திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-9-

கீழில் திருவாய் மொழியில் ப்ராப்யமாகச் சொன்ன மோக்ஷத்தை இவருக்கு எம்பெருமான் கொடுப்பானாக உபக்ரமிக்க
இளைய பெருமாளும் ஸ்ரீ பரத ஆழ்வானும் போலே பகவத் பாரதந்தர்யத்தால் அல்லது செல்லாத படியை உடைய ஆழ்வார்
அப்படி அன்றிக்கே -தமக்கு -என்று ஒரு புருஷார்த்தத்தை கோலுமது-அஹம் மம என்கிற அபிமானத்துக்கு விஷயம் ஆகையால்
ஐஸ்வர்யாதிகள் ஹேயம் ஆனால் போலே ஹேயம் என்று பார்த்து அத்தை உபேக்ஷித்து
பரமபதஸ் தத்தனாய் ஸூ கியாகவும் -சம்சாரத்தில் தூக்கியாகவுமாம் இவற்றில் நிர்பந்தம் இல்லை
-உனக்கே யாய் இருக்கும் இருப்பு எனக்கு வேண்டுவது -என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அத்தை
ஈண்டு எனத் தந்து அருள வேண்டும் என்று எம்பெருமானை அபேக்ஷிக்கிறார் –

———————————————————————————————

எத்தனையேனும் உத்க்ருஷ்ட புருஷார்த்தமான ஸ்ரீ வைகுண்டத்திலும் எனக்கு அபேக்ஷை இல்லை
உன் திருவடிகளை என் தலையிலே வைக்கும் இத்தனையே வேண்டுவது என்கிறார்

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
வீட்டுத் திறமும்- வீட்டிடையாட்டம் / செப்பம் -சொல்லாம்
நின்-செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
உமக்குச் செய்ய வேண்டுவது என் -என்னில் அகவாய் சிவந்து புறம் கரியதாய் நிரதிசய போக்யமான
உன்னுடைய திருவடிகளை என் தலையிலே சேர்த்து அருள வேணும் –
ஆஸ்ரிதற்கு அருமைப் பட வேண்டாத படி செவ்விதாய் பரம பூஜ்யமான பாத பத்மம் என்றுமாம் -ஒல்லை -ஈண்டென
கைம்மா துன்பம் கடிந்த பிரானே-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் ஆகிற மஹா உபகாரத்தை பண்ணினவனே -இது த்ருஷ்டாந்தம் –
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –
உம்முடைய அபேக்ஷிதம் செய்கைக்கு உறவு அறிய வேணும் இ றே என்னில் -நீ நாதன் -நான் அடியேன் –
உறும் என்று வேண்டுகிறேன் அல்லேன்–உகந்து அபேக்ஷிக்கிறேன்
இதே -இவ்வடிமையும் மற்று என்ன புருஷார்த்தமும் வேணும் என்னில் -இதுவே அமையும் –

————————————————————————————————————-

இப்புருஷார்த்தத்தை பெற்றேன் என்று நான் தேறும் படி ஈண்டு எனப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

பலகாலும் கேட்க்கிலும் நான் உன்னைக் கொள்வது இதுவே
இவ்வபி சந்தி எத்தனை நாளைக்கு நிற்கும் என்னில் -யாவதாத்மா பாவி –
இங்கனே இருக்கிற அடிமைச் சுவடு உனக்கு எங்கனே வந்தது என்னில்
ஸ்ரமஹரமான உன் திரு அழகை எனக்கு காட்டி அவ்வழியாலே நீ என்னை அடிமை கொள்ளுகையாலே
பெறுதற்கு அரிதான திருவடிகளை நான் பெற்றேன் என்னுமது அறியும்படி பண்ண வேண்டும்
ஞானம் என்று பக்தி யோகமுமாம்
ஞான பிரதானம் அமிழ்ந்தார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே -ஞானக் கை தா என்கிறார்
செய்கிறோம் என்ன ஒண்ணாது -செய்து கொடு நிற்க வேணும் –

—————————————————————————————————————

உத்க்ரமண தசையான துர்க்கதியிலும் நான் இளையாதே உன் திருவடிகளை ஏத்தும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

கையும் திரு ஆழியுமாய் இருக்கிற அழகைக் காட்டி எனக்கு உண்டான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தை தவிர்த்த
மஹா உபகாரகனான கிருஷ்ணனே –
மிக்க ஸ்லேஷம் மிடற்றை கட்டிலும்-

—————————————————————————————————–

உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யமே எனக்குத் தந்து அருள வேணும் என்கிறார் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

எல்லா காலத்திலும் எனக்கே அடிமை செய் -என்று நான் தரிக்கும் படி அருளிச் செய்து -என் ஹிருதயத்திலே வந்து
நிரந்தரமாக இருந்து அருளுவதும் செய்து –
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே-தனக்கே சேஷமாக என்னைக் கொள்ளும் இது
எனக்கு அசாதாரணமாக கிருஷ்ணனை நான் கொள்ளும் புருஷார்த்தம் –

————————————————————————————-

தேகமே ஆத்மா ஆகவுமாம்-தேஹ அதிரிக்தனாய் இருப்பான் ஒருவன் -ஆத்மா ஆகவுமாம் -அவ்விடத்தில் ஆதரம் இல்லை –
ஆஸ்ரித அர்த்தமான அநேக அவதாரங்களில் ஓன்று ஒழியாமே அனுபவிக்க வேணும் என்கிறார் –

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

——————————————————————————————

தேவாதி பதார்த்தங்களை தனித் தனியே நியத ஸ்வபாவங்கள் ஆகும் படி ஸ்ருஷ்ட்டித்தால் போலே -ப்ரீதி யுக்தமான மநோ வாக் காயங்கள் உடன் கூட
நானும் ப்ரீதி உக்தனாய்க் கொண்டு என்றும் உன்னை அனுபவிக்கும் படி பண்ண வேணும் என்கிறார் –

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

மகிழ் கொள் -ஆனந்த யுக்தம் / உலோகம் அலோகம்-சேதன அசேதனங்கள்
சோதி-சந்த்ர ஸூ ர்யர்கள் / மலர்ந்த வம்மானே-உண்டாக்கின சர்வேஸ்வரன்

————————————————————————————————

தம்முடைய அபி நிவேசத்தின் மிகுதியால் -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ளலாம் படி வர வேணும் என்கிறார் –

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

உன் திருவடிக்கு கீழ் நிரந்தர கைங்கர்யத்தை எனக்குத் தராதே இருந்து வைத்து
மறக்க ஒண்ணாத படி உன்னை என்னுள்ளே நிரந்தரமாகக் காட்டுகிறவனே –

———————————————————————————————————–

அத்ய அல்ப காலம் ஆகிலும் சேஷியாய் என்னோடே சம்ச்லேஷிக்கப் பெறில் பின்னை ஒருகாலமும் அதுவும் வேண்டா என்று
தனக்கு அடிமை செய்கையில் உள்ள விடாயாலே அருளிச் செய்கிறார் –

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

எல்லா காலமும் ஆகவுமாம்
விமலதயா வேத ப்ரதிபாத்யராய் ஞான பக்தாதிகளால் மிக்கு இருந்துள்ள அயர்வறும் அமரர்களுக்கு
நிரதிசய போக்யனான உன்னை எனக்கு காட்டினவனே –

—————————————————————————————————————

நிரதிசய போக்யமான இவ்வடிமையை அநாதி காலம் நான் இழந்தேன் என்று சோகிக்கிறார்-

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

நானும் உன் உடைமையும் உனக்கு சேஷமாய் இருக்கச் செய்தே இதுக்கு முன்பு போன காலம் எல்லாம் உனக்கு அடிமை என்னும் இடத்தை
அறியாதே நான் என்றும் என்னது என்றும் உண்டான விபரீத ஞானத்தை உடையேனாய் இருந்தேன்
யானே என்கிற இடத்தில் -அவதாரணைக்கு கருத்து –இவ் வஞ்ஞானம் பகவத் க்ருத்யம் அன்று -என் தோஷத்தால் வந்தது என்று
அயர்வறும் அமரர்கள் என்றும் அடிமை செய்து வாழா நிற்க நீயும் அவர்களை அடிமை கொண்டு செல்லா நிற்க
இஸ் சம்பந்தத்தில் எங்களுக்கும் அவர்களோபாதி பிராப்தி உண்டாய் இருக்க இழப்பதே என்று கருத்து –

——————————————————————————————————————

இவன் தானே வந்து ஸ்வ ப்ராப்யத்தை சாதித்திக் கொள்ளுகிறான் இ றே -என்று கை விடாதே -பிரதிபந்தகங்களை நீக்கி
என்னை ஈண்டென உன்தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டு அருள வேணும் என்கிறார் –

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு விக்நமான எருது ஏழையும் அடர்த்து அருளி
ஸ்ரீ ஜனகராஜன் திரு மக ளோட்டை சம்ச்லேஷத்துக்கு விக்நமாய்
அதி சம்ருத்தமான லங்கையை பஸ்மம் ஆக்கின வீர ஸ்ரீயாலே வந்த அதி உஜ்ஜவலத்தை உடையவனே
தேறாதே கொள்-
தேறேன்-என்ற பாடமான போது -தரியேன் என்கிறது
என்னை உன் திருவடிகளில் ஈண்டென சேர்த்து அருளி ஒரு நாளும் பிரியாத படி பார்த்து அருள வேணும் –

——————————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியில் ஸ்ராத்ததானார் இது திரு வாய் மொழியில் சொன்ன ப்ராப்யத்தை பெறுவார் என்கிறார் –

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

திரு வாழியைப் போலே தம்மையும் பிரியாதே அடிமை கொள்ளும் ஸ்வ பாவனான எம்பெருமானை
விடில் தரியாத தன்மையான ஆழ்வார் அருளிச் செய்த
அப்யசித்தார்க்கு அநர்த்த கந்தம் வராதபடி இருக்கிற ஆயிரத்துள் இப்பத்தும்

—————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: