திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-1–

திருமலையில் போக்யதையை அனுபவியா நிற்கச் செய்தே -வட மா மலை யுச்சி என்னுமா போலே திருமலைக்கு
அவயவ பூதராய் இருபத்தொரு கற்பக தரு பணைத்தால் போலே இருக்கிற அழகருடைய நிரதிசய ஸுந்தர்யத்தையும்
ஆபரண சேர்த்தியையும் வேதங்கள் வைதிக புருஷர்கள் ஞானாதிகரான ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானாருடைய -ஸ்தோத்ரங்களுக்கு
அபூமியான மேன்மையையும் -அவற்றையும் விளாக்கொலை கொள்ளும் படியான ஆஸ்ரித பாரதந்தர்யத்தையும் அனுபவித்து விஸ்மிதர் ஆகிறார் –
அந்தாமத்து அன்பிலும் அழகு சொல்லிற்று -இங்கும் அழகாய் இரா நின்றது -இரண்டுக்கும் வாசி என் என்னில்-
ஆடியாடிக்கு -அனந்தரமாகையாலே -ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் தான -என்று அடைவு கெட ஒப்பித்து வந்த அழகு இங்கு
-இவ் வழகினுடைய ஸூ கடிதத்வத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிறார் –

————————————————————————————————————————

அழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திரு அணிகலன்களும் உண்டான ஸூ கடித்த்வத்தை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
உனது முகச் சோதி முடிச் சோதியாய் மலர்ந்ததுவோ
உன் திரு முகத்தின் ஒளி முடிச் சோதியாய் மேல் நோக்கி விகசிதம் யாயிற்றோ
சாமான தர்மாத் சம்சயம் ஆகையால் உபய கோடியிலும் அனுவர்த்திக்கிறது -என்பர் பட்டர்
திரு அபிஷேகத்தின் ஒளியானது திரு முகத்தின் ஒளியாய்க் கொண்டு கீழ் நோக்கி சுழித்ததோ
சேஷித்வ ஸூ சகமான அழகை அனுபவித்து தம் சேஷத்வத்துக்கு அனுரூபமான திருவடிகளின் அழகை அனுபவிக்கிறார் –
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
திரு முகத்தின் அழகு நிலை கொள்ள ஒண்ணாமையாலே திருவடிகளில் வர வீசிற்று
அங்கண் அல்லது அழகுக்கு ஆவது உண்டாயாயாதல் -ஆசைக்கு அவதி உண்டாயாயாதல் அன்றே
திருவடிகளின் அழகு ஆசன பத்மமாய்க் கொண்டு விகசிதமாயிற்றோ
நீ நின்ற தாமரை அடிச்ச சோதியாய் அலர்ந்ததுவோ
திரு அபிஷேகத்தின் சம்சயம் இங்கே தீர வந்தார் -இங்கும் சம்சயமாய் இருந்தது
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்-கடிச்சோதி கலந்ததுவோ
திருவடிகளின் அழகு மேல் நோக்கித் தள்ள திரு வரையை அனுபவிக்கிறார்
உன்னுடைய ஸ் ப்ருஹணீயமான கடிப் பிரதேசத்தின் ஒளி ஸ் வா பாவிகமான அழகை உடைய திருப் பீதாம்பரமாயும் மற்றும் உள்ள ஆபரணங்களாயும் கலந்ததுவோ
கடி -தொடைப் பற்று –
நீரிலே நீர் கலந்தால் போலே ஏக த்ரவ்யம் என்னலாம் படி பரம்பிற்றோ-மற்றைப் படியுமாம்
படிச்சோதி -படி யாணி யான ஒளி என்றுமாம் -திரு மேனி என்றுமாம்
திருமாலே கட்டுரையே –
நித்ய அநபாயினியாய் நித்ய அனுபவம் பண்ணுகிற பிராட்டியும் அவளை அனுபவிப்பிக்கிற தேவரும் கூட எனக்கு அருளிச் செய்ய வேணும்
இன்று அனுபவிக்கப் புக்க இவரோடு நித்ய அனுபவம் பண்ணுகிற அவளோடு அவன் தன்னோடு வாசி இல்லை -ஐஸ் சம்சயம் அனுவர்த்திகைக்கு
கட்டுரையே
சொல்ல வேண்டும் என்றபடி
மருளில் வ ண் குருகூர் வ ண் சடகோபன் -என்ற தத்வ ஹிதங்களில் சம்சயம் அற்ற இவருக்கு இது ஒரு நித்ய சம்சயம் விளைந்தது
விஞ்ஞான பலமாய் விஷய வை லக்ஷண்யம் அடியாக பிறந்த சம்சயம் ஆகையால் நித்யமாகச் செல்லும் என்கை –

————————————————————————————————————–

இவ் வழகுக்கு உவமானம் உண்டோ -என்று பார்த்தார் -உபமானங்களுக்கு அவ்வருகாய் இருக்கையாலே உவமானம் இல்லை என்கிறார் –

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-

கட்டுரைக்கில்-
சொல்லில் -கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் என்றபடி -நெஞ்சாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்க பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது
தாமரை –
தாமரை ஜாதியாக ஓர் அவயவத்துக்காக ஒப்பாக மாட்டாது என்கை –
நின் கண் பாதம் கை யொவ்வா
முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை
நின் கண் -என்கையாலே -உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது –
பாதம் -என்றது அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது
கை -என்று நடுவு தாம் அனுபவித்த அழகுக்கு உப லக்ஷணம்
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
பொன்னை உபமானமாக போராது என்கைக்காக சிக்ஷிக்கிறார் -காய்ச்சி உரைத்த வி லக்ஷணமான நன் பொன்-ருக்மஅபாம் -என்னக் கடவது இ றே
உன் திருமேனி ஒளி ஒவ்வாது-
பரஞ்சோதி ரூப சம்பத்ய–ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து பரிஷ் வங்கோ ஹா நூ மத -என்று தான் மதித்து இருக்கும் வடிவு
ஒட்டுரைத்து –
ஓட்டுகை -கூடுகை -அதாவது சேருகை-ஒப்புச் சொல்லி
இவ்வுலகு
மாஞ்சா க்ரோசந்தி-என்கிற நியாயத்தாலே லோகத்தில் உள்ளார் –பிராகிருத பதார்த்த வை லக்ஷண்யமும் அறிய மாட்டாதார்கள் –
உன்னைப் –
யாதோ வாசோ நிவர்த்தந்தே-என்று ஸ்ருதியும் மீளும்படியான உன்னை
புகழ்வெல்லாம் பெரும்பாலும்
ஸ்தோத்ரம் பண்ணுமது எல்லாம் -மிகவும் ப்ராயேண
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –
அவாசகமாய் -பட்டது உரைக்கை பட்டரை -விஷயத்தை பாராதே தோன்றிற்று சொல்லுகையாய்
புற்கென்றே காட்டுமால்-அவத்யவாஹமாமுமாம்-இப்படி ஆவான் என் என்னில்
-பரஞ்சோதி -ரத்னம் அறியாதான் ஒருவன் -குருவிந்தக் கல்லோடு ஒக்குமே இவ்வஸ்து -என்றால் அதுக்கு அவத்யமாம் இ றே
அப்படியே நீ சர்வ விசாஜீ தயமான அழகை உடையவன் ஆகையால் -நாராயண பரஞ்சோதி –

———————————————————————————————————————

அவர்கள் நம்மை உள்ளபடி அறியாமையாலே சொல்ல மாட்டாது ஒழிகிறார்கள்-
நம்மை உள்ள படி அறியும் உமக்குச் சொல்லத் தட்டு என் -என்ன -என்னாலும் முடியாது என்கிறார் –

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின்-
பரமாய் பரஞ்சோதி நீ -அழகால் எல்லாரிலும் மேற்பட்டு இருக்கையாலே பரஞ்சோதி நீ –தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி
நின்னிகழ்ந்து-உன்னை ஒழிந்து
மற்றோர்-பரஞ்சோதி யின்மையில் –
வேறு ஒரு பரஞ்சோதி இல்லாமையால்
படியோவி –
ஒப்பு ஓவி
நிழல்கின்ற-பரஞ்சோதி –
வர்த்திக்கிற பரஞ்சோதிஸ் நீ –
நின்னுள்ளே படருலகம் படைத்த எம்-பரஞ்சோதி
ஜகத் காரண ப்ரத்யுக்தமான பரஞ்சோதிஸ் ஸூ ம் உள்ளது -என்கை –
கோவிந்தா-
நீர்மையைப் பார்த்தால் பசுக்களோடும் பொருந்தும்படியாய் இருக்கை-
செவ்வே நெஞ்சே நினைப்பரிதால்-
ஸூலபதையால் வந்த தேஜஸ் ஸூ ம் உன்னது
அழகுக்கு மேற்பட்டார் இல்லாமையால் அழகால் வந்த தேஜஸ் ஸூ ம் உன்னது
லோகத்தில் உபமான ரஹிதர் நீயே யாகையாலே உபமான ராஹித்யத்தால் வந்த தேஜஸ் ஸூ ம் உன்னது
ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான தேஜஸ் சூம் உன்னது
பண்புரைக்க மாட்டேனே
பண்பு -படி -உன் படிகள் இவையான பின்பு என்னால் பேசப் போகாது என்கிறார் –

———————————————————————————————————————

இப்படி விலஷணனாய் உபநிஷத் ரகஸ்யனான உன்னை சம்சாரிகள் இழந்து க்லேசப் பட்டே போம் இத்தனை ஆகாதே என்று
அழகர் உடைய அழகின் மிகுதியே பேசுவிக்கப் பேசுகிறார் –

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் –
திரு நாபி கமலத்தை தலையாக உடைத்தான இம் மஹா பிருதிவி -உன் பக்கலிலேயான புஷப காச ஸூகுமாரமான
திரு மேனியில் நெஞ்சை வைக்க மாட்டாதே இருக்கச் செய்தேயும்
நின்-மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க-
உன் இடத்திலேயான -உன் பக்கலிலே யான -அன்றிக்கே -மாட்டு -என்று மாடாய் -நிதி போலே ஸ்லாக்க்யமான என்னுதல்-
மாட்டு என்று மட்டாய்-மத்வ உத்ஸ – என்று மதுஸ் யந்தி யாகையாலே நிரதிசய போக்யம்-என்னுதல் –
மலர்தலை மா ஞாலம் -என்கிறது மாட்டாமைக்கு நிபந்தம் -ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வங்கள்-என்கை
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய்
திரு உருவம் மனம் வைக்க மாட்டாதவையாய் ஒன்றோடு ஓன்று சேராதே பாஹ்ய சமய மதி பேதங்களை உண்டாக்கினாய்
பண்டே உன்னை அறிய மாட்டாதே சம்சாரிகளுக்கு இம் மதி பேதங்களை உண்டாக்கினாய் –
மலர்த்துழாய்- மாட்டே நீ மனம் வைத்தாய்-
உன் திரு உள்ளத்தையும் கால் தாழ பண்ண வல்ல திருத் துழாய் முதலான போக்கிய ஜாதங்களிலே பிரவணனாய்
மாடு – இடம் -அதன் பக்கலிலே –
மா ஞாலம் வருந்தாதே –
இம் மஹா பிருத்வி உன்னை இழந்து நோவு படாதே
பிரானே தமக்கு பகவத் விஸ்லேஷம் கிலேச கரமாய் இருக்கையாலே எல்லாருக்கும் இப்படி இருக்கும் என்று இருக்கிறார்
பண்டே அறிவில்லாத சம்சாரிகள் -அதுக்கு மேலே விலக்கடிகளும் உண்டாயிற்று -ரக்ஷகனான நீ போக பிரவணனாய்
-இனி சம்சாரிகளுக்கு க்லேசமேயோ சேஷித்தது –

———————————————————————————————————————–

அஞ்ஞான லோகம் மாட்டாதாகில் மயர்வற மதி நலம் உடைய உமக்குச் சொல்லக் குறை என் என்ன –
நீ சாவாதிகன் ஆயாகில் அன்றோ பேசலாவது என்கிறார் –

வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-

வருந்தாதே வருந்தவத்த-
யத்னத்தால் வந்தது அன்றிக்கே சகஜமாய் நிரதிசய தாபா பலம் என்று சொல்லாய் இருக்கை
வருந்தாதே வருமதாய் -தவ -என்று மிகுதியாகவுமாம் -நா காரணாத் காரணாத்வா-
மலர்கதிரின் சுடருடம்பாய்-
விகஸ்வர தேஜோ ரூபமாய் -அதில் மண் பற்றைக் கழித்த ஒளியை உடம்பாக உடையையாய்
வருந்தாத ஞானமாய் –
சஹஜ சாதர்வ ஜ்ஞத்யத்தை உடையையாய்
வரம்பின்றி முழுதியன்றாய்
எல்லை இல்லாத சகல பதார்த்தங்களையும் நிர்வஹிக்கிறவனே
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை-ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே
காலத் த்ரயத்திலும் லோகத்தை ஒருங்காக ஒருமடைப்பட ஒரு படியே ரஷிக்கிற உன்னுடைய குணங்களை எங்கே முடிய நான் பேசுவேன்
உலக்க முடிய -வி லக்ஷண விக்ரஹம் -சஹஜ சார்வஞ்தவம் -உடைமையை நிர்வஹிப்பான்
உடையவன் ஆகையால் எல்லாவற்றையும் உடைய உன் சர்வ ரக்ஷகத்வம் இவற்றை எங்கே நான் முடிவு காண –

——————————————————————————————————————

வேதங்கள் ஸ்துதிக்க வில்லையோ -அவ்வோபாதி நீரும் பேச மாட்டீரோ என்ன -அவையும் ஸ்துதியில் உபக்ரமித்து
முடிவு காண மாட்டாமையாலே மீண்டன இத்தனை -என்னால் பேசப் போமோ என்கிறார் –

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-

ஓதுவார் ஒத்து எல்லாம் –
ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது –
ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –
எவ்வுலகத்து எவ்வெவையும்-
ஊர்த்த லோகங்களில் உள்ளார் ஞானாதிகருமாய் -ஆயுஸ் சாலே அதிகருமாய் இருக்கையாலே
அவர்களுக்கு அனுரூபமாக அவ்வோ லோகங்களிலும் இந்த பேதங்களும் உண்டு
சாதுவாய்-
சப்தத்துக்கு சாதுத்வம் ஆவது -அர்த்தத்தை இருந்த படியே காட்டுகை –
சர்வ சப்தங்களும் அசித் ஜீவ விசிஷ்ட பரமாத்ம பர்யந்த அபிதானம் பண்ணுகை -சாதுவாகைக்காக என்றுமாம் –
நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை-
உன் கல்யாண குணங்களிலே அந்வயித்தன என்னும் இத்தனை அல்லது புறம்பு போயின வென்று சொல்ல ஒண்ணாது
கடலில் வர்ஷ பிந்து போலே புறம்பு போயிற்று என்னவும் ஒண்ணாது
எங்கும் வியாபித்தது என்னவும் ஒண்ணாது இருக்கை
தகை -அளவும் -அழகும் –
போது வாழ் புனந்துழாய் முடியினாய் –
பூ மாறாதே தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி மிகா நின்ற திருத் துழாயை திரு முடியில் உடையவனே
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் –
பூவிலே வர்த்திக்கிற பிராட்டி உன் சுவடு அறிந்த பின்பு அப்பூ நெருஞ்சி முள்ளாம் படி மார்பு படைத்தவனே –
என் சொல்லி நான் வாழ்த்துவனே –
சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் ஆகையால் அவ் வைஸ்வர்யத்தைப் பேசவோ –
பிராட்டி யோட்டைச் சேர்த்திக்கு நான் பாசுரம் இட்டுச் சொல்லவோ –

—————————————————————————————————-

உம்மால் தனியே முடியாதாகில் இருந்ததே குடியாகக் கூட்டிக் கொண்டு பேசுதல் -ஞானாதிகரான ருத்ராதிகள் ஏத்துதல் செய்தாலோ என்ன –
லோகம் அடங்கத் திரண்டு ஒருவர் ஏத்தின இடம் ஒருவர் ஏத்தாதே சர்வாதிகாரமாக ஏத்தினாலும் ஏத்தப் போகாதே -என்கிறார் –

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-

வாழ்த்துவார் பலராக-
வாழ்த்துவர் அசங்க்யாதர் ஆயிடுக -ஆனாலும் ஏத்த முடியாது -எத்தாலே என்னில்
நின்னுள்ளே நான்முகனை-மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
ஏகார்ணவத்திலே கண் வளர்ந்து -சதுர்தச புவனங்களையும் ஸ்ருஷ்ட்டி என்று சங்கல்பத்திலே சதுர்முகனை பிரதமத்திலே ஸ்ருஷ்டித்தாய்
த்வத் சர்ஷ்டனான ப்ரஹ்மாவாலே ஸ்ருஷ்டரான சங்குசித ஞான உன் பெருமையை பேச மாட்டார்கள் என்கை –
ஆனால் இவர்களை ஒழிய ஞானாதிகரான ருத்ராதிகளைக் கூட்டுக கொண்டாலோ என்ன -அவர்களுக்கும் நிலம் அன்று என்கிறது –
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
கேழ் என்று கிளர்த்தியாய் -பெருமையைச் சொல்கிறது –
சீர் -ஞானாதிகள் -சங்கராத் ஞானம் விச்சேத்
கிளர் தெய்வமாய்க்-அதிகார அனுரூபமான ஞானாதிகளாலே பெரிய தேவ ஜாதியாக
கிளர்ந்து-ஸ்தோத்ரத்திலே உத்யுக்தராய்
சூழ்த்து-
விரகாலே பிரயோஜகங்களிலே சொல்லி -சூழ்ந்து -என்றுமாம் –
அமரர் துதித்தால்
ஆயுஸாலும் அதிகர் ஆனவர்கள் ஸ்துதித்தால்-
உன் தொல் புகழ் மாசூணாதே –
ஸ்வாபாவிகமாய் கர்ம ஸ்பர்சம் இல்லாமையால் உஜ்ஜவலமான உன் குணங்கள் அழக்கு ஏறாதோ-
அன்றிக்கே வாழ்த்துவர் பலர் ஆகைக்காக என்னவுமாம்
அப்போது நீ செய்தாகிலும் வாய்த்ததில்லை என்கை
இந்த நிர்வாகம் சங்கேதமே யாகிலும் சொல்லிப் போருவது ஓன்று அன்று –

—————————————————————————————————

உபய பாவனை உடையனான ப்ரஹ்மாவை வனஸ்பதி கோடியிலே நிறுத்தி -ப்ரஹ்ம பாவனை ஏக மாவேயாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மா
உத்ப்ரேஷிதனாய் ஏத்தினாலும் உன்னுடைய வை லக்ஷண்யத்துக்கு திரஸ்காரமாம் அத்தனை -என்கிறார் –
வர்த்தமான சதுர்முகன் தானாகவுமாம் –

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

மாசூணாச் சுடருடம்பாய்
ஹேய ப்ரத்ய நீகமாய் சுத்த சத்வம் ஆகையால் நிரவதிக தேஜோ ரூபமான விக்ரஹத்தை உடையையாய்
மலராது குவியாது –
க்ஷய வ்ருத்திகள் இன்றிக்கே ஏக ரூபமாய் என்னுதல் –
அரும்பினை அலரை-என்னுமா போலே செவ்வி மாறாத போக்யதையைச் சொல்லுதல்
மாசூணா ஞானமாய் –
ஹேய கந்தம் இல்லாத ஞானத்தை உடையையாய்
விக்ரஹத்துக்கு ஸ்வரூப அந்யதா பாவம் இல்லை -என்கை –
மலராது குவியாது என்ற இடம் -ஞானத்துக்கும் விக்ரஹத்துக்கும் பொது
முழுதுமாய் முழுதியன்றாய் –
அனுக்தமான குண விபூதி யாதிகளை உடையையாய் எல்லா வற்றையும் நிர்வஹிக்கிறவனே –
வரம்பின்றி முழுது இயன்றாய் -என்கிற இடத்தில் இவற்றை உடையவனே -என்கிறது -இங்கு இத்தை நிர்வஹிக்கிறவனே என்கிறது
மாசூணா வான் கோலத்தமரர் கோன்-
அசங்குசிதமாய் சமக்ரமாய் இருந்துள்ள ஞானாதி பூஷணங்களை உடையனான ப்ரஹ்மா என்னுதல்
கீழ்ச் சொன்ன ருத்ராதிகளால் உண்டான ஆதிக்யத்தால் ப்ரஹ்மா தன்னைச் சொல்லுதல்
வழிப்பட்டால் –
ஸ்தோத்ர ரூப பரிசரியையில் இழிந்தால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–
ஹேய ப்ரத்ய நீகமான உன் திருவடிகளின் விஸ்திருதமான ஒளி திரஸ்க்ருதம் ஆகாதோ
தம்முடைய சேஷத்வ அனுரூபமாக திருவடிகள் என்று இ றே திரு மேனியைச் சொல்லுவது –

————————————————————————————————–

இந்த மேன்மையும் விளாக் குலை கொள்ளும் ஆஸ்ரித வாத்சல்யத்தை அருளிச் செய்கிறார் –

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
அநேக காரியங்களில் ஏவா நின்றாலும் மழுங்கக் கடவது அன்றிக்கே எதிரிகள் மேலே படப்பட கூர்மை மிகா நின்றுள்ள வாயை உடைய திரு வாழியை –
வை -கூர்மை /நிதி -வாய் -நுனி என்றுமாம்
ஒரு வினை செய்ய வேண்டா -இச் சேர்த்தியே அமையும் என்னும் படி தர்ச நீயமாம் படி வல வருகே உடையையாய் –
வளத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்ன வேண்டும்படி இருக்கை –
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
ஆனையினுடைய ஆர்த்த த்வனி செவிப் பட்டவாறே கையில் திரு வாழியையும் மறந்து மதுவின் கரையிலே த்வரித்துக் கொண்டு வந்தான் –
இப்படி செய்ய வேண்டிற்று துக்க நிவ்ருத்தி மாத்திரமே யன்றிக்கே-தொழுதேனாக வல்லேனே என்று இருக்குமவன் என்கை –
காதல் களிறு -காதலே நிரூபகமாய் இருக்கை –
அளிப்பான் -அதின் கையில் பூ செவ்வி அழியாமே திருவடிகளிலே இடுவித்துக் கொள்ளுகைக்காக –
புள் ஊர்ந்து -நினைவுக்கும் அவ்வருகே போக வல்ல வேகம் உடையவனை குழை ச் சரக்காம் படி திருவடிகளாலே ப்ரேரித்து கொண்டு வந்தபடி
அவ்விடாய் தம்மதாய்-தமக்கு உதவ வந்து தோற்றினனாய் இருக்கிற படி
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
இடைவிடாமல் ஸ்ருஷ்ட்டி யாதிகள் பண்ணா நின்றாலும் அமோகமான சங்கல்ப ஞானத்தையே சாதனமாகக் கொண்டு
திரு நாபீ கமலம் அடியாக பிறந்த லோகத்தில் அடிமை யானார்க்கு
தொழும் பாயர்க்கு அளித்தால்
தொழும்பு -அடிமை -ஆயார்க்கு -ஆனார்க்கு -சம்சாரத்தில் நித்ய ஸூ ரிகள் பரிமாற்றத்தை உடையவர்க்கு என்கை
அளித்தால் -ரஷித்தால்
உன் சுடர்ச் சோதி மறையாதே –
மதுவின் கரையிலே அரை குலைய தலை குலைய வந்தாய் என்கிற நிரவதிக தேஜஸ் ஸூ மறையாதோ-
சிற்றாட் கொண்டான் மறையும் மறையும் என்று அநு பாஷித்தான் –

—————————————————————————————————

ப்ரஹ்மாதிகள் உன்னை ஈஸ்வரன் என்று அறிந்து ஏத்த இருக்கும் இது விஸ்மாயமோ என்கிறார் –

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
துஷ் பிரக்ருதிகளுக்கு மறையாய் -சத் ப்ரக்ருதிகளுக்கு வேதமாய் இருக்கும் –
வேதங்களில் சர்வாதிகனாகவும் நிரதிசய போக்யனாகவும் பிரகாசிக்கிறவனே –
முறையால்
ஸ் வாமித்வ ப்ராப்தியாலே என்னுதல்-பர்யாயேண-என்னுதல் –
இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
விஷம ஸ்ருஷ்டிக்கு அடியானை கர்ம விசேஷம் இ றே சேதனர் பண்ணி வைப்பது –
யவ்கபத்யம் அனுக்ரஹ கார்யம் என்கை –
போக மோக்ஷ சூன்யமாக கிடந்த அன்று இவற்றை உண்டாக்கி ஸ்ருஷ்டமான ஜகத்தை பிரளயம் கொள்ள மஹா வராஹமாய் இடந்து
திரிய பிரளயம் வர எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கி பின்னை வெளிநாடு காண உமிழ்ந்து மஹா பலி போல்வார்
பருந்து இறாயுமா போலே அபஹரிக்கில் எல்லை நடந்து மீட்டுக் கொண்டாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்-
பிறையை ஸீரோ பூஷணமாக உடையவன் ஆகையால் போக பிரதன் ஆகையும்-ஜடாதரன் ஆகையால் அந்த போகம் தபஸாலே சாத்தியம் என்கையும்-
சதுர்முகோ ஜாயதே -என்று உன்னாலே ஸ்ருஷ்டனாய் ருத்ரனுக்கும் கூட ஜனகனான ப்ரஹ்மாவும் ஷேத்ரஞ்ஞதயா ஸம்ப்ரதிபன்னனான இந்திரனும்
இறையாதல் அறிந்து -ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –
நீ ஸ்வாமி என்று அறிந்து ஏத்த அத்தாலே சர்வேஸ்வரனாய் இருக்கும் இது விஸ்மயமோ
உன்னாலே ஸ்ருஜ்யரான ப்ரஹ்மாதிகள் உன்னை ஸ்தோத்ரம் பண்ண நீ இருக்கும் இருப்பு உனக்கு அவத்யம் அன்றோ –

——————————————————————————————————–

நிகமத்தில் இது திரு வாய் மொழியைக் கற்றாரை உஜ்ஜீவிப்பித்து பின்னை சாம்சாரிக துக்கத்தை
எல்லாம் இது திருவாய் மொழி தானே போக்கும் என்கிறார் –

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-

வியப்பாய வியப்பில்லா –
புறம்பு விஸ்மய நீயங்கள் ஆனவை இவ்விஷயத்தில் விஸ்மய நீயங்கள் இன்றிக்கே இருக்கிற படி –
தங்களுடைய அங்கீகாரம் புறம்பு உள்ளார்க்கு ஏற்றமாய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகள் ஸ்தோத்ரம் பண்ணுகிறது
இவன் பெருமைக்கு ஆச்சர்யம் இன்றிக்கே இருக்கை-
மெய்ஜ்ஞான வேதியனை-
இவனைச் சொல்லும் போது சொல்லிற்று எல்லாம் மெய்யாம்படி இருக்கிற யதா பூத வாதியான வேதமே சொல்ல வேண்டாவோ
மெய்யான ஞானத்தை பிறப்பிக்கிற வேத ப்ரதிபாத்யனை
சயப்புகழார் பலர் வாழும் –
சம்சாரத்தை ஜெயித்த புகழை உடையராய் இருக்கை -ஆழ்வார் உடன் சாம்யா பன்னராய் இருக்கை –
இப்படி இருப்பார் அநேகர் ஆழ்வாரை அனுபவித்து இருக்கை –
தடம் குருகூர் சடகோபன்-துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்-உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்
சாத்விகருக்கு அனுபவிக்கைக்கு பரப்பு உடைத்தான் திரு நகரி –
துயக்காவது -மனம் திரிபு -சம்சய விபர்யய ரஹிதமான சம்யக் ஞானத்தால் கண்டு ப்ரீதி பிரேரிதரராய் தொழுது
அந்த ப்ரீதி வழிந்த சொல்லான ஆயிரத்திலும் இப்பத்து
ஒலி முந்நீர் ஞாலத்தே –
ஒலியை உடைய முந்நீரை உடைய பூமியிலே -அசன்னேவ -என்று அஸத் கல்பரானவர்களை
சந்த மேனம் ததோ விது-என்று உஜ்ஜீவிப்பித்து பின்னை தத் விரோதியான ஜன்மத்தைப் போக்கும் –

————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: