திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -2-10-

எம்மா வீட்டில் இவர் அபேக்ஷித்த புருஷார்த்தத்தை பெறுகைக்கு திருமலையை ஆஸ்ரயிக்கிறார்-என்று ஆளவந்தார் நிர்வாகம் –
அங்கண் அன்றியே -எம்பெருமானார் -கீழ் தாம் நிஷ்கர்ஷித்த புருஷார்த்தம் -சரீர சமனாந்தரம் பரமபதத்தில் பெருமதாய் இருக்க
ஒல்லை என்றும் -காலக் கழிவு செய்யேல் என்றும் க்ரம பிராப்தி பற்றாதாராய் தவரிக்கிற இவர் படி இப்பிரக்ருதியோடே
அனுபவிக்க வேண்டும்படி இருக்கையாலே அதுக்கு ஏகாந்த தேசமாக திருமலையைக் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய்
-அடிமை தான் வேணுமோ -திருமலை தானே எனக்கு பரம பிராப்யம்-என்கிறார் –

—————————————————————————————————————————–

திருமலையை பிராபிக்கையே நிரதிசய புருஷார்த்தம் என்கிறார் –

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்-
கிளாரா நின்றுள்ள ஒளியை உடைத்த யவ்வனம் கழிவதற்கு முன்பே கரண படவம் உள்ள போதே –
பால்யம் போய் யவ்வனம் தலை வைக்கிற அளவிலே யவ்வனம் விஷயத்திலே மூட்டி நசிப்பதற்கு முன்பே என்றுமாம் –
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே சதா என்னக் கடவது இ றே
கோ ஜா நீதே கதா கஸ்ய ம்ருத்யு காலோ பவிஷ்யதி யுவைவதர்ம புத்திஸ் ஸ் யா தே கோ அநித்தியம் ஹி ஜீவிதம்
திருமலையை ஆஸ்ரயிப்போம் -என்ற பிறந்த ஸ்ரத்தை மாளுவதற்கு முன்னே என்றுமாம் –
வளர் ஒளி மாயோன்
ஏக ரூபமாக பிராமண பிரசித்தனாய் இருக்கச் செய்தே-திருமலையின் நில மிதியாலே வளரா நின்றுள்ள அழகை உடைய ஆச்சர்ய புதன்
மருவிய கோயில்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே விரும்பி வர்த்திக்கிற தேசம் –
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
வளரா நிற்கச் செய்தே இளகிப் பதியா நின்ற திருச் சோலை –
நாள் செல்லச் செல்ல கீழ் நோக்கி வயசு ஸூ புகா நிற்கை
முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் இருக்குமா போலே –
அடிமை செய்கிறவர்கள் கிளர் ஓளி இளமை உடையவர்கள் -அடிமை கொள்ளுகிறவன் –வளர் ஓளி மாயோன்
தேசம் வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –
தளர்வாகிறது திருமலைக்கு புறம்பாகை-
அந்த அநர்த்தம் இன்றிக்கே -திருமலையை அபாஸ்ரயமாக சென்று புகுவதுவே சதிர் –
இதர விஷயங்களை பற்றுகை இளிம்பு-சா ஹாநி

————————————————————————————————————-

திருமலை தான் வேணுமோ -அத்தோடு சேர்ந்த திருப்பதியை பரம பிரயோஜனம் என்கிறார் –

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-

சதிரிள மடவார் –
கிளர் ஓளி இளமையை உடையவர்களை இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள் –
கலவியால் வந்த ரசம் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்க த்ரவ்யத்து அளவிலே உடம்பு கொடுக்குமவர்கள் –
இவ்வஞ்ஞானம் ஆகிற அநாத்ம குணத்தைக் கண்டு -அல்லென் -என்ன ஒண்ணாத படி பருவத்தை இட்டு மருட்டுவர்கள்
மடவார் -தாழ்ச்சியை மதியாது
ஸ்த்ரீகள் பக்கல் உங்களுக்கு உண்டான ப்ராவண்யத்தை பிரயோஜனமாக நினையாதே -என்னுதல்
அவர்கள் பிரவணை களாக பாவிக்கும் அத்தை மதியாதே என்னுதல்
பிரயோஜனம் இல்லாமையே அன்று -மேல் நரகம் -இங்கு பிறர் நாக்கு வளைக்கை
பக்தாநாம் தவம் -என்று நிரதிசய போக்யமாம் இருக்கும் விஷயம் அன்றே
அதிர்குரல் சங்கத்து அழகர்-
தன்னோட்டை அனுபவத்தால் முக்தர் சாம கானம் பண்ணுமா போலே முழங்கா நிற்ற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
கையிலே உடையவர் ஆகையால் வந்த அழகை உடையராகை
தம் கோயில்-
என்னது என்று அவன் திரு வவதரித்து வர்த்திக்கிற தேசம்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
சந்திரனுக்கும் தவழ்ந்து போக வேண்டும் படி உயர்ந்து இருக்கை
மாலிரும் சோலை யாகிற பத்தி என்றுமாம்
பதியது வேத்தி எழுவது பயனே
தொழுது எழு என்று தம்மைப் போலே என்று இருக்கிறார்
இதுவே பிரயோஜனம் -அல்லாதது பிரயோஜன சூன்யம் –

—————————————————————————————————————-

திருமலையைச் சார்ந்த அயன் மலையை பிராபிக்கையே கர்த்தவ்யம் என்கிறார் –

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-

பயனல்ல செய்து பயனில்லை-
பிரயோஜன சூன்யம் ஆனவற்றை செய்து பிரயோஜனம் இல்லை
செயலும் பயனும் இரண்டும் பிரயோஜனமாயிற்று தாம் பற்றின விஷயம் இருப்பது
ஸூ ஸூ கம் கர்த்தும் -என்னக் கடவது இ றே
சாதன திசையிலும் துக்க ரூபமாய் -பல வேளையிலும் துக்க மிஸ்ரமாய் இருக்கிற ஸ்வர்க்க தத் சாதனங்களை யாயிற்று இவர் நினைக்கிறது –
நெஞ்சே-
விஷயாந்தரங்களுக்கும் இவ்விஷயத்துக்கும் உண்டான நெடு வாசி உனக்கு அனுபூதம் இ றே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
வர்ஷூக மான மேகம் போலே ஜல ஸ்த்தல விபாகம் இன்றிக்கே சர்வ ஸ் வதானம் பண்ணி வர்த்திக்கிற தேசம் –
வர்ஷூக கலாவஹம் போலே இருக்கிற திரு மேனியை உடையவனாய் அவ்வடிவழகை வழங்கிக் கொண்டு
நிரந்தர வாசம் பண்ணுகிற கோயில் என்றுமாம் -தமக்கு ப்ராப்ய பிராப்பகங்கள் ஒருவனேயாய் இருக்கிற படி
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை-
போக்யதையாலும் இருட்சியாலும் புக்கார் மிகவும் மதி மயங்கும் படியான திருச் சோலை
ப்ராப்ய பூமியிலே கலக்கம் ஆகையால் ப்ராப்ய அந்தர்கதம் இ றே
அயன்மலை யடைவது அது கருமமே –
திருமலை யோட்டை சம்பந்தத்தையே தமக்கு பேராக உடைய மலையை பிறப்பிக்கும் இதுவே பிராப்தம் என்கிறார்-

——————————————————————————————————————

ஆஸ்ரிதர் தங்கள் கர்மத்தை போக்கி அடிமை செய்து உஜ்ஜீவிக்கைக்காக ரக்ஷகன் வந்து
நித்ய வாஸம் பண்ணுகிற திருமலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசம் என்கிறார்-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே-
பிரபலமான கர்ம பாசத்தைப் போக்கி அடிமை செய்து உஜ்ஜீவிக்கைக்காக
பரித்ராணாயா ஸாதூனாம் -என்கிறபடியே விரோதிகளை போக்கி உஜ்ஜீவிப்பிக்கை இ றே அவதார பிரயோஜனம்
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
கோப கோபீ ஜன சங்குலம் அதீவார்த்தம் -என்று இடையரும் இடைச்சிகளும் நோவு பட -ஒரு மலையை எடுத்து நோக்கினவன்
அந்த ஐஸ்வர்யத்தோடே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கோயில்
பெரு மலை -பஞ்ச லக்ஷம் குடியும் நிழலிலே ஒதுங்கலாம் படி இ றே மலையின் பரப்பு
பீடு -பெருமை -அதாகிறது ஐஸ்வர்யம் –
ஒரு மலையை ஆதேயமாகக் கொண்டு ரஷித்தவன்-ஒரு மலையை ஆதாரமாகக் கொண்டு நோக்குவோம் என்று நிற்கிற இடம் –
வருமழை தவழும் மாலிரும் சோலை
ஊருக்கு மழை இரண்டு -நின்று நிரந்தரமாக வர்ஷிக்கும் மழையும் -கறுப்பது வெளுப்பதுமாய் வர்ஷிக்கும் மழையும் –
மழை -மேகம்
தவழும் -சமுத்வஹந்தஸ் சலிலாதிப்பாராம்-என்று கர்ப்பிணிகள் சுரம் ஏறுமா போலே யாயிற்று மேகங்கள் சஞ்சரிப்பது
மால் என்று பெருமை / இருமை என்றும் பெருமை -இத்தால் ஓங்கிப் பரந்த சோலையை உடைத்த திருமலை -என்கை –
திருமலை யதுவே யடைவது திறமே –
திருமலையை ஆஸ்ரயிக்கும் அதுவே செய்யக் கடவ பிரகாரம் -திறம் -பிரகாரம் –

—————————————————————————————————————–

திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு என்கிறார் –

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது-
திறம் – ஸமூஹம்-திறள் / வலம் -பலம் –
திரண்ட பலத்தாலே பிரயோஜ நான்தர பிராவண்யம் ஆகிற பாபத்தை கூடு பூரியாதே –
அற முயலாழிப் படையவன் கோயில்-
அறத்திலே முயலா நின்றுள்ள திரு வாழியை ஆயுதமாக உடையவன் வர்த்திக்கிற தேசம் –
அற முயலாழி-சர்வேஸ்வரனைக் காட்டிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனாகை –
லஷ்மணஸ்ய ச தீமத-என்னக் கடவது இ றே
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை-
ரமணீயம் பிரசந்நாம்பு சன்மனுஷ்ய மநோ யதோ-என்கிறபடியே தெளிந்து மநோ ஹரமாய் இருக்கை
-அதாகிறது இவர் திரு உள்ளம் போலே இருக்கை –
புறமலை சாரப் போவது கிறியே –
அயன் மலையைச் சூழ்ந்த புற மலையைக் கிட்டப் போமதுவே நல் விரகு என்கிறார் –
கிறியாவது -விரகு -அதாவது அஸாத்யமானத்தை அயத்நேந லபிக்கை-

——————————————————————————————————————–

திருமலைக்கு போம் மார்க்க சிந்தனையே நல் விரகு என்கிறார் –

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-

கிறியென நினைமின் –
நல் விரகு என்று புத்தி பண்ணுங்கோள்
கீழ்மை செய்யாதே-
இதுக்கு புறம்பான பிரயோஜனங்களில் பிரவணர் ஆகாதே –
கீழ்மை யாவது -பகவத் வியதிரிக்தங்களில் ப்ராவண்யம் இ றே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்-
உறியில் சேமித்து வைத்த -வெண்ணெய்யைக் குறி அழியாமே அமுது செய்த கிருஷ்ணன் அச் சுவடு அழியாமே வந்து நிற்கிற தேசம் –
இத்தால் அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதவன் என்கை –
மறியோடு பிணை சேர் –
மறி-என்று மான் -பிணை என்று இளமான்-மானானது தன் கன்றோடு சேர்ந்து வர்த்திக்கை –
மாலிரும் சோலை நெறி பட-
திருமலைக்கு போம் வழி நெஞ்சிலே பட -என்னுதல்
உங்கள் சத்தை உண்டாக என்னுதல் –
வதுவே நினைவது நலமே –
அத்தையே நினைக்குமது வி லக்ஷணம் -அத்தை ஒழிந்தது எல்லாம் பொல்லாதது என்கை –

———————————————————————————————————————

திருமலை என்று அனுகூலிக்கையே பிரபலம் என்கிறார் –

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

நலமென நினைமின் –
இத்தை வி லக்ஷணமான புருஷார்த்தம் என்று நினையுங்கோள்
நரகழுந்தாதே
இதற்கு புறம்பு ஆகை யாகிற நரகத்திலே புக்கு விழாதே
நிரயோ யஸ் த்வயா வி நா –ஏதைவ நிரயா-
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில் –
கல்பாதியிலே பூமியை உத்தரித்த ஆபத்சகனானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
மலமறு மதி சேர் மாலிரும் சோலை –
சாணையில் இட்ட மாணிக்கம் போலே -கொடு முடிகளில் தேய்ந்து ஓளி பெறா நின்றுள்ள சந்திரன் வந்து சேருகிற திரு மலை-
சம்சய ரஹிதமான ஸ்வரூப ஞானம் உண்டாம் தேசம் என்னவுமாம் –
வலமுறை எய்தி மருவுதல் வலமே —
ஸ்ரீ மதுரையைக் கிட்டின காலயவந ஜராசந்தாதி களைப் போலே அன்றியே அனுகூல முறையால் சென்று கிட்டு
அனுகூல வ்ருத்திகளை பண்ணுகையே பலவத்தரம் –
வலம் என்று வரம் என்னவுமாம் -வலம் என்னுதல் -ஸ்ரேஷ்டம் என்னுதல் –

————————————————————————————————————————

திருமலையைச் சென்று நிரந்தரமாக அனுகூலிக்கையே பிராப்தம் என்கிறார் –

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
கரண படாவத்தை உண்டாக்கி நாள் தோறும் அந்த பலத்தை இதர விஷயங்களுக்கு உறுப்பாக்கி வியர்த்தல் ஆக்காதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
தன்னையும் கொடுத்து -தன்னை அனுபவிக்கைக்கு ஈடான சக்தியையும் கொடுக்கும் ஆச்சர்ய பூதனான கிருஷ்ணன் வர்த்திக்கிற தேசம் –
ய ஆத்மதா பலதா-என்னக் கடவது இ றே
அழகர் பிராட்டிமாரோடு கூடே வலம் செய்கிற திருமலை என்றுமாம் –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை-
ராஜாக்கள் நகர சோதனைக்கு புறப்பட்டால் அந்தரங்கர் முகம் தோற்றாமல் திரியுமா போலே நித்ய ஸூரிகளும் அனுகூல வ்ருத்தி பண்ணுகிற தேசம்
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே
நாமும் திருமலையில் சென்று அவர்களோடு ஒரு கோவையாய் சர்வ காலமும் அனுகூல வ்ருத்திகளை பண்ணி
வர்த்திக்கும் இதுவே பிராப்தம் -என்கிறார் –

————————————————————————————————————-

திருமலையை தொழ நினைக்கவே அமையும் என்று அத்யாவசிக்கையே விஜய ஹேது என்கிறார் –

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-

வழக்கென நினைமின் –
நான் சொல்லுகையாலே ஆப்தம் என்று இருக்கையை அன்றிக்கே இது ஸ்வரூப பிராப்தம் என்று நினையுங்கோள்
வல்வினை மூழ்காது
வ்யதிரிக்த விஷயங்களில் ப்ராவண்யம் ஆகிற வலிய பாபங்களில் புக்க அவகாஹியாதே
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
அழன்-என்று பிணமாய் -அத்தாலே பேய் என்றபடி / அழக்கொடி-என்று பேய்ப் பெண் என்றபடி
பூதனையை நிரசித்த ஸ்ரீ கிருஷ்ணன் -நம் விரோதிகளை போக்குகைக்கு விரும்பி வர்த்திகையாலே ஸ்லாக்க்யமான திருமலை
போக்யத்தையாலே விரும்பி அசங்குசிதமாக வர்த்திக்கிற தேசம் என்னவுமாம்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
செல்வாலும் இளமையாலும் அழகரோடு ஒத்த கஜ யூதர்கள் சேர்ந்து வர்த்திக்கிற தேசம்
லக்ஷனோ பேதமாய் இருபத்தொரு ஆணை நின்ற இடத்திலே ஆயிரம் ஆணைகள் வந்து சேரும் இ றே
அங்கு நிற்கிறதும் சோலை மலைக் களிறு இ றே
தொழக் கருதுவதே துணிவது சூதே –
திருமலையைத் தொழுவோம் என்று மநோ ரதித்து-அத்தையே பிரயோஜனமாக அத்யவசித்து இருக்குமதுவே விஜய ஹேது –

—————————————————————————————————–

பல படியாலும் திருமலையே பரம ப்ராப்யம் என்று உபக்ரமித்த படியே உபசம்ஹரிக்கிறார் –

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-

சூதென்று களவும் சூதும் செய்யாதே
சூது -வெற்றி -நேர்பாடு என்று பார்த்து களவு காணுதல் -பஸ்யதோ ஹரணம் ஆதல் செய்யாதே ஆத்ம அபஹரணம் பண்ணுதல் –
ஈஸ்வரனே ரக்ஷகன் என்று இருக்கும் சாத்விகரை யுக்தி ஆபாசங்களாலே விச்வாஸத்தைக் குலைத்தல் செய்யாதே என்றுமாம் –
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
ஸ்ரீ கீதா முகத்தால் வேதார்த்தத்தை விஸதீ கரித்தவன் –
உபதேசத்தால் மீளாதாரை வடிவைக் காட்டி மீட்க்கைக்காக விரும்பி வர்த்திக்கிற தேசம்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
பேடையோடே கூடின மயில்கள் சேர்ந்து வர்த்திக்கிற திருமலை –
மாதென்று மார்த்தவமாய் ஸூ குமாரமான மயில் என்றுமாம்
அங்கு உள்ள சத்வங்கள் எல்லாம் மிதுனமே யாய் வர்த்திக்கும் -என்கை
போதவிழ் மலையே புகுவது பொருளே –
பொது என்று பூவாய் -திருமலையை முட்டாக்கி இடப் பூத்துக் கிடைக்கும் அத்தனை –
நித்ய வசந்தமான திருமலையில் புகுகையே பிரயோஜனம் –

———————————————————————————————————————-

நிகமத்தில் -இது திருவாய் மொழி கற்றாரை இது தானே சம்சாரத்தை முடித்து அழகர் திருவடிகளிலே சேர்க்கும் என்கிறார் –

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்-
பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பாதே க்ருஷி பண்ணும் கார்ஷிகனைப் போலே-
கொடுத்த கரணங்களைக் கொண்டு அநர்த்தத்தை விளைத்துக் கொள்ள பின்னையும் கரணங்களைத் தந்த
ஜகத் காரண பூதனுடைய கல்யாண குணங்களிலே சேர்த்து
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
அஞ்ஞான கந்தம் இல்லாதாராய் சர்வ பிரகார வி லக்ஷணமான திரு நகரியை உடைய பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்தது
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
கேட்டார்க்குத் தம்மிலும் தெளிவைப் பிறக்கும் படி அருளிச் செய்தது –
தம்முடைய ஞானத்துக்கு ஆதி ஈஸ்வரன் -இவர்களுக்குத் தாம் அடியாக வந்தது –
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –
அருளே நிரூபகமான அழகர் திருவடிகளிலே சம்சாரத்தை முடித்துச் சேர்க்கும் –

———————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: