திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-2–

பெரு விடாய் பட்டவன் சேர்ந்த தண்ணீர் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆஸ்யம் பிஹிதமானால் துடிக்குமா போலே
தமக்கு போக்யமான விஷயம் சந்நிஹிதமாய் விடாயும் மிக்கு இருக்கச் செய்தே
அபரிச்சின்ன விஷயம் ஆகையால் பரிச்சேதித்து அனுபவிக்க ஒண்ணாது ஒழிய
இது விஷய ஸ் வ பாவத்தால் வந்தது -நித்ய அனுபவம் பண்ணுவார்க்கும் ஒக்கும் இது என்று அறியாதே
கரண சங்கோச நிபந்தனம் என்று பார்த்து அவசன்னராய்
இப்பிரக்ருதி சம்பந்ததும் அற்று உன்னை பெறுகைக்காக நீ பண்ணின ஜகத் ஸ்ருஷ்டியும் ஸ்ருஷ்ட ஜகத்தில் நீ பண்ணின
அநேக அவதாரங்களும் எனக்கு கார்ய கரம் ஆயிற்று இல்லை -இனி நான் இழந்தே போம் அத்தனை ஆகாதே என்று
நை ராஸ்யத்தோடே முடிய புக-ஈஸ்வரன் வந்து முகம் காட்டி
நீர் இங்கனே படுகிறது என்-நித்ய அனுபவம் பண்ணுவார்க்கும் உள்ளது ஓன்று காணும் -இவ்வுடம்போடே நீர் அனுபவிக்க அன்றோ நாம் இங்கு வந்து நிற்கிறது
என்று வடக்குத் திருமலையில் நின்று அருளின படியை காட்டி சமாதானம் பண்ண -ஸமாஹிதராய் ப்ரீதியோடே தலைக் கட்டுகிறார் –

—————————————————————————————————-

உன்னை ஸமாச்ரயிக்கைக்குத் தந்த சரீரத்தை கொண்டு உன்னை ஸமாச்ரயியாதே அதன் வழியே ஒழுகி அநர்த்தப்பட்டேன்-
நான் உன்னை என்று காண்பது -என்று ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார்

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

எனக்காக கடலோடு கூடின பிரபஞ்சத்தை உண்டாக்கின பரம உதாரனே -அக்காலத்திலே உன் திருவடிகளில் சேர வற்றான சரீரத்தை
நீ தர அத்தைக் கொண்டு உன் திருவடிகளை பெற விரகு பார்க்க மாட்டாதே அதன் வழியே ஒழுகி துக்கப் படுகிற நான்
உன்னோட்டை விஸ்லேஷத்தாலே துஸ்சஹமாய்க் கொண்டு செல்லுகிற நாளில் பிரிந்து நோவு படுகைக்கு ஈடான பாபங்களை வேர் அறுத்து –

————————————————————————————————-

ஜல ஸ்தல விபாகம் இன்றிக்கே எல்லார் தலை மேலும் வைத்து அருளின திருவடிகளையும் தப்பின நான்
-உன் திருவடிகளில் சேர்வது என்று -என்று கூப்பிடுகிறார் –

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்-பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
என்னை சம்சாரத்தின் நின்றும் எடுத்து அருளுகைக்காக உன் அழகைக் கண்டாலும் ஈடுபடக் கடவது அன்றிக்கே
இருந்துள்ள மஹா பிருத்வியை அளந்து அருளின ஸ்ரீ வாமனனே-
சத்வாதி குண பேதத்தை உடைத்தாய் துரத்யையான ப்ரக்ருதி சம்பந்த ப்ரயுக்தமாய் தேவ மனுஷ்யாதி ரூபத்தினாலே
பலபடியான ஜென்மங்களில் அபி நிவிஷ்டனாய் விழுகிற நான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து-நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –
பழையதாய் ஈஸ்வரனான உன்னாலும் அறுக்க முடியாத படியான பாபத் தொடர்ச்சிகளை முதலிலே அறுத்து
உன்னுடைய பரம பூஜ்யமான திருவடிகளை சேர்ந்து நான் ப்ரதிஷ்டிதன் ஆவது என்றோ –

—————————————————————————————————

ஸ்ரீ வாமனான அக்காலம் தப்பினாரையும் விஷயீ கரிக்கைக்காக கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருள
அத்தையும் தப்பின நான் உன்னைப் பெரும் விரகு நீயே பார்த்து அருளாய் -என்கிறார் –

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

என்னை விஷயீ கரிக்கைக்கு என்று வந்து திருவவதாரம் பண்ணி அருளி அஹிம்சா சாதனமான உளவு கோலைக் கொண்டு
பாரத சமரத்திலே சேனையை அடையாக கொன்று தறைப் படுத்தினவனே –

—————————————————————————————————-

எல்லாரையும் ரஷிக்கைக்காக நீ சர்வகதனாய் இருக்கிற இருப்பும் எனக்கு கார்யகரம் ஆயிற்றது இல்லை –
நான் உன்னைப் பெரும் வழி நீயே பார்த்து அருள வேணும் -என்கிறார் –

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-

ஸமஸ்த சேதனரையும் உன் பக்கலிலே சூழ்த்துக் கொள்ள வற்றான அத்யந்த வி லக்ஷண ஞானத்தை உடையையாய்
வ்ருத்தி நாசங்கள் இன்றிக்கே என்றும் எங்கும் என்னை அடிமை கொள்ளுகைக்காக வியாபித்தவனே
திருவடிகள் ஒழிய பாஹ்ய விஷயங்களில் நசை எல்லாம் அற்று உன் திருவடிகளில் நிரதிசய போக்யமான கைங்கர்யத்தை
இன்னும் ஓர் திருவவதாரம் பண்ணி யாகிலும் நான் பெறும்படி பண்ணி அருள வேணும் –

————————————————————————————————-

நீயே வந்து என்னை விஷயீ கரித்து தரிப்பியாய் யாகில் என் சாமர்த்தியத்தால் உன்னை பிராபிக்கைக்கு உபாயம் இல்லை
அத்யந்த போக்யமான உன் திரு அழகை நான் இழந்தே போம் அத்தனை யாகாதே -என்கிறார் –

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-

ராம கிருஷ்ண யாதிகளாய் திரு அவதாரம் பண்ணினால் போலே அன்றிக்கே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்தால் போலே யாகிலும்
வந்து பரம தயாளுவான நீ என் மனஸ்ஸூ சிதிலம் ஆகாதபடி பண்ணுகிறில்லை
என்னை அங்கீ கரியாமை யாகிற இதுவே உருச் செல்லுமாகில்
பூம் கொத்துக்களாலே நிறைந்து இருந்துள்ள காயாவின் கொழுவிய பூப் போலே இருக்கிற திரு நிறத்தைக் காட்டி என்னை அடிமை கொண்டவனே –

—————————————————————————————————–

மீளவும் சாபல அதிசயத்தாலே நிரதிசய போக்யமான உன்னுடைய திருவடிகளை நான் கிட்டுவது என்றோ -என்கிறார் –

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

போன காலம் எல்லாம் அல்ப யத்னமாய் பஹு பலமான புண்யங்களை பண்ணுவேன் என்னுதல் செய்திலேன்
அல்ப பலமாய் பஹ்வநர்த்தமான பாபத்தை பண்ணுவேன் அல்லேன் என்னுதல் செய்திலேன்
அல்பாஸ் வாதமான விஷய ரசங்களை அனுபவித்து சர்வ சக்தியான உன்னாலும் அப்ரதிசமாதேய தசையாம் படி அகன்றேன்
பிரளய காலத்திலே மங்கி அஸத் கல்பராய் அசங்க்யேயரான ஆத்மாக்களை கரண களேபரங்களோடே கூட்டி உண்டாக்கின அபரிமித சக்திகன் ஆனவனே –

——————————————————————————————————

திருவடிகளில் போக்யதையை அனுசந்தித்து பதறுகிற திரு உள்ளம் பதறாமைக்காக
அயோக்யரான நாம் அவனை ஆசைப்பட்டால் பிரயோஜனம் உண்டோ என்கிறார் –

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-

சம்யஞ்ஞானம் இன்றிக்கே அவித்யா கர்மாதி களைப் பிறப்பிக்கும் சம்சாரத்தில் அழுந்தி இருக்கிற நாம் நெஞ்சே
கால தத்வம் உள்ளதனையும் இருந்து இருந்து துக்கப்பட்டு
எல்லா காலத்திலும் ஓன்று ஒளியாமே எல்லா பதார்த்தங்களிலும் வியாபித்து இருப்பதும் செய்து இவர்களுடைய ஞானங்கள் எல்லாம்
அஸத் கல்பமாம் படி -விசதமான ஞான பிரபையை உடைய கிருஷ்ணனை பிராபிக்க விரகு உண்டோ –
எஞ்ஞான்று மேவுதும் -என்றுமாம் –

————————————————————————————————————–

உன்னைப் பெறுகைக்கு ஈடான விரகுகள் என் பக்கல் ஒன்றும் இன்றிக்கே இருக்கச் செய்தே உன்னைக் காண வேணும்
என்று கூப்பிடா நின்றேன் -எங்கே வந்து பலிக்கக் கூப்பிடுகிறேன் -என்கிறார் –

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-

துக்கத்தை விளைப்பதாய் அநாதி காலம் அனுசரித்து இருக்கிற த்வத் பிராப்தி விரோதிகளை ஏதேனும் ஒரு விரகாலே போக்கவும் மாட்டிற்று இலேன்
நிரந்தரமாக உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கவும் பெற்றிலேன்
எங்கும் பிரசித்தமான கல்யாண குணங்களை உடைய உன்னுடைய அழகை எனக்கு காட்டினவனே –

—————————————————————————————————————

ஸ்ரீ கிருஷ்ணனாயும் ஸ்ரீ வாமனனாயும் நீ லோகத்துக்கு பண்ணின மஹா அனுக்ரகத்துக்கு புறம்பு ஆனேன்
இனி நான் உன்னை பெறுகை என்று ஒரு பொருள் உண்டோ -என்று நிராசரார் ஆகிறார் –

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-

சம்சாரத்தில் நின்று அத்தோடு பொருத்தம் இல்லாமையால் பெரிய ஆர்த்தியோடே பல காலம் கூப்பிட்டு என்னுடைய
பாபத்தின் மிகுதியால் அவனைப் பெறுகைக்கு விரகும் அறியாதே நெடும் காலம் அலமரா நின்றேன் –
திரு உள்ளத்திலே பொருத்தத்தோடே கூட பசு நிரை மேய்ப்பதும் செய்து அது போலே அன்றிக்கே
தன்னுடைய திருவடிகளை எல்லார் தலை மேலும் படும்படி லோகத்தை எல்லாம் அளப்பதும் செய்து
இச் செயலால் லோகத்தை அடைய அடிமை கொண்டு இருக்கிறவனை அன்றும் தப்பின நான் இனிப் பெறுகைக்கு விரகு உண்டோ –

—————————————————————————————————————

இப்படி நிராசராய் முடிய புக்க ஆழ்வார் எம்பெருமான் தம்முடைய ஆர்த்தி எல்லாம் தீரத்
திருமலையிலே நின்று அருளின படியை காட்டி அருளக் கண்டு தரிக்கிறார் –

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-

கிட்டும் காலம் யமபடர் பாசத்தை வீசினால் படும் துக்கம் போலே இருக்கிற பகவத் விஸ்லேஷ ஜெனிதமான நிரதிசய துக்கம் எல்லாம் அகல –
வேதைக சமதி கம்யனாய் இருக்கிற கிருஷ்ணனை அவனுடைய பிரசாதத்தாலே சாஷாத் கரிக்கப் பெற்று
என்னுடைய மனஸ் ஸூ ம் நிலை நின்று ஆத்ம நித்யத்வமும் நிலை நின்றது –

————————————————————————————————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார் தம்மைப் போலே நோவு படாதே சம்சார விமோசனத்தை பெறுவர் என்கிறார் –

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-

தம்மைப் பெறுகையாலே பூர்ணமான ஐஸ்வர்யத்தை உடையனான வனை-தாம் உஜ்ஜீவிக்கையாலே சம்ருத்தமான
திருச் சோலையோடு கூடின திருநகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த நிர்த்தோஷமான சப்த சந்தர்ப்பத்தை உடைய
ஆயிரத்திலும் இத் திருவாய் மொழி யானது தன்னை அப்யசித்தார்க்கு ஆத்மாவுக்கு ப்ரக்ருதி சம்பந்த ஹேதுவான கர்மத்தைப் போக்கும் –

——————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: