திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-2–

பெரு விடாய் பட்டவன் ஸூ ஸம்ஸ்க்ருதமான தண்ணீர் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆஸ்யம் பிஹிதமானால் துடிக்குமா போலே
தமக்கு போக்யமான விஷயம் சந்நிஹிதமாய் ஆசையும் மிக்கு இருக்கச் செய்தே விஷயத்தின் பெருமையால்
தமக்கு விளாக்குலை கொள்ள ஒண்ணாது ஒழிய –
அத்தை பிரகிருதி சம்பந்த ஆயத்தமான கரண சங்கோச நிபந்தனம் என்று பார்த்து மிகவும் அசன்னராய்
இப்பிரக்ருதி சம்பந்தத்தை அறுத்து எல்லாரும் தன் திருவடிகளை பெறுகைக்காக எம்பெருமான் பண்ணின
ஜகத் ஸ்ருஷ்டியும் ஸ்ருஷ்ட ஜகத்தில் பண்ணின அநேக அவதாரங்களும் எனக்கு கார்ய கரம் ஆயிற்று இல்லை –
இனி நான் பிரகிருதி சம்பந்தம் அற்று எம்பெருமானை பெற விரகு இல்லை யாகாதே -என்று நை ராஸ்யத்தோடே முடிய புக்க ஆழ்வார்
அவ்வவதாரங்களில் தப்பினார்க்கும் இழக்க வேண்டாத படி திருமலையில் நின்று அருளின படியை காட்டி அருளக் கண்டு உஜ்ஜீவித்து ப்ரீதராய் முடிக்கிறார் –

——————————————————————————————–

உன்னை ஆஸ்ரயிக்கத் தந்த சரீரத்தைக் கொண்டு அதன் வழியே ஒழுகி அநர்த்தப் பட்டேன்
-நான் உன்னை என்று கிட்டக் கட வேன் என்று கூப்பிடுகிறார் –

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

முந்நீர் ஞாலம் படைத்த
மூ வகைப் பட்ட நீரை உடைய கடல் சூழ்ந்த பூமியைப் படைத்த கட்டளை -தான் தன் விசித்திர யோகம் தோற்ற இருக்கை –
அப ஏவ ச சர்ஜா தவ்-என்கிறபடியே முன்னே நீரைப் படைத்த என்றுமாம் –
தய நீய தசையைக் கண்டு -இவை கரணங்களை பெற்று கரை மரம் சேர வேணும் -என்று தயா பரதந்த்ரனாய் ஸ்ருஷ்டித்த படி –
கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டியாகிலும் யவ்கபத்யம் அனுக்ரஹக்ருதம் என்கை
எம் –
ஸ்ருஷ்ட்டி சர்வ சாதாரணம் ஆகிலும் இவர் தமக்காக என்று இருக்கிறார் -எங்கும் ஓக்க வர்ஷித்தாலும் அது கொண்டு
விளைத்துக் கொண்டவன் -எனக்காக -என்று இருக்குமா போலே
எல்லாருக்கும் ஓக்க அவன் செய்தாலும் க்ருதஞ்ஞான் எனக்காக -என்று இருக்கும் இ றே
முகில் வண்ணனே-
மேகம் ஜல ஸ்தல விபாகம் இன்றிக்கே வர்ஷிக்கிறது பிரதியுபகாரம் கொள்ளுகைக்கு அன்று இ றே
பஹுஸ்யாம் என்று தன் பேறாக ஸ்ருஷ்டிக்கை –
அந்நாள் –
அசித் விசிஷ்டானாய் சோஸ்ய தசா பன்னனான நாள்
நீ –என்று இழவு உள்ளதாய் முகம் காட்டின நீ
தந்த –
திருவடிகளில் தலை சாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாம் உடம்பை அபகரித்து –
துர்லபோ மானுஷோ தேஹ -மானுஷ்யம் ப்ராப்ய -தன்னைப் பெறுகைக்கு உபகரணமும் தானே தர வேண்டி இருக்கிற படி
ஆக்கையின் வழி உழல்வேன்
விஷய ப்ராவண்யத்தை விளைத்துக் கொண்டு சரீரத்தின் வழியே போய் அநர்த்தப் பட்டேன் –
உழல்வேன்-சுழி தோறும் முழுகா நின்றேன் -கரை ஏற கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அதன் வழியே போய்
கடலிலே புகுவாரைப் போலே உடம்பின் வழியே போய் சம்சார ஆர்ணவத்திலே புக்கு நசிக்கை
வெந்நாள்-
ஞானம் பிறந்தால் இப்பிரக்ருதி சம்பந்தத்தோடே இருக்கிற நாள் அசோகவ நிகையிலே பிராட்டி இருந்தால் போலே
நோய் வீய-
நோய் என்று சரீர சம்பந்தம் ஆதல் -விஸ்லேஷம் ஆதல் -வீய முடிய
வினைகளை-
சரீர சம்பந்தத்துக்கு அடியானை பாபங்களை
வேர் அறப் பாய்ந்து-
சவாசனமாகப் போக்கி -பாய்ந்து என்று சினம் தோற்றுகிறது-
ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –
எந்நாள்-
இன்ன நாள் என்று ஓர் அவதி பெற்றார் ஆகிலும் அத்தை பற்றி கொண்டு இருப்பர்
யான் –
உன்னை பெறுகைக்கு தந்த உபகரணத்தை அழித்துக் கொண்ட நான் –
உன்னை-
என் பேற்றுக்கு போக்கடி சொல்ல வேணும் -என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை
இனி வந்து கூடுவேன்-
நீ தந்த கைம்முதலையும் அழித்துக் கொண்ட பின்பு கிட்டுகைக்குப் போக்கடி உண்டாகில் சொல்ல வேணும் -என்கிறார் –

———————————————————————————————–

எனக்குத் தந்த கைம்முதலைக் கொண்டு உன்னைக் கிட்ட மாட்டாது ஒழிந்தால்
நீ அர்த்தியாய் வந்து கிட்டின அன்றும் -கிட்டப் பெற்றிலேன் -என்கிறார் –

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–

வன் மா வையம் அளந்த –
கடினமான மஹா பிருத்வியை ஸூ குமாரமான திருவடிகளாலே அளந்த -என்னுதல்
மஹா பலி மிடுக்காலே புக்கு அளக்க அரிதான பூமியை என்னுதல்
தம்தாம் பேற்றுக்கு அவன் அர்த்தியாய் வந்த சீலத்துக்கும் அழகுக்கும் நெகிழாத பூமி -என்னுதல் –
அளந்த —
இருந்தார் இருந்த இடங்களிலே சென்று அவர்கள் தலையிலே திருவடிகளை வைத்த படி –
அவர்கள் இரங்கா விட்டாலும் தன் இரக்கத்துக்கு பரிஹாரம் இல்லையே –
எம் வாமனா –
இவ்வவாதாரத்திலே உபகார ஸ்ம்ருதி தமக்கே யாய் இருந்த படி –
எனக்காக வந்து பிறக்க நான் இழந்தேன் -என்கிறார்
இப்படி வர நின்ற உன்னாலும் மீட்கப் போகாத படி -சம்சாரத்திலே கை கழிய போந்தேன் -என்கிறார் –
நின்-பன் மா மாயம் –
மம மாயா என்று உன்னுடையதாய் -தான் ஒன்றாய் இருக்க குண த்ரய பேதத்தை உடைத்தாய் துரத்யையாய் இருந்துள்ள ப்ரக்ருதி –
நீ முடித்த முடியை நான் அவிழ்க்கவோ -ஸூ கத்திலே சங்கிப்பிப்பது -பிரவ்ருத்தியிலே மூட்டுவது
-உணர்த்தி அறப் பண்ணுவது -ஆகிற குணங்களை தப்பவோ –
பல் பிறவியில் –
பிரகிருதி சம்பந்த ப்ரயுக்தமான தேவாதி பேதங்கள்
படிகின்ற யான்-
விழுகின்ற -என்னாத படி கின்ற -என்கிறது இவ்வனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே பொருந்தி இருக்கை –
வர்த்தமான நிர்த்தேசத்தால் இன்னம் தரை கண்டது இல்லை என்கை –
தொன் மா வல்வினைத் தொடர்களை –
அநாதியாய் அநேகமாய் சர்வ சக்திக்கும் நெஞ்சு உளுக்க வேண்டும் படி பிரபலமான
பாவத் தொடர்ச்சிகளை ஒன்றோடு ஓன்று அனுபந்தித்து இருக்கை –
முதல் அரிந்து-
வாசனையோடு போக்கி
நின் மா தாள் சேர்ந்து –
பிராப்தமாய் -ஸூ லபமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை
கிட்டி -என்கிற ஸ்தானத்தில் சேர்ந்து என்கிறது கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கை –
நிற்பது –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குதச்சந-என்று ஸூ ஸ் த்ரனாய் இருப்பது
எஞ்ஞான்று கொலோ-
இன்ன நாள் என்று ஓர் அவதி பெறிலும் பெற்றத்தோடு ஒக்கும் –

—————————————————————————————————

ஸ்ரீ வாமனான காலத்திலும் தப்பினாரையும் விஷயீ கரிக்கைக்காக ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரிக்க அத்தையும் தப்பினேன் என்கிறார் –

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்-
ஹிம்ஸா சாதனம் இன்றிக்கே குதிரையை நடத்தக் கடவதான முட்கோலாலே கொலையை விளைத்து –
ஆஸ்ரித விஷயத்தில் வந்தால் எடுத்ததே ஆயுதமாய் இருக்கை -ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்றார்கள் –
அவர்கள் இசைந்து ஒன்றையே ஆயுதமாகப் கொண்டு உழக்கிப் பொகட்டான்
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து -என்னக் கடவது இ றே –
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பாரத சமரத்திலே-இரண்டு தலையிலும் அஸூ ரா வேசத்தாலே பூ பாரம் ஆனார் எல்லாரையும்
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே -என்கிறபடியே அவர்கள் பக்கல் நன்மையே இல்லை யாகிலும் அங்கே பட்டார்க்கு வீர சுவர்க்கம் கிட்டும் தேசம் –
பீஷ்மாதிகள் காட்டுது தீ கிளர்ந்தால் போலே கிளர்ந்து வர அத்தை அவித்துக் கொண்டு ஒரு காள மேகம் பரவினால் போலே யாயிற்று
சாரத்ய வேஷத்தோடு தேரைக் கொண்டு உலாவின படி
எந்தாய் -பாண்டவர்களுக்கு உதவினதுவும் தமக்கு என்று இருக்கிறார்
பொல்லா வாக்கையின் –
துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்-
இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது
எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இ றே
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி
புணர்வினை யறுக்கலறா
புணர்வினை- சரீர சம்பத்துக்கு அடியான கர்மம் என்னுதல் -சரீர சம்பந்தம் என்னுதல்
அறுக்க என்றால் போகாது -ராவண சிரஸ்ஸைப் போலே முளையா நிற்கும் என்கை –
சொல்லாய்-
தன்னால் பரிஹாரம் இல்லாத அன்று அர்ஜுனனுக்கு பயம் பிறந்த அன்று மா ஸூ ச என்றால் போலே எனக்கும் மா ஸூ ச என்னாய்
யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –
சிறையிலே கிடப்பாரைப் போலே பிரக்ருதியிலே கிடக்கிற நான் ஒரு தேச விசேஷத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும்
உன்னைக் கிட்டலாதொரு விரகு சொல்ல வேணும்
நான் கிட்டவும் வேணும் -நான் அறியில் இறாய்ப்பேன்-நான் அறியாதபடி சூழ்ச்சி யாகவும் வேணும்
இது இன்ன நாள் என்று சொல்லவும் வேணும் என்கிறார் –

—————————————————————————————————-

அவதாரங்களுக்கும் தப்பின அளவேயோ-ததாமி புத்தியோகம் தம் -என்கிறபடியே நினைவுக்கு வாய்த்தலையான
நெஞ்சிலே வந்து புகுந்து நல் வழி போக்குகைக்கு நிற்கிற நிலையும் எனக்கு கார்யகரம் ஆயிற்று இல்லை என்கிறார் –

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி
எல்லாரையும் சூழ்த்துக் கொள்ள வற்றாய்-விசததமமான ஞானத்தை உடையையாய்
என்றும்
இவன் இல்லாத காலத்திலும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி
எழுச்சி -விகாசம் / கேடு-குறைவு -சங்கோசம் -/சங்கோச விகாச ரஹிதமான ஞானம் -என்கை –
எங்கணும்-
எல்லா பதார்த்தங்களிலும்-கண் -இடம் –
நிறைந்த வெந்தாய்-
ஜாதி -வியக்தி தோறும் -பரிசாமாபியா வர்த்திக்குமா போலே
எந்தாய் -ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே வியாப்தியும் என்னை உத்தேசித்து என்கை –
உன் பக்கலிலே அகப்படுத்திக் கொள்ளுகைக்கு விரகு தேடி உணர்ந்து என்னை வியாபித்துக் கொண்டு நிற்கச் செய்தேயும்
விஷய பிரவணனாய் தப்பினேன் என்கை
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு
நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-
வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –
வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -ச்சாயா வா சத்துவம் அநு கச்சேத்–வா ஸூ தேவா தருச்சியா –என்னக் கடவது இ றே
சர்வம் பரவசம் துக்கம் -என்று விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று இட்டு தாழ்ச்சி என்கிறார்
யான் சேரும் வகையருளாய் வந்தே –
இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் –
அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது –
வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

—————————————————————————————————–

நீ முகம் தோற்ற வந்து அவதரித்து தரிப்பியா யாகில் உன் அழகை நான் இழந்தே போம் இத்தனையோ -என்கிறார் –

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-

வந்தாய் போலே வந்து –
நெடுநாள் இங்கே கால் தாள வேண்டும் ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் போல் அன்றிக்கே -ஆனைக்கு உதவினால் போல் ஆதல்
தூணிலே தோற்றினால் போலே யாதல் -வந்தாகிலும்
மென் மனத்தினை-
நினை தோறும் சொல்லும் தோறும் நெஞ்சு இடிந்து உகும் -என்னும் மனசை
நீ
உரு அழிந்தவற்றையும் உண்டாக்க வல்ல நீ
சிந்தாமல் செய்யாய்-
நீராய் மங்கிப் போகாத படி பண்ணு கிறிலை
யிதுவே யிதுவாகில்-
உதவாது ஒழிகையே ஸ்வ பாவமாகச் செல்லுமாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த-எந்தாய் –
நீ உதவாது போது ஆறி இருக்கலாயோ உன் வடிவு இருக்கிறது –
கொத்துக்களாலே நிறைந்த காயாவினுடைய கொழுவிய பூ போலே இருக்கிற வி லக்ஷணமான வடிவு அழகைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே
உதவாது ஒழிய பார்த்த நீ உன் வடிவைக் காட்டிற்று ஏன்
யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–
உன்னைக் கிட்டுக்கைக்கும் கைம்முதல் இல்லாத நான் –
தஸ்யைக்ஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று நீயே அனுபவிப்பிக்கும் உன்னை -எங்கே கிட்டப் போகிறேன் –

——————————————————————————————————–

என்னைப் பார்த்தால் கிட்ட விரகு இல்லை -உன்னைப் பார்த்தால் தப்ப விரகு இல்லை
ஆனபின்பு நிரதிசய போக்யமான திருவடிகளைக் கிட்டுவது என்று என்கிறார் –

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

கிற்பன்
அல்ப யத்னமாய் பஹு பலமான ஸூ க்ருதத்தைச் செய் என்றால் ஓம் என்று இசைந்து இலேன்
மித்ர பாவத்தாலே அபுநாவ்ருத்தி லக்ஷணமான போகத்தை பெறலாம் என்றால் அத்தைச் செய்வேன் என்று இலேன்
கில்லேன் என்றிலன்-
இப்போது அல்பமாய் மேலே பஹ்வநர்த்தமாய் இருக்கிற விஷய ப்ராவண்யத்தை தவிர்க்கும் என்றால் -அத்தை தவிர்வேன் -என்று இலேன் –
இப்படி செய்கிறது எத்தனை நாள் போரும் என்ன
முன நாளால்
நீ விசேஷ கடாக்ஷம் பண்ணுவதற்கு முன்பு எல்லாம் –இந்த நெடு நாள் எல்லாம் நம்மை அகன்றது எத்தாலே என்ன
அற்ப சாரங்கள்
உன்னை இழப்பிக்க வேண்டுவது உண்டு -அனுபவிக்கலாவது ஓன்று இல்லை –
அவை
இப்படி இருப்பன அநேகம்
சுவைத்து
இவை எல்லா வற்றாலுமாக நா நனைய பெற்றதோ என்னில்
நாவில் பசை கொடுத்து கை கொடுத்து புஜிக்க வேண்டும்படி இருக்கை –
இத்தால் பெற்றது ஏது என்ன
அகன்று ஒழிந்தேன்
சர்வ சக்தியான உனக்கும் எட்டாதபடி கை கழிந்தேன்-நான் என்னை முடித்துக் கொண்டேன்
உடைய நீ எடுத்துக் கொள்ளில் கொள்ளும் இத்தனை
நீர் நின்ற நிலை அசமாதேயம் என்னும் படி யாய் இருந்ததீ என்ன
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா-
இல்லாத வென்று உண்டாக்கின உனக்கு உள்ளது ஒன்றுக்கு ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ
பல் பல்லாயிரம் -என்று ஜீவ அனந்த்யம் -உயிர் செய்கை யாவது சரீரத்தோடு சம்பந்திப்பிக்கை
பரமா -நிரவாதிக சக்தி உக்தன் ஆனவனே
நின் நற் பொற் சோதித் தாள் –
ப்ராப்தமாய் -அப்ராக்ருதமாய் ஸ் ப்ருஹணீயமாய்-நிரவாதிக தேஜோ ரூபமான திருவடிகளை –
நணுகுவது எஞ்ஞான்றே –
என்னைப் பார்த்தால் பெற விரகு இல்லை –
உன் சக்தியில் குறை இல்லை
இனி நாள் அறியும் அத்தனை என்கிறார் –

———————————————————————————————————–

நின் நல் பொற் சோதித் தாள் -என்று ப்ரஸ்துதமான போக்யதையை நினைத்து பதறுகிற திரு உள்ளத்தைக் குறித்து
அயோக்யரான நாம் அவனை ஆசைப் பட்டால் பிரயோஜனம் உண்டோ -என்கிறார் –

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி –
அநாதி காலம் மூலையடியே திரிந்த நாம் இனி அநந்த காலம் இருந்து க்லேசப் பட்டால் என்ன பிரயோஜனம் உண்டு
நெஞ்சே-
அநாதி காலம் எல்லாம் பண்ணின அதிக்ரமத்துக்கு கூட்டு நீ அன்றோ -நமக்கு குறை என் என்ன –
மெய்ஞ்ஞானம் இன்றி –
புருஷார்த்த உபயோகியான சம்யக்ஞ்ஞானம் இன்றிக்கே
வினையியல் பிறப்பு அழுந்தி-
அவித்யாதிகளை பிறப்பிக்கும் சம்சாரத்தில் மூழ்கி இருக்கிற நாம் –அவித்யாதிகள் அடியான பிறப்பில் அழுந்தி இருக்கிற நாம் என்றுமாம் –
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற-மெய்ஞ்ஞானச் சோதிக் –
இப்படி நாம் இருந்தாலும் அவன் அஸந்நிஹிதன் ஆனால் அஞ்ஞானாதல் ஆகப் பெற்றோம் ஆகிலுமாம் இ றே
சர்வ காலமும் சகல பதார்த்தங்களிலும் குறைவற வியாபித்து நிற்குமவனாய் விசதமமான ஞானத்தை உடைய கிருஷ்ணனை –
நினைவுக்கு வாய்த்தலையிலே புகுந்து நம் படியை உள்ளபடி அறியுமவன் ஆனவனை
கண்ணனை -மேவுதுமே
ஸூ லபன் என்றால் அவனைக் கிட்டப் போமோ -என்னுதல்-
நிர்வாஹகன் என்றால் அவனைக் கிட்டலாமோ என்னுதல் –
யதா பாடம் அன்வயமாதல் -எஞ்ஞான்றும் மேவுதல்-என்னுதல் –
ஏகோ அஹம் அஸ்மீதிசம் அந்நிய சேத்வம் நஹ்ருச்சயம் வேத்ஸி முனிம் புராணம் யோ வேதிதா கர்மண
-பாப கஸ்ய தஸ் யாந்தி கேத்வம் வ்ருஜி நம் கரோஷி –

———————————————————————————————————–

உன்னைக் கிட்டுக்கைக்காக என் பக்கல் ஒன்றும் இன்றிக்கே இருக்க காண வேணும் என்று கூப்பிடா நின்றேன்
-எங்கே பலிக்கக் கூப்பிடுகிறேன் -என்கிறார் –

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்-ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்-
இவ்வாத்மாவுக்கு நிரூபகமோ என்னும்படி பொருந்தின சாம்சாரிகமான துக்கத்தை விளைவிப்பதான தத் பிராப்தி விரோதிகளை
-தர்மேண பாபமப நுதி-என்று விகித அனுஷ்டானத்தாலே போக்கவும் மாட்டிற்று இலேன்
நிதித்யாசி திவ்ய -என்கிறபடியே அனவ்ரத பாவன ரூபமான பக்தியை பண்ணப் பெற்றிலேன் –
ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை என்றுமாம்
பாவு தொல் சீர்க் கண்ணா –
விதித–சத்ருக்கள் கோஷ்ட்டியிலும் பிரசித்தமாய் ஸ்வா பாவிகமான கல்யாண குணங்களை உடைய கிருஷ்ணனே
வென் பரஞ்சுடரே-
தாழ நின்று இவ் வடிவு அழகை எனக்கு முற்றூட்டாக்கி தந்தவனே -பரஞ்சுடர் உடம்பாய் -என்ன கடவது இ றே
கூவிகின்றேன் காண்பான் –
சாதனா அனுஷ்டானம் பண்ணி பலம் தாழ்த்தாரைப் போலெ கூப்பிடா நின்றேன்
எங்கு எய்தக் கூவுவனே –
ஒரு ஷூத்ரன் கூப்பீடு எங்கே பலிக்க -சாபலம் இ றே

—————————————————————————————————-

கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமன அவதாரத்தையும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தையும் சொல்லி அவற்றைத் தப்பின
நான் இனி கிட்ட என்று ஒரு பொருள் உண்டோ -என்று இன்னாதாகிறார் -நிராசர் ஆகிறார் என்றுமாம் –

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-

கூவிக் கூவிக்
சம்சாரத்தோடு பொருந்த மாட்டார் -கால் வாங்குகைக்கு யோக்யதை இல்லை -காண வாராய் என்று கூப்பிடுகிறார் –
ஒரு கால் கூப்பிட்டு பின்பு ஸ்வரூப ஞானத்தால் ஆறி இருக்க மாட்டாதே மேல் மேல் எனக் கூப்பிடுகிற படி
இவர் கூப்பிட்டால் ஈஸ்வரனுக்கு கை நீட்டி எடுக்க ஒண்ணாத தூற்றிலே யாயிற்று இவர் புக்கு நிற்கிறது –
கொடு வினைத் தூற்றுள் நின்று-
கொடிதான பாபத்தை விளைக்க வற்றாய் புக்க இடமும் புறப்பட்ட விடமும் தெரியாததான சம்சாரத்திலே யாயிற்று நிற்கிறது
பாவியேன் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஸ்ரீ வால்மீகி பகவான் ஆஸ்ரம பரிசரத்திலே கூப்பிட்டால் போலே சிலர் ஐயோ என்ன கூப்பிடுகிறேனோ -என்னுதல் –
உன்னைக் கிட்ட விரகு அறியாதே அலமருகைக்கு அடியான பாபத்தைப் பண்ணினேன் -என்னுதல் –
பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்-
நெடும் காலம் உன்னைப் பெறும் விரகு அறியாதே அலமரா நின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
ஆபத்துக்கு உதவாதானாயத் தான் படுகிறேனோ –
நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனான தன் கையிலே கோலைத் தந்து பசு மேய் என்றால் -ரக்ஷகரான நமக்கு
விஹிதம் இ றே -என்று இருக்கை அன்றிக்கே அலாப்ய லாபமாகப் பொருந்தி
அன்று -அதுவும் ஒரு காலமே
உலகு எல்லாம் தாவிய -அது ஓரூர் அளவேயோ தப்பவுமாம்
எல்லார் தலையிலும் திருவடிகளாம் படி சர்வ லோகங்களையும் அளந்த அன்று எம்மூலையிலே கிடந்தேன்
வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே
எல்லாரையும் அடிமை கொண்டவனை
அந்த தூளி தானத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்ட புகுகிறேன்
அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -என்று நிராசர் ஆகிறார் –

—————————————————————————————————–

இப்படி நிராசராய் முடிய புக்க அளவில் -அவதாரத்துக்கு பிற்பட்டார்க்கு அன்றோ நாம் திருமலையிலே வந்து நிற்கிறது
-என்று திருமலையில் வந்து நின்று அருளின படியைக் காட்டி அருள கண்டு தரிக்கிறார் –

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-

தலைப்பெய் காலம் நமன் தமர் –
யமபடர் கிட்டும் காலம் -ஏற்கவே முகம் காட்டினான் ஆகில் இவர் பாபம் பண்ணார் இ றே -மஸ்தக ஸ்தாயிநம்
பாசம் விட்டால்-
சரீர விஸ்லேஷத்துக்கு பாசம் வீசினால்
அலைப்பூண் உண்ணும் –
வாசனை இங்கே இழுக்க அவர்கள் சரீரத்தை விஸ்லேஷிப்பிக்க தடா படும் வியசநம்
அவ் வல்லல் எல்லாம் அகலக்
அவ்வல்லல் என்னும் அத்தனை -த்ருஷ்டாந்தம் இல்லை –
அந்த துக்கம் போலே இருக்கிற பகவத் விஸ்லேஷ ஜெனித துக்கம் எல்லாம் ஆதல் –
வசதி மனசி யஸ்ய சோ அவ்யயாத்மா புருஷ யாஸ்ய ந தஸ்ய த்ருஷ்ட்டி பாதே தவக திரதவா ம மாஸ்தி சக்ர ப்ரதிஹத வீர்ய பலஸ்ய சோ அந்நிய லோக்ய –
பகவத் அலாபமே யான பின்பு யம வஸ்யத்தையும் வந்தது அன்றோ –என்று பணிக்குமாம் ஆண்டான்
கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு-
பல கலைகளாலும் அறியப் படுபவன்
வேதைஸ் ச சர்வர் அஹமேவ வேத்ய -என்று வேதைக சமதி கம்யனான கிருஷ்ணனைக் கண்டு கொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் –
என் மனத்தினை நீ சிந்தாமல் செய்வாய் -என்று சிதிலமான நெஞ்சம் தான் தரித்தது
பெற்றது நீடுஉயிரே.–
உயிர் நீடு பெற்றது -எங்கு இனித் தலைப் பெய்வன்-என்று முடிய புக்க ஆத்ம வஸ்துவும் நித்யமாயிற்று
நித்ய வஸ்துவுக்கு நாசமாவது -தாஸ்ய அசித்தி
தாஸ்யமே நிரூபகம் ஆனால் தத் அலாபத்தில் நிரூப்பியமும் இல்லையாம் இ றே
ச்சேத்யாதி விஸஜாதீயம்-ஏன்னா பகவத் அலாபத்தில் அழியாது ஒழியுமோ –

—————————————————————————————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழி அப்யசித்தார்க்கு சரீர சம்பத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார் –

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
உயிர் நீடு பெற்றது -என்று இவர் தரித்தவாறே அவன் எல்லா உயிர்களையும் எல்லா லோகங்களையும் உடையனானான் –
சர்வ ரக்ஷகனுக்கு ரஷ்யத்தில் ஓன்று குறையிலும் ரக்ஷகத்வம் ஓன்று ஓறு வாயாம் இ றே
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்-
இவர் உறாவின வாறே -அபி வ்ருஷா பரிம் லா நா -என்று திருச் சோலையும் உறாவி
இவர் தரித்தவாறே அகால பலி நோ வ்ருஷா -என்கிற படியேயாய் அங்கு உள்ள குயில்களும் ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு களிக்கும் படி யாயிற்று
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
செயிர் -குற்றம் -இல் -இல்லாமை -ஆக நிர்த்தோஷமான சப்த சந்தர்ப்பத்தை உடைய ஆயிரம்
இப்பத்துக்கு குற்றம் இல்லாமை யாவது -எங்கு இனித் தலைப் பெய்வன் -என்று மெய்யாய் இருக்கை
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–
சரீர சம்பந்த ஹேதுவான கர்மத்தைப் போக்கும் –

———————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading