரசிக்குமது
பால் -நை சர்க்கிகமான ரசம் –

————————————————————————————-

வேதம் தொடக்கமான இயலும் இசையுமான சப்த ராசியை விபூதியாக உடையனாய் இருக்கிற படியை பேசுகிறார் –

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ

பால் என்கோ!-
முன்புத்தை ரசம் பின்னாட்டுகிற படி
நான்கு வேதப்பயன் என்கோ!
பிரமாண ஜாதத்தில் சார பூதமான நாலு வேதம்
சமய நீதிநூல் என்கோ!
வைதிக சமயத்துக்கு நிர்வாஹகமான சாஸ்திரம் -வேத உப ப்ரும்ஹணமான இதிஹாச புராணாதிகள்
நுடங்கு கேள்வி-இசை என்கோ!
ஸ்ரவண மாத்திரத்திலே ஈடுபடுத்த வல்ல இசை
இவற்றுள் நல்ல-மேல் என்கோ!
இவற்றிலும் வி லக்ஷணமான போக்யம் என்பேனோ
வினையின் மிக்க-பயன் என்கோ!
அல்ப யத்னத்தாலே நிரதிசய பலத்தை தருமது என்பேனோ
சாதன ரூபமான யத்னத்து அளவில்லாத அதி மாத்ர பலம் என்பேனோ
மித்ர பாவம் அடியாக யாவதாத்ம பாவியான அநுபவித்தை தரும் என்கை –
கண்ணன் என்கோ!
உனக்கு நான் உளேன் -மா ஸூ ச –நீ சோகியாதே கொள்-என்னுமவன் என்பேனோ
மால் என்கோ!
ஆச்ரித விஷயத்தில் வ்யாமுக்தன் என்பேனோ
மாயன் என்கோ
தூத்ய சாரத்யங்கள் பண்ணும் ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்பேனோ
வானவர் ஆதி யையே.–
ப்ரஹ்மாதிகளுக்கும் சத்தா ஹேது வானவனை –
தன் சத்தை ஆச்ரித அதீனையாய் இருக்கும் என்கை –

——————————————————————————–

ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்கள் எல்லாவற்றையும் விபூதியாய் உடையனாய் இருக்கிற படியை பேசுகிறார் –

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-

வானவர் ஆதி என்கோ!
நித்ய ஸூ ரிகளுக்கு சத்தா ஹேது என்பேனோ
வானவர் தெய்வம் என்கோ!
அவர்களுக்கு சூட்டு நன் மாலை படையே ஆராத்யன் என்பேனோ
வானவர் போகம் என்கோ!-வானவர் முற்றும் என்கோ!-
அவர்களுக்கு உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் ஆனவன்
முற்றும் -அனுக்தமான சர்வவித பந்துவும்
ஊனம்இல் செல்வம் என்கோ!
அனஸ்வரமான சம்பத்து
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
த்வம்ச என்னாதே ஆகல்பாவ சானமான சுவர்க்கம்
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஆத்ம அனுபவம் மாத்திரம் அன்றிக்கே பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம்
ஒளிமணி வண்ண னையே!
சிலாக்கியமான மணி போலே இருக்கிற திரு நிறத்தை உடையவனை
வி லக்ஷணமான அழகை உடையவன் என்கை
கீழ்ச சொன்னவையோடே இவ்வழகோடு வாசி யற அனுபவிக்கிறார் –

————————————————————————————–

பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளை விபூதியாக உடையானுடைய படியை அருளிச் செய்கிறார் –

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-

ஒளி மணி வண்ணன் என்கோ!
கீளில் வடிவு அழகு பின்னாடுகிற படி
ஒருவன் என்று ஏத்த நின்ற
தம பிரசுரராய் இருப்பார் அத்விதீயன் என்று ஏத்தா நின்றால்-தான் ஈஸ்வரனாக பிரமித்து ஆசிரயணீயனாய் இருக்கும் –
நளிர் மதிச் சடையன் என்கோ!
அது பிரமம் என்னும் இடத்தைக் காட்டுகிறது -சாதக வேஷமும் -போக ப்ராதான்யமும் -நளிர் மதி -குளிர்ந்த சடையன்
நான் முகக் கடவுள் என்கோ!
அவனுக்கு ஜனகனான சதுர்முகனான தைவம்-
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்-படைத்து அவை ஏத்த நின்ற
கிருபையை உகந்து -ஸ்ருஷ்ட்யாதி ரக்ஷணத்தை உகந்து –
லோகத்தை எல்லாம் ஸ்ருஷ்டித்து -அந்த ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் பெற்று அவர்கள் ஏத்தும் படி நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்-
தேனையையும் மலரையும் உடைய திருத்த துழாயாலே அலங்க்ருதனாய் -அத்தாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன்-களி -தேன்
கண்ணனை மாயனையே.–
எத்திறம் என்று மோஹிக்கும் படியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணனை –

———————————————————————————————

நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே-என்று அவன் படிகள் என்னால் பேச முடியாது
கார்ய காரண உபய அவஸ்தமான சகல சேதன அசேதனங்களும் அவனுக்கு விபூதி என்று
பிரயோஜகத்தில் சொல்லலாம் அத்தனை என்கிறார் –

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-

கண்ணனை மாயன் றன்னைக்
ஸுலப்யமும்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களும் பின்னாடுகிற படி
கடல் கடைந்து அமுதம் கொண்ட-அண்ணலை –
ஷூத்ர பிரயோஜனத்தை அபேக்ஷித்தார்கள் என்னாதே உடம்பு நோவ கடல் கடைந்து அவர்கள் பிரயோஜனத்தை கொடுக்கும் ஸ்வாமியை
அச்சு தன்னை
அநந்ய பிரயோஜனராய் கிட்டினாரை துக்க சாகரத்தில் நழுவ விடாதவனை
அனந்தனை
ஸ்வரூப ரூப குணங்களுக்கு எல்லை இல்லாதவனை
அனந்தன் றன்மேல்-நண்ணி நன்கு உறைகின்றானை
அபரிச்சின்னனான தன்னையும் விளாக்குலை கொள்ள வல்ல அவன் மேலே கிட்டி நாய்ச்சிமாறாலும் எழுப்ப ஒண்ணாதபடி கண் வளர்ந்து அருளுகிறவனை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
ஆபத்து கண்டால் படுக்கையில் பொருந்தாதே ரக்ஷிக்கும் சர்வேஸ்வரனை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
இவன் படிகளுக்கு என்னால் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது
யாவையும் எவரும் தானே.–
சேதன அசேதனங்கள் உடையான் என்று பிரயோஜகத்தை சொல்லலாம் அத்தனை -என்கிறார் –

————————————————————————————————–

சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மா தயா வியாபித்து நின்றால் தத்கத தோஷை அச்மஸ்ப்ருஷ்டனாய் இருக்கும் –

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-

யாவையும் எவரும் தானாய்-அவர் அவர் –
சகல சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மாவாய் அவற்றினுடைய துக்கித்தவ பரிணாமித்வங்கள் தட்டாத படி யாய் இருக்கிறவன் –
சமயந் தோறும்-தோய்வு இலன்;
அசித்துக்கு பரிணாமித்வமும்-தத் ஸம்ஸ்ருஷ்ட சேதனனுக்கு துக்கித் வாதிகளும் வியவஸ்திதம் என்கை
புலன் ஐந்துக்கும்-சொலப்படான்;
சஷூராதி கரணங்களுக்கு விஷயமாகச் சொல்லப் படான் -அவற்றால் அறியப் படான் என்கை –
உணர்வின் மூர்த்தி;
ஞான ஸ்வரூபன்
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆவி என்று சரீரம் -அத்தோடு சேர்ந்த ஆத்மாவில் சரீரத்தில் உண்டான பரிணாமித்வாதி தோஷங்கள் தட்டாது என்கிற
விவேக அனுசந்தானம் ஆத்மாவின் பக்கலிலே கூடுமாகில் –
உள்ளால்-உள்–ஆல்-அசை-உள் -உள்ளே
ஆதும் ஓர் பற்று இலாத
ஏதேனும் ஒரு தொற்று இல்லாத
பாவனை அதனைக் கூடில்,
அதனை -ஆத்மாவை -ஆத்மாவின் பக்கலிலே என்றபடி
அவனையும் கூட லாமே.–
அசித் கத பரிணாமாதிகளும் -சேதன கதமான துக்கத்வாதிகளும் தட்டாது என்கிற இதுவும் சர்வேஸ்வரன் பக்கலிலே கூடலாம்
இப்பாட்டில் பக்தி உடையோருக்கு அவனைக் கிட்டலாவது என்கிறார் என்பாரும் உண்டு –
இதர விஷய சங்கம் அற்றார்க்கு அவனைக் கிட்டலாவது என்கிறார் என்பாரும் உண்டு
அந்திம ஸ்ம்ருதி உடையோருக்கு கிட்டலாம் என்பாரும் உண்டு
சர்வாத்ம பாவம் சொல்லி நிற்கையாலே அவற்றின் பக்கல் தோஷம் தட்டாதான் ஒருவன் என்னும் இடம்சொல்ல வேணும்-
அத்தை சொல்லுகிறது என்பர் எம்பெருமானார் –

—————————————————————————————————

இப்பத்தைக் கற்றவர்கள் நித்ய கைங்கர்யத்தை பெற்று நித்ய ஸூ ரிகளால் விரும்பப் படுவர் -என்கிறார் –

கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-

கூடிவண்டு அறையும் தண்தார்க்-கொண்டல்போல் வண்ணன் றன்னை-
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே வண்டுகள் திரண்டு மது பானம் பண்ணி த்வநிக்கிற தோள் மாலையையும்
வர்ஷூக வலாகஹம் போலே சிரமஹராமான வடிவையும் உடையவனை யாய்த்து கவி பாடிற்று
கீழ்ச் சொன்ன விபூதி தோள் மாலையோ பாதி தகுதியாய் இருக்கும் என்றதாய்த்து
மாடுஅலர் பொழில் குருகூர்-வண்சட கோபன் சொன்ன
பர்யந்தம் ஆடிய அலர்ந்த பொழிலை உடைய திரு நகரி
பாடல்ஓர் ஆயி ரத்துள்-
பாடல் கானம் -புஷபம் பரிமளத்தோடே அலருமா போலே இசை முன்னாகத் தோற்றின ஆயிரம்
இவையும்ஓர் பத்தும் வல்லார்-வீடுஇல போகம் எய்தி
விச்சேதம் இல்லாத கைங்கர்ய போகத்தை பெற்று
விரும்புவர் அமரர் மொய்த்தே.
நித்ய ஸூ ரிகள் சூழ்ந்து கொண்டு ஆதரிக்கும் படி ஆவர்
ததீயத்வ ஆகாரேண லீலா விபூதியை அநுஸந்திக்குமது தங்களதே யாகையாலே இங்கேயே இருந்து இவ் வனுசந்தானம் உடையார் சென்றால் ஆதரிப்பார்கள் –

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: